Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engey En Mazhai Kaadugal?
Engey En Mazhai Kaadugal?
Engey En Mazhai Kaadugal?
Ebook198 pages42 minutes

Engey En Mazhai Kaadugal?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோவை மாநகருக்கு அருகில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வெள்ளலூர் ஆதித் சக்திவேல் அவர்களின் சொந்த ஊர்.வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர் அரசு கலைக் கல்லூரிகளில் 36 ஆண்டு காலம் பேராசிரியராகப் பணியாற்றியவர். முழு ஈடுபாட்டோடு 2015 முதல் கவிதைகள் புனைந்து வரும் இவர் முதலவதாக வெளியிட்ட கவிதைத் தொகுப்பு “நொய்யலின் நினைவுகள்” .சூழலியல்,விழிப்புணர்வு,உலக நிகழ்வுகள்,சமூக நீதி ,தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு முற்போக்குக் கவிதைகள் படைத்து வருகிறார்.

இது வரை “நொய்யலின் நினைவுகள்”,”தாழப் பறந்த விமானம்”,”கங்கையாய் மாறிய கிணறு”, “நொய்யலின் கண்ணீர்” ஆகிய நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். தற்போது “எங்கே என் மழைக் காடுகள்?”என்னும் கவிதைத் தொகுப்பைத் தன் அய்ந்தாவது தொகுப்பாக வெளியிடுகிறார்.

“எங்கே என் மழைக் காடுகள்?” ஒரு மாறுபட்ட கவிதைத் தொகுப்பாகும்.இத்தொகுதியில் அமைந்துள்ள கவிதைகள் வழக்கத்திற்கு மாறாகச் சற்று நீளமானவை.ஒவ்வொரு கவிதையுமே தன்னுள் ஒரு சிறு கதையைக் கருவாகக் கொண்டுள்ளது.

கேரளத்தின் தெய்யம் என்ற நடனத்தை மையமாகக் கொண்டு எழுதப் பட்ட, காடுகள் அழிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் சூழலியல் கவிதையான “எங்கே என் மழைக் காடுகள்?” என்னும் கவிதையில் தொடங்குகிறது இக்கவிதைத் தொகுப்பு .இக்கவிதையின் தலைப்பே கவிதைத் தொகுப்பின் தலைப்பாகவும் அமைந்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளின் பின்னணியில் பின்னப்பட்ட, விழிப்புணர்வை ஏற்படுத்திக் காதலின் போலித்தனத்தை, ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்தில் வளரும் குழந்தைகளின் ஏக்கத்தை, செங்கல் சூளைத் தொழிலாளிகளான ஏழை அப்பா- அம்மாவின் கனவுகளை நனவாக்க உறுதி எடுக்கும் கல்லூரி செல்லும் ஒரு மகனது(மாணவனது) உணர்வுகளை , கணவன் -மனைவி-வேலைக்காரி ஆகிய மூவரின் மெல்லிய உணர்வுகளை ,கோவில்கள் எப்படி சமுதாய வாழ்க்கைக்கு உதவுகின்றன என்பதை, அன்னையின் அன்பை, தாய்மையின் அற்புதத்தை ,நகர வாழ்வின் சோரத்தை, அதன் சாரத்தை,பெண் குழந்தைகளைக் கள்ளிப் பால் கொடுத்துக் கொல்லும் நடைமுறையை, அமெரிக்க வாழ்க்கையின் மீது கொள்ளும் மோகத்தை, இலையுதிர் காலம் கற்றுத் தரும் பாடங்களை,கொரொனா பின்னணியில் ஒரு பேரன்- பாட்டி இருவருக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பை இது போல் இன்னும் மனதை நெகிழ வைக்கும் பல சூழல்களை,நிகழ்வுகளை இத்தொகுதியில் உள்ள கவிதைகள் உணர்வு பூர்வமாகப் பேசுகின்றன.

கவிதைகள் ஒவ்வொன்றும் சமுதாயத்தைக் காட்டிடும் விழியாக அமைந்து, வாழ்வின் சாரத்தை எடுத்தியம்பும் மொழிகளாக,கண்களில் கசிந்து சூடேற்றும் துளிகளாக விளங்குகின்றன.

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580169810688
Engey En Mazhai Kaadugal?

Read more from Adith Sakthivel

Related to Engey En Mazhai Kaadugal?

Related ebooks

Reviews for Engey En Mazhai Kaadugal?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engey En Mazhai Kaadugal? - Adith Sakthivel

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எங்கே என் மழைக் காடுகள்?

    (நெடுங் கவிதைகளில் சிறு கதைகள்)

    Engey En Mazhai Kaadugal?

    Author:

    ஆதித் சக்திவேல்

    Adith Sakthivel

    For more books

    https://www.pustaka.co.in/home/author/adith-sakthivel

    பொருளடக்கம்

    அணிந்துரை

    அணிந்துரை

    என்னுரை

    1.எங்கே என் மழைக் காடுகள்?

    2. வாழ்த்திய வான்மேகங்கள்

    3. காகிதக் கப்பல் அல்லது IDEAL Vs REAL

    4. செல்போன் சறுக்கல்கள்

    5. என் நண்பனை எனக்கு நன்கு தெரியும்

    6. விழுந்து நொறுங்கிய சொர்க்கங்கள்

    7. கோவிலில் மட்டுமல்ல தெய்வங்கள்

    8. அன்பினைத் தத்தெடுப்போம்

    9. குழந்தைகள் குடும்பம் 102, வெள்ளலூர் சாலை, போத்தனூர் - 641 023. (ஆம். மேலே உள்ளது தான் கவிதையின் தலைப்பு)

    10. இலையுதிர் காலத்துப் பாடங்கள்

    11. பொன்னம்மா... இன்னொரு அம்மா எனக்கு

    12. பாலமில்லாத் தீவுகள்

    13. கடவுளுக்கு அல்ல என் கோவில்

    14. அம்மா... நீ எங்கிருக்கிறாய்?

    15. வண்ணங்களில் வாழ்ந்தவன் நான்

    16. திறந்த ஜன்னலில் தெரிந்த நகரம்

    அணிந்துரை

    கவிஞர் நிலா பாரதி

    கவிதை பூத்து நிற்கும் மனம்.தென்றலாய் எழுந்து வரும் குணம். தான் நீந்திக் களித்த நொய்யல் என்றாலும் சரி, தன் மனதைக் கவர்ந்த தையல் என்றாலும் சரி, எடுத்துக் கொண்ட கவிதைத் தலைப்பு எதுவென்ற போதிலும் கவிஞரின் நுண்மாண் நுழைபுலம் ஒவ்வொரு வரியிலும் இயல்பாய் அமர்ந்து, வாசிப்பவர் உள்ளங்களை வசியம் செய்கிறது.

    இந்தத் தொகுப்பில் அமைந்துள்ள சில கவிதைகளைப் பற்றிச் சில வரிகள் இங்கே...

    எங்கே என் மழைக் காடுகள்?

    கேரளாவின் தெய்யம் என்ற நடனத்தை மையமாக்கி எழுதிய கவிதை.கவிதையின் முடிவு எங்கே என் மழைக்காடுகள்? என்று ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஓங்கி ஒலிக்க வைக்கிறது.

    வாழ்த்திய வான் மேகங்கள்

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையின் பின்னணியில் எழுதப்பட்ட கவிதை. காமத்தை மறைத்து (போலிக்)காதலைக் காட்டி ஏமாற்றும் இன்றைய தலைமுறையினர், சக மனிதர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தைக் கவிதை அறைந்து சொல்கிறது. இன்றைய வாழ்வின் போலித் தனங்களைத் தோலுரித்துக் காட்டுகிறது.

    காகிதக் கப்பல்

    வசதி வாய்ப்புகள் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை உலகம் உணர வேண்டும் என்பதை உணர்த்திடும் கவிதை.

    "அவன் மனிதர்களை ஆள நினைக்கிறான்

    நீ அவர் மனங்களில் வாழ ஆசைப் படுகிறாய்"

    என்ற இரண்டு வித்தியாசங்களைப் பாத்திரங்களாக்கிக் கவிதையில் உலவ விட்டிருக்கிறார் கவிஞர்.

    செல்போன் சறுக்கல்கள்

    செல்போன் காதல்களின் போலித் தனங்களை செல்லுரித்துக் காட்டுகிறது கவிதை.

    அந்த மாயையில் சிக்கி மதி கெட்டு, மிதி பட்டுச் சீரழியும் இளைய சமுதாயத்தினரை தட்டி எழுப்பிடும் கவிதை.

    விழுந்து நொறுங்கிய சொர்க்கங்கள்

    பாட்டிக்கும் பேரனுக்கும் உள்ள உறவின் ஆழத்தை, அன்பின் பரிமாற்றத்தை அழகாக எடுத்துச் சொல்கிறது கவிதை.கவிதையைப் படித்து முடித்த பிறகு கண்களின் ஓரத்தில் கசியும் கண்ணீர்த் துளிகள் அவரவர் பாட்டிகளின் மலரும் நினைவுகளாய்...

    கோவிலில் மட்டுமல்ல தெய்வங்கள்

    ஏழைத் தாய் தந்தையரைப் பற்றி ஒரு மகனின் (மாணவனின்) பார்வையில் எழுதப்பட்ட, இதயத்தை ஈரமாக்கிடும் கவிதை. இந்தக் கவிதையைப் படித்து முடித்து விட்டு கண்ணீர் வருவதைத் தடுப்பதும், தவிர்ப்பதும் சிரமம்.

    குழந்தைகள் குடும்பம்

    "சொந்தம் எனச் சொல்லிட யாருமில்லா

    சொர்க்கத்தின் சோகப் பரிசுகள்

    தேவராகத்தின் அறுந்த இழைகள்"

    அனாதைக் குழந்தைகளுக்குக் கவிஞர் சூட்டிய வரிகள். அனாதை இல்லங்களில் வளரும் குழந்தைகளின் ஏக்கத்தை அப்படியே வடித்துக் காட்டுகிறது இக்கவிதை ஓவியம்.

    பொன்னம்மா இன்னொரு அம்மா எனக்கு

    மெல்லிய உணர்வுகள் இழையோடி நிற்கும் அற்புத கவிதைச் சிறுகதை.

    கணவர்- மனைவி- வேலைக்காரி என மூன்று கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து மெல்லியதோர் காதல் சித்திரத்தை நம் கண்களின் முன்னே உலவ விடுகிறார் கவிஞர்.

    கடவுளுக்கு அல்ல என் கோவில்

    கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராய்ச்சியைப் புறம் தள்ளிவிட்டு, கோவில்கள் எப்படி மக்களின் சமுதாய வாழ்வுக்கு உதவுகின்றன என்பதை எடுத்துக் காட்டும் ஏற்ற மிகு எழில் கவிதை.

    அம்மா நீ எங்கிருக்கிறாய்?

    கல் நெஞ்சோடு கள்ளிப் பால் கொண்டு பெண் குழந்தைகள் கொல்லப்படும் அவலத்தையும், அதையும் தாண்டி அன்னையர்களின் அன்பினையும்- தாய்மையின் அற்புதத்தையும்- அழகாகப் பேசுகிறது இந்த கள்ளிக் காட்டுக் கவிதை.

    வண்ணங்களில் வாழ்ந்தவன் நான்

    இயற்கையின் இயல்பான வண்ணங்களை ரசிப்பதை விடுத்து, வண்ணங்களைத் தங்களது உடலிலும்,உடையிலும்,ஒப்பனைகளிலும் ஏற்றிக் கொள்ளும் மனித எண்ணங்களால் ஏற்படும் விளைவுகளை அற்புதமாக எடுத்துச் சொல்லும் கவிதை.

    திறந்த ஜன்னலில் தெரிந்த நகரம்

    நகர வாழ்வின் கோரத்தை, அதன் சாரத்தை, அங்கே வசிக்கும் மனித மனங்களில் அண்டிக் கிடக்கும் குப்பைகளை, அதன் வெப்பங்களை அப்படியே அள்ளிக் கொட்டுகிறது கவிதை- வெளியில்...

    பாலமில்லாத் தீவுகள்

    வெளி நாடுகளில் உள்ள மக்களின் பழகும் முறைகளை, அவர்களது பண்பாட்டு நெறிகளை அழகாக விவரிக்கிறது இக்கவிதை.

    கவிஞர் ஆதித் சக்திவேல் ஐயா அவர்களின் கவிதைகள் ஒவ்வொன்றும் சமுதாயத்தைக் காட்டிடும் விழிகள். வாழ்வின் சாரத்தை எடுத்தியம்பும் மொழிகள். கண்களில் கசிந்து சூடேற்றும் துளிகள்.

    இந்தக் கந்தகக் கவிதைகளின் அணி வரிசை இன்னும் தொடர வேண்டும். மக்கள் மனங்களில் மேலும் படர வேண்டும். அதனால் ஒரு மறுமலர்ச்சி மலர வேண்டும் என வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.

    அன்புடன்,

    நிலாபாரதி.

    அணிந்துரை

    K.P.ஈஸ்வரன்

    ஆதியும் அந்தமும் அளந்து அறிய முடியாத, எல்லையற்ற மாபெரும் இயற்கை சக்தியாக, எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் வான் வெளி மண்டலத்தில் இருக்கும் நவ கோள்களைத் தாங்கிப் பிடித்து, அவைகளை நேர் பாதையில் இயங்க வைக்கும் காற்றைப் போல், மிகச் சிறந்த சொற்செறிவோடு, பொருட்பொலிவோடு, உவமைகளையும், உருவகங்களையும் அடுக்கிக் காட்டி, அத்துடன் அன்பும், ஞானமும், கருணையும் ஒன்று சேர்த்துக் காற்றில் கலந்து, அதை சுவாசமாக வாசிக்கும் உலக மக்களின் இதயங்களைத் தாங்கி பிடித்து, நேர் வழியில் நகர்த்திச் செல்லும் அற்புதத்தோடு, அந்த இயற்கையைப் போலவே ரகசியங்களும், அதிசயங்களும் கொண்ட மாபெரும் ஆற்றல் மிக்க படைப்பாக விளங்குவது கவிஞர் திரு. ஆதித் சக்திவேல் அவர்களின் கவிதை தொகுப்பு என்று சொல்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

    மேலும் கவிஞர் திரு. ஆதித் சக்திவேல் அவர்களை எங்கள் வெள்ளலூருக்கும் இந்த உலகுக்கும் கிடைத்த கவிதை அமிழ்தமாகக் காண்பதோடு மட்டுமல்லாமல், உலக வரை படத்தில் எங்கள் வெள்ளலூரை உலகமே உற்று நோக்கும்படி செய்தது அவரது கவிதைத் திறமே என்று சொல்வதிலும் நான் மிகவும் பெருமிதம் அடைகின்றேன்.

    ஒரு சிறந்த கதையையும், கதாபாத்திரத்தையும், அதன் கருப் பொருளையும், சிறப்புகளையும் எடுத்து யார் காவியம் வடித்தாலும் அதில் சிறந்த வெற்றி பெறலாம். தமிழைத் தன் புகழ் ஆக்கிக் கொண்ட கம்பர் நடையில் நின்றுயர் நாயகன் ராமரைப் பாடினார், வெற்றி பெற்றார். வியாசர், பஞ்ச பாண்டவர்களையும் கிருஷ்ணரையும் பாடினார், வெற்றி பெற்றார். இளங்கோ, கற்புக்கரசி கண்ணகியைப் பாடினார், வெற்றி பெற்றார். மேலும் இவர்களது காவியங்கள் பைந்தமிழில், புலவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் வடிக்கப்பட்டு இருந்தன. மேலும் படித்த புலவர்கள் இவர்களின் கருத்துக்களைப் புரிந்து கொண்டு, எளிய மக்களும் புரிந்து கொள்ளும்படி, பேச்சுத் தமிழில் மேடைகளில் பேசியதால் மட்டுமே தமிழர்களுக்கும் தமிழ் படித்தவர்களுக்கும் அக்கருத்துக்கள் தெரிய வந்தன. இவர்களின் இலக்கியங்கள் மூலத்தோடும், தெளிவுரையோடும் சேர்த்து வடிவமைத்த நூலாக வெளி வந்திருப்பினும், அருகில் தமிழ் அகராதியோடு தான் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலை இன்றளவும் இருக்கின்றது.

    ஆனால் நாட்டின் சமூக அவலங்களையும், தீண்டாமையையும், அழிந்து வரும் இயற்கை வளங்களையும், தொலைந்து வரும் மனித நேயத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை உணர்வோடு, மானுடமும், மற்ற ஜீவராசிகளும் இயற்கையோடு ஒன்றிணைந்து எல்லையற்ற அன்போடும், கருணையோடும் சுதந்திரமாக வாழ்ந்து, மற்ற ஜீவராசிகளுக்கும் தன் அன்பையும் கருணையையும் அர்ப்பணிப்போடு பகிர்ந்து கொடுத்து வாழ வேண்டும் என்ற கருச் சீற்றத்தை தனக்கே உரித்தான புதுமையான இலக்கிய புலமையோடு,அதே சமயம் தமிழ் படித்த மக்கள் எல்லோரும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் விதத்தில்,அறிவியல்,வாழ்வியல், அறவியல் கருத்துக்களைத் தமிழியலோடு உளவியல் கலந்து

    Enjoying the preview?
    Page 1 of 1