Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbin Azhagu
Anbin Azhagu
Anbin Azhagu
Ebook173 pages1 hour

Anbin Azhagu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இத்தொகுப்பில் இருபது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பண்பாட்டுக் கூறுகள், பயணத்தில் பெற்ற பட்டறிவுகள், வங்கியில், தெரு ஓரத்தில், வாழும் இல்லத்தில், கல்வி நிலையத்தில், கண்டறிந்த வாழ்க்கை நிகழ்வுகள், நெகிழ்வுகள், இன்னல்கள், ஆற்றாமைகள் இப்படிப் பலவற்றின் உணர்வுக் குவியல்களே இவ்விருபது கதைகள்.

Languageதமிழ்
Release dateSep 25, 2023
ISBN6580141909944
Anbin Azhagu

Read more from M. Kamalavelan

Related to Anbin Azhagu

Related ebooks

Reviews for Anbin Azhagu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbin Azhagu - M. Kamalavelan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அன்பின் அழகு

    (சிறுகதைகள்)

    Anbin Azhagu

    (Sirukathaigal)

    Author:

    மா.கமலவேலன்

    M. Kamalavelan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. மீனாட்சி என்னும் அன்பரசி

    2. முடித்திருத்தம்

    3. மூக்குத்தி

    4. சாவித்திரி

    5. வெளிச்சம்

    6. தொலைந்துபோனது

    7. அவனும் என் தோழன்

    8. சீனி போடாத காப்பி

    9. வண்ணச் சட்டைகள்

    10. அன்பின் அழகு

    11. சுழல்

    12. இருபது ரூபாய்

    13. மாலுமிகள்

    14. கையேந்தி நின்றபோது...

    15. சாமி காசு

    16. பைத்தியம்

    17. உயிர் வந்தது

    18. காற்றில் ஆடும் தென்னை

    19. கெளரவம்

    20. இது ரகசியம் அல்ல

    முன்னுரை

    அனுபவங்களின் செறிவு சிறுகதைகள்.

    அறவுரை, அறிவுரைகளின் காலம் நிறைவுக்கு வந்து விட்டதாகத்தான் கொள்ள வேண்டும். எனவே சிறுகதைகளில் நீதி, நேர்மை, உண்மை போன்றவற்றை நேரிடையாகச் சொன்னால் புத்தகத்தை மூடிவைத்துவிடுவார்கள்.

    மறைபொருளாகத்தான் மறைக்கருத்துகளைத் தர வேண்டியுள்ளது. அப்படிச் சொல்வதற்கு இன்றும் துணை நிற்பது சிறுகதைகளே.

    இத்தொகுப்பில் இருபது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

    பண்பாட்டுக்கூறுகள், பயணத்தில் பெற்ற பட்டறிவுகள், வங்கியில், தெரு ஓரத்தில், வாழும் இல்லத்தில், கல்வி நிலையத்தில், கண்டறிந்த வாழ்க்கை நிகழ்வுகள், நெகிழ்வுகள், இன்னல்கள், ஆற்றாமைகள் இப்படிப் பலவற்றின் உணர்வுக்குவியல்களே இவ்விருபது கதைகள்.

    மணிவாசகர் பதிப்பகத்தார் தொன்மை இலக்கியங்கள் குறித்த நூல்கள் வெளியிடுவதில் தனித்துவம் உடையவர்கள். அந்நாள் தொட்டு புத்திலக்கியங்கள் வெளியிடுவதிலும் அக்கறையும் ஆர்வமும் காட்டி வருபவர்கள். அவற்றிற்கெல்லாம் அடிப்படைக்காரணம் பதிப்புச் செம்மல் முனைவர் ச.மெய்யப்பனார் அவர்களே ஆவார். அவர் காட்டிய- உருவாக்கிய பாதையில் அவர்தம் மைந்தர் அன்பு இளவல் பதிப்புத்திலகம் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம், தம் இலக்கியப் பணியைத் தொடர்கிறார். கனிவோடு இச்சிறுகதைத் தொகுப்பு நூலை வெளியிட முன்வந்துள்ளார்கள். அவருக்கு என் அன்பான நன்றி கலந்த வணக்கங்கள்.

    உலகம் அன்பு மயமானது. அனைவரும் அன்பின் வசமானால் உற்சாகமான, உன்னதமான வாழ்க்கை அமையும். இந்த ‘அன்பின் அழகு அதற்குத் துணை செய்யும்.

    இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் அமுதசுரபி, இலக்கியப்பீடம், இளந்தமிழன், கவிதை உறவு, தேவி, தொடரும், ஓம்சக்தி, விஜயபாரதம், லேடீஸ் ஸ்பெஷல் ஆகிய இதழ்களில் பிரசுரமானவை. பிரசுரம் செய்த பத்திரிகை ஆசிரியர்களுக்கு நன்றி.

    படைப்பாளர்கள், படிப்பாளர்கள் மத்தியில் ‘அன்பின் அழகு’ பரவசத்தை ஏற்படுத்தும். இது உறுதி.

    அன்புடன்,

    மா. கமலவேலன்

    திண்டுக்கல்- 624005.

    1. மீனாட்சி என்னும் அன்பரசி

    இளமாறன் புரட்சி மனம் கொண்டவன். எழுச்சியோடு செயல்படுபவன். யாருக்காகவும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வளைந்து கொடுக்க மாட்டான். கொள்கை, கோட்பாடு, இலட்சியம் அதுதான்... அவைதான் முன்னே நிற்கும். குடும்பம், உறவுகள் எல்லாம் பின்னே கை கட்டி நிற்கும்.

    இழந்தவை ஏராளம்.

    பொருள் இழப்பு; மன உளைச்சல். ஆனாலும், அலை ஆழியின் நடுவே சூறாவளி, சுழற்காற்று, பெரும் புயல் காற்று... எல்லாவற்றையும் எதிர்கொண்டு கப்பலைச் செலுத்தக் கற்றுக் கொண்டான்.

    நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சிய கப்பலாய் நிற்பதில் பெருமை ஏது? இடி, மின்னல், மழை... இவற்றினூடே பயணிப்பதுதானே சாதனை! அதுதானே வாழ்க்கை!

    திருமண வாழ்விலும் வெற்றி பெற்றுவிட்டான். என்ன... இந்த வெற்றிக்காக அவன் பத்தாண்டுகள் போராட வேண்டியிருந்தது. அந்தப் போராட்டம் வீண் போகவில்லை.

    அவன் எண்ணங்களோடு அனுசரித்துப் போகும் குணம் கொண்ட பெண் ஒருத்தி மனைவியாய் கிடைத்து விட்டாள்.

    திருமணமாகி மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. இன்னும் புதுமணம் மாறாத மணப்பெண்ணாகத்தான் காட்சியளித்தாள் அவன் மனைவி.

    பெண்ணின் அழகு விதவிதமாய் மாறும் இயல்புடையது. அது இயற்கையின் விசித்திரம்.

    பூப்படையும் காலத்தில் ஒரு பூரிப்பு! கணவனைக் கைப்பிடிக்கும் காலத்தில் ஒரு கர்வம் கலந்த அழகு;

    செழுமை; வனப்பு! குழந்தைக்குத் தாயான பின் ஒளிரும் தாய்மையின் பெருமித அழகு!

    மொத்தத்தில் பெண் என்பவள் பிறந்ததிலிருந்து போய்ச் சேரும் வரை அழகுதான்; கொள்ளை அழகுதான்.

    என்னங்க... ஏதோ தீவிரமான சிந்தனையில் இருக்கிற மாதிரி தெரியுது? - அவள் கேட்டாள்.

    அதெல்லாம் ஒன்றுமில்லை - அவன் அவசரமாய் மறுத்தான்.

    பெண்களைப் பற்றிய எண்ண ஓட்டத்தை அந்த நேரத்தில் அவளிடம் சொல்ல அவன் விரும்பவில்லை.

    முன் இரவு நேரம். வெளியே பன்னீர் தூவலாய் மழை. அமைதியான இன்பச் சூழல். இதுதான் சரியான நேரம். சொல்லிவிட வேண்டியதுதான்.

    இளமாறன் மெதுவாய் மனைவியின் மென்மையான கரங்களை வருடினான். முடிகள் அடர்ந்த அவனது முரட்டுக் கரங்களின் உரசலில் அவள் கிறங்கினாள்.

    மீனாட்சி...

    சொல்லுங்க...

    நான் ஒன்று கேட்கட்டுமா?

    நமக்குக் கல்யாணம் நடந்து மூணு மாசம் ஆச்சுங்க. இன்னும் நமக்குள்ள என்னங்க ஒளிவுமறைவு? - அப்படிச் சொல்ல நினைத்தாள். அப்படிச் சொல்லாமல் கண்களாலேயே அவனை அளந்தாள்.

    என்னோட இலட்சியங்கள் பற்றி உனக்கு நல்லாவே தெரியும்!

    ‘எதற்கு இந்தப் பீடிகை? என்ன கேட்கப் போகிறான்?’ - அவள் மெளனமாய் யோசித்தாள்.

    அவன் தொடர்ந்தான்... இந்த மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சின்னு இதெல்லாம் என்ன பேருன்னு வைக்கிறாங்க... எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்கலை!

    ஓ! அதுதான் உங்கள் கவலையெல்லாமா? மீனாட்சியின் விழிகள் படபடத்தன.

    விதவிதமான சாமிகள்... விதவிதமான பெயர்கள்... இளமாறன் நக்கலாய்ச் சிரித்தான்.

    மீனாட்சி அவன் கரங்களிலிருந்து தன்னை மெல்ல விடுவித்துக் கொண்டாள்.

    கோபமா? - அவன் குழைந்தான்.

    சே! சே! அப்படியெல்லாம் இல்லீங்க...

    எதிலுமே புரட்சி, புதுமை வேணும்.

    ஆமாங்க...

    சில நொடிகள் யுகங்களாய்க் கடந்தன.

    உங்களுக்குப் பிடிக்கலைன்னா... எனக்கும் பிடிக்கலைதான்! உம்ம்... ‘கயல்விழி’ன்னு வேணும்னா பேரை மாத்திக்கிடலாங்க - அவள் நிதானமாய்க் கூறினாள்.

    மறுப்பாள் என்றுதான் இளமாறன் நினைத்தான். இவ்வளவு எளிதாக சம்மதம் சொல்லுவாள் என்று அவன் எண்ணவில்லை.

    நினைத்துப் பார்த்தால் இந்த மூன்று மாதங்களில் அவன் சொன்ன எந்த மாறுதலையும் அவள் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறாள். எதிர்ப்பே காட்டுவதில்லை.

    இளமாறனுக்கே வியப்பாகத்தான் இருந்தது.

    மீனாட்சிங்கற வடமொழிப் பெயரை கயல்விழின்னு தமிழ்ப்படுத்திச் சொல்றே... அவ்வளவுதானே! அது சரிப்படாது.

    அப்படின்னா... நீங்கள் ஒரு பெயர் சொல்லுங்க.

    அன்பரசி... உனக்குப் பிடித்திருக்குதா?

    அன்பரசி... அன்பரசி... நல்லாத்தாங்க இருக்குது. அப்படியே கூப்பிடுங்க.

    அன்பரசி வெற்றிப் பெருமிதத்துடன் இளமாறன் அழைத்தான்.

    அவள் சிரித்தாள். பூ உதிர்வது போல இருந்தது அந்தச் சிரிப்பு! அது மென்சிரிப்பா?

    ஏன் சிரிக்கிறே?

    எங்க அப்பா, அம்மா ஊரைக் கூட்டி, உறவைக் கூட்டி, பெரிய விருந்து வைச்சு, இருபத்தியேழு வருஷத்துக்கு முன்பு வைத்த பெயரை... ஒரு விநாடிப் பொழுதுல ‘அன்பரசி’ன்னு மாத்திட்டீங்களே... உண்மையிலேயே நீங்க பயங்கரமான லட்சியவாதிங்க!

    ‘இவள் கேலி செய்கிறாளா? பாராட்டுகிறாளா?’

    இளமாறன் மனைவியை ஆழமாக உற்று நோக்கினான்.

    கணவனின் முகம் மாறுபடுவதை அவள் புரிந்து கொண்டாள்.

    பெயர்ல என்னங்க இருக்கு. எந்தப் பெயர்னாலும் எனக்குச் சம்மதம்தாங்க.

    அப்படிச் சொல்லாதே. பெயர்லதான் நம்ம பண்பாடே இருக்கு. - இளமாறன் அழுத்தமாகச் சொன்னான்.

    நான் பெற்ற பட்டங்கள், கல்லூரிச் சான்றிதழ்கள் எல்லாவற்றிலும் மீனாட்சின்னு இருக்குதே? - அவள் ஒரு சந்தேகத்தை எழுப்பினாள்.

    நியாயமான சந்தேகம்தான். அதற்கும் அவன் தயாராய் ஒரு பதில் வைத்திருந்தான்.

    அந்தப் பெயரை, நாம முறைப்படி அரசாங்கத்துக்கு மனு எழுதிக் கொடுத்து, ‘அன்பரசி’ங்கற பெயரையே பதிவு செய்திடுவோம் - இளமாறன் விளக்கமளித்தான்.

    அன்பரசி அதை ஏற்றுக் கொண்டாள்.

    ***

    வளரும் குருத்துகள் போல் நாள்களும், மாதங்களும் வளர்ந்து கடந்தன.

    பகுத்தறிவுப் பிரசாரங்களைக் கிராமம்தோறும் சென்று நிகழ்த்தும் குழுவில் இளமாறன் முக்கியப் பங்கு பெற்றான்.

    சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைப்பதில் தலைவர்களோடு கலந்து கொண்டு, பல ஊர்களுக்கும் சென்று வந்தான்.

    இன ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் சிறப்புரை ஆற்றினான்.

    அன்பரசி அவன் எந்த செயல்பாடுகளுக்கும் குறுக்கே நிற்பதில்லை. கணவனின் மனம் அறிந்து நடந்து கொண்டாள். தன் போக்கை மாற்றிக் கொண்டாள்.

    அவள் மாற்றிக் கொள்ளவில்லை என்றால் இல்லற வாழ்க்கை நாளும் போராட்டமாகத்தான் இருந்திருக்குமே என்றாலும் அவள் தன் வீட்டாரையும், தன் வீட்டாருடைய பழக்க வழக்கங்களையும் மனத்திற்குள் நினைத்து ஆற்றாமைப் பெருமூச்சு விடுவாள்.

    அப்பாவும் அம்மாவும் தீவிர முருக பக்தர்கள். ஆண்டு தோறும் ஆறு நாள்கள் சஷ்டி விரதம் இருந்து, திருச்செந்தூர் சென்று முருகனைத் தரிசித்து, கடலாடி வருபவர்கள்.

    செவ்வாய்க்கிழமை துர்கைக்கு...

    வெள்ளிக்கிழமை சிவனுக்கு...

    சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு...

    இப்படி அன்பரசியின் அம்மா தவறாது விரதம், கோயிலுக்குச் சென்று

    Enjoying the preview?
    Page 1 of 1