Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hindu Madham Bathilalikkirathu
Hindu Madham Bathilalikkirathu
Hindu Madham Bathilalikkirathu
Ebook692 pages4 hours

Hindu Madham Bathilalikkirathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்துமதம் தொன்மையானது மட்டும் அல்ல; அதுவே உலகெங்கும் பரவியிருந்த அனாதியான மதம். அதன் தத்துவங்களும், விதிகளும், நடைமுறைகளும், மந்திரங்களும், வழிபடும் முறைகளும் - அறிவுபூர்வமாக, தர்க்கரீதியாக, விஞ்ஞானரீதியாக - விளக்கப்படக் கூடியவை. இன்றைய இளைய தலைமுறையினரிடம் இதை எடுத்துத் தெளிவாகச் சொன்னால், ஆர்வத்துடன் நமது மதத்தின் கோட்பாடுகளைப் பின்பற்றி, நன்மைகளைப் பெறத் தயாராக இருக்கிறார்கள். அதே போலப் பெரியவர்களும் இந்த விளக்கங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புனிதப் பயணம் மேற்கொண்டபோதும், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தபோதும் இதை நான் தெளிவாகவே புரிந்து கொண்டேன். ஆசிரியர் மணியனின் ஊக்குவிப்புடன் 'ஞானபூமி'யில் இதை ஓர் ஆராய்ச்சிப் பணியாகவே எடுத்துக் கொண்டு, தொண்டு செய்யும் நற்பேறு எனக்குக் கிடைத்தது. அநேகமாக எல்லா இந்து மத ஆசிரமங்களிலும் இன்று இளைஞர்களும், இளம் பெண்மணிகளும் ஈடுபட்டு, நற்பணிகளைச் செய்யும் யுவகேந்திரமோ, இயக்கமோ இருக்கிறது. அவர்கள் இந்த உயரிய தத்துவங்களின் பின்னணியை மக்களுக்கு எடுத்துக் கூறி தொண்டாற்ற விரும்புகிறார்கள். அதற்கு இத்தகைய தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்துமதத்தின் தத்துவங்களை அவரவர் நிலைக்கேற்பக் கேட்டு விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இப்படி விளக்கங்களைத் தருவதற்கு, ஆரம்பப்பள்ளி முதல், உயர் நிலைப்பள்ளி, கல்லூரி, உயர்படிப்புக் கல்லூரி, ஆராய்ச்சிக்குரிய பல்கலைக்கழகம் வரை, வெவ்வேறு நிலைகளிலும் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் கல்வித் தொண்டு ஆற்றுவதைப் போல, நமக்கு வழிகாட்டப் பெரியோர்கள் இருக்கிறார்கள். தவ முனிவர்களும், ஞானிகளும் பெற்றுத் தந்த இந்த அரிய ஒளிவிளக்கை, உலகெங்கும் சுடர்விடும்படி செய்ய, இந்தப் பெரியோர்கள் பிரசார வாயிலாகவும், புத்தகங்கள் மூலமாகவும் தொண்டாற்றி வருகிறார்கள்.

அந்தப் புனிதமான பணியை, வாசகர்களிடமிருந்து வரும் கேள்விகளுக்குப் பதில்களைத் தேடித் தருவதன் மூலம், எல்லோரும் பெற்று நலம் அடையச் செய்ய முடியும் என்று நம்பினேன். அந்த முயற்சியின் பலனே இது. இந்து மதமே இங்கு பதிலளிக்கிறது. அதில் எல்லாப் பெரியோர்களும், ஞானிகளும், பீடாதிபதிகளும், தத்துவப் பேராசிரியர்களும் இடம் பெறுகிறார்கள். இது ஒரு ஞானச் சுரங்கம். இதைச் சிறுகச் சிறுகத் தோண்டி எடுத்து வைக்கும் எளிய பணி இது.

இந்த நற்பணி எதிர்காலத்தில் இந்துமதம் தழைத்தோங்கவும், இளைய தலைமுறையினர் அதற்குரிய முறையில் ஈடுபடவும் செய்வதற்குத் தூண்டுகோலாக அமைகிறது. ஞான விளக்கு ஏற்கெனவே இருக்கிறது. அதன் ஒளியைத் தூண்டி விடும் சிறு முயற்சியே இது.

இதில் எனக்கு 'ஞானபூமி' வாயிலாக ஆதரவு தந்து, ஊக்குவித்த பெருமைக்கு உரியவர் 'ஞானபூமி' ஆசிரியர் திரு. மணியன். அவருடைய உதவியினால் நூற்றுக்கணக்கான ஆசிரமங்களுக்குச் செல்லவும், - அருட்செல்வர்களைத் தரிசித்து ஆசி பெறவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பினால் பெற்ற அறிவு இந்தப் பணிக்குப் பெரும் துணையாக அமைந்தது. அந்த வகையில் ஆசிரியர் மணியன் எனது நன்றிக்கு உரியவர்.

இந்துமதத்தின் நலனிலும், வளர்ச்சியிலும், வேர் ஊன்ற வைக்கும் முயற்சியிலும் ஈடுபடும் நல்லோர்கள் அனைவரும் - குடும்பத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆலய நிர்வாகிகள், அறநிலையத் துறையினர் - அனைவரும் இந்த அமுத மொழிகளை, படித்துப் பயன்பெறச் செய்து, உரமிட வேண்டும். இதுவே எனது பணிவான வேண்டுகோள்.

"எத்தனை எத்தனையோ மகான்கள் இந்த ஞானபூமியில் அவர்கள் அத்தனை பேருக்கும் எனது பணிவான வணக்கங்கள்".

- எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580127505311
Hindu Madham Bathilalikkirathu

Read more from Lakshmi Subramaniam

Related to Hindu Madham Bathilalikkirathu

Related ebooks

Reviews for Hindu Madham Bathilalikkirathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hindu Madham Bathilalikkirathu - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    இந்து மதம் பதிலளிக்கிறது

    Hindu Madham Bathilalikkirathu

    Author:

    லட்சுமி சுப்பிரமணியம்

    Lakshmi Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    இந்துமதம் தொன்மையானது மட்டும் அல்ல; அதுவே உலகெங்கும் பரவியிருந்த அனாதியான மதம். அதன் தத்துவங்களும், விதிகளும், நடைமுறைகளும், மந்திரங்களும், வழிபடும் முறைகளும் - அறிவுபூர்வமாக, தர்க்கரீதியாக, விஞ்ஞானரீதியாக - விளக்கப்படக் கூடியவை. இன்றைய இளைய தலைமுறையினரிடம் இதை எடுத்துத் தெளிவாகச் சொன்னால், ஆர்வத்துடன் நமது மதத்தின் கோட்பாடுகளைப் பின்பற்றி, நன்மைகளைப் பெறத் தயாராக இருக்கிறார்கள். அதே போலப் பெரியவர்களும் இந்த விளக்கங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள்.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புனிதப் பயணம் மேற்கொண்டபோதும், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தபோதும் இதை நான் தெளிவாகவே புரிந்து கொண்டேன். ஆசிரியர் மணியனின் ஊக்குவிப்புடன் 'ஞானபூமி'யில் இதை ஓர் ஆராய்ச்சிப் பணியாகவே எடுத்துக் கொண்டு, தொண்டு செய்யும் நற்பேறு எனக்குக் கிடைத்தது. அநேகமாக எல்லா இந்து மத ஆசிரமங்களிலும் இன்று இளைஞர்களும், இளம் பெண்மணிகளும் ஈடுபட்டு, நற்பணிகளைச் செய்யும் யுவகேந்திரமோ, இயக்கமோ இருக்கிறது. அவர்கள் இந்த உயரிய தத்துவங்களின் பின்னணியை மக்களுக்கு எடுத்துக் கூறி தொண்டாற்ற விரும்புகிறார்கள். அதற்கு இத்தகைய தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இந்துமதத்தின் தத்துவங்களை அவரவர் நிலைக்கேற்பக் கேட்டு விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இப்படி விளக்கங்களைத் தருவதற்கு, ஆரம்பப்பள்ளி முதல், உயர் நிலைப்பள்ளி, கல்லூரி, உயர்படிப்புக் கல்லூரி, ஆராய்ச்சிக்குரிய பல்கலைக்கழகம் வரை, வெவ்வேறு நிலைகளிலும் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் கல்வித் தொண்டு ஆற்றுவதைப் போல, நமக்கு வழிகாட்டப் பெரியோர்கள் இருக்கிறார்கள். தவ முனிவர்களும், ஞானிகளும் பெற்றுத் தந்த இந்த அரிய ஒளிவிளக்கை, உலகெங்கும் சுடர்விடும்படி செய்ய, இந்தப் பெரியோர்கள் பிரசார வாயிலாகவும், புத்தகங்கள் மூலமாகவும் தொண்டாற்றி வருகிறார்கள்.

    அந்தப் புனிதமான பணியை, வாசகர்களிடமிருந்து வரும் கேள்விகளுக்குப் பதில்களைத் தேடித் தருவதன் மூலம், எல்லோரும் பெற்று நலம் அடையச் செய்ய முடியும் என்று நம்பினேன். அந்த முயற்சியின் பலனே இது. இந்து மதமே இங்கு பதிலளிக்கிறது. அதில் எல்லாப் பெரியோர்களும், ஞானிகளும், பீடாதிபதிகளும், தத்துவப் பேராசிரியர்களும் இடம் பெறுகிறார்கள். இது ஒரு ஞானச் சுரங்கம். இதைச் சிறுகச் சிறுகத் தோண்டி எடுத்து வைக்கும் எளிய பணி இது.

    இந்த நற்பணி எதிர்காலத்தில் இந்துமதம் தழைத்தோங்கவும், இளைய தலைமுறையினர் அதற்குரிய முறையில் ஈடுபடவும் செய்வதற்குத் தூண்டுகோலாக அமைகிறது. ஞான விளக்கு ஏற்கெனவே இருக்கிறது. அதன் ஒளியைத் தூண்டி விடும் சிறு முயற்சியே இது.

    இதில் எனக்கு 'ஞானபூமி' வாயிலாக ஆதரவு தந்து, ஊக்குவித்த பெருமைக்கு உரியவர் 'ஞானபூமி' ஆசிரியர் திரு. மணியன். அவருடைய உதவியினால் நூற்றுக்கணக்கான ஆசிரமங்களுக்குச் செல்லவும், - அருட்செல்வர்களைத் தரிசித்து ஆசி பெறவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பினால் பெற்ற அறிவு இந்தப் பணிக்குப் பெரும் துணையாக அமைந்தது. அந்த வகையில் ஆசிரியர் மணியன் எனது நன்றிக்கு உரியவர்.

    இந்துமதத்தின் நலனிலும், வளர்ச்சியிலும், வேர் ஊன்ற வைக்கும் முயற்சியிலும் ஈடுபடும் நல்லோர்கள் அனைவரும் - குடும்பத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆலய நிர்வாகிகள், அறநிலையத் துறையினர் - அனைவரும் இந்த அமுத மொழிகளை, படித்துப் பயன்பெறச் செய்து, உரமிட வேண்டும். இதுவே எனது பணிவான வேண்டுகோள்.

    "எத்தனை எத்தனையோ மகான்கள் இந்த ஞானபூமியில் அவர்கள் அத்தனை பேருக்கும் எனது பணிவான

    வணக்கங்கள்."

    - எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    *****

    இந்நூலில் ஞானவிருந்தளித்துள்ள அருளாளர்கள்

    1. ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீச்வர ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள்

    2. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா

    3. ஜகத்குரு சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீட மகாசுவாமிகள் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்தர்

    4. ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள்

    5. ஜகத்குரு சிருங்கேரி மகா சந்நிதானம் ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் சுவாமி

    6. சுவாமி சின்மயானந்தர்

    7. சுவாமி விவேகானந்தா

    8. பகவான் ரமணர்

    9. பகவான் ராமகிருஷ்ணர்

    10. சுவாமி சித்பவானந்தர்

    11. சுவாமி சிவானந்தர்

    12. சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள்

    13. சுவாமி சித்தாந்த சரசுவதி

    14. ஸ்ரீ வினோபாஜி

    15. ஜில்லெல்ல முடி அம்மா

    16. பாபா முக்தானந்தா

    17. சுவாமி தயானந்த சரசுவதி

    18. சுவாமி ஆனந்த்

    19. தவத்திரு சிவாய சுப்பிரமணிய சுவாமி

    20. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கச்சாரிய சுவாமிகள்

    21. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

    22. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார்

    23. யோகி இராமசரகர்

    24. ஜகத்குரு ஸ்ரீ சாரதாபீட சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள்

    25. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்

    26. சுவாமி சாந்தானந்தா (மலேசியா)

    27. சுவாமி பூர்ணானந்த தீர்த்தர்

    28. ஸ்ரீ சுவாமி மகராஜ்

    29. சுவாமி பரமேசுவரானந்தா

    30. சுவாமி வீரேசுவானந்தா

    31. சுவாமி சிவரூபதாமோதரதாசர்

    32. சுவாமி சுத்த சைதன்யா

    33. சுவாமி பார்த்தசாரதி

    34. யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

    35. ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள்

    36. தவத்திரு சாந்தலிங்க அடிகளார்

    37. சுவாமி சந்த்கேசவ தாஸ்ஜி

    38. சுவாமி சித்தானந்த சரசுவதி

    39. சுவாமினி தேவி வசந்தானந்தா

    40. ஜே. கிருஷ்ணமூர்த்தி

    41. சாது வாஸ்வானி

    42. சுவாமி நித்ய போதானந்தா

    43. சுவாமி இராமதாசர்

    44. மகான் அரவிந்தர்

    45. அரவிந்தாசிரம ஸ்ரீ அன்னை

    46. சுவாமி சித்தானந்தா

    47. ஸ்ரீ கௌடியமட சுவாமிகள்

    48. சுவாமி நிர்மலானந்தர்

    49. மகா மண்டலேசுவர் மகேஷானந்தகிரி

    50. சுவாமி ஈசுவரானந்தகிரி

    51. சுவாமி கிருஷ்ணானந்தா

    52. ஸ்ரீ ஞானானந்த தபோவன சன்யாசின்

    53. சுவாமினி சாரதா ப்ரியானந்தா

    54. சுவாமி சிரத்தானந்தா

    55. எச்.எச். பக்திஸ்வரூப தாமோதர சுவாமி

    56. ஸ்ரீ ஆனந்தமயி அம்மையார்

    57. ஸ்ரீ துளசிதாஸர்

    58. ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள்

    59. ஸ்ரீ பூ.தா. செயராமன்

    60. ஸ்ரீ பு.மா. ஜெயசெந்தில்நாதன்

    61. புலவர் கீரன்

    62. ஸ்ரீ ஆர்.பி. லால்

    63. ஸ்ரீ விஜய் மத்கோல்கர்

    64. ஸ்ரீ எஸ்.ஆர். தேன்மொழியார்

    65. ஸ்ரீ டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள்

    66. ஸ்ரீ எம்.பி. பண்டிட்

    67. ஸ்ரீ ரங்கோரத் கருணாகரன்

    68. ஸ்ரீ எஸ்.வி. கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்

    *****

    இந்து மதம் பதிலளிக்கிறது

    இன்று நாம் வாழும் வாழ்க்கைக்கு ஏற்றபடி, அன்று ஏற்படுத்தப்பட்ட சாஸ்திர நெறிகளை ஏன் மாற்றி அமைக்கக் கூடாது? இதற்கு ஏற்ற தகுதி வாய்ந்த ஆசாரிய புருஷர்கள் பலர் இன்றும் இருக்கத்தானே செய்கிறார்கள்... அவர்கள் ஏன் இந்தக் காரியத்தைச் செய்ய முன்வரக் கூடாது?

    எஸ். சித்தையன்,

    குன்னூர்

    சாஸ்திர விஷயங்களில் கொஞ்சம் விட்டுக் கொடுப்பது, கொஞ்சம் மாற்றி அமைப்பது என்று ஆரம்பித்தால், கடைசியில் லௌகிக சௌகரியங்களை மட்டும் வைத்துக் கொள்வதாகத்தான் அது முடியும். வயலில் களை எடுப்பதைப் போல் இவற்றை நீக்கி விட வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள். இப்போது சிலவற்றை களை என்று நினைத்து நாம் எடுப்போம். பின்னால் வேறு சிலர் பிறவற்றைக் களை என்று எண்ணி எடுப்பார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்தால், எது களை என்ற விவஸ்தையே இல்லாமல், வயல் முழுவதுமே போய் விடும்.

    ரிஷிகள் ஏதோ சொந்த அபிப்பிராயத்தில் சொன்னார்கள் என்பதற்காக நாம் தர்மசாஸ்திரத்தைப் பின்பற்றவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். என்றென்றைக்கும் மாறாமல், ஈசுவர ஆக்ஞையாக இருக்கும் வேதத்தை அனுசரித்தே ரிஷிகள் இந்த விதிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதால்தான் இவற்றைப் பின்பற்றுகிறோம். அதை உள்ளபடியே ரட்சிக்கத்தான் பிரயத்தனப்பட வேண்டுமேயன்றி, மாறுதல் செய்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை.

    சாஸ்திரப் பிரகாரம் நடப்பது இந்தக் காலத்தில் சாத்தியம் இல்லை என்று நினைத்து விடக் கூடாது. வியாபார வேகத்தில் வளர்ந்து விட்ட லௌகிக நாகரிகத்தை விட்டு விட்டு, தேவைகளைக் குறைத்துக் கொண்டால், யாருமே இப்படி ஆசாரங்களை விட்டுப் பணத்துக்காகப் பறக்க வேண்டியதில்லை. பணத்துக்காகப் பறக்காதபோது பகவத் ஸ்மரணத்துக்கு நிறைய அவகாசமும் இருக்கும். வாழ்க்கையில் நிம்மதியும், திருப்தியும், சௌக்கியமும் தன்னாலே உண்டாகும்.

    கர்ம அனுஷ்டானங்களைச் செய்யப் பணவசதி தேவை என்று பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆடம்பரமாகச் செலவு செய்து பூஜை செய்ய வேண்டும் என்பதே இல்லை. காய்ந்த துளசிதளமும், வில்வ பத்திரமும் பூஜைக்குப் போதும். நாம் சாப்பிடுகிற அன்னத்தையே நைவேத்தியம் செய்து காட்டினால் போதும். ‘சாஸ்திரப்படி விவாகம் செய்தால் செலவாகிறதே!' என்று நினைக்க வேண்டியதில்லை. இப்போது விவாகங்கள் நடக்கிற ஆடம்பரமான முறை, சாஸ்திர சம்மதமான விவாகத்துக்கு தேவையே இல்லை. குறிப்பாக, இப்போது ஏராளமான செலவில் அலங்கார ஆடம்பரங்கள் செய்யப்படுகின்றன. வரதட்சணை என்று பெரிய தொகை கொடுக்கப்படுகிறது. அதற்கெல்லாம் சாஸ்திர சசாஸ்திர முறைப்படி வாழுவதற்குப் பணம் தேவை என்று இருந்தால், பணக்காரர்கள் மட்டுமே முறைப்படி வாழ முடியும் என்று ஆகி விடும். உண்மையில் அப்படி இல்லவே இல்லை. வாழ்க்கையை எளிதாக - எளியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். சாஸ்திரம் அதைத்தான் சொல்லிக் கொடுத்து, நமக்கு வழி காட்டுகிறது.

    - காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர சந்திரசேகர சரசுவதி சங்கராச்சார்ய சுவாமிகள் எழுதிய 'நாகரிக வியாதிக்கு மருந்து' என்ற கட்டுரையிலிருந்து.

    கடவுள்மீது மணமான பெண்கள் கொண்டதாகச் சொல்லும் பிரேமபக்தியை எப்படி ஒப்புக் கொள்வது? மனித உலகில் மணமானவர்கள் பிறர் மீது கொள்ளும் காதல் எவ்வளவு தூய்மையானதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லையே...?

    எம். செண்பகம்

    திருவானைக்காவல்

    மகிழ்ச்சி என்பது நம்முடைய அனுபவத்தினாலேயே வருகிறது. ஒரே பொருள் நமக்கு ஒரு சமயம் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது; இன்னொரு சமயம் அளவு கடந்த வேதனையைக் கொடுக்கிறது. ஒரு பெண் ஒரு வாலிபனை மிகவும் நேசிக்கிறாள். அவனுக்காக உயிரையே கொடுக்கவும் தயாராக இருக்கிறாள். அவனை நினைக்கும் போதெல்லாம் அவளுடைய மனத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. ஆனால் அவளால் அவனை மணந்து கொள்ள முடியவில்லை. அவன் அவளைக் கைவிட்டு விடுகிறான். அந்தப் பெண் இன்னொருவனுடைய மனைவியாகி விடுகிறாள். இப்போது அவளால் அவனைப் பற்றி நினைத்து மகிழ்ச்சி அடைய முடியவில்லை. அந்த எண்ணமே வெறுப்பாக இருக்கிறது. அவன் கண்ணிலே படக்கூடாது என்று நினைக்கிறாள். முன்பு தான் அவனைப் பற்றி நினைத்ததெல்லாம் தவறு என்று எண்ணுகிறாள்.

    அதே வாலிபனும் அதே பெண்ணுமாக இருந்தும் கூட, அன்று இன்ப நினைவுகளாக இருந்தது இன்று துன்ப நினைவுகளாக மாறிவிட்டது. இதற்கு என்ன காரணம்? அவனோ, அவளோ, மாறாவிட்டாலும் அந்த உணர்வு நிலையானதாக இல்லாததால் மாறிவிட்டது. அந்த ஆனந்தம் நிலையாக இருந்திருந்தால் மாறி இருக்காது. இறைவனிடம் கொள்ளும் அன்பு நித்தியமானது. அதனால் கிடைக்கும் ஆனந்தமும் நித்தியானந்தம்தான். இப்படி நித்தியமானதாக இருப்பதனாலேயே அதன் தூய்மையும் பெருமையும் மிக உயர்ந்தது; தெய்விகமான அந்த உணர்வு மனிதர்களுடைய எல்லைகளையும், மனித வாழ்வையும் கடந்தது. அதில் பிரதி பலனை யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லாவற்றையும் உனக்கே கொடுத்து விட்டேன்! என்ற தியாக உணர்வே அதில் நிறைந்திருக்கிறது. தியாகேசுவரனான இறைவன் அதையே காணிக்கையாக ஏற்றுக் கொள்ளுகிறான்.

    - சுவாமி ராமதாஸர்

    'God Dwells within you' என்ற கட்டுரையிலிருந்து

    ஆசாரிய புருஷர்களும் மகான்களும் கூட, ஜுரம், உடல்வலி போன்ற உபாதைகளை அனுபவிக்கிறார்களே! அவர்களுக்கும் புற்றுநோய் போன்ற துன்பங்கள் தொடருகின்றனவே... அது எப்படி? அவர்கள் தமது சக்தியினால் அவற்றை நீக்கிக் கொள்ள முடியாதா?

    எஸ். சண்முகசுந்தரம்

    பவானி

    ஜகத்குரு ஆதிசங்கரர் இந்து மதத்துக்கே புத்துயிர் கொடுத்தவர். அவர் சிருங்கேரியில் இருந்த போது விஜயநகர மன்னன் அவரைத் தரிசிக்க வந்தான். அப்போது ஆசாரிய சுவாமிகளுக்கு மலேரியா ஜுரம் வந்து படுத்துக் கொண்டிருந்தார். ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் மன்னனிடம், நீங்கள் அவரைத் தரிசிக்க முடியாது. அவருக்குக் குளிர் ஜுரம் வந்திருக்கிறது! என்று சொன்னார்கள்.

    அது உள்ளே படுத்திருந்த சுவாமிகளின் காதில் விழுந்து விட்டது. தனது சீடர்களில் ஒருவரை அனுப்பி மன்னனை அழைத்துவரச் சொன்னார். ஆசிரமத்தில் உட்காருவதற்கு ஆசனம் ஏதும் கிடையாது. வெறும் மரப் பலகையை மன்னனுக்குப் போட்டு உட்காரச் சொன்னார்கள். எதிரே சுவாமிகள் உட்கார்ந்து கொண்டார். அவருக்காகப் போடப்பட்ட மணைப்பலகையை எடுத்துப் பக்கத்தில் போட்டுவிட்டார். அந்தப் பலகை சிறிது நேரத்தில் நடுக்கம் கொண்டு ஆடத்தொடங்கிற்று. சுவாமிகள் மன்னருடன் உரையாடி முடித்த பிறகு, கடைசியாக மன்னன், சுவாமி! ஒரு சிறு சந்தேகம். இவ்வளவு நேரமும் அந்தப் பலகை நடுங்கி ஆடியதன் காரணம் என்ன? என்று கேட்டான்.

    எனக்கு வந்திருந்த காய்ச்சலை உனக்காகக் கொஞ்ச நேரம் அந்தப் பலகைக்கு மாற்றி வைத்திருந்தேன். அதனாலேயே என் உடலில் நடுக்கம் இல்லை. அந்தப் பலகை நடுங்கிக் கொண்டிருந்தது! என்றார் சுவாமிகள். மன்னனுக்கு மிகுந்த ஆச்சரியம் உண்டாயிற்று. சுவாமி! உங்கள் உபாதையை எனக்காக இவ்வளவு நேரம் அந்தப் பலகைக்கு மாற்றி வைத்திருந்த தாங்கள் உங்களுக்காக அந்த உபாதையை விலக்கி வைத்துக் கொள்ள முடியாதா? என்று கேட்டான்.

    சுவாமிகள் சொன்னார் துறவியான பிறகு என்னைத் திருடனாகச் சொல்லுகிறாயா மன்னா? சில கர்மவினைகளை நான் ஏற்கெனவே உருவாக்கி இருக்கிறேன். அதை நான் அனுபவித்தே தீர்க்க வேண்டும். அப்படி அனுபவிக்காமல் நான் என்னுடைய கர்மாவைக் கழிக்க நினைத்தால், இயற்கையின் விதியை மீறிய திருடன் ஆவேன். நல்லவையோ, தீயவையோ, அதன் பலனை ஒவ்வொரு மானுடனும் அனுபவித்தே ஆகவேண்டும். அதிலிருந்து மாற நான் விரும்பவில்லை! என்றார் ஆதிசங்கரர்.

    - சுவாமி முக்தானந்தா

    'In the Company of Siddha' என்ற நூலிலிருந்து

    ஈசுவரனைத் தலையில் பிறையை வைத்திருப்பவராகவும், கங்கையைச் சிரசில் ஏந்தியவராகவும், கழுத்தில் பாம்பை அணிந்தவராகவும், உடம்பில் புலித்தோலைப் போர்த்திக் கொண்டவராகவும் காட்டுவது ஏன்? திருமால் தரிசனம் கொடுப்பதைப்போல சர்வாலங்கார பூஷிதராக அவர் ஏன் தோற்றம் அளிக்கவில்லை? இந்த அமைப்புக்கு ஏதாவது தத்துவப் பின்னணி உண்டா?

    எஸ். பண்டரிநாதன்

    சென்னை - 18

    நாம் எப்படி வாழவேண்டும் என்பதைக் காட்டுவதே சிவசொரூபம். ஜடாமுடியில் அவர் வைத்திருக்கும் சந்திரன் நம்முடைய இன்பமும், துன்பமும் மாறிமாறி வளர்பிறையாகவும், தேய்பிறையாகவும் வரும் என்பதைக் காட்டுகிறது. அங்கே தேங்கி நிற்கும் கங்கை என்றும் - எப்போதும் மனத்தைக் கங்கையைப் போல வைத்திருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. கங்கையில் எவ்வளவோ அழுக்கும் அசுத்தமும் சேருகின்றன. ஆனால் அதன் தூய்மை கெடுவதில்லை. அதைப்போல எவ்வளவோ ஆசாபாசங்கள் நம்மை அலைக்கழித்தாலும், நம்முடைய மனம் அதனால் கெட்டுப் போய்விடக் கூடாது. ஒவ்வொரு நிமிடமும் நம்மைப் பாவக் குழியில் தள்ள நச்சுப்பாம்பாக சூழ்நிலை சுற்றிக் கொண்டு காத்திருக்கிறது. ஆனால் அந்த விஷம் உள்ளே இறங்க நாம் விட்டுவிடக் கூடாது. இதையே, கழுத்தைச் சுற்றிய பாம்பை அணிந்த சிவபெருமான் விஷத்தைக் கண்டத்தில் தேக்கிக் கொண்டவராகக் காட்டுகிறார். மிருக உணர்ச்சிகள் நம்மைப் பாதிக்கலாம். ஆனால், அவற்றிலிருந்து உயர்ந்த மனித உணர்வுடன் நாம் வாழவேண்டும். புலித்தோல் போர்த்திய பெருமான் அதையே நமக்குக் காட்டுகிறார். உடம்பின் ஒரு பகுதியில் தேவியை வைத்துக் கொண்டிருந்தாலும் சிவபெருமான் காமத்தை வென்றவர்; காமனையே எரித்தவர். அதைப்போல நாமும் உலகியலைப் பற்றி வாழ்ந்தாலும் காமத்துக்கு அடிமையாகாமல் அதைத் தூய்மைப்படுத்தி வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

    பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபா 'Our ancient Culture' என்ற கட்டுரையிலிருந்து.

    இன்றைய உலகத்தில் நால்வகை வருணங்களுக்கு இடம் உண்டா? அந்தப் பிரிவினையினால் நமது மதம் பிளவுபட்டுப் போய்க் கொண்டிருக்கிறதே?

    எம். ஐயம்பெருமாள்

    திருமங்கலம்

    ஒரு மனிதனின் வளர்ச்சி இரண்டு விதமானது. ஒன்று உடல் வளர்ச்சி. அது அவனுடைய உடல் பலத்தையும், அதை ஒட்டி அவன் தேடிக் கொள்ளும் திறமையையும் பொறுத்து இருக்கிறது. ஆன்மிக உணர்வு இரண்டாவது நிலை. இதன் வளர்ச்சி முதிர முதிர மனித வாழ்க்கையின் பயன்கள் உயருகின்றன. ஒவ்வொரு படியாக உயரும்போது, சாதாரண பொதுத் தொழில்களைச் செய்து கொண்டிருந்தவன் அதிலிருந்து லாபங்களைப் பெற குறிப்பிட்ட வியாபாரம் செய்து பணத்தைச் சேர்க்கிறான். அதன்பின் தன்னையும் தன் சொத்தையும் நாட்டையும் பாதுகாக்கப் போர்க்கலங்களை ஏந்துகிறான். இவற்றால் மட்டும் உலக வாழ்க்கையில் வளம் கிடைக்க முடியாது என்று புரிந்து கொண்டதும் ஆன்மிக மலர்ச்சியை நாடிப் போகிறான். தியானம், வழிபாடு போன்றவற்றை அவனுடைய மனம் நாடுகிறது.

    இப்படி ஒரே மனிதன் படிப்படியாக மனப் பக்குவம் அடைந்து உயரும்போது, அவனே நால்வகை வருணத்துக்கும் உரியவனாகி விடுகிறான். தன்னுடைய குணங்களில் தாமச குணத்தையும், ரஜோ குணத்தையும் கடந்து சாத்விக குணத்தைப் பெறுகிறான். அப்படி உயர்ந்து பிரம்ம ஞானத்தைப் பெறுபவனே பிராம்மணன் ஆகிவிடுகிறான். மனிதன் படிப்படியாக உயரும்போது அவனுடைய பொறுப்பும் அதிகமாகிறது. எந்த வேலையையும் செய்யலாம் என்றிருந்தவன், பயனுள்ள - பலன் தரும் வேலையையே செய்கிறான். பொருளைப் பாதுகாக்க முற்பட்டவன், மேலும் உயர்ந்து அருளைப் பெற முயலுகிறான். இப்படி மனித ஆன்மா மலர்ச்சி பெறுவது (unfolding of the life of spirit) தான் நால்வகை வருணம் என்பதன் பின்னணித் தத்துவம். இதைப் புரிந்து கொண்டு விட்டால், உயர்வுதாழ்வுக்கோ, வேற்றுமைக்கோ, இடமே இல்லை.

    -டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் 'The Hindu Dharma' என்ற கட்டுரையிலிருந்து

    தியானம், பூஜை என்று எல்லோரும் போய்விட்டால் உலக காரியங்கள் நடப்பது எப்படி? தனக்கென்று உணவு, உடை, வீடு இல்லாதவன் எப்படி தியானத்தில் அமைதியாக ஈடுபட முடியும்? பரம் என்பது மட்டும் குறிக்கோளாக இருந்தால் போதுமா? இகத்தையும் கவனிக்க வேண்டாமா?

    எஸ். பத்மினி சுந்தரம்

    பெங்களூர் - 10

    சாஸ்திரம் நாம் இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையானவற்றை விட்டுவிட்டு, பரத்தை நாடிப் போக வேண்டும் என்று சொல்லவில்லை.

    ஸர்வே விஸ்வஹாரா: ப்ரஸ்த தண்டுல மூலா: (எல்லா விவகாரங்களும் வயிற்றுப் பசியைப் போக்குவதன் மூலமாகக் கொண்டுள்ளன) என்று அதுவே ஒப்புக் கொள்கிறது. 'ஆனால் அதுவே எல்லாம் என்று இருந்து விடாதே. அப்புறம் உனக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் இல்லாமற் போய்விடும்' என்றுதான் சுட்டிக் காட்டுகிறது.

    எந்த விவகாரத்தை எடுத்துக் கொண்டாலும்கூட முதலாவது வயிற்றுப் பசியைப் போக்கிக் கொண்டால்தான் முடியும். பசியை நீக்க முடியவில்லை என்றால் சந்தியா வந்தனம் செய்யத் தோன்றாது. ஆகவே, பசியையும் போக்கிக் கொள்ள வேண்டும்; பக்தியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டும் இருந்தால்தான் நாம் மனிதர்கள்; நாம் விவேகிகள் என்று சொல்லிக் கொள்வதில் ஏதாவது பொருள் இருக்கும். லௌகிக விவகாரத்தில் மட்டும் ஈடுபட்டு சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அதிலேயே ஊறிப்போய் விட்டோமானால், ஒரு பயனும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர்களாகி விடுவோம். பார்க்கப் போனால் ஒரு நாய்கூடத்தான் எவ்வளவோ சௌபாக்கியத்தை அனுபவிக்கிறது. ஒரு பணக்காரர் வீட்டுக்கு ஒரு நாய் போய் சேர்ந்தால் அதைப் பார்த்துக் கொள்ள ஓர் ஆள், பின்னாலேயே வருகிறான்.

    நமக்குப் பசும்பால் கிடைக்கிறதோ இல்லையோ அதற்குக் கிடைக்கிறது. அதை வெளியே அழைத்துக் கொண்டு போய்வர ஓர் ஆள். எஜமானனுடன் அது கார் சவாரி செய்கிறது. மற்ற மனிதர்கள் ஆசைப்பட்டாலும் அது கிடைக்காது. என்ன இருந்து என்ன? அது நாய் ஜென்மம் தானே? பிறப்பதற்கு முன் அந்த மாதிரி நாய் ஜன்மம் வேண்டுமா, அல்லது மனித ஜென்மம் வேண்டுமா என்று கேட்டிருந்தால் என்ன சொல்லி இருப்போம்? மனித ஜென்மமே மேல் என்றுதானே சொல்லி இருப்போம்? பணக்காரருக்கு கோபம் வந்து துரத்தி விட்டால்? அந்த நாய் சாதாரணத் தெருநாய் ஆகிவிடும். ஆனால் மனிதனுக்கு அப்படி இல்லையே? நாம் எப்பேர்ப்பட்டவருடன் வாழ்ந்தாலும், ஒருவிதமாக வாழ்க்கை நடந்தாலும், அவரைப் பிரிந்து வேறு எங்கே சென்றாலும் முன்பைவிட மேலும் நல்லவிதமாக வாழ்க்கை நடத்த முடியும்.

    அதாவது, மனிதன் மனிதனாக வாழ்ந்தால் எப்படியோ நல்ல கர்மங்களின் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இம்மைக்குத் தேவையானவற்றைக் கவனிக்கும் போது, மறுமைக்குத் தேவையானவற்றையும் சேர்த்துக் கவனித்தால் மனித ஜென்மம் அடைந்ததன் பயனைப் பெற்றவர்களாவோம். வெறும் இகபர சௌக்கியங்களைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுத் தேடிக் கொண்டிருந்தால் பணக்காரர் வீட்டு நாயைப் போன்ற வாழ்க்கைதான் கிடைக்கும். அந்தப் பணமும் வசதியும் போய்விட்டால் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்களாகி விடுவோம்.

    - ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகளின் அருளுரை 'உலக வாழ்க்கை வாழ்பவர்கள் ஆன்மீகத்தில் எவ்வாறு ஈடுபடுவது?' என்ற கட்டுரையிலிருந்து

    அவதாரம் என்பது என்ன? இறைவன் மனித உருவில் வந்தும் லீலைகளைச் செய்திருக்கிறான். அடியவர்கள் மனித உருவிலிருந்தும் அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

    ஏ. லீலா ரமணி

    பாலக்காடு

    அவதாரத்தில் இரண்டு வகைகள் உண்டு. இறைவனே மனித உருவத்தில் வந்து நாம் எப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டலாம். சரியான முறையில் வாழாதவர்களைத் தண்டித்து, சரியாக வாழ்பவர்களைக் காப்பாற்றி தர்மத்தை நிலைநாட்டலாம். இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் என்பவை இது போன்றவைதான். இவை பூர்ணாவ தாரங்கள். இதில் தெய்விகம்தான் இருக்கும். மானுடனுக்கு உள்ள பலவீனங்கள் இருக்காது. ஆனால் மனிதனைப் போல வாழ்ந்து, மனிதன் இப்படி இருக்க வேண்டும் என்பதை இறைவன் உணர்த்துகிறான்.

    இறைவனுடைய அருளைப் பெற்று உலகத்தில் மனிதனாக வாழவரும் அடியார்கள் உண்டு. இது அம்சாவதாரம். இந்த அவதாரத்திலும் தெய்விகம் இருக்கிறது. ஆனால் அது தெய்விக அருளாக வந்து நிறைகிறது. இவர்கள் மனிதனைப் போலவே வாழ்ந்து, மனிதனுக்குரிய சுக துக்கங்களை அனுபவித்து, லௌகிகமான உணர்ச்சிகளின் போராட்டத்துக்கு இடையே வாழ்க்கை நடத்தி, பிறகு இறைவனின் தனிக் கருணையால், உயர்வுபெற்று, பக்தி மார்க்கத்தை மனிதர்களுக்குக் காட்ட, இறைவன் அருளால் கிடைத்த சக்தி மூலம் அற்புதங்களை வெளிப்படுத்தி, வழிகாட்டுகிறார்கள். மனிதர்களைப் போலவே அவர்களும் வாழ்வதால், அவர்களைப் பின்பற்றுவதும் எளிதாகிறது. மனிதனுக்குரிய பலவீனங்களுடன் வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு மனம் திருந்தி வாழ்வில் உயர்வு பெற்றவர்களாக அவர்கள் இருப்பதால், தவறு செய்தவர்களும்கூடத் திருந்தி வாழ முடியும் என்ற நம்பிக்கையைப் பெறுகிறார்கள். இரண்டு விதமான அவதாரங்களுமே மனிதனின் பண்புகளை உயர்த்த எடுக்கப்பட்டவைதான். இரண்டிலும் தெய்வம் நமக்கு ஒவ்வொரு விதமாக வழிகாட்டுகிறது.

    - புலவர் கீரன்

    சென்னை பெசன்ட் நகர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நிகழ்த்திய உரையிலிருந்து

    மந்திரங்களில் இறைவனைப் பூஜிப்பதற்கு உரியவை என்றும் மனிதனுக்குப் பயன்படுபவை என்றும் உண்டா? மந்திரத்தின் மூலம் நோயைக் குணப்படுத்துவது சாத்தியமா? மந்திரங்களில் இவற்றுக்கு அடையாளங்கள் உண்டா?

    எம். சத்தியவாகீசுவரன்,

    லால்குடி.

    ஒரு மந்திரம் சொல்லப்படும் போது, அதன் விநியோகம் என்ன என்று அடையாளமும் அதில் இருக்கும். அதற்குரிய ரிஷி தேவதையின் பெயர் போன்ற பலவும் அதில் சேர்ந்து வரும். எதற்கு மந்திரம் உரியது என்பதையும் நாம் அதில் கண்டுகொள்ளலாம். சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது சொல்லப்படுவது மிருத்யுஞ்ஜய மந்திரம். அதில் 'காந்த உபசாரம்' என்ற குறிப்பு வரும். விக்கிரகத்துக்கு சந்தனம் தடவும்போது அதைச் சொல்லுவார்கள். சிவபெருமான் விபூதியைத் தரிப்பவர். அதை மூன்று வரிகளாக அணிபவர். பஸ்ம உபசாரம் செய்யும் போது அதற்குரிய மந்திரத்தைச் சொல்லுவார்கள். அதில் மூன்று என்பதை உணர்த்தும் 'திரி' என்ற சொல்லும் இருக்கும். சிலசமயம் பூஜையில் இதையே பிரதட்சண மந்திரமாக உபயோகிப்பதும் உண்டு. நோயைக் குணப்படுத்தவும் இதை உபயோகிப்பதுண்டு. மரணத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும் சக்திகூட 'மிருத்யூர் முக்கியா' என்ற மந்திரத்துக்கு உண்டு. மந்திரங்கள் அவற்றுக்குரிய தேவதைகளினால் சக்தியைப் பெற்று நமக்கு உதவுகின்றன. ஆகையால் அவற்றை அவற்றுக்குரிய முறையில், தகுதியுடன், தூய்மையுடன் சொன்னால் பலன் கிடைக்கும்.

    - சுவாமி ஈசுவரானந்தகிரி

    ‘Towards Fulfilment' என்ற புத்தகத்திலிருந்து

    வேதங்களில் உருவ வழிபாடு சொல்லப்படவில்லை. எல்லாவற்றுக்கும் வேதத்தையே ஆதாரமாக வைத்துக் கொண்டிருக்கும் நாம் விக்கிரக ஆராதனை செய்வது ஏன்? அதையும் மனித வடிவத்தில் வைத்திருப்பது ஏன்?

    எம். கற்பகவல்லி

    சென்னை - 28

    வேதங்கள் அக்கினியைத் தவிர எந்தத் தேவதையையும் குறிப்பாக உணர்த்தவில்லை. இயற்கையின் சக்தி வடிவங்களாகவே அவை கருதப்பட்டன. இப்படி வைத்துக் கொள்ளும்போது வழிபாட்டில் உள்ள சிரமத்தை, அன்று ஞானாசிரியர்களாக இருந்து சொல்லிக் கொடுத்தவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். சாதாரண மனிதனும் புரிந்து கொண்டு, தெய்வ வடிவங்களாகக் கருதி வழிபடும் முறையை அப்போது அவர்கள் உருவாக்கினார்கள். தியானத்தில் ஈடுபடவும், மனத்தை ஒருமுகப்படுத்தவும் அந்த வழிபாட்டு முறையே சிறந்தது என்று அவர்கள் கருதினார்கள்.

    உன்னுடைய தந்தையும் தாயும் நீ கண் முன்னால் கண்டு வணங்க வேண்டிய உயிருள்ள தெய்வங்கள் என்று அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். பிறகு அந்தத் தாய் தந்தை வடிவங்களாகவே அம்மனையும் ஈசுவரனையும் அமைத்துக் கொடுத்தார்கள். அந்த உருவத்திலேயே வழிபாட்டையும் நடத்தக் கற்றுக் கொடுத்தார்கள். உயிருள்ள தெய்வங்களாகப் பெற்றோரை வணங்க முற்பட்டவன், அந்த வடிவத்தில் உள்ள இறைவனையும் உயிர்ப்புள்ள பூஜையினால் வழிபடத் தொடங்கினான். விக்கிரக ஆராதனை என்பது இப்படித்தான் ஏற்பட்டது.

    - சுவாமி சின்மயானந்தர்

    Discourses on Taittiriya Upanishad என்ற நூலிலிருந்து

    உலகத்தில் வேறு எந்த தேசத்திலும் வர்ணாசிரமதர்மம் என்பது இல்லை. இந்தியாவில் இந்து மதத்தில் மட்டுமே இது இருக்கிறது. அந்த நாடுகள் நல்ல நிலையில் வளர்ச்சி பெறவில்லையா? நமக்கு மட்டும் இது அவசியம் என்று நினைப்பானேன்?

    வி. சுந்தரேசன்

    திருமங்கலம்

    மேல்நாடுகளிலும் தொழில் பிரிவினை (Division of Labour) என்று பொருளாதாரத்தில் சொல்லிக் கொண்டு, இன்றும் அதை நடைமுறையில் கொண்டுவர முடியாமல் சிரமப்படுவதைப் பார்க்கிறோம். இதற்கு ஒரு விகிதாச்சாரத்தில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஜனங்கள் வந்தால்தான் சமுதாயம் சீராக அமைய முடியும். இந்தத் தொழில் பங்கீட்டைப் பாரம்பரியமாக வைத்து நடத்திவந்த நமது தேசத்தில் அந்த ஒழுங்கு குலைகிற வரையில் சாந்தியும், சந்தோஷமும், திருப்தியும் இருந்து வந்தன. இப்போது அந்த அமைதி சமூகத்தில் இல்லை. அதற்குக் காரணம், நாம் மேல்நாட்டு நாகரிக முறைகளைப் பின்பற்றி இதை மாற்ற முயன்றதுதான்.

    இப்போது நம் தேசம் எப்படி இருக்கிறது? ஒழுங்கீனம், பொய், புரட்டு, லஞ்சம், விபசாரம் எல்லாம் தலைதூக்கி விட்டன. எங்கே பார்த்தாலும் வேலை நிறுத்தம், கிளர்ச்சி என்பது தெரிகிறது. எதனால் இப்படி ஆயிற்று? எதை விட்டதால் நமக்கு இந்தப் பலவீனம் வந்தது? இதை ஆலோசித்துப் பார்த்தால், மற்ற தேசங்களில் இல்லாத வர்ண தர்மம் இங்கே இருந்தவரையில் நம்முடைய நாகரீகம் மட்டும் உறுதியாக, மற்ற தேசங்கள் போற்றும் வகையில் காப்பாற்றப் பட்டு வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

    இந்த தேசத்தில் மட்டுமாவது ஆத்மசிந்தனைக்கும், தெய்வ அனுபவத்துக்கும், கலைகளுக்கும், உத்தமமான பண்புகளுக்கும் அனுகூலமான ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் என்று நமக்கு ஆசை இருந்தால், இவற்றுக்காக வர்ணதர்மமும் இருக்க வேண்டும். 'இங்குமட்டும் இருப்பானேன்?' என்றால், இங்கு மட்டுமாவது இருந்தால் தான் உலகத்துக்கே ஒரு நல்ல உதாரணம் கிடைக்கும் என்று கொள்ள வேண்டும்.

    இல்லாவிட்டால் போட்டிதான் - உடனே பொறாமை தான்; அதிருப்திதான்; சமூக சச்சரவுதான். சௌகரியமான படிப்பு, தொழில் இவற்றுக்குத்தான் எல்லோரும் வரப் பார்ப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் சமூக அமைப்பு இடம் தர முடியாது. இப்போது பாருங்கள்; படித்தவர்களிடையே வேலை இல்லா திண்டாட்டம் வந்துவிட்டது. காலேஜ் அட்மிஷனில் ஏகப்பட்ட போட்டா போட்டிகள். 'இஞ்சினீயரிங் கல்லூரிகள் அதிகமாகி விட்டன. அதனால் எல்லோருக்கும் வேலை கிடைப்பது சிரமம்!' என்கிறார்கள். கல்லூரியிலும், வேலைகளிலும் வேறுவிதமான ஜாதி, வகுப்பு, பிரிவினைகளைக் கொண்டுவந்து கட்டுப்படுத்த வேண்டிய நிலைமையும், அதனால் மனக்கசப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதையே பாரம்பரியம் என்ற கட்டுப்பாடாக ஆதியில் வைத்தார்கள். அப்போது தொழில் இரத்தத்தில் ஊறி, அது எப்படிப்பட்டதானாலும் அதைப் பெருமையுடன், 'இது நம்முடைய பாட்டன் காலத்துச் சொத்து. இது நம் குலதனம்' என்று சொல்லிக் கொண்டு செய்யும் நிறைவு இருந்தது. அந்தந்தத் தொழிலைச் செய்வதில் விசுவாசமும் இருந்தது. அதனால் அவற்றில் அதைச் செய்வோருக்குத் திறமையும் (Efficiency) இருந்தது. இன்றைக்கு ஒவ்வொருவரும் பணத்துக்காகவே என்று வந்துவிட்டதால், தொழிலை ஈடுபாடோ, விசுவாசமோ இல்லாமல் செய்கிறான். அதனால் அதில் ஒழுங்கோ, நாணயமோ இருப்பதில்லை. முன்காலத்தில் பணம் இரண்டாம் பட்சம். விசுவாசத்தோடு, தன் தொழில் என்ற திருப்தியோடு செய்ததால் எல்லாக் காரியங்களும் நன்றாக நடந்தன. சமூகத்திலும் நல்ல அமைப்பு இருந்தது.

    மனநிறைவு இல்லாமல் ஒரு நாகரீகமும் இல்லை. சமூகத்தில் அத்தனை பேருக்கும் இப்படிப்பட்ட நிறைவை ஏற்படுத்திக் கொடுத்த வர்ணதர்மம் என்ற உத்தமமான ஏற்பாட்டை நாம் குற்றம் சொல்லவே கூடாது.

    - ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீச்வர ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் 'இங்கு மட்டும் இருப்பானேன்?' என்ற கட்டுரையிலிருந்து.

    நமது மதத்தில் உள்ள பழம்பெரும் நூல்களில் சிலவற்றை இதிகாசம் என்றும்; சிலவற்றைப் புராணம் என்றும் அழைப்பானேன்? இராமாயணத்தில் ஒரு வகையான நேர்மையான தர்மமும், பாரதத்தில் அதர்மத்தை அழிக்கும் வேறுவகையான முறையும் சொல்லப் பட்டிருப்பதேன்?

    எம். குமரேசன்

    நாகர்கோயில்

    எங்கே தர்மம் உண்டோ, அங்கே ஜயம் உண்டு என்ற உண்மை ஒழுக்கத்தை வெளிப்படுத்துவதே இதிகாசங்களின் நோக்கம் ஆகும். நூற்றுக்கு நூறு தர்மம் தழைத்திருந்த கிருதயுகத்தில் தர்மசிந்தனைகள் தேவை இல்லை. எழுபத்தைந்து சதவீதம் தர்மமும், இருபத்தைந்து சதவீதம் அதர்மமும் உண்டாகி இருந்த திரேதா யுகத்தில் ஸ்ரீராமனும் ஐம்பது சதவீதம் அதர்மம் நிறைந்த துவாபர யுகத்தில் கிருஷ்ணபகவானும் அவதரித்தனர். கலி யுகத்தில் இருபத்தைந்து சதவீதம் தர்மமும், எழுபத்தைந்து சதவீதம் அதர்மமும் விளையாடுகின்றன. இந்த யுகதர்மங்களின் அடிப்படையில் ராமாயணம், மகாபாரதம் ஆகியவை அமைக்கப்பட்டிருக்கின்றன. பக்தியோகத்தைச் சிறப்பாகக் கூறும் பாகவதம், இதிகாசத்துக்கும், புராணங்களுக்கும் இடையில் இருக்கிறது. எல்லாம் இறைவனே என்றும், எல்லாவற்றுக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்றும் உலக தத்துவத்தை, உலக உண்மையைப் புராணங்கள் கூறுகின்றன. முந்தையதை யோகவழியிலும், பிந்தையதை தர்மவழியிலும் புராணங்கள் விளக்குகின்றன. ஒரு நாணயத்தின் இரு புறங்களைப் போன்றவையே அவை.

    தர்மம் வலிமையுடன் இருந்த காலத்தில், தர்மவழியில் வாழ்ந்து யோகநிலைக்குப் போவது எளிதாக இருந்தது. தர்மம் குன்றிய நிலையிலோ, யோகசாதனை வழியாகவே தர்மத்தில் நிலைபெற முடிந்தது. அறத்தை நிலைநிறுத்த ஸ்ரீராமன் திரேதா யுகத்தில் அறவழியில் வாழ்ந்து யோக நிலையை எய்தினார். துவாபர யுகத்தில் தர்மம் குன்றி இருந்தபோது, யோகேசுவரனாகிய ஸ்ரீகிருஷ்ணன் யோகத்தின் துணை கொண்டு தர்மத்தை நிலைநாட்டினார். ஒரே இலட்சியத்தோடு கூடிய இந்த தர்மயோக வழிகளில் தர்ம - அதர்மப் போர்களும் நடப்பதுண்டு. அதர்மம் எவ்வளவு வலிவுற்றிருந்தாலும் முடிவில் அது தோல்வி அடையும் என்பதைப் பாரதம் எடுத்துக் காட்டுகிறது.

    இவ்விதமாக இதிகாசங்களில் ஆதியோடு அந்தம் தர்மத்தின் ஆக்கமும், அதர்மத்தின் அழிவும் முழங்குவதைக் கேட்கலாம். அதனால் இந்துமதமாகிய பெரும் மாளிகையில் அடிக்கல்லாக வேதமும், அதன் சுற்றுப் பிராகாரமாக ஸ்மிருதியும், அதன் தூண்களாக இதிகாசங்களும் புராணங்களும் விளங்குகின்றன.

    -சுவாமி பரமேசுவரானந்தா 'இந்து தர்ம பரிச்சயம்' என்ற நூலிலிருந்து

    இந்துமத வழிபாட்டில் வெவ்வேறு விதமான தோற்றமும், முக அமைப்பும், செயல் வடிவமும் கொண்ட விக்கிரகங்கள் இருப்பதேன்? கடவுளை இப்படிப் பல்வேறு உணர்ச்சி வடிங்களாக நாம் நினைத்து வழிபடுவதன் பொருள் என்ன?

    எஸ். சந்தானலட்சுமி

    மயிலாடுதுறை

    நாம் ஓர் அழகான ஆணையோ, பெண்ணையோ பார்க்கும் போது மனத்தில் மென்மையான உணர்வுகள் தோன்றுகின்றன. உடல் பலம் மிகுந்த ஒரு பயில்வானைப் பார்க்கும் போதும், விளையாட்டுகளில் சாகசம் செய்வதைக் காணும் போதும், மனத்தில் வீரஉணர்ச்சி எழுகிறது. ஓர் உணர்ச்சி மிகுந்த தாயையும் - குழந்தையையும் பார்க்கும் போது மனத்தில் உணர்ச்சிகள் கனிந்து எழுகின்றன. வெவ்வேறு விதமான விக்கிரக வடிவங்கள் யாவும் இப்படிப்பட்ட மென்மையான உயர்ந்த உணர்ச்சிகளை நம் உள்ளத்தில் தோற்றுவிப்பதற்காக எழுந்தவையே.

    பைரவர், அனுமான், காளி போன்ற உக்கிரமான தோற்றம் கொண்ட உருவங்கள் நமது மனத்தில் வீர உணர்வைத் தோற்றுவிக்கின்றன. சரஸ்வதி, லட்சுமி போன்றவை கலை உணர்வைத் தூண்டி விடுகின்றன. இராமர், கிருஷ்ணர் போன்ற உருவங்கள் மனத்துக்கு மென்மையான உணர்வைத் தோற்றுவிக்கின்றன. காமாட்சி, பராசக்தி போன்ற வடிவங்கள் தாய்மை உணர்வுக்கு மேன்மை தருகின்றன. இப்படி வாழ்க்கையில் நாம் உணரும் உணர்ச்சிகளை ஒட்டியே இந்த விக்கிரகங்களின் வடிவங்களும் அமைந்தன. வாழ்வு இயலை ஒட்டி அமைந்ததே நமது இந்துமதம்.

    -ஸ்ரீசுவாமி மகாராஜ் 'சித்தாந்த இரகசியம்' என்ற நூலிலிருந்து

    மந்திரங்களைப் பொருள் தெரியாமலும், அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமலும் சொல்லுவதனால் தவறான பலன்கள் ஏற்படுமா? உச்சரிப்பில் தவறு இருந்தால், அதனால் வேறு கெடுதல்கள் தோன்ற முடியுமா?

    என். ரகோத்தமன்

    நாமக்கல்

    மந்திரங்களைச் சொல்லும்போது சிலருக்கு அதன் பொருள் தெரியாது. சிலர் சரியாக உச்சரிக்கவே மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது போலத்தான், அவர்களும் சொல்வார்கள். சங்கரபகவத் பாதர் இது விஷயமாக

    'வித்வத்வம் அஸ்மாத்பரம்'

    என்று கூறியுள்ளனர். 'நான் எந்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்? இதன் பொருள் என்ன? பொருள் புரியாமல் நான் எதை எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேனே?' என்று உணர்ந்து ஒருவன் தான் சொல்லும் மந்திரத்தின் பொருளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயல வேண்டும்.

    விவாகம் நடக்கையில் அதை நடத்தி வைக்கும் புரோகிதர் மணமக்களைப் பார்த்து, இந்த மந்திரங்களையெல்லாம் சொல்லுங்கள்! என்று கூறுவார். மணமக்களோ மந்திரங்களைச் சொல்லாமல், பேசாமல் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். அதனால் - மணமக்கள் சொல்லாத காரணத்தால், அவர் தனக்குத்தானே திருமணம் செய்து வைத்துக் கொண்டது போல ஆகிவிடும். மந்திரங்களைச் சொல்லாமல் விட்டதனால், மணமக்கள் இருவருக்கும் எந்தவிதமான பிரதிக்ஞையும் கிடையாது. அதனால் தாம்பத்தியத்தில் அந்த மந்திரங்களை மீறி நடப்பதனால் எந்தவிதமான தோஷமும் கிடையாது என்றும் ஆகிவிடுகிறது. ஏனென்றால் அவர்கள் மந்திரங்களின் அர்த்தத்தை உணர்ந்து ஏற்றுக் கொள்ளவே இல்லையே?

    ‘அக்கினி சாட்சியாக மகாஜனங்களின் முன்னிலையில் இத்தகைய பிரதிக்ஞையைச் செய்துவிட்டேன். ஒருவருக்கொருவர் துரோகம் நினைப்பது நியாயமே இல்லை!' என்ற பயமும் கட்டுப்பாடும் வரவேண்டுமானால், மந்திரங்களின் பொருள் ஒருவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இவையெல்லாம் இல்லாமல் வெறும் சாட்சியாகத் திருமணத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் மணமக்களுக்கு அதன் பலன்கள் கிடைக்காமற் போய்விடும்.

    எது அறிவுடனும், சிரத்தையுடனும், தியானத்துடனும் செய்யப்படுமோ அதுதான் அந்த அறிவில்லாமல் செய்யப் பட்டதைக் காட்டிலும் மிக்க பயனைத் தரவல்லது. பிற மொழியில் பார்த்தவர்கள், காட்சிகள் அருமையாகப் படம் எடுக்கப்பட்டிருந்தன. நடிப்பு நன்றாக இருந்தது! என்று மட்டும் சொல்லுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் அதேசமயம் அந்த மொழி தெரிந்திருந்தால் அவர்கள் வசனத்தையும், கதையின் நுட்பங்களையும் புரிந்து கொண்டு ரசித்திருக்க முடியும். சிறு விஷயங்களுக்கே நாம் செய்யும் செயல்களின் அர்த்தம் தெரிந்திருந்தால் நல்லது என்று இருக்கும்போது, மந்திரங்களுடைய பொருளை நாம் சரிவரக் கேட்டுத் தெரிந்து கொண்டு - புரிந்து கொண்டு செய்வதனால் நிறைய நற்பலன்கள் நிச்சயமாக உண்டாகும்.

    -ஜகத்குரு ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகள் 'மனிதப்பிறவியும் மற்ற அரிய தகுதிகளும்' என்ற கட்டுரையிலிருந்து

    பக்திமார்க்கத்தில் ஈடுபடுவோருக்குத்தான் சோதனைகள் அதிகமாக வருகின்றன. நெறியுடன் வாழ நினைப்பவர்களுக்குத்தான் சிரமம் அதிகமாக இருக்கிறது. கடவுள் ஏன் அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதில்லை?

    எம். சிவஞானம்

    தென்காசி

    உலோகங்களில் மிகவும் தூய்மையானது தங்கம். அதுவே விலைமதிப்பிலும் மிக உயர்ந்தது. அதைத்தான் நகை செய்வதற்காக நெருப்பில் போட்டு உருக்கி, சுத்தியால் தட்டி, நீட்டி, வளைத்துச் சரிப்படுத்துகிறார்கள். பயிர்களில் மிக இனிமையானது கரும்பு. அதைத்தான் நாம் நசுக்கிக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக் காய்ச்சுகிறோம். நல்ல பொருள்களுக்கு எப்போதும் இப்படிப்பட்ட அனுபவம் உண்டாவது வழக்கம். ஆனால் அதனால் நன்மையே விளையும் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பாண்டவர்கள், வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டார்கள். ஆனால், அதற்காக அவர்கள் சலித்துப் போகவில்லை. தாயின் சொற்படி நடந்து, பகவான் கிருஷ்ணன் காட்டிய வழியைப் பின்பற்றி வாழ்க்கையை நடத்தினார்கள். தொடர்ந்து துன்பங்கள் வந்தபோதும் நெறியை விட்டு மாறவில்லை. பீஷ்மர் குருக்ஷேத்திரத்தில் அம்புகளின் மீது மரணப் படுக்கையில் இருந்த போது கண்ணீர் வடித்தார். பிதாமகரே, தாங்கள் ஏன் கண்ணீர் வடிக்கிறீக்கள்? என்று கேட்டான் அர்ஜுனன். நல்லவர்களாகிய நீங்கள் (பாண்டவர்கள்) இதுவரை பட்ட சிரமங்கள் எல்லாம் என்னுடைய மனத் திரையில் தெரிகின்றன. அதனால் நான் கண்ணீர் வடிக்கிறேன். ஆனால் இன்னொன்றும் எனக்குப் புரிகிறது. நல்லவர்களுக்கு ஆண்டவன் எப்போதும் கூடவே துணை இருப்பான். பதவி ஆசையோ, பணத்துக்கான மோகமோ இன்றி அவர்கள் வாழும்போது, வாழ்க்கையின் நன்மைகளை ஆண்டவன் அவனாகவே முடிவில் கொண்டுவந்து கொடுப்பான். இதை நான் இந்த வேளையில் உணருகிறேன் என்றார் பீஷ்மர்.

    பீஷ்மர் சொன்ன வார்த்தைகளை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவன் சோதனைகளைக் கொடுப்பது, நம்முடைய மனத்தைப் பக்குவப்படுத்தி நல்ல பண்புகளை உண்டாக்குவதற்காகத் தான். அந்த முயற்சியில் நாம் கடவுளை நோக்கி ஓர் அடிவைத்து நடந்தால், அவர் பத்து அடிகள் வைத்து நம்மை நோக்கி வருவார். பக்தர்களான நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோரின் வாழ்க்கைக் கதைகள் இதையே நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.

    - பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா 'Voice of the Avatar' என்ற நூலிலிருந்து

    பூஜையின் போது நாம் கைகளைக் குவிப்பதற்கும், கீழே விழுந்து வணங்குவதற்கும் பொருள் என்ன?

    ப. சுந்தரவடிவேலு

    இராணிப்பேட்டை

    நமது வலது கரம் உணவு உண்ணுதல், எழுதுவது போன்ற நல்ல காரியங்களுக்குப் பயன்படுகிறது. நமது இடது கரமோ ஈனமான காரியங்களுக்குப் பயன்படுகிறது. ஆனால் ஆண்டவன் முன்னிலையில் உயர்வு தாழ்வு இல்லை. எல்லோரும் சமம். அதை உணர்த்தவே, இரண்டு கைகளையும் ஒன்றாகச் சேர்த்து ஆண்டவனைப் பார்த்துக் கும்பிடுகிறோம்.

    கடவுள் எல்லாவற்றையும் தன்னிடம் விட்டுச் சரண் அடைந்து நிற்பவர்களிடம் கருணை காட்டுகிறார். அவர்களுக்கு உதவ மனம் இளகி முன்வருகிறார். 'என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை. எல்லாம் உன்னுடையவை. உன்னுடைய ஆளுகைக்கு என்னை விட்டு விட்டேன்!' என்று உடம்பைத் தரையோடு தரையாகக் கிடத்தி வணங்கி, எல்லாச் செயல்களும் ஒடுங்கி, பணிவின் அடையாளமாக இருக்கும் நிலையில் ஆண்டவன் நம்மை ஏற்றுக் கொண்டு அருள்புரிய முன்வருகிறான்.

    காலை வெயிலில் உடம்பில் சூடு முழுவதுமாக உறைக்கும். நடுப்பகலிலோ தலையில் மட்டுமே வெயில்படும். அப்போது தலைக்கு மட்டும் மறைப்பு இருந்தால் போதும். பண்படாத மனத்துக்குப் பலவிதத்திலும் பாதுகாப்பு தேவை. பண்பட்டு உயர்ந்த உள்ளத்துக்கு ஆண்டவன் அருள் மட்டும் இருந்தால் போதும். இப்படி மனத்தை உயர்த்திக் கொள்வதைக் காட்டும் அடையாளமாகவே இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயர்த்திக் குவித்து ஆண்டவனை வணங்குகிறோம்.

    - -திருமுருக கிருபானந்த வாரியார் பெசன்ட் நகர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நிகழ்த்திய இராமாயண உரையிலிருந்து

    காளிதேவியை எல்லோரும் வணங்கலாமா? சுடுகாட்டில் தாண்டவமாடும் விதமாகக் காளிதேவியை வைத்து வணங்குவது எதற்காக?

    என். வைத்தீஸ்வரன்

    கும்பகோணம்

    காளிதேவியை வணங்க விரும்பும் ஒருவன் வீராதி வீரனாக இருக்க வேண்டும். பயங்கொள்ளிகளுக்கும், எதைக் கண்டாலும் மருளுபவர்களுக்கும் அவள் தன் மேலான அருளைக் காட்ட இசைய மாட்டாள். அவள் சம்காரத் தொழிலைச் செய்து கொண்டிருக்கிறாள். ஆகையால் அத்தகைய அன்னையை வழிபட விரும்புகிறவன் வாழ்க்கையைத் திரணம் என்று கருத வேண்டும். எப்படியாவது உயிர் வாழ்ந்திருந்தால் போதும் என்று விரும்புபவனுக்கு அன்னையின் அருள் ஒருக்காலும் சித்திக்காது. வாழ்ந்திருக்கும் போதே தன்னை மாண்டு போனவனாக வைத்துக் கொண்டு, ஒரு மேலான லட்சியத்துக்காகத் தன்னை ஒப்படைத்துவிடக்கூடிய வீரர்களுக்கே காளித்தாய் அருள் சுரக்கிறாள்.

    தேவி தாண்டவமாடும் இடம் சுடுகாடு. மனிதன் தனது மனத்தைச் சுடுகாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஆசை, காமம், வெகுளி முதலியவை வந்து பஸ்பமாகிவிட வேண்டும். இதைக் காட்டவே அன்னை சுடுகாட்டில் ஆடுகிறாள். மயானத்தில் கோரக் காட்சிகளுக்கு நடுவில் அற்பமான உலக ஆசைகளுக்கு இடம் இல்லை. பராசக்தியின் பீடத்தில் தனது உலக ஆசைகளைப் பலியாக ஒப்படைப்பவனது உள்ளமே சுடுகாடாகி விடுகிறது. அப்போது அந்த மனத்திலும் அன்னையின் தாண்டவத்தைக் காணலாம். காலாந்தரத்தில் அழியும் அற்ப வாழ்வை இப்பொழுதே உவகையுடன் காளி தேவிக்கு அர்ப்பணம் செய்பவர்களுக்கு நித்தியானந்தப் பெருவாழ்வு வாய்க்கும்.

    - சுவாமி சித்பவானந்தர் 'கடவுளின் வடிவங்கள்' என்ற நூலிலிருந்து

    நாம் உலக வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெறுவதற்குப் பயன்படுவது உடல். அதைப் பொய்யென்றும், இல்லையென்றும் சொல்லி இழிவாக நினைப்பது ஏன்? உலக இயலில் வாழும் ஒருவன் எப்படி இதைக் கடைப்பிடிக்க முடியும்?

    டி. சிங்காரவேலு

    ஆரணி

    எப்போதும் குறைவில்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றுதான் மனிதன் நினைக்கிறான். சந்தோஷம் என்பது இரண்டு விதம். கொஞ்ச நாழிகை இருப்பது ஒரு விதம். எப்போதும் குறையாமல் இருப்பது இன்னொரு விதம். கொஞ்ச நேரம் இன்பம் கொடுப்பது

    Enjoying the preview?
    Page 1 of 1