Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rathey Unakku Kobam Aagathadi!
Rathey Unakku Kobam Aagathadi!
Rathey Unakku Kobam Aagathadi!
Ebook187 pages1 hour

Rathey Unakku Kobam Aagathadi!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பல்வேறு நூல்களைப் படிக்கையில் நம் மனதில் பல்வேறு எண்ணங்கள் நிழல் ஆடுகின்றன. சில விஷயங்களை மற்ற நூல்களிலும் கண்ட நினைவு வந்தால் உடனே அவற்றை ஒப்பிடத் தோன்றுகிறது. 35-க்கும் மேலான கட்டுரைகள் அடங்கியதே இந்த நூல்.

கோபம், கண்ணாடி, நால்வகைப் படைகள், ஐம்பெரும் பூதங்கள், எண்களில் 5, 9, 10 ஆகியவற்றின் மகிமை என்ற வேறு பல ‘சம்பந்தா சம்பந்தமில்லாத’ விஷயங்களும் இதில் வருகின்றன. ஆனால் எவையும் வெற்று அரட்டை அல்ல; நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்களே. இப்படி பல துறைகளை விவாதிக்கும் புஸ்தகத்துக்குப் பெயர் இடுவதுதான் கடினம். ஏனெனில் எந்தத் தலைப்புக் கொடுத்தாலும் அது புஸ்தகத்தின் உள்ளடக்கம் முழுவதையும் காட்டாது. ஆகவே ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்ற முதல் கட்டுரையின் தலைப்பையே கொடுத்துவிட்டேன்.

Languageதமிழ்
Release dateNov 26, 2022
ISBN6580153509265
Rathey Unakku Kobam Aagathadi!

Read more from London Swaminathan

Related to Rathey Unakku Kobam Aagathadi!

Related ebooks

Related categories

Reviews for Rathey Unakku Kobam Aagathadi!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rathey Unakku Kobam Aagathadi! - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி!

    (கட்டுரைத் தொகுப்பு)

    Rathey Unakku Kobam Agathadi!

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.ராதே உனக்குக் கோபம் ஆகாதடி! அதர்வண வேதம் முதல் பாரதி வரை!

    2.அற்புத உவமை- சேர்ந்தாரைக் கொல்லி: அக்னி பகவான்!

    3.ராமரின் வில் பெரிதா? சீதையின் சொல் பெரிதா?

    4.பாரதியும் கம்பனும்: சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பார்கள்

    5.ஏரிக்கடியில் அரண்மனை: காளிதாசன், வால்மீகி தரும் அதிசய தகவல்

    6.மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது!

    7.என்ன பரிசு கொடுக்கலாம்?

    8.பாண்டிய மன்னனின் அளவற்ற பக்தி!

    9.கவிதையில் இலக்கண அதிசயம்!

    10.ஒரு சந்தேகம்- அந்தணர் என்போர் யார்?

    11.கழகத்தில் சேராதே: தமிழர்களுக்கு எச்சரிக்கை!

    12.கண்ணாடி புராணம்! ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல’

    13.காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை

    14.கொம்புள்ள மாட்டுக்கு 5 முழம் போதும், தீயோருக்கு...

    15.தமிழ்நாட்டின் எல்லை ‘திருப்பதி’தான்!

    16.நால்வகைப் படைகள்: மகாபாரதம்- தமிழ் இலக்கிய ஒற்றுமை!

    17.பஞ்சபூதங்களைக் கண்டுபிடித்தது யார்?

    18.பத்தாம் நம்பர்! மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10! ஏன்?

    19.பயப்பட வேண்டும்: வள்ளுவர் அறிவுரை!

    20.பாட்டன், பூட்டன், ஓட்டன் = பாட்டி, பூட்டி, ஓட்டி: தேவாரம் தரும் அதிசய தகவல்

    21.தீபாவளி பற்றி நாம் அறியாத விஷயங்கள்

    22.பெரியோர்கள் மரணம் பற்றிய உண்மைகள்

    23.மனிதர்களைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மையே!

    24.ஏகாதசி கதை, ருக்மாங்கதன் கதை

    25.கல்வி பற்றி இந்துக்களின் அபூர்வ கண்டுபிடிப்பு

    26.குமரியில் புகழ்மிகு சிலைகள்

    27.கெட்டவன் அருகில் நல்லவன் வசிப்பது முடியாது!

    28.சங்கீத ரகசியம்: இளமையில் கல்

    29.சம்ஸ்க்ருதம் பற்றிய இரண்டு அரிய செய்திகள்!

    30.உலகத்தை உண்மை தாங்குகிறது! சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம்

    31.சோம பானம் பருகுவோம் வாரீர்!

    32.மூன்று வகையான வெற்றிகள்

    33.மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது!

    34.தொல்காப்பியத்தில் எண்.9

    35.நாட்டின் பெயர் பாரதம் என்று எப்படி வந்தது? புதிய விளக்கம்

    36.பத்து சந்யாசிகள் பிரிவு

    37.பாவங்களும் அஜீரணமும்: மஹாபாரதத்தில் விசித்திர உவமை

    முன்னுரை

    பல்வேறு நூல்களைப் படிக்கையில் நம் மனதில் பல்வேறு எண்ணங்கள் நிழல் ஆடுகின்றன. சில விஷயங்களை மற்ற நூல்களிலும் கண்ட நினைவு வந்தால் உடனே அவற்றை ஒப்பிடத் தோன்றுகிறது. தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு (குறள் 396) என்று வள்ளுவன் சொன்னது உண்மையே. அப்பரின் தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாசகம், கம்பனின் ராமாயணம்,, வள்ளுவனின் குறள், பாரதியின் பாக்கள் ஆகிய எதைப்படித்தாலும் புதிய கருத்துக்கள் மனதில் எழுகின்றன.அப்படி எழுந்த கருத்துக்களை அவ்வப்போது எனது ‘பிளாக்’குகளில் எழுதி வந்தேன். அப்படிப்பட்ட 35-க்கும் மேலான கட்டுரைகள் அடங்கியதே இந்த நூல். கோபம், கண்ணாடி, நால்வகைப் படைகள், ஐம் பெரும் பூதங்கள், எண்களில் 5, 9, 10 ஆகியவற்றின் மகிமை என்ற வேறு பல ‘சம்பந்தா சம்பந்தமில்லாத’ விஷயங்களும் இதில் வருகின்றன. ஆனால் எவையும் வெற்று அரட்டை அல்ல; நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்களே. இப்படி பல துறைகளை விவாதிக்கும் புஸ்தகத்துக்குப் பெயர் இடுவதுதான் கடினம். ஏனெனில் எந்தத் தலைப்புக் கொடுத்தாலும் அது புஸ்தகத்தின் உள்ளடக்கம் முழுவதையும் காட்டாது. ஆகவே ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்ற முதல் கட்டுரையின் தலைப்பையே கொடுத்துவிட்டேன். முதலில் பொருளடக்கத்தைப் பாருங்கள். பிடித்த கட்டுரைகளை, முதலில் படியுங்கள்; உங்கள் நேரம் வீண் போகாது என்ற உறுதி மொழியை மட்டும் நான் கொடுக்கிறேன்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    நவம்பர் 2022

    1.ராதே உனக்குக் கோபம் ஆகாதடி! அதர்வண வேதம் முதல் பாரதி வரை!

    கோபத்துக்கு எதிராக வேதம் சொல்லும் கருத்து, பாரதி மற்றும் பாபநாசம் சிவன் பாடல்கள் வரை எப்படியெல்லாம் பரவியது என்பதைக் காண்போம்.

    ராதே உனக்கு கோபம் ஆகாதடி என்ற பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் எம்.கே தியாகராஜ பாகவதர் (MKT) மூலமாக அறிமுகமாகியது. பின்னர் பலரும் அதை மாற்றி, மாற்றி, பல பிற்காலத் திரைப் படங்களில் பயன்படுத்தினர். காலத்தால் அழியாத இந்தக் கவிதை, ‘கோபம் கூடாது’ என்பதை மனதில் நன்கு படிய வைக்கிறது.

    வள்ளுவனோ சினம்/வெகுளாமை என்ற தலைப்பில் பத்து குறள்களைத் தந்தான். ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்று சினத்தை சம்ஸ்க்ருத மொழியில் இருந்து (குறள் 305- ஆஸ்ரயாஸஹ ) மொழிபெயர்த்தும் தருகிறார். ஒருவனுக்கு கோபம் இல்லாவிடில் அற்புதங்களைச் செய்யலாம் என்கிறான் வள்ளுவன்; ‘உள்ளியதெல்லாம் உடனெய்தும்’ (குறள் 309) என்பான். இதை இந்து சாது, சன்யாசிகளின் வாழ்வில் நாம் காண்கிறோம்.

    பாரதியும் ‘கோபத்தைக் கொன்றுவிடு’ என்று பாடுகிறான். ஆனால் ‘ரெளத்திரம் பழகு’, என்றும் ‘சீறுவோர்ச் சீறு’ என்றும் ஆத்திச் சூடியில் எச்சரிக்கிறான். யாரேனும் தரும விரோதக் செயல்களைச் செய்தால் கோபம் கொள்ளுவதில் தவறில்லை என்பான்.

    "அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்

    அப்போது சாவுமங்கே அழிந்து போகும்"

    என்பது பாரதியின் அருள்வாக்கு

    "சினங்கொள்வார் தம்மைத்தாமே தீயார் சுட்டுச்

    செத்திடுவாரொப்பார்; சினங்கொள்வார் தாம்

    மனங்கொண்டு தம் கழுத்தைத் தாமே வெய்ய

    வாள்கொண்டு கிழித்திடுவார்"

    சினம் என்பது ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்ற வள்ளுவன் கருத்தை பாரதி சொன்னதோடு, கோபம் என்பது வலியப் போய் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம் என்றும் செப்புகிறான்.

    அதே பாடலில் பாரதி,

    "கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;

    கொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்

    ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும்;

    அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;

    தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;

    கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;

    கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்

    கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே"

    என்பான்.

    கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இந்த வெகுளாமை என்னும் lesson பாடம் அவைகளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதர்வண வேதத்தில் இருந்து வந்தது என்பது பலருக்கும் தெரியாது; வேதத்தில் இல்லாத விஷயம் வெளியில் இல்லை!

    ***

    அதர்வண வேதப் பாடல்

    காண்டம் 6; துதி 42 (சூக்தம் 215)

    1.வில்லிலிருந்து விடுபட்ட அம்பினைப் போல உன்னுடைய இதயத்திலிருந்து கோபத்தை விரட்டுகிறேன்; நாம் இருவரும் ஒருமித்த மனதுடன் நண்பர்களாக உலா வருவோம்.

    2.நாம் நண்பர்களாக நடந்து செல்லுவோம்; நான் உனது கோபத்தை நீக்குகிறேன்; நான் உன்னு டைய கோபத்தைக் குழி தோண்டிப் புதைக்கிறேன்

    3. நான் உனது கோபத்தை என் கால்களுக்கு அடியில் போட்டு நசுக்குகிறேன் நீ அடங்கி நட; இனியும் எதிர்த்துப் பேசாதே

    இதற்குப் பழைய விளக்கம்:

    இரண்டு நண்பர்கள் இடையே இருந்த கோப தாபத்தை நீக்கும் பாடல் என்பதாகும்; இதைப் படித்துவிட்டு பாபநாசம் சிவனின் ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்ற பாடலைப் படித்தால், பொருள் இன்னும் நன்றாக விளங்கும்.

    ***

    எனது வியாக்கியானம்

    இதில் ‘உன்னுடைய’ என்பது எதிரில் உள்ள நண்பனிடம் சொல்லுவது அன்று; நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் AUTO SUGGESTION ஆட்டோ சஜ்ஜஷன் கட்டளை இது.

    நீ ஒரு முக்கியமான ஆளை சந்திக்கப் போகிறாய். அவன் உன்னைக் கோபப்படுத்தி மடக்குவதற்காக உன்னை ஏசுவான்; ஏமாந்துவிடாதே; ஜாக்கிரதை; கோபப்பட்டு ஏதேனும் கத்திவிடாதே; அத்தனையையும் ரிக்கார்ட் செய்து உனக்கு எதிராகப் பிரசாரம் செய்வான்- என்பது ஒரு விளக்கம்

    இதோ பார்; நீ ஆன்மீக தாகம் கொண்டுள்ளாய்; விசுவாமித்திரன் கோபத்திலும், காமத்திலும், அஹங் காரத்திலும் தபோ பலத்தை வீணாக்கி, ஒவ்வொரு முறையும், வசிட்டரிடம் தோற்றான். ஆகையால் ஏமாறாமல் கோபத்தை ஒழித்துவிட்டால் நீ முன்னேறுவாய்.. இதுதான் சரியான பொருள்.

    இப்போது பாரதி பாடலைப் படியுங்கள்; அதர்வண வேதம் மனதுக்கு இடும் ஆட்டோசஜ்ஜெஷன் AUTO SUGGESTION கட்டளைதான் அந்த துதி

    இதையே வள்ளுவனும் சொல்கிறான்.

    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

    தன்னையே கொல்லும் சினம்

    – குறள் 305

    சினம் பற்றிய பத்து குறள்களையும் துறவறவியலில் வள்ளுவன் செப்பியது குறிப்பிடத் தக்கது. அதாவது வெகுளாமை வந்த பின்னரே வசிட்டர் வாயால் விசுவாமித்திரனுக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது. முதல் மோதலே வசிட்டனின் காமதேனுவைப் பறித்தவுடன் அதை வசிட்டன் தடுக்க, கோபக்கனல் பொங்க படைகளை ஏவினான் விசுவாமித்திரன் என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்

    கி.மு. 3150 வாக்கில், அதாவது இற்றைக்கு 5150 ஆண்டுகளுக்கு முன்னர் வேதத்தை நான்காகப் பிரித்து 4 சீடர்களிடம் கொடுத்து இதை எழுதக் கூடாது வாய் மொழியாகப் பரப்புங்கள் என்றார் வியாசர்.

    அந்தக் கட்டளையை சிரமேற்கொண்டு இன்றுவரை நமக்கு அதர்வண வேத மந்திரத்தை அளித்த பார்ப்பானுக்கு பல கோடி நமஸ்காரங்கள் உரித்தாகுக

    பார்ப்பான் வாழ்க; வேதம் வாழ்க; சம்ஸ்க்ருத மறையை தமிழ் மறையாக நமக்கு அளித்த வள்ளுவன் வாழ்க

    வெகுளாமை என்னும் அதிகாரத்தின் கீழ் உள்ள பத்துக் குறட்களையும் பத்து முறை படியுங்கள்.

    ***

    பாபநாசம் சிவன் பாடல்

    ராதே உனக்கு...

    FROM WWW.LAKSHMANSRUTHI.COM (THANKS TO LAKSHMAN SRUTHI)

    படம். சிந்தாமணி

    வருடம். 1937

    பாடல். பாபநாசம் சிவன்

    பல்லவி.

    ராதே உனக்கு கோபம்

    Enjoying the preview?
    Page 1 of 1