Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhagavan Baba
Bhagavan Baba
Bhagavan Baba
Ebook386 pages2 hours

Bhagavan Baba

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் புட்டபர்த்தி என்ற சிற்றூரில் பிறந்த சிறுவனைப் பலருக்குத் தெரியாது. ஆனால், சத்திய சாயிபாபா என்ற திருநாமத்தில் பலருக்கும் பகவானாகவே தோன்றும் மகானை இன்று உலகெங்கும் உள்ள மக்களுக்குத் தெரியும். பகவான் பாபாவைப் பற்றிப் பல பெரியோர்கள், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், பலமொழிகளிலும் புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.
இது பகவான் பாபாவின் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட இன்னொரு மலர்.
பாபா அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தியில் வசிக்கிறார். அங்கே உள்ள பிரசாந்தி நிலையம் அவரது இல்லம். அதை ஒட்டித் தொண்டர்கள் இருக்கும் இடங்களும், பிரார்த்தனை மண்டபமும் இருக்கின்றன. ஆண்டின் பெரும் பகுதியில் பாபாவை இங்கே தரிசிக்கலாம். வேனிற் காலத்தில் பாபா பெங்களூரை ஒட்டிய ஒயிட் பீல்டுக்கு வருகிறார். அங்கேயும் பிரார்த்தனை, வேனில் முகாம் எல்லாம் உண்டு.
நாடெங்கும் ஆயிரக்கணக்கான சத்ய சாயி சமிதிகள் உள்ளன. இவை எளிய மக்களுக்குச் சேவை செய்கின்றன. அவர் நிறுவியுள்ள கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும் இளைய தலைமுறையினருக்கு ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் கல்வி போதனையை அளிக்கின்றன. இத்தகைய ஒரு பண்பாட்டுக் கல்லூரியே பிரசாந்தி நிலையத்தில் அமைந்திருக்கிறது.
சமூக சேவைக் கூடங்கள், மருத்துவ முகாம்கள். ஏழை எளியவர்க்கு உணவளித்தல், வேனிற்காலத்தில் இளைஞர்களுக்கு ஒழுக்கப்பயிற்சி, கலை உணர்வை வளர்க்கும் இலவச நாடக நிகழ்ச்சிகள், இப்படி பகவான் பாபா நல்ல வாழ்க் கையை ஒட்டிய நலம் தரும் ஆத்ம போதனையை நமக்கு அளிக்கிறார். அவற்றால் பலன் பெற்றவர்கள் கோடிக் கணக்கானவர்கள்.
அவரிடம் உடல் நலமில்லாமல், உள்ளச்சோர்வுடன், உதவியை நாடிவரும் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள், பாபா அவர்களைத் தேர்ந்தெடுத்து ஆறுதல் கூறுகிறார். பிரசாதமும் அளித்து வழிகாட்டுகிறார். மனம் திருந்தி வாழக் கற்றுக் கொடுக்கிறார். “உன்னைக் கண்ட பிறகு நான் உனது உள்மனத்தை ஆராய்வதில்லை. உன்னைப்பார்த்த பிறகு நான் உன்னுடைய கடந்தகால, வருங்காலப்பண்புகளை எடுத்துரைப்பதும் இல்லை.... எப்பொழுதும் நான் உன்னுடன் இருக்கிறேன்...
இதுவே பகவான் பாபா கூறியிருக்கும் தத்துவம்.
பக்தர்களின் மனப்பாங்கிற்கு ஏற்றபடி, ராம்னாகவும் கிருஷ்ணனாகவும், சக்தி ரூபமாகவும் காட்சி தருகிறார் வெவ்வேறு மதத்தினர் அவரவர் விரும்பித்தொழும் வகையில் தரிசனம் அளிக்கிறார் அவருடைய பிரசாந்தி நிலைய வாயிற் தூண்களில், பிரார்த்தனை மண்டபத்தில் எல்லா மதத்தினருக்கும் இடம் உண்டு. அவருடைய கீர்த்தனைகளில் எல்லோருக்கும் பொதுவான நாமாவளிகள் உண்டு. ஒரே குடும்பம் என்பது அவர் அருள்வாக்கு.
இன்று ஆத்ம சிந்தனையும், நல்லொழுக்கங்களை ஒட்டிய வாழ்வும், எளியவர்களுக்குத் தொண்டுசெய்யும் மனப்பான்மையும், பலரிடையே இல்லை. இதை மாற்றி அமைக்கவே. நான் உங்களிடையே வந்திருக்கின்றேன். இன்னும் நாற்பது ஆண்டுகளில் நாடு முழுவதும் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்க இன்றைய இளைய தலைமுறையினரைத் தயார்செய்து உருவாக்குவதே என்னுடைய குறிக்கோள்'' என்கிறார் பாபா.
பகவான் பாபா நிகழ்த்திய அற்புத லீலைகளின் மூலமாக அவருடைய இந்த உயரிய நோக்கத்தை எளிய நடையில் எடுத்துச் சொல்லி, மக்கள் பெரும்பாலான அளவில் அவருடைய நல்வழியில் நடக்கச் செய்வதே இந்த நூலின் நோக்கம்.
பகவான் பாபாவின் பாத கமலங்களில் என்னுடைய எளிய சமர்ப்பணமாக இதை வைக்கிறேன்.
அந்த அருட்பிரவாகத்தை நான் கங்கை நீரைச் செம்பில் கொண்டு வருவதைப்போல, இந்தச் சிறு புத்தகத்தில் காட்ட முயன்றிருக்கிறேன்.
இதை உருவாக்க உதவிய, பகவான் பாபாவின் அருள் கனியும் உள்ளங்கள் யாவுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580127505006
Bhagavan Baba

Read more from Lakshmi Subramaniam

Related to Bhagavan Baba

Related ebooks

Reviews for Bhagavan Baba

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhagavan Baba - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    பகவான் பாபா

    Bhagavan Baba

    Author:

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    S.Lakshmi Subramaniam

    For more books

    http://pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    என்னுரை

    ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் புட்டபர்த்தி என்ற சிற்றூரில் பிறந்த சிறுவனைப் பலருக்குத் தெரியாது. ஆனால், சத்திய சாயிபாபா என்ற திருநாமத்தில் பலருக்கும் பகவானாகவே தோன்றும் மகானை இன்று உலகெங்கும் உள்ள மக்களுக்குத் தெரியும். பகவான் பாபாவைப் பற்றிப் பல பெரியோர்கள், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், பலமொழிகளிலும் புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.

    இது பகவான் பாபாவின் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட இன்னொரு மலர்.

    பாபா அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தியில் வசிக்கிறார். அங்கே உள்ள பிரசாந்தி நிலையம் அவரது இல்லம். அதை ஒட்டித் தொண்டர்கள் இருக்கும் இடங்களும், பிரார்த்தனை மண்டபமும் இருக்கின்றன. ஆண்டின் பெரும் பகுதியில் பாபாவை இங்கே தரிசிக்கலாம். வேனிற் காலத்தில் பாபா பெங்களூரை ஒட்டிய ஒயிட் பீல்டுக்கு வருகிறார். அங்கேயும் பிரார்த்தனை, வேனில் முகாம் எல்லாம் உண்டு.

    நாடெங்கும் ஆயிரக்கணக்கான சத்ய சாயி சமிதிகள் உள்ளன. இவை எளிய மக்களுக்குச் சேவை செய்கின்றன. அவர் நிறுவியுள்ள கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும் இளைய தலைமுறையினருக்கு ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் கல்வி போதனையை அளிக்கின்றன. இத்தகைய ஒரு பண்பாட்டுக் கல்லூரியே பிரசாந்தி நிலையத்தில் அமைந்திருக்கிறது.

    சமூக சேவைக் கூடங்கள், மருத்துவ முகாம்கள். ஏழை எளியவர்க்கு உணவளித்தல், வேனிற்காலத்தில் இளைஞர்களுக்கு ஒழுக்கப்பயிற்சி, கலை உணர்வை வளர்க்கும் இலவச நாடக நிகழ்ச்சிகள், இப்படி பகவான் பாபா நல்ல வாழ்க் கையை ஒட்டிய நலம் தரும் ஆத்ம போதனையை நமக்கு அளிக்கிறார். அவற்றால் பலன் பெற்றவர்கள் கோடிக் கணக்கானவர்கள்.

    அவரிடம் உடல் நலமில்லாமல், உள்ளச்சோர்வுடன், உதவியை நாடிவரும் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள், பாபா அவர்களைத் தேர்ந்தெடுத்து ஆறுதல் கூறுகிறார். பிரசாதமும் அளித்து வழிகாட்டுகிறார். மனம் திருந்தி வாழக் கற்றுக் கொடுக்கிறார். "உன்னைக் கண்ட பிறகு நான் உனது உள்மனத்தை ஆராய்வதில்லை. உன்னைப்பார்த்த பிறகு நான் உன்னுடைய கடந்தகால, வருங்காலப்பண்புகளை எடுத்துரைப்பதும் இல்லை.... எப்பொழுதும் நான் உன்னுடன் இருக்கிறேன்...

    இதுவே பகவான் பாபா கூறியிருக்கும் தத்துவம்.

    பக்தர்களின் மனப்பாங்கிற்கு ஏற்றபடி, ராம்னாகவும் கிருஷ்ணனாகவும், சக்தி ரூபமாகவும் காட்சி தருகிறார் வெவ்வேறு மதத்தினர் அவரவர் விரும்பித்தொழும் வகையில் தரிசனம் அளிக்கிறார் அவருடைய பிரசாந்தி நிலைய வாயிற் தூண்களில், பிரார்த்தனை மண்டபத்தில் எல்லா மதத்தினருக்கும் இடம் உண்டு. அவருடைய கீர்த்தனைகளில் எல்லோருக்கும் பொதுவான நாமாவளிகள் உண்டு. ஒரே குடும்பம் என்பது அவர் அருள்வாக்கு.

    இன்று ஆத்ம சிந்தனையும், நல்லொழுக்கங்களை ஒட்டிய வாழ்வும், எளியவர்களுக்குத் தொண்டுசெய்யும் மனப்பான்மையும், பலரிடையே இல்லை. இதை மாற்றி அமைக்கவே. நான் உங்களிடையே வந்திருக்கின்றேன். இன்னும் நாற்பது ஆண்டுகளில் நாடு முழுவதும் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்க இன்றைய இளைய தலைமுறையினரைத் தயார்செய்து உருவாக்குவதே என்னுடைய குறிக்கோள்" என்கிறார் பாபா.

    பகவான் பாபா நிகழ்த்திய அற்புத லீலைகளின் மூலமாக அவருடைய இந்த உயரிய நோக்கத்தை எளிய நடையில் எடுத்துச் சொல்லி, மக்கள் பெரும்பாலான அளவில் அவருடைய நல்வழியில் நடக்கச் செய்வதே இந்த நூலின் நோக்கம்.

    பகவான் பாபாவின் பாத கமலங்களில் என்னுடைய எளிய சமர்ப்பணமாக இதை வைக்கிறேன்.

    அந்த அருட்பிரவாகத்தை நான் கங்கை நீரைச் செம்பில் கொண்டு வருவதைப்போல, இந்தச் சிறு புத்தகத்தில் காட்ட முயன்றிருக்கிறேன்.

    இதை உருவாக்க உதவிய, பகவான் பாபாவின் அருள் கனியும் உள்ளங்கள் யாவுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    1

    இயற்கை சொல்லிக் கொடுக்கும்

    வாழ்க்கை சொல்லிக் கொடுக்கும்

    -பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா

    பாரத நாட்டில் பக்திக்கும் புண்ணிய தலங்களுக்கும் பஞ்சமில்லை அன்றாட இயந்திர வாழ்க்கையில் நாம் நம்மை வீண் கவலைகளிலும் துயரங்களிலும் இழந்து விடும்போது, நமக்கு வழியாக விளங்குவது பக்தி மார்க்கம். அதில் நம்மை அழைத்து செல்லும் பெரியோர்கள் பலர் அன்ரும் இன்ரும் பாரத நாட்டில் ஒளிவிளக்குகளாகத திகழ்ந்திருக்கிறர்கள்.

    இன்று அவ்விதம் நம்மிடையே விளங்குபவரும், பாரத நாட்டிலும் உலகெங்கும் கோடிக்கணக்கான பக்தர்களால் போற்றிப் பின்பற்றப் படுபவருமான ஒருவர் பகவான் ஸ்ரீ சக்ய சாயிபாபா. 'இறைவனின் கருணை வழிக்கு உங்களை அழைத்துச் செல்லவே நான் வந்தேன்' என்று அருள் மொழி புகலும் பாபாவை இறைவனின் அவதாரமாகவே அவர்கள் கருதுகிறார்கள்.

    ஆந்திரப்பிரதேசத்தில் ஒரு சிறு கிராமத்தில் 1926-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓர் ஏழைக் குடும்பத்தில் அவதரித்த பாபா, சிறு குழந்தையாக இருக்கும்போதே தன்னுடைய அபூர்வ சக்திகளை வெளிப்படுத்தி அற்புதங்களை நிகழ்த்தியவர். பதினான்கு வயதில் அவர் தனது குடும்பத்திலிருந்து பிரிந்து, படிப்பையும் துறந்து இந்த மாபெரும் பக்திப் பணியை ஓர் இயக்கமாகத் தொடங்கினார்.

    இன்று அவருடைய சக்தியை உணர்ந்த பக்தர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அவர் நிகழ்த்திய அற்புதங்கள், மானுட விளக்கங்களையும் பகுத்து அறியும் திறனையும் கடந்து பிரமிக்க வைக்கின்றன. அறியாத மக்களை நல்வழிப்படுத்தி பக்தி மார்க்கத்தில் அழைத்துச் செல்லவே நான் அற்புதங்களை நிகழ்த்துகிறேன் என்பது பகவான் பாபாவின் அருள் மொழி."

    புகழ்பெற்ற விஞ்ஞானிகள், நிபுணர்கள், டாக்டர்கள், சரித்திர ஆசிரியர்கள், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்துறை அறிவாளிகள் ஆகிய அனைவரும் கண்டும் துய்த்தும் உணர்ந்த அற்புதங்களை எடுத்துக் கூறுவதே இந்நூலின் எளிய நோக்கமாகும். இதன் மூலம் இன்றைய வாழ்க்கையின் சக்தியில் சிக்கி உழலும் மக்கள் பலரில் ஒரு சிலருக்காவது ஆறுதலும், பகவான் பாபாவின் வழியைப் பின்பற்றி சோதனைகளிலிருந்து மீளும் பலமும் கிடைக்குமானால் அதுவே இந்த நூலின் மகத்தான வெற்றியாக அமையும்.

    பாரத நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவர் டாக்டர் பகவந்தம். நான் ஒரு விஞ்ஞானி. எதையும் பகுத்து அறிந்து ஆராய்ந்து மட்டுமே புரிந்து கொள்பவன். ஆயினும் பகவான் பாபாவின் சக்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் அனுபவித்ததை எல்லாரும் அனுபவித்து உணரக்கூடும் என்று நான் சொல்லவில்லை. எல்லாருக்கும் அவர் காட்டும் அருள் ஒரே விதமாகக் கருணை அலைகளை எழுப்பும் என்றும் நான் கூற முடியாது. சிலருக்கு அதை உணர இரண்டு ஆண்டுகள் ஆகலாம். சிலர் அதை இரண்டே நிமிடங்களில் உணரும்படி நேரலாம் என்று கூறுகிறார் டாக்டர் பகவந்தம்.

    அது 1972ம் ஆண்டு ஏப்ரல் மாதம். பாபா டில்லியில் இருந்தார். அவர் இருந்த இடத்தைச் சுற்றிப் பெருங்கூட்டம் கூடி இருந்தது. சுமார் இரண்டு மைல்கள் வட்டத்துக்குத் தினமும், அவரை அணுகுவதே சிரமமாக இருக்கும் அளவுக்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் இருந்தது.

    நாம் காலாற நடந்து போய்விட்டு வரலாமா? என்று ஆசிரமத்திலிருந்து யமுனை ஆற்றின் கரையை நோக்கி நடக்கத் தொடங்கினார் பாபா. கூடவே பகவந்தமும் போனார். எல்லாரும் ஆற்று மணலில் அமர்ந்தார்கள். பகவந்தம் அவர்களைப் பார்த்து பாபா, விஞ்ஞானிகள், கடவுள் எங்கே என்று கேட்கிறார்கள். அவர் இருப்பதை நிரூபித்துக் காட்டுங்கள் என்று சொல்கிறார்கள். இல்லாவிட்டால் நம்ப மாட்டோம் என்று சொல்கிறார்கள். நீங்களும் அந்த வகையைச் சேர்ந்தவர் தானா? நீங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவரா? நமது வேத, புராண, சாஸ்திர புத்தகங்களை எப்போதாவது படிப்பதுண்டா? என்று கேட்டார்.

    நான் ஒரு விஞ்ஞானிதான். ஆனால் கடவுள் நம்பிக்கை கொண்டவன். விஞ்ஞான நூல்களைப் பயின்றவன் ஆனாலும் நமது பழம்பெரும் நூல்களையும் ஊன்றிப் படித்தவன். எனது குடும்பத்தில் முன்னோர்கள் பலர் வடமொழியில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்கள் என்றார் பகவந்தம்.

    விஞ்ஞான பூர்வமான அறிவு கொண்டவர்களும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறீர்கள் அல்லவா? என்று புன்னகையுடன் கேட்டார் பாபா.

    ஆம் சுவாமி! அணுகுண்டைக் கண்டுபிடித்த, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஒப்பன் ஹீமர். 'அணுகுண்டு வெடித்தபோது எழுந்த பேரொளி எப்படி இருந்தது?' என்று அவரிடம் கேட்டார்கள். அவர் சொன்னார்: அதைச் சரியாக வருணிப்பதற்கு ஒரே வழிதான் உண்டு. குருக்ஷேத்திரத்தில் பகவான் கிருஷ்ணனின் பேருருவத்தைக் கண்ணாரக் கண்டான் அர்ஜுணன். அந்த ஜோதிமயமான உருவத்தை 'அனந்தகோடி சூரியப் பிரகாசம்' என்று வருணித்தான். அதைப்போல ஓர் உணர்வே என் மனத்திலும் எழுந்தது! என்றார் ஒப்பன் ஹீமர். சுவாமி! ஓர் அமெரிக்க விஞ்ஞானி பகவத் கீதையைப் படித்து அதிலிருந்து ஒன்றைத் தனது மிகப் பெரிய விஞ்ஞான சாதனையைக் குறிப்பிடும்போது பயன் படுத்தி இருக்கிறார் அல்லவா?" என்று கேட்டார் பகவந்தம்.

    அந்த இடத்துக்கு பகவந்தம் தானாகவே தான் பாபாவுடன் வந்தார். பகவத் கீதையைப் பின்பற்றிக் குறிப்பிட்ட வரும் பகவந்தம் தான். அதைப்பற்றியும் ஒரு விஞ்ஞானியைப் பற்றியும் கூறியதும் அவர்தான்.

    "அப்படியானால் நீங்களும் பகவத்கீதை படிப்ப துண்டா? ஒரு

    விஞ்ஞானியானாலும் அதைப் படிக்கிறீர்கள். அதில்

    கூறப்பட்டிருப்பவைகளை மதித்துப் போற்றுகிறீர்கள் என்று

    எடுத்துக்கொள்ளலாமா?" என்று கேட்டார் பாபா.

    நிச்சயமாக! என்றார் பகவந்தம்.

    பகவான் பாபா அங்கேயே ஆற்று மணலில் ஒரு பிடியை எடுத்து பகவந்தத்தின் கையில் கொடுத்தார். அது ஒரு சிறு புத்தகமாக மாறியது. டாக்டர் பகவந்தம் குறிப்பிட்ட பகவத் கீதைதான் அந்தப் புத்தகம். அவர் அதை, ஆவலுடன் பிரித்தார். பிரித்த முதற்பக்கமே அர்ஜுணன் கண்ணனை 'அனந்த கோடி சூர்யப் பிரகாச'னாக வருணித்த சுலோகமாக இருந்தது!

    2

    பாபா ஒரு. புன்னகையுடன் தன் அருகில் அமர்ந்திருந்த ஒரு முதியவரைப் பார்த்தார். அவர் பரம ஏழை. சரியான சட்டைகூட அணியவில்லை. அதன் மீது ஒரு 'பாட்ஜ்' குத்தி இருந்தார். அந்த ‘பாட்ஜி'ல் ஹரிநாத் பாபா உருவம் பதிக்கப்பட்டருந்தது.

    நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று சொல்லட்டுமா? ஹரிநாத் பாபாவுக்கு ஒரு கோயிலை. உங்கள் கிராபத்தில் கட்ட விரும்புகிறீர்கள். அதற்காக ஒவ்வொருவரிடமும் பணம் கேட்க வந்திருக்கிறீர்கள். இதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். கடவுள் நம் ஒவ்வொருவர் - இதயத்திலும் இருக்கிறார். அவருக்குத் தனியாகக் கோயில் எதற்கு? நான் உங்களுக்கு ஹரிநாத் பாபாவின் படம் ஒன்று தருகிறேன். அதை உங்கள் பூஜை அறையில் வைத்து பூஜியுங்கள் போதும்!

    இவ்வாறு சொல்லிவிட்டு, பகவான் மறுபடியும் மணலை எடுத்தார். மேலே தூவிப் பிடித்த போது, அவர் கையில் ஹரிநாத் பாபாவின் உருவமும், குஸும் குமாரியின் உருவமும் வெள்ளியில் பளபளவென்று மின்னிக் கொண்டு வந்து சேர்ந்தன. அதை அவர் அந்த முதியவர் கையில் கொடுக்கவில்லை. டாக்டர் பகவந்தத்தின் கையில் கொடுத்தார். 'நான் இதை எனது நண்பருக்காக வரவழைத்தேன். ‘ஆனால் நீங்களும் பார்க்கலாமே?’ என்றார் பாபா.’

    டாக்டர் பகவந்தத்துக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், அவர் மனத்தில் இன்னும் அந்த பகவத் கீதை சம்பவம் உறுத்திக் கொண்டே இருந்தது. பகவான் பாபா அவரிடம் ஒரு செப்பிடு வித்தை செய்து விட்டதாகவே அவர் எண்ணினார். முன்னறிவிப்பு இல்லாமலே பகவத் கீதையைப்பற்றி எழுந்த உரையாடலும், தொடர்ந்து அவராகவே அந்த சுலோகத்தைக் குறிப்பிட்டதும்கூட, அவருடைய மனச் சஞ்சலத்தைப் போக்க இயலவில்லை. பகவான் பாபா அவருடைய மனத்தில் ஓடிய எண்ணங்களைப் புரிந்து கொண்டு விட்டார். அதற்காகவே ஹரிநாத் பாபாவின் பக்தனான அந்தக் கிழவனிடம் இந்த லீலைமைச் செய்து காண்பித்தார். மேலும், ‘எல்லோருக்கும் நான் ஒருவனே! என் முன் எல்லோரும் சமமே. நீ பெரிய விஞ்ஞானியாக இருக்கலாம். அவன் ஏழைக் கிழவனாக இருக்கலாம். ஆனால் இருவருமே என் பார்வைக்கு சமம் தான். என் ஆசிகள் இருவருக்கும் உண்டு!' என்று சொல்லாமற் சொல்லி உணர்த்திவிட்டார் பாபா!

    டாக்டர் பகவந்தம் மெய்சிலிர்த்துப் போனார். அந்த வெள்ளி உருவங்களை வாங்கிப் பார்த்து விட்டு, அந்த முதியவரின் கையில் கொடுத்துவிட்டார். அவர் மிகுந்த பயபக்தியுடன் அதை வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்.

    ஆயினும், டாக்டர் பகவந்தம் விஞ்ஞான ரீதியாக எதையும் ஆராய்ந்து பழகியவர். பகுத்தறிவுக்கு எட்டியவற்றைப் புரிந்து கொள்ளப் பழகியவர். இந்த எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்க முடியும் என்றும், அதை உணரத்தான் முடியும் - புரிந்து கொள்ள முடியாது என்றும் அவரால் நம்ப முடியவில்லை. ஆனால் பாபாவிடம் அவருக்கு அளவு கடந்த மரியாதை உண்டாயிற்று. சமயம் நேரும் போதெல்லாம் பகவான் பாபாவிடம் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தார்.

    இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. பகவான் பாபா தமது நண்பர்களுடன் கன்யாகுமரிக்குப் போயிருந்தார். அவர்களிடையே டாக்டர் பகவந்தமும் இருந்தார். எல்லோருமாகக் கடற்கரைக்குப் போனார்கள். கடலலைகள் கால்களைத் தழுவ, நீல வானத்தைப் பார்த்தபடி நின்று கொண்டார் பாபா. 'இந்த அழகான கடலுக்கு ஓர் அழகான பெயரைச் சொல்லுங்களேன்!' என்றார், கூட்டத்தில் ஒருவர் இரத்னாகரம் என்ற பெயரைச் சொன்னார்.

    ‘இரத்னாகரம்' என்ற பெயர் எப்படி வருகிறது என்று தெரியுமோ? இரத்தினங்களையும், மணிகளையும் தாங்கியிருப்பது கடல். அத்தனை அரிய பொக்கிஷங்களை வைத்துக் கொண்டிருப்பதால் தான் கடலுக்கு அந்தப் பெயர் என்று சொல்லி அலைகளுடன் விளையாடினார்.

    அப்படியானால், இந்த கடல் உங்களுக்கு இரத்தினத்தை அளிக்கலாமே? இரத்தினமாலை ஒன்றை எடுத்துக் கொடுங்களேன்! என்றார் டாக்டர் பகவந்தம். பகவான் பாபா புன்னகையுடன் அப்படியா? என்று கேட்டுவிட்டுக் கடல் அலைகளில் கையை வைத்து விளையாடினார். கை உயர்ந்தது. அங்கே கண்களைப் பறிக்கும் ஒளிமயமான இரத்தினமாலை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது!

    என்ன செய்வது இதை? என்று கேட்டார் பாபா.

    இது சிறு மாலையாக இருக்கிறதே? நீங்கள் அணிய முடியாதே? என்று அவரை மேலும் சோதிக்க எண்ணி, குறும்பாகவே பதில் சொன்னார் பகவந்தம். சிரித்தபடியே பாபா அப்படியா? எதற்கும் முயன்று பார்க்கலாம்! என்று கூறிக்கொண்டே மாலையை எடுத்து தலைவழியே நுழைத்துக் கொண்டார். அவருடைய சிரத்தில் பட்டதும் மாலை பெரிதாக வளர்ந்தது. நீண்டு வளர்ந்து அவருக்கு ஏற்றதாக அமைந்து விட்டது. பகவந்தத்தை திரும்பி பார்த்து அணிந்து கொண்டு விட்டேன் போதுமா? என்று கேட்டார்.

    டாக்டர் பகவந்தம் பிரமித்துப் போனார். தன் மனத்தில் ஏற்பட்ட போராட்டத்தையும் பகவான் பாபா புரிந்து கொண்டுவிட்டார் என்பதை அவர் உணர்ந்த போது, வெட்கி உடல் குறுகிப் போனார். அவரால் பேசவே முடியவில்லை!

    சென்னைக்கு பாபா வந்தபோது, டாக்டர் பகவந்தம் கூடவே வந்தார். பத்தாயிரம் பக்தர்கள் பகவானைத் தரிசிக்க வந்திருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் டாக்டர் பகவந்தம் தன் மனம் தெளிவடைந்ததாக ஒப்புக் கொண்டார். பகவான் சத்யசாயி பாபா, விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர். தெய்வீகத்தை உணருவது என்பது அபூர்வமான மனித உணர்வு. ஐம்புலன்களால் மட்டுமே அதை உணர முடியாது. ஐம்புலன்களால் மட்டும் ஆராய்ந்து, கணக்கிட்டு அறிவது விஞ்ஞானம். அதைக் கடந்து ஆத்மபூர்வமான உணர்ச்சியில் ஒரு நிறை வைப் பெறுவது மெய்ஞ்ஞானம். இதை இன்று அறிந்தேன் என்று ஒப்புக் கொண்டார் பகவந்தம்.

    எல்லோரும் ஒன்று. எல்லா மதங்களும் ஒன்று. எல்லோரும் கடவுளின் குழந்தைகள். எல்லோருடைய உள்ளத்திலும் பகவான், குழந்தையின் மனத்தில் தாய் நிறைந்திருப்பதைப்போல வாசம் செய்கிறார். இது தான் பகவான் பாபா கூறும் உபதேசம். பகவானை உள்ளத்தில் தாங்கிய மனிதர்கள் அதற்கேற்ப நல்லவர்களாக, மனத் தூய்மையுடன் வாழவேண்டும் என்பது தான் அவர் கூறும் சித்தாந்தம்.

    ஒவ்வொரு நாளும் குறைந்தது இருநூறுபேராவது வந்து அவரை வணங்கித் தங்கள் குறைகளைக் கூற முறையிடுகிறார்கள். செல்வந்தர், ஏழை என்ற வித்தியாசமின்றி சமநோக்குடன் அவர்கள் அனைவரையும் கவனிக்கிறார் பகவான் பாபா. துளியும் சலிப்பின்றி அவ்வளவு பேருக்கும் அன்புடன் ஆசி கூறுகிறார். முதலில் வருபவர் எவ்வளவு மன நிறைவுடன் திரும்புகிறாரோ அதே அளவு மன நிறைவு இருநூறாவது பக்தருக்கும் கிடைக்கிறது. அவர்களுடைய வேதனைகள் அனைத்தையும் ஏற்றுச் சுமந்து கொள்ளும் பகவானோ, துளியும் முகம் சுளிக்காமல் ஆனந்த ரூபமாகக் காட்சி அளிக்கிறார்.

    3

    சென்னையில் சத்யசாயி சேவா சமிதியில் மூவாயிரம் தலைவர்கள் கூடி இருந்தார்கள். பகவான் பாபா அவர்களைக் கூட்டி, பிரசங்கம் செய்து கொண்டிருத்தார். அப்போது அங்கே அமெரிக்கத் தம்பதியர், வால்டர் கோவன் - எல்ஸி கோவன் இருவரும் வந்தார்கள்.

    வால்டருக்கு உடம்பு சரியாக இல்லை, அதனால் அவரால் நிற்க முடியவில்லை. பகவானின் உத்திரவுப்படி இரு நாற்காலிகளைப்போட்டு அவர்களை உட்கார வைத்தார்கள். அவர்களுக்கு விபூதிப் பிரசாதம் வழங்கினார் பாபா.

    அவர்களிருவரும் சென்னையில் தான் இருந்தார்கள். டிசம்பர் மாதம் 25-ம் தேதி விடியற்காலை நேரம். வால்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மூர்ச்சையானார். அருகில் இருந்த எல்ஸிக்கு ஒன்றும் புரியவில்லை. எதுவும் செய்யத் தோன்றவில்லை. அருகில் உட்கார்ந்து பகவான் பாபாவை எண்ணிப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்.

    சட்டென்று எல்ஸிக்குப் பக்கத்து அறையில் ரத்தன் லால் தம்பதியர் தங்கியிருப்பது நினைவுக்கு வந்தது. ஓடிப் போய் மிஸஸ் ரத்தன்லாலை அழைத்து வந்தார். இருவருமாகச் சேர்ந்து வால்டரை மெதுவாகத் தூக்கும்போதே வால்டரின் தலை தொங்கிவிட்டது. உடல் துவண்டு விட்டது. 'என் கணவர் இறந்து விட்டார்!' என்று எண்ணிக் கண்ணீர் விட்டபடி பகவான் பாபாவைப் பிரார்த்திக்கத் தொடங்கினார் எல்ஸி.

    ஆம்புலன்ஸுக்குப் ‘போன்' செய்து வரவழைத்தார்கள். வால்டர் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எல்ஸி அவருடன் செல்லவில்லை. காலை ஏழு மணி இருக்கும்! மிஸஸ் ரத்தன்லாலை அழைத்துக் கொண்டு பகவான் பாபாவிடம் ஓடினார். அவரைப் பார்த்து தன் கணவரின் நிலையைப்பற்றிக் கூறினார். உங்கள் கணவரை நான் பத்துமணிக்கு ஆஸ்பத்திரியில் வந்து பார்க்கிறேன் என்று சொன்னார் பாபா.

    எல்ஸியும் மிஸஸ் ரத்தன்லாலும் மருத்துவமனைக்குப் பத்து மணிக்குப் போய் சேர்ந்தார்கள். பாபா அப்போது தான் வந்து சென்றதாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள். எல்ஸி மருத்துவ மனையில் வால்டர் படுக்க வைக்கப்பட்டிருந்த அறைக்கு ஓடினாள். வால்டர் அங்கே உயிருடன் படுத்திருந்தார். அவருக்கு உயிர் திரும்பியது எப்படி? ஒரு வேளை எல்ஸியும் மிஸஸ் ரத்தன்லாலும் பதட்ட நிலையில் வால்டர் உயிரிழந்து விட்டதாக எண்ணி இருக்கலாமோ?

    இதைப்பற்றி டாக்டரிடம் ஒரு நண்பர் மூலம் கேட்டார்கள். ஆம்புலன்ஸிலிருந்து உள்ளே கொண்டுவந்து படுக்க வைத்தபோது அவர் உடலில் உயிர் அடையாளமே இல்லை. அவரைச் சோதித்துப் பார்த்து உயிர் நீங்கி விட்டதாகவே தீர்மானித்து விட்டேன். காதிலும் மூக்கிலும் பஞ்சை வைத்து அடைத்து ஒரு தனி அறையில் உடலை வைத்து விட்டோம். ரப்பர் ஷீட்டினால் உடலை மூடி விட்டு, நான் என் வேலையைக் கவனிக்கப் போய்விட்டேன். என்றார்.

    பகவான் பாபா வந்தபோது டாக்டர் அங்கே இல்லை. அவர் தனது பணிகள் முடித்து திரும்பிய போது பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா இங்கே சில நிமிடங்கள் வந்திருந்தார். வால்டர் படுக்க வைக்கப்பட்டிருந்த அறையில் சில நிமிடங்கள் கட்டிலின் அருகே அமர்ந்து கொண்டிருந்து விட்டுப் போனார் என்று சொன்னார்கள். டாக்டர், வால்டரின் உடலைச் சோதித்தும் பார்த்தார். உயிர் திரும்பி இருந்தது! என்ன நடந்தது? அவருக்குத் தெரியவில்லை; விளக்கவும் முடியவில்லை!

    மறுநாள் டிசம்பர் 26-ம் தேதி

    நகர சாயி சமிதியின் பெண் உறுப்பினர்களைச் சந்திக்க பாபா போயிருந்தார். ஹில்ஸப் என்ற மெக்ஸிகோ நாட்டு அன்பரும் வேறு சில நண்பர்களும் உடன் இருந்தார்கள். பாபா அந்த உறுப்பினர்களுக்காகச் சொற்பழிவாற்றிக் கொண்டிருந்தார். அது முடிந்து சிறப்பாகத் தொண்டாற்றிய பெண்மணிகள் சிலருக்கு பரிசுகளும் வழங்கினார் பாபா. தொடர்ந்து வேதாந்தப் பிரசங்கம் ஒன்றும் நிகழ்ந்தது. அவ்வளவு நேரமும் பாபா அவர்கள் மத்தியிலேயே இருந்தார்.

    இவை முடிந்த உடனே பாபா வேறொரு நண்பரின் இல்லத்துக்குக் கிளம்பினார். காரில் ஏறியதும் பாபா, ஹில்ஸப் என்ற அந்த நண்பரிடம், நான் உங்களிடையே இருந்து பேசிக் கொண்டிருந்தபோது எல்ஸி கோவன் என்னை அழைக்கும் ஒலி என் காதில் விழுந்தது. வால்டரின் உடல்நிலை மிக மோசமாகி இருந்தது. அவரை யாரும் பிழைக்க வைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. செய்தி காதில் விழுந்ததும் நான் அங்கே விரைந்து போனேன். வால்டரின் உயிரை மீட்டுத்தந்தேன்! என்றார். ஹில்ஸப்பும் பிற நண்பர்களும் ஆச்சரியத்தினால் வாய் திறவாமல் உட்கார்ந்திருந்தார்கள். அவ்வளவு நேரமும் பாபா அவர்களுடனேயே இருந்தாரே! பின் எப்படி மருத்துவமனைக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தார்?

    நண்பரின் இல்லத்துக்கு போனதும் பாபா ஹில்ஸப்பைப் பார்த்து இந்த விபூதி பிரசாதத்தை எடுத்துச் செல்லுங்கள். எல்ஸி கோவனிடம் கொடுத்து, வால்டரின் வாயில் சிறிது போட்டு, நெற்றியிலும் தேய்க்கச் சொல்லுங்கள் என்றார். உடனே ஆஸ்பத்திரிக்குப் போனார். அங்கே. எல்ஸி கோவன் கவலையுடன் அமர்ந்திருந்தார்.

    பாபா எங்களை அனுப்பினார் என்ற

    Enjoying the preview?
    Page 1 of 1