Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Madurai Nagara Kovilgal
Madurai Nagara Kovilgal
Madurai Nagara Kovilgal
Ebook469 pages2 hours

Madurai Nagara Kovilgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விண்ணளக்கும் கோபுரங்களுடன் பண்ணளக்கும் கோவில்களைக் கொண்டு கண்ணளக்கும் அழகுள்ள நகரம் மதுரை மாநகரமே! மதுரை மாநகரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், கூடல் அழகர் பெருமாள் கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம். மற்றுமுள்ள பெருங் கோவில்கள், வேறு கோவில்களின் புராணம், வரலாறு, இலக்கியம் ஆதிய பரிமாணங்களைக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வாருங்கள் மதுரைக்கு! இறைவன், இறைவியின் அருளைப் பெற்று நலமாய் வாழ்ந்திடுவோம் !

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580166409861
Madurai Nagara Kovilgal

Read more from T.V.S. Manian

Related to Madurai Nagara Kovilgal

Related ebooks

Reviews for Madurai Nagara Kovilgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Madurai Nagara Kovilgal - T.V.S. Manian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மதுரை நகரக் கோவில்கள்

    (மதுரை மாநகரில் உள்ள கோவில்கள் பற்றிய விரிவான நூல்)

    Madurai Nagara Kovilgal

    Author:

    டி.வி.எஸ். மணியன்

    T.V.S. Manian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tvs-manian

    பொருளடக்கம்

    மதிப்புரை

    என் உரை

    முன்னுரை

    பாண்டிய நாடும், ஆட்சியும்

    பாண்டியர் ஆட்சியின் நிலவரங்கள்

    மதுரை நகரம் - பகுதி 1

    மதுரை நகரம் - பகுதி 2

    1. மீனாட்சி அம்மன் கோவில் சுந்தரேஸ்வரர் சந்நிதி (மதுரை நகரம்)

    2. மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் (மதுரை நகரம்)

    3. ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில்

    4. மதன கோபால சுவாமி கோவில் (மதுரை நகரம்)

    5. இம்மையில் நன்மை தருவார் கோவில் (மதுரை நகரம்)

    6. வடக்கு கிருஷ்ணன் கோவில் (மதுரை நகரம்)

    7. பழைய சொக்கநாதர் கோவில் (மதுரை நகரம்)

    8. திருப்பரங்குன்றம்

    9. அழகர் கோவில் (மதுரை)

    10. மாரியம்மன் கோவில் (மதுரை நகரம்)

    11. அருள்மிகு முக்தீஸ்வரர் கோவில் (மதுரை நகரம்)

    12. ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் (மதுரை நகரம்)

    13. அரசமரம் பிள்ளையார் கோவில் (மதுரை நகரம்)

    14. தென்திரு ஆலவாய் அண்ணல் கோவில் (மதுரை நகரம்)

    15. திரௌபதி அம்மன் கோவில் (மதுரை நகரம்)

    16. காமாட்சியம்மன் கோவில் (மதுரை நகரம்)

    17. தசகாளியம்மன் கோவில் (மதுரை நகரம்)

    18. வீரராகவப் பெருமாள் கோவில் (மதுரை நகரம்)

    19. திருவாப்பனூர் கோவில் (திருவாப்புடையார் கோவில்) (மதுரை நகரம்)

    20. நரசிங்கப் பெருமாள் கோவில்

    21. திருமோகூர்

    22. திருவாதவூர் கோயில்

    கோவில் - சில குறிப்புகள்

    மதிப்புரை

    இந்திரா சௌந்தர்ராஜன்

    அன்பர் டி.வி.எஸ் மணியன் எழுதிய ‘மதுரை நகரக் கோவில்கள்’ என்னும் இந்த நூல் ஒரு அரிய முயற்சியாகும். பாரத மண்ணில் தென்னகத்தின் தனிப்பெரும் அடையாளம் கொண்ட ஒரு மாநகர்தான் மதுரை. உலகிலுள்ள மற்ற நாடு, நகரங்கள், ஊர்களுக்கு இல்லாத ஒரு பெரும் சிறப்பு மதுரைக்கு உண்டு.

    மற்ற நாடு, நகரங்கள் மனித உழைப்பில் வடிவம் பெற்றவை. ஆனால் மதுரை தேவர்களின் தலைவனான இந்திரனால் வடிவமைக்கப்பட்ட நகரமாகும். அதைவிட விசேஷம் இந்த மண்ணில்தான் ஈசனின் சடையிலிருந்த அமிர்தம் அவனாலேயே எடுக்கப் பெற்று இம்மண் மீது தெளிக்கப்பட்டது. அமிர்தத்தின் ஆகமப் பெயர் மதுரம். அதிலிருந்தே மதுரை வந்தது.

    அமிர்தம் என்பது சாகாவரம் தரவல்லது. அமிர்தம் என்பது கலைகளை விளங்கச் செய்வது... அமிர்தம் என்பது அருளை பொங்க வைப்பது... மதுரை நகரிலும் இம்மூன்றும் குடிகொண்டிருக்கக் காணலாம்.

    இம்மண்ணில் தோன்றியவர்களின் பூத உடல் மறைந்துவிட்டாலும், அவர்களின் புகழ் சாகாவரம் பெற்றுத் திகழ்கிறது. இம்மண் கலைகளை விளங்கச் செய்கிறது என்பதற்கு சாட்சியாக இன்று இயல், இசை, நாடகங்கள் என்று மூன்று தளங்களிலும் உலக அளவில் சிறந்து விளங்குபவர்களில் 60 சதவிகிதத்துக்கும் மேல் மதுரையைச் சேர்ந்தவர்களாக இருக்கக் காணலாம். வற்றாத அருள் சுரப்புக்கு அன்னை மீனாட்சி ஒருத்தி போதும்.

    எல்லா தெய்வங்களும் தங்கள் கரம் வழியாக அருளும் கோலம் கொண்டிருக்க மீனாட்சி அந்த கரத்தில் வேதத்தின் வடிவமாகிய கிளியை ஏந்திக்கொண்டு தன் கண்களின் வழியாகவே அருளிக்கொண்டு வருகிறாள். இவள் சன்னதி முன் சென்று நாம் நின்றால் போதும். நாம்கூட அவளைப் பார்க்கத் தேவையில்லை. அவள் பார்வை நம்மேலே பட்டாலே போதும். நாம் அருளுக்கு பாத்திரமாகி விடுகிறோம். ஒரு தாய் மீன் தன் குஞ்சுகளை தன் இரு விழிகளாலேயே வழிநடத்துவது போல மீனாட்சியும் வழிநடத்துவதால்தான் இவளுக்கு அங்கயற்கண்ணி என்றும் பெயர் வந்தது. இப்படி மீனாட்சி ஒருபுறம் என்றால், ஒரு முறைக்கு 64 முறை இம்மண்ணில் பூத உடலோடு தோன்றி திருவிளையாடல்கள் நடத்தி இந்த மண்மீது தன் காலார நடந்து திரிந்த சொக்கன் ஆலயம் மறுபுறம். கூடுதலாய் ஏராளமான உபசன்னதிகள்!

    மதுரை என்றால் மீனாட்சி திருக்கோவில் மட்டும்தானா? வைணவச் சிறப்புக்கு திவ்யதேசங்களில் ஒன்றான கூடலழகர் ஆலயம் முதல் இம்மண்ணின் வட்ட வெளியில் 360 கோணங்களிலும் உள்ள நெடிய காலத்தைக் கடந்த கோவில்கள் அவ்வளவையும் பற்றி இந்த நூலில் விரிவாக எடுத்துக் கூறுகிறார் அன்பர் டி.வி.எஸ். மணியன்.

    இந்த மதுரைக்காரர் ஒரு நல்ல பொறியாளர். ஒரு நல்ல கவிஞர். ஒரு நல்ல கதாசிரியர். இப்போது சிறந்த ஆய்வுக் கட்டுரையாளராகவும் இந்நூல் வாயிலாக அவதாரம் எடுத்துள்ளார்.

    மதுரை குறித்து எவ்வளவோ நூல்கள் உள்ளன. அந்த நாளின் சங்கப்புலவர்கள் தொடங்கி, இந்த நாளின் டி.வி.எஸ். மணியன் வரை எவ்வளவோ பேர் மதுரையைத் தங்கள் கோணத்தில் பார்த்து வியந்தும் போற்றியும் எழுதியுள்ளனர். ஒவ்வொன்றுமே ஒரு ரகம். ஒவ்வொன்றுமே தனிச்சுவை கொண்டவைதான். ஆயினும் எளிய தமிழ்நடையில், அதேசமயம் முக்கிய செய்திகள் விடுபட்டுவிடாத நிலையில் ஒரு பாமரனுக்கும் போய்ச் சேர்ந்திடும் நோக்கில் எழுதுவது என்பதே இப்போதைய தேவை, அந்த தேவையை திரு. மணியன் நிறைவேற்றியுள்ளார்.

    கூரிய பார்வை, தொலைநோக்குப் பார்வை எனும் இரு பார்வைகளும் மதுரை மேல் சிலருக்கு இருந்திருப்பதை இந்த நூல் உறுதி செய்கிறது. மதுரையில் காலம் காலமாக வசித்து வருபவர்களுக்கேகூடத் தெரியாத பல விஷயங்களை இவர் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

    நானேகூட 37 வருடங்களாக மதுரைவாசியாக இருந்து வருகிறேன். இருந்தும் சின்னக் கடை தெருவில் இருக்கும் தசகாளி அம்மன் கோவில் பற்றி எனக்கு தெரியாது. அதனை நான் இந்த நூல் வாயிலாகவே அறிய நேர்ந்தது. உடனேயே சென்று தரிசிக்க வேண்டும் என்கிற வேட்கையும் எழும்பியது.

    இந்த நூல் மதுரைக் கோவில்களை நமக்கு அறிமுகம் செய்திடும் அதே வேளையில், புராண பின்புலங்களையும் நமக்கு எடுத்துக் கூறுகிறது. அதனால் ஒரு ஒன்றுதல் நமக்குள் மிக வேகமாக நிகழ்கிறது. இதற்காக திரு. மணியன் மிக மெனக்கெட்டிருக்கிறார். மிகுந்த அக்கறையோடு உழைத்திருக்கிறார்.

    இந்நூலை எழுதியதன் மூலம் திரு. மணியனும் மதுரை வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடம் பிடிக்கிறார். மதுரையின் ஆன்மிகத்தை அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்நூல் ஒரு மிகச்சிறந்த வழிகாட்டியாகும். பல வரலாற்றுப் பதிவுகளும் உள்ளதால் மதுரையை ஆய்வு செய்வோருக்கும் இது பயன் தரும்.

    தான் பிறந்து வளர்ந்த மதுரை நகருக்கு இந்நூல் வாயிலாக நன்றி காட்டியதோடு, பெருமையும் சேர்த்துள்ளார் திரு.டி.வி.எஸ். மணியன். இவரை நான் மனதார பாராட்டி மகிழ்கிறேன்.

    நன்றி!

    பணிவன்புடன்

    இந்திரா சௌந்தர்ராஜன்

    என் உரை

    டி.வி.எஸ். மணியன்

    எனது எழுத்துப் பயணம் கவிதைகளின் தொகுப்பில் ஆரம்பித்துத் தொடர்ந்து வந்தது. என் முதல் கவிதை நூலான ‘நேரத்தைப் போற்றிடுவோம், காலத்தை வென்றிடுவோம்’ என்ற கவிதை நூலை பிரபல எழுத்து வேந்தர்

    திரு. இந்திரா சௌந்தர்ராஜனிடம் அவர்களிடம் அளித்துச் சிறிதுநேரம் பேசினேன்.

    அவர் உங்களால் உரைநடையும் எழுத முடியும் ஏதாவது வரலாறு போன்று ஒன்றை எழுதுங்கள் என்று அன்புக் கட்டளை இட்டார். சில முயற்சிகளுக்குப் பின் இந்த நூலை எழுதும் உந்துதல் எனக்குள் பிறந்தது. அது இந்நூலாக இப்போது ஆகிவிட்டது.

    அனைத்து வகைகளிலும், நிலைகளிலும் தொன்மைமிக்க, மாண்புமிக்க மாமதுரை நகரில் உள்ள கோவில்களைப் பற்றி எழுதும் வாய்ப்பினை இறைவன் எனக்கு அளித்திட, சில முயற்சிகளையும், தேடல்களையும் மேற்கொண்டதில் இந்நூலுக்கு வழி கிடைத்தது.

    வால்மீகியும், வேதவியாசரும் தங்களது இதிகாசங்களில் உரைத்த மதுரை நகரில் உள்ள கோவில்களும் தொன்மையானவை சீரியவை சிறப்பானவை. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆரம்பித்து நகரின் கண் உள்ள சிறப்புவாய்ந்த மற்ற கோவில்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. புராணம், வரவாறு. இலக்கியம் சார்த்த செய்திகள் இக்கோவில்களுடன் இணைந்தவை.

    அந்தந்தக் கோவில்களுடன் தொடர்புடைய இந்தப் பரிமாணங்களையே முக்கிய செய்திகளாகக் கூறியுள்ளேன்.

    இந்நூலின் கையெழுத்துப் பிரதியினை எடுத்துக்கொண்டு ‘பிரபல’ எழுத்து வேந்தர் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களை அணிந்துரைக்காக அணுகிய போது, உடனே சரியென்று கூறி, வாஞ்சையுடன் நெஞ்சோடு என்னை வாரிக்கொண்டார்.

    சித்தர்களைப் பற்றியே ‘எழுத்து வேந்தர்’ எழுதுவதன் காரணம், அப்பொருள் அவர் பிறக்கும் போதே அவருடன் ஒன்றிப் பிறந்தது (ஜென்ம சுகிர்தம்) என்று அவரே கூறினார்.

    தமிழ் மற்றும் வேற்று மொழிகளின் டி.வி. சீரியல்களுக்கும் சினிமா கதை, வசனத்திற்காகவும் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை என்று பறந்து, பறந்து கொண்டிருக்கிறார். அந்தப் பரபரப்பான சூழ்நிலையிலும் எனது இந்த நூலுக்கு அழகான அணிந்துரை நல்கியதற்கு எழுத்து வேந்தருக்கு எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நூலை எழுதுவதற்கு எனக்கு ஆன்மபலத்தை அளித்த இறைவனுக்கு வணக்கத்துடன் கூடிய மாபெரும் நன்றி!

    இந்த நூலை வாசித்த, வாசிக்கப் போகும் நண்பர்கள், அன்பர்களின் விமர்சனங்களுக்காக எனது இதயக் கதவுகள் திறந்தே உள்ளன.

    இந்நூலின் பயணத்திற்கு அன்புடன் அழைக்கும்,

    அன்பன்

    டி.வி.எஸ். மணியன்

    அலைபேசி: 9360414001

    முன்னுரை

    மதுரை என்றாலே மீனாட்சி அம்மனும், மதுரைக் கோவில்களும், மல்லிகையும்தான் எல்லோருடைய நினைவுக்கும் முதலில் வரும். மல்லிகையின் மணத்தில் மயங்காதவர் எவருமில்லை. மல்லிகை வகையைச் சேர்ந்த மலர்கள் நூற்றுக்கு மேல் உலகில் உள்ளன. ஆச்சர்யம்தானே! அதே போல, மதுரை நகரமும், மதுரையின் கோவில்களும் அதிசயமானவை, அற்புதமானவை. மதுரை நகரமும், அதன் கோவில்களும் ஆழமான வரலாறுகளைக் கொண்டுள்ளன. புராணம், வரலாறு, இலக்கியம் ஆகியவற்றைத் தன்னுடன் பிணைத்துக்கொண்ட நகரம் மதுரை. ஆகவே சற்று விரிவாகப் புரிந்துகொள்வதே நலம்.

    ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று ஒளவைப் பிராட்டியார் கூறினார். அவ்வாறே மதுரை நகரம் பண்ணளக்கும் கோயில்கள் நிறைந்த நகரம், எண்ணளக்கும் திருவிழாக்கள் மிகுந்த நகரம், விண்ணளக்கும் கோபுரங்கள்கொண்ட நகரம், கண்ணளக்கும் அழகு சூழ்ந்த நகரம் மதுரை.

    சிவபெருமான் சுந்தரரேஸ்வரராகி, பார்வதி உமையாகிய மீனாட்சி அம்மனை மணம் புரிந்தது பாண்டிய நாட்டின் மதுரையில்தான் சிவபெருமான் மக்களோடு மக்களாகக் கலந்து அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் புரிந்த நகரம் மதுரையே! அனைத்துத் திருவிளையாடல்களையும் தொகுத்து, திருவிளையாடல் புராணம் என்னும் நூலை பரஞ்சோதி முனிவர் இயற்றியுள்ளார்.

    பல சங்க காலத்து நூல்களிலும், நாயன்மார்கள், சைவக் குரவர்கள், வைஷ்ணவ ஆழ்வார்கள், பின் வந்த கவிஞர்கள் எனப் பலப்பலராலும் போற்றிப் பாடப்பட்டவை மதுரை நகரமும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலாகும்.

    மதுரை பாண்டிய நாட்டின் தலைநகராக இருந்ததால் பாண்டியநாடு, ஆட்சி, மதுரை நகரைப்பற்றி அறிந்துகொள்வது சாலச் சிறந்தது.

    மதுரை மீனாட்ச்சி அம்மன் கோவில் கோபுரங்கள்

    பாண்டிய நாடும், ஆட்சியும்

    பாரத நாட்டின் ஆதிகாவியமாகிய வால்மீகி ராமாயணத்தில் பாண்டிய நாட்டுத் தலைநகராகிய கபாடபுரம் பொன்னாலும், முத்துக்களாலும் அணி செய்யப்பட்ட உயர்ந்த மாடமாளிகைகளைக் கொண்டிருப்பதாகக் குறிப்பு உள்ளது. வியாச முனிவரின் மகாபாரதத்தில் அர்ச்சுனன் பாண்டிய குலப் பெண்ணை மணந்ததாகச் செய்தி உள்ளது.

    சாணக்கியர், பாண்டியநாட்டு முத்துக்களையும், மெல்லிய துகிலையும் பாராட்டிக் கூறியுள்ளார். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் சந்திரகுப்த மன்னனின் அரசவைக்கு வந்த கிரேக்கநாட்டுத் தூதர் மெக்ஸ்தனீஸ் பாண்டிய நாட்டைப்பற்றி உயர்வாகக் கூறியுள்ளார். மகதப் பேரரசனாகிய அசோக நாட்டுக் கல்வெட்டுக்களிலும் பாண்டிய நாட்டைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

    இனி, மதுரை மற்றும் கொற்கை, கபாடபுரம் உள்ளடங்கிய பாண்டிய நாட்டின் சிறப்பைப் பார்ப்போம்.

    பாண்டிய நாடு முத்துடைத்து என்பார்கள். பாண்டிய நாட்டின் துறைமுகப் பட்டினமாகிய கொற்கை நகரிலும், கபாடபுரத்திலும் முத்துக்களும், சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ரத்தினங்களைப் பட்டைதீட்டும் தொழிலும் பெரியளவில் நடைபெற்று வந்தன. வேறுநாட்டு மன்னர்களின் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளின் வயல்களில் நெல் மற்ற பயிர்களின் சாகுபடி அதிகமிருக்கும். அதிலிருந்து கிடைத்த வருமானமே அரசுகளின் பெரும் நிதி ஆதாரமாக இருந்தது. ஆனால் பாண்டிய நாட்டில் விவசாயப் பயிர் வகைகளுடன் முத்துக்களும் நவரத்தினங்களும் மிகப்பெரிய வருமான வாய்ப்புகளாக இருந்துள்ளன. அவற்றிற்காகவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து (குறிப்பாக ரோமாபுரி, இத்தாலி) பல வணிகர்கள் வாணிபம் செய்துள்ளனர். ஆக, பாண்டிய நாடு மிகவும் செல்வ வளம் கொண்டதாகவே இருந்துள்ளது. முத்துக்களுக்காக சோழர்கள் பாண்டிய நாட்டின்மீது படையெடுக்க முயற்சித்தும் இருந்தனர். மேலும், அன்றைய பாரத நிலப்பரப்பிலிருந்து வேறு மன்னர்களும், பிரபுக்களும் கொற்கை முத்துக்களை விரும்பி அணிந்தனர்.

    ஆதியில் பாண்டிய நாடு குமரிமுனைக்கப்பால் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பரந்த நிலைப்பரப்பும் இருந்துள்ளது. கிழக்கில் ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையைத் தொட்டு, வழியில் இருந்த நிலப்பரப்புகளையும் இணைத்துக்கொண்டு குமரிமுனையைத் தொட்டு, மேற்கில் இப்போதைய தென்னாப்பிரிக்காவின் கிழக்குக் கரையைத் தொட்டும், சற்று தூரமாயிருந்த தென்புறம் முழுவதுமாக நீண்ட பன்மலைத் தொடராகவும் இருந்துள்ளது. இது அவ்வளவுமே பாண்டிய நாடாகும். அப்போது அதன் தலைநகரம் தப்போதைய குமரிமுனையைத் தொட்டு தென்மதுரையாம். இப்பகுதி குமரிக்கண்டம், லெமுரியாக் கண்டம் என்றும் அழைக்கப்பட்டது. லெமுர் என்பது குரங்கு போன்ற மனித நிலை அல்லது குமரிமாந்தன் என்பதாகும். பல்லாயிரம் ஆண்டுகட்குப்பின் படிப்படியாக வளர்ந்த நாகரிகமும், தமிழும் அப்பகுதிக்கு ஒளியைச் சேர்த்திருக்கும். பாண்டிய அரசும், தமிழின் மணமும் கோலோச்சின.

    தமிழ்சங்கங்கள்:

    பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்து தமிழாய்ந்து, புலவர்கள் செய்யுட்களை இயற்றவும், அரங்கேற்றவும், விவாதிக்கவும் ஏற்படுத்திய தமிழ் இலக்கிய அமைப்பே ‘தமிழ்ச்சங்கம்’ ஆகும்.

    தென்மதுரையில் முதல் சங்கமாகிய தலை தமிழ்ச்சங்கம் இருந்தது. திரிபுரமெரித்த விரிசடைக்கடவுள், குன்றம் எறிந்த குமரவேள், அகத்தியர், முரஞ்சியர், முடிநாகராயர் முதலான 549 புலவர்கள் அச்சங்கத்தில் வீற்றிருந்தனர். 4449 புலவர்கள் பாடினர். அவர்களால் முதுநாரை, முதுகுருகு, பெரும் பரிபாடல் களரியாவிரை ஆகிய பெரும் நூல்கள் இயற்றப்பட்டன. புலவர்களுக்கு அகத்தியமே இலக்கண நூலாக இருந்தது. காய்சினவழுதி முதல் கடுங்கோன் ஈறாக 89 மன்னர்கள் முதலாம் சங்கத்தைப் புரந்தனர். புலவர்களின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிந்தாலும், இது செவிவழி வந்த செய்தியே ஆகும். அக்காலத்தில் இயற்றப்பட்ட தமிழ்நூல்கள் அனைத்தும் பின்பொருகால் ஏற்பட்ட கடல் சீற்றங்களால் அவ்வளவு நிலப்பரப்பும், தமிழ் ஏடுகளும் அழிவுற்றன. அப்போதைய பாண்டிய அரசும், முதலாம் தமிழ்ச்சங்கமும் முடிவுக்கு வந்தன.

    பல ஆண்டுகள் கழிந்தன. குமரிமுனை மற்றும் பொருநையாறு கடலில் கடக்கும் முகத்துவாரத்திற்கிடையே வெண்தேர்ச் செழியன் என்னும் பாண்டிய மன்னன் முத்துக்களாலும், மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட உயர்ந்த மாடங்கள் கொண்ட அழகிய நகரான கபாடபுரத்தை உருவாக்கி அதனைத் தலைநகராக்கி ஆள ஆரம்பித்தான். முத்துக்கள் பதித்த மூவாயிரம் தேர்ப்படையை அம்மன்னன் வைத்திருந்தான். அம்மன்னைப் அதனால் புலவர்கள் ‘வெண்தேர்ச்செழியன்’ அடைமொழியுடன் அழைத்தனர். கபாடபுரமும், கொற்கை நகரமும் துறைமுகநகரங்களாகவே இருந்தன. அம்மன்னன் காலத்தில் இரண்டாம் தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டது. வீற்றிருந்த புலவர்கள் இருந்தையூர்க் கருங்கோழி, சிறுபாண்டரங்கன், துவரைக்கோமான், கீரந்தை உள்ளிட்டோர் ஆவர்.

    இயற்றப்பட்ட நூல்கள்: கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, அகவல், மாபுராணம் போன்றன. தொல்காப்பியம் இலக்கண நூலாகக் கொள்ளப்பட்டது.

    இயற்கைக்குப் பிடிக்கவில்லையோ, பகைவர்க்கு உவகை இல்லையோ தெரியவில்லை. கடல்கோளின் சீற்றத்தால் கபாடபுரமும் அழிந்தது.

    பாண்டியன் முடத்திருமாறன் என்றும் மன்னன் தம்மோடு பொன், பொருள், பட்டாடைகள், தேர்கள், குதிரைகள், உறவினர்களைக் கொண்டு சென்றானோ தெரியாது. ஆனால் தன்னுடன் தமிழ்ச்சுவடிகள் மற்றும் புலவர்களுடன் கூடவே வடக்கு நோக்கி நகர்ந்து மணலூர்புரம் வந்தடைந்தான். மதுரையிலிருந்து ராமநாதபுரம் சாலையில் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. அங்கே கோட்டை கட்டி அரசாண்டு வந்தான். அக்காலத்தே மூன்றாம் தமிழ்ச்சங்கம் மதுரையில் தோற்றுவிக்கப்பட்டது. நல்லந்துவனார், நக்கீரர், கபிலர், பரணர், சிறுமேதாவியார், நன்முலையார் போன்றோர் இருந்தனர். பின்பற்றப்பட்ட இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பரிபாடல், குத்து, சிற்றிடை மற்றும் இன்னும் பல நூல்கள் இயற்றப்பட்டன.

    மேற்படி தமிழ்சங்கங்களின் மன்னர்கள், காலங்கள், புலவர்களின் எண்ணிக்கை, இருந்த ஆண்டுகள் ஆகியவை மிகுதியாகத் தோன்றினாலும் செவிவழிச் செய்திகளாகவே உள்ளன. ஆனால் முதலாம் / தலைச்சங்கம் இருந்ததற்கான சான்று அகத்தியம், இரண்டாம் சங்கம் இருந்ததற்கான சான்று தொல்காப்பியம், மூன்றாம் சங்கத்தின் மேற்கூறிய நூல்களில் இருந்தும் மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன என்பதற்கான ஆதாரங்கள் ஆகும். இதனால் பாண்டிய மன்னர்கள் அளப்பரிய தமிழ் உணர்வு கொண்டவர்களாகவே இருந்தனர் என்பதே சாலச்சிறந்த உண்மையாகும். தமிழ்ச்சங்கங்கள் என்பன பாண்டிய மன்னர்களின் தலைமையில் அவைப் புலவர்களின் பங்காற்றல்களிலும், வேறு பல புலவர்களின் படைப்புகளின் அரங்கேற்றங்களும், அவற்றை மதிப்பீடு செய்து அங்கீகாரம் அளிக்கப்பட்டதால் தமிழ்ச்சங்கங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகங்களாகவே ஏற்றுக்கொள்ள முடிகிறதன்றோ!

    தமிழ் படித்த வாய் தேனூறும்!

    பாடக் கேட்டவர் ஊன் உருகும்!

    பாண்டியர் ஆட்சியின் நிலவரங்கள்

    கி.பி. ஏழாம் நூற்றாண்டில், நக்கீரன் என்பவர் (சங்கப் புலவர் அல்ல) இயற்றிய இறையனார் களவியல் உரை என்னும் நூலில் மூன்று தமிழ்ச் சங்கள்கள் பற்றிய செய்திகளை அறிய முடிகிறது. செவி வழியாகப் பேசப்பட்டு வந்த இச்செய்திகள் இந்நூலில் குறிப்பிட்டுள்ளன.

    முன்பு புதுக்கோட்டை பெண்ணாறு வடக்கு எல்லையாகவும், கிழக்கில் வங்காள விரிகுடா, தெற்கில் குமரிமுனையும், மேற்கே திருவிதாங்கூர் மற்றும் கொச்சின் சமஸ்தானங்குட்பட்ட பகுதிகளும் பாண்டிய நாட்டின் எல்லைகளாக இருந்தன.

    இவ்வளவு சீரும், சிறப்பும் அடைந்திருந்த பாண்டியப் பேரரசுக்குச் சற்றே ஆட்டம், ஏற்றம் இருந்தால் இறக்கம் இருக்குமன்றோ?

    கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் எங்கிருந்தோ வந்த பாலி மொழி பேசிய களப்பிரர்களால் பாண்டிய நாடு கவ்வப்பட்டது. ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் பாண்டிய நாடு அவர்கள் வசம் இருந்தது. களப்பிரர்கள் ஆட்சியில் சமணமும், பௌத்தமும் மேலோங்கின. தமிழ்மொழி மற்றும் கலாச்சாரமும், சைவ நெறிகளும் வீழ்ச்சியுற்றன. அதுவே பாண்டிய நாட்டின் இருண்ட காலமாகும். அப்போது மூன்றாம் தமிழ்ச்சங்கமும் முடிவுக்கு வந்தது. காணப் பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதியே மூன்றாம் தமிழ்ச் சங்கத்தின் கடைசி மன்னானவான்.

    ஆறாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் (கி.பி. 575ல்) கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் படை திரட்டி, களப்பிரர்களை விரட்டியடித்து பாண்டிய நாட்டை ஆள ஆரம்பித்தான் (அதேபோல, சிம்ம விஷ்ணு என்ற பல்லவ மன்னன் களப்பிரர்களை விரட்டி சோழநாட்டை மீட்டான்). கி.பி. 575ல் கடுங்கோன் மன்னனின் ஆட்சி முதல் கி.பி. 985 வரையிலான காலம் முற்காலப் பாண்டியர் காலமாகும். அதன்பின் பாண்டிய நாடு சோழர்களின் வசம் சுமார் இருநூறு ஆண்டுகள் இருந்தது. பின்பு பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதி (கி.பி. 1190) வாக்கில் சடாவர்மன் குலசேகரப்பாண்டியன் இரண்டாம் பாண்டியப் பேரரசை அமைத்தான். அவன் காலத்தில் வந்த வெளிநாட்டுப் பயணியான மார்க்கோபோலோ, பாண்டியநாடு வளமுடன் உயர்நிலையில் ஆட்சி புரியப்பட்டதாக எழுதியுள்ளார். இப்பாண்டிய அரசு ஏனைய பாண்டிய மன்னர்களால் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிவரைக்கும் நிலைபெற்று விளங்கிற்று.

    இக்காலக் கட்டத்தில் அரசு புரிந்தவர்களுள் மாறவர்மன் அரிகேசரி (கூன்பாண்டியன்), வரகுணபாண்டியன், சுந்தரபாண்டியன் மற்றும் முதலாம் மாறவர்மன் குலசேகரப்பாண்டியன் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இடைக்காலப் பாண்டியர் காலமாகும்.

    கி.பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பாண்டியப் பேரரசு வலிமை குன்றலாயிற்று.

    டில்லி சுல்தானாகிய அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதியாகிய மாலிக் கபூர் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்து, பல நகரங்களைக் கொள்ளையடித்துப் பெரும் பொருளைத் திரட்டிக்கொண்டு திரும்பிச் சென்றான்.

    1330-1378 முகம்மதியர் ஆட்சி பாண்டியநாட்டில் தொடங்கியது. 1330ல் டில்லி சுல்தான் முகம்மது பின் துக்ளகின் பிரதிநிதியாகிய ஜலாலுதீன் என்பவன் பாண்டிய நாட்டை வென்று, துக்ளக்கின் பிரதிநிதியாக சில காலம் இருந்து, பின்பு அவனே ஆட்சி புரியலனான். அவனுக்குப் பின் ஏழு முகம்மதியர்கள் ஆட்சி செய்தனர். (மொத்தம் 48 ஆண்டுகள்) கோவில்களில் பூசைகள் நிறுத்தப்பட்டன.

    1330ஆம் ஆண்டு அந்நிய படையெடுப்பால் மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேஸ்வரராகிய சிவலிங்கத்தை உடைக்க முயற்சி நடப்பதற்கு முன்பே கோயில் ஸ்தானிகர்கள் கருவறையில் இருந்த சிவலிங்கத்தின் கருவறை முன் ஒரு கல்சுவர் எழுப்பி முன் பக்கம் பூசப்பட்டது. கருவறைக்கு முன்புள்ள அர்த்தமண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். படையெடுத்து வந்த அந்நியர்கள் அந்தச் சிவலிங்கம்தான் சொக்கநாதர் / சுந்தரேஸ்வரர் என நினைத்து அதைச் சிதைக்க முற்பட்டனர். சிதைக்கப்பட்ட சிவலிங்கம் சுவாமி சந்நிதிக்கு அருகே உள்ளது. சுந்தரேஸ்வரர் கருவறை 48 ஆண்டுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு பூசைகள் இல்லாமல் இருந்தது. மீனாட்சி கோவிலின் இரண்டு கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டன.

    பின்பு பாண்டிய நாட்டின்மீது விசயநகர வேந்தனான குமார கம்பண்ணா படையெடுத்து முகமதியரை விரட்டியடித்தான். அவர் கோவிலில் கற்சுவர் அகற்றப்பட்டு, பூசைகள் முறையாக நடத்த வழிவகுத்தார். பாண்டிய மன்னர்களுக்கு உதவி புரிய அம்மன்னர் சில உதவியாளர்களை விட்டுச் சென்றார். பாண்டிய மன்னர்கள் விசயநகர வேந்தர்களுக்குத் திறை செலுத்தி வந்தனர்.

    அந்நியப் படையெடுப்பால் பாண்டிய நாடு சிதறுண்டு, பாண்டியர்கள் தெற்கு நோக்கிப் போயினர். கி.பி.17ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பாண்டியர் சிலர் தென்பாண்டி நாட்டில் ஆட்சி செய்தனர். அவர்கள் கொற்கை, தென்காசி, கரிவலம் வந்த நல்லூர் ஆகியவற்றைத் தங்கள் தலைநகராகக் கொண்டிருந்தனர். அவர்களுன் பராக்கிரம பாண்டியன் (தென்காசிக் கோவிலைக் கட்டியமன்னன்), அதிவீரராம பாண்டியன் (நைடதம் இயற்றியவர்), வதுரங்கராம பாண்டியன் (அந்தாதி நூல்கனை எழுதியவர்) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

    பாண்டிய வம்சத்தினரிடையே வாரிசு தகராறுகள் வந்ததால், அதைச் சரி செய்ய விசயநகர மன்னரான கிருஷ்ண தேவராயர் நாகமநாயக்கர் என்பவரை அனுப்பி வைத்தார். சில ஆண்டுகள் கழித்து நாகமரே ஆட்சி செய்யலானார்.

    பின்பு அவருடைய மகன் விஸ்வநாத நாயக்கர்

    (34 வருடங்கள்), கிருஷ்ணப்ப நாயக்கர் ஆகியோர் விசயநகரதேசப் பிரதிநிதிகளாக மதுரையில் ஆண்டனர். ஆனால் முத்துவீரப்ப நாயக்கர் தலைநகரைத்

    Enjoying the preview?
    Page 1 of 1