Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mazhalai Ulagu
Mazhalai Ulagu
Mazhalai Ulagu
Ebook145 pages43 minutes

Mazhalai Ulagu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘மழலை உலகு' என்ற தலைப்பின் கீழ் உமையவன் படைத்த சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் அத்தனையும் படித்தேன். ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும் அந்தக் கதைக்குப் பொருத்தமான குறளைத் தந்து, கதையின் நோக்கினை விளக்கி, அந்தக் குறட்பாக்களை மனதில் பதியுமாறு வரைந்த விவரம் தனித்துவம் பெற்று இருக்கின்றது.

இலக்கியப் பயணத்திலும், ஆன்மிகப் பயணத்திலும் கவிதை உலகிலும், தனது சாதனையைப் படைக்க வேண்டும் என்று துடிப்புள்ள இளமையோடு செயல்படுகின்ற உமையவனின் எழுதுகோல் முத்திரை பதிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சிறுவர்களுக்காகப் படைத்துள்ள கதைகள் அத்தனையும் தமிழ் அன்னையின் கழுத்தில் முத்தாரமாக ஒளி விடுகின்றன. உமையவன் இன்னும் பல நூல்கள் ‘ஹைகூ’ என்னும் கவிதை வடிவிலும், தன்னம்பிக்கை நூல் ஒன்றும் படைத்துக் கொண்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி.

அவரது பணிகள் புகழ் பாதையில் பீடு நடை போட அந்த உமையவனே அருள் தருக என வாழ்த்துகின்றேன்.

அன்புடன்

நீதியரசர் தி. நெ. வள்ளிநாயகம்

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580131905650
Mazhalai Ulagu

Read more from Umayavan

Related to Mazhalai Ulagu

Related ebooks

Reviews for Mazhalai Ulagu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mazhalai Ulagu - Umayavan

    http://www.pustaka.co.in

    மழலை உலகு

    (சிறுவர்களுக்கான திருக்குறள் நீதிக்கதைகள்)

    Mazhalai Ulagu

    (Siruvargalukkana Thirukkural Neethi Kathaigal)

    Author:

    உழவுக்கவிஞர் உமையவன்

    Uzhavu Kavingar Umayavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/umayavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    காணிக்கை - பி. வெங்கட்ராமன்

    காணிக்கை - செலம்பாயி அமத்தா

    அணிந்துரை

    வாழ்த்துரை

    என்னுரை

    1. முயற்சியின் கூலி வெற்றி!

    2. எண்ணங்களே ஏணிப்படிகள்!

    3. நன்மை செய்ய விரும்பு

    4. செல்வியின் புஜ்ஜி!

    5. நட்புக்குமுண்டு பொருத்தம்!

    6. அதனை அவன்கண் விடல்!

    7. நண்பனின் தோளில் கை போட்டு!

    8. காலமே வெற்றியின் திறவுகோல்!.

    9. பொய் மெய்யான கதை!

    10. விதைத்ததே விளைச்சல் பெறும்!

    11. பொறுத்தாரே சிறந்தார்!

    12. மெய்பொருள் காண்பதறிவு!

    13. கெடுப்பார் இல்லாமல் கெடுவான்

    14. நட்பிற்குமுண்டு இனம்!

    15 தன் வலி அறிதல்!

    16. எளியோரும் வலியோரே!

    17. தளர்ச்சியின்மையே வளர்ச்சி!

    18. தளர்ச்சி இல்லா முயற்சி!

    19. இடைவிடா முயற்சி

    20 பழியும், தாயின் பசியும்!

    21. சுடும் நெஞ்சு!

    22. மனதில் காப்பதே வெற்றி!

    23. எடுத்து வச்சாங்கல்!

    24. ஆலமரத்தில் ஒரு கிளி!

    *****

    காணிக்கை

    பிறர்நலன் விரும்பி, இலக்கிய ஏணி, குழந்தைக்கவிஞர், சிறந்த மனிதநேயர், சுறுசுறுப்புத் தேனீ, உயர்ந்த உள்ளத்தின் கோமகன் என இலக்கிய உலகில் பெரிதும் அறியப்படும் எண்பது வயது இளைஞர் குழந்தைக்கவிஞர் பணிச்செல்வர் பி. வெங்கட்ராமன் அவர்களுக்கு இந்நூலை மனதார காணிக்கையாக்கி பெரு உவகை கொள்கிறேன்.

    - உமையன்

    *****

    காணிக்கை

    செலம்பாயி அமத்தா

    சிறந்த கதை சொல்லியாக, உணவையும் பாசத்தையும் ஒன்றாக பறிமாறிய, எங்கள் நினைவுகளில் நீக்கமற நிறைந்துள்ள பாசத்திற்குரிய எங்கள் ‘அம்மாத்தா' தெய்வத்திரு. திருமதி. செலம்பாயி சூரியப்பகவுண்டர் அவர்களுக்கு இந்நூலை பாசத்தோடு காணிக்கையாக்கி உள்ளம் மகிழ்கிறேன்.

    - உமையவன்

    *****

    அணிந்துரை

    நல்லெண்ண விதைகளை சிறுவயதிலேயே விதைக்க வேண்டும்

    உமையவன் என்னும் புனைப்பெயரில் பல நூல்களை எழுதிய எழுத்தாளர் ப. இராமசாமி சிறந்த முறையில், திருக்குறளுக்கேற்ற கதைகள் இருபத்து நான்கு கதைகளைத் தேர்ந்து எழுதியுள்ளார்.

    எண்ணங்களே ஏணிப்படிகள் காலமே வெற்றியின் திறவுகோல் தளர்ச்சி இல்லா முயற்சி தலைக்கனம் தலை சாய்க்கும் தன்னையே கொல்லும் சினம்

    போன்ற தலைப்புகள், படித்ததும் அக்கதைகளைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளன. தற்காலத்தில் சிறுவர் படைப்புகளைப் படைக்க முன் வருவோரில் தலைசிறந்த எழுத்தாளராக உமையவன் விளங்குகிறார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவரின் படைப்புகளில் விவசாயம் சார்ந்த பல கதைகள் இடம் பெற்றுள்ளன. சிறுவர்க்கான நீதிக்கதைகள் இவருடைய எழுத்தாற்றலை வியந்து போற்றும் அளவில் அமைந்திருந்தன. இந்நூல் கதைகளும் சிந்திக்கத் தக்க வகையிலும், நல்ல கருத்துகளை மனத்தில் பதிக்கத்தக்க வகையிலும் எழுதியுள்ளார். பொறாமையால் தீயவை செய்பவன் அழிவான் என்பதைக் ‘கோபி’ என்ற பாத்திரத்தின் மூலம் விளக்கியுள்ளார்.

    தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். (202)

    என்ற திருக்குறளைக் கொண்டு, மிக அருமைாயன கதை எழுதிய திறம் போற்றுதற்குரியதாகும்.

    குழந்தைகளின் பிஞ்சுமொழி கேளா மன்னன் மகிழ்வின்மையை இக்கதை மூலம் விளக்கியுள்ள திறம் போற்றதற்குரியதாகும்.

    'குழல் இனிது யாழ் இனிது’ என்ற தலைப்பே இனிமையாக உள்ளது. அனைவரும் படித்து இன்புறும் வண்ணம் சுவை பொருந்திய கதைகள், திருக்குறளுக்கேற்ற வண்ணம் அமைந்துள்ளன.

    முயற்சி, ஊக்கம், இனியவை கூறல், காலமறிந்து செய்தல், பொய் பேசாமை, வலியறிதல், விடாமுயற்சி, செயல்தூய்மை, செயலில் உறதி, செயல்படும் முறைகள், இன்னா செய்யாமை போன்ற அதிகாரத் தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, குறளுக்கேற்ற கதை எழுதுவது என்பது நுண்மாண் நுழைபுலம் உள்ளவர்களால் மட்டுமே செய்ய முடியும். அருமையான கதைகள், ஒவ்வொரு கதையும், படிக்க, படிக்க இன்பம் தருவனவாக அமைந்துள்ளன.

    சிறுவர்களிடம் நன்னெறியை வளர்க்க இக்கதைகள் துணைபுரியும் என்பதில் ஐயமே இல்லை. வாழ்க்கையை வளப்படுத்த இந்நூலிலுள்ள நீதிக்கதைகள் உதவுகின்றன. படிப்போர் உள்ளம் கொள்ளை கொள்ளும் வகையில் எழுதிய கதைகள் மிகவும் அற்புதமானது.

    செயலைத் தொடங்கும் பொழுது எண்ணித் துணிந்து தொடங்க வேண்டும். தொடங்கிய பின்னர் எண்ணுவது இழுக்காகும் என்பதை மாணிக்கம் என்னும் மனிதன் மூலம் விளக்குவது அருமையிலும் அருமை.

    புலி, மான், கிளி, முயல், சிங்கம் போன்ற அஃறிணைப் பொருள்களை கதைக் கருவாகக் கொண்டு கதை எழுதியிருப்பது சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

    நல்லெண்ண விதைகளை சிறுவயதிலேயே விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நல்ல கதைகளை உமையவன் எழுதியுள்ளார்.

    புதுக்கவிதை, குறுங்கவிதை, ஹைக்கூ போன்றவைகளை எழுதும் எழுத்தாளர் உமையவன் உரைநடையிலும் வல்லவர் என்பதை சிறுவர் நீதிக்கதைகள் வெளியீட்டு விழாவில் பலரும் பாராட்ட மகிழ்ந்தோம். திருக்குறள் வழி கதை கூறும் இந்நூலிலும் அவரின் கற்பனைத் திறத்திறனை காண முடிகிறது.

    திருடாதே, பொய் சொல்லாதே, மது அருந்தாதே, பொறாமைப் படாதே, கோபப்படாதே எனக் கூறுவதைவிட, கதைகள் மூலம் கூறினால், மாணவர்கள் உள்ளத்தில் பதியும் என்பதை உணர்ந்து கதைகள் மூலம் கருத்தினைக் கூறும் திறம் போற்றுதற்குரியதாகும்.

    கவிஞர், எழுத்தாளர், உமையவன் மேலும் மேலும் பல நூல்கள் படைத்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

    - முனைவர் கோ. பெரியண்ணன் பொதுச் செயலாளர் அனைத்து இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், சென்னை

    *****

    வாழ்த்துரை

    உமையவனின் எழுதுகோல் முத்திரை பதிக்கும்!

    ‘மழலை உலகு' என்ற தலைப்பின் கீழ் உமையவன் படைத்த சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் அத்தனையும் படித்தேன். ஒவ்வொரு கதைக்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1