Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Orayiram Meengalum Ottrai Kokkum
Orayiram Meengalum Ottrai Kokkum
Orayiram Meengalum Ottrai Kokkum
Ebook141 pages20 minutes

Orayiram Meengalum Ottrai Kokkum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கவிதை என்னும் பெயருடன் வெளிவருகின்ற இந்நூல் எனது முதல் தொகுப்பாகும். என்னைச் சுற்றி உலவுகின்ற சமூக வாழ்க்கையின் அழையா விருந்தாளியாகவே வாழ்கிறேன். அதன் பிழைகளை அல்லது- இடம் மாறு தோற்றப் பிழைகளை நோக்காமல் நகர்ந்து செல்ல நான் ஞானியல்ல. காணும் கயமையைத் தூற்றவும், கண்ட பெருமையைப் போற்றவும் தக்கதான ஒரு சாதாரண கவிதைக் குணம் என்னுடன் வாழ்கிறது. அக்குணத்தின் வெளிப்பாடே இந்நூல்.

நேற்று நான் எழுதியதை. இன்று நானே விமர்சனம் செய்கிறேன். மாற்றம் தேவையற்ற மனிதரும் கவிதையும் இனிமேல்தான் பிறக்க வேண்டும். கவிஞனும் மொழிஞனும் அறவானுமாகிய வள்ளுவன் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இந்நூலின் எனது கவிதைகளை வாசிப்போர் மனங்களே இவற்றுக்கான உரைகல்லாக விட்டு விடுகிறேன்.

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580178010966
Orayiram Meengalum Ottrai Kokkum

Related to Orayiram Meengalum Ottrai Kokkum

Related ebooks

Reviews for Orayiram Meengalum Ottrai Kokkum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Orayiram Meengalum Ottrai Kokkum - Chevvaraian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஓராயிரம் மீன்களும் ஒற்றைக் கொக்கும்

    Orayiram Meengalum Ottrai Kokkum

    Author:

    செவ்வரையன்

    Chevvaraian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chevvaraian

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    என்னுரை

    1. தமிழ்

    2. நறுக்கென்று நான்கு வரிகள்

    3. அதிரடி ஆறுகள்

    4. முதலிறுதிக் கவிதைகள்

    5. குறுங்கவிதைகள்

    6. திருக்குறள் கவிதைகள்

    7. பழமொழிக் கவிதைகள்

    8. இடைச்சொல் கவிதைகள்

    9. அந்தாதிக் கவிதைகள்

    10. சொல்லோடு விளையாடு

    11. கவி மாலைகள்

    12. கிராமிய கீதங்கள்

    13. கவியான காட்சிகள்

    வாழ்த்துரை

    புதிய இறகுகளோடு வானில் சிறகடித்து பறக்கும் வானம்பாடிகள். காலச்சூழலுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக் கொண்டு நமக்கு இசைப்பாட்டுகளை அள்ளி வீசுகின்றன. இசையின் ஒவ்வொரு அலகிலும் அவை அலகால் கிளறிவிட்ட இறகுகளின் உணர்வுகள் முறுக்கேறுகின்றன. முறுக்கேறிய உணர்வுகளின் வெளிப்பாடே முதிர்ச்சி. முதிர்ச்சியின் அடையாளமே முன் இறகுகள் பறந்த; பழம் சிறகுகள் துறந்த; புது இறகுகள் முளைத்த; புது வானம்பாடிகள். வானத்தில் பாடும் வானம்பாடிகள் வானத்தையும் பாடும்; வனத்தையும் பாடும். மண்ணையும் பாடும்; விண்ணையும் பாடும். செவ்வரையனின் ‘ஓராயிரம் மீன்களும் ஒற்றைக் கொக்கும்’ மனித நெஞ்சங்களை நோக்கி புது இறகுகளோடு வலம் வரும் இசை பாடும் வானம்பாடி.

    மொழி என்பது அறிவு, பதிவு, பகிர்வு. இம்மூன்றிலும் தலைசிறந்து நிற்பது நம் தாய்மொழி தமிழ். உலகில் செம்மொழிகள் பிறந்திருக்கின்றன, வளர்ந்திருக்கின்றன, வாழ்ந்திருக்கின்றன, இறந்திருக்கின்றன. தமிழ் மொழிமட்டுமே உயிர்த்திருக்கின்றது. தமிழ் மனிதனை வாழ வைக்கும் சக்தி படைத்தது.

    "எல்லாம் இழந்து எதுவும் களைந்து

    கல்லாய் மாறினும் காப்பது தமிழே"

    தமிழ் பற்றிய கவிஞனின் நம்பிக்கை கடலையும் கடந்தது. அறிவு சீர்தரும் அற்புத மொழி தமிழ் என்ற செவ்வரையனின் வரிகள் பிரமிப்பு மிக்கது. அருகிப்போன விருந்துகள், தேம்பிப் போன ஓம்பல்கள். தமிழனைத் தரணிக்கு தனித்துக் காட்டிய விருந்தோம்பல் கருகிப் போகலாமா?

    "வந்தவர் உண்ணாமல்

    வாய்நீர் குடித்திட

    மந்திபோல் தின்று நீ

    மகிழ்வது குற்றம்"

    கவிஞரின் அறக்குமுறலில் அர்த்தம் இருக்கிறது.

    "அறத்தால் வீழினும

    அவமானம் இல்லை

    திறத்தால் மேன்மையில்

    துலங்குவர்"

    அறத்தை சிரத்தில் கொண்ட நீ வீழ்வது வீழ்ச்சி அல்ல, அதில் அவமானம் இல்லை. கோடிகளை ஏப்பமிட்டு விட்டு மானம் பற்றி பேசுபவர்கள் நிறைந்த இன்றைய உலகில் அறநெறிப்படி வாழ்வோருக்கு அவமானம் என்ற சொல் அர்த்தமற்றது என்ற நிலைப்பாடு வலிமையானது.

    "நூற்றுக்கு நூறாய்

    நல்லவர் என்பார்

    நேற்றும் இன்றும்

    நாளையும் கிடையார்"

    என்பதை அடிக்கோடிட்டு எல்லோரும் எல்லா பொழுதிலும் நல்லவராய் இருப்பதில்லை எனக் கூறிய கவிஞர் நற்பார்வையோடு பார்த்தால் எல்லோரும் நல்லவரே என குறிப்பிடுகின்ற விசால பார்வைக்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம்.

    "காத்திருந்து தாலியறுக்க

    கல்யாணம் பண்ணிக்கிட்டெ

    மாத்திக்கட்ட உடுப்புமில்லெ

    மாங்கல்யமும் கழுத்திலில்லெ"

    பெண்ணுரிமைக் குரலாய் ஒலிக்கும் வரிகள் வலிகளின் வடிவாய் அமைந்திருக்கின்றன. ஓராயிரம் மீன்களும் ஒற்றைக் கொக்கும் கவிதை தொகுதி, சிலேடைக் கவிதைகள்,, நறுக்கென்று நான்கு வரிகள், அதிரடி ஆறு வரிகள், காதல் கவிதைகள், அறம் கூறும் கவிதைகள், கிராமியப் பாடல்கள் என பல்வகை வடிவங்களை உள்ளடக்கிய வித்தியாசமான அற்புதப் படைப்பு. கவிதை வானில் இறகு முளைத்து சிறகை விரித்து செம்பருந்தாய் பறக்கத் தொடங்கியிருக்கும் செவ்வரையன் மேலும் பல படைப்புகள் தந்து இலக்கிய உலகில் இயல்பாய் இயங்கும் படைப்பாளியாய் மலரட்டும் என்று வாழ்த்துகிறேன்.

    சகபயணி

    குமரித்தோழன்

    9486012720

    என்னுரை

    தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்,

    கவிதை என்னும் பெயருடன் வெளிவருகின்ற இந்நூல் எனது முதல் தொகுப்பாகும். ஆனால் இலக்கணச் செழுமை பின்பற்றப்பட்டக் கவிதைகள் இதனுள் ஒன்றிரண்டு தான் இருக்கும். மரபுவழிக் கவிதைகள் என்கிற சமாளிப்புப் பெயரால் மட்டுமே இவற்றை அழைக்க இயலும். அரைகுறை வசனங்களை வரிக்கு இரண்டு மூன்று சொற்களாகப் பிரித்துப் போட்டு இந்தா பிடி கவிதை என்று யாரையும் ஏமாற்ற மனமில்லை எனக்கு!

    நான் விரும்பினாலும் விரும்பாமல் ஒளிந்தாலும் என்னைச் சுற்றி உலவுகின்ற சமூக வாழ்க்கையின் அழையா விருந்தாளியாகவே வாழ்கிறேன். அதன் பிழைகளை – அல்லது – இடம் மாறு தோற்றப் பிழைகளை நோக்காமல் நகர்ந்து செல்ல நான் ஞானியல்ல. காணும் கயமையைத் தூற்றவும், கண்ட பெருமையைப் போற்றவும் தக்கதான ஒரு சாதாரண கவிதைக் குணம் என்னுடன் வாழ்கிறது. அக்குணத்தின் வெளிப்பாடே இந்நூல்.

    நேற்று நான் எழுதியதை, இன்று நானே விமர்சனம் செய்கிறேன். மாற்றம்

    Enjoying the preview?
    Page 1 of 1