Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ariya Vendiya Penmanigal
Ariya Vendiya Penmanigal
Ariya Vendiya Penmanigal
Ebook305 pages1 hour

Ariya Vendiya Penmanigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“நாம் அறிந்து கொண்ட பெண்கள் பலர் இருப்பினும் அறிய வேண்டிய பெண்மணிகளை பற்றி அறிய இதோ! இந்த புத்தகத்தில் படியுங்கள்” என்று நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் திருமதி காந்தலஷ்மி அவர்கள் கூறிய பொழுது எனக்குள் தோன்றிய எண்ணங்களை எழுதினேன்.

அது என்ன அறிய வேண்டிய பெண்மணிகள்? நான் அறியாத பெண்மணிகளா என்ன? சரி! படித்துப் பார்ப்போம் என்று இந்த புத்தகத்தை படித்து பயன் பெறுபவர்கள் ஒரு வகை.

அட! இந்தப் புத்தகத்தில் கூறியிருக்கும் பெண்மணி போன்றுதான் என் தமக்கையும் புகைப்பட துறைக்காக போராடினாள் என்று தனக்குத் தெரிந்த பெண்மணிகளுடன் பொறுத்திப் பார்த்து பயன் பெறுபவர்களும் இருக்கின்றனர். அவர்கள் மற்றொரு வகை.

சிறு சிறு குறிப்புக்களின் தேர்ந்த கோர்வையே இந்நூல். ஆஹா! தெரிந்த கதை ஆனால் தெரியாத பெண்மணிகளைப் பற்றி ஆசிரியர் எழுதியிருக்கிறாரே என்று சிலருக்கு தோன்றக்கூடும். பயன் பெற்ற வாசகர்கள் பட்டியலில் இவர்களும் இடம் பெறுவர்.

பெண்களின் பரிமாணங்கள் எத்தனை? கணவன் வேறுவிதமாக இருப்பினும் தான் செய்து கொண்ட திருமண ஒப்பந்தத்திற்கு உண்மையாக இருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட தியாகப் பெண்மணி! தண்ணீர் கூட பருகாமல் உண்ணாவிரத நோன்பிருக்கும் வைராக்கிய சுடர்மணி! நாட்டை ஆளும் மாட்சிமை பொருந்திய குடும்பத்தில் பிறந்து அண்ணனுக்கும் தந்தைக்கும் பாலமாக இருக்க வேண்டி தன்னை 'குடத்திலிட்ட விளக்காக' அடக்கிக் கொள்ளும் குன்றின்மணி... இப்படி இன்னும் பலவாறாக இரசனையுடன் படித்து பயன் பெறலாமா...

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580125907041
Ariya Vendiya Penmanigal

Read more from Kanthalakshmi Chandramouli

Related to Ariya Vendiya Penmanigal

Related ebooks

Reviews for Ariya Vendiya Penmanigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ariya Vendiya Penmanigal - Kanthalakshmi Chandramouli

    https://www.pustaka.co.in

    அறிய வேண்டிய பெண்மணிகள்

    Ariya Vendiya Penmanigal

    Author:

    காந்தலக்ஷ்மி சந்திரமெளலி

    Kanthalakshmi Chandramouli

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஷர்மிளாசான் ஐரோம்

    2. மிஷேல் ஒபாமா

    3. நெஃபர்ட்டி - டி - எகிப்து

    4. பிஷ்னோய் அம்ருதா

    5. மேரிக்ளப் வாலா ஜாதவ்

    6. ஆனந்தமயி மா

    7. இவா பிரான்

    8. தில்லையாடி வள்ளியம்மை

    9. ஜெர்மாயின் கிரியர்

    10. எஸ். என். லக்ஷ்மி

    11. ஃபாத்திமா பூட்டோ

    12. சிஸ்டர் சுப்புலட்சுமி

    13. பசுபுலேடி கண்ணாம்பா

    14. ஜோடி வில்லியம்ஸ்

    15. ஷோபா டிய்

    16. மேட்லீன் பியாட்யு

    17. அருணா ஷான்பாக்

    18. ரோசா பார்க்ஸ்

    19. மாடா ஹாரி

    20. டி.கே.பட்டம்மாள்

    21. டேம் அகதா கிறிஸ்டி

    22. சாந்தி ரங்கநாதன்

    23. அரசி எலிசெபெத்

    24. ஜஹனாரா பேகம்

    25. எட்வீனா மௌண்ட் பேட்டன்

    26. பேகம் அக்தார்

    27. ஹோமாய் வியாரா வால்லா

    28. பனிபாய் அம்மையார்

    29. ஷாநாஸ் ஹுசைன்

    30. ஜோதா அக்பர்

    31. கோல்டா மேயர்

    32. கிளியோபாட்ரா

    33. டாக்டர் பார்த்தா எலியட்

    34. இந்திரா காந்தி

    35. லியோனெல் கிப்ஸ்

    36. டாக்டர் அன்னிபெசன்ட்

    37. நிருபமா ராவ்

    38. சோஃபியா லோரென்

    39. ஆன்னி ஃபிராங்க் (Annie Frank)

    40. பன்வாரி தேவி

    41. ருக்மணி அருண்டேல்

    42. ஆங்க்சான் சியுகீ (Aung San Suu Kyi)

    43. பிருந்தாம்மா

    44. டோனி மோரிசன்

    45. பானுமதி ராமகிருஷ்ணா

    46. வேலுநாச்சியார்

    47. டயானா ஸ்பென்ஸர்

    48. சாவித்ரி கணேசன்

    49. சகுந்தலா தேவி

    50. அங்கமுத்து

    51. பத்மஸ்ரீ தார்லா தலால்

    52. சூயன்னா அருந்ததி ராய்

    53. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

    54. வை. மு. கோதைநாயகி

    55. டி.பி. ராஜலக்ஷ்மி

    56. சரோஜினி நாயுடு

    57. கே.பி.சுந்தராம்பாள்

    58. எலிசெபெத் பிளாக்வெல்

    59. மதர் தெரசா

    60. ஹிலாரி கிளின்டன்

    61. மீனாக்ஷி அம்மாள்

    62. ருக்மணி லக்ஷ்மிபதி

    63. சௌகார் ஜானகி

    64. துர்காபாய் தேஷ்முக்

    65. டி. ஆர். ராஜகுமாரி

    66. மர்லின் மன்ரோ

    67. எம். எல். வசந்தகுமாரி

    68. ஹெலன் கெல்லர்

    69. ஜெனிஃபர் கொண்டால் - கபூர்

    70. டாக்டர் வி. சாந்தா

    71. மார்கரெட் தாட்சர்

    72. பீட்டி வில்லியம்ஸ்

    73. பியர்ள் எஸ் பக்

    74. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி

    75. ஆலிஸ் மன்ரோ

    76. சரளாதேவி சௌதாரிணி

    77. ஷர்மிளா டாகூர்

    78. ஆர். சூடாமணி

    79. டோரிஸ் லெஸ்ஸிங்க்

    80. திருமதி சுதா மூர்த்தி

    81. ரேழல் கார்சன்

    82. குமாரி கமலா

    83. சடாகோ சசாகி

    84. டாக்டர் ஜேன் குடால்

    85. அருணாராய்

    86. ராணி துர்காவதி

    87. அலீஸ் வாக்கர்

    88. ஜேன் ஆடம்ஸ்

    89. நீத்தா மேத்தா

    90. திருமதி சாவித்ரி வைத்தி

    91. பாலசரஸ்வதி

    92. ஹென்ரியட்டா லாக்ஸ்

    93. பத்மாசினி அம்மாள்

    94. மதூர் ஜாஃபரி

    95. டாக்டர் ஈ. வி. கல்யாணி

    96. டாக்டர் ரிட்டா லிவி மோண்டால் சினி

    என் பார்வையில்...

    சிறு வயதிலிருந்தே பெண்கள் செய்யும் சாதனைகள் என்னைக் கவர்ந்து, அவர்கள் யார் எனும் கேள்வி என் மனதில் தொக்கி நிற்கும்.

    என் தாய் மறைந்த திருமதி கனகாம்பா சரித்திரப் பாட ரசிகை. சரித்திரக் கதைகளை உணர்வு பொங்க விவரித்துக் கூறுவார்.

    என் தந்தை மறைந்த திரு. எல். ராமசுப்ரமணியன் உலகச் சுகாதார மையத்தில் உயர்பதவியில் இருந்ததால் என்னை உலக அரங்கைத் தினசரிகள் மூலம் காணப் பழக்கினார். நேரில் காணும் வாய்ப்புப் பெற்றேன்.

    பல வெளிநாடுகள் சென்று வரும் வாய்ப்பு கிட்ட, மிகவும் ஆர்வத்துடனும், எண்ணற்ற கேள்விகளுடனும் உலக அரங்கில் சாதனைகள் புரிந்த பெண்களை நோக்கத் துவங்கினேன்.

    லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன் இந்த ஆர்வத்தைக் கண்டு 'அறிய வேண்டிய பெண்களைப் பற்றி எழுதுங்கள்' என்றார்.

    மனசெல்லாம் மத்தாப்பூக்கள் பூக்க, ஒவ்வொரு பெண்மணியின் சரிதம் படிக்க, படிக்க வேறு ஏதோ ஓர் உலகிற்குச் சென்றுவிட்டேன். தொடர்ந்து சில ஆண்டுகள் பத்திரிகையில் வெளியிட்டதற்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

    என் சிநேகிதி திருமதி லஷ்மி ரமணன் வெறும் சிநேகிதி மட்டுமல்ல, நான் மிகவும் போற்றும் என் ஆதர்ச எழுத்தாளர்.

    - காந்தலஷ்மி சந்திரமௌலி

    முன்னுரை

    'அறிய வேண்டிய பெண்மணிகள்' எனும் தலைப்பை படித்த உடன் நான் பெரிதும் போற்றி வணங்கும் பெண்மணியான பூஜ்யஸ்ரீ மதிஒளி ஆர். சரஸ்வதி அவர்களை மனதால் வணங்கினேன்.

    காற்றாகத் தன்னை கரைத்துக் கொண்டவள் பெண். கனலாகத் தன்னைக் காத்துக் கொண்டவளும் பெண்

    வாழ்வில் பெண்ணின் பங்கு வேண்டும். புண்ணியம் தங்க வேண்டும். புன்மைகள் மறைய வேண்டும் என்று பூஜ்யஸ்ரீ அவர்கள் எழுதிய எழுத்துக்கள் என் கண் முன் தோன்றின.

    நந்தலாலா சேவா சமிதியின் மூலம், பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை உலகம் முழுவதும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் அவர் ஒரு தனி பெண்மணியாக இருந்து இந்த சமுதாயத்திற்கு நன்மைகள் பல புரிந்து வரும் அவர்களை உதாரணமாகக் கொண்டு இன்றளவும் நான் வாழ்ந்து வருகிறேன்.

    அதனால் நாம் அறிந்து கொண்ட பெண்கள் பலர் இருப்பினும் அறிய வேண்டிய பெண்மணிகளை பற்றி அறிய இதோ! இந்த புத்தகத்தில் படியுங்கள் என்று நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் திருமதி காந்தலஷ்மி அவர்கள் கூறிய பொழுது எனக்குள் தோன்றிய எண்ணங்களை எழுதினேன்.

    அது என்ன அறிய வேண்டிய பெண்மணிகள்? நான் அறியாத பெண்மணிகளா என்ன? சரி! படித்துப் பார்ப்போம் என்று இந்த புத்தகத்தை படித்து பயன் பெறுபவர்கள் ஒரு வகை.

    அட! இந்தப் புத்தகத்தில் கூறியிருக்கும் பெண்மணி போன்றுதான் என் தமக்கையும் புகைப்பட துறைக்காக போராடினாள் என்று தனக்குத் தெரிந்த பெண்மணிகளுடன் பொறுத்திப் பார்த்து பயன் பெறுபவர்களும் இருக்கின்றனர். அவர்கள் மற்றொரு வகை.

    சிறு சிறு குறிப்புக்களின் தேர்ந்த கோர்வையே இந்நூல். ஆஹா! தெரிந்த கதை ஆனால் தெரியாத பெண்மணிகளைப் பற்றி ஆசிரியர் எழுதியிருக்கிறாரே என்று சிலருக்கு தோன்றக்கூடும். பயன் பெற்ற வாசகர்கள் பட்டியலில் இவர்களும் இடம் பெறுவர்.

    பெண்களின் பரிமாணங்கள் எத்தனை? கணவன் வேறுவிதமாக இருப்பினும் தான் செய்து கொண்ட திருமண ஒப்பந்தத்திற்கு உண்மையாக இருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட தியாகப் பெண்மணி! தண்ணீர் கூட பருகாமல் உண்ணாவிரத நோன்பிருக்கும் வைராக்கிய சுடர்மணி! நாட்டை ஆளும் மாட்சிமை பொருந்திய குடும்பத்தில் பிறந்து அண்ணனுக்கும் தந்தைக்கும் பாலமாக இருக்க வேண்டி தன்னை 'குடத்திலிட்ட விளக்காக' அடக்கிக் கொள்ளும் குன்றின்மணி... இப்படி இன்னும் பலவாறாக இரசனையுடன் படித்து பயன் பெறுபவர்கள் ஒரு வகை.

    எனினும் ‘அறிய வேண்டிய பெண்மணிகள்' புத்தகத்தின் ஆசிரியர், தன் வாசகர்கள் எவ்விதமாக பயன்பெற விரும்பி இந்த புத்தகத்தை எழுதியிருப்பார் என்பதை சிந்திக்க வேண்டும்.

    ஸ்பெஷலாக லேடீஸ் அறியத்தக்க செய்தி என்னவாக இருக்க வேண்டும், என்று தனது பத்திரிகையில் அறிய வேண்டிய பெண்மணிகளை, சாதனை பெண்மணி லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜாராகவன் வெளியிட்டார்? அவரது நோக்கம் என்ன? தெரிந்து கொள்ள வேண்டும்.

    கேள்விகள் என்னுள் நிழல்படமாக ஓடுகிறது. விடைகள் வெளிச்சமாக பிரார்த்திக்கிறேன். அறிய வேண்டிய பெண்மணிகள் புத்தகத்தின் ‘அரிய பயன்' வாசகர்களுக்கு கிட்ட வேண்டுமானால் இந்தக் கேள்விகள் முக்கியமாகின்றன. இந்தப் புத்தகத்தில் பல சாதனைப் பெண்மணிகளின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.

    அவர்கள் பல ஊர்கள் ஏன் பல நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள். பெயர்கள் வித்தியாசப்படும். நாடுகள் வேறுபடும். ஆரவாரமில்லாமல் 'அமைதிக்கான நோபல் பரிசு’ பெற்றவரும் இதில் அடக்கம். அவர்கள் காற்றைப்போல் தங்களை கரைத்துக் கொள்ளத் தெரிந்தவர்கள். பேருந்தில் 'எழுந்திருக்க மறுத்து’ உட்கார்ந்திருந்த ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணியின் சக்தி கிளர்ந்து எழுந்த கதை, கனலாக தன் இனத்தைக் காத்துக் கொண்ட பெண்மணிக்கு ஒரு உதாரணம்.

    இப்படி பல ஊர் சாதனைப் பெண்கள், பல இனத்தவர், பல மொழியினர் கதைகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றாலும் அவர்கள் அனைவரும் உடலால் உள்ளத்தால் உணர்வால் ஒரே குலம். வாழ்வில் பெண்ணின் பங்கு வேண்டும். புண்ணியம் தங்க வேண்டும். புன்மைகள் மறைய வேண்டும் என்று பாடுபட்டவர்கள்.

    ஆசிரியர் அவர்கள், சாதனை புரிந்த இந்த பெண்மணிகள் யார் எனும் கேள்வி என் மனதில் தொக்கி நிற்கிறது என்று புத்தகத்தின் அறிமுக வரியிலேயே குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு விடை என்ன? அவர்கள் யார் என்பதற்கான தனித்துவமான அடையாளம் அவர்கள் ஊரிலோ, பெயரிலோ ஏன் அவர்கள் செய்த சாதனையில் கூட இல்லை. பின் ஆசிரியர் அவர்கள் தேடி எடுத்தது என்ன?

    வெவ்வேறு பெயருடன், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு சோதனைகளில் வெவ்வேறு சாதனைகள் செய்தாலும், அவர்களுக்குள் இருக்கும் 'பெண்மையின் சக்தி' ஒன்றே. அந்த சக்தி அன்றோ அவர்களின் தன்னிகரில்லா அடையாளம்? அதுவே அந்தப் பெண்மணிகளைத் தாங்கி நிற்கும் பேருண்மை.

    எனவே, 'அறிய வேண்டிய பெண்மணிகள்' புத்தகத்தை உணர்ந்து படித்து நம்முள் ஒளிந்திருக்கும் அந்த சக்தி மிகு பெண்மணியை அறிய முற்படுவோம். அந்த பெண்மணிகளுடைய எழுச்சிமிகு சரித்திரம் நம்முள் ஆழ்ந்திருக்கும் புதையலை தோண்டி எடுக்க ஏதுவாக வேண்டும். இதுவே இந்தப் புத்தகத்தின் முழுமையான நிறைவான பயனாக இருக்கக் கூடும்.

    பெண்மை எனும் பேருண்மையின் சான்றாகி, என் குருவாகி, மனித நல மேம்பாட்டிற்காக நன்மைகள் புரிந்து வரும் பூஜ்யஸ்ரீ மதிஒளி ஆர். சரஸ்வதி அவர்களைப் பார்த்து நான் வளர்ச்சியடைகிறேன். அறிய வேண்டிய பெண்மணிகள் புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொரு தன் மனதொத்து பதிந்த மாபெரும் சக்தியை நாடிட, கூடிட பணிந்திட பிரார்த்திக்கிறேன். நன்றி!

    பூர்ணிமா

    Programme Head

    BRIGHT MIND TRAINING

    (Based on Mathioli's Literature)

    (A division of Ramalakshmi Trust)

    1. ஷர்மிளாசான் ஐரோம்

    இன்றும் போராடும் பெண்மணி

    2000-ம் ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி மணிப்பூர் மாநிலத்தின் தலைநகராம் இம்பாலில் 26 வயது இளம்பெண் அரசாங்கத்தின் சட்டத்தை எதிர்த்து ஓர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினார்.

    இன்று இந்த 2014-ம் ஆண்டு ஐரோம் ஷர்மிளாசான் எனும் இந்த இளம் பெண்ணின் வயது 40 ஆகும்.

    ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் எனும் இச்சட்டத்தினால் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்துள்ளனர். ஏராளமான அப்பாவிப் பெண்கள் பாலியல் வன்முறையில் சீரழிந்ததைக் கண்டு, அச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒற்றைப் பெண்ணாக உண்ணாவிரதம் துவங்கினார்.

    ஒரு துளி உணவு, ஒரு சொட்டுத் தண்ணீர்கூட உள்ளே செல்ல அனுமதிக்காத இப்பெண்மணி கடும் உண்ணா விரதமிருந்தாள். ஷர்மிளாவின் உடல் நிலையைக் கண்டு, அரசு அவரைக் கைது செய்து வலுக்கட்டாயமாக மூக்கில் உணவு பிளாஸ்டிக் ட்யூப் செலுத்தி அதன் வழியாக உணவைச் செலுத்தி வருகின்றது.

    'தற்கொலை முயற்சி' என்று குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வோர் ஆண்டும் ‘விடுதலை' என்று ஒரு நிமிடம் செய்யப்பட்டு அடுத்த நிமிடம் மீண்டும் கைது செய்யப்படுகிறார்.

    தண்ணீர் கூடக் குடிப்பதில்லை, உணவு உட்கொள்ளுவதில்லை, கண்ணாடி பார்ப்பதில்லை, செருப்பு அணிவதில்லை, தலைக்கு எண்ணெய் வைப்பதில்லை, தலையைக் கூட வாருவதில்லை, தாயைச் சந்திப்பதில்லை என்று எல்லாவற்றையும் மறுதளிக்கும் ஷர்மிளா போராட்டத்தின் உச்சகட்டமாக பஞ்சு வைத்துப் பற்களைச் சுத்தம் செய்கிறாள். ஏனெனில், வாயில் தண்ணீர்கூடப் படக் கூடாது எனும் திண்மை!

    உடலெல்லாம் வற்றி, மாதவிடாய் சுழற்சிகூட உணவில்லாததால் நின்றுவிட, 2006-ம் ஆண்டு ஷர்மிளா விடுதலை செய்யப்பட்டார்.

    இம்பாலில் இருந்து புதுதில்லிக்குத் தப்பி வந்த ஷர்மிளா காந்திஜியின் ஆசி பெற ராஜ்காட்டிற்கு வந்தார். பிறகு ஜன்தர் மன்தரின் மீண்டும் உண்ணாவிரதம் துவங்க மீண்டும் அடைக்கப் பட்டார் சிறையில்!

    நியாயம், உண்மை, அன்பு, தர்மம், அமைதி என்று போராடும் இப்பெண் 'இது என் கடமை' என்கிறாள் எக்காரணம் கொண்டும் என் மகளைச் சந்தித்து அவளைப் பலவீனப்படுத்த விரும்பவில்லை. ஆனால், ஒரு தாயாக என் குழந்தை உணவின்றி இருப்பது என்னை கொல்கிறது என்கிறார் ஷர்மிளாவின் தாய் ஐரோம் ஆங்க்பி சக்தி.

    எப்பேர்ப்பட்ட பெண்மணி, எத்தனை சக்தி. இப்படி ஒரு தாய்க்குப் பிறந்த ஷர்மிளா ஒரு புலிக்குட்டிதானே!

    2. மிஷேல் ஒபாமா

    அமெரிக்காவின் முதல் பெண்மணி

    ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னால், ஒரு பெண்ணின் வலிமை உண்டு!

    இப்பழமொழியை ஓராயிரம் தடவை கேட்டாயிற்று என்றாலும், சமீபத்து உலக நாயகனான பராக் ஒபாமாவின் பின்பலம் ஆன மிஷேல் ஒபாமா எப்படிப்பட்டவர் எனும் குறுகுறுப்பு அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

    அமெரிக்காவின் 'டெமாக்ரெட்டிக்’ (Democratic) கட்சியின் சார்பில் பராக் ஒபாமா நிற்பதை திருமதி. மிஷேல் முதலில் விரும்பவில்லை.

    அமெரிக்க பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் மிஷேல் ஒபாமாவின் ஸ்டைல், பேசும் தன்மை, அறிவுக்கூர்மை இவற்றை முன்னாள் முதல் பெண்மணியான ஜாக்குலின் கென்னடியோடு ஒப்பிடுகின்றன.

    44 வயதான மிஷேல் ஒபாமா பிரின்ஸ்டன் மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படித்த, சட்ட நிபுணர். சிகாகோவில் ஓர் உழைக்கும் வர்க்கத்துக் குடும்பத்தில் பிறந்த இவர்தான் வெள்ளை மாளிகையின் ஆப்பிரிக்க-அமெரிக்கா முதல் பெண்மணி ஆவார்.

    தன் பணி, குடும்பம் இரண்டையும் பாங்காக நடத்தும் இவர் பேசுகையில் தன்னம்பிக்கையும், அறிவும் சுடர் விடுகின்றது. இவரைப் பார்க்கும் அமெரிக்கப் பெண்கள் மிஷேல் தன்னையும் தன் கணவரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் பெண் உரிமை சிந்தனை கொண்டவர் என்கிறார்கள்.

    கார்ப்பரேட் லாயர் என்று ஒளிரும் இவர் தன் கணவருக்குச் சிறந்த ஆலோசகரும் ஆவார். ஹிலாரி கிளிண்டனைப் போன்று இவர் கணவரின் பணியில் தலையிட மாட்டார் என்றாலும், தான் நினைத்ததைக் கூறத் தயங்காதவர் என்று அனைவரும் கருதுகிறார்கள்.

    என் மனைவி என்னை 'தி பெஸ்ட்' என்று கூறுவதில்லை என்று ஒபாமா குறைபட்டுக் கொண்டார். என்னிடம் உள்ள குறையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், என் மனைவியைக் கேளுங்கள் என்றார்.

    என் கணவர் குறட்டை விடுவார். தன் துணிகளைச் சரியாக மடித்து வைப்பதில்லை. உபயோகித்த சாக்ஸுகளைத் தரையில் போட்டு விடுவார் என்று ஒரு சராசரி மனைவியாக மிஷேல் கூறியதும், அப்பாடா, நம்ம வீட்டில் மட்டுமல்ல, வெள்ளை மாளிகையிலும் இப்படித்தான் என்று திருப்தி அடைந்த பெண்கள் அநேகம்.

    தன் மனைவி அருகில் இருந்தாலே, ஒபாமாவின் முகம் பளிச்சிடுகிறது என்று அமெரிக்க மக்கள் கவனித்து விட்டார்கள்.

    ம்... நம்ம வீட்டுல அப்படியா? கிட்டே வந்தால் கடுவன் பூனைதான் என்று ஏக்கப் பெருமூச்சு விடும் பெண்களின் எண்ணிக்கை கூடி விட்டது.

    3. நெஃபர்ட்டி - டி - எகிப்து

    எகிப்து ராணி

    எகிப்து நாட்டின் 18வது சாம்ராஜ்யத்தின் அரசி நெஃபர்டி - டியின் அழகு கிளியோபாட்ராவையும் மிஞ்சுவதாக உள்ளது.

    தன் கணவன் அகேன்டென் (Akhenaten) உடன் சாம்ராஜ்யத்தை ஆண்டாலும் அவரை விடவும் அதிகப் புகழ் வாய்ந்தவராக இருந்தாள்.

    நெஃபர்ட்டிடியின் தங்கை முட்னோமே (Mutnojme) யின் சிலைகள் எகிப்து நாட்டின் Valley of Kings மற்றும் லக்ஸார் (Luxor) போன்ற இடங்களில் இருந்தாலும் நெஃபர்ட்டிடி இராஜவம்சத்தைச் சார்ந்தவரில்லை என்றும், ஓர் இராணுவ வீரனின்

    Enjoying the preview?
    Page 1 of 1