Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pengal Vaazhga
Pengal Vaazhga
Pengal Vaazhga
Ebook133 pages49 minutes

Pengal Vaazhga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிழக்கு லண்டனிலுள்ள பிளாஸ்டோ ஹாஸ்பிடல், மருத்துவ மனையில்(PLAISTOW HOSPITAL IN EAST LONDON) ) 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், “குடும்பத்தில் நடைபெறும் சண்டை சச்சரவுகளும் அதனால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளும் (DOMESTIC VIOLENCE AND HEALTH PROBLEMS) என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடந்தது. நானும் ஒரு பிரதிநிதியாகக் கலந்துகொண்டேன். அதன் விளைவே இந்நூல்...

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580153508307
Pengal Vaazhga

Read more from London Swaminathan

Related to Pengal Vaazhga

Related ebooks

Reviews for Pengal Vaazhga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pengal Vaazhga - London Swaminathan

    http://www.pustaka.co.in

    பெண்கள் வாழ்க

    Pengal Vaazhga

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பெண்கள் வாழ்க – நூல் எழுதக் காரணம்

    2. பெண் புலவர்கள் பற்றி ஆராய்ச்சி: சங்கப் புலவர் பட்டியல்

    3. ரிக் வேத பெண் கவிஞர்கள்

    4. சாதனை புரிந்த இந்துப் பெண்கள்!

    5. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் ‘புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ - பாரதி

    6. புத்திசாலி தமிழ்ப் பெண்கள்!

    7. பெண்களின் வியத்தகு அறிவு

    8. உலகிலேயே அதிர்ஷ்டசாலிப் பெண்கள்!

    9. அதிர்ஷ்டசாலிகள் - திறமைசாலிகள் என்பதற்கு 33 காரணங்கள் 3 காரணங்கள்

    10. 33 காரணங்கள் நிறைவுரை!

    11. இம்மையிலும் மறுமையிலும் ஒரே கணவன்

    12. காதல் திருமணம் தோல்வியே!

    13. பெண்கள் பற்றி வராஹமிஹிரர்!

    14. போர்க் காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு

    15. ‘பெண் கொலை’ பெரிய பாவம்

    16. ராமாயண காலத்தில் ஒரு பெண்துறவி

    17. வரதட்சிணை முறை தலைகீழாக மாறியது எப்படி?

    18. பெண்கள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள்

    19. பூமி எனது தாய்; நான் அவள் மகன்

    20. பெண்களைப் பற்றி பாரதி

    21. மனைவி பெயரே முதலில் வரும்

    22. பெண்கள் எட்டு வகை; அறிந்து கொள்க

    23. பொம்பளை சிரிச்சா, உதைச்சா, பார்த்தா போச்சு!

    1

    பெண்கள் வாழ்க – நூல் எழுதக் காரணம்

    கிழக்கு லண்டனிலுள்ள பிளாஸ்டோ ஹாஸ்பிடல், மருத்துவமனையில் (PLAISTOW HOSPITAL IN EAST LONDON) 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம், குடும்பத்தில் நடைபெறும் சண்டை சச்சரவுகளும் அதனால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளும் (DOMESTIC VIOLENCE AND HEALTH PROBLEMS) என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடந்தது. நானும் ஒரு பிரதிநிதியாகக் கலந்துகொண்டேன். கருத்தரங்கு நடந்த இடத்தில் பல துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தனர். உலகம் முழுவதும் புழங்கும் பெண்களை மட்டம்தட்டும் பழமொழிகள் அடங்கிய ஒரு துண்டுப் பிரசுரமும் இருந்தது. இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும் உங்கள் சமூகத்திலித்து இது போன்ற பெண்களுக்கு எதிரான பழமொழிகள் இருந்தால் சொல்லலாம் என்று சொன்னார்கள்.

    என்னுடைய முறை வந்தபோது தமிழிலும் இப்படி உண்டு. ‘பெண் புத்தி பின் புத்தி’, மற்றும் ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ முதலிய பழமொழிகள் உள்ளன என்றேன்; ஆனால் இது தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் பழமொழிகள் இல்லை என்றும் இழுத்தேன். ஒரு மன்னன் செய்த அநீதியைக் கூட துணிவுடன் அரசவைக்குள் நுழைந்து கேள்வி கேட்ட சம்பவமும் தமிழில் இருக்கிறது என்றேன். அது பற்றியும் பேச குரூப் டிஸ்கஷனில் விவாதிக்கப் போகிறோம் என்று சொன்னவுடன் உட்கார்ந்தேன்.

    இதன்பிறகு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு தலைப்புகளில் (Group Discussions) விவாதிக்கக் கூறினர். ஒரு மணிநேர விவாதம் முடிந்த பின்னர் ஒவ்வொரு குழுவும் ஓர் பிரதிநிதி மூலம் அந்தக் குழுவின் கருத்துக்களை எடுத்துரைக்கவேண்டும். என்னுடைய குழுவில் வயதான, இரண்டு வெள்ளைக்கார பெண்மணிகள் இருந்தனர். மனு தர்ம சாஸ்திரம் என்னும் நூலில் பெண்களுக்கு எதிராக எழுதப்பட்டிருப்பதாகப் படித்திருப்பதாகவும் அது உண்மையா? என்றும் கேட்டனர். பெண்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்கக் கூடாதென்றும் பெற்றோர், கணவன், மகன்கள் ஆகியோரைச் சார்ந்தே வாழவேண்டும் என்றும் எழுதியிருப்பது உண்மையா? என்று கேட்டனர். இது தவறு என்றும் மனு சொல்லவந்த கருத்து அது அல்ல என்றும் சொல்லி நான் விளக்கினேன். பெண்களுக்கு எப்போதும் யாராவது பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதே அதன் உண்மைப் பொருள் என்றும் சொல்லிவிட்டு மனு, பெண்களை மிகவும் பாராட்டி எழுதியிருப்பது உங்களுக்குத் தெரியுமா? என்று பதில் கேள்வி போட்டேன். தங்களுக்குத் தெரியாது என்று சொல்லி, அப்படி எழுதி இருக்கிறாரா? என்று வியப்புடன் கேட்டார்கள். இந்தியப் பெண்கள் பற்றி வேறு என்ன படித்து இருக்கிறீர்கள்? என்றும் கேட்டேன்.

    தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்தால், உடனே கொன்று விடுவதாகவும், கணவன் இறந்தவுடன் இந்துப் பெண்களைக் கட்டாயப்படுத்தி சிதைத்த தஹி தீயில் எரித்து விடுவதாகவும், இது பற்றிய பி.பி.சி. டாக்குமென்டரியை டெலிவிஷனில் பார்த்ததாகவும் சொன்னார்கள். அத்தோடு வரதட்சிணைக் கொடுமைகள் பற்றியும் பத்திரிக்கைகளில் அடிக்கடி வருகிறது என்றனர்.

    நான் என் பதிலைத் தொடர்ந்தேன் மனு தர்ம சாஸ்திரம் பெண்களுக்கு மிக ஆதரவு தருகிறது. சகோதரர்கள் அவர்களுக்கு ஆண்டுதோறும் எல்லா உதவிகளையும் செய்யவேண்டும், பெண்கள் எங்கு போற்றப்படுகிறார்களோ அங்கு மட்டுமே தெய்வம் வசிக்கும்; பெண்கள் அழுதால் அந்தக் குடும்பம் வேரோடு அழியும் என்று மனு எழுதி இருக்கிறார் என்றவுடன் அவர்கள் உடனே வியப்பு மேலிட காதைத் தீட்டிக்ண்டு கேட்டனர். பெண் குழந்தைகள் கொல்லப்படுவது அபூர்வமாக நடக்கிறது; பெருமளவு நடந்தால் பெண்கள் தொகை 50 சதத்துக்கு அல்லவா குறைந்து இருக்கும் என்றேன். அப்போது இந்திய ஜனத்தொகையில் ஆண்கள் - பெண்கள் விகிதாசாரம் ஏறத்தாழ 50-50 என்றே இருந்தது குறிப்பாக தமிழ்நாட்டில்!

    மேலும் பெண்கள் உடன்கட்டை ஏறுவதும் கட்டாயமில்லை. இந்தியாவின் இரண்டு பெரிய இதிஹாசங்களான ராமாயணத்திலும், மஹாபாரதத்திலும் கணவர்கள் இறந்தபின்னரும் மஹாராணிகள் உயிர் வாழ்ந்ததைக் எடுத்துக் காட்டினேன். அவர்கள் உடனே நீங்கள் இதையெல்லாம் ஆங்கிலத்தில் எழுதக் கூடாதா? என்று கேட்டனர். (அப்போது மனதுக்குள் வந்த எண்ணத்தை அவர்களிடம் சொல்லவில்லை. அட இதெல்லாம் இந்துக்களுக்கே தெரியாதே. உங்களைச் சொல்லி என்ன குற்றம்? என்று நினைத்துக்கொண்டு முதலில் தமிழில் புஸ்தகம் எழுத வேண்டும் என்று திட விரதம் பூண்டேன். அதன் விளைவாக நிறைய அத்தியாயங்களை எழுதினேன். பிறகு பாதியில் நிறுத்திவிட்டேன்.

    தசரதனின் மூன்று மனைவியரும் பாண்டவர்களின் தாயான குந்தி தேவியும் கணவர்கள் இறந்த பின்னரும் உயிர் வாழ்ந்தது பல இந்துக்களுக்கே தெரியாது. அதேபோல கணவனுடன் உடன்கட்டை ஏறக்கூடாது என்று தடுத்தபோதும் அவர்கள் சொல்லைக் கேளாது பூதப் பாண்டியன்தேவி சிதைத்தீயில் ஏறி உயிர்விட்ட சம்பவம் புறநானூற்றில் உளது என்பது தமிழர்களுக்கே தெரியாது. ரிக் வேதத்திலும் மனு தர்ம நூலிலும் சாதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இல்லை என்பதும் இந்துக்களுக்குத் தெரியாது.

    தமிழ்ப் பெண்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்று தொல்காப்பியர் தடை விதித்ததும், பெண்களைச் சேர்த்தால் என் மதம் 500 ஆண்டுகளுக்கு மேல் உலகில் நிலைக்காது என்று புத்தர் சொன்னதும் பலருக்கும் தெரியாது. ஒவ்வொருவரும் அவரது கால, தேச, வர்த்தமானத்தை மனதிற்கொண்டு பேசினர் என்பதை நாம் மறக்கக்கூடாது.

    மேலைநாட்டுப் பெண்களுக்கு வோட்டுரிமை கிடைப்பதற்கு முன்னரே இந்தியப் பெண்களுக்கு வோட்டுரிமை இருந்தது. மேலை நாட்டினர், பெண்களை கீழ்த்தர பிறப்புகளாக எண்ணினர்.

    Enjoying the preview?
    Page 1 of 1