Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Muraithan Varum
Oru Muraithan Varum
Oru Muraithan Varum
Ebook253 pages1 hour

Oru Muraithan Varum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒருமுறைதான் வரும்

உயரிய முதுமொழி போன்ற வாசகம். இதையே தலைப்பாக்கி, கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன், ஒரு புதினமாகப் படைத்திருக்கிறார்.

இராமபிரானைப் பற்றிக் கூறும், ‘ஒரு சொல் - ஒரு வில் - ஒரு இல்' என்னும் வாசகம் மிகப் பிரபலம். அவன் ஏகபத்தினி விரதன் என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்ட எழுந்த வாசகம் இது.

எண்ணிப் பார்க்கும்போது, நம் வாழ்வின் அடித்தளமாக அமைந்து ஒளிர்வதுதான் இந்த ‘ஒருமுறை தான் வரும்' என்பது. பிறப்பு - இறப்பு - கல்வி - காதல் - வாழ்வு என எதை எடுத்துக் கொண்டாலும், இந்த 'ஒருமுறை' என்பது தனிச் சிறப்புக் கொண்டதாகத் திகழ்கிறது.

ஒவ்வொரு கணப்பொழுதும் இதே தனிச்சிறப்பு கொண்டது தான். ஒரு கணப்பொழுதை நாம் இழந்துவிட்டால், அது மீண்டும் வரவே வராது. நாம் நிகழ்காலம் என்கிற கணப்பொழுதில் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டும். ஒரு நொடிப் பொழுது தாமதத்தால், எத்தனையோ இழப்புகளுக்கு ஆளாக நேரும் என்பது நிதர்சனம்.

புத்தர்பிரானின் மொத்த தத்துவமும் இதனை அடித்தளமாகக் கொண்டதுதான். ‘கணப்பொழுதில் கவனம் வை' என்கிறார் அவர். ஒரு நொடி கடந்துவிட்டாலும் அது கடந்த காலமாகி விடுகிறது. வரக்கூடிய கணப்பொழுது எப்படி இருக்குமென்று நமக்குத் தெரியாது. ஆனால், நிகழ்காலம் என்கிற நொடிப்பொழுது நம் ஆளுகையில் தான் உள்ளது.

ஒரு நதி வெள்ளத்தில் நீங்கள் ஒரு கை நீரள்ளும் போது, அது விரைந்து கொண்டிருக்கிறது. மறுகை நீரை நீங்கள் பழைய நதியில் அள்ள முடியாது; புதிய நதிவெள்ளம் வந்து கொண்டே இருக்கிறது.

'நதியே கொஞ்சம் இரு' என்று நீங்கள் நதிக்குக் கட்டளையிட முடியாது. காலமும் இது போன்றே என்பார் புத்தர்பிரான்.

ஒரு கதை உண்டு. ஒருவன் சொர்க்கவாசலில் கண்விழித்துக் காத்திருந்தான். அவன் ஒரு கணம் கண்ணை மூடியபோது, சொர்க்கத்தின் கதவு திறந்து, மூடிவிட்டது. அது இனி எப்போது திறக்கும் என்பது தெரியாது. ஒரு ஜென்ம காலம் காத்திருக்கவும் நேரலாம்.

ஒரு கணப்பொழுதின் முக்கியத்துவத்தை நமக்கு இப்படி எத்தனையோ செய்திகள் உணர்த்திக் கிடக்கின்றன. மகாகவி பாரதி இதையே அவன் பாணியில், 'சென்றதினி மீளாது; இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்கிறான்.

இந்த நாவலில் வருகிற பாத்திரங்களும் இதையே தான் நமக்கு அவர்களின் வாழ்வு மூலம் உணர்த்துகிறார்கள்.

ஒரு புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை, அதை இரு குடும்பங்கள் இணைந்து நடத்துகின்றன. அதில் கைராசி மிக்க மருத்துவர் சேகர். அவர் மனைவி நிர்மலாவும் மருத்துவரே. இருவரும் காதல் மணம் - கலப்பு மணம் புரிந்தவர்கள். இவர்களுக்காக, இவர்களின் பெற்றோர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவமனைதான் அது.

காதல் மணம்தான். ஆனால், டாக்டர் சேகரும் டாக்டர் நிர்மலாவும் மனக்கசப்பை வளர்த்து, மணமுறிவு கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில் புதினம் தொடங்குகிறது. பிரியப்போவது நிஜம் என்கிற நிலையிலும், அவர்கள் இருவரும் சேர்ந்தே கடமைகளை ஆற்றுகிறார்கள். பணியில் எவ்விதத் தொய்வுமில்லை. தனிப்பட்ட வாழ்வை அவர்கள் கடமைக்கு இடையூறாக ஆக்க விரும்பவில்லை.

இரு ஒரு நாகரிமான உடன்பாடு. இன்று முன் கோபத்தாலும், பரஸ்பரம் புரிந்துணர்வு இல்லாது போவதாலும் நொடியில் முரண்பாடுகளைப் பெரிதுபடுத்தி, வாழ்வை இடியாப்பச் சிக்கலாக்கி, அவதிப்படும் இளம் ஜோடிகள் ஏராளம். இதில் படித்தவர்கள் - சாதாரண குடும்பத்தவர் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. குழைந்து, குழைந்து, கொஞ்சிக் கொஞ்சிக் காதலிப்பார்கள். திருமணம் ஆனபின் பரம வைரிகள் போன்று, பிணங்கியும் பிரிந்தும் சென்றுவிடுகின்றனர்.

விவாகரத்து வழக்குகளால் குடும்ப நலக்கோர்ட்டுகளே திணறிக் கிடக்கும் நாட்கள் இது.

என்னைக் கேட்டால், ஏர்வாடியாரின் இந்தப் புதினத்தை ஏராளம் அச்சிட்டு, திருமணப் பரிசாகப் புதுமணத் தம்பதிகளுக்குப் பரிசளிப்பது மிக மிக நல்லது; பயனுள்ள செயல் என்பேன். அதனினும் பெரிதாக யாரேனும் இளம் இயக்குநர் கண்ணிலும் கவனத்திலும் இப்புதின நூல் பட்டு, அவர் இதைத் திரைப்படமாக எடுத்தால், சமூக நலத்திற்கு மிக உதவிகரமாக அமையும். வணிக ரீதியிலும் மிகப்பெரிய 'ஹிட்'டாக அமையும் அத்திரைப்படம்

கதையில் அத்தனை சுவாரஸ்யங்களை நிறையவே குழைத்து அளித்துள்ளார் ஏர்வாடியார்.

டாக்டர் சேகர் - டாக்டர் நிர்மலா தம்பதியரிடையே டாக்டர் ரோஹித் - டாக்டர் கிரிஜா என இருவர் புகுந்து, மணமுறிவை நிரந்தரமாக்கி விடுவார்களோ என்று தோன்றுகிறது. ஒரு மாதிரி இந்த ஜோடிகள் மாறிப் பரஸ்பரம் புதுக்காதல் கொள்வார்களோ என்று எண்ணத்தக்க விதத்தில் கதை விரைகிறது. இறுதியில் என்ன நிகழ்கிறது என்பதை நான் இங்கு விவரிப்பது அவசியமில்லை. ஏனெனில், அணிந்துரையில் முழுக்கதையும் சொல்கிற வழக்கமில்லை.

படிப்பதற்கு சுவாரஸ்யமாகக் கதை சொல்வதோடு, ஏராளமாகச் சமூகப் பண்பாட்டு விஷயங்களையும்

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580132005259
Oru Muraithan Varum

Read more from Kalaimamani Ervadi S. Radhakrishnan

Related to Oru Muraithan Varum

Related ebooks

Reviews for Oru Muraithan Varum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Muraithan Varum - Kalaimamani Ervadi S. Radhakrishnan

    http://www.pustaka.co.in

    ஒரு முறைதான் வரும்

    Oru Muraithan Varum

    Author:

    கலைமாமனி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்

    Kalaimamani Ervadi S. Radhakrishnan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ervadi-radhakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காதல் வெறும் கதையல்ல...

    நானும் இன்னொரு நானும்...

    ஒருமுறைதான் வரும்...

    ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்

    நாடறிந்த நல்ல கவிஞரான கலைமாமணி ஏர்வாடியார் நவீனங்கள் படைப்பதிலும் வல்லவர் என்பதை இந்நூலின் வாயிலாக நிரூபித்துள்ளார். இந்நூலில் மூன்று புதினங்கள் உள்ளன. மூன்று என்றாலே தனிச் சிறப்புதான். முத்தமிழ், முக்கனி, மும்மூர்த்திகள் என மூன்றின் பெருமைகள் ஏராளம். இந்நூலிலுள்ள மூன்று குறும்பு தினங்களும் வாழ்வின் வெவ்வேறு களங்களைச் சுவைபட விவரிக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு திரைப்படத்தைப் பார்த்த அனுபவத்தை அளிக்கிறது. - யார் கண்டது - நாளை இவையெல்லாம் திரைப்படமாகக்கூட வெளிவரக்கூடும்.

    - நாவலாசிரியர்

    கௌதம நீலாம்பரன்

    *****

    என்னுரை

    எழுத்தின் எல்லா வடிவங்களையும் எழுத முயற்சிக்கிறவன் நான். கவிதை, நாடகம், கட்டுரை, சிறுகதை, உரைச்சித்திரம் என்றெல்லாம் எழுதியது போதாதென்று நாவல்களும் எழுதிப் பார்க்க எண்ணம் வந்தது. வந்ததற்குக் காரணம் என் இலக்கிய ஆசான் கலைமாமணி விக்கிரமன் அவர்களின் நீண்டநாள் வற்புறுத்தல் தான்.

    இதைச் சொல்லும் போது அண்மைக்கால நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வருகிறது. என் நண்பர் ஒருவர் கவிதை எழுதுவார். அவரிடம் ஒருநாள், நன்றாக எழுதுகிறீர்கள். நீங்கள் ஏன் கதை எழுத முயற்சிக்கக் கூடாது... என்றேன். வெளியில் இப்படிக் கேட்டாலும் "உள்ளூர மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணம் ‘அப்போதாவது நீங்கள் கவிதை எழுதாமலிருக்க மாட்டீர்களா...’ என்பதுதான்.

    இப்போது நினைத்துக் கொள்கிறேன். ‘ஏர்வாடியிடமிருந்து கவிதை, நாடகம், சிறுகதை, கட்டுரை, உரைச்சித்திரம் போன்றவற்றைக் காப்பாற்ற கலைமாமணி விக்கிரமன் அவர்கள் என்னை நாவல் எழுதச் சொல்லியிருப்பாரோ...' என்று இப்படி நான் நினைத்தாலும்,

    எல்லோரும் சொல்கிறார்கள் நான் எழுத்தின் எல்லா பரிமாணங்களிலும் சோபிக்கிறேன் என்று. மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சிதான் இன்னும் இன்னும் என்று இன்றும் என்னை எழுத வைத்துக் கொண்டிருக்கிறது.

    அலுவலகம் (பாரத ஸ்டேட் பாங்க்) போய்க் கொண்டிருந்த போதே அலுப்பில்லாமல் எழுதிக் கொண்டிருந்தவனுக்கு ஓய்வென்றால் கேட்கவா வேண்டும். ஓய்வுபெற்ற பின் என் முழு நேர வேலை எழுதுவது, நண்பர்களுடைய நிகழ்ச்சிகளுக்குப் போவது, கூட்டங்களில் பேசுவது, நடைப்பயிற்சி, நல்ல நண்பர்களுடன் அரட்டை என்று என்னை ஓய்வில்லாமல் ஆக்கிக் கொண்டு விட்டதால், எதற்கும் கவலைப்பட நேரமில்லாமல் போய்விட்டது.

    அன்று விக்கிரமன் என்னை விரட்டியதைப் போல இன்று திரு. கௌதம நீலாம்பரன் விரட்டவில்லை வேண்டியது மட்டுமல்ல வரவேற்று உற்சாகப்படுத்தி என்னை நாவலாசிரியராகவும் நாட்டுக்கு அறிமுகப்படுத்திவிட்டார்.

    அவருக்கு நான் நன்றி என்று சொன்னால் சம்பிரதாயமாகி விடும். எனவே, அந்த நல்ல நெஞ்சத்தை நிறைவாக வாழ்த்தி அவரது நலனும் நட்பும் நீடிக்க அமைதியாக ஸ்ரீ அரவிந்தர் அன்னையைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்! எழுத்தை விடுங்கள்... பழகி மகிழவும் இப்படியொரு நண்பர் கிடைக்க வேண்டும். நான் கொடுத்து வைத்தவன்.

    இதில் வரும் மூன்று நாவல்களையும் நன்றாகப் படித்து ப்ரூப் பார்த்துப் பதிப்பித்தவர் அவர். அணிந்துரை எழுத இதைவிட வேறென்ன தகுதி வேண்டும். பிரமாதமாக எழுதி என்னைப் பெருமைப்படுத்தியிருக்கிறார். இதற்குமேல் நான் என்னைப் பற்றியும் கதைகளைப் பற்றியும் பெருமையடித்துக் கொள்ள வேண்டியதில்லை. போதுமான அளவு என்பதற்கப்பால் என்னை அன்போடு புகழ்ந்திருக்கிறார்.

    இதில் வரும் நாயகர்கள் நிஜமானவர்கள் அல்ல; எல்லாம் கற்பனைதான் என்றாலும் இரண்டு நாவல்களில் (அதாவது காதல் வெறும் கதையல்ல, நானும் இன்னொரு நானும்) நாயகர்கள் என்னை நினைவுபடுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

    நீங்கள் என்னை நல்லவனாக நினைத்தால் நான் நல்லவனில்லை; மோசமானவன் என்று நினைத்தால் மோசமானவனும் இல்லை. நான் நான்தான்; என் நாயகர்கள் அவர்கள் அவர்கள்தான்.

    இனி நீங்களும் என் பாத்திரங்களும் சந்திக்கும் முன் அன்பு நண்பர் கெளதம் நீலாம்பரன் அவர்களின் அணிந்துரையை அவசியம் படித்துவிட்டு மேலே செல்லுங்கள்.

    என்றும் அன்புடன்,

    ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

    *****

    அணிந்துரை

    கௌதம நீலாம்பரன்

    ஒருமுறைதான் வரும்

    உயரிய முதுமொழி போன்ற வாசகம். இதையே தலைப்பாக்கி, கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன், ஒரு புதினமாகப் படைத்திருக்கிறார்.

    இராமபிரானைப் பற்றிக் கூறும், ‘ஒரு சொல் - ஒரு வில் - ஒரு இல்' என்னும் வாசகம் மிகப் பிரபலம். அவன் ஏகபத்தினி விரதன் என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்ட எழுந்த வாசகம் இது.

    எண்ணிப் பார்க்கும்போது, நம் வாழ்வின் அடித்தளமாக அமைந்து ஒளிர்வதுதான் இந்த ‘ஒருமுறை தான் வரும்' என்பது. பிறப்பு - இறப்பு - கல்வி - காதல் - வாழ்வு என எதை எடுத்துக் கொண்டாலும், இந்த 'ஒருமுறை' என்பது தனிச் சிறப்புக் கொண்டதாகத் திகழ்கிறது.

    ஒவ்வொரு கணப்பொழுதும் இதே தனிச்சிறப்பு கொண்டது தான். ஒரு கணப்பொழுதை நாம் இழந்துவிட்டால், அது மீண்டும் வரவே வராது. நாம் நிகழ்காலம் என்கிற கணப்பொழுதில் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டும். ஒரு நொடிப் பொழுது தாமதத்தால், எத்தனையோ இழப்புகளுக்கு ஆளாக நேரும் என்பது நிதரிசனம்.

    புத்தர்பிரானின் மொத்த தத்துவமும் இதனை அடித்தளமாகக் கொண்டதுதான். ‘கணப்பொழுதில் கவனம் வை' என்கிறார் அவர். ஒரு நொடி கடந்துவிட்டாலும் அது கடந்த காலமாகி விடுகிறது. வரக்கூடிய கணப்பொழுது எப்படி இருக்குமென்று நமக்குத் தெரியாது. ஆனால், நிகழ்காலம் என்கிற நொடிப்பொழுது நம் ஆளுகையில் தான் உள்ளது.

    ஒரு நதி வெள்ளத்தில் நீங்கள் ஒரு கை நீரள்ளும் போது, அது விரைந்து கொண்டிருக்கிறது. மறுகை நீரை நீங்கள் பழைய நதியில் அள்ள முடியாது; புதிய நதிவெள்ளம் வந்து கொண்டே இருக்கிறது.

    'நதியே கொஞ்சம் இரு' என்று நீங்கள் நதிக்குக் கட்டளையிட முடியாது. காலமும் இது போன்றே என்பார் புத்தர்பிரான்.

    ஒரு கதை உண்டு. ஒருவன் சொர்க்கவாசலில் கண்விழித்துக் காத்திருந்தான். அவன் ஒரு கணம் கண்ணை மூடியபோது, சொர்க்கத்தின் கதவு திறந்து, மூடிவிட்டது. அது இனி எப்போது திறக்கும் என்பது தெரியாது. ஒரு ஜென்ம காலம் காத்திருக்கவும் நேரலாம்.

    ஒரு கணப்பொழுதின் முக்கியத்துவத்தை நமக்கு இப்படி எத்தனையோ செய்திகள் உணர்த்திக் கிடக்கின்றன. மகாகவி பாரதி இதையே அவன் பாணியில், 'சென்றதினி மீளாது; இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்கிறான்.

    இந்த நாவலில் வருகிற பாத்திரங்களும் இதையே தான் நமக்கு அவர்களின் வாழ்வு மூலம் உணர்த்துகிறார்கள்.

    ஒரு புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை, அதை இரு குடும்பங்கள் இணைந்து நடத்துகின்றன. அதில் கைராசி மிக்க மருத்துவர் சேகர். அவர் மனைவி நிர்மலாவும் மருத்துவரே. இருவரும் காதல் மணம் - கலப்பு மணம் புரிந்தவர்கள். இவர்களுக்காக, இவர்களின் பெற்றோர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவமனைதான் அது.

    காதல் மணம்தான். ஆனால், டாக்டர் சேகரும் டாக்டர் நிர்மலாவும் மனக்கசப்பை வளர்த்து, மணமுறிவு கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில் புதினம் தொடங்குகிறது. பிரியப்போவது நிஜம் என்கிற நிலையிலும், அவர்கள் இருவரும் சேர்ந்தே கடமைகளை ஆற்றுகிறார்கள். பணியில் எவ்விதத் தொய்வுமில்லை. தனிப்பட்ட வாழ்வை அவர்கள் கடமைக்கு இடையூறாக ஆக்க விரும்பவில்லை.

    இரு ஒரு நாகரிமான உடன்பாடு. இன்று முன் கோபத்தாலும், பரஸ்பரம் புரிந்துணர்வு இல்லாது போவதாலும் நொடியில் முரண்பாடுகளைப் பெரிதுபடுத்தி, வாழ்வை இடியாப்பச் சிக்கலாக்கி, அவதிப்படும் இளம் ஜோடிகள் ஏராளம். இதில் படித்தவர்கள் - சாதாரண குடும்பத்தவர் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. குழைந்து, குழைந்து, கொஞ்சிக் கொஞ்சிக் காதலிப்பார்கள். திருமணம் ஆனபின் பரம வைரிகள் போன்று, பிணங்கியும் பிரிந்தும் சென்றுவிடுகின்றனர்.

    விவாகரத்து வழக்குகளால் குடும்ப நலக்கோர்ட்டுகளே திணறிக் கிடக்கும் நாட்கள் இது.

    என்னைக் கேட்டால், ஏர்வாடியாரின் இந்தப் புதினத்தை ஏராளம் அச்சிட்டு, திருமணப் பரிசாகப் புதுமணத் தம்பதிகளுக்குப் பரிசளிப்பது மிக மிக நல்லது; பயனுள்ள செயல் என்பேன். அதனினும் பெரிதாக யாரேனும் இளம் இயக்குநர் கண்ணிலும் கவனத்திலும் இப்புதின நூல் பட்டு, அவர் இதைத் திரைப்படமாக எடுத்தால், சமூக நலத்திற்கு மிக உதவிகரமாக அமையும். வணிக ரீதியிலும் மிகப்பெரிய 'ஹிட்'டாக அமையும் அத்திரைப்படம்

    கதையில் அத்தனை சுவாரஸ்யங்களை நிறையவே குழைத்து அளித்துள்ளார் ஏர்வாடியார்.

    டாக்டர் சேகர் - டாக்டர் நிர்மலா தம்பதியரிடையே டாக்டர் ரோஹித் - டாக்டர் கிரிஜா என இருவர் புகுந்து, மணமுறிவை நிரந்தரமாக்கி விடுவார்களோ என்று தோன்றுகிறது. ஒரு மாதிரி இந்த ஜோடிகள் மாறிப் பரஸ்பரம் புதுக்காதல் கொள்வார்களோ என்று எண்ணத்தக்க விதத்தில் கதை விரைகிறது. இறுதியில் என்ன நிகழ்கிறது என்பதை நான் இங்கு விவரிப்பது அவசியமில்லை. ஏனெனில், அணிந்துரையில் முழுக்கதையும் சொல்கிற வழக்கமில்லை.

    படிப்பதற்கு சுவாரஸ்யமாகக் கதை சொல்வதோடு, ஏராளமாகச் சமூகப் பண்பாட்டு விஷயங்களையும், மனித மனத்தின் விசித்திர குணமாறுதல்களையும் ஆங்காங்கே அழகுற எடுத்தியம்புகிறார் ஏர்வாடியார். கதை முக்கியமில்லை. கவித்துவமிக்க உரையாடல்களோடு, ஆசிரியர் கூற்றாக எழுத்தாளன் என்ன பேசுகிறான் - எதைச் சொல்ல முனைகிறான் என்பதை அறிவதில் தான் ஒரு நூலின் சுவாரஸ்யமே இருக்கிறது. அதை ஏர்வாடியார் மன நிறைவுடன் செய்துள்ளார்.

    இந்த நூல் மூன்று குறும் புதினங்களை உள்ளடக்கியதாகத் திகழ்கிறது.

    'காதல் வெறும் கதையல்ல' என்று ஒரு குறுநாவல் இடம்பெற்றுள்ளது.

    கதிரவன், ஓர் திரைப்பட இயக்குநர். படங்களில் காதலைச் சுவைபடச் சொல்வாரே தவிர, நிஜவாழ்வில் அவருக்குக் ‘காதல்' என்ற சொல்லே பிடிக்காது. காதலை வெறுக்கும் ஆசாமி அவர். சிறுவயதிலிருந்தே அவர் அப்படித்தானாம். காதலை வெறுத்து அவர் பேசும் வார்த்தைகள் கேட்டு, அவருடைய சக மாணவர்கள், 'இவன் ஒன்பதுடா' என்று ஏளனம் செய்வது வழக்கம் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்.

    திகில் பட மன்னன் ஆல்பர்ட் ஹிட்ச்சாக் பற்றி ஒரு தகவல் உண்டு. பயங்கரங்களையும் மர்மங்களையும் அநாயாசமாகப் படமெடுக்கும் அவர் தனிமையில் இருக்கவே பயப்படுவாராம். நிழலைக் கண்டு கூட நடுங்குவாராம். அதுபோல் காதல் படம் எடுக்கும் கதிரவன் காதலை வெறுக்கும் மனிதராக இருக்கிறார். ஆனால், அவருடைய மகள் பூவழகி இஸ்லாமிய வாலிபனைக் காதலிக்கிறாள். அந்தக் காதலை ஆதரித்தாரா, மகளின் மணவாழ்வு சுபமாக அமைய அனுமதித்தாரா கதிரவன் என்பது இக்கதையின் மையம்.

    கதிரவன் இயக்கும் படங்களின் வெற்றிக்குப் பின்னால், கிரிஜா என்கிற பெண்ணின் கடின உழைப்பு இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு இவர் வாழ்வில் என்ன இடம் அளிக்கப்படுகிறது - அதுவும் அவர் மனைவி மைதிலியாலேயே என்பதில் ஒரு தனி சுவாரஸ்யமும், நெகிழ வைக்கும் செய்தியும் இருக்கிறது.

    மூன்றாவது கதை, 'நானும் இன்னொருவனும்' ஒரு புதிய வெற்றிப்பட நாயகனுக்கான இரட்டை வேடக் கதையாக அமைந்துள்ளது. இதில் படித்து மட்டுமே இன்புற வேண்டிய ஒரு சஸ்பென்ஸ் அடித்தளமாக இருப்பதால், கதை பற்றி ஒரு வரிகூட என்னால் எழுத முடியவில்லை. குணசேகரன், கிராமத்து இளைஞன் - திரைப்படப் பாடலாசிரியனாகப் புகழ் பெறுகிறான். உறவுப்பெண் கஸ்தூரி நேசிக்கிறாள். இன்னொருவன் சந்துரு. கணினி - மென்பொருள் வித்தகன். கைநிறைய சம்பாதிப்பவன். உடன் பணிபுரியும் சசிரேகா அவனை நேசிக்கிறாள்.

    குணசேகரன், சந்திரசேகரன் என்னும் இந்த இருவர் வாழ்விலும் குறுக்கிடும் சிக்கல் என்ன? கஸ்தூரி, சசிரேகா என்கிற இரு பெண்களின் காதல் என்னவாகிறது? இதை விவரிப்பதுதான் இக்கதை.

    இந்த மூன்று குறும் புதினங்களிலுமே எதிர்பாராத திருப்பங்களும், விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நூலைக் கையில் எடுத்தால், ஒரே மூச்சில் படித்து முடிக்கிற விதத்திலும் அமைந்துள்ளன.

    ஏர்வாடியார் சிறந்த கவிஞர், நல்ல பேச்சாளர். அமைதி தவழும் குரலில், அருமையான மலர்களின் மணம் கமழ்வது போன்றிருக்கும் அவருடைய மேடைப் பேச்சு. நல்ல படிப்பு, வங்கிப் பணி தந்த உயரிய அனுபவங்கள், உலகப் பயணங்களால் பெற்ற விவர அறிவு, அரவிந்த அன்னையிடம் கொண்ட பக்தியால் அடைந்துள்ள ஆன்மிக மேம்பாடு, கவிஞனுக்கே உரிய ஆழ்ந்த மானுட நேயம்... இவற்றின் கலவைதான் ஏர்வாடியார். இவர் எழுதியுள்ள ‘ஒருமுறைதான் வரும்' என்கிற இப்புதின நூல் பல விருதுகளைப் பெறும்; பலருடைய பாராட்டுகளைப் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.

    என்றும் அன்புடன்,

    கௌதம நீலாம்பரன்

    *****

    காதல் வெறும் கதையல்ல...

    1

    கற்பனையை வைத்துக் கொண்டு காசு பண்ணிக் கொண்டிருக்கிற காட்டுமிராண்டி, இதயம் என்பது இவனுக்கு ஒரு எந்திரம் மாதிரி. இப்படி எண்ணற்ற வசவுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிற... அல்ல அல்ல... வசித்துக் கொண்டிருக்கிற ஓர் எழுத்து வியாபாரி நான்.

    எனக்குப் புகழ் இருக்கிறது. பணம் இருக்கிறது. பெருமையெல்லாம் இருக்கின்றன. பெரிய மனிதர்களின் தொடர்புகளும் இருக்கின்றன. கம்பீரம் இருக்கிறதோ, இல்லையோ நிறைய கர்வம் இருக்கிறது. ஆனால், உறவுகள் அத்துணை அதிகமில்லை. நண்பர்களும் பெரிதாக இல்லை. வந்து போகிறார்கள், வரவேற்றுச் சிறப்பு செய்கிறார்கள் என்று

    Enjoying the preview?
    Page 1 of 1