Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thi.Ja. Noottrandu 50 Sirukathaigal - Oru Paarvai!
Thi.Ja. Noottrandu 50 Sirukathaigal - Oru Paarvai!
Thi.Ja. Noottrandu 50 Sirukathaigal - Oru Paarvai!
Ebook282 pages1 hour

Thi.Ja. Noottrandu 50 Sirukathaigal - Oru Paarvai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தி.ஜா.வின் சிறுகதைகளில் ததும்பும் நகைச்சுவை, சொல் பொறுப்பு, சொற்செட்டு, சௌந்தர்ய உபாசனை, மாரில் அடித்துக்கொள்ளாமல் அமைதியாகத் தெரிவிக்கும் மனிதாபிமானம், பெண்களின் மன உறுதி, அவர்களின் சுதந்திர தாகம் ஆகியவற்றை இந்நூலின் பல்வேறு பக்கங்களில் சிறப்பாக எடுத்துக்காட்டியிருக்கிறார் டாக்டர் பாஸ்கரன். வாருங்கள் நாமும் ஜானகிராமனின் ஆழ்ந்த புலமையையும், பாஸ்கரனின் தேடல் முயற்சியையும் இச்சிறுகதைகளை வாசிப்பதன் மூலம் அறியலாம்...

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580126309146
Thi.Ja. Noottrandu 50 Sirukathaigal - Oru Paarvai!

Read more from Dr. J. Bhaskaran

Related to Thi.Ja. Noottrandu 50 Sirukathaigal - Oru Paarvai!

Related ebooks

Reviews for Thi.Ja. Noottrandu 50 Sirukathaigal - Oru Paarvai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thi.Ja. Noottrandu 50 Sirukathaigal - Oru Paarvai! - Dr. J. Bhaskaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தி.ஜா. நூற்றாண்டு 50 சிறுகதைகள் - ஒரு பார்வை!

    Thi.Ja. Noottrandu 50 Sirukathaigal - Oru Paarvai!

    Author:

    டாக்டர். ஜெ பாஸ்கரன்

    Dr. J. Bhaskaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-j-bhaskaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    சிறுகதை எழுதுவது எப்படி?

    முன்னுரை

    தங்கம்

    கடைசி மணி

    ஆடை

    சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்

    கிழவரைப் பற்றி ஒரு கனவு

    நேத்திக்கு

    சத்தியமா!

    இசைப்பயிற்சி

    ஜீவனாம்சம்

    அடுத்த...

    பரமபாகவதன்

    குழந்தைக்கு ஜுரம்

    அப்பா பிள்ளை

    அவப்பெயர்

    தர்மம்

    ஸ்ரீராமஜெயம்

    கச்சேரி

    பொட்டை

    அன்ன விசாரம்

    கோவிந்தராவின் மாப்பிள்ளை

    குழந்தை மேதை

    யாதும் ஊரே

    சங்கீத சேவை

    புண்ணிய பாங்க்

    பத்து செட்டி

    காபி

    விஞ்ஞான வெட்டியானும், ஞான வெட்டியானும்

    மறதிக்கு...

    செய்தி

    அர்த்தம்

    பிடி கருணை

    எருக்கம் பூ

    குளிர்

    கள்ளி

    சந்தானம்

    பாஷாங்க ராகம்

    ஆயா

    இவனும் அவனும் நானும்

    பஸ்ஸும் நாய்களும்

    மாப்பிள்ளைத் தோழன்

    கங்கா ஸ்நானம்

    ...ப்பா

    சக்தி வைத்தியம்

    மாடியும் தாடியும்

    மூர்ச்சை

    பாப்பாவுக்குப் பரிசு

    வெயில்

    முள் முடி

    வேண்டாம் பூசணி

    சமர்ப்பணம்

    தி. ஜானகிராமனின் வாசக அபிமானிகளுக்கு...

    வாழ்த்துரை

    ஜானகிராமனின் உலகைத் தரிசிக்க உங்களுக்கு ஓர் எளிய மனம் இருந்தால் போதும். அவர் கண்ட மனிதர்களிடமிருந்த சாதாரணத்தையும், உள்ளூர அவர்களிடம் தங்கியும், பொங்கியும் கிடந்த அன்பு, பரிவு, ஏக்கம், லேசான பொறாமை ஆகிய குணங்களையும் அவர் பிரயாசைப்படாது படைத்ததுபோல் அப்படி ஓர் ஆற்றொழுக்கு நடை அவரிடம் இருந்தது. சில ‘முன்னணி’ எழுத்தாளர்கள் ஏதோ மரியாதையுடன் சொல்லும் பாவனையுடன் ஜானகிராமனின் நாவல்களை விட அவரது சிறுகதைகள் உசத்தியானவை என்று சொல்லியதில் வேறு அர்த்தமும் இருந்ததாக எனக்குப் படுகிறது. தமிழின் தலைசிறந்த நாவலை எழுதியவரை இயலாமையுடன் அவர்கள் பார்த்ததாக நான் அஞ்சுகிறேன். அவர் நாவலோ, சிறுகதையோ எதை எழுதினாலும் ஒரே சிரத்தையுடன் கட்டுப்பாடுடன்தான் படைத்தார் என்று ஒரு வாசகனாக என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

    ஓர் எளிய மனம் பற்றி முந்திய பாராவில் சொல்லப்பட்டது. இதைத் தி. ஜானகிராமனின் கதைகளைப் பற்றிய கட்டுரைகளைத் தாங்கி வந்திருக்கும் தி.ஜா. 100 – ஐம்பது சிறுகதைகள்; ஒரு பார்வை புத்தகத்தில் அதன் ஆசிரியர் டாக்டர் ஜெ. பாஸ்கரனிடம் தெளிவாகக் காண முடியும். மூன்று இலக்கிய ஆசிரியர்கள் என்னும் தனது கட்டுரையில் (இலக்கிய வட்டம், ஜூலை 1964) தி.ஜா. இவ்வாறு எழுதுகிறார்; 1947 - 1964ல் நூற்றுக்கணக்கில் தமிழில் எழுத்தாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். சிறுகதைகள் என்ற பெயரில் சில ஆயிரங்கள், நாவல் என்ற பெயரில் சில நூறுகள், இலக்கியத் தரத்தை எட்டாத பல நாடகங்கள்... ‘குழந்தை இலக்கியம்’ என்ற பெயரில் சோவென்ற ஒரு வெள்ளம். முழு நேர வாசகர்கள் என்று உத்தியோகம் பார்த்தால் ஒழிய, இத்தனை நதிகளிலும், வாய்க்கால்களிலும், அருவிகளிலும், கடல்களிலும் யாருக்கும் குளிக்க நேரம் இருக்காது. கேணி முழுகுபவர்களையும், கடல் மீனவர்களையும் போல விமர்சனத்தையே தொழிலாகக் கொண்டவர்கள்தான் இதை உடம்புக்குக் கேடு விளைவித்துக் கொள்ளாமல் சாதிக்க முடியும். அந்த வாய்ப்பும், திடமும் இல்லாதவர்கள் தாங்கள் கண்டு அறிந்ததில் நல்லது என்று சுவைத்ததைப் பற்றித்தான் கூற முடியும். நண்பர்களுக்குச் சொல்லியோ, எழுதியோ பகிர்ந்துகொள்ள முடியும். இது ரொம்ப சாதாரண தர்மம். பாஸ்கரன் இந்த தர்மத்தைத்தான் தன்னுடைய இந்தக் கட்டுரைத் தொகுப்பில் எழுதி நிலைநாட்டியிருக்கிறார்.

    தன்னுரையில் பாஸ்கரன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான காரணங்களை விளக்குகிறார். "ஓசைபெற்று உயர்பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென ஆசை பற்றி அறையலுற்றேன்" என்றான் கம்பன். ‘ஆசை பற்றி அறையலுற்றேன்’ என்னும் கம்பனின் வார்த்தைதான் பாஸ்கரனையும் வழி நடத்திய கோல் என்று நாமும் இந்தத் தன்னுரையிலிருந்து தெரிந்து கொள்கிறோம். தி.ஜா. என்னும் சாகரத்தைத் தனது ரசனை என்னும் சிறு படகில் ஏறிக்கொண்டு அவர் கடக்கும் முயற்சி பிரமிப்புத் தருவதானது. ஆனால் நான் ஒரு இலக்கியவாதியோ, பெயர் பெற்ற எழுத்தாளனோ அல்ல. ஒரு வாசகன் என்றும், தி.ஜா.வின் படைப்புகளை விமர்சனம் செய்யும் அளவுக்கு, சொல்லப்போனால் எந்தப் படைப்பாளியின் படைப்பையும் விமர்சிக்க எனக்கு இலக்கிய ஞானம் கிடையாது என்றும் பாஸ்கரன் தன் உரையில் சொல்கிறார். இது அவர் ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற வாசகத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டதன் விளைவு.

    தி.ஜா.வின் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளில் ஐம்பது கதைகளைத் தேர்ந்தெடுத்த விதம் பற்றிப் பாஸ்கரன் சொல்கிறார்: மிகவும் பேசப்பட்ட பிரபலமான சிறுகதைகளை – சிலிர்ப்பு, பாயசம், கோதாவரிக்குண்டு, அக்பர் சாஸ்திரி, கண்டாமணி – போன்றவற்றைத் தவிர்க்கலாம் என்று தோன்றிற்று. மேலும் தி.ஜா. மீது வைக்கப்படும் பொதுவான விமர்சனம் அவர் பாலியல் சார்ந்த கதைகளையே எழுதுவார் என்பது. அதைத் தவிர்த்த, சமூகம், உளவியல், உறவுகள், மனிதநேயம், குழந்தைகளின் மனவியல் என ஏராளப் படைப்புகளைத் தி.ஜா. கொடுத்திருக்கிறார் என்பது என் எண்ணம். அதற்கேற்ப பாலியல் சேராத கதைகளைத் தேர்ந்தெடுப்பதென முடிவு செய்தேன். அதிகம் பேசப்பட்ட கதைகளை ஒதுக்கியிருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் பாலியல் கதைகளை ஒட்டுமொத்தமாக பாஸ்கரன் நிராகரித்திருக்க வேண்டியதில்லை. தூரப் பிரயாணம் போன்ற ஒரு கதையில் தி.ஜா. ஒரு கத்தி மேல் நடக்கும் வித்தையை, மனித மன உணர்வுகளின் நுணுக்கத்தை, சம்பாஷணைகளில் பொதிந்திருக்கும் அதி உன்னதமான ஜாக்கிரதையை வெளிக்கொண்டு வந்திருப்பார். தேர்ந்த வாசகரின் கவனத்துக்கு உரித்தாக வேண்டிய இம்மாதிரிக் கதைகளை வித்தியாசமான இத்தொகுப்பில் சேர்த்திருக்கலாம்.

    சில இடங்களில் தி.ஜா.வின் குணநலன்களைப் பாஸ்கரன் சுவீகரித்துக் கொண்டு விட்டாரோ என்று சம்சயம் எழும் அளவுக்குக் கட்டுரைகளில் அப்படி ஒரு பரவசமும், கொண்டாட்டமும் காணப்படுகின்றன. ஆசிரியர், அவர் மனைவி ஆகியோருடன் வாசகனுக்கும் தொண்டை அடைக்கிறது (தங்கம்) என்றும், தி.ஜா.வின் விவரணைகளில், ரேஸ்கோர்ஸில், பார்வையாளர்கள், புக்கீஸ், ஜாக்கிகள், பாட்டி, பேத்தி, பைனாகுலர், தாத்தாவின் ‘கம்மான் கம்மான்’ கூச்சல் ஆகியவற்றுடன் நாமும் ஒன்றிவிடுகிறோம் (நேத்திக்கு) என்றும், வாசகனின் நெஞ்சம் பூராவும் அன்பினால் நிரம்பி வழியும் மிகச் சிறந்த கதை (கச்சேரி) என்றும், தி.ஜா.வின் ரசமான விவரணையில் வாசகரின் நாக்கு ஊறுவதைத் தவிர்க்க முடியாது... பங்களூரிலிருந்து கரூர் வரை ரயில் பயணம் செய்த திருப்தி (அன்ன விசாரம்) என்றும் பாஸ்கரன் எழுதும்போது அவர் தன்னுடன் வாசகர்களையும் இழுத்துச் செல்கிறார்.

    தி.ஜா.வின் எழுத்துக்களைப் பாஸ்கரன் ஊன்றிப் படித்திருக்கிறார் என்பது, ஞான வெட்டியான் என்றால் என்ன அர்த்தம் என்பதை அவர் தேடல் தரும் விளக்கத்தின் மூலம் தெரிந்து கொள்கிறோம் (விஞ்ஞான வெட்டியானும், ஞான வெட்டியானும்). வெட்டியான் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆஸ்பத்திரியில் நடக்கும் கதையில் மருத்துவரை ஒரு பாத்திரம் விஞ்ஞான வெட்டியான் என்று அழைக்கிறது. பணம் படுத்தும் பாட்டில் மருத்துவத்தின் மேன்மையை உதறி எறிந்துவிட்டு பணத்தின் பின்னால் அலையும் மருத்துவர்களின் இகழ்ச்சியான நிலைமையை சித்தரிக்கும் வார்த்தை. ஆனால் ஞான வெட்டியான்? பாஸ்கரன் இவ்வாறு சொல்கிறார்: ஞான வெட்டியான் திருவள்ளுவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் சித்தர்களின் கொள்கைகளை விளக்கும் நூல். வெட்டியான் ஒருவன் உயர் வகுப்பினரை நோக்கி அறிவுரை கூறுவது போல் பாடப்பட்டுள்ளதால் ‘ஞான வெட்டியான்’ என்ற பெயர் பெற்றது என்கிறது விக்கிப்பீடியா. இங்கே நாம் ஜானகிராமனின் ஆழ்ந்த புலமையையும், பாஸ்கரனின் தேடல் முயற்சியையும் ஒருங்கே அறிகிறோம்.

    தி.ஜாவின் இந்த ஐம்பது சிறுகதைகளைப் பற்றிய கட்டுரைகளைப் படிப்பவருக்கு சில சந்தேகங்கள் அல்லது கேள்விகள் எழலாம் என்று நான் நம்புகிறேன். அவரது நாவல்களில் உச்சத்தில் வைக்கப்பட்ட பெண்களுக்கு இணையாக சிறுகதைகளில் அவர் ஆண்களைப் படைத்திருக்கிறாரோ? ‘குழந்தைக்கு ஜுரம்’ சரவண வாத்தியார், ‘ஸ்ரீராமஜெயம்’ வேலு மாரார், ‘மறதிக்கு...’ தாத்தாச்சாரி, ‘பிடி கருணை’ சாமி, ‘கள்ளி’ கிருஷ்ணன், ‘சந்தானம்’ முதலியார், ‘மூர்ச்சை’ நாகராஜப் பிள்ளை, ‘பத்து செட்டி’ கதாநாயகர் பத்து செட்டி, ‘வெயில்’ வெங்கு, ‘முள்முடி’ அனுகூலசாமி ஆகிய இவர்களின் குணங்களும், சுபாவங்களும் சாதாரணர்களைப் போலக் காணப்பட்டாலும் செய்கைகளில் அவர்கள் காண்பிக்கும் விவேகமும், பரிவும் தி.ஜா. அவர்களைப் படைத்திருக்கும் விதம் அசாதாரணமாக இருக்கின்றதை பாஸ்கரன் நளினமாகச் சுட்டிக் காட்டியிருப்பதனால் இந்தக் கேள்வி!

    ‘வேண்டாம் பூசணி’ பாட்டி, ‘கிழவரைப் பற்றி ஒரு கனவு’ வாத்தியார் கிழவர் ஆகிய கதைகளில் வயதானவர்களின் நிராதரவான நிலமையைத் தி.ஜா. எப்படிப் படம்பிடித்திருக்கிறார் என்பதை பாஸ்கரன் கட்டுரைகளில் காணுகிறோம். இன்று வயோதிகர் இல்லம், அன்று பிள்ளை வீடேவா? பாண்டவர் காலத்திலிருந்து ‘இந்திரப் பிரஸ்தம்’ – ‘பஸ்ஸும் நாய்களும்’ சிறுகதையில் வரும் சாம்பனின் தினங்கள் ஊடாக இன்றைய நரேந்திர மோதி கால மனிதர்கள் வரை தில்லி பார்த்துக் கொண்டிருப்பது சற்றும் மாறாத ஊர்தானோ?

    நகரத்துக்கு ஓடி வந்தவர்கள் நாஸ்டால்ஜியாவில் இளைப்பாற, இப்போது கிராமத்திலிருந்து நகரத்துக்கு விரையும் இளைஞர்கள். அனுபவம்தான் அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டுமோ? வெட்டு, பழி, குத்து, நயவஞ்சகம், ஏமாற்றுவது ஆகிய நற்குணங்களைப் போற்றி வெளிவரும் தமிழ் சினிமா, தமிழ் சீரியல்களைக் கண்டுகளித்து இப்படி இருப்பதுதான் மாண்புமிகு தமிழனின் வாழ்க்கை என்ற எண்ணத்தின் பிடியில் சிக்கிவிட்ட ஒரு ஜனக்கூட்டத்துக்கு தி.ஜா. அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மனிதர்களும், மனிதாபிமானமும் முற்றிலும் வேறுபட்ட வகையில் இருந்தன என்கிறாரா? கங்கா ஸ்நானத்தில் வரும் சின்னசாமிக்கு தனக்குத் தீங்கு இழைத்தவர் மீது இரக்கம் ஏற்படுகிறது. பொட்டையில் வரும் சன்னாசிக்குப் பொட்டை என்று தன்னை அழைப்பவன், பெண் விஷயத்தில் மாட்டிக்கொள்ளும் போது அவன் நடந்துகொள்ளும் விதம் சன்னாசி எவ்வளவு உயர்ந்த மனிதன் என்று நமக்குத் தெரிவிக்கிறது. மன்னிப்பது என்பது ஏதோ கெட்ட வார்த்தை போலத் தோன்றும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்று தி.ஜா.வின் கதைகள் சுட்டிக் காட்டுகின்றனவா?

    தி.ஜா.வின் பாத்திரங்களில் ஒட்டிக்கிடக்கும் நேர்மை, தவறு இழைத்துவிட்டால் சுயமரியாதையையும், தன் வாழ்வு செல்லும் வழியையும் பாதிக்கும் வல்லமை கொண்டவற்றையும் (மறதிக்கு...) கூட Confess செய்துவிடும் மனப்பாங்கு (காந்தி நினைவுக்கு வருகிறார்), கதாசிரியரின் சமூகப் பொறுப்பை எடுத்துக்காட்டும் ஜாதீயம் (இசைப்பயிற்சி), பெண் சுதந்திரம் (ஜீவனாம்சம்) ஆகியவற்றில் வெளிப்படும் பிரச்சினைகள்...

    இக்கதைகளைத் தெரிவு செய்திருக்கும் பாஸ்கரனின் இலக்கியப் பரிச்சயத்தை நான் மிகவும் மதிக்கிறேன்.

    தி.ஜாவின் சிறுகதைகளில் ததும்பும் நகைச்சுவை, சொல் பொறுப்பு, சொற்செட்டு, சௌந்தர்ய உபாசனை, மாரில் அடித்துக்கொள்ளாமல் அமைதியாகத் தெரிவிக்கும் மனிதாபிமானம், பெண்களின் மன உறுதி, அவர்களின் சுதந்திர தாகம் ஆகியவற்றை இந்நூலின் பல்வேறு பக்கங்களில் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார் டாக்டர் பாஸ்கரன். காய்தல் அற்ற அதேசமயம் உவத்தலை நேசிக்கும் ஒரு மனதை இருநூறுக்கும் மேற்பட்ட இப்புத்தகத்தின் பக்கங்களில் நாம் சந்திக்கிறோம்.

    குறைகளே அற்ற கட்டுரை நூலா என்று யாராவது புருவத்தை உயர்த்தினால் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் நூலாசிரியரைப் போல அவ்வப்போது கண்ணில் பட்ட சின்னஞ்சிறு குறைகளை நானும் காற்றில் பறக்க விட்டு விட்டேன் என்பதுதான்.

    ஸிந்துஜா

    சிறுகதை எழுதுவது எப்படி?

    தி. ஜானகிராமன்

    சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோ, நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ, பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். காலையில் தொடங்கி இரவிலோ, மறுநாள் காலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப்படவேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து, பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக்கொண்டு போகலாம். நடந்தது, நடக்கப்போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைச் சித்தரித்துக்கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்னை, ஒரு பொருள், ஓரு உணர்வு, ஒரு கருத்துதான் ஓங்கியிருக்கிறது என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்.

    என் சொந்த அநுபவத்தில் தெரிந்ததைத்தான் நான் சொல்லுவேன். ஒருநாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்த போது கச்சலும், கறுப்புமாக நாய் பிடுங்கினாற் போன்ற ஒரு பத்து வயதுப் பெண். குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண். நல்ல துணை ஒன்று இந்தப் பணக்கார அம்மாளின் உருவில் கிடைக்கவே, அக்காள் அந்த அம்மாளோடு குழந்தையை அனுப்பியிருக்கிறாள். ஏதோ பேசிக் கொண்டிருக்கும் போது அந்த அம்மாள், "இது படித்து என்ன பண்ணப் போகிறது? நான் கூட, கூடமாட

    Enjoying the preview?
    Page 1 of 1