Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Samskirutha Ponmozhigalum Tamil Pazhamozhigalum
Samskirutha Ponmozhigalum Tamil Pazhamozhigalum
Samskirutha Ponmozhigalum Tamil Pazhamozhigalum
Ebook288 pages1 hour

Samskirutha Ponmozhigalum Tamil Pazhamozhigalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாணவர்களுக்கும், மேடைப் பேச்சாளர்களுக்கும் உதவும் இரண்டாவது பொன்மொழித் தொகுப்பு நூல் இது. மற்ற பொன் மொழி நூல்களிலிருந்து வேறுபட்ட நூல் இது. இந்து மதம் தொடர்பான பொன்மொழிகள் இவை. இந்துக்கள் போற்றிவரும் பண்புகளை ஆயிரக்கணக்கான தமிழ் சம்ஸ்க்ருத நூல்கள் நமக்கு அளிக்கின்றன. இரண்டு மொழிகளிலும் 40,000 பழமொழிகளும் சுபாஷிதங்களும் உள்ளன. இதுவரை பொன் மொழிகள், பழ மொழிகள் அடங்கிய புஸ்தகங்கள் ஒவ்வொரு இந்திய மொழியிலும் நூற்றுக் கணக்கில் வெளியாகியுள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலும் வெளிநாட்டினர் பெயர்கள்தான் இருக்கும்; நம்மவர்களோ அதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அருமையான அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அவற்றைத் தாங்கி வரும் என்னுடைய இரண்டாவது தமிழ் நூல் இது.

Languageதமிழ்
Release dateFeb 4, 2023
ISBN6580153509520
Samskirutha Ponmozhigalum Tamil Pazhamozhigalum

Read more from London Swaminathan

Related to Samskirutha Ponmozhigalum Tamil Pazhamozhigalum

Related ebooks

Reviews for Samskirutha Ponmozhigalum Tamil Pazhamozhigalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Samskirutha Ponmozhigalum Tamil Pazhamozhigalum - London Swaminathan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

    Samskirutha Ponmozhigalum Tamil Pazhamozhigalum

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1.விவேகாநந்தரின் 30 அற்புதப் பொன் மொழிகள்!

    2. முக்கிய சித்தர் பாடல்கள் 31

    3. வளமான வாழ்வு பற்றிய 30 பழமொழிகள்

    4. ஜலே தைலம், கலே குஹ்யம், பாத்ரே தானம்!

    5. மாடு மேய்க்காமல் கெட்டது, பயிர் பார்க்காமல் கெட்டது!

    6.மர்தனம் குணவர்தனம்: குணங்கள் பற்றிய சம்ஸ்கிருத பழமொழிகள்

    7. பணம் பற்றிய தமிழ்ப் பொன் மொழிகள்

    8. மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள்

    9. மன்மத லீலை பற்றிய 31 பொன்மொழிகள்

    10. வேள்வி ,துறவி பற்றிய 30 பழமொழிகள்

    11. வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது - கல்வி

    12. விடாமுயற்சி ,உற்சாகம், உழைப்பு பற்றிய 31 பொன்மொழிகள்

    13.மௌனம், மானம், கர்வம் பற்றிய சம்ஸ்கிருத, தமிழ் பழமொழிகள்

    14. முப்பது வெற்றி வேற்கை பொன்மொழிகள்

    15. முக்கிய சிலப்பதிகாரப் பாடல்கள்-31

    16.மாணிக்கவாசகரின் 28 பொன்மொழிகள்

    17.நீதி வெண்பா பொன்மொழிகள்

    18. நீதி வெண்பா தொடர்ச்சி….

    19. மேலும் 30 நீதி வெண்பா பொன்மொழிகள்

    20. ரிக் வேத பொன்மொழிகள்--3 வது மண்டலம்

    21.நாலடியார் பொன் மொழிகள்

    22.சுந்தர காண்டப் பொன்மொழிகள் 31

    23. பொய்கை ஆழ்வார் பொன்மொழிகள் 31

    24. கம்பன் பொன்மொழிகள்

    25. கம்ப ராமாயண யுத்த காண்டப் பொன்மொழிகள்

    ‘26.கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’

    27. புறநானூற்றுப் பாடல்மேற்கோள்கள்

    28. திருமூலர் அருளிய திருமந்திரம் 31 முக்கியப் பாடல்கள்

    29. வீடு வரை உறவு, கடைசி வரை யாரோ?

    30. யார் நல்ல ஆசிரியர்?

    31.ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை, தோல்வியும் இல்லை-வால்மீகி

    32. ஒட்டகங்களுக்கு கல்யாணமாம்! கழுதைகள் கச்சேரியாம்!!

    33.இலக்கியம், கலைகள் பற்றிய சம்ஸ்கிருத பொன்மொழிகள்

    34.இலக்கியம் பற்றி 31 அற்புதப் பொன் மொ ழிகள்!

    35. இசையில் எண்-10, குளியல் முறைகள் பத்து வகை

    36.ஆசை பற்றி 30 பழமொழிகள்

    37. சாயம்காலத்தில் செய்யக்கூடாத ஐந்து செயல்கள்

    38.‘நல்லோர்கள் எங்கே பிறந்தாலுமென்?’ - நீதி வெண்பாவும் மனு நூலும்

    39.அரசன் என்பவன் தந்தை: தமிழ், சம்ஸ்கிருதப் புலவர்கள் பொன்மொழி

    40.கறுப்புப் பணம், வெள்ளைப் பணம், கறைபடிந்த பணம்!

    41.ஞயம்பட உரை; வெட்டெனப் பேசேல்; பழிப்பன பகரேல்; பிழைபடச் சொல்லேல்

    42. தீப்போல தகிக்கும் ஐந்து விஷயங்கள்

    43.டாக்டருக்கும் யமனுக்கும் வேறுபாடு என்ன?

    44.வீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன்

    45.நூறு வயதானவர்களின் மகிமை!

    46.தலையில் இருந்தால் முடி, கீழே விழுந்தால் மயிர்- வள்ளுவர் குறள்

    47.சூத்திரன் யார்? பிராமணன் யார்? ஜாதி வேறு, வர்ணம் வேறு- part 1

    48.சூத்திரன் யார்? பிராமணன் யார்? ஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 2

    49.அமிர்தமும் விஷமும்: மஹாபாரதம் தரும் அற்புத ஸ்லோகம்

    50.உலக நீதி ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

    51.நாய் வாலை நிமிர்த்த முடியாது!

    52.சூரியனுக்கு மகன் சனி! விளக்கிற்கு மகன் கருப்பு மை!!

    53. திரவுபதியை கிருஷ்ணன் காப்பாற்றியது ஏன்?

    முன்னுரை

    மாணவர்களுக்கும், மேடைப் பேச்சாளர்களுக்கும் உதவும் இரண்டாவது பொன்மொழித் தொகுப்பு நூல் இது. மற்ற பொன் மொழி நூல்களிலிருந்து வேறுபட்ட நூல் இது. இந்து மதம் தொடர்பான பொன்மொழிகள் இவை. இந்துக்கள் போற்றிவரும் பண்புகளை ஆயிரக்கணக்கான தமிழ் சம்ஸ்க்ருத நூல்கள் நமக்கு அளிக்கின்றன. இரண்டு மொழிகளிலும் 40,000 பழமொழிகளும் சுபாஷிதங்களும் உள்ளன. இதுவரை பொன் மொழிகள், பழ மொழிகள் அடங்கிய புஸ்தகங்கள் ஒவ்வொரு இந்திய மொழியிலும் நூற்றுக் கணக்கில் வெளியாகியுள்ளன . ஆனால் அவற்றில் பெரும்பாலும் வெளிநாட்டினர் பெயர்கள்தான் இருக்கும்; நம்மவர்களோ அதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அருமையான அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அவற்றைத் தாங்கி வரும் என்னுடைய இரண்டாவது தமிழ் நூல் இது. இதற்கு முன்னரே ஆங்கிலத்தில் இரண்டு பொன் மொழித் தொகுப்புகளை வெளியிட்டேன்.

    ஏனையோர் வெளியிட்ட இவ்வகை நூல்களில் ஒரு பெரிய குறை உண்டு. விஷயம் வாரியாக இல்லாத (No subject wise presentation) குறை ; மற்றும் பேசிய பிரமுகர் வாரியாக இல்லாத குறை (No personality wise quotations) ; குறள், கீதை பொன்மொழிகள் வெவ்வேறு இடங்களில் இருக்கும்; காந்தி, பாரதியார், மேற்கோள்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கும். திருக்குறள் போல விஷயம் வாரியாக இல்லாததால் கட்டுரை எழுதும் மாணவர்களும், மேடைப் பேச்சாளர்களும் தனக்கு வேண்டிய விஷயங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

    மற்றொரு குறை கீதை, குறள், பட்டினத்தார், மாணிக்கவாசகர் மேற்கோள்கள் என்றால் அவர்கள் எந்த இடத்தில் அதைச் சொன்னார்கள் என்று இராது. குறள், கீதை பாடல் (No reference) எண்களைக் காண முடியாது. இன்னும் சிலர் காந்தி பெயரிலும் பிற தலைவர்கள் பெயரிலும் வெளியிடுவது அவர்கள்தான் சொன்னார்களா என்ற ஐயப்பாட்டைக் கிளப்பும். அடுத்த குறை நம் நாட்டுக்காரர்களை விட்டுவிட்டு அதிகமாக வெளிநாட்டுக்காரர் (More foreign Quotations) மேற்கோள்களை மட்டும் கூறுவது ஆகும். இந்தக் குறைகளை நீக்க 2014 -ம் ஆண்டு முதல் மாதம்தோறும் எனது பிளாக் (BLOGS) குகளில் மாத காலண்டர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் பொன்மொழிகளுடன் வழங்கினேன். தனித்தனியாக ஆண்டுக்கு 365 + 365 (Tamil and English Quotes) மேற்கோள்களை நற்சிந்தனை (Good Thoughts) காலண்டர் என்ற பெயரில் வெளியிட்டு வந்தேன். அவற்றில் பல விஷயங்களைத் தொகுத்து இந்த நூலில் அளிக்கிறேன்.

    பெயருக்கு ஆயிரம் என்று சொல்லியுள்ளேன்; எண்ணிப் பார்க்கவில்லை; அதைவிடக் கூடுதலாக இருக்கவும் கூடும்; முடிந்த மட்டில் மேற்சொன்ன குறைகளைத் தவிர்க்கும் வகையில் பொன்மொழிகளைத் தொகுத்து வருகிறேன். என்னுடைய ‘பிளாக்’குகளில் நிறைய படங்களுடன் வெளியிட்டேன் ; இங்கே படங்கள் அதிகம் இராது. மேலும் தொடர்நது எனது நூல்களை வெளியிட்டுவரும் Pustaka.co.in அமைப்புக்கு என் நன்றி; அனைவரும் அவர்களுக்கு ஆதரவு நல்கி, மக்களுடைய அறிவினைப் பெருக்குவோம் .

    அன்புள்ள

    லண்டன் சுவாமிநாதன்

    1.விவேகாநந்தரின் 30 அற்புதப் பொன் மொழிகள்!

    இந்த மேற்கோள்கள் எல்லாம் எழுமின்! விழிமின்! என்ற விவேகானந்த கேந்திர வெளியீட்டில் இருந்து எடுக்கப்பட்டவை; நன்றி.

    ***

    தன்னம்பிக்கை இலாதவன் தான் நாஸ்தீகன்.. கடோபநிஷதத்தைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கும். நசிகேதன் சொல்கிறான், நான் பலரினும் மேம்பட்டவன்; எவருக்கும் தாழ்ந்தவனல்லன்; எங்குமே நான் கடைசி அல்ல; ஏதாவதொன்றைச் செய்ய முடியும் – பக்கம் 81

    ***

    நசிகேதனின் நம்பிக்கையுடன் 12 சிறுவர்கள் கிடைத்தால் இந்த நாட்டின் சிந்தனையையும், நாட்டங்களையும், அபிலாஷைகளையும் புதியதொரு பாதையில் என்னால் திருப்பிவிட்டுவிட முடியும் – பக்கம் 206

    ***

    படித்த இளஞர்களை ஒன்றுதிரட்டி இணையுங்கள். புல்லைக்கூட கயிறாகத் திரித்துப் பின்னிப் இணைத்தால் அதைகொண்டு மத யானையையும் கட்டிப் போட்டுவிட முடியும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள் -–பக்கம் 207

    ***

    பெரிய கோப அலை மனதில் எழுந்தால் அதற்கு எதிரிடையான ஒரு அலையை எழுப்புவதால் கோபத்தைக் கட்டுப் படுத்தலாம்.அப்பொழுது அன்பைப் பற்றி நினைக்க வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே கடும் கோபம் நிலவும் நேரத்தில் குழந்தை உள்ளே வருகிறது. குழந்தையை அவள் அணைத்து முத்தமிடுகிறாள். அங்கே பழைய கோப அலை செத்துப் போய் புதிய அன்பு அலை எழுகிறது. –பக்கம் 203

    ***

    தோல்விகள் வாழ்க்கையை அழகு பண்ணுகின்றன. அவையின்றி வாழ்வு எப்படி இருக்கும்? போராட்டங்கள் இல்லை என்றால் வாழ்க்கையே வாழத் தகுதி அற்றதாகிவிடும். வாழ்க்கையாகிற கவிதை எங்கே இருக்கும்? –பக்கம் 194

    ***

    சோதிடம், ரகசிய வித்தைகள் இவற்றை எல்லாம் நாடுவது பொதுவாக பலவீனமான மனதின் அறிகுறி. ஆகவே இப்படி எண்ணம் வரும்போது ஒரு டாக்டரிடம் உடம்பைக் காட்டி, நல்ல உணவு சாப்பிட்டுவிட்டு, ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்–பக்கம் 191

    ***

    ஓவியம் தீட்டுகிறவன், தான் என்ற அஹங்காரத்தை இழந்துவிட்டுத் தனது ஓவியத்தில் மூழ்கி விடுவானாயின், அவனால் உன்னதமான ஓவியங்களைத் தீட்டமுடியும். யோகத்தின் மூலம் இறைவனுடன் ஒன்றிவிட்ட மனிதன் தன்னலம் கருத மாட்டான். எல்லாக் காரியங்களையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கீதை உபதேசிக்கிறது. –பக்கம் 185

    ***

    பண ஆசையோ, புகழ் ஆசையோ, வேறெந்த ஆசையோ இன்றி, வேறு எந்த உள் நோக்கமும் இல்லாமல், வேலை செய்கிறவன் தான் மிகச் சிறப்பாக வேலை செய்யமுடியும். அவ்வாறு ஒரு மனிதனால் வேலை செய்ய முடியும் பொழுது அவன் ஒரு புத்தன் ஆகி விடுவான். --பக்கம் 182

    ***

    நாம் எல்லாம் பிச்சைக்காரர்கள். நாம் எதைச்செய்தாலும் பிரதிபலனை எதிர்பார்க்கிறோம். நாம் எல்லாம் வியாபாரிகள்; வாழ்க்கையை, நல்ல குணங்களை, சமயத்தை நாம் விலை பேசுகிறோம்.அந்தோ! அன்பைக் கூட நாம் வியாபாரம் பண்ணுகிறோமே! பக்கம் 181

    ***

    மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்தை வெளிப்படுத்துவதே கல்வி எனப்படும். மனிதனுக்குள் புதைந்திருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துவதே சமயம் எனப்படும்—பக்கம் 173

    ***

    ஒரு தலைவனிடம் ஒழுக்கம் இல்லாவிட்டால் அவனிடம் மக்களுக்குப் பக்தி ஏற்பட முடியாது. அவனிடம் மாசு மறுவற்ற தூய்மை இருக்குமாயின் மக்களுக்கு அவனிடம் நிரந்தரமான பக்தியும் நம்பிக்கையும் நிச்சயமாக இருக்கும் – பக்கம் 168

    ***

    மகாவீர ஹனுமானின் ஒழுக்கப் பண்பினை உங்களது லட்சியமாக நீங்கள் ஆக்கிக்கொள்ள வேண்டும். ராமச் சந்திரனின் ஆணையால் அவர் எவ்வாறு கடலைக் கடந்தார் என்று பாருங்கள், வாழ்வையோ, சாவையோ பற்றி அவர் ஒரு சிறிதும் அக்கறைப் படவில்லை. புலன்களனைத்தும் அவர் வசப்பட்டிருந்தன. ஆச்சரியமான விவேகி அவர். எப்படித் தொண்டாற்ற வேண்டும் என்பதற்கு பெரும் உதாரணமாக விளங்கிய அவரது வாழ்க்கையை ஒட்டி நீங்கள் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் --பக்கம் 176

    ***

    உலகத்தின் பாரங்களை எல்லாம் சுமக்க நீங்கள் ஆயத்தம் என்றால் தாராளமாக அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்..ஓர் எருதின் கொம்பில் ஒரு கொசு நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தது. அதற்கு மனச் சாட்சி உறுத்தவே, மன்னிக்கவும் நான் உங்களைத் தொந்தரவு செய்து விட்டேன்; போய்விடுகிறேன் என்றது. எருதோ, தொந்தரவு எதுவுமில்லை. உங்கள் குடும்ப சகிதமாக வந்து உட்கார்ந்து விட்டுப் போங்கள். நீங்கள் என்னை என்ன செய்துவிட முடியும் என்றது. – பக்கம் 194

    ***

    யாருக்குக் கீழ்ப்படிதல் தெரியுமோ, அவனுக்குத் த்லைமை தாங்கவும் தெரியும். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள். மேலை நாட்டினரிடையே சுதந்திர உணர்ச்சி தீவிரமானதாக இருந்தாலும், கீழ்ப்படிகிற உணர்ச்சியும் அதே அளவுக்குத் தீவிரமாக உள்ளது – பக்கம் 166

    ***

    ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தே செல்ல வேண்டும். முதலில் அதனை இகழ்ச்சியாக நினைப்பார்கள்; இரண்டாவதாக எதிர்ப்பு வரும்; மூன்றாவதாக தனை ஒப்புக் கொள்வார்கள் – பக்கம் 164

    ***

    ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல் நிலைக்கு உயர்த்தி இருக்கிறீர்களா? எங்காவது பல்வீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள். அவர்கள் நிலங்களில் நீங்கள் குடி ஏறி இருக்கிறீர்கள். உங்களுடைய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுஜிலாந்து, பசிபிக் தீவுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வரலாறு என்ன? தாம் வாழ்வதற்காக மற்ற னைவரையும் அழிப்பது ஐரோப்பிய மக்களின் குறிக்கோள் ஆகும் – பக்கம் 136

    ***

    பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று ஹிந்து மஹா சமுத்திரத்துக்கு அடியிலுள்ள எலா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும்கூட, நீங்கள் இன்று எங்கள் மீது சேறு வீசுகிற அளவில் தினையளவுகூடப் பதிலுக்குப் பதில் செய்ததாக ஆகாது. --- பக்கம் 156

    ***

    ஆரியர்கள் வெளி நாட்டிலிருந்து படை எடுத்து வந்தார்கள் என்றும் பூர்வீக குடிகளிடமிருந்து அவர்களுடைய நிலங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள் என்றும், அவர்களை நிர்மூலமாக்கிவிட்டுப் பாரதத்தில் குடி ஏறினார்கள் என்றும் கூறுகிறார்கள். இதெல்லாம் கலப்படமற்ற பொய்; முட்டாள்தனமான பேச்சு ஆகும்; இந்த ராட்சதப் புளுகுகள் எல்லாம் நமது பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்படு வருகின்றன. இது உண்மையில் மிக மிக மோசமான செயல் ஆகும். – பக்கம் 134

    ***

    நாம் அச்சமற்ற உயர்ந்த வீராங்கனைகளைத் தோற்றுவிப்போம். சங்க மித்திரை, மீரா, அஹல்யா, லீலா முதலியோர் விட்டுச் சென்ற உயர் பரபம்பரையைப் பின்பறக்கூடிய பெண்மணிகளை உண்டாக்குவோம். தியாகிகளை, திருத் தொண்டர்களை, வீரர்களைப் பெற்றெடுக்கும் தாய்மார்களாக அவர்களை நாம் உருவாக்குவோம் – பக்கம் 128

    ***

    உபநிடதங்கள், பெரும் சக்திச் சுரங்கமாகும். உலகம் முழுவதற்கும் வீரமளிக்கப் போதுமான அளவு சக்தி இதற்கு உண்டு. இதைக்

    Enjoying the preview?
    Page 1 of 1