Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthu Avatharam
Puthu Avatharam
Puthu Avatharam
Ebook127 pages44 minutes

Puthu Avatharam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கொரோனா பெருந்தொற்றின் விளைவால் ஏற்பட்ட ஊரடங்கு காலம் பெரியவர்களைவிட குழந்தைகளைப் பல மடங்கு அதிகமாகவே பாதிப்புக்குள்ளாக்கியது. ஓடி ஆடித் திரிய வேண்டிய குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கும் அவல நிலையை இந்த உலகம் கண்டது. பச்சைப் பசுங்கிளிகளாய் பறந்து திரிந்த பச்சிளம் பிள்ளைகள், லாக்டௌன் காலத்தில் சிரிப்பை மறந்து, மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்.

எதிர்பாராத சம்பவங்கள் மனித வாழ்க்கையைப் புரட்டிப் போடலாம். ஆனால், மனிதன் ஒரு போதும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது; மனிதத்தை இழக்கக்கூடாது. நெருக்கடியான காலத்திலும் தலை நிமிர்ந்து வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நம்மை மேம்படுத்திக் கொள்வதுடன், நாம் சார்ந்த சமூகத்தையும் மேம்படுத்த வேண்டும். கொரோனா போன்ற கொடிய வைரஸ்கள் வருங்காலத்தில் எத்தனை வந்தாலும், வாழ்க்கையை அர்த்தமுள்ள வகையில், தன்னம்பிக்கையுடன் வாழ நம் குழந்தைகளுக்குப் பழக்குவோம் என்பதை இந்தக் கதைகளின் மூலம் எடுத்துரைக்கிறார் ஜி. மீனாட்சி.

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580127309492
Puthu Avatharam

Read more from G. Meenakshi

Related to Puthu Avatharam

Related ebooks

Reviews for Puthu Avatharam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthu Avatharam - G. Meenakshi

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    புது அவதாரம்

    சிறுகதைகள்

    Puthu Avatharam

    Sirukadhaigal

    Author:

    ஜி. மீனாட்சி

    G. Meenakshi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-meenakshi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. புது அவதாரம்!

    2. கை கழுவம்மா கை கழுவு!

    3. அன்புள்ள ஆசிரியர்

    4. மாலை நேர வகுப்பு

    5. சேவை எனக்குத் தேவை!

    6. கைத்தொழில் பழகு!

    7. பாட்டியிடம் கற்ற பாடம்

    8. நம்பிக்கை வாசல்

    9. மிட்டாய் வியாபாரி

    10. ஆலமரத்தின் சோகம்

    11. பட்டு - சிட்டு

    12. வைரஸ்… கெட்ட வைரஸ்!

    என்னுரை

    சென்னை

    01.01.23

    கொரோனா பெருந்தொற்றின் விளைவால் ஏற்பட்ட ஊரடங்கு காலம் (2020 மார்ச் மாதம் முதல் சுமார் ஒன்றரை ஆண்டுகள்), பெரியவர்களைவிட குழந்தைகளைப் பல மடங்கு அதிகமாகவே பாதிப்புக்குள்ளாக்கியது. ஓடியாடித் திரிய வேண்டிய குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கும் அவல நிலையை இந்த உலகம் கண்டது.

    பச்சைப் பசுங்கிளிகளாய் பறந்து திரிந்த பச்சிளம் பிள்ளைகள், லாக்டௌன் காலத்தில் சிரிப்பை மறந்து, மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். தம் வயதையொத்த நண்பர்களைப் பார்க்க முடியாத நிலையில் மனதுக்குள்ளேயே புழுங்கினார்கள். பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்த சூழலில், அன்பான ஆசிரியர்களைப் பார்க்க முடியவில்லை; நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து விளையாட முடியவில்லை; வீடு… வீடு…. வீடு மட்டுமே அவர்களது உலகமாகிப் போனது. சுமார் ஒன்றரை ஆண்டுக்காலம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் படிப்பைத் தொடர்ந்தனர்.

    புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளின் அவலத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. படிப்பும் போய், வேலையும் போய் சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல அலைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ரயிலிலும், வாகனங்களிலும் பயணித்தும், கால்நடையாகவே நடந்தும் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அந்தத் தொழிலாளர்களின் குழந்தைகள், தங்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து சொல்லவொண்ணா துயரங்களை அனுபவித்தனர். இப்போதுவரை பல பிள்ளைகள் படிப்பைத் தொடர முடியாத நிலையில், சொந்த மாநிலத்திலேயே தங்கிவிட்டனர். கல்வி என்ற ஏணியைக் கொடுத்தால் தம் பிள்ளைகள் கரை சேர்த்து விடுவார்கள் என்று நினைத்த ஏழைத் தொழிலாளர்களின் நினைப்பு தவிடுபொடியானது.

    அதே நேரத்தில், கொரோனா ஊரடங்குக் காலத்தில் சில நன்மைகளும் ஏற்படாமலில்லை. தம் பிள்ளைகளின் மனச் சோர்வைப் போக்க பெற்றோர்கள் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டனர். தங்களின் மதிப்புமிக்க நேரங்களை, பிள்ளைகளுடன் செலவிட்டனர். அதுவரை `வேலை, வேலை’ என்று நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த பெற்றோர்கள், தாம் பெற்ற பிள்ளைகளுடன் அமர்ந்து உணவருந்தினர்; அவர்களுடன் சேர்ந்து தாயம், கேரம் போர்டு, செஸ் விளையாடினர் ; நீதிக் கதைகள் சொல்லினர்; இரவு நேரத்தில் அவர்களைத் தம்முடன் சேர்த்து அணைத்துக்கொண்டு உறங்கினர். இவையெல்லாம் உறவுகளை வலுப்படுத்தின.

    கொரோனாவால் பள்ளிக்குப் போக முடியாமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய நிலையில், சிறுவர்-சிறுமிகளில் பலர் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவி செய்ய ஆர்வம் காட்டினர். காய்கறிகள் நறுக்கிக் கொடுத்தனர். வீடு பெருக்கி, துணிகளை மடித்து வைத்தனர். தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டனர். பள்ளிக்கூடம், வீட்டுப்பாடம் என்று முழு நேரத்தையும் செலவிட்டுவந்த சிறுவர்-சிறுமியர் தாங்கள் ஆசைப்பட்ட கலைகளை (ஓவியம், பாட்டு, நடனம், கிடார்…) ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். இப்படிச் சில நன்மைகளையும் இந்த லாக்டௌன் தந்தது.

    வாழ்க்கையின் அருமையை, உடல் ஆரோக்கியத்தை, சுகாதாரத்தை, குறிப்பாக, மனிதத்தை உணர்ந்துகொள்ள கொரோனா லாக்டௌன் மிகப் பெரிய வாய்ப்பை குழந்தைகளுக்கு அளித்தது என்றே சொல்ல வேண்டும். கொரோனா அரக்கனின் கோரப் பிடியால், பெற்றோரை, உற்றார் உறவினர்களை, நண்பர்களை, தோழிகளை இழந்த சிறுவர்-சிறுமியர் பலர். `ஆரோக்கியமே ஒப்பற்ற செல்வம்’ என்பதை குழந்தைகள் புரிந்துகொண்டனர். உயிரின் மதிப்பை உணர்ந்து கொள்ள கொரோனா உதவியது என்றால் மிகையல்ல. இந்தக் காலகட்டத்தில் சில சிறுவர்கள் தங்களால் முடிந்த சமூக சேவையில் ஈடுபட்டனர். உண்டியலில் சேமித்து வந்த பணத்தை சமூகப் பணிகளுக்காக மனமுவந்து அளித்தனர்.

    இன்பமும், துன்பமும் இணைந்ததுதான் வாழ்க்கை. இக்கட்டான காலத்தில் குழந்தைகள் மன தைரியத்துடனும், உறுதியுடனும், சக மனிதர்கள் மீது கூடுதல் அன்புடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டதுதான் உங்களின் கைகளில் தவழும் `புது அவதாரம்’ - கொரோனா கால சிறுவர் கதைகள்.

    எதிர்பாராத சம்பவங்கள் மனித வாழ்க்கையைப் புரட்டிப் போடலாம். ஆனால், மனிதன் ஒரு போதும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது. மனிதத்தை இழக்கக்கூடாது. நெருக்கடியான காலத்திலும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நம்மை

    மேம்படுத்திக் கொள்வதுடன், நாம் சார்ந்த சமூகத்தையும் மேம்படு்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்தக் கதைகளை உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் படித்துக் காண்பியுங்கள்.

    கொரோனா போன்ற கொடிய வைரஸ்கள் வருங்காலத்தில் எத்தனை வந்தாலும், வாழ்க்கையை அர்த்தமுள்ள வகையில் தன்னம்பிக்கையுடன் வாழ நம் குழந்தைகளுக்குப் பழக்குவோம். நாமும் அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருப்போம்.

    `புது அவதாரமாக’ உலகுக்கு வந்து, உலக மக்களை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸையும், அதன் விளைவாக ஏற்பட்ட லாக்டௌன் காலத்தையும் பிரதிபலிக்கும் வகையில் 12 கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கதைகளுக்கு தம் ஓவியத்தால் உயிரூட்டியிருக்கிறார்கள், ஓவியர்கள் பிள்ளை, முருகு, தமிழ் போன்றோர். அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    மிக்க அன்புடன்,

    ஜி.மீனாட்சி

    செல்பேசி: 9600045293, 9994941195

    1. புது அவதாரம்!

    சென்னை மாநகரம் கடந்த மூன்று மாதங்களாக வெறிச்சோடிக் கிடக்கிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலைகளில் மருந்துக்குக்கூட ஜன நடமாட்டத்தைப் பார்க்க முடியவில்லை. மக்கள் உயிருக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். வாகனங்களின் ஓசை குறைந்துவிட்டது. அதனால், புகை படியாத தூய வானத்தைப் பார்க்க முடிகிறது. அட… இதென்ன ஆச்சர்யம்… நகரத்தின் பிரதான சாலையிலிருக்கும் அரச மரத்தின் மீது நான்கைந்து குயில்கள் அமர்ந்து உற்சாகமாகப் பாடிக் கொண்டிருக்கின்றனவே… இவை எப்படி இங்கு வந்தன?

    அந்தச் சாலையின்

    Enjoying the preview?
    Page 1 of 1