Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gandhiadigal
Gandhiadigal
Gandhiadigal
Ebook102 pages36 minutes

Gandhiadigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சான்றோர்களின் வாழ்க்கையை எத்தனை முறை படித்தாலும், எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது, அலுக்காது. அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறும் அப்படித்தான். உண்மையும் தருமமும் என்றும் மக்களால் படிக்கப்படும்; போற்றப்படும். எனவே இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் அந்த மாபெரும் மனிதரின் மகத்தான வரலாறு படிக்கப்பட்டது; இன்றும் படித்துக் கொண்டே இருக்கிறார்கள்; நாளையும் உலகத்தாரால் படிக்கப்படும். வாருங்கள் நாமும் படித்து தெரிந்து கொள்வோம்...!

Languageதமிழ்
Release dateOct 7, 2023
ISBN6580141909933
Gandhiadigal

Read more from M. Kamalavelan

Related to Gandhiadigal

Related ebooks

Reviews for Gandhiadigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gandhiadigal - M. Kamalavelan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காந்தியடிகள்

    Gandhiadigal

    Author:

    மா.கமலவேலன்

    M. Kamalavelan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. இளமைப் பருவம்

    2. இங்கிலாந்தில் காந்திஜி

    3. தென்னாப்பிரிக்காவில் காந்திஜி

    4. சபர்மதிக்கரையில் சமூகத்தொண்டு

    5. இந்திய விடுதலைப் போரில் காந்திஜி

    முன்னுரை

    தொல்காப்பியம் தமிழில் தோன்றிய இலக்கண நூல். திருக்குறள் வாழ்வியல் நூல். உலகம் முழுவதும் இவ்விரு நூல்களும் திரும்பத் திரும்பப் படிக்கப்படுகின்றன. அது மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் பல உரை விளக்கங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. எத்தனை முறை படித்தாலும் சலிக்காது; அலுக்காது. அத்தனை அருமையான கருத்துக்களை தன்னகத்தே கொண்ட நூல்கள் அவை.

    அதுபோலவே சில சான்றோர்களின் வாழ்க்கையும் எத்தனை முறை படித்தாலும், எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது, அலுக்காது. அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு அப்படித்தான் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

    உண்மையும் தருமமும் என்றும் மக்களால் படிக்கப்படும்; போற்றப்படும். எனவே இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுவதும் அந்த மாபெரும் மனிதரின் மகத்தான வரலாறு படிக்கப்பட்டது; இன்றும் படித்துக் கொண்டே இருக்கிறார்கள்; நாளையும் உலகத்தாரால் படிக்கப்படும்.

    இந்திய விடுதலையை அகிம்சை, சத்தியாக்கிரகம் என்ற உயர்ந்த கொள்கைகள் மூலம் பெற்றுத் தந்தவர் தேசப்பிதா மகாத்மா.

    காந்திஜியின் வரழ்க்கை வரலாற்றைச் சொல்கிறது இந்த நூல். சிறுவர்க்காக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

    இந்நூல் விடுதலை வரலாற்றைக் கூறுவது அல்ல.

    எனவே பல தலைவர்கள் பற்றிய செய்திகள் வராது.

    எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்றார் காந்திஜி. வாழ்க்கையில் நல்ல நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்னவர். சொன்னபடியே செய்து காட்டியவர்.

    அரங்கில் ஒன்று; அடுப்பங்கரையில் வேறொன்று என்று வாழ்ந்தவர் அல்ல அண்ணல்.

    வாய்மை

    எளிமை

    தூய்மை

    இவற்றின் வடிவம் மகாத்மா.

    காந்திஜி பல போராட்டங்களை நிகழ்த்தினார். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று உப்பு சத்தியாக்கிரகம். இந்த ஆண்டு உப்பு சத்தியாக்கிரகத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவு ஆகும். இந்தச் சமயத்தில் அவரைப்பற்றி நூல் வருவது பொருத்தமானதாகத் தெரிகிறது.

    2003-ஆம் ஆண்டே திட்டமிடப்பட்ட நூல் இது. மணிவாசகர் பதிப்பக நிறுவனர் பதிப்புச் செம்மல் முனைவர் ச.மெய்யப்பன் அவர்கள் வாழும் காலத்தில் அண்ணலைப் பற்றிப் பல அரிய நூல்களை அனுப்பி எழுதப்பணித்தார். 2008-இல் தான் அது முடிந்திருக்கிறது. பதிப்புச் செம்மல் அவர்களின் பொற்பாதங்களில் நூலை சமர்ப்பிக்கின்றேன்.

    தந்தை வழியில் இளவல் மீனாட்சி சோமசுந்தரம் அவர்கள். அழகான முறையில் நூலை வெளியிட்டுள்ளார்கள். இவர்களுக்கு என் அன்பு கனிந்த நன்றி. காந்தியடிகள் அனைவரும் படிக்க வேண்டும். உலகில் உண்மை இருக்கும் வரை அவர் வாழ்வார்; வாழ்கிறார்.

    அன்புடன்

    மா. கமலவேலன்

    1. இளமைப் பருவம்

    அலை முழங்கும் அரபிக்கடல். இந்தியாவின் மேற்குக்கரை; மேற்கத்திய நாடுகளைத் திரும்பிப் பார்க்கச் செய்த மேற்குக்கரை.

    கொள்கைக் கோமான் மகாத்மா காந்தி பிறந்த மண் குஜராத் மாநிலம் இங்குதான் உள்ளது. குஜராத் மாநிலத்தின் கடற்கரை நகரம் போர்பந்தர் ஆகும். போர்பந்தருக்கு சுதாமபுரி என்பது பழைய பெயர். அந்தப் பகுதிக்கு திவானாகப் பணியாற்றி வந்தார் கரம் சந்த் காந்தி.

    கரம் சந்த் காந்தி ஒழுக்க நெறியில் சிறந்தவர். மனவலிமையும், துணிவும் கொண்டவர். வணிக சமூகத்தைச் சேர்ந்தவர்.

    கரம்சந்த் காந்தியின் மனைவி புத்தலிபாய். அவர்களும் வணிக சமூகத்தைச் சேர்ந்தவர்களே. தன் கணவரைவிட இருபது வயது இளையவர் புத்தலிபாய். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். முதல் குழந்தை பெண். அவள் பெயர் ராலியாத்பென். அடுத்து மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார் புத்தலிபாய்.

    லட்சுமி தாஸ், கர்சன் தாஸ், மோகன் தாஸ் என்று மூவருக்கும் பெயரிட்டு அழைத்தனர்.

    நான்காவதாகப் பிறந்தவர் மோகன்தாஸ். இவர்தான் இந்தியாவின் இருளை நீக்க வந்தவர்; உலக நாடுகளிடையே உன்னத நிலைக்கு இந்தியாவை உயர்த்தப் போகிறவர் என்ற உண்மை, அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது.

    1869-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் மோகன்தாஸ் பிறந்தார். இவர்தான் இந்திய வரலாற்றில் பின்னாளில் மகாத்மா காந்தி எனப் போற்றப்பட்டார். காந்தி என்பது குடும்பப் பெயர். மோகன்தாஸின் நற்செயல்களால் அவர் மகாத்மாவாக உயர்ந்தார். போர்பந்தரில் பிறந்த அந்தப் புண்ணியமூர்த்திதான் இந்திய விடுதலைக்காக இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் ஆவார். அவர் வரலாறு இந்திய நாட்டின் வரலாறு ஆகும்.

    காந்தி என்றால் இந்தியா;

    இந்தியா என்றால் காந்தி

    காந்தியின் வாழ்க்கை வரலாறு

    சத்தியத்தின் வரலாறு

    தியாகத்தின் வரலாறு

    எளிமையின் வரலாறு ஆகும்.

    அது எப்படி? அவருக்கு மட்டும் சாத்தியமாயிற்று. மனவலிமை உலகமே தலைகீழானாலும் உள்ளம் கலங்கா மன வலிமை.

    "உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

    உள்ளத்து ளெல்லாம் உளன்."

    என்ற குறளுக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் காந்தியடிகள்.

    வள்ளுவரின் கருத்துகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் காந்தியடிகள்.

    வாய்மை

    தூய்மை

    எளிமை

    என்னும் மூன்று குணங்களில் மொத்த உருவாய்த் திகழ்ந்த காந்தியடிகளின் பள்ளிப்படிப்பு போர்பந்தரில் ஆரம்பித்தது.

    காந்தியடிகளின் தாயார் புத்தலிபாய் பள்ளிக்கூடம் சென்று படிக்காதவர். ஆனாலும் பொது அறிவு மிக்கவர். விவாதங்களில் பங்கு பெறுவார். அவர் கடவுள் பக்தி கொண்டவர். தினமும் கோவிலுக்குச் சென்று வழிபடுவார். அம்மாவுடன் மோகன்தாஸும் கோவிலுக்குச் செல்வார்.

    அம்மா முக்கிய நாட்களில் விரதம் இருப்பார். அதுவும் மழைக்காலத்தில் ஒரு விரதம் இருப்பார். அந்தக் காலத்தில் சூரியனைப் பார்த்து வணங்கிவிட்டுத்தான் சாப்பிடுவது

    Enjoying the preview?
    Page 1 of 1