Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athu Oru Kanakaalam
Athu Oru Kanakaalam
Athu Oru Kanakaalam
Ebook217 pages1 hour

Athu Oru Kanakaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சில நினைவுகள் காலத்தால் அழியாதவை. இன்று நினத்தாலும் இனிமையான உணர்வலைகளை உள்ளமெங்கும் தவழவிடுபவை! சிறுவயது அனுபவங்கள், மனதில் பதிந்த நிகழ்வுகள், நிமிர்ந்து பார்த்த ஆதர்ச உறவுகள், பாசம் பொங்க அரவணைத்த நட்புகள், சுவாசத்துடன் கலந்துவிட்ட சொந்த ஊர் வாசங்கள் என்றைக்கும் உடன் வருபவை. மனதில் திரைப்படமாய் ஓடும் நினைவுகளின் நிழல்கள் கொடுக்கும் சுகம். மீண்டும் மீண்டும் வசீகரிக்கும் இளமை என்னும் கனாக்காலம்!. வாருங்கள் வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateFeb 4, 2023
ISBN6580126309450
Athu Oru Kanakaalam

Read more from Dr. J. Bhaskaran

Related to Athu Oru Kanakaalam

Related ebooks

Reviews for Athu Oru Kanakaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athu Oru Kanakaalam - Dr. J. Bhaskaran

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    அது ஒரு கனாக்காலம்

    Athu Oru Kanakaalam

    Author :

    டாக்டர். ஜெ பாஸ்கரன்

    Dr. J. Bhaskaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-j-bhaskaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    அணிந்துரை

    என்னுரை

    சரணம் ஐயப்பா!

    அகஸ்தியர் கோவிலும், இராமகிருஷ்ணா பள்ளியும்…

    பொங்கலோ பொங்கல்!

    மாசி மாதமும், சாவித்திரி விரதமும்!

    டூரிங் டாக்கீஸ் நினைவுகள்!

    சைக்கிள் காலம்!

    கோடை டேஸ் இன் சிதம்பரம்!

    மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்…

    கதாநாயகி என்னும் போதினிலே…

    பொம்மைக் கொலுவும் நவராத்திரியும்!

    தீபாவளிக் கனவுகள்!

    ஆர்கானிக் காய்கறி

    மாண்புமிகு மதிப்பெண்!

    மருத்துவக் கல்லூரி நாட்கள்…

    சானீஸ் தியேட்டர்

    சிவாஜியுடன் சில நிமிடங்கள்…

    ஒரு மாட்டினி ஷோ!

    பெண் பார்க்கும் படலம்…

    கல்யாணமாம் கல்யாணம்!! – 1

    கல்யாணமாம் கல்யாணம்!! - 2

    பஜ்ஜி மகாத்மீயம்!!

    பாலும் கறந்த பாலும்!

    லண்டன் நினைவுகள் - 1

    லண்டன் நினைவுகள் - 2

    லண்டன் நினைவுகள் - 3

    தூளியில் துயிலும் சிந்தனைகள்!

    வாழைப்பூ வடை!

    துபாய் போகலாம், வாரீயளா…!

    அடை ஆராய்ச்சி!

    அன்று இப்படியெல்லாம் இருந்தன!

    கே.பி. எனும் பூரண சந்திரன்

    சுழலும் பம்பர நினைவுகள்!

    எப்போதும் வாசித்துக்கொண்டிருந்த பேராசிரியர், மருமகன் எனினும், மகனாகவே கண்டவர், என் எழுத்துக்களின் முதல் வாசகரும், விமர்சகரும் ஆன ஸ்ரீனிவாச ராகவன் என்னும் சீனு ‘அண்ணா’-வுக்கு…

    அணிந்துரை

    எழுதுவதா? வாசிப்பதா? எது கடினம் எனக் கேட்டால், வாசிப்பதுதான் கடினம் என்று எழுத்தாளனே சொல்வான். உண்மைதான். காரணம், எழுதுபவன் ஒரே நோக்கத்தில் எழுதுகிறான்; ஆனால் வாசிப்பவன் பல நோக்கங்களின் பாதிப்புகளுடன் வாசிக்கிறான். எனவே எழுத்தாளன், வாசகனின் கவனம் சிதறாமல் அவன் தன் வரிகளிலேயே நிலைப்பதற்கான அடிப்படை சொல்தேர்வையும், சொல்பாங்கையும் பெற்றிருக்க வேண்டும்.

    தன் எழுத்தின் வெற்றி எக்காலத்தும் வாசகனைச் சார்ந்தே உள்ளது என்பதை எழுதுபவன் அறிந்திருக்க வேண்டும். எப்படி வருகிறேன் என்று அறிவிப்புச் செய்யாமலே சோலைக்குள் மெல்ல நுழையும் தென்றலைப்போல், ஆரவாரமின்றி, வாசகன் மனத்துக்குள் மெல்ல நுழைந்து இடம் பிடித்துவிடும் எழுத்துகளே படைப்பாற்றல் மிக்கவை. இந்த நுட்பத்தை அறிந்த படைப்பாளிகளே வெற்றிபெறும் எழுத்தாளர்களாக விளங்குகிறார்கள். இந்தப் பட்டியலில், வெகு இயல்பாகச் சென்று இடம் பிடித்துவிடுகிறார் திரு. பாஸ்கரன்.

    வாசகனின் கவனத்தை எளிதில் ஈர்ப்பவை கதைகள். கற்பனைக் கதைகள்; நம்பமுடியாத திகில் கதைகள், காதல் கதைகள் அல்லது இவை இரண்டுமே ஒன்றென்று நிறுவும் கதைகள் எனப் பலவகைகள்; பிறகு நாவல்கள், நாடகங்கள். இதனைத் தாண்டி நகைச்சுவைக் கதைகள். இந்த இரசனை வரிசைக்கு மிகத் தொலைவில் இருப்பவை கட்டுரைகள். அதிலும் அரசியல், வாதப் பிரதிவாதங்கள், சர்ச்சைகள், கட்சிசார்புகள் இல்லாத கட்டுரைகள் என்றால் அதற்கு உள்ள வாசகர்களின் எண்ணிக்கை, பாலைவனத்தில் வாழும் பனிக்கரடிகளைவிடக் குறைவாக இருக்கும்… ஈரேழு லோகத்திலும் ஒரு மறுப்பும் சொல்லாமல் ஒத்துக்கொள்ளும் இவ்வுண்மையைப் பொய்யாக்கிய தேவன், சுஜாதா, ஜ.ரா.சு போன்ற படைப்பாளிகளின் வரிசையை நோக்கி வலதுகாலை எடுத்து வைத்துள்ளார் திரு. பாஸ்கரன்.

    கனாக்காலம் என்ற கட்டுரைத் தொகுப்பின் சிறப்புக்கு ஓர் ஒற்றைக் காரணத்தை உரித்தாக்க வேண்டுமென்றால் அதுதான் அனுபவப் பகிர்வு. அதிலும் கடந்த காலப் பதிவு; அதிலும் உள்ளே சென்றால் கடந்த இளமைக் காலப் பதிவு. இதையும் மீறி இன்னும் சென்றால், இது கட்டுரை ஆசிரியரின் கடந்த இளமைக்கால சுயவரலாற்றுப் பதிவு.

    அக்கம்பக்கத்தில் பார்த்து உணரத் தொடங்கிய பள்ளிப் பருவத்திலிருந்து, தான் பெற்ற அனுபவங்களை இனிய நினைவோடைக் கட்டுரைகளாகப் பதிவு செய்வதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும். இவை போன்ற ஒத்த அனுபவங்களைப் பெற்றவர்களைப் பார்த்து, வாருங்கள்… வந்து இந்த நினைவோடையிலும் கால் நனையுங்கள் என்று அறைகூவல் விடுக்கும் துணிச்சல். சிந்தா நதி-யின் லா.ச.ரா-வுக்குரிய துணிச்சலில் ஒரு துளி இவர் மீது தெறித்திருக்குமோ என்று எண்ண வைக்கிறார் திரு. பாஸ்கரன்.

    அனுபவப் பகிர்வு அவ்வளவு எளிதில்லை என்பதற்காகச் சொல்கிறேன்; முதலில் சூழலையும், நிகழ்வுகளையும் இரசித்து அனுபவிக்கும் திறம் வேண்டும். தாமரை இலைத் தண்ணீர் போல உருண்டோடும் விவேகிகள் இதற்கு அறவே அருகதை அற்றவர்கள். அனுபவம் நிகழ்ந்து பல நாட்கள் (டாக்டர் பாஸ்கரன் கேஸில் பல ஆண்டுகள்) ஆனாலும் அது மனத்திலே கல்வெட்டாகப் பதிந்திருக்க வேண்டும். பசு மாட்டைப்போல அசைபோடத் தெரியாதவர்க்கு இங்கே இடமில்லை. அடுத்து, அசைபோடும் நினைவுகளை அழகான மொழியில் எழுதத் தெரிய வேண்டும். அதைவிட முக்கியம் வாசகர்களோடு கனெக்ட் செய்யும் நயமான எழுத்தாகவும் அது இருக்க வேண்டும். (ரிஸ்க் அதிகமான ஏரியா இதுதான்!) இத்தனை பரமபதப் பாம்புகளைத் தாண்டி தாயம் போட்டு கட்டம் கட்டமாக முன்னேற வேண்டும். இதற்கு கட்டப்பா போன்ற வலிமையும் விடாமுயற்சியும் இருக்க வேண்டும். இத்தனையிலும் தேறி வெற்றிவாகை சூடுகிறார் ஆசிரியர் பாஸ்கரன்.

    அரை நூற்றாண்டுக்கு முந்தைய சேதிகளையெல்லாம் நெஞ்சிலுறை அஞ்சறைப் பெட்டியைத் திறந்து, எடுத்து, சரியான காம்பினேஷனில் கலந்து, அழகுதமிழ் என்னும் அடுப்பில் ஏற்றிப் பக்குவமாகச் சமைத்து, ருசிமிக்க ஒரு மெனு?-வைத் தயார்செய்து முப்பது ஐட்டங்கள் கொண்ட தலை வாழை இலை விருந்தைப் படைத்துள்ளார் பாஸ்கரன். என்ன? அகச்சான்று வேண்டுமா? தலைப்புகளிலேயே, பஜ்ஜி அடை வாழைப்பூ வடை என்று போட்டிருப்பதைப் பொருளடக்கத்தில் பார்க்கலாமே! பார்ஸலைப் பிரித்தால் இன்னும் பல சுவைகள் உண்டு. எதையும் சாப்பிட்டு செரிக்கும் அந்த இளவயது உணர்வோடு பக்கங்களைப் புரட்டினால், கத்தரிக்கோல் ஷேப்பில் கைகளை மடக்கி, இலைமுன் சாய்ந்து போதும், போதும், வேண்டாம் என்று சண்டித்தனம் செய்யாமல் போடு… போடு என்று சொல்லி ஒவ்வொரு ஐட்டத்தையும் நாலைந்து முறை கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். உங்களிடம் சொல்வதற்கென்ன? நான் அப்படித்தான் சாப்பிட்டேன். (ஆமாம்! சிலவற்றை ஏற்கனவே முகநூலில் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இரண்டாம் முறையும் கை நீட்டியிருக்கேன்!)

    இக்கட்டுரைகளில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள அனுபவங்களில் கிட்டத்தட்ட தொண்ணூறு விழுக்காடு அனுபவங்களை நம்மில் பலர் தம் இளவயதுகளில் கண்டிருக்கக் கூடும். என்னைப் பொறுத்தவரை, இந்த அனுபவ விகிதம் நூற்றுக்கு நூறு… சிலவற்றை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

    நான் இரசித்ததில் முதலிடம் பெறுவது சைக்கிள் காலம். இதைப் படித்தால் லைஃப் ஈஸ் எ சைக்கிள் என்று புரிந்துவிடும். பன்னிரண்டு இன்ச் சைக்கிளை வாடகைக்கு எடுத்து (அப்ப 2 மணி நேரத்துக்கு இரண்டணாவோ என்னவோ… யாருக்குத் தெரியும்? நம்ம கையில பணப்புழக்கம் இல்லாத காலம் அது! குலமுறைக் காவலாகக் கூடவந்த என் அண்ணாவைக் கேட்டாதான் சரியான விவரம் தெரியும்…!) பின்னாடி மூணு பேர் பிடிக்க, முதுகுத் தண்டை நிமித்தி ஒக்காருன்னு ஒருத்தன் சொல்ல, ஹேண்டல் பாரின் நடுவே பார் என்று இன்னொருவன் பரிந்துரைக்க, சாயாதே சாயாதே என்று மூன்றாமவன் ஓடிவர, இதெல்லாம் காதில் விழுந்தும் செயல்பட முடியாத இறுக்கம் ஒன்று வந்து உடலைக் கட்டிப்போட, எப்படியோ ஒருவழியாக நாம் சைக்கிள் கற்றுக்கொண்ட அந்தக்காலம் நினைவுக்கு வந்தது. அப்புறம் என்ன? சைக்கிள் ராஜாதான்! மாம்பலத்திலிருந்து மயிலையில் இருக்கும் கல்லூரிக்கு தினம் இருமுறைகள் சைக்கிள் சவாரி. அதென்ன இருமுறை? ஒருமுறை கல்லூரி செல்ல; மறுமுறை மாலையில் டென்னிஸ் விளையாட. சிட்டுக்களைப் பார்த்துக்கொண்டே ஸீன் போட்டுக் கீழே விழுந்த வாலிபர் சங்கத்தில் பாஸ்கர் இருந்திருக்கிறாரோ இல்லையோ, என் நண்பர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். இந்த விறுவிறுப்பான கட்டுரை, இன்று வீட்டுக்குள் பயன்படுத்தும் ஸ்டாடிக் சைக்கிளில் வந்து முடியும்போது அந்த சோகத்தையும் சுவைபடச் சொல்லும் ஆசிரியருக்கு ஒரு சபாஷ் போடத் தோன்றுகிறது.

    ஒரு கூடுதல் தகவல்: நான் சைகிள் கற்றுக்கொண்ட இடம், இன்று நினைத்தாலும் நடக்கக்கூட இடமில்லா, தி நகர் ரங்கநாதன் தெரு.

    இந்த நூலில் உள்ள அனைத்து செய்திகளும் கட்டுரையாளரின் சொந்த அனுபவம் என்பதால், இக்கட்டுரைகள் மூலம் பாஸ்கரன் யார் என்று அறியும் முயற்சியிலும், அவருக்கு ஒரு வடிவத்தை மனத்தளவில் கொடுக்க எண்ணும் ஆர்வத்திலும், வாசகர்கள் நிச்சயம் முனைவார்கள். இதற்கு நானும் விலக்கல்ல.

    நான் பார்த்தவரை கலை உலகம் இவரைப் பள்ளி நாட்களிலிருந்தே கட்டிப்போட்டிருக்கிறது. எழுதப்பட்ட முப்பது கட்டுரைகளில் நான்கு தலைப்புகள் திரை உலகம் சம்பந்தப்பட்டவையே! இரண்டாவது இவர் நாவின் சுவை அறிந்த நாவலர்; சாப்பாட்டு விஷயங்கள் பற்றி இவர் எழுதுவதைப் படித்தவர்கள், இந்தக் கண்டுபிடிப்புக்காக எனக்கு ஒற்றைக்காசுகூடத் தரமாட்டார்கள். ஆமாம்! ஊரறிந்த உண்மையைச் சொன்னால் ஆய்வுப் பட்டமா தருவார்கள்?

    பொங்கல், நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகளை அக்காலத்தில் எப்படிக் கொண்டாடினார்கள் என்பதை எழுதும்போது, இவர் சிறுவயதில் எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவங்களைப் பெற்றுள்ளார் எனத் தெரிகின்றது. இப்போது வழக்கத்தில் இருந்து 99.99 % மறைந்துவிட்ட பெண் பார்க்கும் படலம், சம்மர் டேஸ்-ல் நிகழும் விளக்கெண்ணெய் வைபவம், கல்யாணமாம் கல்யாணம் அன்று இப்படியெல்லாம் இருந்தன, போன்ற கட்டுரைகளை, வரலாற்றுத் துறையின் ஆவணக்காப்பு அறைக்குள் பத்திரப்படுத்தவேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் இவற்றையெல்லாம் யாரும் நம்பமாட்டார்கள்.

    எத்தனையோ பருப்பு வகைகள் பற்றி நமக்குத் தெரியும்; கள்ளப் பருப்பு என்றால் என்ன தெரியுமா? திருட்டுத்தனமாகக் கொண்டுவந்த பருப்பா? இல்லையில்லை. இவர் கட்டுரையில் கல்யாண சத்திரத்தில் உக்ராண அறைக்குள்ளிருந்து பேசும் சீஃப் குக் தான் கடலைப் பருப்பைக் கள்ளப் பருப்பாக்கி மொழிகிறார். இதுபோல பல இடங்களில் வழக்குச் சொல்லில் விளையும் இனிமையையும், நையாண்டி நக்கல்களையும் ஆசிரியர் அற்புதமாகப் பதிவு செய்துள்ளார்.

    வற்றல் குழம்பு என்று எழுதிய ஆசிரியர் அதன் வற்றாத சுவையை எழுத்தில் காட்டுகிறார் அடைப்புக் குறிக்குள், கருப்புச் சட்டியில், மெரூன் கலரில், எண்ணெய் திட்டுக்களுடன் என்று ஒரு விளக்க விவரம் தருகிறார். வற்றல் குழம்பைப் பற்றி யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாதென்று என்ன அக்கறை பாருங்கள்? (சாப்பாடுப் பிரியர்கள் மேடை போட்டுப் பேச வேண்டிய, இதுபோன்ற பல இடங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.)

    லண்டனில் சென்று படித்தது, துபாய்க்குச் சென்றது பற்றிய கட்டுரைகள் சிறந்த பயணக் கட்டுரைகளாகப் பரிணமிக்கின்றன.

    அக்காலத்தைப் பற்றிச் சொன்னாலும், அவற்றோடு இக்காலத்தையும் பொருத்திக் காட்டும் திறமை ஆசிரியரிடம் உள்ளது. அது இக் கட்டுரைகளுக்கு மிகச் சிறந்த வரவேற்பைக் கொடுக்கும். அது ஒரு கனாக்காலம் என்பதற்கு இரண்டு பொருள்கள் உள்ளன. ஒன்று அது ஓர் அழகிய காலம் என்பது. இன்னொரு பொருள், இவை பழங்காலத்தில் நிகழ்ந்தவை, இனி கனவில்தான் காண இயலும் என்றும் கொள்ளலாம். ஆனால் இக் கனாக்காலத்தை எழுத்துகள் மூலமாகவும் கண்டு இரசிக்கலாம் என சாதித்திருப்பது இந்நூல்.

    சைக்கிள் காலம் பற்றிக் குறிப்பிடுகையில் நான் என் அனுபவம் பற்றிக் கொஞ்சம் நீளமாகவே ஒரு பின்னூட்டம் எழுதிவிட்டேன். இதுபோல ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பின்னூட்டக் கட்டுரை எழுதும் அளவு, நம் ஒவ்வொருவரிடமும் விஷயம் இருப்பதை சுட்டிக் காட்டுவதுவதுதான் அது ஒரு கனாக்காலம் நூலின் வெற்றி.

    இலக்கிய வானில் ஒர் ஒளிமிகுந்த தாரகையாக வளர்ந்து வரும் டாக்டர் பாஸ்கரனின் படைப்புகளில் இதுவும் ஒரு தரமான நூலாக வெளிவந்துள்ளது.

    அணிந்துரை

    அது ஒரு கனாக்காலம் புத்தக வடிவில் மொத்தமாகப் பார்க்கும்போது என் மனதில் பொங்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வடித்துவிட முடியாது. காரணம் இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் லேடீஸ் ஸ்பெஷலில் பதிக்கும்போது அனுபவித்து ரசித்திருக்கிறேன்.

    நான் கொஞ்சம் பழங்காலம்.

    Enjoying the preview?
    Page 1 of 1