Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manasirai
Manasirai
Manasirai
Ebook148 pages58 minutes

Manasirai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி (நமது தாய்நாடு சுதந்திரம் பெற்ற தினம்) எனது முதல் சிறுகதை "காவேரி” மாத இதழில் வெளிவந்தது. அதற்கும் பின் அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

சுமார் 20 நாவல்கள், 40 குறுநாவல்கள், 1000 சிறு கதைகள், 1500 கட்டுரைகள் ஆகியவை வெளிவந்துள்ளன.

கற்பனை இலக்கியம், ஆன்மிகம், மருத்துவம், மனோ தத்துவம், பயணக் கட்டுரை, இலக்கியம், சுயசரிதம் போன்ற துறைகளில் எண்பத்தைந்து புத்தகங்கள் எழுதி உள்ளேன்.

"இலக்கியச் சிந்தனை” எனது சிறுகதையைப் பாராட்டிப் பரிசு அளித்திருக்கிறது. அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1998ம் ஆண்டு எனது ஐம்பத்தோர் ஆண்டு தமிழ் எழுத்துப் பணியைப் பாராட்டி விழா நடத்திக் கெளரவித்தது.

பத்திரிகை உலகில் எஸ்.எஸ். வாசன், கி.வா. ஜகந்நாதன், நா. பார்த்தசாரதி, மணியன், ரா. கணபதி போன்றவர்களுடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். ஆன்மீக உலகில் காஞ்சி மகாப் பெரியவர்கள், ஜகத்குரு ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள், அஹோபில மடம் 44வது மடம் ஜீயர் சுவாமிகள், உடுப்பி பேஜாவர் மடசுவாமிகள், சுவாமி சின்மயானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகியோருடன் இருந்து ஆன்மிகப் பணிகளை ஆற்றி ஆசிகளைப் பெறும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. காஞ்சி மகா பெரியவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை (ஜகம் புகழும் ஜகத்குரு), சுவாமிகள் 100வது ஆண்டு தொடக்கத்தில் தொகுத்து எழுதி உள்ளேன். காஞ்சி காமகோடி மடத்தின் ஆசிகளுடன் இதை ஒமர்ந்தூரில் அன்றைய பாரதப் பிரதமர் திரு. பி.வி. நரசிம்மராவ் வெளியிட்டார்கள். ஆன்மிகத் துறையில் சுமார் 200 ஆன்மிகப் பெரியோர்களைத் தரிசித்து, அவர்களுடன் உரையாடல் நடத்தி “ஞானமன்றம்” என்ற தலைப்பில் ஞானபூமியில் சுமார் 20 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி உள்ளேன்.

2003-04 ம் ஆண்டுகளில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் நூல்கள் ஆறு (தெய்வவாக்கு - 1, 2, 3, பாகங்கள், அருளுரைகள் 1, 2 பாகங்கள். அருளாசிக் கட்டுரைகள் -1) என்னால் தொகுக்கப்பட்டு ஸ்வர்ண ஜெயந்தி பீபிரோகண விழாவின் போது வெளியிடப்பட்டது. அப்போது பூஜ்யஸ்ரீ கவாமிகள் எனக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்து உள்ளார்கள்.

சுமார் 2000 வாசகர்கள் கேள்விகளுக்கு, "இந்து மதம் பதிலளிக்கிறது”, "மகான்கள் பதிலளிக்கிறார்கள்" என்ற தலைப்புகளிலும், “அமைதியான வாழ்க்கைக்கு ஆன்மிக வழிகாட்டி” என்ற தொகுப்பிலும், ஞானியர்களின் பதில்கள் மூலம் தெளிவுரை அளித்துள்ளேன்.

சுமார் 100 மருத்துவ நிபுணர்களைப் பேட்டி கண்டு கட்டுரைகளைத் தொகுத்துள்ளேன்.

சுவாமி கமலாத்மானந்தர், கி.வா.ஜ, வானதி திருநாவுக்கரசு ஆகியோர் என்னுடன் பழகிய நண்பர்கள்.

பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபாவின் தொண்டனாகக் கடந்த நாற்பது ஆண்டுளாகப் பணியாற்றி வருகிறேன். அவரது அருளுரைகளைத் தொகுத்துள்ளேன். சமுதாய நலப் பணிகளிலும் பங்கு பெற்றுள்ளேன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணி, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை உருவாக்கும் பணி ஆகியவற்றில் தலைமை இஞ்சினீயர் என்ற முறையில் பணியாற்றி நல்லாசிகளை, பரிசுகளைப் பெற்றுள்ளேன்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127504484
Manasirai

Read more from Lakshmi Subramaniam

Related to Manasirai

Related ebooks

Reviews for Manasirai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manasirai - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    மனச்சிறை

    Manasirai

    Author:

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    S. Lakshmi Subramaniam

    For more books

    http://pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளக்கம்

    1. தோற்றம்

    2. தைரியம்

    3. தோல்வி

    4. விழிப்பு

    5. வேளை வந்தது

    6. நிழல்

    7. இணைப்பு

    8. மனச்சிறை

    9. தவிப்பு

    10. ராஜி

    1. தோற்றம்

    ஜன்னல்புறமாக வந்த சுந்தரி கீழே சிரிப்பொலி கேட்டதும் ஒரு கணம் அங்கேயே நின்றாள்.

    காப்பிக்குச் சர்க்கரை போடுகிற போது உனக்கு எங்கே ஞாபகம் ஜானகி?

    ஏன் கசக்கிறதோ?

    உன்கையால் போட்டது கசக்குமா என்ன? நீயேகுடித்துப்பார். பானகம் மாதிரித்தான் இருக்கிறதுஎன்று கையில் கோப்பையோடு அவளை நெருங்கினான் நாராயணன்.

    தெரிகிறது! தெரிகிறது! என்று பின்னால் நகர்ந்தவளைப் பிடித்துக் கோப்பையை அவள் உதட்டில் வைத்து அழுத்தினான்.

    போதுமே உங்கள் சமர்த்து! யாராவது பார்க்கப் போகிறார்கள். வெட்கக்கேடு!என்றுஜானகி, அவன் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு உள்ளே ஓடினாள்.

    சட்டென்று அவர்கள் பார்வையிலிருந்து விலகி உள்ளே திரும்பினாள் சுந்தரி. காய்கறி நறுக்க அரிவாள்மணையுடன் உட்கார்ந்த போது அவளிடமிருந்து ஆழ்ந்த பெருமூச்சொன்று வெளிப்பட்டது.

    ஜானகிக்குக் கல்யாணமாகி மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். கிட்டத்தட்ட அவள் வயது தான் இருக்கும் சுந்தரிக்கும். அவளைப் போலவே புதுக்குடித்தனம் செய்ய அந்த வீட்டின் ஒரு பகுதிக்கு வந்தவள் தான் ஜானகியும். ஆனால் வாழ்க்கையின் தரத்திலும் அமைப்பிலும் ஏறக்குறைய ஒத்திருந்த அந்த இருவருடைய மணவாழ்க்கையில் எவ்வளவு வித்தியாசம்? ஒப்பிட்டுப் பார்க்க முடியாத எத்தனை பேதம்?

    அவர்கள் அறை சற்றுத்தூரத்தில் இருந்த போதிலும் கொஞ்சம் சாதாரணமாகப் பேசினால் காதில் விழாத தூரத்தில் இல்லை. இளம் தம்பதிகளுக்குப் பக்கத்தில் சிலர் இருப்பதை அநேகமாக மறந்துவிடுவது அவர்கள் இயல்பே அல்லவா?

    போங்கள்; இதென்ன விளையாட்டு? குழந்தை மாதிரி! பார்த்தால் தான் ரொம்ப சாது! என்று ஜானகி மகிழ்ச்சியோடு சீறுவாள். அரைகுறையாக அது சுந்தரியின் காதில் விழும். அவள் பார்வை அவளையறியாமல் வெளி வராந்தாவின் புறம் திரும்பும். அங்கே சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து அமைதியாகப் புத்தகம் படித்துக் கொண்டிருப்பான் ராகவன். கீழே அந்த அறையில் பொங்கிய இன்பம் கலந்த காற்று அவளிடம் வந்த போது, அவள் மனத்தில் சொல்லொணாத வேதனையை எழுப்பும்.

    அவர்கள் இல்வாழ்க்கையில் எந்தக் குறைவும் இல்லை. இருவருக்கும் இடையே எந்த வேற்றுமையும் இல்லை. அப்படி இருந்தாலும் அவன் அவள் வழியை விட்டு ஒதுங்கிவிடுவான். அதை விட அவன் அவளோடு சண்டை போட்டிருக்கலாம். வம்புக்கு இழுத்து விவாதித்திருக்கலாம். அவள் கோபத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கலாம். அத்தகைய நிகழ்ச்சிகள் எதுவுமே அவர்கள் வாழ்க்கையில் இல்லை. மேடு பள்ளமில்லாத படுகையில் ஓடும் சிற்றாறு போல, அவர்கள் வாழ்க்கை சலனமில்லாமல் அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது. வேறுபட்ட சுவையில்லாத உணவைத் தினமும் சாப்பிடுவது போல, அந்த வாழ்க்கை அவளால் அனுபவிக்க முடியாமல் அலுத்துப் போய்விட்டது.

    ஞாபகம் நழுவிப் போனதில் கை பிசகி அரிவாள்மணை விரலை அறுத்துவிட்டது. பொங்கிவந்த ரத்தத்தைக் கூடத் துடைக்க மனமின்றிக் கட்டையை மட்டும் ஒதுக்கி விட்டுக் குத்திட்டு உட்கார்ந்து கொண்டாள் சுந்தரி.

    முதல்நாள் ஜானகி அங்கே வந்திருந்தாள். பிற்பகல் நேரம். சுந்தரி வாசற்படியில் தலைவைத்தபடி படுத்திருந்தாள். கையில் இருந்த புத்தகத்தில் மனம் ஓடவில்லை.

    சுந்தரி! இன்றைக்குச் சாயங்காலம் பால் வந்தால் பசும்பால் இரண்டு ஆழாக்கு வாங்கி வையேன். நான் வந்து வாங்கிக் கொள்கிறேன்.

    குரல் கேட்டு எழுந்து உட்கார்ந்தவள் ஒரு கணம் ஜானகியையே அயராமல் பார்த்தாள். தலையில் கட்டு மல்லிகை. தேய்த்து அலம்பிய முகத்துக்குப் பவுடர் மெருகு கொடுத்தது. வாயில் தாம்பூலச் சிவப்பு. அவள் மனத்தில் பொங்கிய குதூகலம் அவள் நடையின் துள்ளலில் தெரிந்தது.

    இன்றைக்கு எங்கே போகப் போகிறாய்?

    காலையில் ‘சினிமாவுக்குப் போவோமா’என்றுகேட்டார். ‘ஆகட்டும்’என்று சொன்னேன். ‘ஒரு மணிநேரம் முன்னாலேயே வந்துவிடுகிறேன். தயாராக இரு’என்றார். பால் வருகிறவரை காத்திருக்க நேரமில்லை.அதுதான் உன்னிடம் சொல்லிவிட்டுப் போகலாமென்று வந்தேன்.

    அவள் குரலில் அடக்க முடியாத பெருமிதம். சுந்தரி கவனிக்க வேண்டுமென்றே அவள் அதைப் பகட்டாகக் குரலில் காண்பித்தது போலக் கூட இருந்தது.

    என்ன படமோ?

    அவள் படத்தின் பெயரைச் சொன்னாள். வெகுநாட்களாக ஓடிக்கொண்டிருந்த படம் தான் அது.

    நீ அதைப் பார்க்கவில்லை?

    ஊருக்குப் போயிருந்த போது பார்த்தேன்.

    பின்னே?

    ஜானகி குறும்பாக அவளைப் பார்த்தாள். என்ன அசட்டுத் தனமான கேள்வி இது? சினிமாவுக்காகவா அவர்கள் போகிறார்கள்? வேண்டுமென்று தான் கேட்கிறாளோ?

    சுந்தரி புரிந்துகொண்டாள். மேலே ஒன்றும் பேசாமல், அவள் கொடுத்த பாத்திரத்தை வாங்கி வைத்துக்கொண்டாள்.

    ராத்திரி வர கொஞ்சம் நேரம் ஆகும். நடுவில் வீட்டுத் தாழ்ப்பாளைக் கவனித்துக்கொள். படி இறங்கிப் போனபடியே அவள் பேசிய போது சுந்தரியின் மனந்தான் அவர்கள் உலகத்திலிருந்து வெகுதொலைவில் விலகிப் போய்விட்டது போலத் தோன்றியது.

    மணி எட்டு. ராகவன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்துவிட்டான். காரியாலயத்துக்குப் போக நேரமாகிவிட்டது. அவள் அவனுக்குக் குளிக்க வெந்நீர் எடுத்து வைக்க வேண்டும். நினைவுகளை உதறிக் கொண்டு எழுந்தாள்.

    அவன் குளித்துவிட்டு வருவதற்குள் இலைபோட்டுப் பரிமாறி இருந்தது. குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டான் ராகவன். மனத்தில் என்னதான் ஞாபகமோ?

    இன்றைக்குச் சாயங்காலம் படத்துக்குப் போகலாமா?என்று அவள் பரிமாறியபடி கேட்டாள். அவனிடமிருந்து பதில் ஏதும் இல்லை.

    காதில் விழுந்ததா?என்று மறுபடி அவள் கொஞ்சம் உரத்துக் கேட்டதும், அவன் சட்டென்று விழித்துக்கொண்டது போல் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் முன்னால் சொன்னதை அவன் காதில் வாங்கவில்லை என்று அவன் முகத்திலிருந்து கண்டதும் சுந்தரியின் முகம் சிவந்தது.

    என்ன சொன்னாய் சுந்தரி? அவன் குரலில் இருந்த நிதானம் அவளைப் பொறுமை இழக்கச் செய்தது.

    எப்போது பார்த்தாலும் என்ன யோசனை?

    அவன் பதில் சொல்லவில்லை. சிரித்தபடி கொஞ்சம் மோர் கொண்டு வா! என்று மட்டும் சொன்னான்.

    மறுபடியும் அவனிடம் இன்றைக்கு நாம் சினிமாவுக்குப் போகலாமா? என்று கேட்ட போது அவளுக்கே வெட்கமாக இருந்தது.

    என்ன விசேஷம்?

    அவன் கேள்வி அவளுக்கு எரிச்சலாக இருந்தது. அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், படத்தின் பெயரை மட்டும் சொன்னாள்.

    நாளைக்குப் போகலாமே?

    ஏன்?

    இன்றைக்கு எனக்குக் காரியாலயத்தில் கொஞ்சம் வேலை இருக்கிறது. வர நாழியாகும்.

    நாளைக்கு அந்தப் படம் கிடையாதே.

    அவன் கொஞ்ச நேரம் யோசனை செய்தான். அவள் ஆவலோடு காத்திருந்தாள்.

    ஒன்று செய்யேன். பக்கத்து வீட்டில் உன் தோழியைக் கூப்பிட்டுக் கொண்டு போயேன்.

    அவள் அதற்குப் பதில் சொல்லவில்லை.

    சாப்பிட்டு விட்டு உடையணிந்து புறப்படும் போது அவன், நீ போகிறதானால் வீட்டுச் சாவியை எங்கே கொடுத்துவிட்டுப் போகிறாய்?என்று கேட்டான்.

    நீங்கள் நேரே வீட்டுக்கு வரலாம். நான் எங்கேயும் போகவில்லை.

    அவன் ஏதாவது கேட்பான் என்று அவள் எதிர்பார்த்தாள். அவளைச் சமாதானப்படுத்தவாவது முயலுவான் என்று எண்ணினாள். அவன் எதுவுமே பேசவில்லை. படி இறங்கியபடி நான் வரக்கொஞ்சம் நேரமாகலாம். எனக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். நீ சாப்பிட்டு விடு என்று மட்டும் சொன்னான். அந்தக் குரலில் இருந்த அமைதியைக் கண்டு அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

    ராகவன் அப்படி இருப்பானேன்? மொட்டின் மலர்ச்சியில் அவிழும் மணம் போன்று, இல்வாழ்வின் தொடக்கத்தில் இருக்க வேண்டிய அந்த இன்பம், ஏன் அவர்களிடையே இல்லை? அளவற்ற ஆவலில் ஒன்றையொன்று கவ்விக் கலக்க வேண்டிய அவர்கள் உள்ளங்கள், ஏன் அப்படிச் சிதறித் தூர விலகி இருந்தன? நேச மயக்கத்தில் திளைத்துச் சுவைக்க இயலாமல் திகட்டிப் போக வேண்டிய ஆழ்ந்த இனிமை, அவர்கள் மணவாழ்வில் ஏன் இல்லாமற் போய்விட்டது?

    ஒரு வாரம் ஆகி இருக்கும். இருட்டிவிட்டது. ராகவன் இன்னும் திரும்பவில்லை. தனியாகக் கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள் சுந்தரி. கீழே ஜானகியும் அவள் கணவனும் சிரித்தது அவள் காதில் விழுந்த போது அவளுக்கு எரிச்சலாக இருந்தது. அயலார் இருப்பது கூட நினைவில்லாமல்

    Enjoying the preview?
    Page 1 of 1