Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koyil Ula
Koyil Ula
Koyil Ula
Ebook65 pages22 minutes

Koyil Ula

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜ.பாக்கியவதி (பிறப்பு 29 ஏப்ரல் 1965) தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இவருடைய கணவர் முனைவர் பா.ஜம்புலிங்கம் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உதவிப்பதிவாளராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இல்லத்தரசியான இவருடைய வாசிப்புப் பழக்கம் காரணமாக கோயில்கள் உலா, வாசிப்புப்பழக்கம், தட்டச்சின் முக்கியத்துவம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் சில கட்டுரைகள் தினமணி இதழிலும், பத்திரிக்கை.காம். இதழிலும் வெளிவந்துள்ளன. நூல் முயற்சியாக இவர் சென்றுவந்த கோயில்களைப் பற்றி எழுதி வெளியான கட்டுரைகளைத் தொகுத்து, தன் கணவரின் பணி நிறைவு நாளன்று கோயில் உலா என்ற தலைப்பில் நூலாகவெளியிட்டார். அதனைத் தற்போது புஸ்தகா மூலமாக மின்னூலாகக் கொணர்வதில் பெருமை கொள்கிறார். அவர் தொடர்ந்து இன்னும் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123302619
Koyil Ula

Related to Koyil Ula

Related ebooks

Reviews for Koyil Ula

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koyil Ula - J. Bagyavathi

    http://www.pustaka.co.in

    கோயில் உலா

    Koyil Ula

    Author:

    ஜ. பாக்கியவதி

    J. bagyavathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/j-bagyavathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    மந்த்ராலயமும் ஹம்பியும்

    காரைக்கால் மாங்கனித்திருவிழா

    அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை

    விரும்பியதை அருளும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில்

    திருமழபாடி வைத்தியநாத ஸ்வாமி கோயில்

    வேதாரண்யம் மறைக்காட்டீஸ்வரர் கோயில்

    நள்ளி சிங்கமடை அய்யனார் கோயில்

    குருக்கத்தி மாசி பெரியசாமி கோயில்

    ஜாலம் காட்டும் சிற்பங்கள் : வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்

    இந்திரன் விமோசனம் பெற்ற தலம் : மேலப்பழுவூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

    மனதில் நிற்கும் மகாமகங்கள்

    முனைவர் பா. ஜம்புலிங்கம் வாழ்க்கைக் குறிப்பு

    என்னுரை

    டிசம்பர் 2012இல் குடும்பத்தாரோடு மந்த்ராலயமும் ஹம்பியும் சென்றுவந்தோம். பயண அனுபவங்களை எழுதும்படி என் கணவர் கூறினார். பள்ளி நாள்களில் கட்டுரை எழுதியதற்குப் பின் கிடைத்த அந்த வாய்ப்பினை வைத்து எழுதினேன். அக்கட்டுரை மந்த்ராலயமும் ஹம்பியும் என்ற தலைப்பில் தினமணி ஞாயிறு கொண்டாட்டம் பகுதியில் 28.4.2013 இல் வெளியானது.

    தொடர்ந்து 2014இல் வட இந்தியாவிற்கும், அவ்வப்போது தமிழ்நாட்டில் பிற கோயில்களுக்கும், விழாக்களும் சென்றுவந்தபின் அவ்வப்போது கட்டுரையாக எழுத ஆரம்பித்தேன். அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை (7.12.2014), விரும்பியதை அருளும் உவரி சுயம்புலிங்க சுவாமி (12.4.2015), சிங்கமடை அய்யனார் (16.10.2015), குருக்கத்தி மாசி பெரியசாமி (6.5.2016), ஜாலம் காட்டும் சிற்பங்கள்: வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் (2.9.2016), இந்திரன் விமோசனம் பெற்ற திருத்தலம் (18.11.2016) ஆகிய கட்டுரைகள் தினமணி இதழிலும், மனதில் நிற்கும் மகாமகங்கள் (22.2.2017) பத்திரிகை.காம். தமிழ் செய்தி இணையதளத்திலும் வெளியாயின. காரைக்கால் மாங்கனித்திருவிழா, திருமழபாடி வைத்யநாதஸ்வாமி கோயில், வேதாரண்யம் மறைக்காட்டீஸ்வரர் கோயில் ஆகியவற்றிற்குச் சென்றுவந்தபின் கட்டுரைகள் எழுதினேன்.

    என் கணவர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் (உதவிப் பதிவாளர்), தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணி நிறைவு காணும் நாளில் (28.4.2017) இக்கட்டுரைகளை மேம்படுத்தி சிறு நூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

    கட்டுரைகளை வெளியிட்ட தினமணி இதழுக்கும், பத்திரிகை. காம் தமிழ் செய்தி இணைய தளத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.

    சிறப்பாக அச்சிட்டுத் தந்த முல்லைபாரதி கணினி அச்சகத்தாருக்கு நன்றி. ஊக்கம் தருகின்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், என் மூத்த மகன் பாரத், மருமகள் அமுதா, இளைய மகன் சிவகுரு ஆகியோருக்கும் என் நன்றி.

    ஜ. பாக்கியவதி

    28.4.2017

    மந்த்ராலயமும் ஹம்பியும்

    தொடர்ந்து சில ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டின் முதல் நாளன்று மந்த்ராலயத்திற்குக் குடும்பத்துடன் சென்று வரும் என் அத்தை பேரன் டிசம்பர் 2012இல் மேற்கொண்ட பயணத்தின்போது உடன் சிலரை அழைத்துச் செல்லும் எண்ணத்தோடு எங்களைக் கேட்டபோது மந்த்ராலயம் செல்வதற்கான விருப்பத்தினைத்

    Enjoying the preview?
    Page 1 of 1