Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Padaippu Kadavulin Parambaraiyil Vanthavargal
Padaippu Kadavulin Parambaraiyil Vanthavargal
Padaippu Kadavulin Parambaraiyil Vanthavargal
Ebook149 pages55 minutes

Padaippu Kadavulin Parambaraiyil Vanthavargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“பரிபூரண ஞானமயமாயும் இறைவடிவமாயும் ஐந்தொழில்களையும் சகல ஜீவராசிகளும் சகல உலகங்களும் போற்றி வணங்கும் விஸ்வகர்மா!” என்பது பொருளாகும்.

ஞானம் என்பது எழுத்து வடிவ காலங்கட்கு முன் தோன்றியவையாகும். ‘ஞானமானாய். கல்விமானாய்’ என்னும் மூதுரையின்படி பரிபூரண ஞானம் என்றே விராட் விஸ்வகர்மா அழைக்கப்படுகிறார்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580132006793
Padaippu Kadavulin Parambaraiyil Vanthavargal

Read more from Kalaimamani Ervadi S. Radhakrishnan

Related to Padaippu Kadavulin Parambaraiyil Vanthavargal

Related ebooks

Reviews for Padaippu Kadavulin Parambaraiyil Vanthavargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Padaippu Kadavulin Parambaraiyil Vanthavargal - Kalaimamani Ervadi S. Radhakrishnan

    https://www.pustaka.co.in

    படைப்புக் கடவுளின் பரம்பரையில் வந்தவர்கள்

    விஸ்வகர்மாக்கள் வரலாறு

    Padaippu Kadavulin Parambaraiyil Vanthavargal

    Vishwakarmakal varalaru

    Author:

    கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்

    Kalaimamani Ervadi S. Radhakrishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ervadi-radhakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    படைத்தவனின் பார்வை……

    கலைகளைக் காப்பாற்றுகிறார்கள்!

    படைப்புக் கடவுளின் பரம்பரையில் வந்தவர்கள்

    விஸ்வகர்ம சங்கங்கள்

    விஸ்வகர்ம சமூகம் பற்றிய சில சுவையான தகவல்கள்

    அகில பாரதீய விஸ்வகர்ம பீடாதிபதி, ஆதி சிவலிங்காச்சார்ய பரசமய கோளரி நாத ஆதினம் ஜெகத்குரு ஸ்ரீ சிவஷண்முக ஞானாச்சார்ய குரு ஸ்வாமிகள் அவர்கள் அருளிய ஸ்ரீ முகம்

    ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்பிரம்மணே நம :

    விஸ்வகர்ம ஸ்துதி:

    "ஞானநந்த மயம் தேவம் பஞ்சக்ருத்ய பாராயணம்

    சர்வவ்யாபின மீசானம் ஸ்ரீ விஸ்வகர்மன மாஸ்ரயே!"

    பரிபூரண ஞானமயமாயும் இறைவடிவமாயும் ஐந்தொழில்களையும் சகல ஜீவராசிகளும் சகல உலகங்களும் போற்றி வணங்கும் விஸ்வகர்மா! என்பது பொருளாகும்.

    ஞானம் என்பது எழுத்து வடிவ காலங்கட்கு முன் தோன்றியவையாகும். ‘ஞானமானாய். கல்விமானாய்’ என்னும் மூதுரையின்படி பரிபூரண ஞானம் என்றே விராட் விஸ்வகர்மா அழைக்கப்படுகிறார்.

    ஒலி எழுத்து வடிவம் பெற்ற காலம் வேத காலமாகும். இவ்வேத காலத்தை ஆராய்ந்தால் அது இருவகைப்படும் என்பது தெரிய வரும். இவ்விரண்டையும் ஆராயும் காலத்தே உலகு, சப்த, ஸ்பரிச, ரச, கந்த, ரூப மென வடிவம் பெற்று நிட்கலமாகி சகலங்களாகப் பிரிந்தன என்பது நம்மனோர் கண்ட துணிவு. நிட்கலம் என்பது வடிவமற்றது. அஃது ஞானம், யோகம் எனவும் சகலம் என்பது வடிவங்களைத் தாங்கி பல வடிவங்களாகக் காட்சியளித்துப் பிரகாசிப்பது. இவ்விரு காலங்களும் பரம புருஷ வடிவம் பற்பலவற்றுள் இடம் பெற்ற வடிவம் விராட் விஸ்வகர்ம ப்ரப்பிரமம் எனத் தொன்மறையில் கூறப்படுகின்ற பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர், இந்திரன், சூரியன் எனவும், நீர், நிலம், காற்று, கனல், வெளி எனவும் சிருஷ்டி, ஸ்திதி, திரோபவம், அனுக்கிரஹம், சம்ஹாரம் எனவும் தோன்றி வியாபித்துள்ளன.

    தான் செய்யும் தொழிலைக் கொண்டே தன் குலம் என்னும் பெயரைத் தாங்கி உள்ளது. மறை ஓதுபவன் ‘மறையவன்’ என்றும், வேதங்களை ஓதுவதால் ‘வேதியன்’ என்றும், வாணிபம் செய்வதால் ‘வணிகன்’ அல்லது ‘வைசியன்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இவைகளனைத்தும் இடைக் காலத்தில் அமைந்தவைகள். முதல் நூலாகிய வேதமறையில் செயலும் பெயரும் ஒருங்கமைந்த குலம் விஸ்வகர்ம குலமாகும்.

    ருக்வேத சம்ஹிருதையில் புருஷ சூக்த அனுவாகத்தில் இடம் பெற்றிருப்பதும் விஸ்வகர்ம குலமே ஆகும்.

    "அப்ய சம்பூத ப்ரதிவ்யை ரசாஸ்ய விஸ்வகர்மன

    சமஇ வா ததாதி தஸ்யத் த்வஸ்ட வித்தத்

    ரூபமேதி தத்புருஹஸ்ய விஸ்வ மாஞான மக்ரே

    வேதாக மேதம் புருஷம் மகாந்தம் ஆதித்ய

    வர்ணம் தசமஸ்து பாரே சர்வாணி ரூபாரிவிசித்ய

    தீர ஹா"

    எனத் தெள்ளத் தெளிவாகக் கூறப்படுகின்றது. மேலும் தலையாய பரம மூர்த்தமாய் வியாபித்தும் உள்ளது விஸ்வகர்ம பரப்பிரம்மம்.

    "நபோமி நசலம் சைவா நதேஜா

    நசவாயா: நச ப்ரம்மச ருத்ரச்ச

    நச விஷ்ணுச்ச தாரகா சர்வ

    சூண்ய விலாசண்ச ஸ்வயம்பூ விஸ்வகர்மனஹா"

    என நிலம், நீர், காற்று, கனல், வெளி முதலானதும், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், இந்திரன், சூரியன் எனவாகியவைகளும் தன்னகத்தே கொண்டு தாரகம் என்னும் பிரகாசத்தோடு உபகார மூர்த்தியாய் சகலபுவன நானாவித நிலைகளிலும் வியாபித்திரா நின்றதும் ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரகம் எனவும் ப்ரம்மம், விஷ்ணு, ருத்திர, இந்திர, சூர்யாதி ஐவரும் விஸ்வகர்ம பரமபுருஷனின் ஐந்து முகமாகி, சத்தியயோஜாத, வாமதேவ, அகோர, தத்புருஷ, ஈசனம் எனும் ஒப்பற்ற மூர்த்தத்தின் உப பிரிவாய் விஸ்வகர்ம பரம்பொருளை ஸ்மரணித்துள்ளது. விஸ்வகர்ம பரம்புருஷன் விஸ்வகர்ம பரம அம்சமாய் தவமுயல்வோர் பிறந்து வளர்ந்தே கலைகள் பலவே கற்று தரும மிக்கோர் விஸ்வகர்மர் எனவும் காண்கின்றனர். மேலும் தொன்மறைகளில் சத்யோ ஜாத முதல் ஈசனம் வரை அனுவாகங்களாகவும் காணப்படுகின்றன. அவையாவன:

    சத்யோஜாதம் ப்ரபத்தியாமி சத்யோஜாதாயவை நமோ நம: என சத்யோ ஜாதத்தையும், பவே பவே நாதி பவே பவஸ்வமாம் பவோத் பாவாய நம: என வாம தேவத்தையும், அகோரே ப்யோத கோரேப்யோ கோர கோர தரோம்பேயர், சர்வேப்யோ சர்வ சர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ர ரூபாயமை; என அகோரத்தையும், தத்புருஷாய வித்மது மஹாதேவாயஹி மஹ்தன்னோ சில்பிப் ப்ரசோத யாது என தத் புருஷத்தையும், ஈசான ஸ்சர்வ வித்யாணாம் ஈவரஸ் ஸர்வ பூதானாம் ப்பிரம்மாதிபதி ப்ரம்னனாதிபதி ப்ரம்ம சிவோமே அஸ்து சதாசிவோ என ஈசானத்தையும் மறைகள் புகழ்கின்றன.

    இதிலிருந்து தோன்றியவைகள் தான் ‘மனு, மய, துவஷ்ட, சில்பி, விஸ்வக்ஞ’ எனவும் சானக, சனாதன, அபுவனச, பிரஸ்னஷ, சுபர்னஸ எனவும் தோன்றி அதன் வழி வருவதாய் ‘இரும்பு, மரம், பாத்திரம், சில, பொன்’ என உலகக் கைவினைஞர்களாய் உருவாக்கப்படுகின்றனர்.

    இதனை ஆதார பூர்வமாகிய சிறப்பனைத்தையும் தொன்மையின் புகழினையும் பரந்து கிடக்கும் சிறப்பினைத் தெளிவாக வெளிப்படுத்தி வழிவழி வந்த தொன்மையின் சரித்திர ஆதாரங்களை ஒருங்கே திரட்டி விஸ்வகர்ம மூதறிஞர்களின் இலக்கியச் சிறப்பினை எடுத்தியம்பியுள்ள இலக்கிய மேதை விஸ்வகர்ம யுவசிங்கம் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் தொண்டு இலக்கிய நயம் பெற்றுக் காணப்படுகின்றது. கலைமகள் வாழ்க்கை முகத்ததெனினும் மலரவன் வண் தமிழோற்கு ஒவ்வான் மலரவன் செய்வெற்றுடம்பு மாய்வன போல் மாயா புகழ் கொண்டு மற்று இவர் செய்யும் உடம்பு என இயம்பும் முதுநூலின் இலக்கணமாய் திரு. இராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய இந்நூல் பாரதீயத்தில் விஸ்வகர்மர்கள் தொன்மையின் சிறப்பினைத் தெளிந்து இஃதே போன்ற புதைந்து கிடக்கும் அனைத்துச் சிறப்பினையும் திரட்டி வையம் உய்ய விஸ்வகர்ம வழிகாட்டியாகத் திகழ எல்லாம் வல்ல ஸ்ரீவிராட் விஸ்வகர்ம பரம்பொருளை இறைஞ்சா நிற்கின்றோம்.

    இங்ஙனம்

    ஸ்ரீ சிவசண்முக ஞானச்சாரிய சுவாமிகள்

    ஆதீன கர்த்தர்

    ஸ்ரீ பரசமய கோளரி நாதஸ்வாமிகள்

    ஆதீனம், திருநெல்வேலி - 5.

    படைத்தவனின் பார்வை……

    நான், என் வீடு, எனது ஊர், என்னுடைய மாநிலம், எங்கள் நாடு என்று ஒவ்வொருவருடைய உரிமைகளும், உணர்வுகளும் விரிந்து கொண்டே போகின்றன. இந்த உணர்வுள்ள எவரையும் தம்மைச் சுற்றி ஒரு குறுகிய வட்டத்தைப் போட்டுக்கொள்கிறார் என்று குறை கூறிவிட முடியாது.

    வீடு, ஊர், மாநிலம், நாடு என்பனவெல்லாம் ஒவ்வொரு வட்டத்தையும் உள்ளடக்கியிருக்கிற அடுத்த பெரிய வட்டம் என்பது தான் உண்மை.

    சாதி இரண்டொழிய வேறில்லை என்று ஒளவை சாற்றினாலும், சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடியிருந்தாலும் சாதிகளென்ன இல்லாமலா இருக்கின்றன…?

    இவன் என் மகன், இவன் என் உறவினன் என்று பெருமை பாராட்டிக் கொள்வதைப் போல இவன் என் இனத்தவன் என்று பெருமைப்படாதவன் நிச்சயமாக யாரும் இருக்க முடியாது.

    நம்மில் சாதி, இனம் என்பதெல்லாம் நம் நிலங்களில் காணப்படும் வரப்புகள் போன்றவையாகத்தான் இருக்க வேண்டும். வரப்புகள் உரிமைகளைப் பாகுபடுத்த இடப்பட்டிருந்தாலும் நிலத்தில் விளைகிற பயிர் ஒன்றாக இருப்பதைப் போல சாதிகள் பாகுபட்டிருந்தாலும் மனத்தளவில் இப்பாரதப் பெருநிலத்தின் புதல்வர்கள் என்னும் நினைவே எல்லோரது மனத்திலும் நிறைந்திருக்க வேண்டுமென்பதில் யாருக்கும் இரண்டாவது எண்ணம் இருக்க முடியாது. எனக்கும் அப்படியே.

    வேறொரு சாதியை, இனத்தைக் குறை கூறத்தான் முடியாதே தவிர, ஒரு சாதியின் பெருமைகளை, சமுதாயத்தில் அது சாதித்துள்ள சாதனைகளை, சமூக வளர்ச்சியில் அது ஆற்றிவரும் தொண்டுகளைப் பற்றி எழுதுவதிலும், பாராட்டுவதிலும், பெருமைப்பட்டுக் கொள்வதிலும் என்ன தவறிருக்க முடியும் என்று பாரதத்தின் மிகப்பெரிய ஆங்கில வார ஏடான "இல்லஸ்ட்ரேடட்

    Enjoying the preview?
    Page 1 of 1