Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yeri Kuthithida Oru Yezhadi Suvar
Yeri Kuthithida Oru Yezhadi Suvar
Yeri Kuthithida Oru Yezhadi Suvar
Ebook150 pages54 minutes

Yeri Kuthithida Oru Yezhadi Suvar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

லாக்டௌன் காலங்களின் கண்ணீரை, நகைமுரண்களை, புலம் பெயர்ந்தவர்கள் நடந்து சென்ற பாதச்சுவடுகளை, சந்தித்த அல்லது பிரிந்த அபூர்வ மனிதர்களை, சமையலை, சங்கீதத்தை, எதையெதையோ பகிர்ந்து கொண்ட கட்டுரைகள் இதில் இடம் பெற்றன.

கட்டுரைகள் அத்தனையும் அற்புதமான மிகவும் ஆழமான கருத்துள்ளவை. இருளில் மறைந்த உண்மைகளை வெளிச்சம் பாய்ச்சி வெளியுலகிற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்

Languageதமிழ்
Release dateAug 13, 2022
ISBN6580109107446
Yeri Kuthithida Oru Yezhadi Suvar

Read more from Bharathi Baskar

Related to Yeri Kuthithida Oru Yezhadi Suvar

Related ebooks

Reviews for Yeri Kuthithida Oru Yezhadi Suvar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yeri Kuthithida Oru Yezhadi Suvar - Bharathi Baskar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஏறிக் குதித்திட ஓர் ஏழடிச் சுவர்

    Yeri Kuthithida Oru Yezhadi Suvar

    Author:

    பாரதி பாஸ்கர்

    bharathi baskar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bharathi-baskar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வேகமெடுக்கும் ரதம்

    என்னுரை

    1. ஏறிக் குதித்திட ஓர் ஏழடிச் சுவர்!

    2. இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாத ஆண் மனம்

    3. பனி படர்ந்த மலையின் மேலே...

    4. யார் கொடுத்த உரிமை?

    5. காவியக் காதல்

    6. மகள்களால் மிளிரும் வீடு

    7. புலம் பெயரும் தொழிலாளர்கள்

    8. தாசி குஞ்சரம்மாள்

    9. இருள் என்பது குறைந்த ஒளி

    10. காக்கை குருவி எங்கள் சாதி

    11. நாகநந்தி எஃபெக்ட்

    12. யானைப்பசி

    13. கே. பாலச்சந்தர் - யுகங்களின் இடையில்

    14. தி. ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’

    15. என்னால் மூச்சு விட முடியவில்லை

    16. அம்மம்மா கேளடி தோழி

    17. எழுத்தறிவித்த இறைவிகள்

    18. தூங்கும் பெண்

    19. மேடை ஏறிப் பேசும்போது ஆறு போலப் பேச்சு...

    20. அன்ன விசாரம்

    21. காம்போஜி

    22. இனிமேல் புத்தங்கள் டிஜிடலில்தானா?

    23. மின்னணு நார்ஸிஸம்

    24. கிரேசி

    25. எஸ்.பி.பி. இல்லாத வாழ்க்கை

    26. மனோகர் தேவதாஸும் மஹிமாவும்

    27. ஷண்முக சுந்தரம் - மோஹனாவின் கல்யாணம்

    28. சாப்பிடுவதும் ஒரு கலை

    29. பிளாஸிபோ

    30. கிரேட்டா - காலத்தின் குரல்

    31. ஹாத்ராஸ்

    32. ஃபிரான்ஸிஸ் ஹௌகனும் நானும்

    33. மானுடம்

    வேகமெடுக்கும் ரதம்

    பாரதி பாஸ்கரின் ‘ஏறிக் குதித்திட ஓர் ஏழடிச் சுவர்’ என்ற கட்டுரைத் தொகுப்பு என் கைக்கு முன்னுரைக்காக வந்தது. சாவகாசமாகப் படிக்கலாம்; இப்போதைக்கு மாதிரிக்கு ஒரு கட்டுரையைப் பார்ப்போம் என்று படிக்கட்டின் கடைசிப் படியில் உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கினேன். அடுத்த கட்டுரை, அடுத்த கட்டுரை என்று போனது. அத்தனை சுவாரஸ்யம். அரிய தகவல்கள். அடிக்கோடிட வேண்டிய வசனங்கள். ஒன்றரை மணி நேரத்தில் முழுத் தொகுப்பையும் படித்து முடித்துவிட்டேன்.

    கட்டுரைகளின் சிறப்பு அவற்றின் உள்ளே ஓடும் அன்பு, கருணை, மனித நேயம்தான். கனடாவில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு பெண் அகதி தன் இரண்டு மகள்களுடன் நீதிபதி முன் நிற்கிறார். போர் அவலம் காரணமாக ஈழத்திலிருந்து தப்பி நீண்ட பயணம் செய்து கனடாவுக்குள் நுழைந்தவர். நீதிபதி கேட்டார், ‘வாழ்க்கையில் உங்கள் இலக்கு என்ன?’

    ‘இலக்கு, இலக்கு. காலையில் படுக்கையில் இருந்து எழும்புவதுதான்’ என்றார்.

    ‘நல்லது, நீங்கள் உங்கள் மகள்கள் மேல் அன்பு செலுத்துகிறீர்களா?’ அகதிப் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘அன்பா, அது என்ன ஐயா? என் இரண்டு மகள்களையும் சாகாமல் உயிரோடு வைத்திருக்கிறேன்.’

    அன்பை வெளிப்படுத்த எத்தனை வழிகள்தான் உள்ளன. பாரதி பாஸ்கர், லங்கேஷ் என்கிற கன்னடக் கவிஞர் தன் தாயைப் பற்றி எழுதிய கவிதையைத் தருகிறார்.

    "அவள் அழகியா? அறியேன்

    காட்டுக் கரடி போல் வாழ்ந்தாள்.

    பிள்ளைகளைக் காத்தாள்;

    குடும்பத்திற்காக ஓய்வில்லாது உழைத்தாள்.

    சண்டையிட்டாள். அவளுக்கு நன்றி.

    வயலில் இருந்து வீட்டுக்குப் போவதுபோல்

    வாழ்வில் இருந்து மரணத்துக்குப் போனாள்."

    அன்பு பற்றி சில கட்டுரைகள்; அறம் என்பதை வலியுறுத்தும் வேறு கட்டுரைகள். இப்படியாகத் தொகுப்பில் மாறி மாறி அவை இடம் பெறும். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்குவேஸ் எழுதிய நாவலில் ஒரு சம்பவம். சின்னக் கிராமம் ஒன்றுக்கு தேவாலயத்தின் பேராயர் வருவார். கிராமத்துப் பெண்கள் வரிசையாக நின்று ஆசீர்வாதம் பெறுவார்கள். ஒரு பெண் மட்டும் மறுத்துவிடுவாள். மற்றவர்கள் வற்புறுத்திக் கேட்ட பின்னர் அவள் சொல்வாள். ‘பேராயருக்கு சூப் வைக்க சேவல் கொண்டையை மட்டும் வெட்டி எடுத்துக்கொண்டு மீதியுள்ள சேவல் உடல்களை குப்பைத் தொட்டியில் வீசிவிடுவார்கள். அப்படியான ஆள் இவர். இவரிடம் நான் ஒருபோதும் ஆசீர்வாதம் பெறமாட்டேன்’. ஒரு கிராமத்துப் பெண்ணின் அறம் பற்றிய பார்வை நம்மை சிந்திக்க வைக்கிறது.

    இந்தத் தொகுப்பில் அறம் என்றால் என்ன என்பதைப் புரியவைக்கும் உருக்கமான பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. யாகூப் மொகம்மத் உத்தரப்பிரதேசத்திலிருந்து சூரத் நகரத்துக்குப் புலம்பெயர்ந்து ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான். அங்கே அவனுடன் வேலை செய்யும் இன்னொருவன் அம்ரித். கொரோனா வந்தபோது தொழிற்சாலையை மூடிவிட்டார்கள். இவர்களுக்கு வேலை போய்விட்டது. பணமும் இல்லை. கொரோனா பயம் வேறு. எப்படியும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று சரக்குவண்டி ஒன்றை அமர்த்தி ஆளுக்கு ரூ.4,000 கொடுத்து சில தொழிலாளிகளுடன் பயணம் புறப்படுகிறார்கள். வழியில் அம்ரித்தின் உடல்நிலை சீர்கெட அவருக்குக் கொரோனா பிடித்துவிட்டதென பயந்து மற்றவர்கள் அவரைப் பாதி வழியில் இறக்கிவிடுகிறார்கள். அம்ரித் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் மனம் மாறவில்லை. யாகூபுக்கு அந்தக் கணம் என்ன தோன்றியதோ வண்டியிலிருந்து குதித்து விடுகிறான். அவனுடைய அறம் அது. வேறு வண்டி அவனுக்குக் கிடைக்கவே இல்லை. இறந்துபோன நண்பனின் உடலை மடியிலே போட்டுக்கொண்டு அழுகிறான்.

    நாடியா முராட் 19 வயது ஏழை ஈராக்கிய பெண். ஒருநாள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்கள் கிராமத்தைச் சூறையாடினார்கள். அவளுடைய தாயையும், ஆறு சகோதரர்களையும் கொலை செய்தனர். அவளை மோசூல் நகரத்துக்கு கடத்திச் சென்று ஏலம் விட்டார்கள். 90 நாட்கள் அவள் பல பேருடைய கைகளுக்கு மாறினாள். தொடர்ந்து பாலியல் சித்திரவதை அவள் உடல் மேல் நிகழ்ந்தது. ஒருநாள் அவள் ஏழடி உயரச் சுவரை தாண்டிக் குதித்துத் தப்பி ஓடுகிறாள்.

    அதன் பின்னர்தான் அவள் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. நியூயார்க் நகரில் பிரபலமான வழக்கறிஞர் அமால் க்ளூனியை சந்திக்கிறாள். ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியின் மனைவி இவர். அமால் அறத்துக்காகப் போராடுபவர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாடியா தன் கதையைச் சொல்ல ஏற்பாடுகள் செய்கிறார். கவுன்சில் உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி. நாடியாவின் அவலம் உலகச் செய்தியாகிறது. 2018ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு நாடியா முராட்டுக்கு வழங்கப்படுகிறது.

    இன்னொரு முக்கியமான சம்பவத்தையும் பாரதி பாஸ்கர் தன் நூலில் விவரிக்கிறார். 2019ஆம் வருடம் டைம் பத்திரிகை ‘மகத்தான மனிதர்’ பட்டத்தை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் போராளி, 16 வயது கிரேட்டா தன்பர்க்குக்கு வழங்குகிறது. உலகத் தலைவர்கள் கூடியிருந்த மாபெரும் சபையில் அவர்களைக் குற்றம் சாட்டுகிறாள் சிறுமி கிரேட்டா. இந்த உலகம் உங்களுக்குச் சொந்தமானதில்லை. இதன் தற்காலிக பாதுகாப்பாளரே நீங்கள். பூமியைக் காப்பாற்றி எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்குவது உங்கள் கடமை. பூமியை அழிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று துணிச்சலுடன் விளாசுகிறாள். 92 வருடங்களுக்கு முன்னர் ‘மகத்தான மனிதர்’ விருதைப் பெற்றவர் சார்லஸ் லிண்ட்பர்க். முதன்முதலாக அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து நியூயார்க்கிலிருந்து பாரிசுக்கு விமானம் ஓட்டியவர். அவர்தான் இந்த விருதைப் பெற்ற முதல் ஆள். அவர் அப்போது என்ன சொன்னார்? ‘என்னைக் கேட்டால் விமானங்களை உருவாக்குவதிலும் பறவைகளைப் பாதுகாப்பதுதான் முக்கியம்’, எவ்வளவு தீர்க்கதரிசனம். 92 வருடங்களாக நாம் அதே இடத்தில்தான் நிற்கிறோம்.

    மலையேறியின் கதை ஒன்றும் தொகுப்பில் வருகிறது. ஜார்ஜ் மாலெரி இங்கிலாந்து நாட்டுக்காரர். உலகத்து மலைகளில் ஏறி சாகசம் செய்யும் இவர் இரு தடவை எவரெஸ்ட் சிகரத்தைத் தொட முடியாமல் தோல்வி கண்டவர். அவருடைய மனைவி ரூத் கர்ப்பமாயிருக்கிறார். ஆகவே மூன்றாவது முறை

    Enjoying the preview?
    Page 1 of 1