Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nera Aalumai
Nera Aalumai
Nera Aalumai
Ebook97 pages28 minutes

Nera Aalumai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நொடியும் நிமிடமும் திரும்புவதில்லை. கடந்தது கடந்ததுதான்! மனிதப் பிறவிக்கு இலவசமாகக் கிடைத்த அரிய பொக்கிசம் நேரம், நேரமே! அரிதான நேரத்தை நழுவ விடாமல், வந்த வாய்ப்பைப் பிடித்துக் கொண்டு முன்னேறுபவரே வாழ்க்கையில் வெற்றியாளர்! இவ்வாறான நேரத்தைத் தொழிற்சாலைகளிலும், தனிமனித வாழ்விலும் மிகத் திறமையாகப் பயன்படுத்திப் பலன் பெறுவதே மனிதனின் கடமையும், பொறுப்பும் ஆகும். எவ்வாறு நேரத்தை ஆளுமை செய்வது என்று கட்டுரைகளாக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்து எல்லோரும் நலம் பெறலாம்!வளம் பெறலாம்!

Languageதமிழ்
Release dateOct 7, 2023
ISBN6580166410257
Nera Aalumai

Read more from T.V.S. Manian

Related to Nera Aalumai

Related ebooks

Reviews for Nera Aalumai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nera Aalumai - T.V.S. Manian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நேர ஆளுமை

    (குறிக்கோள் + பலன்கள்)
    (கட்டுரைகள்)

    Nera Aalumai

    Author:

    டி.வி.எஸ். மணியன்

    T.V.S. Manian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tvs-manian

    பொருளடக்கம்

    நூல் முகவுரை

    என் உரை

    1. நேர ஆளுமை - அறிமுகம்

    2. நேர ஆளுமை - ஒருமுகம்

    3. நேர ஆளுமை - சில வழிமுறைகள்

    4. வேலைகள் பட்டியல் தயாரித்தல் (Tasks List)

    5. தேவையற்றவைகளை அகற்றுதல் (Elimination of Non-Priorities)

    6. மேலாண்மையும் அடிப்படைக் கொள்கைகளும் (Principles of Management)

    6. (அ). இலக்கு நிர்ணயித்தல் (TARGET FIXING)/எட்டுதல் (ACHIEVING)

    7. தொழிற்சாலை பணி மரபு

    8. தொழிற்சாலைத் துறைகள்

    9. மேனேஜரின் பணிகள்

    10. நேர ஆளுமை - பன்முகங்கள்

    11. பெர்ட் சார்ட் (Pert Chart) தயாரித்தல்

    12. நேர ஆளுமை - பணியாளர்களுக்கு

    13. பணியாளர்கள் பயிற்சி (Training)

    14. நேர ஆளுமை எல்லோருக்குமே

    15. ஆய்வுப் படிப்பினைகள் (Case Studies)

    16. சுற்றுரை

    நூல் முகவுரை

    பேரா. முனைவர். மு. சிவக்குமார்,

    மேனாள் பதிவாளர் (பொ),

    தொழில் முனைவோர் துறை,

    மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,

    மதுரை - 625 021.

    வணக்கம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறள் முதற்கொண்டு இன்றைய நவீன மேலாண்மை படைப்புகள் வரை நாம் சந்திக்கும் ஒரு முக்கிய தலைப்பு நேர ஆளுமை. காலம் மற்றும் நேரத்தை சரியாகப் பயன்படுத்தினால் எடுத்த காரியம் வெற்றியாகும் என்பது நாம் அனைவரும் அறிந்த பாடம். ஜப்பான் நாட்டின் வளர்ச்சியில் நேர ஆளுமைக்கு அவர்கள் அளிக்கும் மதிப்பு உலகம் அறிந்த உண்மை.

    அத்தகைய வலிமையான தலைப்பு மேலும் எளிமையாக மக்கள் மனதில் சென்றடைய இந்த நேர ஆளுமை என்ற நூலை அருமையாகப் படைத்திருக்கிறார் நூலாசிரியர் திரு. டி.வி.எஸ். மணியன்.

    இந்நூலில் நேர ஆளுமையின் குறிக்கோளும் பலன்களும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. அறிமுகம் முதல் ஆற்றல் வரை (பதினாறு பகுதிகளாக இந்நூல் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மேலாண்மைப் பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்த நூல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    இந்த நூலின் ஆசிரியர் திரு. டி.வி.எஸ். மணியன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். இந்த நூல் மக்கள் மனதில் வெற்றி வாகை சூட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

    மு. சிவக்குமார்

    என் உரை

    டி.வி.எஸ். மணியன்

    ஒரு சிறிய அல்லது பெரிய வணிகமோ, குறுந்தொழிலோ, பெரிய தொழிற்சாலையோ, தனிப்பட்ட முறையில் குடும்பத்தை நிர்வகிக்கவோ, எல்லோருக்கும் வேண்டியது பணம். நிதி இருந்தால் வழி திறக்கும்! ஆனால் பணம் மட்டும் இருந்தால் போதுமா? நேரம் என்று ஒன்று வேண்டுமே! அந்த நேரத்தையும் நல்லதாக அமைத்துக்கொள்ள வேண்டுமே!

    மனிதர்களாகிய நமக்குக் கிடைத்திருக்கும் விலை மதிப்பில்லாப் பெருமை காலம், நேரமே! அத்தகைய காலத்தை வெறுமனே கழிப்பதா? அரிய நேரத்தை நழுவ விடுவதா?

    பணத்தைச் சேர்க்கலாம், சேமிக்கலாம். செல்வத்தைப் பெருக்கலாம். ஆனால் நேரத்தைச் சேமிக்க முடியாது. இருப்பினும் கிடைக்கும் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, பணமாக்கிக் கொள்ள முடியுமே!

    "ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

    கருதி இடத்தாற் செயின்"

    என்றார் திருவள்ளுவர்.

    அதாவது, (ஒரு செயலை முடிப்பதற்கேற்ப) சரியான காலத்தை அறிந்து, தகுதியான இடத்தில் (பணி) செய்தால், உலகையே அடைய நினைத்தாலும் கைகூடும் என்பதே இதன் பொருள்.

    "அருவினை என்ப உளவோ கருவியான்

    காலம் அறிந்து செயின்" - திருக்குறள்

    (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) ஏற்ற கருவிகளோடு, தகுதியான காலத்தையும் அறிந்து செயலாற்றினால், (அதைவிட) அரிய செயல்கள் என்பது உண்டோ? என்பதே இதன் பொருளாகும்.

    "எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

    செய்தற் கரிய செயல்" - திருக்குறள்

    கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செய்தற்குரிய செயல்களைச் செய்ய வேண்டுமென்பதே இக்குறளின் பொருளாகும்.

    இவ்வாறு, கால நேரம் தவறாமை, உரிய காலத்தில் செவ்வனே செயல்படுதல் போன்ற அருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல்களைத் தமிழ்ப் புலவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே பாடியுள்ளார்கள்.

    Two most powerful warriors are patience and time - Leo Tolstoy. அதாவது, பொறுமையும், நேரமும் இரண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1