Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Pakkam
En Pakkam
En Pakkam
Ebook115 pages40 minutes

En Pakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் எழுதும் செய்திகளொன்றும் பிரமாதமானவை அல்ல என்றாலும் பயனுள்ளவை.

அன்றாடம் நம் எல்லோர்க்கும் ஏற்படுகிற அனுபவங்களின் தொகுப்புதான் இந்நூல். “பார்த்தது கோடி பட்டது கோடி சேர்த்தது என்ன சிறந்த அனுபவம்” என்பார் கவியரசர் கண்ணதாசன். எல்லோரும்தான் எல்லாவற்றையும் பார்க்கிறோம். எல்லோர்க்கும்தான் ஏதேதோ நிகழ்கிறது. ஆனால் அதை அனுபவமாகப் பார்க்கும் போது தான் படித்துக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவுமான பாடமென்று நமக்குக் கிடைக்கிறது.

பள்ளிக்கு வெளியே பரந்து கிடக்கிற வெளியில் நாம் படித்துக் கொள்ள வேண்டிய பல செய்திகளை அனுபவங்களே ஆசிரியர்களாக இருந்து படித்துத் தருகின்றன. அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பால்தான் அதிகமான சூடென்று அனுபவித்த பூனை எதுவும் புத்தகம் எழுதியதில்லை. எனினும் பூனைகளுக்கு இந்தப் பாடம் தெரியும். ஆனால் குனிந்து நுழையா விட்டால் கூரை இடிக்கும் என்று தெரிந்திருந்தும் கூரை வீட்டுக்காரனே பலமுறை இடிபட்டுக் கொண்டிருப்பான்.

அதனால்தான் “அனுபவங்கள் நம் அறிவை வளர்க்கின்றன. ஆனால் அசட்டுத்தனங்களைக் குறைப்பதில்லை” என்ற பில்லிங்க்ஸ் என்ற அறிஞன் ஒருவன் படித்துச் சொல்லியிருக்கிறான். இந்த என்பக்கக் கட்டுரைகளில் வாழ்வதற்கான வழிகள் கிடைக்காது. ஆனால் வாழ்க்கையின் விசித்திரங்கள் கிடைக்கும்.

நாமெழுதும் கவிதைகளிலும், கதைகளிலும், கட்டுரைகளிலும், நாடகங்களிலும் காணப்படும் சுவைகளைப் போல இந்த எழுத்திலும் சுவையும், சுகமும் இருப்பதற்குக் காரணம் இது வாழ்க்கைத் தொடர்பானது; அதுவும் நாம் ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்ட அனுபவத்தைச் சார்ந்தது என்பதால் எல்லோருக்காகவும் நான் எழுதியதுபோல் என்பதற்கப்பால் எல்லோரும் சேர்ந்தெழுதிய உணர்வு பெறுவோம்.

என் எழுத்தில் நான் ரசிக்கிற எழுத்தே என்பக்கம் தான். இது நம் பக்கம். நல்ல அனுபவங்களில் எனக்குப் பெருமை என்றால் அல்லாத அனுபவங்களில் நான் அவமானமடைவதில்லை. காரணம் என்னுடைய செயல்களால் அல்லாமல் வேறெவருடைய சொற்களும், செயல்களும் என்னை அவமானப்படுத்துவதாக நான் கருதுவதில்லை, அதை நான் ஏற்பதுமில்லை. புத்தனிடம் நான் பெரிதும் ரசிக்கிற போதனையே இதுதான்.

இதமாக இருங்கள், இயல்பாக இருங்கள், இனிமையாக வாழ்க்கை அமையும் என்பதை இந்த என் பக்கங்கள் உங்களுக்குப் படித்துத் தருமானால் நான் பேருவகைப் பெறுவேன். இச்சிறு நூலுக்கும் என் சிந்தனைகளுக்கும் சிறப்பு சேர்ப்பது போல் என் சிந்தைக்கினிய நண்பர் கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள் ஓர் அணிந்துரை என்பதற்கப்பால் ஆய்வுரையாக ஓர் அழகுரை தந்த அன்பினுக்கு நன்றி. அவருடைய அணிந்துரையே ஓர் அழகிய கட்டுரையாகத் திகழ்கிறது. அதைப் படித்துவிட்டு நூலுக்குள் நுழைதல் நலம்.

- ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580132005349
En Pakkam

Read more from Kalaimamani Ervadi S. Radhakrishnan

Related to En Pakkam

Related ebooks

Reviews for En Pakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Pakkam - Kalaimamani Ervadi S. Radhakrishnan

    http://www.pustaka.co.in

    என் பக்கம்

    En Pakkam

    Author:

    கலைமாமனி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்

    Kalaimamani Ervadi S. Radhakrishnan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ervadi-radhakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நல்லது எதுவோ அதுவே நல்லது

    வீட்டுக்கு வரவேண்டாம்

    நாளெல்லாம் நிகழ்ச்சிகள்

    தாயுள்ளம்

    நானிருக்கிறேன்

    பிறர் வினை...

    முன்னுதாரணம்

    புறங்கூறல்

    என்னிடம் மட்டுமா இப்படி...

    பேரும் புகழும்

    இல்லத்தில் முதியோர்...

    சேர்ந்து தனித்தனியே

    காதல்...

    கொடுக்கல் வாங்கல்

    நமது பிள்ளைகள்...

    பணியலாம்... ஆனால்...

    வேண்டும் வேண்டும் வேண்டும்...

    நமக்குள் நாம்

    தனி மனிதக் காட்சிகள்...

    பொதுவாக என் மனசு...

    நானும் என் நண்பர்களும்

    மனிதனும் தெய்வமும்

    கடனை அடைக்காதீர்கள்...

    அழுக்காகாமல்...

    நம்பிக்கை

    அணிந்துரை

    இயல்பழகு இலக்கியம்

    கவிஞர் ஜெயபாஸ்கரன்

    நாடறிந்த கவிஞரும், கட்டுரையாளரும், கவிதை உறவு இதழாசிரியருமான ஏர்வாடியார் அவர்களின் இந்நூலுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பினைப் பெற்றமைக்காகப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று இதுவரை ஏர்வாடியார் அவர்கள் படைத்தளித்துள்ள நூல்களின் வரிசை மிகவும் நீளமானது. புதியதையும், புதியவர்களையும் ஏற்பது, தொடர்ந்த சிந்தனை, அயராத எழுத்து, இடையறாத உழைப்பு, உயரிய முறையிலான ஒருங்கிணைப்பு, உன்னதமான அரவணைப்பு ஆகியனவற்றின் விளைவாகவே ஏர்வாடியாருக்கு இவ்வுயரம் சாத்தியமாகியிருக்கிறது.

    இலக்கிய இதழாசிரியர்களில் ஏர்வாடியார் அவர்கள் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவர். ஓர் இலக்கிய இதழைத் தொடங்கி இடையறாமல் நாற்பதாண்டுகளைக் கடப்பதென்பது சாதாரணச் சாதனையல்ல. அவ்வகையில் ‘கவிதை உறவு' எனும் இலக்கிய இதழை ஒரு ஆசிரியராக இருந்து இடையறாமல் நடத்தி வருவது, அவ்விதழின் வாயிலாக ஆயிரக்கணக்கான படைப்பாளிகளை அடையாளங்கண்டு ஆதரித்து புகழ் வானில் பறக்கவிடுவது, கவிதைகள் கட்டுரைகள் என்று அவ்விதழில், தானும் எழுதுவது, அதையும் மிகத்தரமாக எழுதுவது, அவ்வாறு எழுதியவற்றை நூல்களாக்குவது, ஓர் இயக்கம் போலக் ‘கவிதை உறவு' இதழின் மாதாந்திரக் கூட்டங்களைத் தக்கவர்களையும், தகுதியானவர்களையும் கொண்டு தொடர்ந்து நடத்துவது, அப்படி நடக்கும் கூட்டங்களை ஒரு தலைப்பு கொடுத்து நடத்தி அது மாதாந்திரச் சடங்கு அல்ல, சிந்தனை வளர்ச்சிக்கான விதைப்பு என்று நிரூபிப்பது, தனது பிறந்த நாளான மே-18ஆம் நாளை இலக்கிய வளர்ச்சிக்கான நாளாகவும் கருதி, ஆண்டுதோறும் அதே நாளில் மிகப்பெரிய இலக்கிய விழா எடுப்பது, அவ்விழாவில் பொருள் பொதிந்த படைப்புகளோடு கூடிய மிகப்பெரிய விழா மலரையும், நூல்களையும் வெளியிடுவது, இலக்கியம், கலை என்று வெவ்வேறு துறைகளில் பரிசுகளுக்கு அறிவிப்பு செய்து படைப்புகளைத் தேர்வு செய்து ஒரு லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட பரிசுகளை உரியவர்களின் கரங்களால் படைப்பாளிகளுக்கு அளித்து ஆதரித்து ஊக்கப்படுத்துவது, கவிதை உறவு இதழின் ஆண்டு விழா ஒவ்வொன்றையும் ஓர் இலக்கியப் பெருவிழாவாக நடத்தி நல்ல மனங்களின் இலக்கியச் சங்கமத்திற்கு வழி கோலுவது என்றெல்லாம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஏர்வாடியாரின் இலக்கியப் பணிகள் கூர்ந்து கவனிப்போரின் பெருமூச்சுக்கும், வியப்புக்கும் உரியன.

    அவரது இலக்கியப் பணிகளின் நீட்சிகளில் ஒன்றே இந்நூல். இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டிருக்கும் இந்நூலில், வீண் வார்த்தைகளோ, வேண்டாத வரிகளோ இல்லை என்பதுதான் சிறப்பு. அவ்வளவும் வாழ்வியல் கட்டுரைகள். தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், கற்றுக் கொடுத்த பாடங்களையும் படிப்பவர்கள் பயன்பெறும் வண்ணம் எளிய நடையில், சுவையாகவும், சரளமாகவும், கச்சிதமாகவும் முன்வைத்திருக்கிறார் ஏர்வாடியார்.

    இந்த நூலின் கட்டுரைகளில் பெரும்பாலானவை சக மனிதர்களின் மனோபாவங்களை அங்கத உணர்வோடு சுட்டிக்காட்டி, நம்மை விழிப்புணர்வுக்கு ஆளாக்கும் வகையில் அமைந்துள்ளன. சில கட்டுரைகள் விவாதங்களை முன்வைக்கின்றன. நல்லது எதுவோ அதுவே நல்லது முன்னுதாரணம் பேரும் புகழும் இல்லத்தில் முதியோர் சேர்ந்து தனித்தனியே போன்ற கட்டுரைகளை விவாதங்களை முன்வைக்கிற கட்டுரைகளாகக் கொள்ளலாம். பிற கட்டுரைகளை சக மனிதர்களது மனோபாவங்களைப் படம்பிடிப்பவை, வாழ்வியல் நெறிகளை விளக்குபவை என்று பிரித்துக் கொள்ளலாம்.

    இம்மூவகையில் எவ்வகையும் சமூகத்திற்கு எதிரானது அல்ல என்பதே இந்நூலின் தனிச்சிறப்பாகும். தான் பழக நேர்ந்த மனிதர்களின் அற்பத்தனமான மனோபாவக் கூறுகளைச் சுட்டிக் காட்டி எழுதும்போதுகூட போதுமான அளவு நகைச்சுவை கலந்து எழுதியிருக்கிறார் ஏர்வாடியார். இந்த அங்கதக் கலப்பு படிக்கிற நம்மைச் சிரிக்க வைப்பதோடு மட்டுமின்றி, சம்பந்தப் பட்ட மனோபாவங்களைக் கொண்டவர்களையும் சிரிக்க வைத்துச் சிந்திக்க வைக்கும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

    எழுத்து நடையில் கட்டுரைகள் பயணப்படும் போக்கிலும், வேகத்திலும் அழகழகான வரிகளும் அருமையான வரிகளும் வந்து விழுந்திருக்கின்றன. படிப்பவர்களின் மனநிலைக்கு ஏற்ப அவ்வரிகள் மாறுபடலாம் எனினும்,

    திறந்திருக்கும் பூங்காக்களில் மட்டுமே உலவுங்கள் மூடப் பட்டிருக்கும் கதவுகளில் முட்டிக் கொண்டிராதீர்கள்

    இயங்குகிறவர்கள் மட்டுமே காலத்தை கௌரவப்படுத்துகிறார்கள். பாதையோரங்கள் பாவம் பாரமாகவே பூமியில் பிறந்தும், புதைந்தும் பதிவின்றிப் போகிறார்கள்

    என்பன போன்ற என்னைப் பெரிதும் கவர்ந்த நூற்றுக்கணக்கான வழிநடத்தும் வரிகள் இந்நூலில் உரிய இடங்களில் உரிய முறையில் பலாச் சுளைகளைப் போன்றும் மாதுளை முத்துக்களைப் போன்றும் பொதிந்தும், பதிந்தும், புதைந்தும் மிளிர்கின்றன. இக்கட்டுரைகளை பல அனுபவசாலிகளின் பேராளராக (பிரதிநிதியாக) இருந்தே ஏர்வாடியார் எழுதியிருக்கிறார் என்றும் கருதலாம். சமூகத்தின் கண்டுகொள்ளப்படாத சில சிக்கல்கள் தங்களைத் தாங்களே எழுதிக்கொண்டு வெளிப்பட்டிருப்பது போன்றும் இந்நூலை உணர முடிகிறது. இலக்கியச் சுவைஞர்களைக் காட்டிலும் இந்நூலைப் படித்துத் தெளிவடைய வேண்டியவர்கள், மாணவ மாணவியரே ஆவர். மிக எளிதாகப் புரியக்கூடிய, ஏற்கக்கூடிய வகையில் இந்நூலின் மொழிநடை அமைந்துள்ளதால் இந்நூலை மாணவர்கள் வரவேற்பர்.

    வென்றவர்கள், தோற்றவர்கள், விஞ்ஞானிகள், தலைவர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1