Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ponni Nadhi Karaiyil Punitha Aalayangal Part - 1
Ponni Nadhi Karaiyil Punitha Aalayangal Part - 1
Ponni Nadhi Karaiyil Punitha Aalayangal Part - 1
Ebook288 pages1 hour

Ponni Nadhi Karaiyil Punitha Aalayangal Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காவேரி என்னும் புனிதநதி பிறக்கும் இடத்தைத் தரிசித்துவிட்டு வந்துவிடவேண்டும் என்ற ஆவல் எங்களுக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது. "தை பிறந்தால் வழிபிறக்கும்" என்பார்கள். அதைப்போல தை மாதம் பிறந்ததும் தான் எங்களுக்குக் காவேரி நதி உற்பத்தியாகும் தலத்தைப் பார்க்கும் வழியும் தெரிந்தது! பொங்கலை ஒட்டி இந்தப் புனித தரிசனத்துக்கு எங்களைத் தயார் செய்துகொண்டு போனோம்.

காவேரி அப்படி ஒரு தனி அழகுடன் கரைக்குக்கரை விம்மிப் பூரித்து, கவிதை

நடையுடன் அசைந்து வருவது தான். அந்த அழகை இன்று முழுமையுடன் பார்க்க வேண்டும் என்றால் வாருங்கள் படிக்கலாம் பொன்னி நதிக்கரையில் ஒரு புனித யாத்திரை...

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580127507327
Ponni Nadhi Karaiyil Punitha Aalayangal Part - 1

Read more from Lakshmi Subramaniam

Related to Ponni Nadhi Karaiyil Punitha Aalayangal Part - 1

Related ebooks

Reviews for Ponni Nadhi Karaiyil Punitha Aalayangal Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ponni Nadhi Karaiyil Punitha Aalayangal Part - 1 - Lakshmi Subramaniam

    https://www.pustaka.co.in

    பொன்னி நதிக்கரையில் புனித ஆலயங்கள் – பாகம் 1

    Ponni Nadhi Karaiyil Punitha Aalayangal Part – 1

    Author:

    லட்சுமி சுப்பிரமணியம்

    Lakshmi Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 1

    மருத்வ்ருதாயை நம: பாதௌ பூஜயாமி

    மஹாலக்ஷ்மியை நம: குல்பௌ பூஜயாமி

    ஸஹ்யகன்யாயை நம: ஜங்கே பூஜயாமி

    ஸரஸ்வத்யை நம: ஜாதுநீ பூஜயாமி

    அகஸ்யபத்நியை நம: மத்யம் பூஜயாமி

    காவேரியை நம: நாபி பூஜயாமி

    லோபாமுத்ரையை நம: ஹ்ருதயம் பூஜயாமி

    வரப்ரதாயை நம: ஸ்தனௌ பூஜயாமி

    கமண்டலுஸ முத்பன்னாயை நம: பாஹு பூஜயாமி

    ஸர்வதீர்த்தாதி தேவதாயை நம: கண்டம் பூஜயாமி

    விரஜாயை நம: நாஸிகாம் பூஜயாமி

    தஷிணகங்காயை நம: ஸ்ரோத்ரே பூஜயாமி

    பிரம்மவிஷ்ணு சிவாத்மகாயை நம: நேத்ரம் பூஜயாமி

    சதுர்வித பல உத்த த்ரயை நம: வக்த்ரம் பூஜயாமி

    சதுராந நகன்யாகாயை நம: சிர பூஜயாமி

    ஸர்வாபீஷ்டப்ரதான்யை நம: ஸர்வாணி அங்காதி பூஜயாமி.

    - காவேரி அன்னைக்கு அங்கபூஜை ('துலாக்காவேரி மகாத்மியம்' என்ற நூலிலிருந்து)

    சிறுவயதில் தஞ்சாவூருக்குப் போனால், செய்தித்தாளைப் புரட்டும் பெரியவர்கள், 'மெர்க்காராவில் மழை பெய்ததோ?’ என்று கவனித்துப் பார்ப்பது வழக்கம். மைசூரை ஒட்டி இருக்கும் குடகு நாட்டைச் சேர்ந்தது மெர்க்காரா என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அங்கே மழை பெய்ததைப் பற்றி இங்கே தஞ்சாவூர்க்காரர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள் என்பது தான் தெரியவில்லை?

    இது தெரியவில்லையா உங்களுக்கு? அங்கே மழை பெய்தால் தான் இங்கே காவேரியில் தண்ணீர் வரும். காவேரி நதி உற்பத்தியாகும் இடமே அங்கே தான் தலைக்காவேரி என்ற ஊரில் இருக்கிறது! என்று ஒரு பெரியவர் எங்களுடைய சந்தேகத்தை விளக்கினார்.

    அன்றுமுதல் தலைக்காவேரியைப் போய்ப் பார்த்து, ஒருமுறையாவது காவேரி என்னும் புனிதநதி பிறக்கும் இடத்தைத் தரிசித்துவிட்டு வந்துவிடவேண்டும் என்ற ஆவல் எங்களுக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். அதைப்போல தை மாதம் பிறந்ததும் தான் எங்களுக்குக் காவேரி நதி உற்பத்தியாகும் தலத்தைப் பார்க்கும் வழியும் தெரிந்தது! பொங்கலை ஒட்டி இந்தப் புனித தரிசனத்துக்கு எங்களைத் தயார் செய்துகொண்டு போனோம்.

    "பூவார்சோலை மயிலாட, புரிந்து குயில்கள் இசைபாட

    காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி!"

    - என்று பூரிப்புடன் சொல்லுகிறார் இளங்கோ அடிகள். அதற்குக் காரணம், காவேரி அப்படி ஒரு தனி அழகுடன் கரைக்குக்கரை விம்மிப் பூரித்து, கவிதை நடையுடன் அசைந்து வருவது தான். அந்த அழகை இன்று முழுமையுடன் பார்க்க வேண்டும் என்றால், கர்நாடக மாநிலத்தில் தான் தரிசிக்க வேண்டும்.

    அதனால், காவேரியின் தலைமுடியான தலைக்காவேரியிலிருந்து, பாதம் மணலில் புதைய நாணத்துடன் சமுத்திர ராஜனை அணைக்க நடந்து வரும் பூம்புகார்வரை, கூடவே காரிலும் நடையுமாக வந்து தரிசித்து விடுவது என்று முடிவு செய்தோம்.

    மைசூருக்குச் சென்று, அங்கிருந்து கார் மூலமாகவே தலைக்காவேரியை வந்தடைந்தோம். மைசூரிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் குடகு மாவட்டத்தின் தலைநகரான மெர்க்காரா இருக்கிறது. அங்கிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் தலைக்காவேரி இருக்கிறது.

    காவேரி அசைந்தாடுவதைப்போல, இந்தச் சாலையில் காரும் பக்கத்துக்குப் பக்கம் அசைந்தாடுகிறது; நம்மைக் குலுக்கிப் போடுகிறது! காவேரி கண்ணுக்குத் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே போகிறோம் மெர்க்காராவிலிருந்து! அது தென்படுவதில்லை - அது தான் ஓர் அதிசயம். பிறந்த இடத்திலிருந்து கண்ணுக்குத் தெரியாமல் கசிந்து உருப்பெற்றுப் பெருகிவரும் காவேரியை நாம் வெளியே பார்ப்பது சிரமமாக இருக்கிறது.....

    முதலில் காவேரி பிறக்கும் இடத்தைப் பார்ப்போம். அப்புறம் அது தோன்றிய கதையையும், வளர்ந்த கதையையும் தெரிந்து கொள்ளலாம்! என்று சொன்னார் எங்களுடன் வழி காட்ட வந்த நாணயன் என்ற குடகு நாட்டு விவசாயி அவர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர். கோட்டும் தொப்பியுமாக, குடகு நாட்டவர் உடையில் தான் எங்களுடன் கோயில்களுக்கும் வந்தார்.

    காவேரி பிறக்கும் இடத்துக்கு வந்து நின்றோம். ஒருகணம் பிரமிப்பாகவே இருந்தது.

    அந்த இடம் ஒரு சிறிய சுனை. சுமார் நான்கு அடி நீளம், நான்கு அடி அகலத்துக்குச் சதுரமாக ஒரு தொட்டியைப் போலக் கட்டியிருக்கிறார்கள். அதை ஒட்டி மாடம் போன்ற ஒரு சிறிய கட்டடம் அதன் ஓரமாக அமர்ந்து. தான் அர்ச்சகர் காவேரிக்குப் பூஜை செய்கிறார்.

    ஒருகணம் கண்ணை மூடிக்கொண்டு நின்றோம். கற்பாறைகளில் துள்ளி வரும் நதி தெரிந்தது. அகண்ட காவேரியாக விரிந்து கரைக்குக் கரை ததும்பி, பசுமையை அள்ளிக் கொட்டித் தான் போகும் வழியெல்லாம் உணவளிக்கும் அன்னபூரணியான அன்னை காவேரியைக் கண்டோம். அந்த மகாநதி தனது சக்தியை எல்லாம் அடக்கிக் கொண்டு, அமைதியாகக் கடற்கரையை அடைந்து, பூம்புகாரில் கடலரசனுடன் கலக்கும் அழகு தெரிந்தது. தலைக்காவேரியின் இந்த மௌனச் சுனைதான் அதன் ஆரம்பம்!

    காவேரியைப் பூஜிக்கச் சொன்னார் அவர். பெரிய இலை ஒன்றில் குங்குமத்தை வைத்துக் கொண்டு தான் காவேரி நதியைப்பற்றிய அஷ்டோத்திரத்தைச் சொல்லிப் பூஜிக்கிறோம். நடுநடுவில் அழகான மலர்களும் அந்த நீர்ப்பரப்பில் இதழ் விரிந்து விழுகிறது. குங்கும உடை அணிந்து மாந்தர்களின் உய்விற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அந்த அன்னை, சக்திவடிவமாய் - தேவியின் சொரூபமாக அங்கே பொங்கி எழுகிறாள்....

    இந்தச் சுனைவடிவத்தை ஒட்டிக் குளம் அமைந்திருக்கிறது. அதில் பக்தர்கள் நீராடிக் காவேரித் தாயைத் துதிக்கிறார்கள். தம்பதியர் சேர்ந்து நீராடுகிறார்கள். சங்கற்பம் சொல்லி, காசு போட்டு, மூழ்கி எழுந்து வணங்குகிறார்கள்.

    துவாசங்கரமண தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வருகிறது. அந்தப் புனிதநாளில் முகூர்த்த நேரத்தில் காவேரி இங்கே கொப்புளித்துப் பொங்குகிறது. அப்படிப் பொங்கி எழும்போது தடாகத்திலும் நீர்மட்டம் உயர்ந்து நிறைகிறது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப்போது அங்கே வந்து அமிழ்ந்து நீராடுகிறார்கள்.

    அர்ச்சகர் அமர்ந்துள்ள இடத்தில் உள்ள மாடத்தினுள் மூன்று அடுக்குகளாகச் சிறிய பீடம் இருக்கிறது. சர்ப்பமும், பிறைசந்திரனும் பொறித்த முகப்பு, மாடத்தின் நான்கு புறங்களிலும் இருக்கிறது. இந்தப் பீடத்தின் முடியில் காவேரி அன்னை அமர்ந்திருப்பதாகச் சொல்லிக் கற்பூர ஆரத்தி காட்டுகிறார்கள். மலரால் அர்ச்சிக்கிறார்கள். குங்குமம் தூவிக் கும்பிடுகிறார்கள். அவை கீழே சிறிய குண்டத்தில் விழுந்து, நீர்ப்பரப்பில் ரோஜாக்களும், பல வர்ண மலர்களுமாக மாலைசூட்டி அழகு செய்விக்கின்றன.

    காவேரியின் கதையை அவரிடமே கேட்போமா? என்று கேட்டார் நாணயன். கதையைக் கேட்கத் தயாரானோம். அர்ச்சகர் காவேரி தோன்றிய கதையைச் சொன்னார்...

    சஹ்யாத்திரி மலை என்ற இந்த மலைப்பகுதியில் கவேரன் என்ற அரசன், தனக்குக் குழந்தைகள் இல்லாததால், புத்திரபாக்கியம் வேண்டித் தவம் இருக்கத் தொடங்கினான். அவனுடைய நீண்ட தவத்தை ஏற்று மகிழ்ந்த படைப்புக்குரிய தெய்வமான பிரும்மதேவன் அவன் முன்னே தோன்றினார். தன்னை வணங்கியவனிடம், உன்னுடைய தவத்தை மெச்சுகிறேன், ஆனால் உனக்கு மகன் பாக்கியம் கிடையாது. அதனால் உனக்கு ஒரு மகளை மட்டும் தந்து அருளுகிறேன்!" என்றார் பிரும்மா.

    மகள் மட்டும்தானா பிரும்ம தேவரே? என்று ஏங்கினான் அந்த அரசன்.

    இந்த மகள் மற்றவளைப் போல அல்ல. அவள் மாமுனிவர் ஒருவரை மணப்பாள் தவமிருந்து நீ பெற்ற மகளாதலால் புனிதநதியாக உருவெடுப்பாள். மண்ணுக்கு வளமும், மனத்துக்கு அமைதியும் தருவாள், வந்து நீராடும் பக்தர்களுக்கு அருளி, பாவங்களைப் போக்குவாள்! என்று சொல்லிக் குழந்தையை அருளினார் பிரம்ம தேவர்.

    லோபாமுத்திரை என்ற அந்தப் பெண் வளர்ந்து பெரியவளானாள். தாயிடமும், தந்தையிடமும் சம்மதம் பெற்றுத் தானும் சஹ்யாத்திரி மலைக்குச் சென்று தவம் செய்யத் தொடங்கினாள் அப்போது அங்கே வந்து சேர்ந்தார் அகத்திய முனிவர்.

    பெண்ணே! உனக்கு ஏன் இந்தத் தவம்? உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார்.

    முனிவரே! நான் வேதங்கள் அனைத்தையும் கற்றவரும், பிரம்ம தேவனின் அருளால் ஞானம் பெற்ற பிரும்மச்சாரியும், கோபம் இல்லாத பண்பும் உள்ளவரை மணக்க விரும்புகிறேன். அதை நாடியே தவம் செய்கிறேன் என்றாள் லோபாமுத்திரை.

    நீ குறிப்பிடும் எல்லாப் பண்புகளும் எனக்கு இருக்கின்றன. ஆயினும் உருவத்தில் சிறியவனான என்னை நீ விரும்புகிறாயா என்பது தெரியவில்லை. உனக்கு விருப்பமானால் என்னையே நீ கணவனாக ஏற்றுக் கொள்ளலாம்! என்று சொன்னார் அகத்திய முனிவர்.

    சுவாமி, அப்படி ஒரு பேறு கிடைக்குமானால் என்னை விடப் பாக்கியசாலி வேறு யார் இருக்கமுடியும்? உங்கள் விருப்பத்தை என் தந்தையிடம் சொல்லுங்கள். நான் கேட்கும் வரம் ஒன்றையும் நீங்கள் எனக்குத் தரவேண்டும். என்னை மணந்து கொண்டபிறகு, என்னைத் தனியே விட்டுவிட்டு நீங்கள் தவம் செய்யப் போய்விடக்கூடாது! என்றாள் அவள்.

    அகத்திய முனிவர் அதற்குச் சம்மதித்து, கவேர அரசனின் அனுமதி பெற்று லோபாமுத்திரையை மணம் செய்து கொண்டார். அவர்களுடைய வாழ்க்கையும் இனிதாகவே இருந்தது. ஒருநாள் லோபாமுத்திரையைத் தனியே விட்டு விட்டுப் போய்விட்டார் அகத்தியர் பிரும்மகிரியில் உள்ள கன்னிகா நதியில் நீராடிப் பூஜையில் இறங்கினார். லோபாமுத்திரை காத்திருந்தாள்.

    தனிமையை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனக்குக் கொடுத்த வரத்தின்படி அகத்திய முனிவர் நடக்கவில்லை என்று எண்ணினாள். தன்னை ஓர் நதிவடிவமாக மாற்றிக் கொண்டு, மலையிலிருந்து வேகமாக இறங்கி ஓடத் தொடங்கினாள். விஷயம் தெரிந்து அகத்தியர் திரும்பி வந்தார். தனது தவவலிமையினால் காவேரியைக் குறுகச் செய்து தனது கமண்டலத்துக்குள் அடக்கிக் கொண்டு விட்டார்!

    காவேரி உலகம் உய்ய வழிநடக்கவேண்டும் என்று திருமால் விரும்பினார். தவவலிமையுள்ள ஒரு முனிவரைக் காகமாக அனுப்பிக் கமண்டலத்தைக் கவிழ்த்துவிடச் சொன்னார். மீண்டும் அகத்தியரிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்க அந்தர்வாஹினியாக ஓடத் தொடங்கினாள் காவேரி. திருமாலின் அருளை உணர்ந்து கொண்டார் அகத்தியர். பாகமண்டலம் என்ற இடத்தில் மீண்டும் வெளிப்பட்ட காவேரி நதியைக் கண்டு ஆசீர்வாதம் செய்தார்.

    சிவபெருமானின் ஜடாமுடியிலிருந்து தோன்றிய உத்தர கங்கையைப் போல, நீயும் தட்சிணகங்கையாக ஓடித் தென்னாட்டுக்கு அருள்செய். நீ விரும்பியபடி அனைத்துத் தீர்த்தங்களும் உன்னை வந்து வணங்கட்டும். வணங்கியவரின் பாவங்களைத் தீர்ப்பவளாகவும் உன் பாதம்பட்ட இடம் எல்லாம் பசுமைபெற அருள்பவளாகவும் நீ வழிநடந்து செல். துலாராசியில் சூரியன் பிரவேசிக்கும் புனிதநாளில், உன்னிடம் சட்தநதிகளும் புண்ணிய தீர்த்தங்களும் அடக்கமாக, உன்னிடம் வந்து வணங்கி நீராடுபவர்களுக்குப் பாவமெல்லாம் போகட்டும்! என்று ஆசீர்வதித்து வழி அனுப்பி வைத்தார் அகத்தியர்.

    அதன்படி காவேரி ஓடுகிறாள். பாக மண்டலத்தில், பிரயாகையில் கங்கையுடன் யமுனையும் சரஸ்வதியும் சேர்ந்து கொள்வதைப்போல கனகா என்ற நதியும் சுஜ்யோதி என்ற கண்ணுக்குத் தெரியாத நதியும் சேர்ந்து கொள்கிறார்கள். அங்கே செய்வதைப்போல இங்கேயும் மூதாதையர்களுக்கு இந்தத் திரிவேணி சங்கமத்தில் நீராடிச் சடங்குகளைச் செய்கிறார்கள்!" என்றார் அர்ச்சகர்.

    காவேரியும், லோபாமுத்திரையும் விஷ்ணு மாயையின் இரு அம்சங்கள் என்று கூறுகிறது காவேரி புராணம்.

    தலைக்காவேரியில் காவேரி தோன்றும் இடத்தில் அகத்தியருக்குக் கோயில் இருக்கிறது. அங்கே லோபாமுத்திரை, காவேரி ஆகிய இருவருடனும் அமர்ந்திருக்கிறார் அந்தத் தமிழ் முனிவர். பின்னால் ஒரு மேடைமீது இரண்டு நெல்லி மரங்கள் இருக்கின்றன. இந்த நெல்லி மரங்களை திருமாலின் உருவம் என்று கருதுகிறார்கள்.

    தடாகத்தை ஒட்டிய மூன்றாவது தொட்டியில் விழுந்து காவேரி புதர்களிடையே மறைந்துவிடுகிறது. புதர்களுக்கும் பாறைகளுக்கும் அடியில் அந்தர்வாஹினியாகவே ஓடி தொலைவில் மீண்டும் வெளிப்படுகிறது. பாகமண்டலத்தில் தான் மீண்டும் நதியாக உருப்பெறுகிறது.

    தலைக்காவேரியில் நீராடித் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கி உடல் வலுப்பெறும் என்று கூறுகிறார்கள். குடகுநாட்டு மக்கள் இதற்குச் சான்றாக விளங்குகிறார்கள். பிரும்மகிரி மலைமுடியில் ஏறுவதையும், லக்ஷ்மண தீர்த்தம் அருவியில் குளிப்பதையும் புண்ணியமாகவும் கருதுகிறார்கள், புண்ணியத்துக்குப் புண்ணியம் - உடற்பயிற்சிக்குப் பயிற்சி.

    தலைக்காவேரியை நெருங்கும் வழியில் பெரிய கற்பாறை ஒன்று இருக்கிறது. அதைப் பீமன்கல் என்று சொல்லுகிறார்கள். காவேரி ஊற்றுவடிவத்தில் எழுவதை, இந்த இடத்தில் தான் முதன் முதலில் காணமுடியும். அதனால் இங்கே வரும் பக்தர்கள் இங்கே நின்று காவேரித்தாயை வணங்குகிறார்கள்.

    இந்த இடத்தைப் பற்றிச் சரித்திரக் குறிப்பாகவும் ஒரு கதை வழங்குகிறது...குடகுநாட்டின்மீது படை எடுத்து வந்தார் திப்புசுல்தான். இந்தப் பாறை இருக்கும் இடத்துக்கு வந்தவுடன் காவேரி அன்னையின் சக்தியால் கட்டுண்டு மேலே செல்ல முடியவில்லை. இதைப் புரிந்து கொண்ட திப்புசுல்தான் இங்கிருந்தே காவேரித் தாய்க்கு வணக்கம் சொல்லிவிட்டுத் திரும்பிப் போய்விட்டாராம்

    துலாசங்கமம் தலைக்காவேரியில் ஐப்பசி மாதம் நடைபெறுகிறது. அது சுமார் ஒரு மாத காலம் நடைபெறுகிறது. அகத்தியர் கொடுத்த வரத்தின்படி அந்த மாதத்தில் காவேரியில் எங்கே நீராடினாலும் புண்ணியபலன் உண்டு. மயிலாடுதுறையில் கடைசி நாளன்று முடவனும் வந்து நீராடி முக்தி பெற்றதாக வரலாறு உண்டு.

    துலாஸ்நானத்தை இங்கே செய்தால் கங்கையில் நீராடிய பலன் உண்டு என்று கூறுகிறார்கள். காவேரி இப்படித் திருவிழா கொண்டாடும் நாட்களில் இங்கே பசுமை பூத்துக் குலுங்குகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கால் நடையாகவே நடந்து தலைக்காவேரியை அடைகிறார்கள். அவர்களில் பலர் அருகே உள்ள, சப்தமுனிவர்கள் தவமிருந்த பிரும்மகிரியையும் அணுகிச் சுமார் முன்னூறு அடி உயரம் ஏறி விட்டுத் திரும்புகிறார்கள்.

    குடகுநாட்டு மக்களுக்குக் காவேரி குலதெய்வமாக விளங்குகிறாள். அவர்களுடைய பூஜைகளில் காவேரி குலமாதாவாக இடம் பெறுகிறாள். அவர்கள் ஐப்பசி மாதத்தில் 'ஹுத்ரி' என்ற அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். 'பரக்காலி' என்ற பெயரில் கழிகளை வைத்துக் கொண்டு சிலம்பம் ஆடுகிறார்கள்.

    தலைக்காவேரியிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் பாகமண்டலம் என்ற தலம் இருக்கிறது. இங்கேதான் காவேரி புண்ணிய நதியாகத் தனது யாத்திரையை தொடங்குகிறாள். இங்கே ஓர் அழகான கோயிலையும் கட்டி இருக்கிறார்கள்.

    இந்தக் கோயில் கேரளத்துப் பாணியில் அமைந்திருக்கிறது. அகத்தியர் இங்கே முருகனை நினைத்துத் தவம் இருந்ததாகவும், தரிசனம் கிடைத்து அருள் பெற்றதாவும் கூறுகிறார்கள். அதனால் இதை ஸ்கந்தவனம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

    பாகமண்டேசுவரர் இங்கே காவேரி நதிக்கரையில் தவம் செய்து லிங்கம் ஒன்றை அமைத்ததாகக் கூறுகிறார்கள். அதனால் இதைப் பாகமண்டேசுவரர் ஆலயம் என்றே குறிப்பிடுகிறார்கள். ஐப்பசி மாதம் காவேரித் திருவிழா நடைபெறும்போது, இங்கேயும் பக்தர்கள் வந்து ஏராளமாகக் கூடுகிறார்கள்.

    இங்கே ஈசுவரன், கணபதி, சுப்பிரமணியம், நாராயணன் ஆகிய தெய்வங்களுக்கு ஆலயங்கள் உள்ளே வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு அடுக்காக மடங்கிய கூரையும், சதுரவடிவமான கோயிலுமாக அமைய, கர்ப்பக் கிருகம் மட்டும் உள்ளே இருக்கிறது. துவஜஸ்தம்பம் கிடையாது. தொங்கும் மணிவிளக்குகள் அழகு செய்கின்றன. பூஜை செய்யும் போது, டமாரம் போன்ற 'செண்டா' என்ற வாத்தியத்தை முழங்குகிறார்கள். ஈசன் கோயிலில் சந்தனப் பிரசாதமும், விஷ்ணு கோயிலில் துளசிப் பிரசாதமும் கிடைக்கிறது.

    கூரைகளில் விதம்விதமான உருவங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றிலுமே நரசிம்மர் உருவம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் விளை பயிர்களைக் காப்பாற்றுவதற்காக விவசாயிகள் வேண்டிக் கொள்கிறார்கள். அதற்காக ஒரு சடங்கும் நடைபெறுகிறது. பாகமண்டேசுவரர் ஆலயத்தில் அட்சய பாத்திரம் என்ற களஞ்சியம் ஒன்றிலிருந்து பிடி நெல்லை எடுத்துக்கொண்டுபோய், தாங்கள் விளைவிக்கும் நெல்லுடன் சேர்த்துக் கொள்வார்கள். இதனால் அதிக விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.

    இங்கேயும் திப்புசுல்தான் படை எடுத்துவந்தார். ஆனால் ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை!

    Enjoying the preview?
    Page 1 of 1