Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nadhiyin Pizhaiyandru
Nadhiyin Pizhaiyandru
Nadhiyin Pizhaiyandru
Ebook155 pages54 minutes

Nadhiyin Pizhaiyandru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதர்கள் இயல்பான செயல்பாடுகளிலிருந்து விலகி இயல்பற்றச் செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் முரண்களை, சக மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை இத் தொகுப்பின் கதைகளில் காணலாம். இயல்பான வற்றை விலக்கி இயல்பற்றதைச் செய்வதற்கான விரும்புதல்கள் மனிதநேயத்திற்குப் புறம்பானவை. இவை தவிர்க்கப்பட வேண்டும் என்கிற உணர்வைப் பெறுகின்ற தன்மையை உருவாக்கவேண்டும் என இக்கதைகள் எடுத்துப் பேசுகின்றன. இவற்றுள் சில முரண்கள் காலங்காலமாக மனித மனத்துள் ஆழமாகப் பதிந்துள்ளவை. அவை எக்காலத்திற்கும் ஏற்புடையதல்ல என்பதையும் சில உறுத்தல்கள் வழி இக்கதைகள் உணர்த்துகின்றன.

Languageதமிழ்
Release dateApr 27, 2024
ISBN6580167910965
Nadhiyin Pizhaiyandru

Read more from Harani

Related to Nadhiyin Pizhaiyandru

Related ebooks

Reviews for Nadhiyin Pizhaiyandru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nadhiyin Pizhaiyandru - Harani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நதியின் பிழையன்று

    (சிறுகதைகள்)

    Nadhiyin Pizhaiyandru

    Author:

    ஹரணி

    Harani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/harani

    பொருளடக்கம்

    தொடரும் பயணத்தில்...

    நீலம் பிரிந்த வானம்

    பங்குப் புடைவைகள்

    என்றார்கள்...

    நீரளவே ஆகும் நீராம்பல்

    ஸ்டேட்டஸ்

    இழந்தவளின் வேளாண்மை...

    களிறுகள் பெயர்ந்தனவென்றொரு தெரு

    மனமெனும் நீதிமன்றம்

    பேராசிரியர்

    நம்பிக்கைப் பாவிகள்

    பிஎஸ்கே குடும்பம்

    இரண்டு கடிதங்கள்...

    கனிந்த பழம்

    நதியின் பிழையன்று

    சுவரொட்டி...

    வினையது கேட்பின்...

    தொடரும் பயணத்தில்...

    பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சக மனிதர்களுடன் பயணம் தொடர்கிறது. அவரவர்க்கானத் தேடல்களுடனும் நோக்கங்களுடனும் பொறுப்புகளுடனும் கவனமாகத் தங்கள் பயணத்தை மேற் கொண்டிருக்கிறார்கள். இயல்பாக எங்களுக்குள் உரையாடல்கள் சுவையாகவும் சில சமயங்களில் கனத்தும் நீண்டுகொண்டிருக்கின்றன. எனக்கான வழித்தடத்தில் தேடிக் கண்டடையும் நோக்கமில்லாமல் வாழ்வின் எதிர்ப்படுதல் நிகழ்வுகளில் என்னை இருத்திக்கொண்டு அவற்றைக் கண்டடைந்து எழுத்துகளில் என் உரையாடல்களைத் தொடங்குகிறேன். எந்தவிதச் சிக்கலும் துன்பமுமின்றி அவை என் படைப்புலகில் சிறகுகளை விரித்தபடியே மிதக்கின்றன. இதுவுமோர் அனுபவத்தின் தொடர்ச்சியே. இவற்றை இக்கதைகளாக எழுதிப் பார்க்கிறேன். புதிதாக எதுவும் இல்லை என்றாலும் ஏதோ ஒரு சுடரொளியில் பார்ப்பவை சற்றே புதிதாகவே தோனுகின்றன. ஆகவே இந்த எழுத்துப்பயணத்தின் ஒரு பிரதியாகவே இத்தொகுப்பும். பயணம் முடிவதில்லை. அது அதற்கான தருணத்தை எனக்கு வழங்குவதில் இருந்து நிறுத்தும் வரை பயணம் தொடரும்.

    என்றைக்குமான அன்புடன்

    ஹரணி

    நீலம் பிரிந்த வானம்

    ஆறாதப் புண்ணின் மேல் நெருப்பைக் கொட்டியதுபோல அந்த கேள்வியைக் கேட்டு ராகவன் ஒருகணம் துடித்துப் போய்விட்டான். வேறு யாறாவது கேட்டிருந்தால் உறவே வேண்டாம் என்று அந்தக் கணமே உறவறுத்திருப்பான். ஆனால் இதை உறவறுக்கமுடியாது. கேட்டவள் அவனின் அம்மா யோகாம்பாள். தொப்புள்கொடியறுத்து உறவு தந்தவள் உறவை அறுக்க எந்த ஜென்மத்திலும் முடியாது.

    கேட்டுவிட்டு இயல்பாய் போய்விட்டாள் யோகாம்பாள்.

    கேட்டவன் துடித்துக்கொண்டிருக்கிறான்.

    ராகவன் சொல்லுக்கு ஆயிரம் பேர் தலையால் வேலை செய்யக் காத்திருக்கும்படியான உயர் பதவியில் இருக்கிறான். செல்வம் வேண்டாம் என்றாலும் வந்து குவிகிறது.

    ராகவனையும் சேர்ந்து ஏழுபேர் கொண்ட குடும்பத்தில் ஒரு வாழைக்காயை வாங்கிவந்து ஏழு துண்டுகள் போட்டு வறுத்து ஆளுக்கொரு துண்டு என வறுமையிலும் வளம் கண்டவள் யோகாம்பாள். இப்போது ஊருக்கே கூட தினமும் பந்தி வைக்கும் செல்வத்தில் திளைக்கிறான் ராகவன். வறுமையில் வாழ்ந்த அம்மாவைச் செம்மையில் திளைக்க வைக்கப் போராடுகிறான். தோல்வி ஒன்றையே அவனுக்குத் தாராளமாய் எப்பவும் தாரை வார்த்துக் கொடுக்கிறாள் யோகாம்பாள்.

    ராகவனின் அப்பா சேர்த்து வைத்தது ஒரு ஓட்டு வீடு. அப்பா இறந்தபோது அப்படியொரு மழை. அவரை வைத்திருந்த ஐஸ் பெட்டியிருந்த இடம் தவிர எல்லாம் இடமும் ஒழுகிக்கொண்டிருந்தன. அப்பாவின் சாவிற்கு வந்தவர்கள், உட்கார்ந்து அழுதவர்கள் முகம் சுளித்து எழுந்து போனார்கள் அக்கம் பக்கம் வீடுகளுக்கு. கடைசிவரைக்கும் இந்த ஓட்டுவீடு ஒண்ணுதான் அதுவும் ஆயிரம் ஓட்டை. என்னதான் வாழ்ந்தானோ செத்துப்போன மனுஷன் என்று அம்மாவின் காதுபடவே பேசிநின்றார்கள். துக்கத்திற்கு வந்துவிட்டு உடனே கிளம்பியவர்கள் கொஞ்ச நேரம் இருக்கலாம்னுதாம்பா பாத்தோம்... எங்க உக்கார்றது. எல்லா இடத்துலேயும் தொரதொரன்னு ஊத்துது... ரொம்ப மழையில நனைஞ்சா ஒத்துக்காது... இழுப்பு வந்துடும் நா கிளம்பறேன். அந்தக் காலத்துலேர்ந்து இந்தக்காலம் வரைக்கும் யோகாம்பாள் இப்படித்தான்... என்று பேசி நொடித்துவிட்டுப்போனார்கள். எல்லாம் கேட்டுக்கொண்டாள் அம்மா. அம்மா மட்டுமே மழையிலும் கண்ணீரிலும் நனைந்திருந்தாள் ஈரம் சொட்டச்சொட்ட.

    இன்றும் அப்படித்தான் இருக்கிறது வீடு.

    நாலைந்து தெருக்கள் தள்ளி பத்தாயிரம் சதுர அடியில் பங்களாவும் தோட்டமுமாக ஒரு வீட்டை உருவாக்கியிருக்கிறான் ராகவன். அந்த வீட்டில் அம்மாவை வரச்சொல்லிப் பேசியபோதுதான் அம்மா அப்படியொரு கேள்வியை கொள்ளிக்குச்சிபோல வீசியெறிந்தாள்.

    என்ன சொல்றே நீ? என்றாள்.

    இல்லம்மா... எவ்வளவோ நீயும் அப்பாவும் கஷ்டப்பட்டு எங்களை ஆளாக்கி நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். உன்னையும் நாங்க நல்லா வச்சுக்க மனசு கெடந்து தவிக்குது. ஒரு மூணு மாசம் என் வீட்டுல இரு. நான் நம்ப வீட்டை இடிச்சிட்டு அற்புதமான ஒரு மாடிவீட்டைக் கட்டிக்கொடுத்துடறேன். ராணி மாதிரி நீ இரும்மா. கோடைக்காலத்திலும் மழைக்காலத்திலும் அந்த வீட்டுலே நீ இருக்கறது பயமா இருக்கும்மா... இன்னும் கொஞ்ச காலத்துக்கு நீ இருக்கணும்மா...

    ராணி மாதிரி... நானு... உங்கப்பா ராஜா இல்லாத ராணி மாதிரி... எந்த தேசத்த ஆளப்போறேன்...? மறுதலித்துப் பேசினாள்.

    ராகவன் பிடிவாதம் காட்டினான்.

    அந்த பிடிவாத்தின் இறுதியில்தான் வேறு வழியின்றி அப்படியொரு கேள்வியைக் கேட்டாள் யோகாம்பாள்.

    நினைவு கலைந்தான் ராகவன். வாசலில் யாரோ கூப்பிட்டார்கள். எட்டிப்பார்த்தான். அவன் பள்ளி, கல்லூரி நண்பன் தேவா நின்றிருந்தான்.

    யேய் தேவா... வா...வா... என்று மகிழ்ச்சியோடு கூப்பிட்டுப்போனான் வீட்டிற்குள்.

    எவ்வளவு நாளாச்சு?

    ஆமாம் அம்மா எப்படியிருக்காங்க? என்று தேவா கேட்டதும் முகம் சுருங்கிப்போனான் ராகவன். தேவா... அவன் முகக்குறிப்பை உணர்ந்து கேட்டான்... என்னாச்சு?

    அவனிடத்தில் தன் ஆதங்கத்தையும் ஆசையையும் கொட்டித் தீர்த்தான்... ராகவன்.

    நான் அம்மாகிட்டப் பேசறேன்... அம்மாவைப் போய் பார்த்துப் பேசிவிட்டுச் சம்மதம் வாங்கிட்டுவரேன்... இரு... என்றபடி தேவா கிளம்பி யோகாம்பாளைப் பார்க்கப்போனான்.

    தேவாவும் ராகவனும் பள்ளியிலிருந்தே உடன் படித்த நண்பர்கள். இருவரின் குடும்பத்திற்குள் புகுந்து பழகிய நட்பது. இருவரின் குடும்பத்திலும் எது நடந்தாலும் எல்லாமும் தெரியும். தேவாவும் வறுமையின் உச்சத்தில் இருந்தவன். புகுமுக வகுப்பில் கல்லூரியில் சேர்ந்த காலத்திலிருந்து காலை டிபன் தேவா வீட்டில் கிடையாது. பிள்ளைகள் நிறைய பெருகியதோடு வறுமையும் பெருகிவளர்ந்த குடும்பம். ஆகவே ராகவன் டிபன்பாக்சில் தேவாவிற்கும் சாப்பாடு இருக்கும்...மதியச் சாப்பாடும் இருக்கும்... மூன்று வருடங்கள் கல்லூரிப் படிப்பு வரை... இது தொடர்ந்தது... பெரும்பாலும் தேவாவிற்குச் சாப்பாட்டில் என்ன பிடிக்கம் என்று கேட்டு உணர்நது அதையே பெரும்பாலும் செய்து தருவாள். தேவா நெகிழ்ந்துபோவான்... என்னம்மா இது? யோகாம்பாள் சொல்வாள்... என்னப்பா தேவா... நீயும் எம் புள்ளதான்... சாப்பிடு... அவ்வளவுதான். பேச்சுக் குறைவு செயல் அதிகம் யோகாம்பாளிடம். எல்லலாவற்றிலும் அவளே முன்னுதாரணமாக இருப்பாள்.

    அந்த நன்றியுணர்ச்சிதான் இன்றைக்குப் பேசத் தூண்டுகிறது.

    தேவாவைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து கத்தினாள் மகிழ்ச்சியில்... வாப்பா...வாப்பா... எத்தனை நாளாச்சுய்யா உன்னப் பாத்து... எப்படி இருக்கே? ஒம் பொண்டாட்டி எப்படியிருக்கா? புள்ளங்க எப்படி இருக்காங்க... ஏதும் சாப்பிட்டியா... என்ன வேணும் சொல்லு செஞ்சு தரேன்... இருந்து சாப்பிட்டுட்டுப்போ... படபடவென்று பாசச் சொற்களை அவன் மேல் கொட்டிக் கவிழ்த்தாள். தேவா திக்குமுக்காடினான்.

    எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா. நீங்க எப்படி இருக்கீங்க?

    எனக்கென்னப்பா... உன்னோட பிரெண்ட் என்ன நல்லா வச்சிருக்கான்... கேட்டது உடனே கிடைச்சுடுது... வேறென்ன வேண்டும்?

    நீங்க மகிழ்ச்சியா இருக்கீங்களாம்மா?

    என்னப்பா இது கேள்வி? ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். நான் வாழ்ந்து முடிச்சவப்பா... ஒரு தேவையும் இல்ல... எந்த எதிர்பார்ப்பும் இல்ல. ஒரு குறையும் இல்ல... எல்லா வேணும்னு கேட்டு என்ன பண்ணப்போறேன்?

    ராகவனுக்குக் கொஞ்சம் மனச்சங்கடமா இருக்காம்மா...

    அவனுக்கு என்னப்பா சங்கடம்? நா எந்தத் தொல்லையும் அவனுக்குக் கொடுக்கறதில்லையே...

    இல்லைம்மா... நான் அப்படி சொல்லலே... அவனோட நீங்க கூட இல்லைன்னு ரொம்பக் கசியுறான்... எப்படியெல்லாம் என்னை வளத்துச்சு... தனியாக் காட்டுல விட்ட மாதிரி இருக்குங்கறான்...

    காடுன்னே வச்சுக்க... அந்தந்த ஜீவராசிக்கு அது பொறந்த காடுதானே சொர்க்கம் என்று வியாக்யானம் பேச ஆரம்பித்துவிட்டாள். படிக்காதவள்தான். ஆனால் அவளைப் பேச்சில் வெல்லமுடியாது. அப்பழுக்கற்ற கிராமத்தின் சொல்லாற்றல் அவளின் ரத்தத்திலேயே ஊறிக்கிடக்கிறது... எத்தனையோ தருணங்களில் அதை தேவா கண்டு வியந்திருக்கிறான்.

    மெல்ல ஆரம்பித்துக் கேட்டான். ஏம்மா... கொஞ்சநாள் அவனோட போய் இருங்களேன்... அவன் மனத் திருப்திக்காவது என்று...

    யோகாம்பாள் ஒருகணம் அவன் முகத்தைப் பார்த்தாள்.

    பின் ஆரம்பித்தாள்.

    உனக்குத் தெரியாத விஷயம் இல்ல... இந்த வீட்டைப் பாரு... ஓட்டு வீடுதான்... சாமி ரூம் தவிர வேறு ரூம் கெடயாது. இதுலதான்

    Enjoying the preview?
    Page 1 of 1