Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Valai Kulunginarpola Mazhalai Mozhi Pesum...
Valai Kulunginarpola Mazhalai Mozhi Pesum...
Valai Kulunginarpola Mazhalai Mozhi Pesum...
Ebook116 pages30 minutes

Valai Kulunginarpola Mazhalai Mozhi Pesum...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அனைத்துக் குழந்தைகளின் வளர்ச்சியிலும் அழகான சுவையான பல பருவங்களும், நிகழ்வுகளும் உண்டு. இந்தத் தொடரில் என் கருத்தில் தோன்றிய, பாடல் பெறாத ஒருசில பருவங்களை நாம் காணப்போகிறோம். பெரிதளவில் பிள்ளைத்தமிழ் நூல்களை பெண்பாற் புலவர்கள் பாடாமையாலோ என்னவோ, சில அழகான குழந்தைப்பருவத்து நிகழ்வுகள் பாடல்பெறாமலே போய்விட்டன. பெண்பாற் புலவர்களால் பாடப்பட்ட ஓரிரு பிள்ளைத்தமிழ் நூல்களும் இன்றுவரை தேடியும் என் கைக்குக் கிட்டவில்லை. பெண்களுக்கும் ஆடவருக்கும் குழந்தையின் ஒரு செயலைக் காணும்போழ்தில் தோன்றும் கற்பனைகள் வேறுபடும் அல்லவா? மேலும் தாய்மாரே குழந்தையுடன் பெரும்பொழுதுகளைக் கழிப்பதனால், அவர்கள் தத்தம் குழந்தைகளுடன் செய்து மகிழும் செயல்களும் பாடப்பட வேண்டும் அல்லவா? ஆகவே இவற்றைப் பதிவுசெய்யலாம் எனும் ஆர்வத்தினால் எழுந்த கட்டுரைகள் இவை.

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580150410829
Valai Kulunginarpola Mazhalai Mozhi Pesum...

Read more from Meenakshi Balganesh

Related to Valai Kulunginarpola Mazhalai Mozhi Pesum...

Related ebooks

Reviews for Valai Kulunginarpola Mazhalai Mozhi Pesum...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Valai Kulunginarpola Mazhalai Mozhi Pesum... - Meenakshi Balganesh

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வளை குலுங்கினாற்போல மழலைமொழி பேசும்...

    (புதிய பிள்ளைப் பருவங்கள்)

    Valai Kulunginarpola Mazhalai Mozhi Pesum...

    Author:

    மீனாக்ஷி பாலகணேஷ்

    Meenakshi Balganesh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/meenakshi-balganesh

    பொருளடக்கம்

    என்னுரை

    அணிந்துரை

    1. கோலம் வரையும் பருவம்

    2. வளையல் அணிதல்

    3. கூந்தல் அலங்காரங்கள்

    4. மருதோன்றி அணிதல்

    5. ஆடல் பாடல் பயிலல்

    6. வில், வாள், ஆயுதம் பயிலல்

    7. போர்க்கலைகள் பயிலல்

    8. சமையல் பழகுதல்

    9. குருகுல வாசம்/கல்வி கற்றல்.

    என்னுரை

    அனைத்துக் குழந்தைகளின் வளர்ச்சியிலும் அழகான சுவையான பல பருவங்களும், நிகழ்வுகளும் உண்டு. இந்தத் தொடரில் என் கருத்தில் தோன்றிய, பாடல் பெறாத ஒருசில பருவங்களை நாம் காணப்போகிறோம். பெரிதளவில் பிள்ளைத்தமிழ் நூல்களை பெண்பாற் புலவர்கள் பாடாமையாலோ என்னவோ, சில அழகான குழந்தைப்பருவத்து நிகழ்வுகள் பாடல்பெறாமலே போய்விட்டன. பெண்பாற் புலவர்களால் பாடப்பட்ட ஓரிரு பிள்ளைத்தமிழ் நூல்களும் இன்றுவரை தேடியும் என் கைக்குக் கிட்டவில்லை.

    பெண்களுக்கும் ஆடவருக்கும் குழந்தையின் ஒரு செயலைக் காணும்போழ்தில் தோன்றும் கற்பனைகள் வேறுபடும் அல்லவா? மேலும் தாய்மாரே குழந்தையுடன் பெரும்பொழுதுகளைக் கழிப்பதனால், அவர்கள் தத்தம் குழந்தைகளுடன் செய்து மகிழும் செயல்களும் பாடப்பட வேண்டும் அல்லவா?

    ஆகவே இவற்றைப் பதிவுசெய்யலாம் எனும் ஆர்வத்தினால் எழுந்த கட்டுரைகள் இவை. இப்பாடல்களையும் கட்டுரைகளையும் பேராசிரியர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர். ஐயா அவர்கள் எனது பிள்ளைத்தமிழ் ஆய்வினைப் பெரிதும் ஊக்குவித்து வழிநடத்தியவர்; எனது பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்குமுரியவர்.) அவர்களுக்கு அனுப்பிவைத்து, அவர்கள் பார்த்தபின்பே பதிப்பிற்கு அனுப்பியுள்ளேன். பேராசிரியர் ஐயா, இனி இப்பருவங்களையும் பிள்ளைத்தமிழ் பாடுவோர் தமது நூல்களில் சேர்த்துப் பாடப் பரிந்துரைக்கலாம் எனத் தமது கருத்தைக் கூறியுள்ளார்.

    இப்பாடல்களை இயற்ற அவ்வத் தெய்வங்களே வழிநடத்தினர் எனல் மிகையன்று. பிள்ளைத்தமிழால் போற்றப்படாத அன்னைத் தெய்வங்கள் மீது பாடல்களை எழுதியுள்ளேன். ஆனால் எனது பேரன்பிற்குரிய மீனாட்சியம்மையையும், சிவகாமித் தாயையும் பாடாமலிருக்க இயலவில்லையே!.

    அன்பிற்குரிய இளம் நண்பர் திருமதி உபாசனா கோவிந்தராஜன் (பாஸ்டன், அமெரிக்கா) பிரத்யேகமாக வரைந்தளித்த அட்டைப்படம் மனதிற்குக் களிப்பூட்டி, மீனாட்சியன்னைபால் பேரன்பைப் பெருக்கிடச் செய்யும்.

    இனி என்ன சொல்வது? தமிழன்னையாம் மீனாட்சியின் திருவருளும், என் ஆசானின் குருவருளும் கூடியதால்தான் இது சாத்தியமாயிற்றதனால் அவர்கள் திருவடிகளைப் பணிகிறேன்.

    அன்புடன்,

    மீனாக்ஷி பாலகணேஷ்

    அணிந்துரை

    இந்நூலுக்கு மிக்க மகிழ்ச்சியோடு அணிந்துரை அளிக்கிறேன். அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன.

    முதலாவது காரணம், தமிழ் இலக்கியப் பரப்பிலே சிற்றிலக்கியங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றவை. பண்டை இலக்கியத்திற்கும் பின்னால் வந்த பக்தி இலக்கியங்களுக்கும் இடையே தனிச்சிறப்போடு பரந்து கிடப்பவை; இன்னும் வளர்ந்து வருபவை; அவற்றுள் காணப்படும் யாப்பு வகைகளும் கருப்பொருளும் கற்பனை வீச்சுகளும் அளவற்றவை; தொண்ணூற்றாறு எனப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் அந்த எண்ணிக்கைக்கும் மேலே இவை உள்ளன என்பது அறிஞர்கள் கருத்தாகும். தமிழின் இரத்தினக் கருவூலங்களுள் ஒன்றான இதனுள் கிடக்கும் ஒப்பற்ற முத்து பிள்ளைக்கவி எனப்படும் பிள்ளைத்தமிழ் ஆகும். இதிலுள்ள மொழியழகும், சொல்லழகும், உணர்வு நெகிழ்ச்சியும் தமிழ் படிக்கும் நெஞ்சங்களுள் உடனே பற்றிக்கொள்ளும் திறம் கொண்டவை.

    என் பிள்ளைப் பருவத்தில் நான் இரசித்துப் படித்த தமிழ் இலக்கியம் பிள்ளைத் தமிழ். குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழும், பகழிக்கூத்தரின் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழும் என் நெஞ்சில் என்றும் நீங்கா இடம்பெற்றவை.

    நூலை முழுதும் படித்து முடித்துவிட்ட பிறகு பிறந்தது இரண்டாவது காரணம். அதுதான் நூலாசிரியரின் செழுந்தமிழ்ப் பல்லக்கில் பவனிவரும் புதிய பார்வை.

    பெரிதளவில் பிள்ளைத்தமிழ் நூல்களை பெண்பாற் புலவர்கள் பாடாமையாலோ என்னவோ, சில அழகான குழந்தைப்பருவத்து நிகழ்வுகள் பாடல்பெறாமலே போய்விட்டன என்ற குறிப்புரையோடு, சில புதிய பிள்ளைப் பருவங்களை ஆசிரியர் அறிமுகம் செய்கிறார். நிச்சயம் ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்றங்கள் என வழிமொழிகிறேன்.

    நிற்க, பிள்ளைத்தமிழின் மரபு சார்ந்த இலக்கண முறைமைகளோடு சில புதிய அணுகுமுறைகளை அறிமுகம் செய்வது தவறல்ல. ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

    பொதுவாகப் பிள்ளைத் தமிழ் நூல்கள் ஆசிரிய விருத்தத்தாலேயே பாடப் பெறுகின்றன. எனினும் பன்னிரு பாட்டியல், ஆசிரிய விருத்தத்தோடு கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம், பஃறோடை வெண்பா முதலிய யாப்பு வகைகளையும் பிள்ளைத் தமிழுக்கு உரியவையாகப் பலர் பயன்படுத்தி உள்ளனர்.

    பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில் முதற்பாடல் திருமாலுக்கு உரியது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய சேக்கிழார் பிள்ளைத் தமிழ், அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ் இரண்டும் இதற்கு விதிவிலக்கு.

    பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில்தான் அமைய வேண்டும் என்பது வரையறை ஆகும். பெரும்பாலான பிள்ளைத்தமிழ்

    Enjoying the preview?
    Page 1 of 1