Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilaiya Bharatham
Ilaiya Bharatham
Ilaiya Bharatham
Ebook61 pages20 minutes

Ilaiya Bharatham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குழந்தைகளுக்குக் கதை எழுதுவது என்பது மிகவும் கடினமான செயல் ஆகும். பொதுவாகக் குழந்தைகளுக்குச் சொல்லப்படக் கூடிய கதையில் ஏதேனும் ஒரு செய்தி அவர்களுக்கு உபயோகமானதாக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பாடங்களைத் தவிர வேறு எதிலுமே நாட்டம் இருப்பதில்லை. காரணம், அவர்களது பாடச் சுமையே. எனவே, குழந்தைகள் வாழ்விற்குத் தேவையான நல்ல விஷயங்களை உணர்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. அந்தக் குறையை இந்தக் கதைகள் தீர்த்து வைக்கின்றன என்பதை வாருங்கள் வாசித்து அறிந்துகொள்வோம்...

Languageதமிழ்
Release dateMar 2, 2024
ISBN6580168010671
Ilaiya Bharatham

Read more from Uma Aparna

Related to Ilaiya Bharatham

Related ebooks

Reviews for Ilaiya Bharatham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilaiya Bharatham - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இளைய பாரதம்

    Ilaiya Bharatham

    Author:

    உமா வெங்கட்

    Uma Venkat

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    அணிந்துரை

    ஆசிரியர் குறிப்பு

    என்னுரை

    தனித்துவமே சிறப்பு

    இடத்திற்கேற்ற மாற்றம்

    ஏமாற்றாதே ஏமாறாதே

    பகிர்ந்து கொள்வதே இரட்டிப்பு மகிழ்ச்சி

    இதுவே நல்ல நட்பு

    அறிவுரைகள் நல்லதே

    மனம் லேசாகட்டும்

    வயதுக்கு மரியாதை

    அணிந்துரை

    குழந்தைகளுக்குக் கதை எழுதுவது என்பது மிகவும் கடினமான செயல் ஆகும். காரணம் அவர்களுடைய மொழியிலேயே நாம் பேச வேண்டும். அந்த வகையில் உமா வெங்கட் அவர்களுடைய சிறுகதைகள் மிகவும் யதார்த்தமாக, குழந்தைகளுடன் குழந்தையாகவே அவரும் மாறி கதையைக் கொண்டு செல்லும் விதம் அருமை.

    இந்த நூலின் ஆசிரியர் முகநூலில் பெண்களுக்கான தனிப்பட்ட குழு ஒன்றை அமைத்து அதனைத் திறம்பட நடத்தி வருபவர். இவருடைய கதைகளைப் படிக்கும் பொழுது அவருடைய புதிய பரிணாம வளர்ச்சியை அறிய முடிந்தது. குழந்தைகளுக்குத் தேவையான பல செய்திகளை எளிய நடையிலே கதை வாயிலாக அவர் சொல்லித் தருகிறார்.

    பொதுவாகக் குழந்தைகளுக்குச் சொல்லப்படக் கூடிய கதையில் ஏதேனும் ஒரு செய்தி அவர்களுக்கு உபயோகமானதாக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பாடங்களைத் தவிர வேறு எதிலுமே நாட்டம் இருப்பதில்லை. காரணம் அவர்களது பாடச் சுமையே. எனவே, குழந்தைகள் வாழ்விற்குத் தேவையான நல்ல விஷயங்களை உணர்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. அந்தக் குறையை இந்தக் கதைகள் தீர்த்து வைக்கின்றன.

    ‘தனித்துவமே சிறப்பு’ என்னும் முதல் கதையில் அவரவர்க்கு என்று எது கொடுக்கப்பட்டதோ, அதை ஏற்றுப் பழக வேண்டும் என்னும் உயரிய கருத்தைக் காக்கையின் ஏக்கம் மூலம் கவிதை நடையில் அழகாக ஆசிரியை விளக்கியுள்ளார்.

    அடுத்த கதையான ‘இடத்திற்கேற்ற மாற்றம்’ எந்தெந்தச் சூழலில் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தமக்கே உரிய யதார்த்த நடையிலே நித்யாவிற்கு மட்டுமல்ல; நமக்குமே ஆசிரியை நன்கு பதியுமாறு புரிய வைக்கின்றார்.

    ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ எனும் கதை அலைபேசி எப்படி நம்முடைய நேரத்தை எடுத்துக் கொள்கிறது; அதனால் மாணவ சமுதாயம் எப்படிப் பாதிக்கப்படுகிறது என்று எச்சரிக்கை விடுக்கின்றார்.

    ‘பகிர்ந்து கொள்வதே இரட்டிப்பு மகிழ்ச்சி’ எனும் கதையின் தலைப்பே நமக்குக் கதையின் கருப்பொருளை உணர்த்துகிறது. பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்ற உன்னதப் பண்பைக் குழந்தைகளுக்கு அனிதா என்னும் சிறுமி மூலம் உணர வைக்கின்றார். நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு இக்கதை நிச்சயம் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும்.

    அடுத்து ‘இதுவல்லவோ நட்பு’ எனும் கதை இன்றைய காலக் குழந்தைகளை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. நண்பனின் தவறை இடித்தும் எடுத்தும் உரைக்கும் நண்பர்கள் கிடைப்பது பெரும் வரமாகும். அத்தகைய வரத்தைக் கவின் பெற்றிருக்கிறான். வள்ளுவனின் குறள் சொல்லும் நட்புக்கு இலக்கணமாக அவர்கள் திகழ்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    அடுத்த கதையான ‘அறிவுரைகள் நல்லது’

    Enjoying the preview?
    Page 1 of 1