Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadhamba Vanam
Kadhamba Vanam
Kadhamba Vanam
Ebook141 pages49 minutes

Kadhamba Vanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்ததிகளின் எண்ண மாற்றமும், அதனால் வரும் தாக்கங்களையும், உஷா கண்ணன் அழகாக கையாண்டிருக்கிறார். தன் தவறை உணர்ந்து, வருந்தி திருந்துவதைவிட வேறு நல்ல எண்ணம் இருக்க முடியாது என்று ஆணித்தரமாக கூறி உள்ளார். மன மாற்றதுக்கு காரணமான இடமே போதிமரம் என்று உணர்த்தியிருப்பது நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று.

இதுபோல பல கதைகள் கொண்ட அழகாக இந்த "கதம்ப வனம்" கதை தொகுப்பை வாசித்து மகிழ்வோம்.

Languageதமிழ்
Release dateDec 16, 2023
ISBN6580168010465
Kadhamba Vanam

Read more from Uma Aparna

Related to Kadhamba Vanam

Related ebooks

Reviews for Kadhamba Vanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadhamba Vanam - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கதம்ப வனம்

    (சிறுகதைகள்)

    Kadhamba Vanam

    (Sirukadhaigal)

    Author:

    உமா அபர்ணா

    Uma Aparna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    அணிந்துரை

    அணிந்துரை

    1. ஞானோதயம்

    2. கோபுரத்தின் கலசங்கள்

    3. தலை தீபாவளி

    4. சுமை என்பது சுமை அல்ல சுகமே!

    5. இலையுதிர்கால இளம்பேய்

    6. வாழ்க்கை ஒரு பயணம்

    7. அங்கீகாரம்

    8. காதல் வேண்டிக் கரைகின்றேன்

    9. கனவே கலையாதே

    10. திகில் மாளிகை

    11. சந்தோஷம் பொங்குதே

    அணிந்துரை

    முதலில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அனைவரின் கதைகளையும் சேகரித்து, நல்ல முறையில் அச்சிட்டுத் தரும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கும் ‘பேக்கிடெர்ம்’ உமா அபர்ணா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    முதல் கதை ஞானோதயம். எழுதியவர் உஷா கண்ணன்.

    ‘ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் போதிமரம்’ இதுதான் கதையின் கரு.

    பாட்டி காமாட்சிதான் கதையின் நாயகி. அவரின் மாமியார், மாமனார் காமாட்சியிடமும், அவள் கணவனிடமும் நடந்துகொண்ட விதம் மாதிரியே அவர்களும் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்கிறார்கள். தனக்கு நடக்கும் போது தவறாகத் தோன்றிய விஷயம், தாங்கள் செய்யும்போது சரியாகத் தோன்றுவதுடன், நாங்கள் இப்படித்தானே நடந்துகொண்டோம் என்று பெருமிதமும் கொள்கிறார்கள். அதைத் தவறு என்று அவர்களுக்கு உணர்த்துவது அவர்கள் பேரன். எப்படி? சிறுகதையைப் படியுங்கள். நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதும் புரியும்.

    இரண்டாவது கதையை எழுதி இருப்பவர் வனஜா முத்துக்கிருஷ்ணன்.

    கதையின் தலைப்பு ‘கோபுரத்தின் கலசங்கள்’. தலைப்புக்கு ஏற்ற கதையா? கதைக்கு ஏற்ற தலைப்பா? என்று சந்தேகம் தோன்றாதபடி கதையையும், தலைப்பையும் கச்சிதமாகச் சேர்த்துவிட்டார்.

    கோபுரத்துக் கலசங்களில் சேமிக்கப்படும் தானியங்கள் விஞ்ஞானமும், ஆன்மீகமும் சேர்ந்த மாதிரியான காரணம் கொண்டது. அதுமாதிரி நம்ம கடமையையும் செய்யணும். நாட்டுக்கும் உபயோகமா இருக்கணுங்கறது இவர் கதை சொல்லும் செய்தி.

    மூன்றாவது கதையை எழுதியவரும் வனஜா முத்துக்கிருஷ்ணன். இதன் தலைப்பு ‘தலை தீபாவளி’.

    எண்பதாம் கல்யாணம் முடிந்த தம்பதியினரைப் பற்றிய கதை இது. அந்தக் கால தம்பதியினர் இருவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்வதும், கணவர் ஒன்றும் தெரியாதவராய் முழிப்பதும் சீதாபாட்டி - அப்புசாமி கதைகளை ஞாபகமூட்டுகிறது. பேரும் அப்புவே.

    நான்காவது கதையான ‘சுமை என்பது சுமை அல்ல சுகமே...!’ என்ற கதையை எழுதியவர் ருக்மணி வெங்கட்ராமன்.

    கால் வளர்ச்சி சரியில்லாத குழந்தையை, மாமியாரும், கணவனும் அநாதை ஆசிரமத்தில் விட்டுவிட ஏற்பாடு செய்வதை அறிந்து, தன்வழியில் அந்த சுமையை சுகமாக ஏற்கிறாள் கமலா, தாயாக.

    அடுத்தது ஐந்தாவது கதை பத்மா ராகவன் எழுதிய, ‘இலையுதிர்கால இளம்பேய்’.

    ஆன்மீகம், அமானுஷ்யம், மருத்துவம், மனோதத்துவம் என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி இருக்கிறார்.

    மருத்துவம் படிக்கும் பெண்ணொருத்தியின் கதை இது. பயந்த சுபாவமுள்ள பெண் ஒருத்திக்கு பேய் பிடித்திருக்கிறது என்று பெற்றோர் கோயிலுக்குச் செல்ல, எதேச்சையாக அங்கு வரும் மருத்துவர் உதவியால் குணமடைகிறாள் அந்தப் பெண். எப்படி? படித்துப் பாருங்கள்.

    ஆறாவது கதை ‘வாழ்க்கை ஒரு பயணம்’. எழுதியவர் ராஜேஸ்வரி ஐயர்.

    பயணக் கட்டுரையாகவே வாழ்க்கையைப் பற்றி எழுதிவிட்டார். ஆலங்கட்டி மழையெல்லாம் இக்காலத்து குழந்தைகள் அறியமாட்டார்கள். சேர்ந்து வாழ்தலின் இன்பமும், துன்பமும்கூட அவர்கள் அறியமாட்டார்கள். மகிழ்ச்சி எனும் வண்ணம் கூட வாழ்க்கையின் அழகு கூடும் என்கிறார்.

    அடுத்த கதையும் இவருடையது. இதன் பின்னணி வித்தியாசமானது. போர்த்துகீசிய பழக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. போர்த்துகீசிய அப்பா, தன் மகள் வளரும்போது அங்கீகாரம் தராமல், தன் மனைவி இறந்த பிறகு, அவளுடைய வீட்டை மகளுக்குத் தருவதன் மூலம் பிரேமாவை மகளாக அங்கீகரிக்கிறார். கதையின் தலைப்பே ‘அங்கீகாரம்’.

    அடுத்த கதையான ‘காதலை வேண்டிக் கரைகின்றேன்’ எழுதியவர் ஜெயந்தி பத்ரி. காதலை கணவனிடம் வேண்டி நிற்கிறாள் ஒருத்தி. ஆனால் பொறுப்பற்ற அவன், அவளைப் புறக்கணிக்கிறான். அவன் நோய்வாய்பட்டு அவளை உணர்ந்து திருந்தும்போது அவள் விலக முடிவெடுக்க, அவன் மனைவியின் காதலை வேண்டிக் கரைகின்றான். பெண்கள் சுயமான முடிவை எடுக்கவேண்டிய அவசியத்தைக் காட்டும் கதை.

    அடுத்தது ‘சந்தோஷம் பொங்குதே’. வயதான பெண்மணி தன் பயண சந்தோஷத்தை, தன் வயது தோழியுடன் பகிர்ந்துகொள்ளும் கதை. எழுதியவர் சுஜாதா கணேஷ்.

    அடுத்த இரு கதைகளை எழுதியவர் உமா சுவாமிநாதன்.

    தன் கனவுகளையும் கலைத்துக்கொள்ளாமல், குடும்பத்தினர் கனவுகளையும் கலையவிடாமல் ஒன்று சேர்ந்து வாழ முடிவெடுக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் கதை ‘கனவே கலையாதே’.

    கடைசி கதை ‘திகில் மாளிகை’. பேய், பிசாசு என்பதெல்லாம் கட்டுக்கதை என்று விளக்குகிறார்.

    எழுதிய எல்லோரும் வயதானவர்கள். எழுதும் ஆசையில் முத்தெடுக்க கடலில் இறங்கியிருக்கிறார்கள். வருங்காலத்தில் அபூர்வ முத்தையும் கண்டெடுக்கலாம்.

    இப்போதே மனமார்ந்த வாழ்த்துகள். இவர்களை ஊக்குவிக்கும் உமா அபர்ணா அவர்களுக்கும், நிறுவனர் லட்சுமி ப்ரியா அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    சுபாஷிணி ரமணன்

    அணிந்துரை

    சுற்றுச்சூழலையும், சொந்தங்களையும் குறை கூறாமல், இலக்கியத்திலும், தீந்தமிழிலும் மனதை செலுத்தி, தமக்கும், தம்மை சார்ந்த மக்களுக்கும், தமிழ் இனிமையையும், ஊக்கத்தையும் அளிக்கும் முதிர்ந்த பெண் மகளிருக்கு என் மனமார்ந்த ஆசியும், அன்பும்...

    சந்ததிகளின் எண்ண மாற்றமும், அதனால் வரும் தாக்கங்களையும் உஷா கண்ணன் அழகாக கையாண்டிருக்கிறார். தன் தவறை உணர்ந்து, வருந்தி திருந்துவதைவிட வேறு நல்ல எண்ணம் இருக்க முடியாது என்று ஆணித்தரமாக கூறி உள்ளார்.

    மனமாற்றதுக்கு காரணமான இடமே போதிமரம் என்று உணர்த்தியிருப்பது, நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று.

    ஒரு கிராமத்தின் ஏழை குடும்பத்தின் இயலாமை, தன் மகனின் நலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, மருமகளின் வாழ்க்கையும், ஒன்றும் அறியாத சிசுவின் வாழ்க்கையும் சிதைக்க துணிந்த அறியாமை, துணிவு, போராடும் குணம் இவற்றுடன் சுமை கல்லாய் இருந்து, மகளை ஊர் மெச்சும் நிலைக்கு கொண்டுவரும் மருமகளின் சிறப்பு ஆகியவற்றை, அழகான கிராமத்து நடையில், கண்முன் கொண்டு நிறுத்தும் ஆசிரியர் ருக்மணி பாராட்டுக்குறியவர்.

    அழகாக பெண்ணுக்கு வரன் பார்க்கும் தந்தையுடன் ஆரம்பித்து, வாழ்க்கைக்கு அழகுடன் மற்ற சமூக எண்ணங்களும், அழகாக வாழ்க்கையை ரசிக்கும் எண்ணமும் தேவை என்பதுடன், மக்களுக்கும், சமூகத்துக்கும் உபயோகமாக வாழவேண்டும் என்ற கருத்தை, கோபுரத்தின் கலசங்கள் கதை, வனஜா முத்துகிருஷ்ணன் அவர்கள் எழுத்தில் கோபுரமாக உயர்ந்து நிற்கிறது. தலை தீபாவளி கதை, பாக்கியம் ராமசாமி திரும்ப எழுத வந்துவிட்டாரோ என்று எண்ண வைக்கிறது.

    கோவாவின் போர்த்துகீசியர்களின் வாழ்க்கையில், இந்திய பெண்மணியின் வாழ்க்கையை பின்னி மிக அழகாக, அதிகம் வெளியில் அறியப்படாத சில வழக்கங்களை தெளிவாக கதையின் நாயகி மூலம் விவரித்து இருக்கிறார்.

    எளிய நடை; படிக்க தூண்டும் வகையில் அமைந்துள்ளது, ராஜேஸ்வரி அவர்களின் கதை.

    பத்மா ராகவன், பேய், மனக்குழப்பம் தொடர்பறு அடையாள பாதிப்பு (split personality) என்று மிக நுண்ணிய கதையம்சங்கள் எடுத்துக்கொண்டு எளிய நடையில் கையாண்டு இருப்பது பாராட்டத்தக்கது.

    கதையின் நாயகி காதல் வேண்டி கரைந்தாளோ

    Enjoying the preview?
    Page 1 of 1