Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhagavath Geethaiyil Athisaya Seithigal
Bhagavath Geethaiyil Athisaya Seithigal
Bhagavath Geethaiyil Athisaya Seithigal
Ebook165 pages2 hours

Bhagavath Geethaiyil Athisaya Seithigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பகவத் கீதையில் 700 ஸ்லோகங்கள் மட்டுமே உள்ளன. 1400 வரிகள் மட்டுமே; ஆயினும் இந்து மதத்தின் சாரத்தைப் பிழிந்து தருவதால் அது உலகப் புகழ் பெற்ற நூலாக கருதப்படுகிறது. அது மட்டுமல்ல வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்திலேயே சார்ல்ஸ் வில்ஸ்கின் வெளியிட்ட பகவத் கீதை ஆங்கில மொழி பெயர்ப்புக்கு முன்னுரை எழுதிய வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அழிந்தாலும் பகவத் கீதை என்றும் இருக்கும் என்று தீர்க்க தரிசனம் போல கூறினார். நான் இந்த நூலில் ஆன்மீகச் செய்திகளை விட, கிருஷ்ண பரமாத்மாவின் வார்த்தா ஜாலம் பற்றித்தான் அதிகம் எழுதியுள்ளேன்.

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580153509195
Bhagavath Geethaiyil Athisaya Seithigal

Read more from London Swaminathan

Related to Bhagavath Geethaiyil Athisaya Seithigal

Related ebooks

Related categories

Reviews for Bhagavath Geethaiyil Athisaya Seithigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhagavath Geethaiyil Athisaya Seithigal - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்

    Bhagavath Geethaiyil Athisaya Seithigal

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. விவேகாநந்தருக்குப் பிடித்த கீதை ஸ்லோகம்

    2. கீதையில் சுவையான சொற்கள் – வேத வாதரதாஹா

    3. பிரசாந்த, பிரசன்ன: பகவத் கீதையில் சுவையான சொற்கள்!

    4. பத்து கட்டளைகள்! பகவத் கீதையிலிருந்து!!

    5. கிருஷ்ணர் கொடுத்த நன்கொடைகள்!

    6. கிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர் யார்?

    7. உத்திஷ்ட! யசோ லப!தோன்றிற் புகழொடு தோன்றுக!

    9. பகவத் கீதையில் சுவையான சொற்கள்- ‘பிரயாண காலே’(प्रयाणकाले)

    10. பகவத் கீதையில் எந்திரங்கள்!

    11. ஒரே நாளில் எட்டு தேர்கள்

    12. ரிக் வேதத்தில் பகவத் கீதை!

    13. உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே – புறநானூறு

    14. பாரதி பாட்டில், பகவத் கீதையில், சிலம்பில் சோம பானம்!

    15. புறநானூற்றில் பகவத் கீதை- Part1

    16. புறநானூற்றில் பகவத் கீதை- பகுதி 2

    17. ஆண்களுக்கு உயிர் ‘வேலை’, பெண்களுக்கு உயிர் ‘கணவன்’:தமிழர் கொள்கை

    18. பகவத் கீதை ஒரு கப்பல்; ஏறினால் அடுத்த கரை சேரலாம்

    19. கீதை புஸ்தகம் வீட்டில் இருந்தால்

    20. நான்கு க-கார நாமங்கள்

    21. பகவத் கீதையில் சுவையான சொல் சித்ரரதன்

    22. பகவத் கீதையில் சுவையான சொல் ‘லோக ஸங்க்ரஹம்’

    23. பகவத் கீதையில் சுவையான சொற்கள் – ‘முத்து மாலை’

    24. தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை!

    25. ஞானப் படகு, ஞான விளக்கு, ஞானத் தீ, ஞானக் கண், ஞான வேள்வி, ஞானத் தவம்

    26. அணு விஞ்ஞானி (Father of Atomic Bomb) ராபர்ட் ஓப்பன்ஹீமர்

    27. பாரதி பாட்டில் பகவத்கீதை

    28. புறநானூற்றில் நரகம்! திருக்குறளில் நரகம்!!

    29. வள்ளுவனும் கண்ணனும் அப்பரும் சொன்ன எட்டாம் நம்பர்!

    30. பகவத் கீதை இ – புத்தகம்: பிரதமர் வெளியிட்டார்

    31. பில்லியன் டாலர் பிறந்த நாள் விழா: இந்துக்கள் கண்டுபிடிப்பு!

    32. உக்ர ரத, பீம ரத, விஜய ரத சாந்திகள்

    33. பகவத் கீதை பொன் மொழிகள்

    34. வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி? ராமாயண அறிவுரை

    35. அஷ்டமி, நவமி பற்றி சத்ய சாய் பாபா

    36. பகவத்கீதை சொற்கள் Index ; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம்! Part 1

    37. பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-74 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (last part)

    முன்னுரை

    பகவத் கீதையில் 700 ஸ்லோகங்கள் மட்டுமே உள்ளன.1400 வரிகள் மட்டுமே; ஆயினும் இந்து மதத்தின் சாரத்தைப் பிழிந்து தருவதால் அது உலகப் புகழ் பெற்ற நூலாக கருதப்படுகிறது. அது மட்டுமல்ல வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்திலேயே சார்ல்ஸ் வில்ஸ்கின் வெளியிட்ட பகவத் கீதை ஆங்கில மொழி பெயர்ப்புக்கு முன்னுரை எழுதிய வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அழிந்தாலும் பகவத் கீதை என்றும் இருக்கும் என்று தீர்க்க தரிசனம் போல கூறினார். நான் இந்த நூலில் ஆன்மீகச் செய்திகளை விட, க்ருஷ்ண பரமாத்மாவின் வார்த்தா ஜாலம் பற்றித்தான் அதிகம் எழுதியுள்ளேன்.அப்படி சொல் நயத்தைச் சுவைக்கையில் கொஞ்சம் ஆன்மீக அறிவையும் பெற முடிகிறது. மேலும் சங்க இலக்கியத்தில், திருக்குறளில் பிற்கால அறிஞர்கள் கருத்துக்களில் இருக்கும் விஷயங்களையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன். புறநானூற்றில் பகவத் கீதை போன்ற ஓரிரு கட்டுரைகளை மட்டும் முன் வெளியான நூல்களிலிருந்து மீண்டும் பயன்படுத்தியுள்ளேன். மொத்தத்தில் கீதை பற்றி மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த நூல் தூண்டும் என்பது என் நம்பிக்கை.

    கல்லூரி நாட்களிலேயே பாரதீய வித்யா பவன் நடத்திய 5 பகவத் கீதை தேர்வுகளையும் எழுதி சான்றிதழ் பெற்றேன். அப்போது முதல் இந்த நூலை பிற நூல்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து வருகிறேன். என்னுடைய ‘பிளாக்’குகளிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய கட்டுரைகளை 11 ஆண்டுகளாக எழுதி வந்தேன். அவற்றின் ஒரு தொகுப்புதான் இந்த நூல்.

    இறுதியாக இந்த புஸ்தகத்தில் நான் தயாரித்த பகவத் கீதையின் தமிழ் சொற்கள் இன்டெக்சின் முதல் பகுதியையும் கடைசி பகுதியையும் கொடுத்துள்ளேன். சுமார் 4000 சொற்கள் அடங்கிய அந்த நூல் தனியாக வெளியிடப்படும். வாசக நண்பர்களின் கருத்துக்களை வளமை போல எதிர் பார்க்கிறேன் ; புஸ்தகங்களை வாங்கிப் படித்து ஆசிரியர்களை ஊக்குவியுங்கள் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்.

    1. விவேகாநந்தருக்குப் பிடித்த கீதை ஸ்லோகம்

    உலகில் பாவம் என்பது உண்டு என்றால் அதுதான் பயமும் பலஹீனமும். இந்த ஒரு ஸ்லோகத்தைப் படித்தால் கீதை முழுதும் படித்த பயன் எய்துகிறான். இந்த ஒரு ஸ்லோகத்தில் கீதையின் ரஹஸ்யம் ஆழ்ந்து உறைகின்றது. —- சுவாமி விவேகாநந்தர்

    "க்லைப்யம் மாஸ்ம கம: பார்த்த நைதத் த்வய்யுபபத்யதே

    க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்ப்பல்யந் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப:"

    –பகவத் கீதை 2-3

    பொருள்:- எதிரிகளை எரிப்பவனாகிய பார்த்தா! பேடித்தனத்தை அடையாதே. இது உன்னிடத்தில் சிறிதும் பொருந்தாது. அற்பமான மனத் தளர்ச்சியை ஒழித்து விடு. எழுந்திரு!

    இதையே ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ (குறள் 1075) – என்று வள்ளுவன் இடித்துரைக்கிறான்.

    ஈடிலாப் புகழினோய்! எழுகவோ எழுக! என்று பாரதியோ பொங்கு தமிழில் முழங்குகிறான்:

    "உண்மையை அறியாய்; உறவையே கருதிப்

    பெண்மை கொண்டு ஏதோ பிதற்றி நிற்கின்றாய்

    வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,

    நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் — இன்னோர்

    தம்மொடு பிறந்த சகோதரர் ஆயினும்,

    வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம்

    ஆரிய! நீதி நீ அறிகிலை போலும்!

    பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை

    அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

    பெரும்பதத் தடையுமாம் பெண்மை எங்கு எய்தினை?

    பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்!

    ஈடிலாப் புகழினோய்! எழுகவோ எழுக!"

    - பாரதியார் பாடல்

    இன்னொரு பாடலில் பாரதி சொல்வான்:

    வில்லினை எடடா! – கையில்

    வில்லினை எடடா! – அந்தப்

    புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா!

    வாடி நில்லாதே; — மனம்

    வாடி நில்லாதே; — வெறும்

    பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே.

    -பாரதியார் பாடல்

    ஆன்மா அழியாதது என்ற உபதேசமும் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில்தான் வருகிறது. அதையும் பாரதி விட்டுவிடவில்லை:-

    ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு

    அச்சம் உண்டோடா? –மனமே!

    தேன் மடை இங்கு திறந்தது கண்டு

    தேக்கித் திரிவமடா— பாரதியார் பாடல்

    ஆத்மா பலவீனம் உடையவனால் அடையமுடியாதது (ந அயம் ஆத்மா பலஹீனேன லப்யதே) என்று உபநிஷதமும் கூறுகிறது.

    ஸ்ரீமத் பகவத் கீதைக்கு உரை எழுதிய ஸ்ரீ அண்ணா அவர்கள் கீழ்கண்ட மேற்கோள்களைத் தருகிறார்:

    உத்திஷ்ட – இது துக்கத்தில் ஆழ்ந்த ஜீவனைத் தட்டி எழுப்பும் மந்திரம்

    உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்யவரான் நிபோதத = எழுந்திரு! விழித்துக் கொள்! குறிக்கோளை அடையும் வரை ஓயாது செல்! (கடோபநிஷத்)

    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் – ஆண்டாள் திருப்பாவை

    2. கீதையில் சுவையான சொற்கள் – வேத வாதரதாஹா

    பகவத் கீதையில் பல சுவையான சொற்கள் இருக்கின்றன. ஒரு பக்கம் ஆத்ம ஞான விசாரம் செய்கையில் மற்றொரு பக்கம் கிருஷ்ண பரமாத்மா பயன்படுத்திய சுவையான சொற்களையும் படித்து ரசிக்க வேண்டும். எதையும் நாளை நாளை என்று ஒத்திப்போடும் திரு நாளைப் போவார்களுக்கு ‘தீர்க்க சூத்ரீ’ (Long Rope) என்று முத்திரை குத்துகிறார். இதற்கு ‘நீண்ட கயிறு’ என்று பெயர். நாமே இதை கற்பனை செய்து பார்க்கலாம். ஒரு மாட்டையோ நாயையோ கட்டிப் போடுபவன் நீண்ட கயிற்றால் அதைக் கட்டிப்போட்டால்

    Enjoying the preview?
    Page 1 of 1