Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Noyyalin Ninaivugal
Noyyalin Ninaivugal
Noyyalin Ninaivugal
Ebook170 pages33 minutes

Noyyalin Ninaivugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நொய்யல் நதிக் கரையில் வாழ்கின்ற கவிஞர் ஆதித் சக்திவேல் அந்நதியின் அருமை பெருமைகலை 60-களில் தன் இளம் வயதில் கண்ணெதிரே கண்டவர். அந்நதி இன்று தொழிற்சாலைக் கழிவுகளால், சாயத் தொழ்லகங்களின் நச்சுங்க் கழிவுகளால் கோவை மாநகரின் சாக்கடை நீருக்கு அடைக்கலம் தந்து மாசு பட்டு பாழ் பட்டு கழிவு நீராய் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த அவலங்களையெல்லாம் நொய்யலின் நினைவுகள் எனும் கவிதையில் அவர் மனம் நொந்து கண்ணீர் வடித்திருக்கிறார். அக்கவிதையின் தலைப்பையே இக்கவிதைத் தொகுப்பிற்குத் தலைப்பாகச் சூட்டியுள்ளார்.

விளிம்புநிலை மக்களின் மனக் குமுறல்களையும் தீண்டாமைக் கொடுமையை எதிர்க்கும் மன உணர்வுகளையும் 'கடவுளின் குழந்தைகள்', 'எத்தனை பிணங்களைப் புதைப்பது?', 'கடவுளின் தேசத்திற்கு நன்றி' ஆகிய கவிதைகளில் கொட்டித் தீர்த்திருக்கிறார். அவர் மனதில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு கவிதையின் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படுகின்றது. ஆணவக் கொலைகளை ‘இன்று சங்கர்...’ எனும் கவிதையில் காட்டமாகச் சாடுகிறார்.

மியான்மெரில் ரொஹிங்கிய முஸ்லீம்கள் இன அழிப்புக்கு உட்படும் கொடுமைகளை 'உனக்குத் தெரியாதா சூச்சி', 'ஆங்- சான் சூச்சி - ஒரு சுயநலக்காரி', 'இக்கவிதைக்கு ரத்த முகம்', 'யார் சபித்தார் இவர்களை?' ஆகிய கவிதைகளில் காட்சிப் படுத்தியிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateOct 28, 2023
ISBN6580169810193
Noyyalin Ninaivugal

Read more from Adith Sakthivel

Related to Noyyalin Ninaivugal

Related ebooks

Reviews for Noyyalin Ninaivugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Noyyalin Ninaivugal - Adith Sakthivel

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நொய்யலின் நினைவுகள்

    Noyyalin Ninaivugal

    Author:

    ஆதித் சக்திவேல்

    Adith Sakthivel

    For more books

    https://www.pustaka.co.in/home/author/adith-sakthivel

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    அணிந்துரை

    அணிந்துரை

    என்னுரை

    1. தணல் மங்கை

    2. ஓவியச் சுரங்கங்கள்

    3. பனிக்கடலில் ஓர் எரிமலை

    4. என் ஏவாள்

    5. எத்தனை பிணங்களைப் புதைப்பது?

    6. ஆஷிஃபா

    7. கடவுளின் குழந்தைகளாம்

    8. சூழல்... அது அழுதால் நாமும் அழுவோம்

    9. கடவுளின் தேசத்திற்கு நன்றி

    10. இருளின் நிழல்கள்

    11. நினைவுகளின் பரவல்

    12. எரியும் நினைவுகள்

    13. காடெல்லாம் கருப்புப் பூக்கள்

    14. அது போதும் எனக்கு

    15. உனக்குத் தெரியாதா சூச்சி?

    16. ஆங் சான் சூச்சி - ஒரு சுயநலக்காரி

    17. இக்கவிதைக்கு ரத்த முகம்

    18. யார் சபித்தார் இவர்களை

    19. அய்லனுக்கு ஒரு அஞ்சலிக் கவிதை

    20. இன்று சங்கர்...

    21. மருதன் அடித்த கடைசிப் பறை

    22. நொய்யலின் நினைவுகள்

    23. மகிழ்ந்து பார்

    24. கனவுகள்

    25. வெறும் தேர்வு முடிவுகள் தான்

    26. காற்றின் மொழி

    27. ஒரு மழைப் பொழுது

    28. இளவேனில்... இனி வரும்

    29. உதிரும் இலையின் நம்பிக்கை

    30. அல்ஸிமீரே அணைத்துவிடாதே

    31. அவளது நினைவு

    32. புரியாத ஈசல்கள்

    அணிந்துரை

    பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள்,

    மேனாள் துணை வேந்தர்,

    தமிழ் பல்கலைக் கழகம்.

    கவிதை புனைவதற்குக் கலைபயில் தெளிவும் கற்பனைத் திறனும் இன்றியமையாதவை ஆகும். மாந்தர் தம் உணர்வுகளைத் தம்முள்வாங்கி அவற்றைச் சீர்மிகு சொற்களால் வெளிப்படுத்தும் ஆற்றல் ஒரு சிலருக்கே கை வரப்பெறும். எங்கேயோ நடக்கும் சமூக அவலங்களையும், வன்முறைக் கொடுமைகளையும் உணர்ந்த கவிஞர்கள் அக்கொடுஞ்செயல்கள் தமக்கு நேர்ந்ததாகவே கருதி, உணர்ச்சியின் எல்லைக்குச் சென்று துன்புறுகின்றனர். அத்துன்பத்தை வெளிப்படுத்தும் சொற்களில் கவிதையின் சிறப்பும் பெருமையும் புலனாகும்.

    நொய்யலின் நினைவுகள்என்னும் இக்கவிதை நூலை இயற்றியவர் பேராசிரியர் முனைவர் வடிவேலு அவர்கள் (தற்போது ஆதித் சக்திவேல் என எழுதுவதற்கெனத் தன் பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்). பல்லாண்டுகள் கல்வியாளராகத் திகழ்ந்தவர். பல நாடுகளுக்குச் சென்று மாணவர்களுக்குக் கல்வி புகட்டியவர். அறிவியல் துறையில் பேராசிரியராக விளங்கும் அவரின் உள்ளத்தே கவிதை பொங்கி வருவதைப் பார்த்து வியந்தேன். அவரைக் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். கல்லூரியில் படிக்கும் காலம் தொட்டும், அதற்கு முன்னரும், பிறகு ஆசிரியராகவும் அவரை அறிவேன். இயல்பாகவே அதிர்ந்து பேசாத இயல்பும் அமைதியும் உடையவர்.

    திரு. வடிவேலு (ஆதித் சக்திவேல்) அவர்களுடைய கவிதை நூலைப் படித்ததும் என்னுள் அவரைப் பற்றிய பழைய நினைவுகள் எழுந்தன. அமைதியாகத் தோற்றமளிக்கும் இவருள் இத்தகைய உணர்ச்சி வெள்ளம் பாய்ந்தோடும் கவிதைகளைக் கண்டும், அவருடைய கவிதை ஆற்றலைக் கண்டும், அவர் நல்ல இலக்கிய உள்ளம் படைத்தவர் என்பதைக் கண்டும் மகிழ்ந்தேன்.

    அறிவியல் பார்வையோடு தமிழியல் அணுகுமுறையும் சேர்ந்து அவருடைய கவிதைக்குப் புதிய பொலிவினைக் கூட்டுகிறது. காதலுணர்விலும், சமூக அவலங்களிலும், தீண்டாமையை எதிர்க்கும் மன உணர்விலும், விளிம்பு நிலை மக்களின் மனக் குமுறல்களையும் அவர் கவிதையில் வடிக்கும் போது அவருடைய உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு சொற்களாக வெளிப்படுகின்றன.

    கவிதை நூலின் முதல் கவிதையே காதல் கவிதைதான். ஆனால் அது நெருப்புக் கவிதையாக மலர்கிறது. காதல் உணர்வு கொண்ட மங்கைக்கு ‘தணல் மங்கை’ எனப் பெயரிடுகிறார்.

    ‘பனிப் பாறையின்

    அடி ஆழத்திலிருந்து மேலெழும்பி

    நெருப்புச் சுடர்களை உதிர்த்தபடி

    நடனமிடும் பெருந்தீயாய்

    சுற்றிப் படர்ந்த தணலாடையில்

    உருகாது உள்ளிருக்கும் பனிக்கட்டி நீ’

    காதல் உணர்வைக் கொண்டுவரும் மங்கையை எத்தகைய சொற்கள் கொண்டு வருணிக்கிறார் என்று பாருங்கள். நெருப்புச் சுடர்கள், பெருந்தீ, தணலாடை என்று நெருப்பின் தன்மையைக் கூறிவிட்டு அவள் அதனுள் உருகாத பனிக்கட்டியாக விளங்குகிறாள் என்னும் போது அவருடைய கவிப்பண்பு புது ஒளியோடு புறப்படுகிறது.

    வெய்யில் துண்டங்களின் பிரதிபலிப்பால் அவளுடைய செந்நிறச் சுடர்மேனி தீ சொட்டச் சொட்ட உள்ளதாம். நீரினைத்தான் சொட்டச் சொட்ட என்னும் சொல்லில் குறிப்பிடுவோம். ஆனால் கவிஞர் தீயினுக்குச் சொட்டச் சொட்ட என்னும் புதுமைப் பொருளை இணைத்துக் காட்டுகின்றார். திருவள்ளுவர் தலைவியின் பண்பைக் காணும்போது அவருக்கும் இத்தகைய உணர்வு ஏற்பட்டிருக்கும் போலும். அவர் படைத்த தலைவன் இவ்வாறு கூறுகிறான்:

    ‘தீ நெருங்கியவர்களைத்தான் சுடும். ஆனால் எனக்கு ஒரு புதிய அனுபவம். அவளைவிட்டு நீங்கினால் காமத்தீ சுடுகிறது. நெருங்கினால் தண்ணென்று குளிர்ச்சியாக இருக்கிறது. இத்தகைய புதுமைத் தீயை என் தலைவி எங்கிருந்து பெற்றாள்?’ இப்படி வள்ளுவன் தான் படைத்த தலைவன் மூலம் புதிய நெருப்பைப் படைத்துக் காட்டுகிறார்.

    நீங்கின் தெறூஉம் குறுகுங்காற் தண்ணென்றும்

    தீயாண்டு பெற்றாள் இவள்

    (குறள் எண்: 1104)

    என்பது வள்ளுவம்.

    ‘பொங்கி வழியும் உன் இசையின் வசீகரிப்பில்

    உடலெங்கும் விஷமேறிய பாம்புகளின் பரவசம்’

    என்று காதல் வெறியை எப்படிச் சுட்டுகின்றார் பாருங்கள். உன் உதடுகளில் எரிந்து கொண்டிருக்கும் முத்தம்என்று காதலியின் முத்தத்தையும் கூட எரியும் நெருப்பு என்கின்றார். கி. மு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க நாட்டுப் பெண் கவிஞர் ஈப்போ காதலை இப்படி வருணிப்பார்:

    ‘இனிமையான கசப்பான பேய்க்குட்டி - காதல்’

    இனிமையும் கசப்பும் நிறைந்த காதலை வருணிக்கும் பெண் கவிஞரின் கவிதை இங்கு நினைவுக்கு வரும்.

    ஓவியத்தில் காணும் பெண்ணை வருணிக்கும் போதும் ‘நின்றெரியும் நெருப்பின் சிவப்பு’ அவருடைய நினைவிற்கு வருகிறது. ‘சூரியனின் சிவப்பு பெண்ணுடல்’ ‘எரியும் அகல் விளக்கு’ ‘ஒளிப் பிழம்பு’ ‘சுழன்றடிக்கும் சூறாவளி’

    Enjoying the preview?
    Page 1 of 1