Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thalaivali
Thalaivali
Thalaivali
Ebook144 pages44 minutes

Thalaivali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'ஒரே டென்ஷனா இருக்கு. தலைவலி மண்டயப் பிளக்குது. சூடா ஒரு கப் காப்பி குடிச்சா தேவலை... ' இப்படி, நாமே ஒரு தடவையாவது சொல்லியிருப்போம். மற்றவர்கள் சொல்வதையும் கேட்டிருப்போம்.

அத்துடன், சாதாரண பள்ளிக்கூட மாணவர்களில் இருந்து உயர் பதவியில் இருப்பவர்கள் வரை, தங்களது இயலாமையை மறைத்துக்கொள்ள ஒரு காரணமாக இருப்பது தலைவலிதான். அதேபோல், மாமியார் - மருமகள், கணவன் - மனைவி, காதலன் - காதலி போன்ற தவிர்க்க முடியாத உறவுகள்கூட, விருப்பமில்லா நேரங்களில் தஞ்சம் அடைவது இந்தத் தலைவலியில்தான். ஆக, சமூகத்தில் வேறு எந்த வலிகளையும்விட தலைவலிக்கு என்று ஒரு ‘மரியாதை' இருக்கிறது. மனிதர்களாகப் பிறந்த நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு சூழ்நிலையில் தலைவலி ஏற்படுவது மிகச் சாதாரணமான ஒன்று. காரணமே இல்லாமல் வரக்கூடிய தலைவலிகள் உண்டு. தலைவலிக்கு இதுதான் காரணம் என்று சொல்லக்கூடிய வகையிலான தலைவலிகளும் உண்டு. எது எப்படி இருந்தாலும், தலைவலியா, அருகில் இருக்கும் மருந்துக் கடைக்குப் போய், ஏதோ ஒரு மாத்திரையை வாங்கிப்போட்டு அப்போதைக்கு தலைவலிக்கு தாற்காலிய நிவாரணம் தேடும் நிலையில்தான் பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள். இதில், ஏழை பணக்காரன்; படித்தவன் படிக்காதவன்; ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை, அப்போதைக்கு தலைவலியில் இருந்து விடுதலை பெற வேண்டும். இதில் இருந்துதான், அவர்களின் அறியாமை தொடங்குகிறது. இதில் ஆபத்து என்னவென்றால், உடனடி நிவாரணத்துக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், மிகச் சாதாரணமான / எளிதில் குணமாகக்கூடிய தலைவலியாக இருப்பதை, மிகத் தீவிரமான தலைவலியாக மாற்றிவிடக்கூடும். அத்துடன், விரும்பத்தகாத வேறு பக்க/பின் விளைவுகளையும் ஏற்படுத்தி விடலாம். அத்துடன், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற இயலாமையில் இருக்கும் மனிதர்களை, என்னிடம் தலைவலிக்கு நிவாரணம் / சிகிச்சை இருக்கிறது சொல்லி ஏமாற்றும் பேர்வழிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வகையில், மக்களிடையே போதுமான விழிப்புணர்வும், எச்சரிக்கை உணர்வும் ஏற்பட வேண்டும். அதற்கு, தலைவலியைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். வேண்டாத சிகிச்சை முறைகள், தேவையற்ற மருந்துகள், வாழ்க்கையின் நல்ல தருணங்களின் இழப்பு, திறமைகளின் வீச்சுக் குறைவு போன்றவற்றைத் தவிர்க்க, தலைவலி பற்றிய ஓர் ஆதாரபூர்வமான அறிவு நமக்குத் தேவை. ஆக, 'தலைவலி - பாதிப்புகளும் தீர்வுகளும்' என்ற இந்தப் புத்தகம், உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக நிச்சயம் இருக்கும். இதில், மக்களிடையே மிக அதிகமாகக் காணப்படும் ஒற்றைத் தலைவலி எனப்படும் மைக்ரெய்ன், டென்ஷன் தலைவலி, நரம்பு மண்டலக் குறைபாடுகளால் ஏற்படும் தலைவலிகளைப் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. படித்துப் பயன்பெறுங்கள்.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580126307068
Thalaivali

Read more from Dr. J. Bhaskaran

Related to Thalaivali

Related ebooks

Reviews for Thalaivali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thalaivali - Dr. J. Bhaskaran

    https://www.pustaka.co.in

    தலைவலி

    Thalaivali

    Author:

    டாக்டர். ஜெ. பாஸ்கரன்

    Dr. J. Bhaskaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-j-bhaskaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    முன்னுரை

    'ஒரே டென்ஷனா இருக்கு. தலைவலி மண்டயப் பிளக்குது. சூடா ஒரு கப் காப்பி குடிச்சா தேவலை... ' இப்படி, நாமே ஒரு தடவையாவது சொல்லியிருப்போம். மற்றவர்கள் சொல்வதையும் கேட்டிருப்போம்.

    அத்துடன், சாதாரண பள்ளிக்கூட மாணவர்களில் இருந்து உயர் பதவியில் இருப்பவர்கள் வரை, தங்களது இயலாமையை மறைத்துக்கொள்ள ஒரு காரணமாக இருப்பது தலைவலிதான். அதேபோல், மாமியார் - மருமகள், கணவன் - மனைவி, காதலன் - காதலி போன்ற தவிர்க்க முடியாத உறவுகள்கூட, விருப்பமில்லா நேரங்களில் தஞ்சம் அடைவது இந்தத் தலைவலியில்தான். ஆக, சமூகத்தில் வேறு எந்த வலிகளையும்விட தலைவலிக்கு என்று ஒரு ‘மரியாதை' இருக்கிறது. மனிதர்களாகப் பிறந்த நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு சூழ்நிலையில் தலைவலி ஏற்படுவது மிகச் சாதாரணமான ஒன்று. காரணமே இல்லாமல் வரக்கூடிய தலைவலிகள் உண்டு. தலைவலிக்கு இதுதான் காரணம் என்று சொல்லக்கூடிய வகையிலான தலைவலிகளும் உண்டு.

    எது எப்படி இருந்தாலும், தலைவலியா, அருகில் இருக்கும் மருந்துக் கடைக்குப் போய், ஏதோ ஒரு மாத்திரையை வாங்கிப்போட்டு அப்போதைக்கு தலைவலிக்கு தாற்காலிய நிவாரணம் தேடும் நிலையில்தான் பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள். இதில், ஏழை பணக்காரன்; படித்தவன் படிக்காதவன்; ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை, அப்போதைக்கு தலைவலியில் இருந்து விடுதலை பெற வேண்டும். இதில் இருந்துதான், அவர்களின் அறியாமை தொடங்குகிறது.

    இதில் ஆபத்து என்னவென்றால், உடனடி நிவாரணத்துக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், மிகச் சாதாரணமான / எளிதில் குணமாகக்கூடிய தலைவலியாக இருப்பதை, மிகத் தீவிரமான தலைவலியாக மாற்றிவிடக்கூடும். அத்துடன், விரும்பத்தகாத வேறு பக்க/பின் விளைவுகளையும் ஏற்படுத்தி விடலாம். அத்துடன், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற இயலாமையில் இருக்கும் மனிதர்களை, என்னிடம் தலைவலிக்கு நிவாரணம் / சிகிச்சை இருக்கிறது சொல்லி ஏமாற்றும் பேர்வழிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    அந்த வகையில், மக்களிடையே போதுமான விழிப்புணர்வும், எச்சரிக்கை உணர்வும் ஏற்பட வேண்டும். அதற்கு, தலைவலியைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். வேண்டாத சிகிச்சை முறைகள், தேவையற்ற மருந்துகள், வாழ்க்கையின் நல்ல தருணங்களின் இழப்பு, திறமைகளின் வீச்சுக் குறைவு போன்றவற்றைத் தவிர்க்க, தலைவலி பற்றிய ஓர் ஆதாரபூர்வமான அறிவு நமக்குத் தேவை.

    ஆக, 'தலைவலி - பாதிப்புகளும் தீர்வுகளும்' என்ற இந்தப் புத்தகம், உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக நிச்சயம் இருக்கும். இதில், மக்களிடையே மிக அதிகமாகக் காணப்படும் ஒற்றைத் தலைவலி எனப்படும் மைக்ரெய்ன், டென்ஷன் தலைவலி, நரம்பு மண்டலக் குறைபாடுகளால் ஏற்படும் தலைவலிகளைப் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. படித்துப் பயன்பெறுங்கள்.

    அன்புடன்,

    டாக்டர். ஜெ. பாஸ்கரன்

    சாவித்திரி கிளினிக்

    189/8, எஸ். வி. லிங்கம் சாலை,

    கே. கே. நகர்,

    சென்னை - 600 078.

    போன்: 044-24810555, 9841057047.

    1

    தலைவலி - ஓர் அறிமுகம்

    மனிதர்களுக்கு வயது வித்தியாசம் பார்க்காமல் ஏற்படக்கூடிய உடல் நோய்களில் தலைவலிக்கு முதலிடம் தரலாம். தலைவலி ஏற்படுவதற்குப் பல காரணங் கள் இருக்கின்றன. காரணமே தெரியாமலும் (மைக்ரெய்ன் போன்றவை) தலைவலி உண்டாகலாம்.

    இதில் யதார்த்தமான உண்மை என்ன வென்றால், யாருக்கு, எப்போது, என்ன வகையான தலைவலி வரும் என முன் கூட்டியே கணிக்க முடியாது என்பது தான். திடீரென்று வரும் - பகலில், இரவில், பரிட்சைக்கு முன்பு, அலுவலகத்தில் முக்கியமான ஆலோசனைகளின் போது, மாதவிலக்குக் காலங் களில் என எந்த நேரமும் தலைவலிக்கு விலக்கு இல்லை.

    தூக்கம் கலைத்து, வலி பொறுக்க முடியாமல் கண்ணீர் பொங்க அழவைக்கும்

    தலைவலிகளும் உண்டு. வலியின் வீரியம் தாங்காமல், தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் தலைவலிகளும் உள்ளன என்பது அதிர்ச்தி தரக்கூடியது.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான தலைவலி ஏற்படக்கூடும். சிலருக்குத் தலையில் பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல் பயங்கரமாகக் கனக்கும். தலைபாரம் பொறுக்க முடியாது. தலையே சுக்குநூறாக நொறுங்கிவிட்டால்கூட தேவலாம் என்பதுபோல் இருக்கும். போதுமடா சாமி! என்று நினைக்கத் தோன்றும்.

    சிலருக்கு நெற்றி, நெற்றிப்பொட்டு, கன்னம், கண்களுக்குக் கீழ் அதன் தொடர்ச்சியாக காது வரை வலி பரவி இருக்கும். அந்தப் பகுதிகளைத் தொட்டு அழுத்தினால் கடுமையான வலியுணர்வு தோன்றும். பரிசோதனைக்காக வலி இருக்கும் இடங்களில் லேசாக அழுத்தினால் கூட, தாரை, தாரையாக கண்ணீர் வடிக்கும் அளவுக்குக் கொடுமையான வலியை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

    திடீரென்று தோன்றும் தலைவலிகள் (முக்கியமாக வயதானவர்களுக்கு) தலையில் யாரோ கட்டையால் அடித்ததைப்போல், தலைக்குள் இடி இடித்தாற்போல், மிகக் கடுமையாக வரக்கூடும். இவ்வகைத் தலைவலிகள் ஆபத்தானவை; உடனே கவனிக்கப்பட வேண்டியவை. சிலருக்கு அது ஒற்றைத் தலைவலி (மைக்ரெய்ன்) வடிவில் இருக்கலாம். வேறு சிலருக்கோ கொத்துத் தலைவலி வடிவில் இருக்கலாம்.

    இரவு முழுதும் குடித்துவிட்டு, மறுநாள் காலை இடிக்கும் தலை வலியுடன் அவதிப்படுபவர்களைப் பார்த்திருக்கிறோம். இது, 'ஹேங்க் ஓவர்' தலைவலி. மதுவில் இருக்கும் நச்சுப் பொருள்களால் வருவது.

    சின்னக் குழந்தைகள், இளஞ்சிறார்கள், வாலிப வயதினர், தள்ளாத முதிய வயதினர் என, யாருக்கும் தலைவலி வரலாம். ஆண், பெண், மூன்றாம் பாலினருக்கும் மத்தியில் எந்த வேற்றுமையும் பாராமல் இருக்கும் ஒற்றுமைகளில் முதன்மையானது, தலைவலி.

    பலருக்கு நாள்கணக்கில், வாரக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் தலைவலி தொடர்ச்சியாக ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். மருந்து

    ரத்தக் குழாய்கள் எந்த பக்கம்

    பாதிக்கப்படுகின்றனவோ,

    அந்தப் பக்கமே தலைவலிகள் வருகின்றன.

    மாத்திரை, சிகிச்சை, உணவு மாற்றங்கள் என எந்தவொரு நட

    Enjoying the preview?
    Page 1 of 1