Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirumathi La. Sa. Ra.vin Ninaivu Kurippugal
Thirumathi La. Sa. Ra.vin Ninaivu Kurippugal
Thirumathi La. Sa. Ra.vin Ninaivu Kurippugal
Ebook299 pages1 hour

Thirumathi La. Sa. Ra.vin Ninaivu Kurippugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

லா.ச.ரா. தனது அந்திம காலத்தில் மணிக்கொடி சிட்டி, இலக்கிய பீடம் விக்ரமன், வாசகர் வட்டம் லஷ்மி கிருஷ்ணமூர்த்தியை சந்திக்க விரும்பினார்.
சிட்டியைப் பார்க்க நரசய்யாவே காரில் வந்து லா.ச.ராவை கூட்டிப் போய் சிட்டியை சந்திக்க வைத்து பின் - திரும்ப கொண்டு வந்து விட்டார். லஷ்மியை நான் சந்தித்த கதையை நான் இதில் எழுதி இருக்கிறேன்.
விக்ரமன் சாரை (என்னைவிட ஆறுமாதம் சிறியவர்) சென்று பார்த்து நெடுநேரம் பழைய கதைகள் பேசி கிளம்புகையில் எதேச்சையாக நான் டைரி எழுதுவதைப் பற்றிய பேச்சில் தொடர்ந்து முடிகையில்....
“அடடே! அதை ரிஷிகிட்டே கொடுத்தனுப்புங்கம்மா. நான் இலக்கிய பீடத்துல போடலாமான்னு பாக்கறேன்!"
"தமாஷ் பண்ணாதீங்கோ. இது டைரி. கட்டுரையோ, கதையோ போல சுவாரஸ்யமா இருக்கறதுக்கு. ‘ரா’வா இருக்கும். கார்ரே மூர்ரேன்னு மனசுலே தோணினதை தோணின படி எழுதியிருப்பேன். கேட்டதே சந்தோஷம்''
“எனக்கு போட்டதே சந்தோஷம்னு இருக்க வேண்டாமா?”
ஆமாம். ஆமாம். ஒத்துக்காதீங்கோ சார். “ஒரு தடவை அமெரிக்காவிலிருந்து ஸ்வல்லபெல் வந்து அப்பாவைப் பார்த்து சாப்பிட்டுவிட்டு போய் நல்லா இருக்குன்னு பாராட்டி சொன்னார்னு அம்மா டைரியில் எழுதி இருந்ததைப் படிச்சுட்டு ஸ்வல்லபெல் என்னை எப்போ சாப்பிட்டான்? அதுவும் நல்லா இருக்குன்னு பாராட்டி வேற சொன்னானா?ன்னு அதிர்ச்சி ஆக்ஷனோட சொல்ல அன்னிக்கு ரொம்ப தமாஷாயுடுத்து அருகிலிருந்த அனுகூல சத்ருரிஷியின் குரல்.
"கேலி பண்ணாதீங்கோ சார். அவர் என்ன எழுத்தாளரா அவருக்குன்னு ஒரு பாணி வெச்சுக்கறதுக்கு. அப்படியே இருந்தாலும் அவருக்கு தான் நடந்ததை அப்படியே சொல்ற பாணி இருக்கே. நீங்க அதை செம்மைப்படுத்தி கொடுங்கோளேன். வரிசை பிரகாரம் இருக்கணும்ங்கறதில்லை. எதை எதை நீங்க சுவாரஸ்யம்னு நினைக்கறேளோ அதை எல்லாம் எழுதி அனுப்புங்கோ. எனக்குத் தெரியாதா எதைப் போடணும்? போட வேண்டாம்னு. மத்த எழுத்தாளரோட மனைவி எல்லாரும் எழுதறாளா? லா.ச. ராவோட அறுபத்தி மூணு வருஷம் குடுத்தனம் நடத்தின உங்கம்மாவை எனக்கு ஐம்பது வருஷத்துக்கு மேலாய் தெரியும். நீங்க அனுப்பிவைங்கோம்மா.
வைத்தேன்.
ஜூலை 1ம் தேதி எங்கள் கல்யாணநாள். அக்டோபர் முப்பது அவர் பிறந்தநாள். ஜூலை மாதம் ஆரம்பித்த இந்தத் தொடர் அடுத்த வருடம் அக்டோபர் நிறைவு பெற்றது கூட அக்டோபர் முப்பது அன்று பிறந்தநாளன்றே அவர் மறைந்த நாளாகவும் ஆகிவிட்டதைப்போல ஒரு தற்செயல் நிகழ்வே. இதன்மூலம் நிறையப்பேரின் அன்பும், பாராட்டும், நட்பும், மரியாதையும் இத்தனை வயதுக்கு மேல் புதிது புதிதாகக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. 2017 ஜுன் 12 அன்று தொண்ணூறு வயதாகிறது. எத்தனை வயதானால் என்ன? அன்பு கசக்குமா என்ன?
லா.ச. ராவைப் பற்றி ‘படித்ததில் பிடித்தது’ என்கிற தலைப்பில் இதில் இடம் பெற்றுள்ள மூன்று கட்டுரைகளும் லா.ச.ராநூற்றாண்டிற்காக ‘சப்தரிஷி' எழுதினது. உங்களுக்கும் பிடிக்கும்
வேறு என்ன சொல்லப்போகிறேன்?
இதனை எங்கெங்கோ இருப்பவர்கள் படிக்கும் பொழுது அங்கங்கேயெல்லாம் லா.ச.ரா நினைவுகள் ஒரு வாஸனை போல கமழ்ந்து கொண்டிருப்பதை நான் இங்கிருந்துகொண்டே நுகர்ந்து மகிழ்வேன் என்பதைத் தவிர.
ஆசிர்வாதங்கள்
- ஹைமாவதி ராமாமிருதம்
Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580134905675
Thirumathi La. Sa. Ra.vin Ninaivu Kurippugal

Related to Thirumathi La. Sa. Ra.vin Ninaivu Kurippugal

Related ebooks

Reviews for Thirumathi La. Sa. Ra.vin Ninaivu Kurippugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirumathi La. Sa. Ra.vin Ninaivu Kurippugal - Hemavathi Ramamirtham

    http://www.pustaka.co.in

    திருமதி லா.ச.ரா.வின் நினைவுக் குறிப்புகள்

    Thirumathi La. Sa. Ra.vin Ninaivu Kurippugal

    Author:

    ஹைமாவதி ராமாமிர்தம்

    Hemavathi Ramamirtham

    For more books

    http://pustaka.co.in/home/author/hemavathi-ramamirtham

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. படித்ததில் பிடித்தது

    2. அப்பாவின் ரசிகன்

    3. எழுதாம இருக்க முடியல!

    4. நூற்றாண்டில் லா.ச.ரா. ஓர் அரிய அறிமுகம்

    5. ஹேமாவதி ராமாமிர்தம் பற்றி சாருநிவேதிதா சொல்கிறார்

    6. நூற்றாண்டு கால இலக்கிய வினோதம்

    7. லா.ச.ரா. நூற்றாண்டு ஆரம்பவிழாவில் திருமதி லா.ச.ரா.

    8. சாஹித்ய அகாதமியும் சென்னை பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய நூற்றாண்டு விழாவில் பேச்சு

    9. காஃபியும் லா.ச.ரா.வும்

    10. என் கணவர்

    11. அனு அன்புள்ள அனு!

    12. காவ்யா இதழ் லா.ச.ரா. நூற்றாண்டு சிறப்பு மலருக்காக நூற்றாண்டு கண்ட நாயகரின் நாயகியோடு உரையாடல்

    13. கடிதமும் கருத்தும்

    14. லா.ச.ரா.சொல்கிறார்

    15. லா.ச.ரா. துணைவியாரின் டைரிக்குறிப்பு -1

    16. லா.ச.ரா. துணைவியாரின் டைரிக்குறிப்பு -2-

    17. லா.ச.ரா. துணைவியாரின் டைரிக்குறிப்பு - 3

    18. லா.ச.ரா. துணைவியாரின் டைரிக்குறிப்பு -4

    19. லா.ச.ரா. துணைவியாரின் டைரிக்குறிப்பு – 5

    20. லா.ச.ரா. துணைவியாரின் டைரிக்குறிப்பு - 6

    21. லா.ச.ரா.துணைவியாரின் டைரிக்குறிப்பு - 7

    22. லா.ச.ரா. துணைவியாரின் டைரிக்குறிப்பு - 8

    23. லா.ச.ரா.துணைவியாரின் டைரிக்குறிப்பு - 9

    24. லா.ச.ரா.துணைவியாரின் டைரிக்குறிப்பு - 10

    25. லா.ச.ரா.துணைவியாரின் டைரிக்குறிப்பு- 11

    26. லா.ச.ரா.துணைவியாரின் டைரிக்குறிப்பு- 12

    27. லா.ச.ரா.துணைவியாரின் டைரிக்குறிப்பு - 13

    28. லா.ச.ரா.துணைவியாரின் டைரிக்குறிப்பு - 14

    29. லா.ச.ரா.துணைவியாரின் டைரிக்குறிப்பு - 15

    30. லா.ச.ரா.துணைவியாரின் டைரிக்குறிப்பு - 16

    என்னுரை

    லா.ச.ரா. தனது அந்திம காலத்தில் மணிக்கொடி சிட்டி, இலக்கிய பீடம் விக்ரமன், வாசகர் வட்டம் லஷ்மி கிருஷ்ணமூர்த்தியை சந்திக்க விரும்பினார்.

    சிட்டியைப் பார்க்க நரசய்யாவே காரில் வந்து லா.ச.ராவை கூட்டிப் போய் சிட்டியை சந்திக்க வைத்து பின் - திரும்ப கொண்டு வந்து விட்டார். லஷ்மியை நான் சந்தித்த கதையை நான் இதில் எழுதி இருக்கிறேன்.

    விக்ரமன் சாரை (என்னைவிட ஆறுமாதம் சிறியவர்) சென்று பார்த்து நெடுநேரம் பழைய கதைகள் பேசி கிளம்புகையில் எதேச்சையாக நான் டைரி எழுதுவதைப் பற்றிய பேச்சில் தொடர்ந்து முடிகையில்....

    அடடே! அதை ரிஷிகிட்டே கொடுத்தனுப்புங்கம்மா. நான் இலக்கிய பீடத்துல போடலாமான்னு பாக்கறேன்!

    தமாஷ் பண்ணாதீங்கோ. இது டைரி. கட்டுரையோ, கதையோ போல சுவாரஸ்யமா இருக்கறதுக்கு. ‘ரா’வா இருக்கும். கார்ரே மூர்ரேன்னு மனசுலே தோணினதை தோணின படி எழுதியிருப்பேன். கேட்டதே சந்தோஷம்

    எனக்கு போட்டதே சந்தோஷம்னு இருக்க வேண்டாமா?

    ஆமாம். ஆமாம். ஒத்துக்காதீங்கோ சார். "ஒரு தடவை அமெரிக்காவிலிருந்து ஸ்வல்லபெல் வந்து அப்பாவைப் பார்த்து சாப்பிட்டுவிட்டு போய் நல்லா இருக்குன்னு பாராட்டி சொன்னார்னு அம்மா டைரியில் எழுதி இருந்ததைப் படிச்சுட்டு ஸ்வல்லபெல் என்னை எப்போ சாப்பிட்டான்? அதுவும் நல்லா இருக்குன்னு பாராட்டி வேற சொன்னானா?ன்னு அதிர்ச்சி ஆக்ஷனோட சொல்ல அன்னிக்கு ரொம்ப தமாஷாயுடுத்து அருகிலிருந்த அனுகூல சத்ருரிஷியின் குரல்.

    "கேலி பண்ணாதீங்கோ சார். அவர் என்ன எழுத்தாளரா அவருக்குன்னு ஒரு பாணி வெச்சுக்கறதுக்கு. அப்படியே இருந்தாலும் அவருக்கு தான் நடந்ததை அப்படியே சொல்ற பாணி இருக்கே. நீங்க அதை செம்மைப்படுத்தி கொடுங்கோளேன். வரிசை பிரகாரம் இருக்கணும்ங்கறதில்லை. எதை எதை நீங்க சுவாரஸ்யம்னு நினைக்கறேளோ அதை எல்லாம் எழுதி அனுப்புங்கோ. எனக்குத் தெரியாதா எதைப் போடணும்? போட வேண்டாம்னு. மத்த எழுத்தாளரோட மனைவி எல்லாரும் எழுதறாளா? லா.ச. ராவோட அறுபத்தி மூணு வருஷம் குடுத்தனம் நடத்தின உங்கம்மாவை எனக்கு ஐம்பது வருஷத்துக்கு மேலாய் தெரியும். நீங்க அனுப்பிவைங்கோம்மா.

    வைத்தேன்.

    ஜூலை 1ம் தேதி எங்கள் கல்யாணநாள். அக்டோபர் முப்பது அவர் பிறந்தநாள். ஜூலை மாதம் ஆரம்பித்த இந்தத் தொடர் அடுத்த வருடம் அக்டோபர் நிறைவு பெற்றது கூட அக்டோபர் முப்பது அன்று பிறந்தநாளன்றே அவர் மறைந்த நாளாகவும் ஆகிவிட்டதைப்போல ஒரு தற்செயல் நிகழ்வே. இதன்மூலம் நிறையப்பேரின் அன்பும், பாராட்டும், நட்பும், மரியாதையும் இத்தனை வயதுக்கு மேல் புதிது புதிதாகக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. 2017 ஜுன் 12 அன்று தொண்ணூறு வயதாகிறது. எத்தனை வயதானால் என்ன? அன்பு கசக்குமா என்ன?

    லா.ச. ராவைப் பற்றி ‘படித்ததில் பிடித்தது’ என்கிற தலைப்பில் இதில் இடம் பெற்றுள்ள மூன்று கட்டுரைகளும் லா.ச.ராநூற்றாண்டிற்காக ‘சப்தரிஷி' எழுதினது. உங்களுக்கும் பிடிக்கும்

    வேறு என்ன சொல்லப்போகிறேன்?

    இதனை எங்கெங்கோ இருப்பவர்கள் படிக்கும் பொழுது அங்கங்கேயெல்லாம் லா.ச.ரா நினைவுகள் ஒரு வாஸனை போல கமழ்ந்து கொண்டிருப்பதை நான் இங்கிருந்துகொண்டே நுகர்ந்து மகிழ்வேன் என்பதைத் தவிர.

    ஆசிர்வாதங்கள்

    - ஹைமாவதி ராமாமிருதம்

    1. படித்ததில் பிடித்தது

    இந்தச் சுவர் இருக்கிறது. இதில் எத்தனை செங்கற்கள் இருக்கின்றன, இவையெல்லாம் ஒற்றைக் கற்களா இரட்டைக் கற்களா, இவையாவும் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, எப்படிச் சுடப்பட்டன, எவ்வளவு உடைந்து போயின, எங்கெங்கு கொண்டுபோகப்பட்டன. அவை எவ்வளவு திடமாக உள்ளன. இம்மாதிரியான கேள்விகளுக்கு விடைதெரிகிறதா? இந்த மாதிரி சாதாரண ஒரு கட்டடத்து பிரச்சனைக்கே எவ்வளவு (hurdler) தடைகள் முற்பிறவி பிற்பிறவியாவும் இருக்கின்றன. அது போல வீடு என்று இதைப்பார்க்கும் போது இவ்வளவு விஸ்தரிப்புப் பண்ண வேண்டியிருக்கிறது. வீட்டை அழகாக வைத்துக் கொள்ள ஆதரவாகக் கூரை அடைக்கலம் எல்லாம் இருக்கின்றன. இதே போலத்தான் நானின் நான் என்பதும் ஒரு (Consciousness) – பிரக்ஞை.

    - லா.ச.ராமாமிர்தம்.

    கூட்டுக் குடும்பத்துக்கு நடுவில் நான் பிறந்தேன். வளர்ந்தேன். அது மாத்திரமல்ல என் அண்டை வீட்டார்களும் கூடக் கூட்டுக் குடும்பத்திலேயே இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் என் ஜாதியினருமல்ல. கூட்டுக்குடும்பம் என்றால் சில சமயங்களில் வீடுகூட மாறியிருக்கலாம். ஆனால் ஒரு சம்பிரதாயத்தைக் கடைப் பிடித்தவர்கள் அவர்கள். சம்பிரதாயம் என்றால் என்ன வீட்டிற்கு மூத்தவன் எவனோ அவன் சொல்படி கேட்க வேண்டும் நாம். ஏனென்றால் வாழ்க்கையில் ரொம்பப் பட்டவன் அவன். அப்படியென்றால் பெற்றோர்கள் மட்டுமல்ல. அண்ணா - அண்ணாச்சிக்கென்று ஒரு பங்கே ஜாஸ்தி ஒதுக்குவார்கள். காரணம் குடும்பத்தை முழுக்க முழுக்கப் பார்த்துக் கொள்வதே அவன்தான். அதுபோலக்குடும்பத்துக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்பவர்கள் இருந்தார்கள் அன்று.

    அப்பொழுது கூட்டுக்குடும்பம் ரொம்ப அழகாகத்தான் இருந்தது. அப்போது பெற்றோருக்குத் தனி மதிப்புமிருந்தது. என்னைப் பெற்றவள், வளர்த்தவள், ஆளாக்கியவள் என்பதற்காகப் பிரியமும் மரியாதையுமிருந்தது. பிரியம் மாத்திரமல்லாமல் மரியாதை. ‘வாருங்கள்' 'போங்கள்’ இப்படியெல்லாம் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்று யோசனை செய்து பார்த்தால், ஆங்கிலத்தில் நீங்கள் உங்கள் தந்தையைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாம். ஆனால் நமது பண்பாட்டில் அவ்வாறில்லை.

    ‘வாங்கோ போங்கோ’ இப்படித்தான் சொல்ல முடியும். இவை எல்லாவற்றிக்கும் அர்த்தம் ஒன்று இருக்கிறது, மரியாதை என்பது என்ன? என் மனைவியை வைத்துக்கொண்டே பேசுவோமே. என் அப்பாவின் பெயர் சப்தரிஷி. அம்மாவின் பெயர் ஸ்ரீமதி. இவர்களிருவரும் மாமாபிள்ளை. அத்தை மகள். கல்யாணத்துக்கு முன்பு வரை ‘சப்தரிஷி' என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஸ்ரீமதி. இருவரும் அடிக்கடி அடிதடி பண்ணிக்கொள்வார்களாம். அதாவது ஒரு ஒற்றுமையான ஜோடி அல்ல அவர்கள்.

    பெண்ணைப் பெற்ற பாட்டி சாதம் போடும் போது, அம்மா கையைப் பிடித்து என் தாத்தா கையிலே கொடுத்து, டேய் நீ சப்தரிஷிக்கு இவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும். நீ அப்படிப் பண்ணிக்கிறாயா இல்லையா என்பதை நான் தெய்வமாய் இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன் என்றாளாம். அவர்களுக்கு அப்படி ஒரு தீர்மானம். அதற்கு என் பாட்டி சொன்னாளாம், இதற்கெல்லாம் என்ன இப்ப அவசரம்? என்று. ஆனால் என் தாத்தா சொன்னாராம். ஸ்ரீமதி, நீ சொன்னபடியே கேட்கிறேன், இது பரதட்சணி குடும்பம் இங்கே வந்து நீ மாட்டிக்காதே! என்று. ஆனால் என் அம்மா சொல்லி விட்டாள். ‘நான் உன்னைத்தான் பண்ணிப்பேன்' என்று. என் அம்மா பார்ப்பதற்கு நன்றாக அழகாக இருப்பாள். பெண் பார்ப்பதற்கு இரண்டு பணக்காரர்களே வந்தார்களாம். ஆனால் என் அம்மா சொல்லிவிட்டாள் நான் உன்னைத்தான் பண்ணிப்பேன் என. அவ்வளவு தீர்மானமா, பிடிவாதமா இருந்ததால் தான் எனக்கு இந்த ஜன்மமே ஏற்பட்டது!

    நான் சொல்ல வருவது என்னவென்றால், பெரியவர் சிறியவர் மரியாதை ரொம்பவே இருந்தது. கூட்டுக் குடும்பம் என்பதற்கும் அர்த்தமிருந்தது.

    அந்த நாளில் வேறே பொருளாதாரக் கஷ்டமும் கிடையாது. எதிர்வீட்டில் கல்யாணம் நடக்கிறது என்றால்.... அந்த நாளில் உறவுக்குள் உறவு கல்யாணமாகும். அதுவெல்லாம் நல்லதல்ல என்று புதிதாக இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுவெல்லாம் வேறு கதை.

    ஆனால் அந்த நாளில் ஒரு வீட்டில் திருமணம் நடந்ததென்றால் பக்கத்து வீட்டில் அடுப்பு புகையக் கூடாது என்று உத்தரவே போடுவார்களாம். இதெல்லாம் கூடக் கூட்டுக் குடும்பத்தின் ஒரு சாயைதான். சமுதாய ஒற்றுமையைப் பேணி வளர்ப்பதே இந்தக் கூட்டுக் குடும்ப முறைதான். பெரியவர் சொல்கிறார் அதை நாம் கேட்டு நடக்க வேண்டும் என்ற ஒருவிதமான பக்தி மனிதரிடமிருந்தது. மரியாதை என்பது என்ன தெரியுமா? அளவு கடந்த ஒரு பிரியம் இருந்தால் தான் மரியாதை என்பதே வரும். மரியாதை என்பது, உங்களிடமுள்ள குற்றம் குறைகளோடு நான் உங்களை ஏற்றுக் கொள்வதுதான். இந்த மரியாதை என்பதே பரஸ்பரம். 'நீயும் நானும்' தான். அதற்குள் அடங்கியதுதான். எந்த உறவுமே. அந்த சமயத்துக்கானாலும் சரி வேறு எப்பொழுதைக்கானாலும் சரி, அதற்கு ஆண்பெண் என்ற பால் பேதமே கிடையாது. நீயும் நானும் என்ற உறவில் உன்னை நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். ஆனாலும் நீ எனக்கு வேண்டும் என்ற சமுதாய ஒழுங்குதான் (Social logical Discipline) மரியாதை. சட்டம் திட்டம் எல்லாமே இதனுடைய விரிவுதான். சீனாவிலெல்லாம் பெரியோர்களுக்கு கொடுக்கும் மரியாதை இன்னும் அப்படியே தானிருக்கிறதாம். Old is Gold என்பதை அவர்கள்தான் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.

    இப்பொழுதுள்ள நிலையில் ஆண்பெண் இருவருமே வேலைக்குப் போய்விடுகிறார்கள். மாமனாரும் மாமியாரும், வீட்டையும், வீட்டிலே குழந்தையைப் பார்த்துக் கொள்ளவும், கவனித்துக் கொள்ளவும். அவசர அவசரமாகச் சமைத்துப் போடவும், துணிகளைத் துவைத்துப் போடவும், பள்ளிக்குக் குழந்தைகளைக் கூட்டிச் செல்லவும் இவை போன்ற எவ்வளவோ காரியங்களுக்காகத்தான் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்கள் வயது ஏறிக்கொண்டே போகிறதே அவர்களுக்கு எப்பொழுது ஓய்வு? ஒழிவே இல்லாமல் போய் விடுகிறது. இன்னும் என் வீட்டுக்காரிக்கு நாட்டுப் பெண் வந்து சமைத்தாள் என்றில்லை. சாகிறவரைக்கும் இப்படித்தான் போகப்போகிறாள் அவள்.... ஏன் செத்துப்போகிற அன்றைக்கும், அன்றைய பொழுதுக்குச் சமைத்து வைத்து விட்டுத்தான் போக வேண்டும் அவள்!

    எனது தாயார் மாமியாராக இருந்து வாழ்ந்தார். அவருக்கு 45 வயதுக்கு மேல் அடுப்பங்கரை வேலையே நின்றுவிட்டது. ஓர்ப்படிகளே சின்ன வயது. அவர்களே அவரை மாமியாராக நினைக்கும் வயதுக்கும் ஸ்தானத்துக்கும் வந்துவிட்டார் அவர். போதாததற்குக் கைம்பெண்ணாக வேறு ஒரு பெண் வீட்டுக்கே வந்து விட்டாள். தம்பியின் மனைவி வந்தாள். என் மனைவி பிறகு வந்தாள். கூட்டுக்குடும்பமாயிற்றே! ஒரு நாளைக்கு ஒரு வேளைக்குக் குறைந்தது பதினைந்து இலைகளாவது விழும். இரவிலும் சமையல் உண்டு. எதை வாங்கினாலும் டின் டின்னாகத்தான் வாங்குவார்கள். தீபாவளி பட்சணங்களென்றால் டின் டின்னாகச் செய்வார்கள். டின்டின்னாகக் கொடுப்பார்கள். அது மாதிரியான ஏற்பாடுகள் இப்போது கிடையாது.

    பொருளாதாரக் கஷ்டம் என்பது எப்பொழுதும் தான் இருந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது பொருள் நிறைய இருந்தது. வாங்குவதற்குக் காசில்லை. இப்பொழுது பொருளில்லை, காசு இருக்கிறது. இப்பொழுது கணவன் - மனைவி இருவரும் சம்பாதித்தும் சாப்பிடுவதற்கு இவர்களுக்குப் போதவில்லை. என் தம்பி மாப்பிள்ளை அமெரிக்காவில் இருக்கிறான். பெண் அமெரிக்காவில் இருக்கிறாள். குழந்தையைப் பார்த்துக்கொள்ள கணவனின் தாயாரைக் கூட்டிக் கொண்டு போகிறான்.

    அமெரிக்காவுக்குக் கூட்டிக் கொண்டு போவது அவரை உபயோகப்படுத்திக் கொள்ளத்தான். நிலைமை இன்று இப்படி ஆகிவிட்டது.

    ஆகவே இந்த நிலையில் நாம் கூட்டுக்குடும்பத்தைப் பற்றிப் பேசிப் பயனில்லை. அந்த ஒரு காலத்தில் அப்படி இருந்தது என்று சொல்லத்தான் முடியும். நான் வாழ்ந்த, நான் பார்த்த அந்தக் காலம் இனித் திரும்பி வரப் போவதில்லை.

    இதே போலத்தான் எல்லாவுமே. கதைகள், சினிமா, சங்கீதம் எதுவாகட்டும் யாவும் வெகு க்ஷணமடைந்து போய்விட்டன. அந்த நாட்களில் கேட்ட சங்கீதம் இப்பொழுது நாம் கேட்க முடியாது. அதே மாதிரிதான் எனக்கு முந்திய தலை முறையிலிருந்தவர்கள், சங்கீத ஞானமுள்ளவர்கள் சொல்வார்கள் மகா வைத்யநாத அய்யர் பாடினது, அதை அவர்கள் கேட்டது. ஒரே ராகத்தைத் கனராகமாக எடுத்து ஏழு நாட்கள் ஆலாபனை செய்ததாகக் கூறுவார்கள்.

    இப்பொழுதோ சங்கீதக் கச்சேரி என்பதே ஐந்து மணிக்குத் தொடங்கி எட்டு மணிக்கு முடிந்து விடுகிறது. அடுத்த கச்சேரி என முதலில் பாடியவர் எழுந்து விடுகிறார்.

    தரமும் அதற்கேற்பத்தான்!

    நான் கூற வருவது என்னவென்றால் இப்பொழுது மனிதர்கள் உபயோகப்படுத்தப்படுகிறார்கள். அதாவது அந்தக் காலத்தில் உபயோகப்படுத்தப்படுவது என்பது இப்படியல்ல. இப்போது போல அல்ல.

    கூட்டுக்குடும்பத்துடைய Advantage இப்போது போய்விட்டது. எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிட்டால் பொருளாதாரத்தில் காசு சேர்த்துக் கொள்ள முடியும். எதையும் செய்ய முடியும்.

    தனித் தனியாகச் சேர்ப்பதெல்லாம் அந்த நாளில் கிடையாது. எல்லோரும் கொண்டுவந்து கொடுப்பார்கள். நாங்களே அப்படித்தான் இருந்தோம். நான், எனது தம்பி, கடைசிப் பையன் மூன்று பேர் சம்பாதித்ததும் அம்மாவிடம் கொண்டு போய்க் கொடுத்து விடுவோம். அவள் எங்களுக்கு வேண்டியதைக் கொடுப்பாள். நன்றாகத்தான் நடந்தது குடும்பம்.

    இப்பொழுது அப்படி முடியவில்லையே!

    உதாரணத்துக்கு எனது ஒரு மகன் சிங்கப்பூரில். இதோ கண்ணன் ஹொசூரில். கடைசியில் இவர்கள் அவரவர் காரியத்தைத்தான் பார்த்துக் கொள்வார்கள். கடைசியில் பார்க்கப் போனால் அப்படித்தான் வந்து முடிகிறது.

    அப்படியும் அவர்களுக்குப் போதவில்லை.

    இப்பொழுது ஏற்பாடுகள் எல்லாம் வேறு மாதிரி ஆகிவிட்டன. எல்லாரும் கடனில்தான் வாழ்கிறார்கள். கடன் என்பதே ஒரு வாழ்க்கை முறை ஆகிவிட்டது!

    ஆக, இன்றைய நிலையில் கூட்டுக்குடும்பம் என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றுதான்!

    அதையும் தாண்டி - கூட்டுக்குடும்பத்தை மதித்து கூட்டுக் தடும்பத்தில் இன்னும் வாழ்பவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பாக்யவான்கள்! பாக்யவான்களுக்கு வந்தனங்கள்.

    2. அப்பாவின் ரசிகன்

    நான் லா.ச.ரா.வின் வாசகனாவதற்கு முன்பிருந்தே அவருடைய ரசிகன். அப்பாவின் ரசிகன். என் சின்னஞ்சிறு வயதிலிருந்தே என்னை அடிக்காமல், கோபிக்காமல், எதையும் நயமாக என் மனதுக்கு அவர் சொல்லியதே அடிப்படைக் காரணம் என்று நினைக்கிறேன்.

    என் ஐந்து வயதில் அப்பா சொன்னது இது: நாய்க்குப் பயப்படலாம். அது கடிக்கும். பேய்க்குப் பயப்படலாம். அது இருக்கா இல்லையான்னு குழப்பம். திருடனுக்குப் பயப்படலாம். திருட உன்னிடம் ஏதுமில்லை என்றாலும். பொணத்துக்குப் போய் பயப்படுறியே. அதுவே தன்னைத் தூக்கிண்டு போக நாலு பேரை நம்பிண்டு இருக்கறது. உன்னை அது என்ன பண்ணும்?

    என் பத்து வயதில் அப்பா சொன்னது இது: படி. நிறையப் படி. எது வேணா படி. ஆனால் படிச்சிண்டே இரு. தன்னாலேயே தேவையில்லாததெல்லாம் உதிர்ந்து போய் என்ன வேணுமோ அதை மட்டும் படிப்பாய்

    என் பதினைந்து வயதில் அப்பா சொன்னது: சுருட்டு புடிக்கறதானால் புடிச்சு முதல் புகையை என் மூஞ்சில விட்டுடு. ஊருக்கெல்லாம் தெரிஞ்சு கடைசியா தெரிஞ்சுக்கறது என் அப்பன்னு என்னை ஆக்கிடாதே. அப்பாவுக்குப் பயந்து பிடிக்கலைன்னா அப்பா இல்லாத நேரம் புகைக்கத் தோணும். சுருட்டுக்குப் பயந்து பிடிக்காமலிரு. பிடிக்க மாட்டாய்"

    என் இருபது வயதில் அப்பா சொன்னது: வேலைக்குப் போகாத பிச்சைக்காரன் வாழலியான்னு நீ கேக்கறே. நீ சொல்றது வாஸ்தவம்தான். ஆனா, அவன் வாழறது பிச்சைக்கார வாழ்வு. நீ அப்படி வாழத் தயார்னா வேலைக்குப் போக வேணாம்.

    என் முப்பது வயதில் அப்பா சொன்னது: ரேடியோலயும், பத்திரிகைலயும் என்னென்னவோ வர்றது. நீ இன்னும் வீடு வந்து சேரலையேன்னு கவலையோட வாசல்ல வந்து உக்காந்தா, எனக்கு ஒண்ணும் ஆகாதுப்பா. அப்படி ஆச்சுன்னா சேதி வரும்'னு விதண்டா வாதம் பேசறே. ப்ரதர்... சேதி வர்றதுக்கா வாசல்ல உக்காந்திருக்கேன். நீ வர்றதுக்குத்தாண்டா உக்கார்ந்திருக்கேன்

    இப்படி ஒரு அப்பா - அவர் லா.ச.ரா.வாக இல்லாமலேயே - அவருக்கு யாரும் ரசிகனாக இருக்கலாம். நானும் அப்படித்தான் இருந்தேன்.

    நான் பெரியவனான பின் அவருடைய ஒவ்வொரு செய்கையும் அவரை ரசிப்பதற்காகவே அவரைக் கவனமாக கவனிக்க ஆரம்பித்ததில் ஒன்று புரிந்தது. அவரது எல்லா சொல்லிலும், செய்கையிலும், அசைவிலும், ஏதோ ஒரு செய்தி இருந்தது. அதைக் கண்டு கொண்டவர்கள் பாக்கியவான்கள். நான் பாக்கியவான்.

    அவருக்கும் எனக்குமான சம்பாஷணைகள் ஒவ்வொன்றையுமே இன்றைக்கு பொக்கிஷமாகப் பார்க்கிறேன்.

    அவரால் காலையில் தி ஹிண்டு படிக்காமல் இருக்க முடியாது. அன்று அவருக்கு ஏதோ ஃபுட் பாய்சன் ஆகி, கிட்டத்தட்ட பதினான்கு தடவைக்கு மேல் வயிற்றுப்போக்கு கண்டு, தண்ணீரில் நனைத்த பாண்டேஜ் துணி

    Enjoying the preview?
    Page 1 of 1