Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arockkiyam Arulum Aalaya Virutchangal!
Arockkiyam Arulum Aalaya Virutchangal!
Arockkiyam Arulum Aalaya Virutchangal!
Ebook721 pages1 hour

Arockkiyam Arulum Aalaya Virutchangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தல விருட்சங்கள் உள்ள ஆலயங்களின் தல புராணம், அங்கு உறைந்துள்ள தெய்வங்களின் அருட்சக்தி, விருட்சங்களின் அபூர்வ மருத்துவ குணங்கள், சங்க இலக்கியங்களில் இந்த விருட்சங்கள் இடம் பெற்றுள்ள பாடல்கள் என எதனையும் விட்டுவைக்காமல் விவரித்திருக்கும் இந்த நூல் ஓர் ஆராய்ச்சிக் கருவூலமாக பக்தர்களைப் பரவசப்படுத்தும். ஆன்மிக அன்பர்களும், மருத்துவ ஆர்வமுள்ளவர்களும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இந்த நூல்! வாசித்து அறிந்துக் கொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580170310562
Arockkiyam Arulum Aalaya Virutchangal!

Read more from J.V. Nathan

Related to Arockkiyam Arulum Aalaya Virutchangal!

Related ebooks

Reviews for Arockkiyam Arulum Aalaya Virutchangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arockkiyam Arulum Aalaya Virutchangal! - J.V. Nathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!

    Arockkiyam Arulum Aalaya Virutchangal!

    Author:

    ஜே.வி. நாதன்

    J.V. Nathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jv-nathan

    பொருளடக்கம்

    ஆசிரியரைப் பற்றி…

    நலம் பெற வலம் வருவோம்!

    என்னுரை

    1. வெள்ளெருக்கு மகிமை!

    2. வில்வமும் வாழையும்!

    3. வேம்பு மகிமை!

    4. பூளைச் செடி (இரும்பூளை) மகிமை!

    5. ஆல், கொன்றை, வில்வம்!

    6. புரசு (பலாஸ் - முருக்கன்) மகிமை!

    7. தர்ப்பைப் புல் மகிமை!

    8. செண்பக மர மகிமை!

    9. மூங்கில் மகிமை!

    10. சிவப்புச் சந்தன மரம்

    11. ஏற்றம் தரும் ஏழிலைப்பாலை!

    12. ‘பலா’ பலன்!

    13. முருக்கன் (பலாச மரம்) மகிமை!

    14. பாதிரி மரத்தின் மகிமை!

    15. ‘மா’ மருந்து!

    16. மகிமை மிக்க மகிழம்!

    17. தேக பலம் தரும் கருங்காலி மரம்!

    18. விருட்சங்களின் அரசன்!

    19. சக்தி தரும் வெள்வேல விருட்சம்!

    20. ஈசன் குடியிருக்கும் கடுக்காய் மரம்!

    21. சூரியன் வழிபடும் ஆலமர்செல்வன்!

    22. எட்டி மரத்தின் மகிமை!

    23. நெல்லி மரத்தின் மகிமை!

    24. அத்தி மரத்தின் மகிமை!

    25. இலந்தை மரத்தின் மகிமை!

    27. பன்னீர் மரத்தின் மகிமை!

    28. மூங்கில் மகிமை!

    29. எல்லா நலன்களும் தரும் எலுமிச்சை!

    31. நாரத்தை மரத்தின் மகிமை!

    32. சூரியன் பூஜிக்கும் சிவலிங்கம்!

    33. ஆத்தி (மந்தாரை) மரத்தின் மகிமை!

    34. பாவம் போக்கும் பன்னீர் மரம்!

    35. களா மரத்தின் மகிமை!

    36. மகிமைமிக்க மருத மரம்!

    37. தோஷங்கள் நீக்கும் விளா மரம்!

    38. சதுரக்கள்ளி மரத்தின் மகிமை!

    39. பராய் மரத்தின் மகிமை!

    40. இலவ மரத்தின் மகிமை!

    41. பவழ மல்லிகை மரத்தின் மகிமை!

    42. வாகை மரத்தின் மகிமை!

    43. சரக்கொன்றை மரத்தின் மகிமை!

    44. வன்னி மரத்தின் மகிமை!

    45. கடம்ப மரத்தின் மகிமை!

    46. ஈச்சை மரத்தின் மகிமை!

    47. முல்லைச் செடியின் மகிமை!

    48. இலுப்பை மரத்தின் மகிமை!

    ஆசிரியரைப் பற்றி…

    ஜே.வி. நாதன்

    சிதம்பரத்தில் பிறந்தவர், தற்போது வாசம் வேலூரில். இவருடைய மனைவி ஜெயா வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள்.

    தமிழக அரசின் மருத்துவத்துறை மற்றும் சமூகநலத்துறை இரண்டிலும் மொத்தம் இருபது ஆண்டுகள் பணியாற்றி விட்டு, எழுத்தார்வத்தால் அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். மௌனி, அகிலன், நா.பா. போன்ற எழுத்தாளர்களின் நெருக்கத்தால் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். பின்பு, ஜூனியர் விகடன் தொடங்கியது முதல் கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபட்டார்.

    சிறந்த சிறுகதைக்கான ‘இலக்கியச் சிந்தனை’ பரிசை மூன்று முறை பெற்றுள்ளார். ‘முகமூடி இல்லாத கொள்ளைக்காரர்கள்!’ என்ற தலைப்பில் ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த இவரது கட்டுரை, ‘தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த புலனாய்வுக் கட்டுரை’ என்று சென்னை ‘விஜில்’ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்கப்பதக்கம் உள்ளிட்ட ‘பாஞ்ச ஜன்யம்’ என்ற விருதைப் பெற்றது.

    எழுத்தாளர் ஜெயகாந்தன் முன்னுரையோடு ‘வேட்டை’, மற்றும் ‘அதிதி’ என்று மொத்தம் இரண்டு சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்துள்ளன.

    நலம் பெற வலம் வருவோம்!

    மரங்கள், செடி_கொடிகள் அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. அது மட்டுமல்ல, வான்வெளியில் உள்ள கிரகங்களுடன் தொடர்பு கொண்டவையும் கூட. இதை நம் முன்னோர்கள் ஆராய்ச்சியாலும் ஞானத்தாலும் அறிந்து வைத்திருந்தார்கள்!

    தாவரத்தின் உண்மையான மருத்துவ குணங்கள் தெரியாததால், தனக்குப் பயனில்லை என மனிதர்கள் சில அரிய வகைத் தாவரத்தை அழித்துவிடக் கூடும் என்று நினைத்த நம் மூதாதையர், அபூர்வ மருத்துவ குணமுடைய மரம், செடி_கொடிகளை ‘தல விருட்சம்’ என்ற பெயரில் ஆலயங்களில் நட்டு வளர்த்தார்கள்.

    உலகம் முழுமையும் அந்தத் தாவரம் அழிந்து போயினும் தல விருட்சமாக ஆலயத்தில் போற்றி வளர்க்கப்படும் அந்த ஒற்றை மரத்திலிருந்து விதைகள், பறவைகள் மூலமாகவோ அல்லது காற்றினாலோ வேறு இடங்களுக்குப் போய் மண்ணில் வேர் பதித்து வளரக்கூடும் என்பதே இதன் நோக்கம்,!

    ஆலயங்களில் இருப்பதால், விருட்சங்களின் உண்மையான பலன்கள் புரியாவிட்டாலும், அவற்றை வழிபடுவதோடு, பாதுகாக்கவும் செய்வார்கள் மக்கள் என்பது நம் முன்னோர்களின் கணிப்பு! ஒரு விதத்தில் இந்த விருட்சங்கள், ஆலயத்தில் உறையும் தெய்வங்களோடோ அல்லது தல புராணத்தோடோ ஏதோ தொடர்பு கொண்டதாக விளங்கியது!

    இந்த நூலின் கட்டுரைகளில், தல விருட்சங்கள் வளர்க்கப்பட்டு வரும் ஆலயங்களின் தல புராணம் பற்றியும், அங்கு உறைந்துள்ள தெய்வங்களின் அருட்சக்தி குறித்தும், விருட்சங்களின் அபூர்வ மருத்துவ குணங்கள் குறித்தும், சங்க இலக்கியங்களில் இந்த விருட்சம் இடம் பெற்றுள்ள பாடல்கள் குறித்தும், தல விருட்சங்களுக்கும் கிரகம், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பேசுகின்ற ஓர் ஆராய்ச்சிக் கருவூலமாக விளங்குகிறது.

    ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தியேழு நட்சத்திரங்கள் - ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட விருட்சங்கள் உள்ள ஆலயங்களுக்கு இந்நூலின் ஆசிரியர் திரு ஜே.வி.நாதன் நேரில் சென்று விவரங்கள் சேகரித்து எழுதிய 48 கட்டுரைகள், உரிய புகைப்படங்களோடு இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

    ‘சக்தி விகடன்’ இதழில் தொடர்ந்து வெளிவந்து வாசகர்களைப் பிரமிக்க வைத்த இந்தத் தொடர், தற்போது ‘புஸ்தகா’ வெளியீடாக வருகின்றது. இந்நூல் ஆன்மிக அன்பர்களும், மருத்துவ ஆர்வமுள்ளவர்களும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை!

    - ஆசிரியர்

    என்னுரை

    சிறுகதைகள் மற்றும் ஜூனியர் விகடனில் கட்டுரைகள் என்று எழுதிவந்த என்னிடம் உங்களால் ‘ஆலய விருட்சங்கள்’ பற்றி ஒரு தொடர் எழுத முடியும். எழுதுங்கள்! என்று நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். ஏற்கெனவே ‘தல விருட்சங்கள்’ மீது அதீத ஆர்வம் கொண்டிருந்த எனக்கு அது மிகுந்த உற்சாகம் அளித்தது.

    தொடர்ந்து மூலை முடுக்குகளில் இருந்த பழைமையான பல கோயில்களுக்குப் படையெடுக்க ஆரம்பித்தேன். ஆலயங்கள் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டிலும், ஆதீனங்களின் கட்டுப்பாட்டிலும் இருந்தபோதிலும் அவர்கள் அனைவரும் உரிய அனுமதியும் ஒத்தாசையும் வழங்கி உதவினார்கள். இந்த முயற்சியில் பெரும்பாலான ஆலயங்களுக்குச் சென்று விவரம் சேகரிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு ஒரு பாலமாகச் செயல்பட்டுப் பேருதவி செய்தவர் என் கெழுதகை நண்பரும் விகடன் தலைமை நிருபர் பணியில் உள்ளவருமான கரு. முத்து அன்னாரின் உதவி என்றும் மறவா நன்றிக்குரியது.

    வாணியம்பாடியில் 108 ஏக்கர் பரப்பளவில் ‘மொகல் கார்டன்’ என்று பெரிய தோட்டம் அமைத்து தல விருட்சங்கள், மற்றும் ஏராள செடி, கொடிகள் நட்டு வளர்த்துப் பராமரிப்பதுடன் அது தொடர்பான மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருபவர் டாக்டர் அக்பர் கவுசர் அவர்கள். என் கட்டுரைகளின் மருத்துவக் குறிப்புகள் தொடர்பாகவும், விருட்சங்கள் குறித்த என் சந்தேகங்கள் தொடர்பாகவும் அவர் அளித்த உதவிகள் அளப்பரியது. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

    தமிழகத்தின் பல கோயில்களுக்குச் சென்றபோது, சில கோயில்களில் ‘தல விருட்ச’த்தின் முக்கியம் தெரியாமல் காலக்கிரமத்தில் அது பட்டுப்போக விட்டிருக்கிறார்கள். சில இடங்களில் சம்பந்தப்பட்ட ஆலயத்தின் தல விருட்சத்துக்குப் பதிலாக வன்னி மரம், வில்வ மரம் என்று வேறு விருட்சத்தை வளர்த்து வருவதையும் காண முடிந்தது. மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் ஆலயத்தில் கடம்ப மரம் தல விருட்சம். பட்டுப்போன கடம்ப மரத்தின் ஒரு கிளையை வெள்ளிக் கவசம் சார்த்திப் பாதுகாத்து வைத்திருப்பதைப் பக்தர்கள் காண முடியும். சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமான் ஆலயத்தில் தொழுநோய்க்கு மருந்தாகப் பயன்படக்கூடிய தில்லை என்ற தல விருட்சம் பல வருடங்களாக இல்லையாம்!

    இதுபோன்ற நிலையை மாற்றிட சம்பந்தப்பட்ட ஆலயப் பொறுப்பாளர்களும், ஆன்மிக அன்பர்களும் முயற்சி எடுத்து, அழிந்துபட்ட தல விருட்சங்களை ஆலயங்களில் நிறுவுதல், மனித சமுதாயத்துக்குச் செய்யும் ஒரு தொண்டாகும் என்பதில் ஐயமில்லை!

    ‘ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்’ என்ற தலைப்பில் நான் எழுதிய 48 கட்டுரைகளைச் சிறப்பாகத் தொடர்ந்து வெளியிட ‘சக்தி விகடன்’ ஆசிரியர் குழுவினர் காட்டிய அக்கறையும் ஆர்வமும் நெஞ்சை நெகிழ்விக்கச் செய்தது. குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

    - ஜே.வி. நாதன்

    5,மூன்றாவது குறுக்குத் தெரு,

    வள்ளலார் நகர்,

    சாயிநாதபுரம், வேலூர் - 632 001.

    மின்னஞ்சல்: vaithiyanathan@gmail.com

    இந்த நூல்...

    என் எழுத்துப் பணிக்கும், வாழ்வுக்கும் அன்பு என்னும் நீர் வார்த்து, உறுதுணையாக இருந்து, எந்நேரமும் என்னை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி வரும் என் மகள் ஜே.வி. பூர்ணிமாவுக்கு...

    1. வெள்ளெருக்கு மகிமை!

    சூரியன் திருத்தலம்

    ஸ்ரீசூரியனார் திருக்கோயில்

    இயற்கையை வழிபடத் துவங்கிய ஆதிகாலத்தில், இறைவனின் திருவுருவாக எண்ணி, நேசமுடனும் பக்தியுடனும் மனிதர்கள் அதிகம் வழிபட்டது மரங்களைத்தான். இந்த மரங்களுக்கும் சமயங்களுக்குமான தொடர்பை, பல்வேறு சமய இலக்கிய நூல்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன.

    கிளைகளாய் கிளைத்த பல கொப்பெலாம்

    சதுர்வேதம் கிளைகளீன்ற

    களையெல்லாம் சிவலிங்கம் கனியெல்லாம் சிவலிங்கம்

    கனிகளீன்ற சுளையெல்லாம் சிவலிங்கம்...

    என்று போற்றுகிறது குற்றாலக் குறவஞ்சி!

    விதை முதல் இலைகள் வரை அனைத்தையும் உயிரினத்துக்குச் சமர்ப்பிக்கும் விருட்சங்களை, தெய்வமாகக் கருதி மனிதன் வழிபட்டதில் வியப்பில்லைதான். கால ஓட்டத்தில்... இறைவனைக் குடியிருத்தி ஆலயங்கள் எழுந்தபோது, இந்த தெய்வ விருட்சங்கள், ஸ்தல விருட்சங்களாயின! ஆன்மிகச் சிறப்பு மட்டுமா? மருத்துவ மகத்துவமும் நிறைந்தவை ஸ்தல விருட்சங்கள். இதுபற்றியும் இந்த விருட்சங்களால் புகழ் பெற்ற தலங்கள் குறித்தும் இந்த நூலில் விரிவாகத் தெரிந்துகொள்ளப் போகிறோம். முதல் தரிசனம்... சூரியனார் கோயில்!

    நவக்கிரக தோஷங்கள் விலகும்!

    "சூரியனுக்கு ‘அர்க்கன்’ என்றும் பெயர் உண்டு. இவருக்கு உகந்த நிறம் - சிவப்பு. பிடித்த வஸ்திரம் - சிவப்பு ஆடை. எனவேதான் இவருக்கு செந்நிற மலர்களும் செவ்வாடையும் அணிவித்து வழிபடுவார்கள். இவருக்கு உகந்த சமித்து வெள்ளெருக்கு.

    முன்பொரு காலத்தில் எருக்க வனமாக இருந்த இடம் இது. பிரம்மனின் சாபத்தால் நவக்கிரகங்களை தொழுநோய் பற்றிக்கொண்டது. அவர்களிடம் அகத்தியர், தயிர் அன்னத்தை எருக்க இலையில் வைத்துச் சாப்பிடுமாறு கூறினார். அதற்கான காரணத்தைக் கேட்டபோது, இது தேவ ரகசியம். எருக்க இலையின் சாரத்தில் ஒரு அணுப்பிரமாண அளவு தயிரன்னத்தில் கலக்கும். தொடர்ந்து 78 நாட்கள், இதேபோல் சாப்பிட்டு வந்தால் தொழுநோய் பூரம்ண குணமாகும்’ என்று அருளினார். அவ்வளவு மகத்துவம் வாய்ந்தது எருக்கன் இலை! ரத சப்தமி (தை மாதம்) நாளில், ஏழு எருக்க இலைகள், எள், அட்சதை ஆகியவற்றைத் தலையில் வைத்து நீர்நிலைகளில் ஸ்நானம் செய்தால், நவக்கிரக தோஷம் விலகும்; எருக்கஞ் செடியைச் சுற்றி வலம் வந்தால், திருமணத்தடை நீங்கும்; குழந்தை பிறக்காதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்கிறார் கோயிலின் நடன தியாகராஜ குருக்கள்!

    உலகின் மிகத் தொன்மையான நூல்களில் ஒன்றான ரிக்வேதத்திலும் சூரிய வழிபாடு பற்றிய குறிப்புகள் உண்டு. தமிழில் தொல்காப்பியமும், சிலப்பதிகாரத்திலும் சூரிய வழிபாடு மற்றும் சூரிய வணக்கம் குறித்த குறிப்புகள் உண்டு. இதன் மூலம் சூரிய வழிபாட்டின் தொன்மையையும் மகிமையையும் தெளிவுற அறியலாம். சங்க காலத்தில் பூம்புகாரில் இருந்த ‘உச்சிக்கிழான் கோட்டம்’ என்ற சூரியக் கோயில், கடல் சீற்றத்தால் அழிந்துவிட்டபோதிலும்... தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயில் மிகப் பொலிவுடன் திகழ்கிறது!

    வெள்ளை எருக்கன் பூ

    தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது சூரியனார் கோயில். கும்பகோணத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தூரம். இதைக் கட்டுவித்து (1079-1120), அதற்குரிய நிவந்தங்களையும் அளித்தவன் முதலாம் குலோத்துங்க சோழன். 1988-ல் திருவாவடுதுறை ஆதீனத்தின் பேராதரவினால் இந்தக் கோயிலின் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது.

    சுதைச் சிற்பங்கள் நிறைந்த... சுமார் 50 அடி உயர ராஜகோபுரம் கம்பீரம்! கோயிலுக்குள் ஸ்ரீஉஷாதேவி- சாயாதேவி சமேதராக திருமணக் கோலத்தில் திகழ, இவரது சந்நிதிக்கு எதிரிலேயே குருபகவான் தரிசனம். குருவின் பார்வையில், தம்பதி சமேதராக சூரியபகவான் காட்சி தருவதால், திருமண யோகம் அருளும் அற்புதத் தலம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். அதுமட்டுமா? சகல சனி தோஷங்களும் இன்னும்பிற நவக்கிரக தோஷங்களுக்கு ஆளானவர்களும்... இந்தத் தலத்துக்கு வந்து, சுமார் 78 நாட்கள் தங்கியிருந்து, நவதீர்த்தங்களில் நீராடி, விரதமிருந்து வழிபட்டால், களத்திர தோஷம், விவாகப் பிரதிபந்த தோஷம், புத்திர தோஷம், புத்திரப் பிரதிபந்த தோஷம், உத்தியோகப் பிரதிபந்த தோஷம் உட்பட சகல தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம் என்கிறார்கள். சூரிய தசை- சூரிய புத்தி நடப்பவர்களும்... ஞாயிறுதோறும் இங்கு வந்து வழிபட்டுப் பலனடையலாம். இத்தகு மகிமைகள் நிறைந்த சூரியனார் கோயிலின் இன்னொரு சிறப்பு... ஸ்தல விருட்சமான வெள்ளெருக்கன்!

    சிவனாரை பூஜிக்க உகந்த பூக்களில், வெள்ளை எருக்கன் பூவுக்கு முக்கிய இடம் உண்டு. விசேஷ மருத்துவ குணம் நிறைந்த வெள்ளெருக்கன் பூ, புராண - இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது. ‘வெள்ளெருக்கன் சடை முடியான், வெற்பெடுத்த திருமேனி...’ என்று சிவனாரின் சடைமுடியில் சூடப்பட்ட வெள்ளெருக்கன் பூக்கள் குறித்து ராமாயணத்தில் போற்றுகிறார் கம்பர். சங்க இலக்கியம் இதை, ‘எருக்கு’ எனக் குறிப்பிடுகிறது. புறநானூறில், ‘எருக்கம்புதர்ச்செடி’ என விவரிக்கிறார் கபிலர். ‘குறுமுகிழ் எருக்கங் கண்ணி’ என நற்றிணையும், ‘குவிமுகிழ் எருக்கங் கண்ணியும்...’ என்று குறுந்தொகைப் பாடலும் எருக்கனின் சிறப்பைப் போற்றுகின்றன.

    போருக்குப் புறப்படும் மன்னர்கள், ஆலயத்துக்கு வந்து ஸ்வாமியை தரிசிப்பதுடன், ஸ்தல விருட்சத்தில் இருந்து எருக்க இலை ஒன்றைப் பறித்து, கிரீடத்தின் ஓரத்தில் செருகிக்கொண்டு செல்வார்களாம்; வெற்றியுடன் திரும்புவார்களாம்! ‘அக்னி புராணம்’ இதுகுறித்து விரிவாக விளக்குகிறது. ‘நாரத புராண’த்தில், சிவனாருக்கு எருக்கம்பால் நைவேத்தியம் செய்யப்படுவது குறித்தும், சிவபூஜையில் எருக்கன் பூக்கள் முக்கியத்துவம் பெறுவது குறித்தும் கூறப்பட்டுள்ளது. இது பற்றிய தகவலை, ‘சிவமஞ்சரி’ என்ற நூலிலும் காணலாம். இத்தகு மகத்துவங்கள் நிறைந்த எருக்கம் பூவை ஸ்தல விருட்சமாகக் கொண்ட சூரியனார் கோயிலை தரிசிப்பது விசேஷம் என்பர்.

    வெள்ளை எருக்கன் செடி

    ‘ஆலய விருட்சங்கள்... ஆத்ம திருப்திக்காக!’

    வாணியம்பாடி என்றதும் மதுவுக்கு அடிமையானவர்களை மீட்பவரும், கிட்னி சிகிச்சை நிபுணருமான ‘காசினிக் கீரை’ புகழ் டாக்டர் அக்பர் கவுசர் நினைவுக்கு வருவார். இவரது அடுத்தகட்ட பரிணாமம்... நோய்களை குணப்படுத்தும் இந்துக் கோயில்களின் ஸ்தல விருட்சங்கள் குறித்த ஆய்வு!

    வாணியம்பாடி, கணவாய்புதூர் காசினி தோட்டத்தின் அருகில் உள்ள, அழகிய ஆரோக்கிய விநாயகர் ஆலயத்தில் டாக்டர் அக்பர் கவுசரைச் சந்தித்தோம் (இந்தக் கோயிலைக் கட்டியது மட்டுமின்றி, சென்னை -மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிவாச்சார்யர்களைக் கொண்டு, கடந்த 18-8-2002 அன்று கும்பாபிஷேகம் செய்தவரும் இவர்தான்!).

    "நோய்களை குணமாக்கும் அரிய வகை மரம் செடிகளை ஸ்தல விருட்சமாக வைத்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டபோது, வியப்பும் பிரமிப்பும் அதிகரித்தது. இந்த மரங்கள் அழிந்துவிடக் கூடாது; அடுத்தடுத்த தலைமுறைக்கும் இதன் மகத்துவம் போய்ச்சேரவேண்டும் எனும் எண்ணம் மேலோங்கியது. உலகில் இந்த விருட்சமானது அழிந்து போனாலும், கோயிலுக்குள் உள்ள ஒரேயொரு மரத்தில் இருந்தேனும் விதைகள் டாக்டர் அக்பர் கவுசர் பரவி, பன்மடங்காகப் பெருகும் என சிந்தித்துள்ளனர் ஆன்றோர்!

    ஆனால், ஸ்தல விருட்சங்களின் பெருமையை உணரவில்லை நாம்! இன்னும் சில தலங்களில் விருட்சங்களே இல்லை. புராண - புராதனப் பெருமை கொண்ட சிதம்பரம் தலத்தின் விருட்சம் - தில்லை. தொழுநோய்க்கு மருந்தாக உள்ள இந்த ‘தில்லை’ எனும் விருட்சம், தில்லையில் இல்லை என்பது வேதனை!

    எனவே, அழிந்துவரும் அரிய வகை மரம், செடி-கொடிகளைப் பிற நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் நான் செல்லும்போதெல்லாம் வாங்கிவந்து 108 ஏக்கர் பரப்பளவில், ‘மொகல் தோட்டம்’ என பெயரிட்டு வளர்த்து வருகிறேன். இங்கேயுள்ள எந்தத் தாவரமும் விற்பனைக்கு அல்ல; இது ஆத்ம திருப்திக்காக! அவ்வளவுதான்..." என்கிறார்.

    ஆயிரக்கணக்கில் அரிய வகைத் தாவரங்கள்! இதனைப் பராமரிக்க 100-க்கு மேற்பட்ட பணியாளர்கள். நவக்கிரகம், ராசி மற்றும் நட்சத்திரத்துக்கு உரிய விருட்சங்கள் என பிரிவு பிரிவாக, விருட்சத்தின் பெயர், எந்த ஸ்தலம், இதன் தாவரப் பெயர், மருத்துவ குணங்கள் என அழகுற பட்டியலிட்டு வைத்துள்ளார் அக்பர் கவுசர்.

    ஸ்தல விருட்சங்கள் குறித்த தனது ஆய்வுக் கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார். அத்துடன், அவர் தந்த எண்ணற்ற தகவல்களும் பிரமிக்க வைத்தன. மிக அரிதானதும் அற்புதமானதுமான இந்தத் தகவல்களுடன், விருட்சங்களால் சிறப்புப் பெற்ற ஆலயங்களின் பெருமைகளையும் இணைத்துத் தரும் முயற்சி இது!

    ஸ்ரீசிவ சூரியப்பெருமான் திருக்கோயில்

    ஆலயத்தில், கிழக்கு நோக்கி சிம்ம ராசியின் மீது ஆட்சி செய்கிறார் சூரியபகவான். எனவே, சிம்ம ராசிக்காரர்களது நோய் மற்றும் வினைகளை, வெள்ளெருக்கன் தீர்த்து வைப்பதாகச் சொல்வர். சூரியன் வெப்பமானவன். எருக்கம் பூவும் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியதுதான். காய் போல் இருக்கும் சிறிய எருக்கம் பூக்களை விரலால் அழுத்தினால் உடைந்துவிடும். உள்ளே விதை இருக்கும். இந்த தாவரத்தின் இலைகள், பூக்கள், தண்டு, வேர் என அனைத்து பாகங்களிலும் பால் இருக்குமாம். இந்தப் பால் தோல் வியாதியைப் போக்கவல்லது. பற்களின் கறைகளை அகற்றும் வல்லமை கொண்ட இந்தப் பூ, நம் மனதின் கறைகளையும் அகற்றி, நமக்குள் தெளிவைத் தரவல்லது! மலேரியா

    Enjoying the preview?
    Page 1 of 1