Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sila Paathaigal... Sila Payanangal...
Sila Paathaigal... Sila Payanangal...
Sila Paathaigal... Sila Payanangal...
Ebook208 pages1 hour

Sila Paathaigal... Sila Payanangal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சில பாதைகள்... சில பயணங்கள்... சாதனைப் பெண்களின் சுவடுகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார்கள். சகோதரி பாரதி பாஸ்கர் அவர்கள் இன்றைய நவீன உலகில் பெண்கள் பற்றி அரிய செய்திகளை நயமாகவும், நையாண்டியுடன் 'சீறுவோர்ச் சீறு' என்ற முண்டாசுக் கவிஞனின் கோபத்தை போல் தன் நியாயங்களை முன் வைக்கிறார்கள். ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் படுகின்ற பாடுகளை உரிமையுடன் மகாகவியின் புதுமைப் பெண்ணாக கலகக் குரல் கொடுக்கிறார். இந்த அற்புதமான கட்டுரைகள் 'மங்கையர் மலரில்' தொடராக வந்தபோது வாசகர் கொடுத்த உற்சாகம் நூலாக உங்கள் கரங்களில் தவழ்கிறது.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580109108420
Sila Paathaigal... Sila Payanangal...

Read more from Bharathi Baskar

Related to Sila Paathaigal... Sila Payanangal...

Related ebooks

Reviews for Sila Paathaigal... Sila Payanangal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sila Paathaigal... Sila Payanangal... - Bharathi Baskar

    http://www.pustaka.co.in

    சில பாதைகள்... சில பயணங்கள்...

    Sila Paathaigal... Sila Payanangal...

    Author :

    பாரதி பாஸ்கர்

    Bharathi Baskar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bharathi-baskar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    முன்னுரை

    1. குருதிப் பூக்கள்

    2. சாவித்திரி எனும் குண்டம்மா

    3. முதியோர் இல்லத்தில் ஒரு ரோஜாச் செடி

    4. மன்னிப்பு எனும் அமுதம்

    5. ஆமையும் முயலும்

    6. நான்... மற்றும் நான் மட்டுமே

    7. ஊரெல்லாம் விஷச்செடி

    8. செல்லாத்தா செல்ல மாரியாத்தா

    9. பி.டி. உஷாக்கள் மற்றும் மேரி கோம்கள்

    10. லிஃப்ட்

    11. ஒளி மிகுந்த மரணம்!

    12. வாழ்க்கை ஒப்பந்தம்

    13. மாஸ்டர் செஃப்

    14. ஏழு ஸ்வரங்களுக்குள்...

    15. பிழைத் திருத்தங்கள்

    16. வலியின் துடி

    17. எழுதப்படாத கவிதைகள்

    18. எங்கெங்கு காணினும் பெண்மையடா…

    19. நடையாய் நடந்த முதல் பெண்

    20. முள் பாதையில் ஒரு பயணம்

    பின்னுரையாக…

    பேராசிரியர்,

    சாலமன் பாப்பையா,

    தமிழ்த்துறைத் தலைவர் (ஓய்வு),

    அமெரிக்கன் கல்லூரி, மதுரை

    1,விசுவாசபுரி 4 தெரு,

    ஞான ஒளிவுபுரம்,

    மதுரை - 625 016,

    அணிந்துரை

    ‘சில பாதைகள்... சில பயணங்கள்…’ என்ற இந்த ‘உத்வேகத் தொடர்’ மங்கையர் மலரில் மலர்ந்து மணக்கத் தொடங்கிய போதே அநேக நெஞ்சங்களை சினேகப்படுத்தத் தொடங்கிவிட்டது.

    அது என்ன ‘பாதைகள் - பயணங்கள்?’ அவற்றுள் என்ன ‘உத்வேகம்’ என்கிறீர்களா? உற்சவ நோக்கம் இல்லாமலா, இல்லாத தேருக்கு எழுத்து வடம் பிடிப்பார் திருமதி பாரதி பாஸ்கர்?

    பாரதி பாஸ்கர் ஒரு எழுத்துப் போராளி. இந்த மண்ணில் பெண்ணாய்ப் பிறந்ததில் அளப்பரிய ஆனந்தம் அவருக்குள். அந்த ஆனந்தத்தில் ‘திமிர்ந்த ஞானத்தோடு’ நிமிர்ந்து நிற்பவர். ‘மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன்’ என்ற மகாகவி பாரதியின் இலட்சிய முழக்கம் இவரது இதய நாதம்.

    அதனால், சக பெண்களின் சஞ்சலக் குரல்களை, அபய ஓலங்களை, பழந்தடங்களின் பாதுகாப்பின்மையைக் கேட்டுப் பௌர்ணமிக் கடல் அலையாய் எழுத்தில் பொங்குகிறார். பெண்ணினத்தை ஒரு புதிய விடியலை நோக்கிய புரட்சி வடிவங்களாக்க, நவீன ‘பாவை நோன்பிற்கான’ பயணத்திற்கு ஆயத்தம் செய்கிறார். அந்தப் பயணத்திற்கான பயிற்சிப் பட்டறையே இந்த நூல்.

    ஆண். என்ன வேண்டும் என்றாலும் எண்ணலாம். எழுதலாம், இயங்கி இயக்கலாம்!

    பெண்? அவளுக்கு எண்ணமா? அவள் பேதைமையில் மேதமை கொள்ளட்டும்; அது போதும்! இது ஏன்? என்று அதட்டிக் கேட்கும் அகத்துணிச்சல் காத்திர ஆத்திரத்துடன் கடல் முழக்கமாய் வரவேண்டாமா? ‘அகத்து அடியாள்’ ஆகவே அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டுமா?

    கனவுகளோடும் காதலோடும் ககன வெளிகளில் காதலனுடன் கைகோத்து உலவும் ‘நிர்பயா’க்கள் ஆண்களின் பாலியல் வன்முறைகளால் காட்டு மலர்களாகக் கால் மிதிபட்டு வாடி வதங்கி வாழ்விழந்துதான் போக வேண்டுமா? கொதிக்கிறார் இவர்.

    சாவித்திரிகள் மட்டுமே சத்தியவானைச் சாவிலிருந்து மீட்கும் சங்கீதம் பாட வேண்டும்! சத்தியவான்கள்? அவள் உடல் நோய் தீர்க்க ஓர் அடிகூட எடுத்து வைக்க மாட்டார்கள். அவளை வேண்டாம் என்று வெறுத்துப் பிறிதொரு சாவித்திரியின் பின்னே போய்விடுவர்! ‘அனுமதித்தால்தானே அடுத்தவர் அவமானப்படுத்துவார்’ என்று சங்க நாதம் எழுப்பும் சாவித்திரியைச் சமைக்க வேண்டாமா?

    வணங்கப்பட வேண்டிய பெற்றோர்க்கு வழங்கப்பட வேண்டிய இறுதி மரியாதையைச் செய்யக்கூட வரமுடியாமல் பணத்தை விரட்டிக் கொண்டு வாழும் இழிநிலை புதிதாக எழுந்திருப்பதைக் கண்ட ஒரு புதுயுகப் பெண்மணி... சுமந்து கொடுத்தவளே வாசலைத் திறந்து வரவேற்பதற்கான இறுதி மரியாதையைச் செய்யும் மன உறுதிதான் சாவித்திரி வைத்தி!

    கற்றது கற்றபடி நிற்கத்தானே... என்ன செய்ய? சில கற்ற பெரிய்...ய மனிதர்கள், காசு காணும் வழிகளை நாடித் தேடி உறவுகளையும் பந்தங்களையும் உதறித் தள்ளி விடுகிறார்களே...! இதுவா கல்வி? பள்ளிக் கல்வியே இல்லாத லக்ஷ்மி அத்தையின் பயணத்தைக் காட்டும் போது நம் உள்ளம் அழுது கரங்கள் உயர்ந்து அவரை வணங்கத் தோன்றவில்லையா!

    வார்த்தைகளும் வாழ்க்கை வழிகளும் வரைந்திருக்கும் உள்ள, உடல் காயங்களால் ஆறுதலும் தேறுதலும் இல்லாமல் அழுது சாம்பும் பெண்மையின் வலிகளும் கண்ணீரும் அவர்தம் படுக்கைக்கு மட்டுமே பரிச்சயமானவை. அத்தகைய அவலங்களை பாரதி பாஸ்கர் சொற்சித்திரமாக்கும் போது இவரது மன அறைகளில் அணிவகுத்து நின்ற சொற்கள், கருத்துக்களாகி வாசகர் நெஞ்சில் சரியாசனம் பெற்றுச் சம்மனம் போட்டுக் கொள்கின்றன.

    சுமை இல்லாது ஓடும் முயலுக்கும், ஓட்டைச் சுமந்து நடக்கும் ஆமைக்குமான போட்டியில் இவர் படைத்திருக்கும் சித்திரங்கள் பல... பல... பல…

    இது பெண்ணிற்கு என்று பிறந்துவிட்ட வாதை. இதை எதிர்த்து இனிப் பயணிக்க இதுவே பாதை... இவர்கள் பயணித்தவர்கள்... வாருங்கள் இந்த முன் ஏர்ப் பயணிகள் படைத்த ஆயுதங்களை ஏந்துவோம் என்று அழைக்கிறார் திருமதி பாரதி பாஸ்கர்.

    அந்த இலட்சிய இலக்கை எட்டப் படைக்கப்பட்ட இந்த நூலுள், கதை சொல்லும் திறத்தால், காட்டும் சான்றுகளால், கம்பீரமான கருத்துகளால் புதியதோர் தொடர் பயணத்திற்குப் பெண்ணினத்தை மட்டும் அல்ல: மானுடத்தின் மொத்த நேசக்கரத்தையும் இவர் வேண்டுகிறார்.

    இவர்தம் பயணம் வெற்றி பெற அளப்பரிய ஆனந்தத்துடன் ஆசிகளை வழங்கி வாழ்த்துகிறேன்.

    முன்னுரை

    டிசம்பர் 16, 2012, டெல்லியில் நிர்பயாவுக்கு அந்தப் பயங்கரம் நடந்த நாள். ‘கடைசி வரை நிர்பயா போராடினாள். வாழ்வதற்கான தீவிரமான உந்துதலோடு இறுதி மூச்சு வரை முயற்சி செய்தாள்’ என்ற செய்தி எனக்கு ஆழமான உத்வேகத்தை அளித்தது. அவளது போராட்டமும் அவள் வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையும் முதல் கட்டுரையின் களமாயின. அதன்பின் ஒவ்வொரு கட்டுரையிலும் ‘ஒரு பெண்... அவளது வாழ்க்கை...’ என்கிற இணைப்புச் சரடோடு கட்டுரைகள் வளர்ந்தன.

    மங்கையர் மலர் பத்திரிகையில் இந்தத் தொடர் வெளி வந்தபோது பரவலான வாசிப்பையும் கவனத்தையும் ஈர்த்தது. காலம் என்னும் பெரு மணற்பரப்பில் அழியாமல் தடம் பதித்த சில முன் ஏர்ப் பெண்களின் பாதைகளைத் தேடவும், அவற்றைத் தொடரில் பதிவு செய்யவும் இந்தத் தொடர் எனக்குப் பெரும் வாய்ப்பைத் தந்தது. அந்த வாய்ப்பினை நான் ஒரு வரமாக ஏந்திக் கொண்டேன். இந்தப் புத்தகத்தில் உள்ள மற்றும் சில கட்டுரைகள் ஹிந்து தமிழ் நாளிதழிலும், பல்சுவைக் காவியம் மற்றும் கலைமகள் தீபாவளி மலரிலும் வெளியானவை.

    இன்னும் எழுதப்பட வேண்டிய பெண்களின் வரலாறுகள் அனேகம். அவர்களின் கதைகளை எழுதுவது சமூகத்தின் வரலாற்றினை எழுதுவதற்கு ஒப்பானதே, ஏனெனில் காலங்காலமாக பெண்ணே சமூகத்தை முன்னெடுத்துப் போகிறாள். தியாகத்தாலும், போராட்டத்தாலும் பாதைகளை உருவாக்கிச் செல்கிறாள். சமூகத்தைத் தன் இடுப்பில் ஒரு குழந்தையைப் போலத் தூக்கிச் சுமக்கிறாள்.

    அப்படி எத்தனையோ சாதனைகளைச் செய்திருந்தும், எழுதப்படாமலே போன வரலாறுகளுக்குச் சொந்தக்காரர்களான எண்ணில்லாப் பெண்களின் காலடித் தடங்களுக்கு என் வணக்கங்கள்.

    எங்கள் நடுவர் திரு. சாலமன் பாப்பையா இந்நூலுக்கு அணிந்துரை அளித்துள்ளார் என்பதைக் காட்டிலும் இந்த நூலுக்கு என்ன பெருமை கிடைத்துவிட முடியும்? அவரின் காலடியில் அமர்ந்து தமிழ் அறிந்த எத்தனையோ மாணவர்களில் நானும் ஒருத்தி. கடல் போல் இருக்கிறது அவரது ஞானம். அதைவிடப் பெரிதாக இருக்கிறது அவரது பெருந்தன்மை, வாழ்க்கையையும் மனிதர்களையும் எப்படிப் பார்க்க வேண்டும் என்ற அனுபவப் பாடத்தை எங்களுக்கு ஓயாது கற்பிக்கும் அவர், தம் பணிகளுக்கிடையே இந்த நூலுக்கு அணிந்துரை அளித்தமைக்கு என் நன்றிகள்.

    தொடர் வெளிவந்தபோது பல வகைகளிலும் உதவி செய்த மங்கையர் மலர் ஆசிரியர் குழுவிற்கும், கட்டுரைகளுக்கு ஓவியம் வரைந்த திரு. செல்வத்திற்கும் நன்றிகள்.

    ஒவ்வொரு கட்டுரையையும் எழுத்தெண்ணிப் படித்து எனக்கு உற்சாகமும், ஊக்கமும் கொடுத்த நண்பர் திரு. ராஜாவிற்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன்?

    அன்புடன்,

    பாரதி பாஸ்கர்

    1

    குருதிப் பூக்கள்

    டெட்லி பேருந்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிரிழந்த ‘நிர்பயா’வின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டு, அவளது இறுதிப் பயணம் தொடங்கிய நாள் அன்று இந்தத் தொடரை எழுதத் தொடங்குகிறேன்.

    2012 டிசம்பர் 16 ஆம் தேதி, அன்றுதான் அந்த விபரீத பஸ் பயணம் நடந்தது. அன்றைய காலை அவளுக்கு எப்படி விடிந்திருக்கும்? டெல்லியின் நடுங்கும் குளிரில் ‘இன்னும் கொஞ்ச நேரம்’ என்று சிணுங்கியபடி தன் ரஜாயை இழுத்துப் போர்த்திக் கொண்டு, அந்தப் போர்வை தரும் கதகதப்பில் சுகமாய் அவள் கிடந்திருக்கக் கூடும். அம்மா செய்யும் பராத்தா, அடுப்பில் ‘சொய் சொய்’ என்று திருப்பிப் போடப்பட்டு கல்லின் சூட்டில் கன்னம் சிவந்திருக்கும். டி.வி. ரிமோட்டுக்காக தம்பிகளோடு அவள் செல்லச் சண்டை போட்டிருக்கக் கூடும். ‘அம்மா, நான் சினிமா போயிட்டு வருவேன். லேட் ஆகும். கவலைப்படாதே’ என்று சொல்லிவிட்டு வெளியே போகும்போது, அந்த வீட்டின் வாசலில் அவள் வளர்க்கும் ரோஜாச் செடிக்கு ஒரு குவளை நீரை அவள் ஊற்றியிருக்கலாம். அன்று பூத்த ஒரு ரோஜா தன் இதழில் இருந்து ஒரு துளி மௌனக் கண்ணீரை அவளுக்காகச் சிந்தியிருக்கலாம். அதன்பின் ‘நிர்பயா’ வீட்டுக்குத் திரும்பவில்லை.

    இப்படி நடப்பது முதல் முறையா என்ன? இந்த விபரீதங்களுக்குக் காரணம் ‘பெண்கள் பத்து மணிக்கு மேல் வெளியே போறதுதான்’ என்கின்றன சில குரல்கள். ‘ஒரு கட்டுப்பாடுன்னு வைச்சது இப்படியெல்லாம் நடக்காம இருக்கத்தான்’ என்கின்றன மேலும் சில குரல்கள். ‘காரணமே இவங்க போடற டிரஸ்தான் ஸார்’ என்று பலர் கவலைப்படுகின்றனர் கண்ணீர் வடித்தபடியே... பெண்களின் உடைகளும் அவர்கள் நடந்து கொள்ளும் முறைகளும் ஆண்களைத் தூண்டுகின்றனவா? இவற்றால்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகுகின்றனவா?

    பாட்டா செருப்புக்கடை காலுக்கு மெத்து மெத்துன்னு எந்த செருப்புச் சேரும்...? கண்ணால் அளவெடுக்கும் நான்... மாம். எனக்கு ஹை ஹீல்ஸ் ஸ்லிப்பர்... என்று

    Enjoying the preview?
    Page 1 of 1