Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tajmahal Hindu Kovila? Yesu Kristhu India Vandhara?
Tajmahal Hindu Kovila? Yesu Kristhu India Vandhara?
Tajmahal Hindu Kovila? Yesu Kristhu India Vandhara?
Ebook281 pages1 hour

Tajmahal Hindu Kovila? Yesu Kristhu India Vandhara?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்திய வரலாற்றில் ஏராளமான புதிர்கள் உள்ளன. இந்த நூலின் முதல் பகுதியில் நம்முடைய வரலாற்றின் சில அம்சங்களை எடுத்துரைக்கும். தாஜ்மஹால் இந்துக்கட்டிடம் என்று சொல்லும் ஆராய்ச்சிக் கட்டுரையும் உள்ளது மற்றோர் பகுதியில் ஏசு கிறிஸ்துவின் இந்திய விஜயம் பற்றியும் அவரது காலத்தில் அவர் பிறந்த இடத்திலேயே நடந்த இந்து மத சார்பான நிகழ்ச்சிகளும் வரையப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateNov 12, 2022
ISBN6580153509240
Tajmahal Hindu Kovila? Yesu Kristhu India Vandhara?

Read more from London Swaminathan

Related to Tajmahal Hindu Kovila? Yesu Kristhu India Vandhara?

Related ebooks

Related categories

Reviews for Tajmahal Hindu Kovila? Yesu Kristhu India Vandhara?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tajmahal Hindu Kovila? Yesu Kristhu India Vandhara? - London Swaminathan

    http://www.pustaka.co.in

    தாஜ்மஹால் இந்துக் கோவிலா? ஏசு கிறிஸ்து இந்தியா வந்தாரா?

    Tajmahal Hindu Kovila? Yesu Kristhu India Vandhara?

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1.தாஜ்மஹால் ரகசியம் - பகுதி 1

    2.தாஜ்மஹால் ரகசியம் - பகுதி 2

    3.தாஜ்மஹால் ரகசியம் - பகுதி 3

    4.மரண தண்டனை மன்னன் ஹமுராபி

    5.மநுவும் ஹமுராபியும்- யார் முதல்வர்?

    6.நான்தான்டா ஹமுராபி! நல்லமுத்து பேரன்!

    7.கம்பனும் ஹமுராபியும்

    8. பெண்கள் மீது ஹமுராபி பாய்ச்சல்

    9. ‘இந்துக்களுக்கு கடல் ஒரு கால்வாய்- பூமி ஒரு முற்றம்’

    10. நான்கு தசரதர், மூன்று கிருஷ்ணர், இரண்டு ராவணன்! வரலாற்றில் குழப்பம்!

    11. நீண்ட காலம் உலகை ஆண்ட ராணி யார்?

    12. எழுபது போப்பாண்டவர் படுகொலை

    13. ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்?- Part 1

    14. ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்?- Part 2

    15. ஏசு கிறிஸ்து செய்த பாத பூஜை!

    16. பைபிள் தோன்றியது எப்போது?

    17. பெண்கள் மனிதப் பிறவிகளா? கிறிஸ்தவர் காரசார விவாதம்

    18. தொன்னூறு லட்சம் பெண்கள் உயிருடன் எரிப்பு – சேம்பர்ஸ் கலைக் களஞ்சியம் திடுக்கிடும் தகவல்

    19. அன்னை தெரசாவுக்கு எதற்கு புனிதர் பட்டம்? லண்டன் பத்திரிக்கை கேள்வி

    20. ஏசு கிறிஸ்து பற்றி பாரதியார்

    21. கேரள யானைத் தந்த சிம்மாசனம் லண்டனுக்கு வந்த கதை!

    22. சிந்து சமவெளியின் கொம்பன் யார்?

    23. சிந்து வெளி எழுத்தைப் படிக்க ‘காஸைட்ஸ்’ நாகரீகம் உதவலாம்

    24. வரலாறு தெரிந்தவன் தமிழன் !!!

    25. சிரியா, துருக்கியில் இந்துக்கள் ஆட்சி!

    26. கர்நாடக அதிசயங்கள்; 35, 000 சிற்பங்கள்!

    27. உலகிலேயே மிகப்பெரிய வீணையைக் கண்டேன்!

    28. உலகிலேயே மிகப்பெரிய கணக்குப் புத்தகம்: மேலும் ஒரு கர்நாடக அதிசயம்!

    29. பாஹுபலி வாழ்க! கோமடேஸ்வர் வெல்க!

    30. மாறன் சடையன், சடையன் மாறன், மூன்றாம் சார்லஸ்

    31. மோடி பற்றி பாரதியார் தீர்க்க தரிசனம்!

    32. தமிழர் கண்டு பிடித்த அதிசய கணக்குப் பலகை!

    33. சங்கத் தமிழில் தங்கமும் உரைகல்லும்!

    34. தமிழனுக்கு நேரம் காலம் தெரியுமா?

    35. தமிழர்களின் எண்பேராயம்

    36. ரிக்வேதத்தில் நன்மாறன்?

    37. வேத கால அரசர்கள் பற்றிய விநோதச் செய்திகள்!

    38. உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 1

    39. உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 2

    40. உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 3

    41. ரிக்வேத ஆராய்ச்சியில் கிடைத்த ஒன்பது விஷயங்கள்!

    42. அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?

    43. வரலாறு கூறும் அற்புத ரிக்வேதப் பாடல்!

    44. கிருஷ்ணனை 800 மைல் விரட்டிய கால யவனன் !

    45. யுவாங் சுவாங் பொய் சொல்வாரா? பாஹியான் பொய் சொல்வாரா?

    முன்னுரை

    இந்திய வரலாற்றில் ஏராளமான புதிர்கள் உள்ளன; வெள்ளைக்காரனெழுதிய வரலாறுகளில் தமிழனைப் பற்றி ஒரு வரியும் கிடையாது. கரிகாலன், ராஜ ராஜன், சுந்தர பாண்டியன், சேரன் செங்குட்டுவன் என்றால் அந்தப் புஸ்தகத்தை எழுதியோரும் படித்தோரும் ‘என்ன அது’? என்று வினவுவார்கள். ஸுமேரிய, எகிப்திய, பாபிலோனிய, மாயன் வரலாறுகளை கி. மு 3000ல் துவங்கும் வெள்ளைக்காரர்கள் இந்திய வரலாற்றை மட்டும் புத்தர் மஹாவீரர் காலத்தில் துவங்குவர். சிந்துவெளி நாகரீகம் முதல் புத்தர் காலம் வரையுள்ள மன்னர் பட்டியல் 18 புராணங்களில் இருந்தபோதும் அவற்றை எள்ளி நகை ஆடுவர். வெள்ளைக்காரர் புஸ்தகத்தில் பாதிப்பகுதி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை புகழும் பகுதி. வேதம், இதிஹாசம், புராணங்களில் உள்ள மன்னர்களை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. இந்த நூலின் முதல் பகுதியில் நம்முடைய வரலாற்றின் சில அம்சங்களை எடுத்துரைக்கும். தாஜ் மஹால் இந்துக்கட்டிடம் என்று சொல்லும் ஆராய்ச்சிக் கட்டுரையும் உளது மற்றோர் பகுதியில் ஏசு கிறிஸ்துவின் இந்திய விஜயம் பற்றியும் அவரது காலத்தில் அவர் பிறந்த இடத்திலேயே நடந்த இந்து மத சார்பான நிகழ்ச்சிகளும் வரையப்பட்டுள்ளன.

    ; அதுமட்டுமல்ல; இன்று இந்துக்கள் இந்து தெய்வங்களை, எப்படி கைகூப்பி வணங்கு கின்றனரோ அது போன்ற வழக்கங்கள், மற்றும் பாத பூஜை முதலியனவும் ஓவியங்களில் காணப்படுகிறது. அவைகளையும் விரிவாக ஆராய்ந்து எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன; ரிக் வேதத்தில் உள்ள, மற்றும் தமிழ் இலக்கையத்தில் உள்ள வரலாற்று நிகழ்ச்சிகளும் அலசி ஆராயப்பட்டுள்ளன.

    நம்முடைய அக்ஷய பாத்திரம், அமுத சுரபி, மயிலாசனம் ஆகியன எங்கு போயிற்று என்றும் எழுதியுள்ளேன் நிறைய பேர் முறையான சரித்திர ஆராய்ச்சியில் இறங்கி ஆதாரபூர்வமான விஷயங்களை மட்டும் எழுதவேண்டும். நம்முடைய சொந்த கருத்துக்களை எழுதுகையில் இவ்வாறு நான் கருதுகிறேன் என்று தனியாக எழுதுவதிலும் தவறு இல்லை. அதற்கு இந்த நூல் ஊற்றுணர்ச்சி கொடுக்குமானால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    இறுதியாக, வெள்ளைக்காரன் எழுதிய என்சைக்ளோபீடியாவில் காளிதாசன், கம்பன், திருவள்ளுவன் பற்றி இராது. தஞ்சை கோவில் மதுரைக் கோவில் பற்றியும் இராது; ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்ஷ்னரியில் ஐயோ, பறையா என்ற தமிழ்ச் சொற்கள் மட்டும் இருக்கும். இந்த அவமானங்களைத் துடைத்தெறிய என்னைப்போல மற்றவர்களும் பாடுபடவேண்டும்; இந்தியானா ஜோன்ஸ் போல நாமும் இழந்த செல்வங்களைத் தே டிக் கண்டுபிடிக்கவேண்டும்.

    இந்தக் கட்டுரைகள் 11 ஆண்டுக்கு காலத்தில் தனித்தனியே எழுதப்பட்டதால் சில விஷயங்கள் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டிருக்கும். அதை பொறுத்தருள்க. கட்டுரைகள் முதலில் என் பிளாக்குகளில் வெளியான தேதியும் அந்த வரிசை எண்ணும் இருக்கும்.

    அன்புள்ள

    லண்டன் சுவாமிநாதன்

    நவம்பர் 2022

    1.தாஜ்மஹால் ரகசியம் - பகுதி 1

    லண்டனுக்கு அருகில் வசிக்கும் திரு. காட்போலே, தாஜ்மஹாலின் உண்மைக் கதையை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதைத் தமிழில் மொழிபெயர்க்க ஒரு நண்பர் மூலம் என்னை அணுகினார். நான் மொழி பெயர்த்த கட்டுரையை எனது பிளாக்கில் வெளியிட அனுமதி தந்தார். இதோ நீண்ட கட்டுரை:

    தாஜ் மஹால்- உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது

    தாஜ் மஹால் பற்றிப் பல கதைகள் உண்டு. ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒரு வாக்கியத்தைக் காணலாம்- ‘இதைக் கட்டுவதில் 22 ஆண்டுகளுக்கு 20, 000 பேர் ஈடுபட்டனர்’. இது உலகமே அறிந்த ஒரு செய்தி. ஒரு சின்னக் கேள்வி. யாரிடமிருந்து இந்தச் செய்தி கிடைத்தது?

    பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரத்தின வியாபாரி ஜே பி டவர்னியர் எழுதிய இந்தியப் பயணம் என்ற நூலில் இருந்துதான் இந்த எண்ணிக்கை வந்தது. அவர் சிவாஜியின் காலத்தில் இந்தியாவுக்கு ஆறு முறை-- 1638 முதல் 1668 வரை - துணிகர பயணங்களை மேற்கொண்டார்.. டாவர்னியர் சொல்கிறார்- இந்தக் கட்டிடப்பணியின் துவக்கத்தையும் நிறைவையும் நான் கண்டேன். இதில் 22 ஆண்டுகளுக்கு 20000 ஊழியர்கள் இடைவிடாது பணியாற்றினர் என்று.

    டவர்னியரின் புஸ்தகம் முதலில் பிரெஞ்சு மொழியில் 1675ல் வெளியானது. அந்தக் காலத்தில் ஒரு தனி மனிதன் இவ்வளவு நீண்ட பயணம் செய்வது ஒரு துணிகரச் செயலாகக் கருதப்பட்டது. பயணத்தில் பல கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்; பல மொழி, கலாசாரம் உடைய ஆட்களுடன் பழக வேண்டியிருக்கும்; அவர்களுடைய நடை உடை பாவனைகளுக்கு ஏற்ப மாற வேண்டியிருக்கும்; பின்னர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்; இதுவே நம்பமுடியாத சாதனை. அத்தோடு டவர்னியரோ வைரம் முதலான ரத்தினக் கல் வியாபாரம் செய்பவர். ஒரு முறை அல்ல;இரு முறை அல்ல; டவர்னியர் இப்படி ஆறு முறை பயணம் செய்தார். ஆகையால் அக்காலத்தில் அவருடைய புஸ்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1677 முதல் 1811க்குள் அவருடைய புத்தகம் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. ஒன்பது ஆங்கிலப் பதிப்புகள் வெளியாகின. அதே காலத்தில் 22 பிரெஞ்சு மொழிப் பதிப்புகள் வெளியாகின.

    1889ம் ஆண்டு டாக்டர் பால் என்பவர் பிரெஞ்சு புத்தகத்தை மொழி பெயர்த்து முந்திய தகவல்களைத் திருத்தினார். அவர் நிறைய அடிக்குறிப்புகளையும் சேர்த்து கூடுதல் தகவல் சேர்த்தார். டவர்னியரின் பயணத்தை நன்கு ஆராய்ந்து அவரது ஆறு பயணங்களின் விவரங்களையும் சேர்த்தார். அதிலிருந்து டவர்னியர் இரண்டு முறை மட்டுமே ஆக்ராவுக்கு வந்ததது தெரிகிறது 1640-41 குளிர் காலத்திலும் 1665ம் ஆண்டிலும். இது இன்னொரு சுவையான வினாவை எழுப்பும்.

    ஷாஜஹானின் மனைவி 1631ம் ஆண்டில் இறந்ததாகவும் உடனே ஷாஜஹான் தாஜ் மஹல் கட்டிட வேலையைத் துவங்கியதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அது சரியென்றால் டவர்னியர் தாஜ்மஹால் கட்டத் துவங்கியதைப் பார்த்திருக்க முடியாது. ஏனெனில் அவர் அதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே ஆக்ராவுக்கு வந்தார்.

    அவுரங்க சீப், அவருடைய தந்தையான ஷாஜஹானை ஆக்ராவிலுள்ள செங்கோட்டையில் 1658 முதல் சிறை வைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். அவுரங்கசீப் தாஜ்மஹாலை கட்டி முடித்தார் என்று எந்த வரலாற்று அறிஞரும் எழுதவில்லை. அது சரியென்றால், டவர்னியர் தாஜ்மஹால் கட்டிடம் நிறைவு அடைந்ததையும் பார்த்திருக்க முடியாது.

    அப்படியானால் 20, 000 தொழிலாளர்கள் இடைவிடாது பணியாற்றினர் என்று டவர்னியர் சொல்லுவது அர்த்தமற்றது. ஏன் இந்த வரலாற்று உண்மையை 117 ஆண்டுகளாக வரலாற்று அறிஞர்கள் மறைத்து வைத்தனர் ? காரணம் மிகவும் தெளிவானதே. இந்த உண்மை, கதையின் அஸ்திவாரத்தையே ஆட்டுகிறது.

    பாதுஷாநாமா – இது என்ன சொல்கிறது?

    இந்துக்களுக்கு வரலாற்று உணர்வே இல்லை என்று பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுவர். முஸ்லீம் ஆட்சியாளர்கள் மட்டுமே வரலாற்று தகவல்களைப் பதிவு செய்ததாக விளம்புவர். போகட்டும். நாம் ஷாஜஹான் காலத்தில் எழுதப்பட்ட பாதுஷா நாமா பக்கம் நம் பார்வையைச் செலுத்துவோம். வங்காளத்தில் இருந்த ஆசியக் கழகம் 1867, 1868 ஆண்டுகளில் பாதுஷா நாமாவின் பாரஸீகப் பதிப்பை இரண்டு பகுதிகளாக வெளியிட்டது. ஆங்கில மேஜர் ஒருவரின் மேற்பார்வையில் இரண்டு மௌல்விகள் இதைச் செய்தனர். மிகவும் விந்தையான விஷயம் என்னவென்றால் தாஜ் மஹால் எப்படிக் கட்டப்பட்டது என்று பாதுஷா நாமா சொல்லுவதை எந்த வரலாற்று ஆசிரியனும் வெளியிடுவதில்லை. ஏன்?

    எட்டாவது நூற்றாண்டில் முகமது பின் காசிம் சிந்து நதி தீரத்தில் நடத்திய தாக்குதலிலிருந்து 19-ஆவது நூற்றாண்டில் மராட்டியர் ஆட்சி வீழ்ச்சி அடையும் வரையான இந்திய வரலாற்றை எழுதும் மஹத்தான பணியை எலியட் மற்றும் டவ்சன் என்ற இரு ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர். அதாவது 1200 ஆண்டு வரலாறு. ஆனால் முஸ்லீம்கள் எழுதிய வரலாற்றை மட்டும் அடிப்படையாக வைத்து அவர்கள் எழுதினர். 1867 முதல் 1877 வரை பத்து தொகுதிகளாக அவை வெளியாயின. ஏழாவது தொகுதி ஷாஜஹான், அவுரங்கசீப் ஆகியோரின் ஆட்சி பற்றியது. அதில் தாஜ்மஹால் என்ற சொல்லே இல்லை.

    அவர்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும்? நாங்கள் ஷாஜஹானின் ஆட்சிக்காலத்தில் அவரால் அதிகாரபூர்வமாக எழுதிவைக்கப்பட்ட பாதுஷாநாமாவை ஆதாரமாகக் கொண்டு இந்த வரலாற்றை எழுதியுள்ளோம். அதில் தாஜ் மஹால் பற்றி எதுவும் இல்லை என்று சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் அப்படி எதுவும் செப்பவில்லை. வரலாற்று அறினஞர்கள் இதையும் கடந்த 130 ஆண்டுகளாகச் நம்மிடம் சொல்லவில்லை.

    1896ம் ஆண்டு ஆக்ராவின் விரிவான வரலாறு என்ற நூலை கான் பகாதூர் சையது முகமது லதீப் எழுதினார். அவர் பாதுஷாநாமாவை பல முறை மேற்கோள் காட்டினார். ஆனால் பக்கங்களின் எண்களைக் குறிப்பிடவில்லை. பக்கம் 105-ல் அவர் சொல்கிறார்.

    2.தாஜ்மஹால் ரகசியம் - பகுதி 2

    லண்டனுக்கு அருகில் வசிக்கும் திரு. காட்போலே, தாஜ்மஹாலின் உண்மைக் கதையை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதைத் தமிழில் மொழிபெயர்க்க ஒரு நண்பர் மூலம் என்னை அணுகினார். நான் மொழி பெயர்த்த கட்டுரையை எனது பிளாக்கில் வெளியிட அனுமதி தந்தார். இதோ நீண்ட கட்டுரை: part- 2

    தாஜ் மஹால்- உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது- part 2

    கல்லறை கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் முன்னர் ராஜா மான்சிங்கின் அரண்மனையாக இருந்தது. இப்பொழுது அவருடைய பேரன் ராஜா ஜெய்சிங்கின் வசம் உள்ளது. பல ஆசிரியர்கள் லதீப் புஸ்தகத்தை மேற்கோள் காட்டிய போதும், இந்த விஷயத்தை மட்டும் காட்டவில்லை. ஆக, இந்த உண்மையையும் வரளாற்று ஆசிரியர்கள் நம்மிடமிருந்து மறைத்து வைத்தனர்.

    ஆக்ரா மாவட்ட கெஜட்டை 1905ம் ஆண்டில் எச். ஆர். நெவில் ஐ. சி. எஸ் தொகுத்து வெளியிட்டார். அதில் ராஜா மான்சிங் அரண்மனை என்பதை, ராஜாமான்சிங்கின் ஒரு துண்டு நிலம் என்று மாற்றினார்.

    இதைத் தொடர்ந்து வரலாறு எழுதிய அனைவரும் ராஜா ஜெய்சிங்கின் வசமிருந்த ராஜா மான்சிங்கின் ஒரு துண்டு நிலத்தை ஷாஜஹான் விலைக்கு வாங்கினார் என்று எழுதத் துவங்கினர். இந்த ஏமாற்று வித்தை நூற்றாண்டுக் காலமாக நடந்து வருகிறது.

    ஒரு ஆங்கில அதிகாரி ஏன் இப்படிப்பட்ட விஷமச் செயலைச் செய்வதில் ஆர்வம் காட்டினார் என்று சிலர் வினவலாம்.

    இதோ அந்தக் காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்ப்போருக்குத் தெளிவான பதில் கிடைத்துவிடும்

    1901

    வைஸ்ராய் கர்சன் பிரபு பஞ்சாபின் சில பகுதிகளைப் பிரித்து முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் வடமேற்கு எல்லை மாகாணத்தை உருவாக்கினார். இந்துக்கள் அங்கே சிறுபான்மை மக்கள் ஆயினர். அவர்களுடைய துரதிருஷ்ட காலத்தின் ஆரம்பம் இது.

    1903

    வங்காளத்தைப் பிரித்து முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள கிழக்கு வங்காளத்தை அமைக்கப் போவதாக கர்சன் பிரபு அறிவித்தார்.

    1905

    கர்சன் ராஜினாமா செய்தார். ஆயினும் அவர் திட்டப்படி வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார்.

    1906

    ஆகாகான் தலைமையிலொரு முஸ்லீம் குழு புதிய வைஸ்ராய் மின்டோ பிரபுவைச் சந்தித்தது. எந்த ஒரு அரசியல் முடிவிலும் தங்களையும் கவனத்திற்கொண்டு தங்களுக்குச் சாதகமாக முடிவெடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். இதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே தூண்டிவிட்டனர்.

    1906 டிசம்பர்- டாக்காவில் முஸ்லீம் லீக் துவக்கப்பட்டது.

    1909

    மோர்லி- மின்டோ சீர்திருத்தங்களின்படி முஸ்லீம்களுக்கு தனித் தொகுதிகள் அளிக்கப்படன.

    மற்றொரு விஷயத்தையும் நினைவிற் கொள்ள வேண்டும். 1873-1914 கால கட்டத்தில் ஆங்கில அதிகாரிகள் சிலர் பாபர் நாமா, ஹுமாயுன்நாமா, அக்பர் நாமா, அயினி அக்பரி, தாஜுக்-இ- ஜஹாங்கிரி ஆகியவற்றை பாரஸீக மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர். ஆனால் பாதுஷா நாமாவை மட்டும் தொடவில்லை.

    மேற்கூறிய தகவல்களைப் பின்னணியில் வைத்துக்கொண்டு பார்த்தோமானால் 1905ம் ஆண்டில் ஆக்ரா கஜட்டைத் தொகுத்த நெவில் ஏன் விஷமம் செய்தார் என்பது புரியும்.

    ராஜா மான்சிங்கிற்குச் சொந்தமான துண்டு நிலத்தை ஷாஜஹான் விலைக்கு வாங்கியதாக ஸர் ஜதுநாத் சர்கார், மௌல்வி அஹமது சொல்லுவதும் வியப்பை அளிக்கிறது. ஸர் ஜதுநாத் சர்கார் அவுரங்கசீப் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்ற நூலை இயற்றியவர்; மௌல்வி அஹமது (தாஜின் வரலாறு, 1905) என்ற நூலை இயற்றியவர்; அவர்கள் பாதுஷா நாமாவிலிருந்து மேற்கோளும் காட்டியுள்ளனர். முதல் தொகுதி, பக்கம் 40 3 என்று. விந்தையிலும் விந்தை; அந்தப் பக்கத்தில் என்ன எழுதி இருக்கிறது எவரும் பார்க்கவே இல்லை.

    டில்லியைச் சேர்ந்த பி. என். ஓக் என்பவருக்கு 1964ஆம் ஆண்டில் தாஜ்மஹால் பற்றி சந்தேகம் எழுந்தது. அது ஒரு காலத்தில் அரண்மனையாக இருந்தது என்ற வாதத்தை முன்வைத்தார். இது விஷயமாக அவர் பல வரலாற்று ஆசிரியர்களுடன் மோத நேரிட்டது. அவர்களில் ஒருவர் காஷ்மீரி பண்டிட். அவர்கள் இருவரும் அரசாங்க ஆவணக் காப்பகத்துக்குச் சென்றார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1