Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thisai Thedum...
Thisai Thedum...
Thisai Thedum...
Ebook53 pages19 minutes

Thisai Thedum...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘அசோகவனம், கனகாம்பரம் பூக்கள்’ என்ற சிறுகதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதே ‘திசை தேடும்...’ நாவல். ஜோதி என்கிற அந்தப் பெண் பெற்றோரின் இந்த வற்புறுத்தல்களுக்குப் பணிபவள் இல்லை. தன் தகுதிக்கும், எண்ணத்திற்கும், கற்பனைக்கும், ஏற்ற ஒருவனைக் கணவனாக அடைகிற முயற்சியின் தேடலில் கல்யாணம் என்பது தள்ளித் தள்ளிப் போடப்பட்டு கடைசியில் அவளுடைய வாழ்க்கையில் என்ன நிகழ்ந்தது? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்…!

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580123909390
Thisai Thedum...

Read more from Indhumathi

Related authors

Related to Thisai Thedum...

Related ebooks

Reviews for Thisai Thedum...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thisai Thedum... - Indhumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திசை தேடும்...

    Thisai Thedum...

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indhumathi

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    முன்னுரை

    ‘அசோகவன’த்தில் பெண்ணின் நல்ல வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்து கொடுக்கப்படுகிற கல்யாணம் என்பது பெற்றோர்களின் பொறுப்பற்றதனத்தினாலும், தீர விசாரிக்காத தவற்றினாலும் எவ்வாறு சீர் கெட்டுப் போகிறது என்பதுதான் நான் சொல்ல வந்த விஷயம்.

    ‘கனகாம்பரப் பூக்கள்’ என்ற இரண்டாவது நாவலும் பெண்ணை அதிலும் வலிப்பு நோய்க்கு ஆளாகி அடிக்கடிக் கீழே விழுந்து மணிக்கணக்கில் நினைவற்றுக் கிடக்கும் பெண்ணை கல்யாணமோ, தாம்பத்திய உறவோ கூடாது என்கிற டாக்டரின் எச்சரிக்கையை மீறி, தங்களின் பாரத்தையும், பொறுப்பையும், கழித்துக்கொள்ள உண்மையை மறைத்து மணமுடித்துக் கொடுத்து விடும் மனசாட்சியை அடகுவைத்த பெற்றோர்களின் பாதகத்தைச் சொல்வது.

    இவை இரண்டிலும் வெளிப்படுபவை நம் தேசத்தின் சாதாரண வர்க்கத்து, பெற்றோரைச் சார்ந்து நிற்கிற தைரியமற்ற பெண்களின் நிலை. பொருளாதாரத்தில் மேம்பாடடைந்த பெண்களுக்கு அனேகமாக இக்கதி ஏற்படுவதில்லை. பொருளாதார சுதந்திரம் நிறைய விஷயங்களில் அடிமைக் கதவுகளைத் திறந்து விடுதலையை ஏற்படுத்துகிறது. பொருளாதாரத்தினால் நெருக்கப்பட்டு, பெற்றோர்களாலும் ஒடுக்கப்பட்டு, சமூகத்து நான்கு பேரின் எட்டுக் கண்களுக்கும் நான்கு வாய்களுக்கும் பயப்படும் அவல நிலையில் திருமணம் என்கிற சிறைக் கூடத்திலும் மாட்டிக்கொண்டு தவிக்கிற இன்றைய பெண்களின் கதியை வெளிப்படுத்துகிற நோக்கத்தில் எழுதப்பட்டவை. வயது வந்த பெண் பாரமாகக் கருதப்படுகிற காரணத்தினால் ‘ஏதோ கல்யாணம் என்று ஒன்று நடந்தால் போதும் என்கிற மனப்பான்மையில் பெண்ணைக் கைகழுவி விட நினைக்கிற பெற்றோரின் எண்ணத்தில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்கிற ஆதங்கத்திலும் எழுந்தவையே அசோகவனமும், அவற்றோடு பூத்திருக்கும் கனகாம்பரப் பூக்களும்.

    இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதே ‘திசை தேடும்...’ நாவல். ஜோதி என்கிற அந்தப் பெண் பெற்றோரின் இந்த வற்புறுத்தல்களுக்குப் பணிபவள் இல்லை. வரதன் தகுதிக்கும், எண்ணத்திற்கும், கற்பனைக்கும், ஏற்ற ஒருவனைக் கணவனாக அடைகிற முயற்சியின் தேடலில் கல்யாணம் என்பது தள்ளித் தள்ளிப் போடப்பட்டு கடைசியில் உடன் பிறந்தவர்களோ, பெற்றோரோ இவளது கல்யாணத்தைப் பற்றிப்படும் கவலையைக் கைவிட்ட நிலைமையில் இவள் விழித்துக் கொள்கிறாள். கல்யாண வீதிக்கான திசையைத் தேடத் தொடங்குகிறாள்...

    மறுக்கிற காரணத்தினாலேயே இந்த ஜோதி மறுதளிக்கப்படுகிறாள். தன் மனத்திற்கு ஏற்ற விதத்தில் ஒருவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற நினைப்பே இங்கு குற்றமாக்கப்படுகிறது. அதுவே அடியாக விழுந்து எழமுடியாமல் செய்து விடுகிறது.

    கல்யாணம் என்பதே நடுத்தரவர்க்கத்துப் பெண்களின் அவலமாகத்தான் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிப் படம் பிடித்து வாசகர்களின் முன் வைக்கிற ஒரே நோக்கம் தவிர

    Enjoying the preview?
    Page 1 of 1