Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Singapore-il Siva Peruman! Sindhu Samaveliyil Sivalingam!!
Singapore-il Siva Peruman! Sindhu Samaveliyil Sivalingam!!
Singapore-il Siva Peruman! Sindhu Samaveliyil Sivalingam!!
Ebook126 pages45 minutes

Singapore-il Siva Peruman! Sindhu Samaveliyil Sivalingam!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சைவ சம்பந்தமான பல சுவையான விஷயங்களை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எனது இரண்டு பிளாக்குகளிலும் எழுதி வந்தேன். அவைகளில் 25க்கும் மேலான கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூர், மெரிஷியஸ் தீவுகள், அஸ்ஸாமில் உள்ள சிவன் கோவில்கள், சிலைகள் பற்றியும், அப்பர் என்ற திருநாவுக்கரரின் தேவாரத்தில் சொல்லப்பட்ட பல நல்ல உவமைகள் பற்றியும் நான் எழுதிய விஷயங்கள் நூலுக்கு மெருகு ஊட்டும் என்பதில் ஐயமில்லை. சிந்து சமவெளி நாகரீகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருவங்கள் 'லிங்கம் - யோனி' என்று ஜான் மார்ஷல் சொன்னவை பற்றிய சர்ச்சையும் விவாதிக்கப்பட்டுள்ளது. இடையே அம்பர் லிங்கம், ஆயிரம் கால் மண்டபம், தஞ்சை பெரியகோவில் தொடர்பான அதிசயங்களும் பலருக்கும் வியப்பை ஊட்டும். பட்டினத்தாரின் உவமைகளும் , திருவண்ணாமலை கோவிலின் விநோதச் சடங்குகளும் பலரும் அறியாத விஷயங்களே…

Languageதமிழ்
Release dateJul 30, 2022
ISBN6580153508939
Singapore-il Siva Peruman! Sindhu Samaveliyil Sivalingam!!

Read more from London Swaminathan

Related to Singapore-il Siva Peruman! Sindhu Samaveliyil Sivalingam!!

Related ebooks

Related categories

Reviews for Singapore-il Siva Peruman! Sindhu Samaveliyil Sivalingam!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Singapore-il Siva Peruman! Sindhu Samaveliyil Sivalingam!! - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிங்கப்பூரில் சிவபெருமான்! சிந்து சமவெளியில் சிவலிங்கம்!!

    (ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு)

    Singapore-il Siva Peruman! Sindhu Samaveliyil Sivalingam!!

    (Aaraichi Katturaigalin Thoguppu)

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியரைப் பற்றி

    முன்னுரை

    1.சிங்கப்பூரில் சிவபெருமான்! வியட்நாமில் முருகன்!!

    2.சிவ பெருமானுக்கு மீசை! விஷ்ணுவுக்கு 'ஷேவ்' ஏன்?

    3.சிவபக்தன் சேரன் செங்குட்டுவன்!

    4.அம்பர் லிங்கம் அதிசயம் நிகழ்த்தும்!

    5. நான்கு வகை தட்சிணாமூர்த்தி!

    6. ஸ்ரீ ருத்ர மஹிமை (நமகமும் சமகமும்)

    7. சிவனுக்குரிய எட்டு பூக்கள்: அப்பர், மாணிக்க வாசகர் தரும் தகவல்

    8.பட்டினத்தாரும் பம்பர விளையாட்டும்!

    9.பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை

    10.தஞ்சாவூர் பெரிய கோவில் அதிசயங்கள்

    11.உலக அதிசயம்: 1000 கால் மண்டபம்!!

    12.கோவில்கள் பற்றி அப்பர் தரும் அதிசயத் தகவல்

    13.மதுரை அருகில் அதிசய நந்தி உருவம் கண்டுபிடிப்பு

    14.சிவபெருமானுக்கு நக்கீரர் சவால்

    15.உயர்ந்த சிவன் கோவிலும், பெருமாள் கோவிலும்

    16.நமது உடலுக்கு ஒன்பது வாசல்! நவத்வார புரி!

    17.சைவத்தில் எட்டு, வைணவத்தில் எட்டு!

    18.பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர், அப்பர் செப்பல்

    19.இருதலைக் கொள்ளி எறும்பு! அப்பர் பெருமான் தவிப்பு!

    20.அப்பரும் ஆழ்வார்களும்- ஒரு ஒப்பீடு

    21.பாம்பும் பார்வதியும்- அப்பர் நகைச்சுவை!

    22.கங்கையில் புனித நீராடுவோர் பற்றி பார்வதி கேள்வி!

    23.Q & A ஆயிர மாமுக கங்கை என்று அப்பர் தேவாரத்தில் எங்கு வருகிறது?

    24.கரும்பு பிடிக்குமா? இரும்பு பிடிக்குமா?அப்பர் கேள்வி

    25.காதல் பைத்தியமும் பக்திப் பைத்தியமும்

    26.ஏணியா, தோணியா? எது வேண்டும்?

    27.சிந்துசமவெளியில் ‘லிங்கம்’ வழிபாடு?

    28.திருவண்ணாமலை கோவிலில் சில விநோதச் சடங்குகள்

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக் கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ.பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

    தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது , லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI ) பணியாற்றினார் . 1992 முதல் லண்டன் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக் கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் (Dr Stuart Blackburn) இணைந்து செயல்பட்டார் 2014 முதல் ஒய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 25 புஸ்தகங்களையும் 7000 கட்டுரைகளையும் எழுதியள்ளார் 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ .சந்தானம் (V.SANTANAM) , மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார் .

    லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும் பிளாக் விவரங்களும் பின் வருமாறு:-

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    LONDON MOBILE NUMBER – 07951 370697

    Two Blogs:-

    tamilandvedas.com

    swamiindology.blogspot.com

    முன்னுரை

    சைவ சம்பந்தமான பல சுவையான விஷயங்களை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எனது இரண்டு பிளாக்குகளிலும் எழுதி வந்தேன். அவைகளில் 25க்கும் மேலான கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. முன்னர் அருணகிரிநாதரின் திருப்புகழ், மாணிக்க வாசகரின் திருவாசகம், திருமூலரின் திருமந்திரம் பற்றிய கட்டுரைகள் அடங்கிய இரண்டு புஸ்தகங்கள் வெளியிடப்பட்டன. வாசகரின் வரவேற்பைப் பொறுத்து ஏனைய கட்டுரைகளையும் நூலாக்குவேன்.

    சிங்கப்பூர், மெரிஷியஸ் தீவுகள், அஸ்ஸாமில் உள்ள சிவன் கோவில்கள், சிலைகள் பற்றியும், அப்பர் என்ற திருநாவுக்கரரின் தேவாரத்தில் சொல்லப்பட்ட பல நல்ல உவமைகள் பற்றியும் நான் எழுதிய விஷயங்கள் நூலுக்கு மெருகு ஊட்டும் என்பதில் ஐயமில்லை. சிந்து சமவெளி நாகரீகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருவங்கள் 'லிங்கம் - யோனி' என்று ஜான் மார்ஷல் சொன்னவை பற்றிய சர்ச்சையும் விவாதிக்கப்பட்டுள்ளது. இடையே அம்பர் லிங்கம், ஆயிரம் கால் மண்டபம், தஞ்சை பெரியகோவில் தொடர்பான அதிசயங்களும் பலருக்கும் வியப்பை ஊட்டும். பட்டினத்தாரின் உவமைகளும் , திருவண்ணாமலை கோவிலின் விநோதச் சடங்குகளும் பலரும் அறியாத விஷயங்களே…

    அப்பருடன் 60 வினாடி பேட்டி ,தாயுமானவருடன் 60 வினாடி பேட்டி ,சுந்தரருடன் 60 வினாடி பேட்டி,

    திருஞான சம்பந்தருடன் 60 வினாடி பேட்டி,பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி --முதலிய பேட்டிகள் 'தொல்காப்பியர் முதல் பாரதி வரை' என்ற புஸ்தகத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவர்களுடைய பொன்மொழிகள் தனியே வேறு ஒரு நூலில் வெளியிடப்படும். 6000 ஆங்கில, தமிழ் பொன்மொழிகள் என்னுடைய பிளாக்குகளில் 2014ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டுள்ளன.)

    வாசகர்களின் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன். அதற்காக எனது தொடர்பு முகவரிகளையும் கொடுத்துள்ளேன் இந்த நூல் வெளியாகையில் என்னுடைய முந்தைய 25 நூல்களில் சில நூல்களையாவது நீங்கள் படித்து மகிழ்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    ஜூலை 2022

    1.சிங்கப்பூரில் சிவபெருமான்! வியட்நாமில் முருகன்!!

    சிங்கப்பூர் மியூஸியத்தில் சிவபெருமானின் கவசம் உளது. இதே போல பெர்லின் மியூஸியத்திலும் ஒரு சிவலிங்க கவசம் இருக்கிறது. வியட்நாம், கம்போடியா முதலிய தென் கிழக்காசிய நாடுகளை 1500 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்த மன்னர்கள் சிவலிங்கத்தை ஸ்தாபித்து அதற்கு சிவ பெருமானின் முகத்தைத் தங்கத்தால் செய்து வழிபட்டனர். முஸ்லீம்களும் பௌத்தர்களும், கிறிஸ்தவர்களும் வந்து இந்துக்களை மதம் மாற்றியவுடன் இந்து சிலைகள் மியூஸியங்களுக்குப் போய்விட்டன.

    இது தவிர

    Enjoying the preview?
    Page 1 of 1