Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paravaigal Parakkindrana
Paravaigal Parakkindrana
Paravaigal Parakkindrana
Ebook189 pages1 hour

Paravaigal Parakkindrana

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராதா - ரகுவின் திருமணம் பல்வேறு எதிர்ப்புப்புகள் இருந்தாலும் அதை சமாளித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ரகு வேலை காரணமாக வெளிநாடு செல்ல வேண்டிய நிலை. அவளும் அவனுடன் செல்ல நினைக்கும்போது அவளால் போக முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த சூழ்நிலைதான் என்ன? இதனால் இவள் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் நிகழப் போகிறதா? இல்லை இவள் வாழ்க்கையே மாறப் போகிறதா? வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580123904050
Paravaigal Parakkindrana

Read more from Indhumathi

Related to Paravaigal Parakkindrana

Related ebooks

Reviews for Paravaigal Parakkindrana

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paravaigal Parakkindrana - Indhumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    http://www.pustaka.co.in

    பறவைகள் பறக்கின்றன

    Paravaigal Parakkindrana

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    சிலு சிலுவென்று அடித்த காற்றில் ஜன்னலின் மெல்லிய வெண்திரைகள் மேலே மேலே எழும்புகின்றன, நடுவில் கட்டிய குஞ்சத்தால் உப்பிக் கொண்டு வெண்குடையாய் நிற்கின்றன. ஜன்னலின் வெளியே கொட்டிக் கிடக்கும் வண்ண வண்ண மலர்கள் பெங்களூரின் வாடை காற்றில் மிதந்து வந்து மூக்கைத் துளைக்கின்றன. மேலே நீல நிற ஆகாயத்தில், பச்சையும் வெள்ளையுமாய் கூட்டங்கூட்டமாய் பறவைகள் பறக்கின்றன.

    ராதா மேலே அண்ணாந்து பார்த்தாள். பெரிதாக ஆரவாரமிட்டுக் கொண்டு பறக்கும் பறவைகள் எவ்வளவு நிச்சிந்தையாய் பறக்கின்றன, பற்றற்ற கர்ம யோகிகளைப் போல!

    அவளுக்கும் இந்த மாதிரி இறக்கைகள் முளைத்துவிட்டதனால்தான் கோளாறு வந்திருக்கிறது. முளைத்த வேகத்தில் பறக்க வேண்டும் என்று எண்ணினதற்காக வீட்டின் உள்ளே வாதம் நடக்கிறது. அவளுடைய சுயேச்சையான மனப்போக்கின் முடிவைக் கண்டு பதைபதைக்கும் ஆத்திரப்படும் நெஞ்சங்களின் அவசரக் கூட்டம் உள்ளே நடக்கிறது. அவர்களுடைய பேச்சில் ஆதரவைவிடக் கண்டனம்தான் அதிகமிருக்கும் என்று ராதாவுக்கு நிச்சயமாகத் தெரியும்.

    அப்பா, அம்மாவை நினைத்தபோது பாவமாக இருந்தது அவளுக்கு. அவளுடைய விருப்பு, வெறுப்புகளைப் புரிந்துகொள்ளாமல் என்ன என்ன கோட்டைகள் கட்டியிருக்கிறார்களோ! அம்மாவை நன்றாகத் தெரியும் ராதாவுக்கு. கற்பனை அதிகமில்லாத ஒரு சராசரிப் பெண்ணின் சின்னச் சின்ன அற்ப ஆசைகள் நிறைய உண்டு அம்மாவுக்கு. தான் பழகுகிற சமூகத்தில் தன் கௌரவத்திற்கு அதிகம் மதிப்புக் கொடுப்பவள். பெருமைக்காகவே பல காரியங்கள் செய்பவள். அவளால் இந்த முடிவை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?

    ராதா அறையைவிட்டு வெளியே வந்தாள். பாதையைத் தேர்ந்தெடுத்தாயிற்று. அதில் இருக்கும் கல்லையும் முள்ளையும் கண்டு பயப்பட்டால் அதில் எப்படி நடப்பது? அதைச் சீராக்க முயல்வதுதான் விவேகம்.

    தோட்டத்திற்குள் காலை வைத்ததும் குப்பென்று ஆளையே தூக்கிக்கொண்டு போயிற்று மல்லிகை, ரோஜாவின் மணம். ராதா தோட்டத்தைச் சுற்றிசுற்றி வந்தாள்.

    இந்த நேரத்திற்கு என்ன முடிவுக்கு வந்திருப்பார்கள்? அம்மா ஒரே ‘ஹிஸ்ட்ரி’க்கலாகப் போயிருப்பாள். அப்பாதான் அவளுக்குச் சரியான மாற்று. பக்குவமாக விஷயத்தைச் சொல்லி அம்மாவைச் சமாதானப்படுத்தியிருக்க மாட்டாரா? ஒவ்வொரு செடிக்கும் பாசத்துடன் அதற்கு வேண்டிய மண்ணையும் உரத்தையும் போடத் தெரிந்தவராயிற்றே. சொந்தப் பெண்ணின் வாழ்க்கை எத்தகைய களத்தில் பிரகாசிக்கும் என்று தெரியாதா அவருக்கு? ஆனால் அவர்கூட, அவள் தன் முடிவைத் தெரிவித்ததும் சற்றே அதிர்ந்து போனார்!

    சிறிது நேரத்திற்குப் பிறகு, நன்றாக யோசித்தாயா? என்று கேட்டார்.

    ராதா சிரித்துக்கொண்டாள். மனத்தில் சந்தேகம் இருந்தால் அல்லவா யோசனை செய்வதற்கு? வேறு எண்ணத்திற்கே இடம் வைக்காமல் அவளினும் மேலான ஒரு சக்தி அல்லவா அவளை, இதுதான் உன் பாதை, உன் குறிக்கோள் என்கிற மாதிரி தள்ளிக்கொண்டு போகிறது. அப்படி அதிர்ச்சி தரும்படியாக என்ன இருந்தது அவள் முடிவில்?

    ஹல்லோ! ராதா திடுக்கிட்டுத் திரும்பினாள்.

    ரகு நின்றிருந்தான். இடுப்பில் கை வைத்தபடி. ராதாவின் முகம் பளீரென்று மலர்ந்தது.

    ஹல்லோ! எப்பொழுது வந்தீர்கள்?

    இப்பொழுதுதான் வந்தேன். ஆனால் உன்னை இத்தனை பூக்களுக்கு நடுவே கண்டுபிடிக்க சிரமமாக இருந்தது!

    அவள் சிரித்தாள்!!

    ஏன்? நான் என்ன வண்ணத்திப்பூச்சியா? பூவுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாமலிருக்க?

    இல்லை, நீயும் ஒரு பூ மாதிரியே இருக்கிறாய்!

    ராதா கைக்கொட்டிச் சிரித்தாள்.

    மில்டனின் அப்பட்டமான காப்பி இது! என்றாள்.

    அவன் தோளைக் குலுக்கிக்கொண்டான்.

    மில்டன் வேறு சொல்லிவிட்டானா? சரி விடு, நான் மில்டனைக் கண்டேனா, கீட்ஸைக் கண்டேனா? கேவலம் நான் ஒரு ஸயன்டிஸ்ட்!

    அவள் மறுபடியும் சிரித்தாள். அவனைக் கண்டவுடனேயே மனம் கிளுகிளுத்து; அவன் பேச்சுக்கெல்லாம் சிரித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தது.

    இன்ஸ்டிட்யூட்டிலிருந்து நேராக வருகிறீர்களா?

    பின்னே வேறெங்கே நான் போவேன்?

    அவன் வெகு இயல்பாக, சர்வ சாதாரணமாகக் குழந்தை மாதிரி அதைச் சொன்னான்.

    ராதாவின் முகம் குப்பென்று சிவந்தது. அந்தக் கேள்வி அவளுள் பலவிதமாக ரீங்காரமிட்டு அலையலையாய் எழும்பி அவள் மனத்தை நிறைத்தது, மனம் என்னவெல்லாமோ விநாடிப் பொழுதில் நினைத்து, பிறகு தயங்கி தயங்கி ஒரே கேள்வியில் நின்றது. வீட்டிற்குள் நிலைமை எப்படி இருக்கிறதோ?

    என்ன ஒரு வாய் காப்பியாவது கொடுத்தனுப்புவாயா, இல்லை ஷேக்ஸ்பியரைப் பற்றியும் மில்டனைப் பற்றியும் பேசி இப்படியே அனுப்பி விடுவாயா?

    ரகுவின் குறும்புக்குரல் அவள் கவனத்தைத் திருப்பிற்று.

    அடடே, ஸயன்டிஸ்டுக்குக் கூட பசிக்குமா? என்றபடியே கண்களை அகல விரித்தாள் ராதா.

    சிரித்துக் கொண்டே உள்ளே ஓடினாள்.

    அவளைத் தொடர்ந்தான் ரகு.

    துள்ளிக்கொண்டு சென்ற ராதா வரவேற்பறையில் சட்டென்று நின்றாள்.

    மங்களமும் ஜானகிராமனும் தங்கள் பெண்ணின் வருகையை எதிர்பார்த்தவர்கள் போலவும், அதற்குத் தங்களைத் தயார் செய்துக் கொண்டவர்கள் போலவும், உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஏதாவது பேச ஆரம்பித்து விடுவார்களோ என்று பயந்த ராதா உடனே முந்திக்கொண்டு சொன்னாள்.

    ரகு வந்திருக்கிறார்!

    அப்பாவுக்குத்தான் எவ்வளவு சாமர்த்தியம் முகத்திலிருந்த கோடுகளை உடனே துடைத்துவிட்டார். ஒரு புன்னகையைக்கூட மலரவிட்டுக் கொண்டார். அம்மாவுக்குத்தான் முடியவில்லை. சட்டென்று எழுந்து உள்ளே போய்விட்டாள். அவள் உள்ளே போனதே நல்லது என நினைத்துக் கொண்டாள் ராதா.

    ராதா விரைந்து சமையலறைக்குச் சென்றாள். சமையல்கார அம்மாளிடம் கேட்டு இட்லியும் சட்டினியும் ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு ஹாலுக்குப் போனாள். அங்கே அப்பாவும் ரகுவும் ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மனத்தின் எண்ணங்களை எவ்வளவு சாமர்த்தியமாக அப்பாவால் மறைத்துக் கொள்ள முடிகிறது என்று வியந்தாள் ராதா.

    கையில் தட்டை வாங்கிக்கொண்டே மோஸ்ட் வெல்கம் என்றான் ரகு. பசியென்று சொன்னானேத் தவிர, கவனமேயில்லாமல் இட்லியை வாயில் போட்டுக் கொண்டிருந்தான் ரகு. இன்ஸ்டிட்யூட்டைப் பற்றி. பேராசிரியர்களைப் பற்றி, ஆராய்ச்சியைப் பற்றி… பேசிக்கொண்டே இருந்தான் ரகு. அத்தனையையும் கிரகித்துக் கொள்கிறவர் மாதிரி காண்பித்துக் கொண்டிருந்தார் அப்பா. நடுவில் ராதாவைப் பார்த்துக் கொண்டே காபி பஸ்ட் க்ளாஸ் என்று கோப்பையைக் கீழே வைத்து விட்டு எழுந்தான் ரகு.

    அதற்குள் கிளம்பிவிட்டாயா? என்று கேட்டார் ஜானகிராமன்.

    ஆமாம் ஏழு மணிக்கு ஒரு லெக்சருக்குப் போகணும். சும்மா பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.

    அவன் யாரைப் பார்க்க வந்தான் என்று தெரிந்த ஜானகிராமன் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.

    ராதா அவனை வழியனுப்ப வாசல் வரையில் சென்றாள்.

    ரகு திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டு தாழ்ந்த குரலில், வாட் ஈஸ் ராங் ஹியர் ராதா? என்று கேட்டான்.

    அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். அவன்கூட ஏதாவது ஊகித்திருப்பானோ?

    நீங்க என்ன சொல்றீங்க என்றாள் மெதுவாக,

    இன்று ஒருவருக்கும் ‘மூட்’ சரியாக இல்லை போலிருக்கிறதே! உன் அப்பா நான் பேசுவதற்கெல்லாம் ஏதோ சும்மா தலையை ஆட்டிக் கொண்டிருந்தார். உன் அம்மா வெளியிலேயே வரவில்லை! என்றான்.

    இப்பொழுது இவருக்கு எதையும் தெரியப்படுத்தக்கூடாது என்று அவள் மனதிற்குள் அவசரமாக ஒரு முடிவுக்கு வந்தாள். அவன் எவ்வளவு மென்மையான உணர்ச்சிகளைக் கொண்டவன் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். விஷயத்தைச் சாதகமாக்கிக் கொண்ட பிறகுதான் அவனிடம் ஏதும் சொல்ல வேண்டும். குழந்தைத்தனமான அவன் இயல்பை ஒருவிதத் தாய்ப்பாசத்துடன் பாதுகாக்க விழையும் தன் உள்ளத்தை நினைத்து அவளுக்கே வேடிக்கையாக இருந்தது.

    எனவே மனதிற்குள் இதையெல்லாம் புதைத்துக்கொண்டு ஒன்றுமில்லையே! என்று மழுப்பி சிரித்தாள் ராதா.

    அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பட்ஜெட் விஷயமாய் ஏதோ சண்டை. அதான் வீட்டில் சுரத்தில்லாமல் நான் தோட்டத்தில் இருந்தேன்!

    அவன் அதை அப்படியே நம்பினான்.

    ஓ, அவ்வளவு தானே! என்று சொல்லிவிட்டு நான் வருகிறேன் ராதா, லெக்சருக்கு நேரமாகிவிட்டது. பஸ்ஸைப் பிடித்துப் போகவேண்டும் என்று கிளம்பிவிட்டான். போகும்போது பாதையில் கிடந்த கல்லைப் பந்துபோல் விளையாட்டாக உதைத்துக் கொண்டு அவன் ஓடுவதைக் கண்டு அவளுக்குச் சிரிப்பாக வந்தது.

    உதட்டில் புன்னகை நெளிய, அவள் படியேறுகையில், அவளுடைய அம்மாவின் குரல் ஆத்திரத்துடன் வெளிவந்தது.

    அவ தலைக்கீழா நின்னாலும் அந்தப் பரதேசிப் பயலுக்கு என் பெண்ணைக் கொடுக்கமாட்டேன்!...

    உஷ் இரையாதே! என்று அதட்டிய ஜானகிராமன், அவள் வரப் போகிறாள் என்றார்.

    வந்தால் வரட்டுமே, என் மனதில் இருப்பது அவளுக்குத் தெரிய வேண்டியது தானே!

    ஆனாலும் உனக்கு ஆத்திரம் அதிகம். வயசு வந்த பெண். விஷயத்தைப் பக்குவமாக சொல்வாயா? இப்படி சப்தம் போட்டால் அவள் எப்படிப் பணிந்து போவாள்?

    என்னவோ போங்கள். இது என்னை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்று உங்களுக்குப் புரியாது. உங்கள் பெண் பேச்செடுத்தாலே எனக்கு ஆத்திரமும் கோபமும்தான் வருகிறது. நீங்களே அவளை வழிக்குக் கொண்டு வாருங்கள்,

    மங்கலம் உள்ளே எழுந்து போவதைப் புடவையின் சரசரப்பில் உணர்ந்து கொண்டாள் ராதா.

    சற்று தாமதித்து ராதா உள்ளே நுழைந்தாள். ஜானகிராமன் யோசனையுடன் உட்கார்ந்திருந்தார்.

    ராதா மெளனமாகத் தன் அறைப் பக்கம் நடந்தாள்.

    ராதா! அப்பாவின் இதமான குரலைக் கேட்டு, ராதா தன்னைச் சுதாரித்துக் கொண்டு திரும்பினாள்.

    விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று யோசிப்பவர்போல் அவர் தவித்துக் கொண்டிருப்பது அவளுக்கு நன்றாகப் புரிந்தது.

    கொஞ்சம் இப்படி உட்காருகிறாயா?

    அவள் அவர் அருகில் வந்து உட்கார்ந்தாள்.

    அவர் மெள்ள

    Enjoying the preview?
    Page 1 of 1