Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahangalin Vaazhvil...
Mahangalin Vaazhvil...
Mahangalin Vaazhvil...
Ebook105 pages36 minutes

Mahangalin Vaazhvil...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாரத தேசம் மகான்களின் தேசம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து இன்று வரை இங்கு தோன்றிய மகான்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. பெரும் மகான்கள் தங்கள் வாழ்வில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர்; அருள் உபதேசங்களைச் செய்துள்ளனர்.

அவர்களுள், ஶ்ரீ கௌடபாதர், ஸ்வாமி குழந்தையானந்தர், ஷீர்டி சாயிபாபா, ஸ்வாமி ராமதீர்த்தர், தயானந்த சரஸ்வதி, அரவிந்தர், வள்ளலார், விவேகானந்தர், மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா, மா ஆனந்தமயி, பெரியவாள் என்று அனைவராலும் போற்றப்படும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி, சின்மயானந்தர், ஶ்ரீ சத்யசாயிபாபா ஆகியோர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்கள் சிலவற்றின் தொகுப்பே இந்த நூல்.

குடும்பத்தினருடன் படிப்பதோடு பலருக்கு பரிசளிக்கவும் உகந்த நூல் இது.

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580151010586
Mahangalin Vaazhvil...

Read more from S. Nagarajan

Related to Mahangalin Vaazhvil...

Related ebooks

Reviews for Mahangalin Vaazhvil...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahangalin Vaazhvil... - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மகான்களின் வாழ்வில்...

    Mahangalin Vaazhvil...

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. ஶ்ரீ கௌடபாதர் 1

    2. ஶ்ரீ கௌடபாதர் - 2

    3. திண்டுக்கல் யாகத்தில் பர்மாக்காரருக்கு கிடைத்த தரிசனம்!

    4. கலெக்டரை விரட்டிய நாகப் பாம்பு!

    5. பசுவைப் போற்றி வணங்கிய துகாராம்!

    6. தகுதி உள்ளவர்களுக்கே தரிசனம் கிடைக்கும்!

    7. பிச்சைக்காரர் மீது கோபம் கொள்ளாதே!

    8. இவர் யார்?

    9. ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்!

    10. பிரம்மசர்யத்தின் சக்தியை நிரூபித்த தயானந்த சரஸ்வதி! - 1

    11. பிரம்மசர்யத்தின் சக்தியை நிரூபித்த தயானந்த சரஸ்வதி! - 2

    12. அரவிந்தர் என்னும் புதிர்!

    13. ஸ்ரீ அரவிந்த ரகசியம்!

    14. மரணமில்லாப் பெருவாழ்வு கண்ட மகான்!

    15. வள்ளலாரின் தமிழ்!

    16. விவேகானந்த அதிசயம்!

    17. மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா - கதாம்ருதம் அளித்த மகான்!

    18. மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா தந்த அற்புத விளக்கங்கள்!

    19. மா ஆனந்தமயி! -1

    20. மா ஆனந்தமயி! -2

    21. பெரியவாளின் ஆரோக்கியம்!

    22. பெரியவாளின் நகைச்சுவை!

    23. சின்மயா லஹரி!

    24. எங்கும் நிறைந்திருக்கும் ஶ்ரீ சத்யசாயிபாபா!

    முன்னுரை

    பாரத தேசம் மகான்களின் தேசம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து இன்று வரை இங்கு தோன்றிய மகான்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.

    பெரும் மகான்கள் தங்கள் வாழ்வில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர்; அருள் உபதேசங்களைச் செய்துள்ளனர்.

    அவற்றில் சில துளிகளை அவ்வப்பொழுது கட்டுரைகளாக பத்திரிகைகளிலும் www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கிலும் எழுதி வந்தேன். அவற்றின் தொகுப்பே இந்த நூல்.

    இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்களுக்கு எனது நன்றி. www.tamilandvedas.comஇல் இவற்றை வெளியிட்ட திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.

    நூல்கள் வெளியிடுவதில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ள பெங்களூர் புஸ்தகா நிறுவனம் இதை வெளியிடுகிறது. புஸ்தகா நிறுவனம் வெளியிடும் எனது நூறாவது நூலாக இந்த நூல் அமைவது இன்னொரு சிறப்பாகும்.

    டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் இதை அழகுற வெளியிடும் PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் டாக்டர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நூறாவது நூலாக வெளியிடும் போது பல்வேறு விதத்திலும் என்னை ஊக்குவித்த எனது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு எனது நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக நூற்றுக் கணக்கான கட்டுரைகளைப் பிரித்து இதுவரை புத்தகமாக வெளியிடாதவற்றைத் தேர்ந்தெடுத்து இதை வெளியிடுவதில் உற்சாகமாக என்னை ஊக்குவித்த எனது பேத்தி சௌ. பிரஸித்தாவிற்கு எனது வாழ்த்துக்களுடன் கூடிய நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    ஆண்டாண்டு காலமாக எனது எழுத்துப் பணிகளுக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

    பங்களூர்

    ச. நாகராஜன்

    3-12-2023

    1. ஶ்ரீ கௌடபாதர் 1

    பதஞ்சலி முனிவர்

    சம்ஸ்கிருத இலக்கியம் அகன்றது. ஆழ்ந்தது. அதில் உள்ள கோடிக்கணக்கான நூல்களை முற்றும் கற்றவர் இல்லை. வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கலாம், அனைத்து சாஸ்திரங்கள் மற்றும் கலைகள் பற்றிய அவ்வளவு அபூர்வமான நூல்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.

    சம்ஸ்கிருத இலக்கணத்தை யாத்தவர் மாமுனிவரான பாணினி. ஆனால் அவரது இலக்கணத்தை சாமானியனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    அவரது நூலை சுலபமாகப் படிக்கும் வகையில் பதஞ்சலி முனிவர் அதற்கு மஹாபாஷ்யம் - விரிவுரை - ஒன்றை எழுதினார். இந்த விரிவுரையே ஒரு அபூர்வமான பொக்கிஷம்.

    காத்யாயன மஹரிஷி பாணினி இலக்கணத்திற்கு ஒரு உரையை - கார்திக் எழுதினார்.

    பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணன் சேஷசயனத்தில் பள்ளி கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிவோம். நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் ஆதி சேஷனே அத்ரி மஹரிஷியின் புத்திரராக அவதரித்தார்; பதஞ்சலி என்ற பெயரைக் கொண்டார். ஆதிசேஷனின் இதர அவதாரங்கள்: வாசுகி, த்ரேதா யுகத்தில் லக்ஷ்மணன், த்வாபர யுகத்தில் பலராமர், கலியுகத்தில் பதஞ்சலி.

    மூன்று நூல்கள்

    மனித குலம் உய்வதற்காக பதஞ்சலி முனிவர் மூன்று உயரிய அரிய நூல்களை யாத்தார்.

    1) பதஞ்சலி யோகசூத்ரம்

    2) மஹாபாஷ்யம்

    3) சரக சம்ஹிதா.

    பதஞ்சலி முனிவரின் இன்னொரு பெயர் சரகர்.

    ஆயிரம் சீடர்கள்

    பதஞ்சலியின் உயரிய ஞானத்தைக் கண்டு ஏராளமானோர் அவரை அண்டி அவரது சிஷ்யர்களாக ஆயினர்.

    இப்படி ஓராயிரம் சிஷ்யர்கள் அவரிடம் சேர்ந்தனர். அவரைக் குருவாகக் கொண்டனர்.

    இவர்களில் ஒருவரே ஶ்ரீ கௌடபாதர்.

    இவரே பதஞ்சலி முனிவரின் அரிய ஞானத்தை உலகிற்கு அளித்துப் பரப்பியவர் எனலாம்.

    பதஞ்சலி முனிவர் வாழ்க்கையிலும் கௌடபாதர் வாழ்க்கையிலும் ஏராளமான அற்புத நிகழ்ச்சிகள் உண்டு.

    ஒரு சமயம் பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் ஆயிரம்கால் மண்டபத்தில் தங்கி இருந்தார்.

    இந்த மண்டபத்தில் அவரது ஆயிரம் சிஷ்யர்களும் குழுமி தங்களுக்குத் தோன்றிய சந்தேகங்களை ஒரே சமயத்தில் எழுந்து கேட்பது வழக்கம்.

    அந்த ஆயிரம் பேருடைய சந்தேகங்களையும் ஒரே சமயத்தில் அவர்கள் கேட்டாலும் அதை அப்படியெ நினைவிலிருத்தி ஒவ்வொருவருக்கும் தக்க பதிலை அளித்து சந்தேகங்களைத்

    Enjoying the preview?
    Page 1 of 1