Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aadi Pattam Thedi Vithai...
Aadi Pattam Thedi Vithai...
Aadi Pattam Thedi Vithai...
Ebook116 pages27 minutes

Aadi Pattam Thedi Vithai...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இயற்கையான இயல்புகளைச் சற்றே மாற்றியும், வேறு கோணத்தில் நோக்கி, வேறு கோலத்தில் கவிதை படைப்பதும் பிரிதொரு வகையாகும். அவ்வாறான ஒரு அமைப்பை கண்ணிகள் ஆகும். பழம் பாடல்கள் வகைகளில் கண்ணிகள் ஒன்றாகும்.

ஒரே அளவுடைய, ஒரே அலகுடைய, ஒரே ஒலியுடைய இரண்டு வரிகளில் கண்ணிகள் பொதுவாக இருக்கும். இவற்றை வாசிப்பதற்கும், யோசிப்பதற்கும் சுவையாக இருக்கும். இந்நூல் மொத்தம் 830 கண்ணிகளை கொண்டு, இருவரி இலக்கியமாகவும், புதுமையாக ஒரு புத்திலக்கியமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580166409860
Aadi Pattam Thedi Vithai...

Read more from T.V.S. Manian

Related to Aadi Pattam Thedi Vithai...

Related ebooks

Reviews for Aadi Pattam Thedi Vithai...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aadi Pattam Thedi Vithai... - T.V.S. Manian

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    ஆடிப் பட்டம் தேடி விதை...

    (இரு வரி இலக்கியம்)

    (கண்ணிகள்)

    Aadi Pattam Thedi Vithai...

    Author:

    டி.வி.எஸ். மணியன்

    T.V.S. Manian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tvs-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    என் உரை

    பகுதி – 1: கண்ணிகள் - இரண்டு பழமொழிகள்

    பகுதி – 2: கண்ணிகள் - பழமொழி + உளமொழி

    பகுதி – 3: கண்ணிகள் – புதுசு

    பகுதி – 4: கண்ணிகள் - சின்ன சின்ன...

    பகுதி – 5: கவிதைகளாக (எனது கவிதைகள்)

    வாழ்த்துரை

    A person wearing glasses Description automatically generated with low confidence

    இந்திரா சௌந்தர்ராஜன்

    அன்பர் டி.வி.எஸ். மணியனின் மகத்தான நூலாக்க முயற்சிகளில் ஒன்று இந்த ஆடிப் பட்டம் தேடி விதை. ‘சில மொழிகளில் பழமொழிகள்’ என்கிற நூலினைத் தொடர்ந்து இவர் எழுதியிருக்கும் இந்த நூலிலும் ஏராளமான பழமொழிகள் நம் சிந்தனைக்கு விருந்தாக காட்சி தருகின்றன. கூடுதலாய்க் கவிதைகள் குறித்து, அதன் துணை நிலைப்பாடுகள் குறித்து குறிப்பாய் ‘கண்ணிகள்’ குறித்து மிக ஆராய்ந்து இந்த நூலைப் படைத்திருக்கிறார்.

    புதிய முயற்சி - அரிய முயற்சியும் கூட! நம் வீட்டில் ஒரு நூலகம் இருப்பது ஒரு பூஜையறை இருப்பதுபோல்... அதில் இந்த நூல் இருப்பதென்பது ஒரு சுவாமி படம் இருப்பதுபோல்!

    இந்த நூலைப் பள்ளிகளில் பாடமாக வைக்கலாம். தமிழிலக்கியம் பயிலுபவர்கள் இதைக் கட்டாயம் வாசிக்க வேண்டும். நம் தமிழ்மொழி குறித்தும் அதன் கருத்துவளம் குறித்தும் இந்த நூல் மூலம் நன்கு அறியலாம். மேடைப் பேச்சாளர்கள் வசமும் இந்த நூல் இருப்பது நல்லது. மேடையில் கூறப்போகும் கருத்துக்கு ஏற்ப கூறப்பட வேண்டிய பழமொழிகள் இந்த நூலில் ஏராளம்!

    எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கியபடியே இருக்கும் திரு டி.வி.எஸ் மணியனின் இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக!

    30.03.2021

    மதுரை – 3

    (இந்திரா சௌந்தர்ராஜன்)

    என் உரை

    A picture containing text, wall, person, posing Description automatically generated

    டி.வி.எஸ். மணியன்

    ‘ஆடியிலே காத்தடிச்சா,

    ஐப்பசியில் மழை வரும்’

    என்பது கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்.

    ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பது முதுமொழி. சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் வெயிலின் கடுமையான தாக்கம். ஆடியில் காற்றடித்து, மழையும் பெய்து பூமியைக் குளுமை ஆக்கும். ஆடிமாதம் என்பது விதைகளை விதைப்பதற்குத் தகுந்த பருவநிலையாக உள்ளது. ஆடிப் பெருக்கு எனச் சொல்லப்படும் ஆடி மாதம் பதினெட்டாம் நாளில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆடிப் பட்டத்தை உறுதி செய்யும். அப்போது விதைத்தால், பின்பு நல்ல மகசூல் கிடைக்கும் என்பது நமது கலாச்சாரத்தின் நம்பிக்கை.

    சிறிய பூச்செடியானாலும், பெரிய மரமானாலும் அது ஒரு சிறிய விதைக்குள் அடங்கியுள்ளது. விதைகள் தாங்கள் நல்ல முறையில் வளர்ந்து வருவதற்குத் தகுந்த பருவகாலம் வரை மண்ணுக்குள் காத்துக்கிடக்கும்.

    அதைப் போலவே பல நாட்களாகப் பல விதைகளைத் (பழமொழிகளை) தேடிப் பிடித்து ஒருவகைக் கட்டுக்குள் கொண்டுவந்து இந்நூல் ‘இரு வரி இலக்கியமாக’ ஆக்கப்பட்டுள்ளது.

    ஒரு சிறிய விதையே பெரிய விருட்சம் ஆவதுபோல, இரண்டு வரிகளில் பொருளைப் பொதித்துப் புத்திலக்கியமாக இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.

    திரைப்படங்களில் சில வசனங்கள் இவ்வாறே இரண்டு வரிகளில் வருகின்றன. அவை எடுப்பாக இருப்பதுடன், கவர்ச்சியாகவும் இருந்து, மனதில் நிற்கின்றன. சினிமா பாணியில் அவை ‘பஞ்ச் டயலாக்’ (Punch Dialogue) எனப்படுகின்றன.

    இரண்டிரண்டு பூக்களைத் தொடுத்து மாலையை ஆக்குதல்போல, இரண்டிரண்டு அடிகளை வைத்துப் புனையப்படும் கவிதைக்குக் கண்ணிகள் என்று பெயர். கண்ணிகள் பொதுவாக இரண்டு அடிகள் ஓரெதுகையாகத் தொடுக்கப்படும். மேலும், கண்ணிகள் என்பன கவிதைகளில் (பாடல்களில்) ஒரு வகையாக இருப்பதால், முதலில் கவிதையைப் பற்றிப் பார்ப்போம்.

    ‘வார்த்தைகளின் ஊர்வலம் வாக்கியம்

    வாக்கியங்களின் ஊர்வலம் கவிதை’

    என்பர்.

    கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசைச் சந்தத்துடன் கூடிய அல்லது

    Enjoying the preview?
    Page 1 of 1