Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deiveega Ragasiyangal!
Deiveega Ragasiyangal!
Deiveega Ragasiyangal!
Ebook182 pages5 hours

Deiveega Ragasiyangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹிந்து மதம் எனப்படும் சனாதன தர்மம் ஒரு வாழ்க்கை முறை. இதில் மனிதனின் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள ஏராளமான இரகசியங்கள் உள்ளன. கர்ம பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்று வலியுறுத்தும் அது, உன் தலை விதியை நீயே நிர்ணயித்துக் கொள்ளலாம் வளமான வாழ்க்கையை நீயே அமைத்துக் கொள்ளலாம் என்றும் வலியுறுத்துகிறது.

இதற்கான வழிமுறைகளை, இரகசியங்களை நமது வேதம், புராணம், இதிஹாஸம், உபநிடதம், சாஸ்திரங்கள் உள்ளிட்டவற்றில் காணலாம். இவற்றில் உள்ள பல இரகசியங்களை, தடைகள் அகற்றும் விநாயகர் வழிபாடு, அறிவு தரும் கலைமகள் வழிபாடு, ஆரோக்கியம் தரும் சூரிய வழிபாடு, உயிர் காக்கும் ஸ்தோத்திரங்கள், கஷ்டம் போக்கும் அஷ்டகங்கள், காமதேனு, அன்னதான மஹிமை, விபூதி மஹிமை, அயோத்தி, கைலாயத்தின் சிறப்பு உள்ளிட்ட 29 கட்டுரைகளில் விளக்குகிறது இந்த நூல்.

தெய்வீக வாழ்க்கை அமைத்துக் கொள்ள நமக்கு உற்ற ஒரு துணை இந்த நூல்.

Languageதமிழ்
Release dateSep 10, 2022
ISBN6580151009017
Deiveega Ragasiyangal!

Read more from S. Nagarajan

Related to Deiveega Ragasiyangal!

Related ebooks

Reviews for Deiveega Ragasiyangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Deiveega Ragasiyangal! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தெய்வீக இரகசியங்கள்!

    Deiveega Ragasiyangal!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. விநாயக சதுர்த்தி வழிபாட்டின் இரகசியங்கள்!

    2. திருவிளக்கு ஏற்றுவோம், செல்வச் சிகரம் ஏறுவோம்!

    3. கலைமகளே, கடவுளர் தெய்வமே, கண் கண்ட தெய்வமே சரணம்!

    4. லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு இரகசியம்!

    5. அனைத்து தெய்வங்களும் ஐக்கியம் : கேட்பதைக் கொடுக்கும் காமதேனு!

    6. ஆடி மாதமும் அன்ன தானமும்!

    7. சில சம்வாதங்களின் சுருக்கம்!

    8. எந்தக் கேள்விக்கும் இதோ பதில்! இந்து மதம் வழங்கும் சம்வாதங்கள்!!

    9. உயிர் காக்க உதவும் ஸ்தோத்திரங்கள்!

    10. கஷ்டம் போக்கி இஷ்ட பூர்த்தி அருளும் (100) அஷ்டகங்கள்!

    11. ஆச்சரியமூட்டும் சூரிய பூஜை ஸ்தலங்கள்!

    12. நித்ய கல்யாணம் பச்ச தோரணம்! எத்தனை எத்தனை பண்டிகைகள்!

    13. சீதா தேவி கூறிய கடைசிச் சொற்கள்!

    14. அதிசயங்கள் பல கண்ட அற்புத பூமி  அயோத்தி!

    15. ரிஷிகள் தவம் புரியும் தலம் ரிஷிகேசம்; மோட்சத்தின் வாயில் ஹரித்வார்!

    16. கைலாய யாத்திரைக்குப் புதிய சாலை!

    17. இமயத்தில் சிவனது திருவிளையாடல்!

    18. நுண்ணறிவை முழு ஆற்றலுடன் தரும் வேத கல்வி!

    19. இந்துக்கள் சூரியனிடமிருந்து மந்திர ஒலியை எப்படிக் கேட்டார்கள்?!

    20. விபூதி மஹிமை - 1

    21. விபூதி மஹிமை - 2

    22. விபூதி மஹிமை - 3

    23. யாளி!

    24. குருவுக்கா, கோவிந்தனுக்கா, யாருக்கு முதல் நமஸ்காரம்?!

    25. தர்க்கம் பெரிதா, ஞானம் பெரிதா?

    26. மௌனம் சர்வார்த்த சாதனம்!

    27. ஒரு ரிஷியைச் சந்தித்த அரசன்!

    28. கயிறு சார்த்திப் பார்த்தல்!

    29. நான் ஏன் நன்றாக இருக்கிறேன்?

    என்னுரை

    ஹிந்து தர்மம் ஒரு மதம்;

    மதம் மட்டுமல்ல அது ஒரு தத்துவம்;

    அது ஒரு தத்துவம் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை என்று பலரும் புகழ்ந்து பாராட்டும் சனாதன தர்மத்தில் மனிதனின் வாழ்க்கையை உயர்த்திச் செல்லும் ஏராளமான இரகசியங்கள் உள்ளன.

    பிறந்தது முதல் இறப்பது வரை கர்ம பலன்களை அனுபவிப்பது உறுதி என்ற தலையாய கொள்கையை இந்து மதம் தருகிறது.

    அதே சமயம் உன் தலை விதியை நீயே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் அது வலியுறுத்துகிறது.

    தர்ம, அர்த்த, காமம் இவற்றுடன் மோக்ஷத்திற்கான வழியையும் காண்பித்து வாழ்வாங்கு வாழ வழி வகுக்கிறது சனாதன தர்மம்!

    உத்தரேத் ஆத்மனாத்மானம் - ஆத்மாவை ஆத்மாவால் உயர்த்திக் கொள்க என்பது கண்ணபிரானின் கீதை அறிவுரை.

    அதாவது உன்னை நீயே உயர்த்திக் கொள் என்பது இந்து மதத்தின் சாரம்.

    இதற்கான வழிமுறைகளை, இரகசியங்களை நமது வேதம், புராணம், இதிஹாஸம், உபநிடதம், சாஸ்திரங்கள் உள்ளிட்டவற்றில் காணலாம்.

    இந்த வழிமுறையில் தோன்றிய ரிஷிகள், அருளாளர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் ஏராளமான துதிகளையும் இதர வழிமுறைகளையும் நாம் மேம்படுவதற்காக நமக்கு வழிகாட்டி அருளியுள்ளார்கள்.

    அவற்றைச் சுட்டிக் காட்டி பல கட்டுரைகளை ஞான ஆலயம், மாலை மலர் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் www.tamilandvedas.com ப்ளாக்கிலும் எழுதி வந்துள்ளேன்.

    அவற்றின் தொகுப்பே இந்தக் கட்டுரைகள்.

    இவற்றை அவ்வப்பொழுது வெளியிட்டு எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த மாலைமலர் அதிபர் திரு பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும், ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களுக்கும், தமிழ் அண்ட் வேதாஸ் ப்ளாக்கைத் திறம்பட கடந்த பல வருடங்களாக நடத்தி வரும் லண்டன் திரு எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.

    இந்த நூலை அழகுற வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது வியக்கத்தக்க வகையில் எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

    இந்தக் கட்டுரைகள் காட்டும் நெறிகள் மூலம் ஒருவர் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இதைத் தமிழ் நெஞ்சங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

    நன்றி.

    சான்பிரான்ஸிஸ்கோ

    23-8-2022

    ச. நாகராஜன்

    1. விநாயக சதுர்த்தி வழிபாட்டின் இரகசியங்கள்!

    உலகெங்கும் விநாயகர்!

    விநாயக சதுர்த்தி வழிபாடு மிகுந்த கோலாகலத்துடன் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை கொண்டாடப்படும் ஒரு பெரும் பண்டிகை.

    நக்கீரப் பெருமான் அருளிய சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் உள்ள தனி வெண்பாக்களில் 7வது வெண்பா,

    "முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

    மருகனே ஈசன் மகனே – ஒருகைமுகன்

    தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

    நம்பியே கைதொழுவேன் நான்" என்கிறது.

    இதில் ‘ஒரு கை  முகன்’ என்று விநாயகரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் விநாயகர் வழிபாடு சங்க காலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வருகிறது என்பது உறுதியாகிறது.

    இன்றோ தமிழ் நாட்டில் பிள்ளையார் பட்டியில் ஆரம்பித்து உலகெங்கும் பரவி இருக்கும் பிள்ளையாரது வழிபாடும் பெயர்களும் நமக்குப் பிரமிப்பை ஊட்டுகின்றன.

    திபெத்தில் அவர் ட்ஸோக்ஸ்டாக்.

    பர்மாவில் அவர் மஹா பியன்.

    மங்கோலியாவில் அவர் பெயர் டாட்கரௌர் காக்ஹன். கம்போடியாவிலோ அவர் ப்ரஹ் கெனெஸ் என வழிபடப்படுகிறார். ஜப்பானியர் அவர் வினாயக்ஸா அல்லது ஷோடென் என்று வழிபடுகின்றனர்.

    பசிபிக் மகா சமுத்திரத்தில் அமைந்துள்ள ஹவாய் தீவில் கோனா கடற்கரையில் ஒரு சிறிய விநாயகர் விக்ரஹத்தை பக்தர்கள் கும்பிட்டு வருகின்றனர்.

    உலகெங்கும் எதை ஆரம்பிக்கும் முன்னரும் விநாயகர் வழிபாடு தான்!

    விநாயகரை வழிபடக் காரணம்!

    இப்படி எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்னர் உலகெங்கும் முதல் தெய்வமாக  விநாயகரை வழிபடக் காரணம் என்ன?

    எல்லா தெய்வங்களின் சிறந்த அம்சங்களின் பகுதி விநாயகரிடம் இருக்கின்றன.

    அவரைத் தொழும்போது எல்லா தெய்வங்களும் திருப்தியுடன் அருளாசியை- அனுக்ரஹத்தை- வழங்குவதால் தான் தடை போக்கும் விக்னேஸ்வரராக அவர் மிளிர்கிறார். இது ஒரு முக்கியமான இரகசியம்.

    இப்படி அனைத்து தெய்வங்களின் அபார வலிமைகளைக் கொண்ட அவரை கணபதியாக - கணங்களின் அதிபதியாக சிவபிரான் ஆக்கியருளினார்.

    ‘பிடிச்சு வச்சா பிள்ளையாரு’ என்ற மொழிப்படி மஞ்சள் பொடியில் ஒரு பிடி பிடித்து வைத்தால் அங்கே அவர் எழுந்தருளுகிறார்.

    களிமண்ணில் கூட அவர் திருவுருவம் படைக்கப்பட்டால் ஏற்கிறார்; எளியவர் தெய்வம் ஆகிறார்.

    அருகம்புல், எருக்கம் மாலை, மோதகம், கொழுக்கட்டை என நைவேத்தியத்தில் கூட அனைவரும் மனமுவந்து எளிதில் அளிக்கக்கூடிய பொருள்களே அவர் உகக்கும் பொருள்கள்.

    சிவனுக்கும் உமைக்கும் செல்லப் பிள்ளையானதால் பிள்ளையார் என்ற பெயரைக் கொண்ட அவர் சிவபிரான் ஒவ்வொரு சமயத்தில் அடியார் நிமித்தம் ஒவ்வொரு பெயரைக் கொண்டது போலவே, தன்னுடைய அடியார் நிமித்தம் வக்கிரதுண்ட விநாயகர், சிந்தாமணி விநாயகர், கஜானனர், விக்கினராஜர், மயூரேசர், அபரமயூரேசர், பாலசந்திரர், தூமகேது, கணபதி, மகோற்கடர், உந்தி விநாயகர், வல்லப விநாயகர் என இப்படி பன்னிரெண்டு மூர்த்தங்களைக் கொண்டிருக்கிறார். இப்பெயர்கள் விளக்கும் வரலாறுகள் அற்புதமானவை.

    விநாயகன் என்ற சொல்லின் சப்தார்த்தம் மூன்று 1) துட்டர்களை அடக்குபவன் 2) இடையூறுகளை நீக்குபவன் 3) சுந்தரமுள்ளவன்.

    வடலூர் வள்ளலார் பெருமான் கணபதி பூஜை செய்யும் விதத்தை நன்கு விளக்கி, கணபதியைத் துதி செய்பவன் அடையும் சிறந்த பேறுகள் இரண்டு என விளக்குகிறார் : 1) கணபதியை பூஜிப்பதால் பரமாசாரியர் கிடைப்பார் 2) சிவானுபவம் சித்திக்கும். நல்ல குரு வந்து வழிகாட்டி பேரின்பம் அடையச் செய்வார் என்பது அவரது அருள் வாக்கு.

    கபிலர் கூறும் இரகசியங்கள்!

    சங்க கால மகானாக விளங்கிய கபில தேவ நாயனார் திரு இரட்டை மணி மாலை என்ற தனது அற்புதமான நூலில் பிரமிக்க வைக்கும் இரகசியங்களை விண்டுரைக்கிறார்.

    எடுத்துக்காட்டிற்காக ஒரு செய்யுளை மட்டும் இங்கு பார்க்கலாம்:

    திருவாக்கும் செய்கருமங் கைகூட்டும் செஞ்சொல்

    பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்

    ஆதலால்  வானோரும் ஆனை முகத்தானைக்

    காதலால் கூப்புவர்தம் கை

    இந்தப் பாடல் சாதாரணப் பாடல் அல்ல.

    "நுட்பம் என்பது நுழைபொருள் யாவும்

    திட்ப மாகத் தெளியக் கூறல்" என்ற விதியின் படி ஏராளமான நுட்பங்களைத் தன்னுள் அடக்கியுள்ள பாடல்.

    ஐஸ்வரியத்தைப் பெருக்கும்.

    தொடங்கிய தொழில்களைத் தடையின்றி நிறைவேறச் செய்யும்.

    நல்ல செல்வாக்கைப் பரவச் செய்யும்.பெருமையை அபிவிருத்தி அடையச் செய்யும்.

    சாரூப பதவியை அளிக்கும்.

    இப்படி தன்னை வணங்கியோருக்கு அனைத்தையும் அளிப்பதனால் இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் மிகுந்த விருப்பத்துடன், கணபதியைத் தங்கள் தங்கள் கைகளை கூப்பி வணங்குவர் என்பது பாடலின் பொருள்.

    ஆனால் திரு என்ற மங்கலச் சொல்லை முதலில் வைத்து கை கூட்டும் என்பதால் செல்வம் வந்தாலும் கூட, செய்ய முனையும் தொழில் சீருடன் வெற்றி பெற வேண்டும் என்பதையும், செஞ்சொல் என்பதால் செல்வாக்கும் அத்துடன் சேர வேண்டும் என்பதையும் பீடு என்பதால் அதில் பெருமையும் கூடவே சேர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, இந்த நான்கின் பயனை உருவாக்கும் தெய்வம் விநாயகரே என்பதையும் வலியுறுத்துகிறார் கபிலர்!

    சிறிது காலம் வாழ்ந்து மறையும் மானுடர் ஒரு புறம் இருக்க தேவர்களும்

    Enjoying the preview?
    Page 1 of 1