Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannadi Sri Mallikeshwarar Koyil Thiruththala Varalaaru
Mannadi Sri Mallikeshwarar Koyil Thiruththala Varalaaru
Mannadi Sri Mallikeshwarar Koyil Thiruththala Varalaaru
Ebook216 pages1 hour

Mannadi Sri Mallikeshwarar Koyil Thiruththala Varalaaru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸ்ரீ மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோயில் வரலாறு வருகின்ற இந்த நல்ல சந்தர்ப்பத்தில் திருக்கயிலாய சிறப்பு, குருமரபு வணக்கம், திருநாவுக்கரசர் திருக்கயிலாய போற்றித் தாண்டவம், மணிவாசகரின் அமுதவரிகள், திருக்கயிலாயம் சென்று வந்த ஒரு திருப்தியையும் இந்நூல் வழங்கியிருப்பது மாபெரும் சிறப்பாகும். இந்நூலை படிப்பவர்கள் ஸ்ரீ மல்லிகேஸ்வரரின் வரலாற்றை அறிவதோடு, எல்லா திருக்கோவில்களிலும் எப்படி வணங்கவேண்டும் என்ற முறையினை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

Languageதமிழ்
Release dateMay 13, 2023
ISBN6580156008926
Mannadi Sri Mallikeshwarar Koyil Thiruththala Varalaaru

Read more from Edaimaruthour Ki Manjula

Related to Mannadi Sri Mallikeshwarar Koyil Thiruththala Varalaaru

Related ebooks

Reviews for Mannadi Sri Mallikeshwarar Koyil Thiruththala Varalaaru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannadi Sri Mallikeshwarar Koyil Thiruththala Varalaaru - Edaimaruthour Ki Manjula

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மண்ணடி ஸ்ரீ மல்லிகேஸ்வரர் கோயில் திருத்தல வரலாறு

    Mannadi Sri Mallikeshwarar Koyil Thiruththala Varalaaru

    Author:

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    Edaimaruthour Ki Manjula

    For more books

    https://www.pustaka.co.in/home/author/edaimaruthour-ki-manjula

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. உடலே ஆலயம்; ஆன்மாவே கடவுள்!

    2. மல்லிகேசுவரர் ஆலயச் சிறப்பு

    3. நாத - விந்து தத்துவம்

    4. மாயை

    5. ஆலய அமைப்பு

    6. மல்லிகேசுவரர் ஆலயச்சுற்று

    7. நவக்கிரகசந்நிதி

    8. பதினாறு கால் மண்டப சிற்பங்கள்

    9. ஸ்ரீ மல்லிகேஸ்வரர் கோயில் கல்வெட்டுகள்

    10. ஆலய வழிபாடு செய்யும் முறை

    11. சிவசகஸ்ர நாமம்

    12. சிவபுராணம்

    13. திருக்கயிலாய சிறப்பு - தேவாரம்

    14. ஞானம், தீக்கை, வீடுபேறு

    15. என் மது வெள்ளமே...

    16. மீண்டு வாரா வழி...

    முன்னுரை

    மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்

    புலனைந்தின் வழியடைத் தமுதே

    ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி

    உள்ளவா காணவந் தருளாய்

    தேறலின் தெளிவே சிவபெரு மானே

    திருப்பெருந் துறையுறை சிவனே

    ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த

    இன்பமே என்னுடை அன்பே!

    (திருவாசகம், கோயில் திருப்பதிகம்)

    மண்ணடியில் அமைந்துள்ள மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்சுவரருக்கும் எனக்கும் ஏதோ ஒரு பூர்வஜென்மத்தொடர்பு இருக்கிறது என்பதை 2003-ஆம் ஆண்டு அடியேன் உணர்ந்து கொண்டேன்.

    அப்போது தான் இளம் முனைவர்(எம்.ஃபில்) பட்டப்படிப்புக்கான தரவுகளைத்தேடி மறைமலை அடிகள் நூல் நிலையம் சென்றேன். அப்போது அடியேனை எதிர்கொண்டு அழைத்தவர் மல்லிகேஸ்சுவரர் பெருமான்.

    கோயிலுக்குச் சென்றுவிட்டு நூலகம் செல்லுங்கள். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். நினைத்த காரியம் நிறைவேறும் என்றதுடன், அக்கோயிலின் பெருமைகளையும் கூறி கோயில் மூடுவதற்குள் செல்லுங்கள் என்று ஒருவர் கூறினார்.

    அவர் கூறியதை ஏற்று கோயிலுக்குச் சென்று வழிபட்டேன். பின் அருகில் இருந்த மறைமலை அடிகள் நூலகத்திற்குள் நுழைந்தேன். அங்கும் முகப்புச் சுவறில் நடராஜர் பெருமான் காட்சியளித்தார். அன்று என்வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது.

    நூலகத்திற்குள் நுழைந்து சிறிது நேரத்திற்கெல்லாம் நூலாசிரியர் தெள்ளாறு மணி அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய சிவ மூர்த்தங்கள் நூலை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. அன்றிலிருந்து அவருடைய தூய நட்பும் கிடைத்தது. அந்த நட்பு இன்று வரை மல்லிகேஸ்சுவரர் அருளாசியோடு தொடர்கிறது.

    அன்றிருந்தது போல அடியேன் இன்றில்லை. வாழ்க்கையில் மறக்க முடியாத நம்ப முடியாத பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பல நூல்கள் உருவாயின. பலருடைய பாராட்டுக்களையும் பெற்றேன். எம்.ஃபில் ஆய்வேடு உருவாகி, நூலாகவும் வெளிவந்து, ஒரு நன்நாளில் பல தமிழறிஞர்கள் முன்னிலையில் மல்லிகேஸ்சுவர் கோயிலில் உள்ள நால்வர் பெருமக்கள் சந்நிதியில் நூல் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

    மல்லிகேஸ்சுவர பெருமானை ஒவ்வொரு முறையும் தரிசனம் செய்து திரும்பும் போதும் ஏதாவது ஒரு திருப்பம் நிகழும் என்பதை உண்மையாக உணர்ந்தேன். மிகப் பழமையான இக்கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் அக்கோயிலில் பணியாற்றும் ஒரு சிலர் "இக்கோயில் பற்றிய விரிவான தல புராணம் எதுவும் கிடையாது அதனால் அதை, நீங்கள் தான் உருவாக்கித் தரவேண்டும் என்று என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர். இது இறைவனின் சித்தம் என்றே நினைத்தேன். அவன் எனக்கிட்ட கட்டளையை சிரமேற்கொண்டு செய்யத் தொடங்கினேன், இக்கோயிலை பற்றி மா. சத்தியமூர்த்தி என்பவர் முன்பே எழுதி வெளியிட்ட ஒரு நூல் இந்நூலுக்கு பெரிதும் துணைபுரிந்தது. கிட்டத்திட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவிட்ட இந்நூல், தக்க பதிப்பாளருக்காக காத்துக் கொண்டிருந்தது.

    மல்லிகேஸ்சுவரரின் பெருமைகளை வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. கோயில் தல புராணங்களால்தான் நாம் நம் முன்னோரின் பெருமைகளையும் கட்டடக் கலையின் சிறப்புகளையும், இறைவனின் மாண்புகளையும் அறிந்து கொள்ளமுடிகிறது. கோயில் தல புராணத்திற்கு அடியேனின் பங்களிப்பும் சிறிது சேர்ந்திருப்பது இறைவனின் பெருங்கருணைதான்.

    இந்நூலை கடுமையாக உழைத்து பக்க வடிவமைப்பு செய்து கொடுத்தும், கோயிலில் உள்ள சிற்பங்களை புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்தும் உதவிய என் உடன் பிறவா சகோதரர் ஜி.வி.பிக்கும், இந்நூல் வெளிவர பல வழிகளிலும் முயற்சி செய்து உதவிய தெள்ளாறு மணி அவர்களுக்கும், இதை மனமுவந்து பதிப்பிக்க முன் வந்த பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றி!

    "உடையாள் உன்தன் நடுவிருக்கும்

    உயையாள் நடுவுள் நீயிருத்தி

    அடியேன் நடுவுள் இருவீரும்

    இருப்ப தானால் அடியேன் உன்

    அடியார் நடுவுள் இருக்கும்

    அருளைப் புரியாய் பொன் னம்பலத்தெம்

    முடியா முதலே என்கருத்து

    முடியும் வண்ணம் முன்னின்றே"

    என்றும் இறைப்பணியில்

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    E:\Priya\level 1 doc\munnadi mallisvaran\2-min.jpg

    கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

    கணபதி என்றிடக் காலனும் கைதொழும்

    கணபதி என்றிடக் கருமம் ஆதலால்

    கணபதி என்றிடக் கவலை தீருமே!

    கணபதி எனும் சொல்லில் என்ற எழுத்து ஞானத்தையும், எனும் எழுத்து ஜீவன்களின் மோட்சத்தையும் குறிக்கிறது. பதி எனும் சொல் கடவுள், தலைவன், இறைவன் எனும் பொருள்படுகிறது. பரப்பிரம்ம ஸ்வரூபமாய் இருப்பவன் கணபதி. ஞானத்திற்கும் மோட்சத்திற்கும்(முக்தி) அவனே தலைவன்.

    1. உடலே ஆலயம்; ஆன்மாவே கடவுள்!

    "உலகில், ‘ஆத்மா’ என்ற ஒரே தத்துவம்தான் உள்ளது. ஆத்மாவைத் தவிர வேறு எதுவும் சத்தியமில்லை. ஆத்மாவுக்கு பேதங்களோ வேறுபாடுகளோ கிடையாது. ஆத்மாவில் எவ்வித குணங்களும், விசேஷங்களும் கிடையாது.

    உபநிஷத்துக்துகளில் ஆத்மாவில் இருப்பவையாக வர்ணித்திருக்கும் குணங்கள் எல்லாம் மாயையால் கூறுபட்டவையே தவிர, சத்தியமில்லை. ஆத்மா, சத் சித் ஆனந்த(சச்சிதானந்த) ரூபமாகும்." இவ்வாறு ஸ்ரீ ஆதிசங்கரர் அத்வைத சித்தாந்தங்களாகக் கூறியுள்ளார்.

    ஆத்மா பரந்து விரிந்து பிரபஞ்சத்தைத் தாங்கியபடியும் எறும்பிலும் சிறிய ஜீவன்களிலும், மானிட அம்சமாகவும் கூட விளங்கி வருகிறது. அழியாத ஆத்மா அது சார்ந்துள்ள உடல்களிலிருந்து வெளிப்பட்டு, புதுப்புது உருவம் எடுத்தும் வருகிறது. இந்த ஆத்மாவை கடவுள் என்று அழைத்து வருகிறோம். இந்த ஆத்மா நம் உடலுக்குள் இருப்பது நாம் செய்த புண்ணியம்.

    இவ்வாறு நம்முள் இருக்கும் கடவுளை, முழுமுதற்பொருளை, தேவாதி தேவனாகிய சிவபரம்பொருள் அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கிறார். உலகத்து உயிர்கள் பொருட்டு அவற்றின் மீது அவர் கொண்ட பெருங்கருணையின் காரணமாக இலிங்கத்(சிவலிங்கம்) திருமேனி தாங்கிதிருக்கோயில்கள் தோறும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். அவ்வகையில், தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னை - மண்ணடி, லிங்கிச்செட்டித் தெருவில் அமைந்த திருக்கோயிலில் திருமரகதாம்பாள் உடனுறை திரு மல்லிகேசுவரராக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

    மண்ணடி மல்லிகேசுவரரின் அருளின் திறம் சொல்ல வொன்னாதது. வார்த்தைகளுக்குள் அடங்காதவை. அவ்வாறு கூறும் விதமாக பல பக்தர்களுக்கும் தனது அருள் திறத்தை வெளிப்படுத்தி அருள் பாலித்திருக்கிறார் - அருள்பாலித்தும் வருகிறார்.

    அமைவிடம்

    E:\Priya\level 1 doc\munnadi mallisvaran\MalleeswararTemple (9)-min.JPG

    இத்திருக்கோயில் சென்னை - பாரிமுனையில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், முத்தியாலுப்பேட்டை, லிங்கிச் செட்டித்தெருவில் தென்திசை நோக்கி அமைந்துள்ளது. தென்திசை நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலுக்கு ஒரு தனிச்சிறப்பும் புராணக்கதை ஒன்றும் உள்ளது. இத்திருக்கோயில் 73 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்ட பரப்பளவில் எழுப்பப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலைப் பற்றிய ஆங்கிலேயர்களின் வரலாற்றுக் குறிப்பு வியப்புக்குரியது.

    தென்திசை வாயில்

    அனைத்துத் திருகோயில்களும் கிழக்கு திசை நோக்கித்தான் அமைந்திருக்கும். தென்திசை என்பது எமதர்மனுக்குரியது. இத்திசை நோக்கி எந்த செயலையும் செய்யக்கூடாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். காரணம் இது மரண யாத்திரையைக் குறிக்கும். வடதிசை சிவபெருமானுக்குரியது, ஞானத்தை வாரி வழங்குவது. அதனால்தான் நாம். வடதிசை நோக்கி வணங்கி ஞானத்தைப் பெரும்பொருட்டு தென்திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமி. எம்பயம் நீக்கக்கூடிய முதல் திருத்தலம் திருக்கடவூர் அடுத்தது இந்த மல்லிகேசுவரர் கோயில் என்பதுதான் இதன் தனிச்சிறப்பு.

    ***

    மல்லிகேசுவரர் பெயர்க் காரணம்:

    இத்திருக்கோயில் இருந்த இடம் முன்பு மல்லிகை வனமாக இருந்ததால் மல்லிகேசுவரர் என்ற பெயரில் விளங்கி வருவதாக மரபுவழிச் செய்தி உள்ளது. மல்லிகை வனத்தில் சுயம்புவாக எழுந்தருளி இருந்த சிவலிங்கத்துக்கு சிறிய கோயில் எடுத்து வணங்கி வந்த பக்தர்களால் பிற்காலத்தில் பெருங்கோயிலாக எடுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயில், கி.பி. 16-17-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட அதாவது 400 ஆண்டுகள் பழைமையான திருக்கோயில் என அறிய முடிகிறது.

    ***

    வரலாற்று ஆதாரம்:

    மிழகத்தை ஆண்ட பல்வேறு அரச மரபினர்களின் விஜயநகர வம்சத்தைச் சார்ந்த மன்னர்களும் அடங்குவர். அந்த மன்னர்களின் வழிவந்தர்களுள் ‘மல்லிகார்ஜுனன்’ என்ற பெயர் கொண்ட அரசன் குறிப்பிடத்தக்கவன். இம்மன்னன் பெயராலும் மல்லிகேசுவரர் திருக்கோயில் எழுப்பப்பட்டிருக்கலாம்’

    என்று கூறப்படுகிறது. கி.பி. 1632-ஆம் ஆண்டின் ஆவணம் ஒன்றில் ‘ஸ்ரீமல்லிகேசுவரர் பழைய கோயில்’ என்று இவ்வாலயம் குறிக்கப்பட்டுள்ளது.

    2. மல்லிகேசுவரர் ஆலயச் சிறப்பு

    (தெற்கு நோக்கிய நுழைவாயில்)

    எமன்

    E:\Priya\level 1 doc\munnadi mallisvaran\3-min.jpg

    மண்ணடி மல்லிகேசுவரர் கோயிலுக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இக்கோயிலின் நுழைவாயில் தெற்கு நோக்கி அமைந்திருப்பதுதான்.

    தெற்கு திசை என்பது எமனுக்கு உரிய திசை.

    Enjoying the preview?
    Page 1 of 1