Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilakkiya Nizhal
Ilakkiya Nizhal
Ilakkiya Nizhal
Ebook180 pages1 hour

Ilakkiya Nizhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இலக்கியம் என்பது ஒரு குறிக்கோளை எடுத்து இயம்புவது என்பது யாவரும் அறிந்ததே. ஓர் உயர் இலக்கை நோக்கிப் பயணப்படுத்துவதே இலக்கியத்தின் பணி. அறிவுத் தாகம் எடுத்துத் தொடர்ந்து தேடுபவர்களுக்கு இலக்கியம் நிழல்போல இளைப்பாற்றுகிறது. இலக்கணம் இதை நெறியாளுகை செய்கிறது. ஒவ்வொரு முறை வாசிக்கையிலும் ஒவ்வொரு பரிமாணத்தை இலக்கியம் வழங்கிக்கொண்டே இருக்கிறது. மனித வாழ்வின் செம்மையான வாழ்வியலுக்குகந்த கருத்துகளை உள்ளடக்கியப் பான்மையைப் பல்வேறு இலக்கியங்கள் வழி இந்நூல் எடுத்து இயம்புகிறது. எல்லாமும் பின்பற்றத்தக்க எளிமையைக் கொண்டமைந்தவை. மனித வாழ்வின் ஒழுங்கு என்பதில் இலக்கியத்திற்கும் கணிசமான பங்கிருக்கிறது. நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வியலின் நெறிகளைக் காட்சிப்படுத்துவதுதான் அவர்கள் படைத்தளித்துவிட்டுப் போயிருக்கிற இலக்கியங்கள் உணர்த்தும் செய்தி.

Languageதமிழ்
Release dateJan 20, 2024
ISBN6580167910633
Ilakkiya Nizhal

Read more from Harani

Related to Ilakkiya Nizhal

Related ebooks

Reviews for Ilakkiya Nizhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilakkiya Nizhal - Harani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இலக்கிய நிழல்

    Ilakkiya Nizhal

    Author:

    ஹரணி

    Harani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/harani

    பொருளடக்கம்

    பிறர் மனை நயவாமை... நாலடியாரின் நினைவூட்டல்

    சினம் தவிர்க்கும் அறம்

    பொருளுணர்த்துதலில் பொருநராற்றுப்படை

    திருக்குறளில் இனிது...

    புறப்பொருள் வெண்பாமாலையில் புறத்திணை

    நம்பியகப்பொருள் – வரைவியல் வகைகள்/விரிகள்

    திருமந்திரம் உரைக்கும் நான்கு வகை மார்க்கங்கள்

    பதினெண்கீழ்க்கணக்கின் வாழ்வியல் கொள்கைகள்

    வள்ளுவ வினை – வினை வள்ளுவம்

    ஏலாதி எடுத்துரைக்கும் மாண்புடை விழுமியங்கள்

    அள்ளூர் நன்முல்லையாரின் மொழிநடை

    குறுந்தொகை விழுமியங்கள்

    கலித்தொகையில் தற்கூற்றும் உள்ளுணர்வும்

    குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கம் சுட்டும் கல்வி அறம்

    புறநானூற்றில் வண்ணம்

    நாலடியார் உணர்த்தும் வாழ்வியல் தேவைகள்.

    இளங்கோவடிகள் அறிவுறுத்தும் மனவளம்

    இலக்கிய நிழல்... குறித்து

    பிறர் மனை நயவாமை... நாலடியாரின் நினைவூட்டல்

    அறநூல்களில் நாலடியாருக்குத் தனித்த இடமுண்டு. திருக்குறளுக்கு இணையான மதிப்பை நாலடியாருக்கும் தருவதில் பெருமை கொள்ளலாம். மனிதச் சமூகம் தோன்றியக் காலந்தொட்டு இந்த பிறர்மனை விரும்புதல் தோன்றித் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது. தன் கட்டுப்பாட்டை இழந்த, அறிவுநிலை பிறழ்ந்த தன்மையால் இது நேர்கிறது. பகுத்தறிவு என்பதற்கான அடையாளத்தை இழக்கிற தருணமிது. மிருகத்தின் செயல்பாட்டைத் தன் குருதிக்குள் செலுத்திச் செயற்படும் மனித மனக் கேட்டின் கட்டுப்பாடற்ற குணமிது. பெண் என்றாலே அவள் புணர்தலுக்குரிய ஒரு பொருள் என்கிற மனத்திமிரின் கருத்தமைவுக் கூட்டத்தின் விளைவு இது. மனிதன் என்றாலே ஒழுக்கம், நேர்மை, பழிபாவங்களுக்கு அஞ்சல் போன்ற பல்வகைக் குணங்களை இலக்கியம் தோன்றியகாலத்து மனித மனங்களில் விதைத்து வருவது இலக்கியச் செயற்பாடு. பிறழ்வு மனங்களுக்கிடையே இது நல் விளைவுகளை ஏற்படுத்தவேண்டுமென்று விரும்பி அற உள்ளங்களின் எண்ணப் பதிவுகளே இவ்விலக்கியங்கள்.

    மனித வாழ்வியல் – இல்லறவியல்

    கட்டுப்பாடற்ற சமுகத்திலிருந்து கட்டுக்குள்ளடங்கிய குடும்ப அமைப்பை தொடர் மாற்றங்களால் மனித சமுகம் உருவாக்கிக்கொண்டது. இதன் பின்ணியாக மனைவி, கணவன், அம்மா, அப்பா, பிள்ளைகள், உறவுகள் என்கிற கூறுகள் அடையாளப்படுத்தப்பட்டன. இவை மரபின் தொடர்ச்சியில பண்பாட்டின் அடித்தளத்தில் இறுகி வளர்ந்தன. கால மாற்றத்தில் நிகழ்ந்த பல்வேறு தூண்டல்களால் சமுகக் கேடுகள் எனும் கூறுகளும் மனித சமுகத்தில் எதிரிடையாக வளர்ந்து வரத்தொடங்கின. இவற்றின் உச்சமாகவே இந்த காமத்தைக் கைகொள்ளலில் வரம்புமீறிய தன்மைகள் வெளிப்பட ஆரம்பித்தன. இதனால் பல சிதைவுகளைச் சமுகம் என்கிற அமைப்பு உள்வாங்கிச் சிதைந்தது. சில மீண்டு தன்னை புணரமைத்துக்கொண்டது. இத்தகைய மீட்டுருவாக்கத்தில் ஈடுபட்ட பலவற்றுள் ஒன்றே இலக்கியங்கள். இவற்றின் பாடுபொருள்கள் இத்தகைய பிறழ்வுகளைக் குறித்தனவற்றை எடுத்துக்கூறி அவற்றின் விளைவுகளையும் கூறி எச்சரித்தன. இத்தகைய எச்சரித்தல்கள் இலக்கியப் படைப்புகள்தோறும் நிரம்பி வழிந்தன. என்றாலும் காலந்தோறும் இவற்றைப் புதுப்பித்தலில் இந்தப் பிறழ்வுகள் சற்றே மாறியதையும் உணரலாம்.

    பண்பாட்டு அடிப்படை என்பதையும் தாண்டி அறிவியல் அடிப்படையில் இவை ஏற்படுத்தும் விளைவுகளை அதனால் ஏற்படும் இழப்புகளை உணர்த்தும் நிலையில் பல்வேறு செயற்பாடுகளைச் சமுகமும் காட்சிப்படுத்தியபின்னர் இதுகுறித்த ஓர் அச்சம் மானுட சமுகத்தில் துளிர்விட ஆரம்பித்தது. இந்த அச்சத்தை இறுகப்பிடித்துக்கொண்ட சமுகம் வளரத்தொடங்கியது. அச்சத்திற்கு அஞ்சாதவர்கள் கண்கெட்டபிறகு சூரியக் காட்சி என்கிற நிலையில் உணர்ந்து அழிந்தார்கள். இருப்பினும் இன்றைக்கும் இத்தகைய பிறழ்வுகள் பல்கிப்பெருகி வருவதற்கான காரணத்தை ஆராயும்போக்கில் அறிவியலின் வளர்ச்சியும் பெருங்காரணமாக நிற்பதை உணரமுடிந்தது. என்றாலும் எல்லாவற்றுக்கும் அடிப்படை மனமே என்கிற நிலையில் மனத்தைப் பண்படுத்துவதற்குரிய மாற்றுகளில் இலக்கியத்தின் பங்கு அதிக விழுக்காடு வகிப்பதை என்கிற உண்மையையும் உணர்த்துவதற்கு சில நினைவூட்டல்களை நாலடியார் துணைகொண்டு எடுத்துரைக்கக் காணலாம்.

    நாலடியாரும் பிறர் மனை நயவாமையும்

    பத்துப்பாடல்களில் பிறர்மனை நயவாமை குறித்து நாலடியார் எடுத்துப் பேசுகிறது. முதல் பாடல்

    அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்

    நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் – நிச்சலும்

    கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்

    நம்பற்க நாணுடையார்.

    பிறர்மனைவிரும்புதல் என்பது அச்சத்தை உண்டாக்குவது. அது எளிதானது அல்ல. மறைமுகமான செயற்பாடுடையது. ஆகவே கிடைக்கும் சிறு இன்பத்தினும் அதனைச் செயற்படுத்தவெண்ணும் எண்ணம் பேரளவு அச்சத்தையுடையது. மேலும் அது கொலைத் தண்டனைக்குரியது. மறுபிறவிலும் அது தொடர்ந்து தண்டனைக்குரியது. பழி, பாவங்களுக்கு அஞ்சுகின்றவர்கள் இதனைச் செய்யமாட்டார்கள். அதனால்தான் பிறன்தாரம் நம்பற்க நாணுடையார் என்கிறது. ஒரு மனிதனுக்கு இருக்கவேண்டிய குணங்களுள் அச்சமும் ஒன்று. அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சவேண்டியதும் வாழ்வின் செயற்பாடு. இதை உளவியல் எடுத்துரைக்கிறது. மனப் பிறழ்வு நடத்தையே எல்லாவற்றுக்கும் காரணம் என்கிறது உளவியல். இதை நெறிப்பிறழ் நடத்தை என்பர் உளவியலார். இது சமுதாயத்திற்கு விரோதமான நடத்தை. இதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள் உளவியலார். உளவியல், சமுகம், உடலியல் காரணிகள் இதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

    முரண்பட்ட மனவெழுச்சிகளால் ஏற்படும் மனப்போராட்டங்களின் தீவிர விளைவுகள் மற்றும் திருத்தப்படாத பிரச்சினையுள்ள நடத்தைகளில் காலப்போக்கிற் ஏற்படும் மாறுதல்கள் இதற்குக் காரணம். மன வளர்ச்சி குன்றிப்போதல், புத்திக்கூர்மை குறைவாக இருத்தல், மனநோய் போன்றவையும் நெறிபிறழ் நடத்தைக் காரணமாகின்றன. நல்ல வழிகாட்டல் தேவை இங்கு அவசியமாகிறது. அதன் இல்லாமை இத்தகையனவற்றைச் செய்வதற்குத் தூண்டுகோலாக அமைகிறது.

    நல்ல மனநலம் மிக்கவொருவன் இதுபோன்றவற்றுக்கு அச்சப்படுகிறான். அவனுக்கு சமுகக் கருத்தும் சமுகத் தண்டனையும் அச்சத்தைப் புதுப்பிக்கின்றன. ஆகவே பிறர்மனை நயவுதல் உடன்பாடற்றுப்போகிறது. இவற்றை உண்டாக்கவேண்டும் என்பதுதான் மேற்சுட்டிய பாடலும் மற்ற பாடல்களும் எடுத்துரைப்பது.

    இரண்டாவது பாடல் ஒருவனுக்கு இத்தகைய நடத்தையால் சேரும் நான்கு பண்புகளும் சேராத நான்கு பண்புகளும் எவையென எளிமைப்படுத்திக் கூறுகிறது.

    அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும்

    பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா – பிறன்தாரம்

    நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென்று

    அச்சத்தோடு இந்நாற் பொருள்.

    பிறன்தாரம் நச்சுவார்ச் சேராப் பண்புகள்

    அறம், புகழ், கேண்மை, பெருமை

    பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும் பண்புகள்

    பகை, பழி, பாவம், அச்சம்

    தனி மனித ஆளுமையைச் செழுமைப்படுத்துவது அறம், புகழ், நட்பு, பெருமை யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது சங்கிலிபோல. இவற்றுக்கு எதிரிடையானது அறம் பிழைப்பின் பழி, பழியால் பாவம், பாவத்தால் பகை, பகையால் அச்சம், அச்சத்தால் சிதைவு. இது மாறாத சூத்திரம். பழி பாவங்களுக்கு அஞ்சுகிற அச்சமிருப்பின் சேராப் பண்பின் அச்சம் சேராதொழியும். இந்த அச்சத்தின் பல்வேறு பண்புகளைப் பின்வரும் மூன்றாவது பாடல் தெளிவுறுத்துகிறது.

    பிறர் மனை நயவுதலால்

    புகும் இடத்தில் அச்சம் ஏற்படுகிறது.

    திரும்பி வரும்போது அச்சம் ஏற்படுகிறது.

    அனுபவிக்கும்போது அச்சம் ஏற்படுகிறது

    யாருமறியாமல் அவற்றைக் காக்கவேண்டிய சூழலில்

    அச்சம் ஏற்படுகிறது

    இப்படி எத்தனை அச்சங்களோடு பிறர்மனை நயவுதலில் வாழ்வது. ஆகவே இதனை விரும்புதல் எத்தன்மையது?

    மேலும் இத்தகைய செயலால் ஏற்படும் பழி, விரும்புகிற பெண்ணின் கணவனால் ஏற்படும் துன்பம், ஆண்மையற்ற ஒழுக்கம் இவற்றைப் பெறுகையில் நீ அனுபவித்த இன்பத்தின் அளவு எந்த அளவையுடையது என நான்காம் பாடலில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. தலைமையேற்றிருக்கும் அல்லது உரிமை கொண்டிருக்கும் மனைவி, பிள்ளைகள், உறவுகள் உள்ளிட்ட குடும்பம் ஏற்கும் பழி, ஆண்மையற்ற ஒழுக்கத்தால் ஏற்படும் உடல் மீது அனுபவிக்கும் துன்பங்களை எண்ணுகையில் அனுபவிக்கும் இன்பம் துன்பமேயன்றி இன்பமல்ல என்கிறது. இன்பத்தின் அளவை எப்படி மதிப்பிடமுடியும்? அல்லது துன்பத்தின் அளவை எப்படி மதிப்பிடமுடியும்? இங்கே அளவு என்பது புறம் சார்ந்தது அல்ல அது மனம் சார்ந்தது என்பதையும் குறிப்பால் உணரவேண்டும்.

    முறையான வாழ்வில் அமைந்த மனைவியைக் காட்டிலும் இன்னொருவன் மனைவியைக் கருதுவதற்கான காரணம் என்ன வலுவானது? அப்படி நிலைக்காத அவ்வின்பம் தருவது யாது? இத்தகைய செயல் பாம்பின் தலையை நக்கினாற்போன்ற அபாயம் உடையது. கொடுமையுடையது. இயற்கையான வெப்பம் உடலையே வருத்தும். ஆனால் காமமோ மனத்தை வருத்தும் தன்மையுடையது. ஆகவே அஞ்சவேண்டும். மேலும் நெருப்புக்குத் தப்பி நீரினுள் விழுந்து தப்பிக்கவியலும். ஆனால் காமநெருப்பில் விழுந்து தப்பித்தல் என்றுவியலாது என்பதான கருத்துகளைத் தொடர்ந்து வரும் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

    பிறர்மனை விரும்புகிறவன் இப்பிறப்பிலேயே பேடியாவார் என்பதை,

    இம்மை/அலியாகி ஆடியுண் பார்

    பாம்பின்/தலைநக்கி யன்னது உடைத்து

    காமம்/அவற்றினும் அஞ்சப்படும்

    குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி

    ஒளிப்பினும் காமம் சுடும்

    போன்ற அடிகள் மேற்சுட்டிய கருத்தினை வலியுறுத்துவன.

    இந்தப் பத்துப் பாடல்களிலும் பிறர் மனை நயவாமையின் விளைவுகளைச் சுருங்கவுரைப்பது ஒன்று பழி, இன்னொன்று அச்சம். தன் குடும்பம், உறவினர்கள், சமுகப் பழிக்கஞ்சுவது பண்பு. இங்கே பழி என்பது மனத்தின் பழி. அச்சம் என்பது உணர்வின் அச்சம். இவையிரண்டும் ஒருங்கியைந்து செயல்படின் காமம் எனும் கொடுமையிலிருந்து தப்பிக்கலாம்.

    இதெல்லாம் சாத்தியமா? இப்படி நடக்குமா? நடந்தால் என்ன பார்க்கலாம் என்கிற மனோபாவம் எழலாம். ஆனால் இவை நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன என்பதற்குப் பல சான்றுகளைக் காட்டவேண்டியதில்லை உள்ளங்கை நெல்லிக்கனிபோல அவை நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை அறியலாம். எதற்கும் அஞ்சாது நடக்கலாம். ஆனால் மனத்திற்கு அச்சப்படவேண்டும். மன அச்சம் இருந்தால் உடல் எதற்கும் கட்டுப்படும் காமம் உட்பட.

    பாம்பின் தலை நக்கும் காமம்

    இன்றைக்குக் குறைந்த பட்சம் எந்த செய்தித்தாளை எடுத்தாலும் பாலியல்

    Enjoying the preview?
    Page 1 of 1