Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tharaiyil Vizhundha Meengal
Tharaiyil Vizhundha Meengal
Tharaiyil Vizhundha Meengal
Ebook126 pages47 minutes

Tharaiyil Vizhundha Meengal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்று வருண் படத்தின் நூறாவது நாள் விழா. அதைக் கொண்டாட சவேராவில் பார்ட்டி கொடுத்தார் வர்மா. அன்றும் ஷாலினி வரவில்லை. தனிமையை நொந்து கொண்டு வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தபோது வெகு நாட்களுக்குப் பின் போன் பண்ணி "ஹலோ" என்றாள் பூரணி.

வருண், பூரணி, ஷாலினி இவர்கள் மூவருக்குமான தொடர்பு என்ன? வருண் எதற்காக தனிமையை அனுபவிக்கிறான்? வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateNov 14, 2023
ISBN6580123909413
Tharaiyil Vizhundha Meengal

Read more from Indhumathi

Related authors

Related to Tharaiyil Vizhundha Meengal

Related ebooks

Reviews for Tharaiyil Vizhundha Meengal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tharaiyil Vizhundha Meengal - Indhumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தரையில் விழுந்த மீன்கள்

    Tharaiyil Vizhundha Meengal

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indhumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    அமைதியாய் இருந்தது வீடு. பேச்சுச்சத்தம், சிரிப்புச்சத்தம் எதுவுமில்லாமல் இருந்தது. எப்போதாவதுதான் வீடு அந்தமாதிரி இருப்பது வழக்கம். சீட்டு விளையாடும் பெண்களின் சத்தமில்லாமல், பார்ட்டி எதுவுமில்லாமல் இருக்கிற நாட்கள் குறைவு. அப்பா ஊரில் இருக்கிற நாட்கள் எல்லாம் நண்பர்கள் வருவார்கள். சிரிப்புச் சத்தத்துடன், சியர்ஸ் சொல்லி தம்ளர்களை இடிப்பார்கள். மணிக்கணக்கில் பேசுவார்கள். ஊரில் இல்லாதபோது அம்மா சினேகிதிகளுடன் வருவாள். சீட்டு விளையாடுவாள். அப்போதெல்லாம் ஒரு நாளாவது வீடு நிசப்தமாக இருக்காதா என்று நினைத்துக்கொள்வாள் ஷாலினி. அப்பாவிடம் சொன்னால் கேட்கமாட்டார். வீட்டில் இடமா இல்லை ஷாலி. மாடிக்குப் போயேன். சத்தமில்லாமல் இருக்கும்! என்பார். மாடியிலும் அந்தச் சிரிப்பு சத்தமும் பேச்சுச்சத்தமும் கேட்கும் என்று அப்பாவுக்குத் தெரிந்தாலும் அவர் அதைத்தான் சொல்லுவார். அப்பா இல்லாத நாட்களில் அவள் அம்மாவிடம் கெஞ்சுவாள். மற்ற எந்த வீட்டிலும் நாள்முழுவதும் சீட்டு விளையாட முடியாது. நிறையக் குழந்தைகள் இருக்கும். மற்ற வடஇந்திய நண்பர்கள் வீட்டில் விளையாட முடியாது என்பாள் அம்மா. ஆனால் ஷாலி கேட்டால் என்றைக்காவது ஒருநாள் சீட்டு விளையாடுவதை நிறுத்திக்கொள்வாள் அவள். அன்றும் ஷாலினி கேட்கவே தன் சினேகிதி வீட்டிற்குக் கிளம்பிப்போயிருந்தாள்.

    அந்த நிசப்தம் ஷாலினிக்குப் பிடித்திருந்தது. போனி எம்மின் லவ் ஃபார் ஸேல் ரெகார்ட் ப்ளேயரில் போட்டாள். ‘லவ் ஃபார் ஸேல்’ என்று சன்னமான குரலில் பாடினாள். அன்று ரொம்பவும் மனசு சந்தோஷமாக இருந்ததற்கு நிசப்தம் மட்டும் காரணமாக இருக்கமுடியாது என்று பட்டது. ஷூட்டிங் எல்லாம் முடிந்து படம் வெளிவரப்போவதும் காரணமாக இருக்கமுடியாது. வெளிவரப்போவது அவளின் முதல் படம்தான். அதில்தான் அவளின் எதிர்காலமே இருக்கிறது. படம் நிச்சயமாக நூறு நாள் ஓடும் என்று எல்லோருமே சொல்லியிருந்தார்கள். பிரிமியர் பார்த்தவர்கள்கூட அவளைப் பாராட்டிவிட்டுத்தான் போயிருந்தார்கள். படத்தின் முடிவுதான் சரியில்லை என்று அபிப்ராயப்பட்டார்கள். அதில் ஹீரோ இறப்பதற்குப்பதில் திருமணம் செய்து கொள்கிறான் போலிருக்க வேண்டும் என்றார்கள். டைரக்டரும் முடிவை மாற்ற விரும்பினார். ஸ்லோமோஷனில் ஹீரோவும் ஹீரோயினியும் பீச் மணலில் ஓடிவந்து கை கோத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    அன்று காலையில்தான் அந்தக்காட்சியை எடுத்தார்கள். லாங் ஷாட்டில் அவள் ஹீரோவின் பெயரைக் கத்திக்கொண்டே வர வேண்டும். ஹீரோ வருணும் அவளின் பெயரைக் கத்திக்கொண்டே வரவேண்டும். ஸ்லோமோஷனில், அருகில் வந்ததும் அவளைத் தூக்கி ஸ்லோமோஷனில் ஒரு சுற்று சுற்றியதும் படம் முடிவடைய வேண்டும் என்று சொல்லியிருந்தார் டைரக்டர் வர்மா.

    அவள் சிகப்பு மாக்ஸியில் ஓடி வந்தாள். அவன் கிஸ்மீ பனியனில் வந்தான். அவளைத் தூக்கி ஒரு சுற்றுச் சுற்றி நிறுத்தினான். அன்று அவனின் பிடிப்பு வித்தியாசமாக இருந்தமாதிரி அவளுக்குப் பட்டது. பலமாக இருந்தமாதிரி பட்டது. ஷாட் முடிந்ததும் மெதுவான குரலில், நிஜ வாழ்க்கையிலும் நாம் இருவரும் இதேமாதிரி இணைந்தால் நான் சந்தோஷப்படுவேன் ஷாலி! என்றான். அவள் அதிர்ச்சியடைந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள். வர்மா கைதட்டிக்கொண்டே அவளருகில் வந்தார். குட் ஷாலி. நீ சட்டென்று நிமிர்ந்து வருணைப் பார்த்தது நன்றாக இருந்தது! என்றார். அவளின் இருதயம் வேகமாக அடித்துக்கொண்டது. வருணைத் திரும்பிப் பார்க்காமல் தன் காரை நோக்கி நடந்தாள். வீடு வரும்வரை அவன் சொன்ன வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

    வருண்,

    அவனைச்சுற்றி எப்போதும் கூட்டம் இருக்கும். கல்லூரி மாணவிகள் கூட்டம், ஆட்டோகிராப் வாங்குகிற கூட்டம், அவனுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்கிற கூட்டம், தினமும் அவனுக்குக் கடிதங்கள் வரும். ஐ லவ் யு கடிதங்களாக வரும். போட்டோ கேட்டு வரும். ஷாலினியும் அவனுக்குக் கடிதம் எழுதி போட்டோ கேட்டிருந்திருக்கிறாள். அதை அலமாரியில் ஒட்டிவைத்து அழகு பார்த்திருக்கிறாள். ஆனால், அவனுடன் சேர்ந்து கதாநாயகியாக நடிப்பாள் என்று எண்ணியதில்லை. டைரக்டர் வர்மா வந்து கேட்டபோது அவள் தயங்கினாள். அதுவும் வருணுடன் நடிக்க வேண்டும் என்று தெரிந்தபோது மறுத்தாள். அவர் எவ்வளவு பெரிய நடிகர்! அவரோட என்னை நடிக்கச் சொல்கிறீர்களே! என்று வர்மாவிடம் கேட்டாள். எல்லோரும் நடிப்பில் பழகியா சினிமா உலகிற்கு வருகிறார்கள்? உன்னிடமிருந்து நடிப்பை வரவழைப்பது என் பொறுப்பு. நீ கவலைப்பட வேண்டாம்! என்று அவளை புக் பண்ணிக்கொண்டு போனார்.

    அடுத்த ஒரு வாரத்தில் ஷூட்டிங் ஆரம்பமாயிற்று. சாதாரணக் காதல் கதை. முழுக்க முழுக்க கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தினார்கள். ஒவ்வொரு காட்சியையும் வருண் டைரக்டருடன் சேர்ந்து விளக்கினான். இரண்டு நாட்களில் ஷாலினிக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தான். ஒரு திரைப்படம் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதைப் பற்றிச் சொன்னான். நடிப்பு, டப்பிங், டைரக்‌ஷனைப் பற்றியெல்லாம் அக்கறையோடு சொல்லித் தந்தான். அவன் நடிக்கும் போதெல்லாம் மலைத்து நிற்பாள் ஷாலினி. நடிப்பு அவனின் கூடப்பிறந்ததோ என்று நினைத்துக்கொள்வாள். ரீடேக் எடுத்த அவனின் ஷாட் மிகவும் குறைவுதான். ஆனால், அவளின் ஒவ்வொரு ‘ரீடேக்’கின்போதும் அவன் அவளை ஊக்குவிப்பான். அவள் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்துக் காண்பிப்பான். அப்போதெல்லாம் அவ்வளவு சுதந்திரத்துடன் வருணுடன் பழகமுடிகிறது என்று நினைத்துக்கொள்வாளே தவிர, அவன் மனதில் அப்படியொரு சலனத்தை ஏற்படுத்திவிட்டோம் என்பது அவளுக்குப் புரியவில்லை.

    அந்த நேரத்தில் வீட்டு நிசப்தத்தில் ஒவ்வொன்றாக யோசித்துப் பார்த்தபோது அவளுக்கு எல்லாம் புரிந்தது. வருணின் செய்கைகளுக்குக் காரணம் தெரிந்தது. அவன் பேசின பேச்சுக்களின் அர்த்தமெல்லாம் புரிந்தது. கூடவே அதெல்லாம் நிஜம்தானா என்று தோன்றிற்று. அவன் பூரணியுடன் பழகியதெல்லாம் போலி வேஷமோ என்று எண்ணத்தோன்றிற்று.

    பூரணியும் அவன் படம் ஒன்றில்தான் அறிமுகமானாள். அதே வர்மாவின் டைரக்‌ஷன். அதிலிருந்து இரண்டு பேரும் சேர்ந்துதான் நடிப்பார்கள். வருண் தான் ஹீரோ. பூரணி ஹீரோயின். ‘செட்’டிலும் அவர்கள் அதேமாதிரிதான் நடந்து கொள்வார்கள். கொஞ்ச நாட்களில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கும் வந்திருந்தார்கள். விரைவில் திருமணம் நடக்கும் என்று நிறையப் பத்திரிக்கைகளில் பேட்டியும் தந்திருந்தார்கள்.

    இப்போது பூரணியிடம் என்ன குறைவு? ஏன் என்னை நாடி வந்திருக்கிறான் என்று யோசித்தாள் அவள். அதைத் தவிர நிறைய யோசித்தாள். அப்படி யோசிக்கவும் அவளுக்குப் பிடித்திருந்தது. அதற்கு என்ன காரணம்? நானும் உண்மையில் அவனைக் காதலிக்கின்றேனோ? இல்லையென்றால் அவன் சொன்னது என்னை ஏன் சந்தோஷப்படுத்த வேண்டும்? அவனையே ஏன் நான் நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்?

    ஹெல் வித் யு வருண்.

    என்னை ஏன் இப்படி அலைக்கழிக்கிறாய் வருண்? உன் மனதில் நான் எப்படி வந்து ஒட்டிக்கொண்டேன்? பூரணியிடம் இல்லாத நிறைவு என்னிடம் என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1