Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Naalum Ovvoru Naalum
Oru Naalum Ovvoru Naalum
Oru Naalum Ovvoru Naalum
Ebook84 pages18 minutes

Oru Naalum Ovvoru Naalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் எழுத்தின் எல்லா வடிவங்களையும் முயற்சிக்கிறவன். சிறுகதை, நாடகம், கட்டுரை, வானொலி உரைச்சித்திரம், நவீனம் என்றெல்லாம் எழுதி அவையெல்லாம் அறிந்தேற்கப்பட்டிருந்தாலும், நான் அதிகமாய் அறியப்பட்டிருப்பது கவிஞனாகத்தான்.
பிறவகைப் படைப்புகளைப் போலவே கவிதைகளும் எனக்குப் பல சிறப்புகளைத் தந்துள்ளதால், நான் அவ்வாறு அழைக்கப்படுவதில் பெருமையுறுகிறேன்.
யார் கவிதை எழுதுகிறார்கள் என்று என்னிடம் கேட்டால், எல்லோருமே எழுதுகிறார்கள் என்பேன். இனிமையாகப் பேசுகிற எல்லோருமே விரும்பப்படுகிறார்கள், விரும்பப்படுகிற யார் என்ன சொன்னாலும் அது கவிதைதான்.
ஒவ்வொரு மொழியிலும் கவிதை இருக்கிறது. ஆனால் தமிழே ஒரு கவிதையாகத் திகழ்கிறது என்பார்கள் தமிழறிஞர்களும், தமிழார்வலர்களும். எனவே, நல்ல தமிழில் யார் பேசினாலும் இன்னும் அதிகமாய் இனிமையாகப் பேசினாலும் ஒரு கவிதையைக் கேட்ட அனுபவமே நமக்குக் கிடைக்கும்.
கவிதையாய் இருப்பது சரி.... கவிதையில் என்ன இருக்கிறது என்றால் பட்டுக்கோட்டையாரே நமக்கு பதில் சொல்லி விடுகிறார்.
எத்தனையோ இன்பம் இந்த நாட்டிலுண்டு – ஆனால்
அத்தனைக்கு பேரின்பம் பாட்டில் உண்டு.
கவிதையில் இன்பம் மட்டும் இல்லை. கவிதையால் பயனும் இருக்கிறது. இயற்கை மட்டுமல்ல, காதலை மட்டுமல்ல, காணும் தீமைகளைப் பாடியும், சாடியும் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் கவிஞர்கள். நமக்கு உணர்த்தியும் உணர்வூட்டியும் இருக்கிறார்கள்.
இந்திய சுதந்திரத்தில் பாட்டின் பங்கும் மகத்தானது. விடுதலை வேட்கையை தமிழ்ப்பாட்டு வரிகளே பெருந்தீயாய் வளர்த்ததென்பதை யார் மறுக்கக் கூடும்.
"பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
பாலித்திடல் வேண்டும்"
என்ற பாரதி வேண்டும் என்று மட்டுமல்ல, பாட்டால் முடியும் என்பதால்தான் பாடியிருக்கக் கூடும்.
கவிதையில் இனி புதிதாகச் சொல்ல எந்தச் செய்தியும் இல்லை. எல்லாத் தலைப்பிலும் எல்லோரும் பாடி விட்டாலும், இன்னும் கூட இருக்கிறது என்றே எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். தமிழும் வரவேற்று மகிழக் காத்திருக்கிறது.
கவிதை என்பது எல்லோரும் சொல்கிற செய்தியை யாரும் சொல்லாதது போலச் சொல்வதாகும். கவிஞர்கள் இங்கே ஒரே செய்தியை ஒவ்வொரு விதமாகவும் சொல்லி வித்தகம் காட்டியிருக்கிறார்கள் என்றாலும், புதிய தேடலும் வேண்டும் என்பதும் இன்றியமையாததாகி இருக்கிறது.
புதிய சிந்தனை, புதிய யுத்தி என்றெல்லாம் பாடுவோர் பலர் புதுமைகளை விரும்புகிறார்கள். அவர்களுள் நானும் ஒருவன். வழங்கி வரும் செய்திகளை வேறு மாதிரி பார்த்திருப்பதோடு புதிதாகவும் சிலவற்றைச் சொல்லும் உணர்வுகளை எனக்குச் சில அனுபவங்கள் தந்தன. கண்டதும் கேட்டதும் என்னுள் கிளர்ந்ததும், கனன்றதுமாகி கவிதையாகியுள்ளன.
சில கவிதைகள் இதமாக இருக்கும். சில வெதுவெதுப்பாக இருக்கும். சில சூடாகவும் இருக்கும். மொத்தத்தில் மொத்தமாக எல்லா சுவைகளும் உணர்வுகளும் இந்த நூலில் உங்களுக்குக் கிடைக்கும்.
இந்நூலைப் படித்த பேராசிரியர் டாக்டர். ஆபத்து காத்த பிள்ளை அவர்களின் அணிந்துரையும், தம்பி கவிஞர் பழனிபாரதி அவர்களின் கருத்துரையும், மாதந்தோறும தொடர்ந்து கவிதை உறவு இதழிலும், எப்போதேனும் கல்கி, மங்கையர் மலர், அமுதசுரபி, கலைமகள், முல்லைச்சரம் போன்ற இதழ்களில் படித்த நண்பர்களின் பாராட்டும் எனக்கு தந்துள்ள நம்பிக்கையில் இக்கவிதைகளை நூலாகத் தொகுத்திருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் நான் வடித்த ஒவ்வொரு கவிதையும் ஒருநாள் மொத்தமாக இப்படி வெளியாவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அணிந்துரையால் நூலை அலங்கரித்தும், எனக்கு உந்துதல் தந்தும் சிறப்பித்திருக்கிற ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர், முனைவர் ஆபத்து காத்த பிள்ளை அவர்களுக்கும், நூல் உருவாக்கத்தில் உதவிய கவிஞர் தியாரூ அவர்களுக்கும், நூலை வடிவமைத்த நண்பர் கதிரவன் அவர்களுக்கும் நன்றி.
இனி... நூலும் நீங்களும். உங்களிடமிருந்து உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன்.
என்றும் அன்புடன்,
ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்.
Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580132005243
Oru Naalum Ovvoru Naalum

Read more from Kalaimamani Ervadi S. Radhakrishnan

Related to Oru Naalum Ovvoru Naalum

Related ebooks

Reviews for Oru Naalum Ovvoru Naalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Naalum Ovvoru Naalum - Kalaimamani Ervadi S. Radhakrishnan

    V#^book_preview_excerpt.htmlX_kG*ۧ$H4/A4Bۄ瓴HwɎ"%.(CDp'͓$";ssAfgo~3NR6s\/ua[u|~xxPvJYQoYoq?:NWڻA7j}%f$o`X 㕲tPOKk_ W*:[SHv{``i⧒x4 ZHQaF2Mߖe\.KNC}*?jɺ~Cs;H3l"A6\G<ًJQ6fT?h5e 9&-+ E CTn!DC8ށAЪLIn]6p7T|yʒ_]eD7j|Qb?pHz#ztk-ENN$ |&v~hBט=Wko3YT4򆀧!F.*")!@y_gLvz FZUk@kD>=`Ce֢%F|-Mw%CzF.%#[RJ3uYcPZh(alcg… dfƈ)sHM^a/A |#fhDj)*!f3i_c V cu]lVja(Oc ʓ/64-qZỸˏ%0X@.pnbFi3 &|[A()7U6*Ga9fݴq"lV^Y /Gg>_a 'ZhHEcrd:Rt>XcsfbBO}x7 u-9nPM/ӑ(3vkv Z*P+"ˢhCb1hbqeX%ӋXBkJS[J9s2^ԻRC"c*[~ 1'?>Gԭ_4wH-O."b*cFkүc3b d@][CӒ6]Wi3٭Z*c4eJl;dTb+8wbVg\٥Ts>,9v[C9l~[`RFb[%M_3WWi{ENzظIʹ _$\6dXܚn$P8)dC_ڵm4\ Dؑ޼Muvv Bړ|KHNCvn:;a3p ‡N/[-}]ՅkDkiH>[Nw+|e9FsMB((s&2uѸjp8q }A^8jNK
    Enjoying the preview?
    Page 1 of 1