Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appavai Azhaithu Vaa!
Appavai Azhaithu Vaa!
Appavai Azhaithu Vaa!
Ebook102 pages32 minutes

Appavai Azhaithu Vaa!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமிகு. மா. கமலவேலன் அவர்கள் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அன்னைத் தமிழுக்குப் புதிய அணிகலன்கள் பல சூட்டி வருகிறார்கள். அவற்றுள் ஒன்றே 'அப்பாவை அழைத்து வா' என்பதாகும். இந்நூலில் கடல் போன்ற கருத்தாழம் உள்ளது. சமுதாயத்திற்குத் தேவையான படிப்பினைகள் உள்ளது. அவை இலைமறை காயாக நூலில் அமைந்து படிப்பார்க்கு நல்லின்பம் நல்குகிறது.

உண்ணல், உறங்கல் போல் எழுதுதலையும் இயற்கைக் கடனாகக் கொண்டவர் நூலாசிரியர் என்பதை இந்நூல் மூலம் தெளிவாக அறிய முடிகிறது.

Languageதமிழ்
Release dateNov 14, 2023
ISBN6580141909936
Appavai Azhaithu Vaa!

Read more from M. Kamalavelan

Related to Appavai Azhaithu Vaa!

Related ebooks

Reviews for Appavai Azhaithu Vaa!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appavai Azhaithu Vaa! - M. Kamalavelan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அப்பாவை அழைத்து வா!

    Appavai Azhaithu Vaa!

    Author:

    மா.கமலவேலன்

    M. Kamalavelan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    பொருளடக்கம்

    சிறப்புரை

    அணிந்துரை

    ஆசிரியர் உரை

    அப்பாவை அழைத்து வா!

    நேசிக்கும் நெஞ்சங்கள்

    எங்கப்பாவா கஞ்சன்!

    பாவமா? சாபமா?

    நேற்று வந்த ஆற்று வெள்ளம்

    பாடத்தை மட்டும் படிடா!

    வாடாமலர்

    சிறப்புரை

    முனைவர் கடவூர் மணிமாறன்

    க.மு.கல்.மு.மெய்.மு.

    முதுநிலை விரிவுரையாளர்,

    மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,

    மாயனூர் – 639 108.

    இருபதாம் நூற்றாண்டில் புதிய எழுச்சி பெற்று வளர்ந்து வரும் இலக்கிய வகைகளில் ஒன்றே குழந்தை இலக்கியம். குழந்தைகளுக்காக எழுதப்பெறும் பாடல்கள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் அனைத்தையும் கொண்டதே குழந்தை இலக்கியம்.

    சீரிய சிந்தனை வளமும் கூரிய குமுகாய நோக்கமும் உயர்ந்த உள்ளமும் உறுதிப்பாடும் குழந்தைகளிடம் அமையத் துணைபுரிவதும் தூண்டுவதுமே உண்மையான குழந்தை இலக்கியம்.

    குழந்தையை ஒரு செல்வமாக மதிப்பது தமிழ்நாட்டின் இனிய பண்பாகும். குழந்தையைச் செல்வமாக மதித்துப் போற்றிய நாட்டில் குழந்தை இலக்கியம் தொன்றுதொட்டே இருந்து வந்திருக்க வேண்டும் என்பர். தொல்காப்பியத்தில் பிசி பற்றிய குறிப்பு உள்ளது. குழந்தைகளை மகிழ்விப்பதற்காகச் செவிலித் தாயர் கூறிய விடுகதையே பிசி ஆகும். இதனையே குழந்தை இலக்கியத்தின் கூறு எனக் கூறுவர்.

    சிறுகதை, பாடல்கள், நாடகங்களின் வாயிலாக இளந்தளிர்களின் இனிய நெஞ்சங்களைச் செழுமையாக்கிப் பண்படுத்த முடியும். தற்காலக் குழந்தை இலக்கிய வடிவத்திற்கு முன்னோடியாகக் திகழ்ந்து, முதன் முதலில் குழந்தைப் பாடல்களைப் பெருமை கவிமணியையே சாரும்.

    இன்றும் இத்துறையில் முனைப்புடன் ஈடுபட்டு வருவோர் மிகச்சிலரே. எனினும் மொழிவளர்ச்சியில் குழந்தை இலக்கியத்தின் கொடை குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகிறது.

    குழந்தை இலக்கியத்தில் நெடுங்காலமாக நெருக்கமுடன் அவர்கள் இருந்து வரும் திரு. கமலவேலன் அவர்கள் எளிமையும் இனிமையும் வாய்ந்தவர்; பழகுதற்கினிய பண்பாளர்; ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்; அடக்கம் நிறைந்தவர்.

    புகழும் பெருமையும் பூத்துக் குலுங்கும் கல்வி நிறுவனம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர் குழந்தைகளின் மனநிலையை உளவியல் அணுகு முறையில் நன்கு புரிந்துகொண்டு அவர்களுக்கேற்ற இனிய படைப்புகளைத் தொடர்ந்து படைத்து வருகின்றார்.

    இந்நூலில் இடம்பெற்றுள்ள ஏழு நாடகங்களும் ஏழு வண்ணங்களாகவே ஒளிர்கின்றன. பள்ளி விழாக்களில் நடிப்பதற்கு இவை மிகவும் ஏற்புடையன. வானொலி, இதழ்கள், மேடைகள் எனப் பல்வேறு நிலைகளில் இந்நாடகங்கள் முன்னரே அரங்கேறியுள்ளன.

    என்னுடன் மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்ற நாளிலிருந்து பாசம் குறையாமல் பழகிவரும் என் உடன்பிறவா அண்ணன் புலவர் திரு. சு. முத்தரசு, அவர்கள் தம் இளவலின் திருமணம் மதுரையில் நடந்தபோது இந்நூலாசிரியரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஆதலின் இந்நூல் வெளிவர அடித்தளம் அமைத்தவர் அவரே. அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியை நேயமுடன் தெரிவிக்கிறேன்.

    அன்பன்,

    கடவூர் மணிமாறன்

    அணிந்துரை

    புலவர் சு. முத்தரசு, க.மு.கல்.இ.

    தமிழாசிரியர்

    திருவருள் உயர்நிலைப் பள்ளி

    குலசேகரன் பட்டினம்

    நண்பர் திருமிகு. மா. கமலவேலன் அவர்கள் இயற்றிய ‘அப்பாவை அழைத்து வா’ எனும் ஒப்பற்ற நூலினைப் படிக்கும் நற்பேறு இறையருளால் எளியேனுக்குக் கிட்டியது. நூலைப் படித்ததும் என் உள்ளம் உவகைக் கடலில் அமிழ்ந்தது. ஆசிரியர் எழுத்தே உயிர் மூச்செனக் கொண்டவர் என்பதை இந்நூலினைப் படிக்குங்கால் புரிய முடிகிறது. ஆசிரியரின் குருதி அணுக்களில் எழுத்து வேட்கை குடிகொண்டு இருப்பதை இந்நூல் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.

    திருமிகு மா. கமலவேலன் அவர்கள் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அன்னைத் தமிழுக்குப் புதிய அணிகலன்கள் பல சூட்டி வருகிறார்கள். அவற்றுள் ஒன்றே ‘அப்பாவை அழைத்து வா’ என்பதாகும். இந்நூலில் கடல்போன்ற கருத்தாழம் உள்ளது; ‘சமுதாயத்திற்குத் தேவையான படிப்பினைகள் உள்ளன. அவை இலைமறை காயாக நூலில் அமைந்து படிப்பார்க்கு நல்லின்பம் நல்குகிறது.

    உண்ணல், உறங்கல்போல் எழுதுதலையும் இயற்கைக் கடனாகக் கொண்டவர் நூலாசிரியர் என்பதை இந்நூல் மூலம் தெளிவாக அறியமுடிகிறது. ஆசிரியரின் ஆர்வம் முயற்சி, உழைப்பு ஆகியவற்றை நூல் முழுவதும் பரவலாகக் காணமுடிகிறது. சரளமான நடையும், கோவையான கருத்துவளமும், இயல்பாக இழைந்தோடும் நகைச்சுவையும் நூலுக்கு அணி சேர்க்கின்றன. கருத்துவளம் எனும் அடித்தளத்தின்மேல் சொல்லடுக்கு மாளிகையை ஆசிரியர் எழுப்பி உள்ளார்.

    இன்று புற்றீசல்போல் பன்னூல்கள் வெளிவருகின்றன. அவற்றிடையே ஒளிரும் பொன்னூலாக இந்நூல் மிளிர்கிறது. ஆசிரியப் பணிபுரியும் இந்நூலாசிரியப் பெருந்தகை இதுபோன்ற எண்ணற்ற நன்னூல்களைப் படைத்துத் தமிழ்த்தொண்டு செய்ய எல்லாம்வல்ல இறைவன் அருள்வானாக! வாழ்க ஆசிரியரது எழுத்துணர்வு! வெல்க அவரது முயற்சியெலாம்!

    ஆசிரியர் உரை

    குழந்தைகள் குதித்தோடும் அருவிபோலக் குதூகல மனம் கொண்டவர்கள்.

    வெள்ளைச் சிரிப்பும் விளையாட்டும் அவர்கள் சொத்து. கலங்கலற்ற தெளிந்த நீரோடை போன்றது அவர்கள் உள்ளம். அன்பு நெஞ்சங்கொண்ட அக்குழந்தைகளின் பண்புகளைப் பேணி வளர்க்க வேண்டியது

    Enjoying the preview?
    Page 1 of 1