Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil, Hindu Madham Pattriya 60 Thalaipugalil 600 Kelvi-Pathilgal!!
Tamil, Hindu Madham Pattriya 60 Thalaipugalil 600 Kelvi-Pathilgal!!
Tamil, Hindu Madham Pattriya 60 Thalaipugalil 600 Kelvi-Pathilgal!!
Ebook207 pages1 hour

Tamil, Hindu Madham Pattriya 60 Thalaipugalil 600 Kelvi-Pathilgal!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது, நான் தொகுத்துள்ள இரண்டாவது கேள்வி-பதில் (க்விஸ்) தொகுப்பு. எல்லோரையும் போலல்லாமல் இந்து சமயம், தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் இந்தியா தொடர்பான கேள்விகளை நூதன முறையில் தொகுத்துள்ளேன். 60 தலைப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு விஷயம் பற்றியும் பத்து கேள்விகளை மட்டும் கேட்டு அதற்கு விடைகளையும் கொடுத்துள்ளேன். மாணவர்களுக்கும், பள்ளி, கல்லூரிகளில் க்விஸ் Quiz Competition போட்டி நடத்துவோருக்கும் இது பயன்படும் என்பது என் நம்பிக்கை.

Languageதமிழ்
Release dateNov 4, 2023
ISBN6580153510286
Tamil, Hindu Madham Pattriya 60 Thalaipugalil 600 Kelvi-Pathilgal!!

Read more from London Swaminathan

Related to Tamil, Hindu Madham Pattriya 60 Thalaipugalil 600 Kelvi-Pathilgal!!

Related ebooks

Reviews for Tamil, Hindu Madham Pattriya 60 Thalaipugalil 600 Kelvi-Pathilgal!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil, Hindu Madham Pattriya 60 Thalaipugalil 600 Kelvi-Pathilgal!! - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில் 600 கேள்வி-பதில்கள்!!

    Tamil, Hindu Madham Pattriya 60 Thalaipugalil 600 Kelvi-Pathilgal!!

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. QUIZ மதுரைப் பத்து QUIZ

    2. QUIZ தேவியர் பத்து QUIZ

    3. QUIZ சம்பந்தர் பத்து QUIZ

    4. QUIZ சென்னைப் பத்து QUIZ

    5. QUIZ அருணகிரிப் பத்து QUIZ

    6. QUIZ அருவிப்பத்து QUIZ

    7. QUIZ தேவாரப் பத்து QUIZ

    8. QUIZ கிருஷ்ணன் - அசுரர் மோதல் பத்து QUIZ

    9. QUIZ சங்கீத (முத்து சுவாமி தீட்சிதர்) பத்து QUIZ

    10. QUIZ கர்நாடகப் பத்து QUIZ

    11. QUIZ இந்துமதப் பத்து QUIZ

    12. QUIZ இன்பப் பத்து QUIZ

    13. QUIZ தெய்வத் தமிழ் பத்து QUIZ

    14. QUIZ பதிற்றுப்பத்து QUIZ

    15. QUIZ மருந்துப் பத்து QUIZ

    16. QUIZ சிவப்பிரகாசர் பத்து QUIZ

    17. QUIZ நெரூர் சதாசிவர் பத்து QUIZ

    18. QUIZ தமிழ் சிற்றிலக்கியப் பத்து QUIZ

    19. QUIZ ஆழ்வார் பத்து QUIZ

    20. QUIZ அண்ணாமலை பத்து QUIZ

    21. QUIZ டில்லிப் பத்து QUIZ

    22. QUIZ சிலப்பதிகார பத்து QUIZ

    23. QUIZ தென் கிழக்காசியப் பத்து QUIZ

    24. QUIZ மனைவிப்பத்து QUIZ

    25. QUIZ இதிஹாசப் பத்து QUIZ

    26. QUIZ தொல்காப்பியப் பத்து

    27. QUIZ கவிதைப் பத்து QUIZ

    28. QUIZ தேதிப் பத்து QUIZ

    29. QUIZ காஷ்மீர் அதிசயங்கள் பத்து QUIZ

    30. QUIZ ஸம்ஸ்க்ருதப் பத்து QUIZ

    31. QUIZ சித்தர் பத்து QUIZ

    32. QUIZ அப்பர் பத்து QUIZ

    33. QUIZ சுந்தரர் பத்து QUIZ

    34. QUIZ மதுரை மீனாட்சி பத்து QUIZ

    35. QUIZ மாணிக்கவாசகர் பத்து QUIZ

    36. QUIZ கல்கத்தா பத்து QUIZ

    37. QUIZ மணிமேகலை பத்து QUIZ

    38. QUIZ தஞ்சைப் பத்து QUIZ

    39. QUIZ காஞ்சீபுரம் பத்து QUIZ

    40. QUIZ கண்ணப்பநாயனார் பத்து QUIZ

    41. QUIZ பிள்ளையார் பத்து QUIZ

    42. QUIZ கும்பகோணம் பத்து QUIZ

    43. QUIZ திருப்பதி பத்து QUIZ

    44. Quiz ராகப் பத்து Quiz

    45. QUIZ மும்பை பத்து QUIZ

    46. QUIZ ரிஷிகள் பத்து QUIZ

    47. QUIZ திருச்சிப் பத்து QUIZ

    48. QUIZ உபநிஷத் பத்து QUIZ

    49. QUIZ நவக்கிரக பத்து QUIZ

    50. QUIZ நவரத்தின பத்து QUIZ

    51. QUIZ ஒளவையார் பத்து QUIZ

    52. QUIZ தமிழ் ஓரெழுத்துகள் பத்து QUIZ

    53. QUIZ ரிஷி முனிவர்கள் QUIZ

    54. QUIZ பகவத் கீதை பத்து QUIZ

    55. QUIZ தமிழ் சங்கம் பத்து QUIZ

    56. QUIZ விநாயகர் அகவல் பத்து QUIZ

    57. QUIZ வள்ளலார் பத்து QUIZ

    58. QUIZ புராணப் பத்து QUIZ

    59. QUIZ காவிரி நதி பத்து QUIZ

    60. QUIZ வள்ளல்கள் பத்து QUIZ

    முன்னுரை

    இது, நான் தொகுத்துள்ள இரண்டாவது கேள்வி - பதில் (க்விஸ்) தொகுப்பு. எல்லோரையும் போலல்லாமல் இந்து சமயம், தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் இந்தியா தொடர்பான கேள்விகளை நூதன முறையில் தொகுத்துள்ளேன். 60 தலைப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு விஷயம் பற்றியும் பத்து கேள்விகளை மட்டும் கேட்டு அதற்கு விடைகளையும் கொடுத்துள்ளேன். மாணவர்களுக்கும், பள்ளி, கல்லூரிகளில் க்விஸ் Quiz Competition போட்டி நடத்துவோருக்கும் இது பயன்படும் என்பது என் நம்பிக்கை.

    ரயில், பஸ் பயணத்தின் போது, நல்ல முறையில் பொழுதினை செலவிட விரும்புவோருக்கும் இது துணையாக நிற்கும்; இந்தக் கேள்வி - பதிலுக்கு வயது வரம்பு கிடையாது. எளிதான, மற்றும் கடினமான கேள்விகள் இருப்பதால் சிறுவர் முதல் பெரியோர் வரை எவரும் பயன்படுத்தலாம். பொருளடக்கத்தை ஒரு பார்வை பார்த்தாலே போதும்; இது விளங்கும்.

    இது என்னுடைய 108 ஆவது நூல். வளமை போல உங்கள் ஆதரவினை நல்குங்கள்.

    அன்புடன்,

    லண்டன் சுவாமிநாதன்

    செப்டம்பர் 2023

    Swami_48@yahoo.com

    1. QUIZ மதுரைப் பத்து QUIZ

    Post No. 12,108

    Date uploaded in London – 9 June, 2023

    மதுரை தொடர்பான கீழ்க்கண்ட பத்து கேள்விகளுக்கும் பதில் சொன்னால், உங்களுக்கு மதுரைக்காரன் என்ற பட்டத்தை பெயருக்கு முன் போட்டுக்கொள்ளும் தகுதி கிடைக்கும்.

    1. மதுரை நகரில் ஒரு ராணியின் பெயரில் உள்ள சத்திரம் எது?

    2. ஒரு ராஜாவின் பெயரில் உள்ள அரண்மனை எது?

    3. தைப்பூசத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பம் நடைபெறும் இடம் எது?

    4. சித்திரைத் திருவிழாவில் சம்பந்தப்பட்ட கோவில்கள் எவை?

    5. மதுரை இருந்தையூரில் இருக்கும் கோவிலின் பெயர் என்ன?

    6. மதுரை வைகை நதி உருவாக யார் காரணம்?

    7. சிவபிரான் செய்த 64 லீலைகளைக்க கூறும் தமிழ்ப் புராணத்தின் பெயர் என்ன?

    8. மதுரை அருகில் டவுன் பஸ்ஸில் போகக்கூடிய இரண்டு அறுபடை வீடுகள் உள்ளன. அவற்றின் பெயர்கள் என்ன?

    9. வேறு எங்கும் கிடைக்காத சேலைகள் மதுரையில் கிடைக்கும். அதன் பெயர் என்ன?

    10. மதுரை சுந்தரேஸ்வரரின் தமிழ்ப் பெயர் என்ன?

    விடைகள்::

    1. ராணி மங்கம்மாள் சத்திரம்.

    2. திருமலை நாயக்கர் அரண்மனை (மஹால்),

    3. மதுரை மாரியம்மன் கோவில் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா தைப்பூசம் அன்று நடக்கும். அது திருமலை நாயக்கரின் ஜென்ம நட்சத்திரம்

    4. மதுரை பெருமாள் கோவில், திருப்பரங்குன்றம் கோவில், மீனாட்சி கோவில் மூர்த்திகள் திருக்கல்யாணத்தின் பொழுது வீதி உலா வரும். இந்தப் பெருமாளும், அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாளும் சந்திக்கும் எதிர்சேவை விழாவும் நடப்பதால் நங்கு கோவில்களின் மூர்த்திகளை தரிசிக்கலாம்.

    5. கூடல் அழகர் பெருமாள்கோவில்; இப்பொழுது பஸ் நிலையம் அருகில் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இடத்தின் பெயர் இருந்தையூர்.

    6. குண்டோதரனுக்காக சிவபெருமான் உருவாக்கியதாக ஸ்தல புராணம் கூறும்.

    7. திருவிளையாடல் புராணம்; நான்கு திருவிளையாடற்புராணங்கள் உள்ளன. இவற்றுள் புலியூர் நம்பி என்பவரும் பரஞ்சோதி முனிவர் என்பவரும் ஆக்கியவையே குறிப்பிடத்தக்கவை.

    8. திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை (அழகர் மலையில் உள்ளது)

    9. சின்னாளப்பட்டி சுங்குடி சேலை

    10. சொக்கன், சொக்கநாதன்

    2. QUIZ தேவியர் பத்து QUIZ

    Post No. 12,109

    Date uploaded in London – 9 June, 2023

    தேவியர் தொடர்பான கீழ்க்கண்ட பத்து கேள்விகளுக்கும் பதில் சொன்னால், உங்களுக்கு தேவி பக்தன் என்ற பட்டத்தை பெயருக்கு முன் போட்டுக்கொள்ளும் தகுதி கிடைக்கும்.

    1. மதுரையில் வணங்கப்படும் தேவியின் பெயர் என்ன?

    2. காமக்கண்ணி என்பது பிரபல கோவிலில் உள்ள தேவியரின் பெயர் என்பதை உ.வே. சாமிநாத அய்யரும், காஞ்சி மஹாபெரியவரும் கூறியுள்ளனர். அந்த தேவியின் ஸம்ஸ்க்ருதப் பெயர் என்ன?

    3. நாகப்பட்டினத்தில் வணங்கப்படும் தேவியின் பெயர் என்ன?

    4. திருமீயச்சூரில் எந்த தேவியை வணங்க எல்லோரும் போகிறார்கள்?

    5. காசி விஸ்வநாதரின் மனைவி யார்?

    6. சிவாஜி மஹாராஜருக்கு அருள் செய்த தேவியின் பெயர் என்ன?

    7. ஜம்மு வட்டாரத்தில் ஒரு பிரபல குகைக்கோயில் உள்ளது. அதில் குடிகொண்டிருக்கும் தேவி யார்?

    8. கேரளத்தில் பொதுவாக தேவிக்கு வழங்கும் பெயர் என்ன?

    9. சிறுவாச்சூரில் அருள் வழங்கும் அம்மன் யார்?

    10. சமயபுரம் கோவில் அம்மன் பெயர் என்ன?

    விடைகள்::

    1. மதுரை மீனாட்சி அம்மன், 2. காஞ்சி காமாட்சி அம்மன், 3. நாகை நீலாயதாட்சி, 4. லலிதாம்பிகை, 5. காசி விசாலாட்சி, 6. பவானி தேவி, 7. வைஷ்ணவி தேவி, 8. பகவதி, 9. மதுரகாளி அம்மன், 10. சமயபுரம் மாரியம்மன் கோவில்.

    3. QUIZ சம்பந்தர் பத்து QUIZ

    Post No. 12,110

    Date uploaded in London – 9 June, 2023

    திருஞான சம்பந்தர் தொடர்பான கீழ்க்கண்ட பத்து கேள்விகளுக்கும் பதில் சொன்னால், உங்களுக்கு சிவ பக்தன் என்ற பட்டத்தை பெயருக்கு முன் போட்டுக்கொள்ளும் தகுதி கிடைக்கும்.

    1. திருஞான சம்பந்தர் பிறந்த ஊர் எது? அவருடைய தாய் தந்தையர் பெயர் என்ன?

    2. திருஞான சம்பந்தர் உதித்த கோத்திரம் என்ன? நட்சத்திரம் என்ன?

    3. அவர் இறைவனிடம் பொற்றாளம் பெற்ற ஊர் எது?

    4. சமணருக்கு எதிராக சம்பந்தர் வெற்றி பெற்ற 2 போட்டிகள் எவை?

    5. சம்பந்தரின் மற்றொரு பெயர் என்ன?

    6. சம்பந்தரின் தந்தைக்கு வேள்வி இயற்ற பூதம் கொணர்ந்தது யாது?

    7. அப்பரும் சம்பந்தரும் மக்களின் பசி தீர்க்க பஞ்ச காலத்தில் என்ன செய்தனர்?

    8. சம்பந்தர் குணப்படுத்திய பாண்டிய மன்னன் பெயர் என்ன? அவனுக்கு ஏற்பட்ட நோய் யாது?

    9. பாண்டிய மன்னனின் மனைவி, மந்திரி பெயர்கள் தெரியுமா? சொல்லுங்கள்

    10. கல்யாணப் பெண்ணுடனும் அடியார்களுடனும் சம்பந்தர், ஜோதியில் கலந்த நாளும் இடமும் என்ன?

    விடைகள்:

    1. பிறந்த ஊர் - சீர்காழி, தாயின் பெயர் - பகவதி, தந்தையின் பெயர் - சிவபாத ஹ்ருதயர்.

    2. கவுண்டின்ய கோத்திரம் (கவுணியன்), ஆருத்ரா நட்சத்திரம் (திருவாதிரை)

    3. திருக்கோலக்கா,

    4. அனல் வாதம், புனல்வாதம்

    5. ஆளுடைப் பிள்ளையார்

    6. சிவபாத ஹ்ருதயர். வேள்வி செய்ய 1000 பொன்னுள்ள உலவாக்கிழியை பூதம் கொடுத்த இடம் திருவாவடுதுறை,

    7. இறைவனைப் பாடி, படிக்காசு பெற்றனர்; அதன் மூலம் உணவு வழங்கி பசி தீர்த்தனர்.

    8. சூலை நோய் தீர்க்கப்பட்ட பாண்டியனின் பெயர் கூன் பாண்டியன் (நின்ற சீர் நெடுமாறன்),

    9. மனைவி பெயர் - மங்கையற்கரசி, மந்திரியின் பெயர் - குலச்சிறையார்

    10. திருநல்லூர்ப் பெருமணம், வைகாசி மூல நட்சத்திரம்.

    4. QUIZ சென்னைப் பத்து QUIZ

    Post No. 12,112

    Date uploaded in London – 10 June, 2023

    சென்னை தொடர்பான கீழ்க்கண்ட பத்து கேள்விகளுக்கும் பதில் சொன்னால், உங்களுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1