Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalin Deepam Ondru...
Kaadhalin Deepam Ondru...
Kaadhalin Deepam Ondru...
Ebook220 pages1 hour

Kaadhalin Deepam Ondru...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் உன்னிப்பாக என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் கவனித்து, அந்நிகழ்ச்சிகள் சிறுகதைகளாக மலரும்பொழுது மனதில் உள்ள பாரம் குறைகின்றது. 26 சிறுகதைகளிலும் வெவ்வேறு விதமான, நம் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை தொகுத்து அதை சிறுகதைகளாக சித்தரித்து அதில் ஹாஸ்யம், கோபம், தாபம், சென்டிமெண்ட்ஸ், நாட்டுப்பற்று, சமுதாயச் சிந்தனை போன்றவைகளை புகுத்தி படிக்க படிக்க திகட்டாத புத்தகமாகவும், அது வருங்கால சந்ததியினருக்கும் உபயோகப்படும் வகையில் ஒரு பொக்கிஷமாகவும் நமக்கு தந்திருக்கிறார்.

வாழ்நாள் முழுவதும் நாம் பாடங்கள் கற்றுக்கொள்வது நம்மை மீண்டும், மீண்டும் புதுப்பிக்கின்றன. அந்த வகையில் இச்சிறுகதை தொகுப்பு உங்களை யோசிக்க வைக்கலாம்.

Languageதமிழ்
Release dateFeb 25, 2023
ISBN6580125909547
Kaadhalin Deepam Ondru...

Read more from Kanthalakshmi Chandramouli

Related to Kaadhalin Deepam Ondru...

Related ebooks

Reviews for Kaadhalin Deepam Ondru...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalin Deepam Ondru... - Kanthalakshmi Chandramouli

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    காதலின் தீபம் ஒன்று...

    சிறுகதைகள்

    Kaadhalin Deepam Ondru...

    Sirukadhaigal

    Author :

    காந்தலக்ஷ்மி சந்திரமெளலி

    Kanthalakshmi Chandramouli

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை

    1. அம்மாவுக்கென்று ஓர் இடம்

    2. புரிந்துக் கொண்டீர்களா?

    3. கல்யாணப் பாட்டி

    4. தீபாவளி மலர்

    5. சொல்பேச்சு கேட்காதே

    6. ஒரு நாள் பதவி

    7. அவர் ரொம்ப நல்லவர்

    8. சுதந்திர தினம்

    9. அதோடு அப்பாவி நான்

    10. மாற்றம்

    11. அழகிய ராட்சசி

    12. சுதந்திரம்

    13. ஸ்ரீராமர் பாதம்

    14. நண்பர்களாகப் பிரிவோம்

    15. மூன்றாவது கண்

    16. போதிமரம்

    17. தமிழ் சிரிப்பு

    18. வைதீகம் டாட் காம்

    19. காதலின் தீபம் ஒன்று...

    20. பாதுகா பட்டாபிஷேகம்

    21. குழலூதும் கண்ணன் வந்துவிட்டான்

    22. பெண்ணுக்கு மரியாதை

    23. அப்பா பேசினார்

    24. தனக்கென்று ஓர் இடம்

    25. வலைப் பின்னலில் சிக்கிய உறவுகள்

    26. என் அருமை மகனே...

    முன்னுரை

    எல்லோருக்கும் வணக்கம்,

    திருமதி. காந்தலக்ஷ்மி சந்திரமௌலி (எனது அண்ணியார்) அவர்கள், தன்னுடைய காதலின் தீபம் ஒன்று... எனும் 26 சிறுகதைகள் தொகுப்பு அடங்கிய புத்தகத்திற்கு முன்னுரை வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இது, என் வாசிப்பின் மீதும், விமர்சனத்தின் மீதும் அவர்களுக்கு இருக்கும் அபார நம்பிக்கை என்று நான் நினைக்கிறேன்.

    காதலின் தீபம் ஒன்று... கதையில் ஹரி தன் காதலியான அபியின் தந்தைக்கு பண நெருக்கடி ஏற்பட, அவருக்கு பண உதவி செய்தால் தன்மீது மரியாதை ஏற்பட்டு தன் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவார் என்று தவறாக நினைத்து அவரை கந்துவட்டிகாரர்களிடம் சிக்க வைக்கிறான். அவர்களின் தொல்லை தாங்காமல் அபியின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார். தன் தந்தையின் மரணத்திற்கு காதலன் ஹரிதான் காரணம் என்று அறிந்து அவனைவிட்டுப் பிரிகிறாள். தன் தந்தை பட்ட கடனை அடைப்பதற்கு ராஜா எனும் ஊனமுற்ற பணக்காரனை மணக்கிறாள். தன் காதலியின் பிரிவிற்கு காரணம் தான் செய்த தவறு என்பதை உணர்ந்த ஹரி, அவள் தன் மனதில் ஏற்றி வைத்த ‘காதல் தீபம்’ என்றும் சுடர்விட்டு கொண்டுதான் இருக்கும், அவள் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும் என்று தன் தவறுக்கு பிராயச்சித்தம் தேடுகிறான்.

    அழகிய ராட்சசி கதையில் அலுவகத்தில் பணிபுரியும் கவிதா எனும் அழகிய பெண்ணின் கற்பை சூறையாடியவனை எப்படி தன் புத்தி சாதுரியத்தால் அவன் கதையை முடிக்கிறாள் என்பதுதான் கதை. விறுவிறுப்பான சிறுகதை.

    வைதீகம் டாட் காம் கதையில் ‘வைதீகம்’ கேவலமான தொழில் அல்ல. அதன் மகத்துவத்தை எடுத்துச் சொல்லி சரியாகப் புரிய வைக்கும் இளைஞன் சாகேத ராமனின் கதாபாத்திரம் அற்புதம். எந்த தொழிலையும் நாம் தரக்குறைவாக எடைபோடக் கூடாது எனும் கருத்தை நமக்கு உணர்த்துகிறது.

    குழலூதும் கண்ணன் வந்துவிட்டான் கதையில், ‘கொரோனா’ காலகட்டத்தில் வீட்டை விட்டு எங்கும் செல்ல முடியாமல், அடைந்துகிடக்கும் தாத்தா பாட்டி இருவரும், அவர்கள் தங்கள் தாய், தந்தை மீது கொண்டுள்ள வெறுப்பு தவறானது என்று சிறு பிள்ளைகளான பேரன், பேத்தி இருவரும் அவர்களுக்கு புரிய வைத்து தெளிய வைக்கும் அருமையான கதை. அறிவிற்கு வயதில்லை.

    அப்பா பேசினார் கதையில் ‘டிமென்ஷியா’ என்றால் என்ன என்பதை தெளிவாக விளக்கும் கதை.

    வலைப் பின்னலில் சிக்கிய உறவுகள் கதையில் ‘முகநூல்’, ‘வாட்ஸ்-அப்’ மூலம் உண்டாகும் நட்புகள் உண்மையானதல்ல, வெறும் ‘கானல் நீர்’ என்று தெளிய வைக்கிறார்.

    இதுபோல், 26 சிறுகதைகளிலும் வெவ்வேறு விதமான, நம் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை தொகுத்து அதை சிறுகதைகளாக சித்தரித்து அதில் ஹாஸ்யம், கோபம், தாபம், சென்டிமெண்ட்ஸ், நாட்டுப்பற்று, சமுதாயச் சிந்தனை போன்றவைகளை புகுத்தி படிக்க படிக்க திகட்டாத புத்தகமாகவும், அது வருங்கால சந்ததியினருக்கும் உபயோகப்படும் வகையில் ஒரு பொக்கிஷமாகவும் நமக்கு தந்திருக்கிறார்.

    இந்த புத்தகத்திற்கு முன்னுரை வழங்கும் வாய்ப்பை எனக்கு அளித்த திருமதி. காந்தலக்ஷ்மி சந்திரமௌலி அவர்களுக்கும், ‘pusthaka.com’ நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    திருமதி. காந்தலக்ஷ்மி சந்திரமௌலி அவர்கள் தன் எழுத்துலகப் பணியைத் தொடர்ந்து ஆற்ற எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும் அருள வேண்டும் என்று மனமாரப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றி.

    ஜி. ராமகிருஷ்ணன் (எ) ராம்கி

    ஜோதிடர் மற்றும் மெல்லிசைப் பாடகர்

    சென்னை.

    என்னுரை

    திரு. ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள்தான் என் கதைகளை முதலில் படித்து விமர்சனம் செய்பவர். இப்புத்தகத்திற்கு அவர்தான் முன்னுரை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். உடனே ஒப்புக்கொண்டார்.

    நான் உன்னிப்பாக என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் கவனித்து, அந்நிகழ்ச்சிகள் சிறுகதைகளாக மலரும்பொழுது என் மனதில் உள்ள பாரம் குறைகின்றது. அக்கதைகள் எனக்கும், வாசகர்களுக்கும் பாடங்களை கற்றுக் கொடுக்கின்றன.

    வாழ்நாள் முழுவதும் நாம் பாடங்கள் கற்றுக்கொள்வது நம்மை மீண்டும், மீண்டும் புதுப்பிக்கின்றன என்பதை நான் தீர்மானமாக நம்புகிறேன். அந்த வகையில் இச்சிறுகதை தொகுப்பு உங்களை யோசிக்க வைக்கலாம்.

    ‘pustaka.com’-ற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    காந்தலக்ஷ்மி சந்திரமௌலி

    1. அம்மாவுக்கென்று ஓர் இடம்

    என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை, இன்னும் என்ன சோதனையோ முருகா... முருகா...

    பிரபல பாடகி அருணா சாய்ராமின் குரல் ‘சி.டி.’யில் ஒலித்துக் கொண்டிருந்தது.

    அம்மாவின் குரல் கூடவே ஒலிப்பதுபோல் ஒரு பிரமை சாந்தாவிற்கு ஏற்பட்டது.

    அம்மாவுக்கு தமிழ்ப் பாடல்கள் மீது மிகுந்த விருப்பம். சென்றமாதம் தொலைபேசியில் பேசுகையில், இங்கே ‘க்ளீவ்லேண்ட்’ தியாகராஜ ஆராதனைக்கு சுந்தரம், நளினா இரண்டுபேரும் என்னை அழைச்சிண்டு போனா. அருணா சாய்ராம்கிட்டே பேசினேன். என் பெண்ணும் மயிலாப்பூரில் இருக்கான்னு சொன்னேன்.

    இ-மெயிலில், அம்மா, உன் வருகைக்காக காத்திருக்கிறாள் சீக்கிரம் வந்துவிடு என்று சுந்தரம் அனுப்பியிருந்தான்.

    நீங்க தினமும் ஒரு நாளைக்கு பத்துதரம் மாடிக்கு போய் அம்மாவைப் பார்க்கமுடியுது. நான் அம்மாவைப் பார்த்து கிட்டத்தட்ட 10 வருடமாகிறது.

    அதுசரி, உன் மாமியாருக்கு நாங்க இரண்டு பிள்ளைகளும் உள்ளூரில் பக்கத்திலேயே இருக்கிறோம். ஆனால் என் மாமியாருக்கு ஒரு பிள்ளை அமெரிக்காவில், ஒரு பிள்ளை லண்டனில், ஒரு பெண் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர் கொடுத்து வெச்ச பிறவி! ஜாலியாக அமெரிக்காவிற்கும், லண்டனுக்கும் பறக்கிறார்கள்.

    சாந்தா பதிலேதும் கூறவில்லை. இரவு படுக்கும்பொழுது தூக்கம் வரவில்லை. எல்லா அம்மாவையும்போல் என் அம்மா சாதாரணமான அம்மாவா?

    ‘அந்த காலத்திலேயே குடும்பத்தில் அஹிம்சா முறையில் போராடி காந்தியின் மீதும், நாட்டின் மீதும் கொண்ட அன்பினால் தன் 9 கஜப் புடவையோடு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தவளாயிற்றே!’ 10 வயதில் திருமணம் முடித்த அம்மா, 12 வயதில் மாமியார் வீட்டிற்கு குடிபுகுந்தாள். மாயவரத்திலிருந்து குண்டு முகமும், காதுகளில் தொங்கும் ஜிமிக்கியும், மிக நீளமான பாம்பாக வளையும் பின்னலும் கொண்டு சென்னை வந்த தையல் நாயகியை, சென்னை மிண்ட் பகுதியிலுள்ள மூன்று கட்டும், வீதியின் இந்த மூலையிலிருந்து அந்த மூலை வரை இருக்கும் வீடு தனக்குள் அவளை விழுங்கிக்கொண்டது.

    வீடு கொள்ளாச் சுற்றங்கள், சதா எரியும் கோட்டை அடுப்பு, வருவோரும் போவோருமாக திமிலோகப்படும் வீடு, திரும்பி பார்த்தால் வீட்டிற்குள் பயந்து ஒளிந்து நடக்கும் பால்ய விவாகங்கள், வளைகாப்புகள், பூணூல் கல்யாணங்கள், பிரசவங்கள் என்று மூச்சுமுட்ட முடித்து தையல் நாயகி நிமிர்ந்து பார்க்கையில், அவளைச்சுற்றி மூன்று குழந்தைகள். கணவர் ராமலிங்கம் ஒரு சரியான திண்ணைப் பஞ்சாயத்து பேர்வழி. அப்பா சேர்த்துவைத்த சொத்தில் மூன்றுவேளையும் வக்கணையாக உட்கார்ந்து சாப்பிடும் ரகம். ஒருமுறை, உங்களுக்கு தமிழ் நன்றாகத் தெரியும். அதனால் தமிழாசிரியராகப் போகக்கூடாதா? என்று கேட்ட தையல் நாயகி, கன்னத்தில் விழுந்த அறையால் வாயில் ரத்தம் கசிந்து எழமுடியாமல் ஒருவாரம் படுக்கையில் கிடந்தாள்.

    மீண்டும் தன்னைத் தேற்றிக்கொண்டு எழுந்த ‘தைலா’ ஒரு மாறுபட்ட தைலாவாக தோன்றத் தொடங்கினாள். வெளியுலகத்தை காணாத, நான்கு சுவர்களுக்குள் அடங்கிகிடக்கும் ஒரு பெண்ணாக இருந்த தைலா, தன்னுடைய 17வது வயதிலிருந்து கைக்குழந்தை விவேகானந்தனை தோளில் சாய்த்தபடி ‘வந்தே மாதரம் கோஷம் போடப் போகிறேன்’ என்று கூறி கிளம்பியபொழுது குடும்பமே அதிர்ந்தது. ‘எங்கிருந்து வந்தது இந்த தைரியம்? யார் சொல்லிக் கொடுத்தது?’ என்று ஆளாளுக்கு கேள்விகள் கேட்க, யதேச்சையாக சுபாஷ் சந்திரபோஸின் உணர்ச்சிமிக்க வீர உரையைக் கேட்டு தன் எண்ணங்கள் மாறியதைக் கூறினாள் தையல் நாயகி.

    வீட்டு வேலைகளை முடித்துவிட்டால் அக்கம்பக்கம் பெண்களோடு கூட்டுச்சேர்ந்து ராட்டைச் சுற்றி நூல் நூற்பது, குடிசையோ சேரியோ யார் உதவிக்கு கூப்பிட்டாலும் ஓடிச்சென்று பிரசவம் பார்ப்பது என்று வீட்டு வேலைகளை முடித்து கிடைக்கும் நேரத்தில் ஓய்வில்லாமல் உழைத்தாள். அப்படி சேரிப்பக்கம் போய் வந்தவளை கிணற்றடியில் உட்கார வைத்து வாளி வாளியாகத் தண்ணீர் ஊற்றி, ‘தீட்டு’ கழித்தபடியே திட்டும் மாமியாரைப் பார்த்தபடியே ராம நாமம் ஜபிப்பாள் தைலா.

    ஒரு சுதந்திர வீராங்கனை என்று நாட்டுப்பற்று கொண்டவர்களால் மதிப்பு பெற ஆரம்பித்தாலும், பொதுவாக அந்த ஏரியாவில் ‘வீட்டிற்கு அடங்காதவள், என்னவோ நாட்டிற்கு சேவை செய்யறாளாம், வீட்டைவிட்டு வெளியில் சென்று என்ன சேவை இவளுக்கு வேண்டிகிடக்கு?’ என்று சுற்றத்தாராலும், மற்றவர்களாலும் ஏசப்பட்டாள். யார் எதைக் கூறினாலும் காதில் போட்டுக்கொள்ளாமல், யாரிடமும் அதிகம் பேசாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று தன் வாழ்க்கையை ஒரு ‘கர்மயோகி’ போல ஓட்டிக் கொண்டிருந்தாள் தைலா.

    ஒருநாள், உப்பு சத்தியாக்கிரகம் நடக்கப்போறது, வேதாரண்யம் போக வேண்டும் என்று கூறிய தைலாவை அடித்து நொறுக்கினார் கணவர் ராமலிங்கம். தத்தம் பங்கிற்கு நெருப்பாக வார்த்தைகளை வீசியது அந்த கூட்டுக்குடும்பம். அழுதழுது கண்கள் வீங்கி, உடலில் பலம் இழந்தாலும், தைலாவிற்கு மனதில் வீம்பு மட்டும் வேகமாக வளர்ந்தது. நான் என்ன தப்பாக கேட்டுவிட்டேன்? நாட்டிற்காக இதைச் செய்ய உரிமை தரலைன்னா எப்படி? நீங்களும் வாங்கோ? சேர்ந்து போகலாம் என்று கணவனை அழைத்தாள்.

    அதைக்கேட்ட மாமியார், உரிமையாடி கேக்கறே? மூன்று குழந்தைகளைப் பெத்துட்டு வீட்டுல அடங்கி கிடக்க வக்கில்லாம, எவனெவனோடயோ வேதாரண்யம் போகணுங்கற, உனக்கு வெக்கமாயில்லே? உனக்கு என் பிள்ளை ஒருத்தன் போறாதா? வெளியில இன்னும் எத்தனை ஆம்பிளைகளை வளைச்சிப் பிடிக்கணும்? வீட்டை விட்டு வெளியில் எங்களால தலையைக் காட்டமுடியலை, மானம் போறது என்று கண்ணீர் வடித்தாள்.

    அந்த கண்ணீரைக் கண்டு வெகுண்டெழுந்த ராமலிங்கம், இந்த வீட்டைவிட்டு ஒரு அடி எடுத்து வெளியில வெச்சேன்னா, அப்படியே போயிடு, திரும்பி இனி வராத. எம்மூஞ்சியில முழிக்காத. நாடுதான் பெரிசு, காந்திதான் கடவுள் அப்படீன்னு நினைச்சா இப்பவே போயிடு என்றான். தைலா பதிலேதும் கூறவில்லை. மறுநாள் தன் பிறந்தவீட்டில் போட்ட நகைகளுடன் வேதாரண்யம் கிளம்பிச் சென்றுவிட்டாள். அங்கிருந்து காந்தி மகானை சந்திக்கச் சென்ற கூட்டத்துடன் தன் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சபர்மதி ஆசிரமத்திற்குள் புகுந்தாள். இந்தி பாஷையைக் கற்று, தையலும், பூவேலையும், அப்பளம், சமையலுமாக உழைத்து, தன் குழந்தைகளைக் காப்பாற்றப் போராடிய தைலா, மீண்டும் நிமிர்ந்து நிற்கையில் குழந்தைகள் வளர்ந்து பெண் கல்யாணத்திற்கு நிற்பதைக் கண்டு திடுக்கிட்டாள்.

    அலராம் சிணுங்க, திடுக்கென்று கண் விழித்தாள் சாந்தா. எப்பொழுது தூங்கினோம்? தெரியவில்லை. கைபேசியில் ராம்நாத் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார். சாந்தா விழித்திருப்பதைக் கண்டு கைபேசி ஸ்பீக்கரை முடுக்கினார். நான் எத்தனையோ முறை ட்ரை பண்ணிட்டேன். ஆனால் அம்மா பேசமாட்டேங்கறா. இந்த பிடிவாதம்தான் எனக்கு ஒத்துவருவதில்லை விவேக் கூறினான். மேற்கொண்டு எதுவும் கேட்கப் பிடிக்காமல் வெளியில் சென்றுவிட்டாள் சாந்தா. தன்னந்தனிப் பெண்ணாக மூன்று குழந்தைகளுடன் நெருப்பாக வாழ்ந்து, மூவரையும் ஆளாக்கிய பிறகு, தன்னைத்தேடி நிராதரவாக வந்த

    Enjoying the preview?
    Page 1 of 1