Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahabharatha Por Nadanthathaa?
Mahabharatha Por Nadanthathaa?
Mahabharatha Por Nadanthathaa?
Ebook191 pages1 hour

Mahabharatha Por Nadanthathaa?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மஹாபாரதம், உலகிலேயே நீண்ட இதிஹாசம்; ஹோமர் கிரேக்க மொழியிலும், வர்ஜில் லத்தீன் மொழியிழும் எழுதிய நூல்களைவிட மிக மிக நீண்ட நூல். அதில் இல்லாத விஷயங்களே இல்லை. அதை எழுதிய வியாஸ மகரிஷி, அவருடைய காலத்தில் இருந்த அத்தனை விஷயங்களையும் தொகுத்து மஹாபாரத நூலில் சேர்த்துவிட்டார். இந்த நூலில் மஹாபாரதத்தின் காலம் பற்றி விளக்கியுள்ளேன்.

Languageதமிழ்
Release dateOct 8, 2022
ISBN6580153509111
Mahabharatha Por Nadanthathaa?

Read more from London Swaminathan

Related to Mahabharatha Por Nadanthathaa?

Related ebooks

Related categories

Reviews for Mahabharatha Por Nadanthathaa?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahabharatha Por Nadanthathaa? - London Swaminathan

    http://www.pustaka.co.in

    மஹாபாரதப் போர் நடந்ததா?

    Mahabharatha Por Nadanthathaa?

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1.மஹாபாரதப் போர் நடந்ததா? எப்போது நடந்தது?

    2. மஹாபாரதம் படிக்க முடியவில்லையா? இதோ ஒரே மூச்சில் பாரதம்!

    3 .தென் அமெரிக்காவில் புதிர், மர்மம்- மஹா பாரதத்தில் விடை!

    4. மஹாபாரதத்தில் வாணிபம் - வியாபாரம்

    5. கருமிகளை கடலில் தள்ளுக! மஹாபாரதம் அறிவுரை!!

    6. வியாசருக்கு இரண்டு நோபல் பரிசுகள் தருக!

    7. சுவையான கதை: கர்ணன் கேட்ட கேள்வியும் கண்ணன் சொன்ன பதிலும்

    8. அர்ஜுனனுக்குப் பரிசு- தங்கம்: கிருஷ்ணனுக்கு கடும் கோபம்!

    9. அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!!

    10.வீடு வரை உறவு, கடைசி வரை யாரோ?

    11. ரத ஸப்தமியும் பீஷ்ம அஷ்டமியும்

    12. யக்ஷப் ப்ரஸ்னம்:123 கேள்விகள்- பகுதி-1

    13. யக்ஷப் ப்ரஸ்னம்:123 கேள்விகள்- பகுதி-2

    14. யக்ஷப் ப்ரஸ்னம் பகுதி- 3

    15. பூதம் கொடுத்த தொல்லை!

    (16) 18 என்ற எண்ணின் மஹிமை

    17. கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

    18. முதலில் வந்தது ராமாயணமா? மஹாபாரதமா? பெரிய குழப்பம்!!!

    19. உலகின் மிகப் பழைய நகரம் – காசி/வாரணாசி!

    20. ரகசியத்தில் செய்த பாவம்: ஆதிசங்கரர்

    21. யார் நல்ல ஆசிரியர்?

    22. மொட்டையும் குடுமியும்

    23. மல்யுத்தம் தோன்றியது எங்கே?

    24. வணக்கம் வளர்ச்சி தரும், அகந்தை அழிவைத் தரும்’- இரண்டு கதைகள்

    25. துறவிக்கு வேந்தன் துரும்பு!

    26. மோட்சம் வேண்டாம் என்று சாமியார் ஓட்டம்!

    27. சாமியார் தேன் சட்டி உடைத்த கதை!!

    28. மணமகளே, மணமகளே வா,வா! உன் வலது காலை எடுத்துவைத்து வா வா!!

    29. மாமியாரைக் கொல்லும் அதிசய மருந்து!

    30. மகனே ! உன் அப்பனைக் கூட நம்பாதே!

    31. அமிர்தமும் விஷமும்: மஹாபாரதம் தரும் அற்புத ஸ்லோகம்

    முன்னுரை

    மஹாபாரதம், உலகிலேயே நீண்ட இதிஹாசம்; ஹோமர் கிரேக்க மொழியிலும், வர்ஜில் லத்தீன் மொழியிழும் எழுதிய நூல்களைவிட மிக மிக நீண்ட நூல். அதில் இல்லாத விஷயங்களே இல்லை. அதை எழுதிய வியாஸ மகரிஷி, அவருடைய காலத்தில் இருந்த அத்தனை விஷயங்களையும் தொகுத்து மஹாபாரத நூலில் சேர்த்துவிட்டார். நான் முன்னர் வெளியிட்ட நூல்களில் மஹாபாரதத்தில் உள்ள பத்து மருத்துவ அற்புதங்களைக் TEN MEDICAL MIRACLES கூறினேன். இன்னொரு நூலில் பிரம்மஸ்திராமென்பது கதிரியக்கம் RADIATION உள்ள அணு ஆயுதம் என்பதை நிரூபித்தேன். வன பரவத்திலுள்ள அர்ஜுனனின் விண்வெளிப்பயணத்தை INTER GALACTIC TRAVEL இன்னொரு நூலில் அளித்தேன் க்ளோனிங் CLONING எனப்படும் உயிர் அச்சு, இறந்த பின்னர் கூட குழந்தை பெறும் உத்தி, ஆண்களும் குழந்தை பெற்ற அற்புதங்கள் , ஆணைப் பெண்ணாகவோ அல்லது பெண்ணை ஆணாகவோ மாற்றும் அறுவைச் சிகிச்சைகள் ஆகிய அனைத்தையும் முந்திய நூல்களில் விளக்கிவிட்டேன் .இந்த நூலில் மஹாபாரதத்தின் காலம் பற்றி விளக்கியுள்ளேன்.

    ஆங்கிலத்தில் இந்த விஷயம் பற்றி ஓரிரண்டு முழு நூல்கள் வந்துவிட்டன. அப்படி விரிவான முழு நூல்கள் தமிழில் இருப்பதாகத் தெரிய வில்லை. மஹாபாரதத்திலுள்ள பகவத் கீதை, விதுர நீதி, யக்ஷப் ப்ரச்னம், விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பன எல்லாம் அற்புதமான பகுதிகள் . அதிலுள்ள சாவித்திரி கதை, நளன் கதைகளை எல்லோரும் எடுத்து தனி கவிதை நூல்களையே எழுதிவிட்டனர். அவற்றை எல்லாம் படிக்க இந்த சிறிய நூல் உங்களைத் தூண்டிவிடும் என்ற நம்பிக்கையுடன் இதை உங்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன்.

    யக்ஷப் ப்ரச்னம் என்னும் கேள்வி-பதில் பகுதியை முழுதும் கொடுத்துள்ளேன். அதே பாணியில் ஆதி சங்கரர் செய்த பிரச்னோத்தர ரத்ன மாலிகா மீதான கட்டுரைகளும் இந்த நூலில் உள்ளது .உலகின் பழைய நகரம் காசி - போன்ற தனிப்பட்ட தலைப்புகளும் இதில் அடக்கம்.

    இந்தக் கட்டுரைகள் கடந்த பத்து ஆண்டுக்கும் மேலாக என்னுடைய பிளாக்குகளில் முன்னரே வெளியிடப்பட்டவைதான். ஆகையினால் அவை வெளியிடப்பட்ட தேதிகளும் , கட்டுரைகளின் வரிசை எண்களும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    செப்டம்பர் 2022

    1.மஹாபாரதப் போர் நடந்ததா? எப்போது நடந்தது?

    ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1384; தேதி நவம்பர் 2, 2014.

    மஹாபாரதப் போர் நடந்ததா? பகவத் கீதை உண்மையா? போர்க்களத்தில் யாரேனும் உபநிஷத தத்துவங்களை உள்ளடக்கிய கீதையை உபதேசம் செய்திருக்க முடியுமா? நவீன ஏவுகணைகளைக் தோற்கடிக்கும், அணு ஆயுத ஏவுகணை போன்ற பிரம்மாஸ்திரம் உண்மையா? 18 அக்ஷௌகினி சேனைகள் குரு க்ஷேத்திரத்தில் கொள்ளுமா? இவைகளுக்கு ஏன் கொஞ்சம்கூட தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கவில்லை? தேவர்களை, மந்திரம் மூலம் அழைத்து குழந்தைகள் பெறுவது சாத்தியமா? அர்ஜுனன், மாதலியின் தேரில் சென்று சுவர்கத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தது உண்மையா? இப்படி வெளிக்கிரத்துக்கு விண்வெளிக் கப்பலில் அந்தக் காலத்தில் சென்றிருக்க முடியுமா? இப்படி நூற்றுக் கணக்கான கேள்விகளை எழுப்பினர்?

    இதில் வேடிக்கை என்னவென்றால் மஹாபாரதத்தை வாழ்க்கையில் ஒரு நாளும் தொட்டுப் பார்க்காத— அதைப் படிக்கவேண்டும் என்று முயற்சி கூடச் செய்யாத — அது என்ன என்று கூட ஒரு கருத்து இல்லாத – அதை நம்பிய தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும், ஆயிரக்கணக்கான சாது, சந்யாசி, மகான்களையும் நம்பாத மக்களே — இந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். அத்தனைக்கும் பதில் சொல்லும் புத்தகங்களும், கட்டுரைகளும் ஆயிரக் கணக்கில் வந்துவிட்டன. நான் எழுதிய 1250 கட்டுரைகளிலும் இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டேன். படித்துவிட்டு கேள்வி கேட்போரை மதிப்போம்— படிக்காமல் கேள்வி கேட்கும் விதண்டா வதிகளை- குதர்க்க வாதிகளை – மிதிப்போம் – கால்களால் அல்ல!!—சொற்களால் மட்டும் !!!

    உண்மையில் நடந்தது

    பாரபட்சமின்றி மஹாபாரதத்தைப் படிப்போர், அதில் உள்ள அத்தனையும் உண்மையில் நடந்தது என்பதை அறிந்து, படித்துச் சுவைத்து ரசித்து, மகிழ்வர். அதன் ஆதி பர்வத்தில் உள்ள ஸ்லோகம் எத்தனை பொருள் பொதிந்தது என்பதை எண்ணி எண்ணி இறும்பூது எய்துவர். அந்த ஸ்லோகம் சொல்கிறது:

    உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் இதனில் உள. இதில் உள்ள எல்லாப் பொருட்களையும் காணும் இடம் உலகில் வேறு இல!!

    வ்யாச்சோசிஷ்டம் ஜகத் சர்வம் — என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லுவர். அதாவது உலகில் நீங்கள் பார்க்கும் எல்லாம் வியாசரின் எச்சில்!

    இதன் பொருள் என்ன என்றால் — வியாசர் என்னும் மாமுனிவர் எல்லா விஷயங்களையும் சுவைத்து, ரசித்து, சொல்லால் கடித்து — ராமனுக்கு மலை ஜாதி வேடுவச்சி சபரி என்னும் கிழவி — அன்போடு கடித்துக் கொடுத்த இலந்தைப் பழம் போல — நமக்கு அன்போடு கடித்துக் கொடுத்த கதை!

    பாரதப் போரின் காலம் என்ன?

    பாரதப் போர் – கலியுகம் துவங்கும் கி.மு 3102-க்கு முன் – 36 ஆண்டுகளுக்கு முன்னர் – 3138ல் நடந்தது என்பது இந்துக்கள் நம்பும் கொள்கை. நம்முடைய பஞ்சாங்கங்களும் இதை ஒட்டியே கலி ஆண்டு என்று பிரசுரித்து வருகின்றன.

    இதில் வியப்பு என்னவென்றால் இரண்டு கல்வெட்டுகள் – சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே — கலியுகத்தைக் குறிப்பிட்டு கல்வெட்டு வெளியிட்டுள்ளனர். அதாவது அறியாத மக்கள் – கேள்வி கேட்பர் என்றோ, என்னவோ ஒரு தமிழ் செப்பேடும் இந்த ஆண்டை நாட்கள் கணக்கில் எழுதி தமிழன் உலக மகா கணித வல்லுநன் என்பதையும் காட்டி இருக்கிறது!

    கோ கருநந்தடக்கனின் பார்த்திவ சேகரபுர செப்பேடு கூறுகிறது:

    ஸ்வஸ்தி ஸ்ரீ கலியுகக் கோட்டு நன்னாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்றநாள்

    ஸ்வஸ்தி ஸ்ரீ கோக்கருநந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இந்நாளால் முடால நாட்டுப் பசுங்குளத்துப் படுநிலத்தில் முன்சிறைச் சவையாருடைய உழக்குடி விளை.

    வேணாட்டை ஆண்ட ஆய்குல மன்னன் கோகருந்தடக்கன் இச்செப்பேட்டில் கலியுக ஆண்டு 14,49,087 என்று செப்புவது கலி 3967 ஆடி 15ஆம் தேதி ஆகும். சற்றேறக்குறைய கி.பி.865 ஆகும்.

    தமிழர்களுக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே கலியுகத்தில் நம்பிக்கை இருந்ததும் அதை மக்கள் புரிந்துகொண்டு நடைமுறைப் படுத்தியதும் இதனால் தெரிகிறது. இதற்கு முந்தைய இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டும் கலி ஆண்டை 3735 (சக 556) என்று கூறும்.

    முஸ்லீமாகிய அபுல்பாசல் என்பார் தாம் இயற்றிய அயினி அக்பரி என்ற 16-ஆம் நூற்றாண்டு நூலில் கூட கலி ஆண்டை 4696 என்று கூறுவர்.

    இந்தியாவின் முதல் வரலாற்று ஆசிரியன் என்று வெளிநாட்டினர் புகழும் காஷ்மீரி பிராமணர் கல்ஹணர் எழுதிய 12ஆம் நூற்றாண்டு ராஜதரங்கிணி நூலில் கூட கலி ஆண்டைக் குறிப்பிடுவர். இவரும் இவருக்கு முந்திய வராகமிஹிரரும் மட்டும் ஒரு 650 ஆண்டைக் கழித்து 2500 என்று சொல்லுவர். இது ஒரு வரலாற்றுப் புதிர். அதைத் தனிக் கட்டுரையில் காண்போம். வராஹமிகிரர் சில வான சாத்திரக் குறிப்புகளைத் தவறாகப் புரிந்தமையே இதற்குக் காரணம் எனச் சான்றோர் பகர்வர்.

    இனி மஹாபாரதம் பற்றி நடந்த ஆய்வரங்கங்களிலும் அது தொடர்பான ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கூறும் சில ஆண்டுகளைக் கண்போம்:–

    கம்போடியா நாட்டு அங்கோர்வட் ஆலயச் சுவர்களில் மஹாபாரதம் செதுக்கப்பட்டுள்ளது.

    எஸ்.பி.ராய் என்பார் ஆராய்ச்சியாளர்களை நாகு பிரிவுகளாகப் பிரிக்கிறார்:–

    முதல் அணி ( சம்பிரதாய கொள்கையினர் கி.மு 3100 க்கு முன்னர்)

    டி.ஆர். மங்கட் — 3201

    எம்.எம்.கிருஷ்ணமாச்சாரி 3137

    சி.வி.வைத்யா — 3102

    வி.பி.அத்வாலே – 3016

    இரண்டாம் அணி ( கி.மு. 2500 ஆண்டை ஒட்டி)

    வராஹமிகிரர்

    கல்ஹணர்

    பி.சி.சென்குப்தா

    எல்லோரா குகைக் கோவிலில் இருந்து

    மூன்றாம் அணி ( கி.மு.1450 அல்லது அதன் கீழ்)

    ஏ.கன்னிங்ஹாம் -1424

    கே.பி.ஜைஸ்வால் –1424

    தாரகேஸ்வர பட்டாசார்யா –1432

    கிரிதர சேகர வசு (பாசு) – 1416

    பங்கிம் சந்திர சாட்டர்ஜி

    Enjoying the preview?
    Page 1 of 1