Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sathanai Semmal Sa.Ve.Su.
Sathanai Semmal Sa.Ve.Su.
Sathanai Semmal Sa.Ve.Su.
Ebook207 pages1 hour

Sathanai Semmal Sa.Ve.Su.

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'ஆளுமை' வலிமையும் சிறப்பும் பெற்ற அறிஞர்களை உலகம் திரும்பிப் பார்க்கும். அவர்கள் சிந்தனைகளை செயல்களை ஏற்றுக் கொள்ளும். அண்ணல் காந்தியடிகளின் வலிமையான ஆளுமை தான் இந்திய நாட்டு விடுதலைக்குப் பின்னணி; அஞ்சா நெஞ்சன் நெல்சன் மண்டேலாவின் ஆளுமைதான் தென் ஆப்பிரிக்க மக்களின் விடியலுக்குப் பின்னணி. உள்ள உறுதி, கொள்கைப் பிடிப்பு எந்த நிலையிலும் மனம் தளராமை என ஆளுமையின் பரிமாணங்கள் விரியும்.

நாடு, மொழி இவற்றின் வளர்ச்சி இப்படிப்பட்ட வியத்தகு ஆளுமைத்திறன் கொண்டவர்களால்தான் அமைந்து வருகிறது. இது வரலாறு உணர்த்தும் உண்மை.

வரலாறு படைத்து, படைக்கும் அப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைப் படிக்கப் பலர் விரும்புவர்; பின்பற்ற சிலர் விரும்புவர். இவர்போல் நாமும் வாழ்ந்தால் நன்றாய் ‘இருக்குமே' என்று எண்ணி கற்பனையோடு நின்று விடுவர் சிலர். என்றாலும் அவர்களது சீரிய வாழ்வு சிறிது சலனத்தையாவது மக்களிடையே ஏற்படுத்தி விடும்.

Languageதமிழ்
Release dateJul 24, 2021
ISBN6580141907037
Sathanai Semmal Sa.Ve.Su.

Read more from M. Kamalavelan

Related to Sathanai Semmal Sa.Ve.Su.

Related ebooks

Reviews for Sathanai Semmal Sa.Ve.Su.

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sathanai Semmal Sa.Ve.Su. - M. Kamalavelan

    https://www.pustaka.co.in

    சாதனைச் செம்மல் ச.வே.சு

    Sathanai Semmal Sa.Ve.Su.

    Author:

    மா. கமலவேலன்

    M. Kamalavelan
    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ச.வே.சு வின் வாழ்க்கைக் குறிப்புகள்

    31-12-1929 : திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம் வீரகேரளன் புதூரில் பிறத்தல். பெற்றோர் சு. சண்முகவேலாயுதம் பிள்ளை, ச. இராமலெட்சுமி அம்மாள்

    01-06-1934 : இளமைக் கல்வி, அடிவாரம், கொட்டாரம், முதல் விக்கிரமசிங்கபுரம், புனித இருதய நடுநிலைப் பள்ளி, இருதய குளம்.

    1-6-1943 : முதல் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளி, அம்பாசமுத்திரம்

    1948-1950: இடைநிலைக் கல்வி (Intermediate) ம.தி.தா. இந்துக் கல்லூரி திருநெல்வேலி

    1950-1953 : தமிழ்ச் சிறப்பு வகுப்பு B.A (Hons)அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

    1953-1956 : தமிழ்ப் பயிற்றுநர், வஉசி. கல்லூரி, தூத்துக்குடி.

    1956 ஜூன் : தமிழாசிரியர் புனித மரிய அன்னை.

    ஜூலை : உயர்நிலைப் பள்ளி, விக்கிரமசிங்கபுரம்.

    செப்டம்பர் : தமிழ்ப் பயிற்றுநர், புனித சவேரியார் கல்லூரி.

    அக்டோபர் : பாளையங்கோட்டை.

    10-10-1956 : விரிவுரையாளர் பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.

    1958-1961 : 'சிலப்பதிகார விளக்கவியல் இலக்கணம்' பற்றி முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்தல்,

    1961 : முனைவர் பட்டம் பெறல்.

    1962 முதல் : முதுகலை மாணாக்கர்க்கும்

    1964 முதல் : முனைவர் பட்ட ஆய்வாளர்க்கும் வழிகாட்டியாக நெறியாளராக அமைதல்,

    1962-1966 : கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் விரிவுரையாளர்.

    1966-1974 : துறைத் தலைவர்

    1969 : பாபநாசத்தில் திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியை உருவாக்குதல்

    1972-1978 : தென்னிந்தியாவில் கேரளம், கள்ளிக்கோட்டை, பங்களூர், மைசூர், மதுரை, சென்னை ஆகிய பல்கலைக்கழகங்களில் பாடப் புத்தகக்குழு உறுப்பினராக இருந்தமை. சென்னை, மதுரை, தஞ்சை, காந்திகிராமம் போன்ற பல பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் பதவிக்குப் பொறுக்குக் குழ உறுப்பினராகப் பன்முளை பணியாற்றியமை.

    1972 : சென்னைப் பல்கலைக்கழகத்தில் 'இலக்கியக் கனவுகள்' என்ற தலைப்பில் அறக்கட்டளைச் சொற்பொழிவு செய்தல். பின்பு நூலாக வந்துள்ளது.

    1972 : மதுரைப் பல்கலைக்கழகத்தில் ‘அடியார்க்கு நல்லார் உரைத்திறன்' என்ற தலைப்பில் அறக்கட்டளைச் சொற்பொழிவு. பின்பு நூலாக வெளிவரல்.

    30-10-1974 : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

    1986 : முதன்மை அலுவல் ஆட்சியர், பேராசிரியர், இயக்குநர்.

    1975 : அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அறக்கட்டளைச் சொற்பொழிவு 'தாயுமானவர்' நூலாயிற்று.

    1977 : பூம்புகார் பத்தினிக் கோட்டம். கண்ணகி விழாவில் 'சிலம்பும் சிந்தாமணியும்' நூல் வெளியிடல்.

    1978-1983 : இந்திய அரசின், சாகித்திய அகாதெமி பொதுக் குழுவிலும் தமிழகக் கிளைக் குழுவிலும் ஆலோசனைக் குழுவிலும் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராகப் பணியாற்றியமை.

    1978 : அகில உலக இஸ்லாமிய மாநாடு இலங்கை.

    1979 : ம.கா. பல்கலைக்கழகத்தில் 'இலக்கிய வகைகள்’ கருத்தரங்கில் 'காப்பியப் புனைதிறன்' நூல் வெளியிடல்.

    1979 : மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 'திருக்குறள்' அறக்கட்டளைப் பொழிவு

    1980 : 'கம்பனும் உலகியல் அறிவும்' சென்னை வானொலியில் ஒரு மணி நேரச்சொற்பொழிவு

    1980 : மொரீஷியஸ் அனைத்துலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கருத்தரங்கு பாரீஸ், லண்டன், உரோம், ஏதென்ஸ், கெய்ரோ ஆகிய நகரங்களுக்குக் கல்விப் பயணமாய்ச் சென்றுவரல்.

    1981 : ம.கா. பல்கலைக்கழகம் அறக்கட்டளைப் பொழிவு இலக்கிய உத்திகள் பின்பு நூலாதல்.

    1981 : பண்பாட்டுப் பரிமாற்றம் பற்றி, பல்கலைக்கழக மானியக் குழுவும், இந்திய அரசும் இணைந்து அனுப்ப, செக்கோஸ்லோவேக்கியா நாட்டு சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மூன்று மாத காலம் தமிழ்ப் பயிற்று நூல் உருவாக்கும் பணி போலந்து, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்றுவரல்.

    1982-1986 : தமிழ்ப் பல்கலைக்கழக உருவாக்கும் குழுவிலும் பேரவை ஆட்சிக் குழுவிலும் உறுப்பினராக இருந்தமை.

    1982 : ம.கா. பல்கலைக்கழகம் பண்டிதமணி அறக்கட்டளைச் சொற்பொழிவு.

    1982 : காரைக்குடி செந்தமிழ்க் கல்லூரியில் மீனாட்சி ஆச்சி நினைவுச் சொற்பொழிவாக கம்பன் இலக்கிய உத்திகள் என்ற நூல் வெளியிட்டுப் பேசுதல்.

    1982 : முதல் அனைத்துலக இந்து மகாநாட்டிற்கு இலங்கை சென்றுவரல்.

    1983 : ஜப்பானில் நடைபெற்ற மனித அறிவியல் கருத்தரங்கில் கலந்து கொள்ளல். அப்போது ஹாங்காங், தாய்லாந்து, மணிலா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களுக்கும் சென்றுவரல்.

    1984 : கம்பன் இலக்கிய உத்திகள் என்ற நூலுக்குத் தமிழக அரசின் முதல் பரிசைப் பெறல்.

    1985 : திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி அடிகளாரால் திருப்பத்தூர் தமிழ்ச்சங்கம் வழி 'தமிழாகரர்' என்ற பட்டம் பெறல்.

    1985 : தமிழூரைத் தோற்றுவித்தல்.

    1986 : சென்னை வானொலியில் திருநாவுக்கரசர் பற்றி ஒரு மணிநேர இலக்கியப் பேருரை.

    1986 ஆகஸ்டு 22 முதல் : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதன்மைப் பேராசிரியராகப் பணிசெய்தல்.

    1987 ஜூன்-30 : ஓய்வு பெறல்.

    01-07-1987 முதல் : மதிப்புறு இயக்குநர். உலகத் தமிழ்க் கல்வி இயக்கம் தமிழூர்.

    1996 : தமிழகப் புலவர் குழு 'செந்தமிழ்ச் செம்மல்' என்ற விருதினைத் தருதல்.

    1997 : இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி விருது.

    1999 : 'தமிழ் இலக்கியச் சிந்தனையாளர்' என்ற சிறப்பினைக் குமரப்பா படிப்பகம் தருதல்.

    2000 : நல் அறிஞர் விருது இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றம் வழிப்பெறுதல்.

    2001 : சைவ நன்மணி விருது கோவை சைவவேளாளர் சபையின் சார்பில் வழங்கப்பட்ட திருநாவுக்கரசர் விருது.

    2001 : திருவாவடுதுறை ஆதீனம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நினைவுப் பரிசு பெறுதல்.

    2003 : திருவையாறு ஒளவைக் கோட்டத்தின் வழி ஒளவைத் தமிழ் அருளாளர் விருதினைப் பெறல்.

    2003 : 'தமிழ் இயக்கச் செம்மல்' என்ற விருதினை மெய்யப்பன் தமிழாய்வகம் சிதம்பரம் தந்து மகிழ்தல்.

    2003 : 5.82003இல் இராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை சார்பில் இராஜா சர். முத்தையாச் செட்டியார் பிறந்த நாள் நினைவுப் பரிசாகத் தமிழறிஞர் என்ற முறையில் ரூபாய் 1 இலட்சமும் விருதும் பெறுதல்.

    2004 : 28.05.2004இல் 'தொல்காப்பியச் செம்மல்' என்ற விருதினைப் பெறல்.

    13.8.2004 : சென்னை, கம்பன் கழகம் பேராசிரியர். கே. சுவாமிநாதன் நினைவுப் பரிசில் பெறுதல்.

    18.9.2004 : தமிழ்நாடு அரசு வழங்கிய கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெறல்.

    ஆய்வாளர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கு

    ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம்

    தமிழ்ப் பெருமக்கள் வாழ்க்கை வரலாறு வெளியிடும் திட்டத்தில் நூற்றாண்டு விழா கண்ட மூதறிஞர்களான முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம், தமிழ்க்கடல் ராய.சொ. அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை வெளியிட்டோம். தமிழறிஞர் வரிசையில் இப்பொழுது எழுபதாண்டு இளைஞர் ச.வே.சுப்பிரமணியன் வாழ்க்கை வரலாறு வெளிவருகிறது.

    "தமிழ்நூல் பதிப்புக்கு உவே.சா

    தேசியத்திற்கு வ.உ.சி

    தமிழ் தேசியத்திற்கு ம.பொ.சி

    ரசனைக்கு ஒரு டி.கே.சி

    திறனாய்வுக்கு வ.வே.சு

    ஆராய்ச்சிக்கு ச.வே.சு"

    என்று திறனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

    ச.வே.சு. தமிழ் வளர்ச்சிக்குப் பல துறைகளில், பல முனைகளில், பல வகைகளில், பல வழிகளில் தொண்டு செய்திருந்தாலும் அவர் ஆற்றிய முப்பெரும் பணிகள் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப் பெற்றுள்ளது.

    (1) கருத்தரங்க நாளிலேயே ஆய்வுக்கோவை அச்சிட்டு வெளியிடுதல்.

    (2) அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழும் போதே உரிய நூலை வெளியிடுதல்.

    (3) பள்ளி ஆசிரியர்களும் முனைவர் பட்டம் பெற வழிவகை கண்டது.

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராய் அவர் வீற்றிருந்து ஆற்றிய பணிகள் தனி ஆய்வுக்கு உரியது. ஆராய்ச்சி வளத்தாலும் நூல் வெளியீடு எண்ணிக்கையாலும் இவர் காலம் பொற்காலம்.

    திருவனந்தபுரம் ஆராய்ச்சிப் பள்ளியின் தலைமாணவர். சிந்தையைச் செயல்படுத்தும் செம்மல். எண்ணியது முடிக்கும் ஏந்தல். தமிழ் ஆராய்ச்சியின் நோக்கினையும் போக்கினையும் மாற்றிய திருப்புமுனை. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு உருவம் கொடுத்தவர். இவரால் பட்டம் பெற்றோர் பலர். அறிவு பெற்றோர் பலர். வாழ்வு பெற்றோர் பலர். வளம் பெற்றோர் பலர். பதவி உயர்வு பெற்றோர் பலர். இவரே ஒரு தமிழ் இயக்கம். இவரின் இலக்கியப் பங்களிப்பு காலவெள்ளம் அழிக்கமுடியாத கல்வெட்டாகி விட்டது. சிவனடியார்களுக்கு நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மூலமந்திரம். இந்தத் தலைமுறைத் தமிழ் ஆய்வாளர்களுக்கு ச.வே.சு. என்னும் மூன்றெழுத்து மூலமந்திரம். தமிழூர் கண்டு தமிழ்த்தவம் செய்யும் ச.வே.சு. நம் காலத்துத் திருமூலர். புதிய ஆய்வின் மூலவேர் இவர். இந்த வேரில் கிளைத்த விழுதுகளின் சாதனைகளே தனி ஆய்வு அளவு விரியும் தகுதியுடையன.

    இந்நூலுக்கு ஆய்வு நோக்கில் அணிந்துரை எழுதிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர் அன்னி தாமசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    கற்கத் தகுந்த இந்த வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகளை எழுதிய ஆசிரியர் கமலவேலன். கமலவேலன் கதைகள் நான்கு தொகுதிகளாக வெளிவந்து பரிசும், பாராட்டும் பெற்றவர். கதைகள் எழுதிப் பழகியவராதலால் எளிய இனிய நடையில் இந்நூலை நடத்திச் செல்கிறார். பாட்டுடைத் தலைவரோடு பல்லாண்டு பழகிய கேண்மையராதலால் அகமும் புறமும் அறிந்து அழகோவியமாக்கி உள்ளார். தமிழூருக்குப் பலமுறை சென்று ஆசிரியரோடு கலந்து உரையாடி நல்லதொரு வரலாற்று நூலை நமக்கு அளித்துள்ளார். குன்றக் கூறாமலும் மிகைப்படக் கூறாமலும் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் இந்நூலை உருவாக்கிய கமலவேலன் நம் அனைவரின் பாராட்டுக்குரியவர். சாதனையாளர் ச.வே.சு.வின் பன்முக நலன்களைப் பார்த்துப் படித்துக் கற்றுப் பயன்பெறுவோம்.

    முன்னுரை

    'ஆளுமை' வலிமையும் சிறப்பும் பெற்ற அறிஞர்களை உலகம் திரும்பிப் பார்க்கும். அவர்கள் சிந்தனைகளை செயல்களை ஏற்றுக் கொள்ளும்.

    அண்ணல் காந்தியடிகளின் வலிமையான ஆளுமை தான் இந்திய நாட்டு விடுதலைக்குப் பின்னணி; அஞ்சா நெஞ்சன் நெல்சன் மண்டேலாவின் ஆளுமைதான் தென் ஆப்பிரிக்க மக்களின் விடியலுக்குப் பின்னணி.

    உள்ள உறுதி, கொள்கைப் பிடிப்பு எந்த நிலையிலும் மனம் தளராமை என ஆளுமையின் பரிமாணங்கள் விரியும்.

    நாடு, மொழி இவற்றின் வளர்ச்சி இப்படிப்பட்ட வியத்தகு ஆளுமைத்திறன் கொண்டவர்களால்தான் அமைந்து வருகிறது. இது வரலாறு உணர்த்தும் உண்மை.

    வரலாறு படைத்து, படைக்கும் அப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைப் படிக்கப் பலர் விரும்புவர்; பின்பற்ற சிலர் விரும்புவர். இவர்போல் நாமும் வாழ்ந்தால் நன்றாய் ‘இருக்குமே'

    Enjoying the preview?
    Page 1 of 1