Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suttum Vizhi Sudar
Suttum Vizhi Sudar
Suttum Vizhi Sudar
Ebook332 pages2 hours

Suttum Vizhi Sudar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புள்ளிகள் வைத்து அதை கோலமாக மாற்றும் கலை பெண்களுக்கே உரியது.
அப்படி ஒரு சிறிய கரு, கண்ணால் காண்பது, காதல் கேட்பது என்று தொடங்கி அது ஒரு சிறுகதையாக முடிகையில் மனம் நிறைந்து விடுகிறது.
எழுத்துக்களை ஒரு பூஜையாக, தவமாக கருதுகிறேன்.
சிறுகதைகள் மூலமாக வாழ்க்கையையும் மனிதர்களையும் கண்டு ரசிப்பது எனக்கு பிடித்த விஷயம்.
எழுதிய கதைகளை பல பத்திரிகைகள் ஊக்குவித்து வெளியிட எனது ஆர்வம் கூடியது. அப்பத்திரிகைகளுக்கு என் நன்றி.
சிறுகதைகள் தொகுப்பாக வெளிவந்தால்தான் அதன் அழகு கூடும் என்று எழுத்துலக பெரியோர்கள்கூற, அதற்கு ஆதரவளித்த அனைத்து பதிப்பத்தாருக்கும் என் நன்றி.
காந்தலக்ஷ்மி சந்திரமௌலி.
Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580125905203
Suttum Vizhi Sudar

Read more from Kanthalakshmi Chandramouli

Related to Suttum Vizhi Sudar

Related ebooks

Reviews for Suttum Vizhi Sudar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suttum Vizhi Sudar - Kanthalakshmi Chandramouli

    http://www.pustaka.co.in

    சுட்டும் விழிச்சுடர்

    சிறுகதைகள்

    Suttum Vizhi Sudar

    Sirukathaigal

    Author:

    காந்தலக்ஷ்மி சந்திரமெளலி

    Kanthalakshmi Chandramouli

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தீபாவளி மலர்

    2. சலுகை

    3. அவர் ரொம்ப நல்லவர்...

    4. பெயர்

    5. ஸ்ரீராமர் பாதம்

    6. வீடு

    7. சுட்டும் விழிச்சுடர்

    8. குதறப்படும் மொட்டுக்கள்!

    9. சுதந்திர தினம்

    10. சுதந்திரப் பறவை

    11. ஒரு நாள் பதவி

    12. கவலைப்படாத மனிதன்

    13. மாற்றம்

    14. தனி மூன்

    15. திருமண கலாட்டா

    16. பழுத்த இலை

    17. கருப்பு நிலா

    18. ஜானகி ஏன் அழுதாள்?

    19. அக்னிகுஞ்சு

    20. நண்பர்களாகப் பிரிவோம்!

    21. சொல்பேச்சு கேட்காதே!

    22. கடைசிப் பரிசு

    23. அழகிய ராட்சசி

    24. குங்குமவல்லியின் கதை

    25. சுதந்திரம்

    26. அக்கரையும் இக்கரையும்

    27. சிமெண்ட் மனிதர்கள்

    28. இந்த மாற்றம் எப்படி வந்தது?

    29. தனிக்குடித்தனம்

    30. ஆதாரம்

    31. என் பெண்சாதி அஞ்சலை!

    32. தட்டித்தட்டி வந்த முத்தல்லோ!

    33. ஆறாம் நம்பர் பெட்

    34. பேசாமல் பேசுவோம்!

    35. சந்நியாசம்

    36. என் மகள் சம்மதிப்பாள்

    37. இந்த மாற்றம் எப்படி வந்தது?

    38. துளசிவனம்

    39. சொல்லத்தான் நினைக்கிறேன்

    40. ரோசாக்குமாரி விஜயம்

    முன்னுரை

    புள்ளிகள் வைத்து அதை கோலமாக மாற்றும் கலை பெண்களுக்கே உரியது.

    அப்படி ஒரு சிறிய கரு, கண்ணால் காண்பது, காதல் கேட்பது என்று தொடங்கி அது ஒரு சிறுகதையாக முடிகையில் மனம் நிறைந்து விடுகிறது.

    எழுத்துக்களை ஒரு பூஜையாக, தவமாக கருதுகிறேன்.

    சிறுகதைகள் மூலமாக வாழ்க்கையையும் மனிதர்களையும் கண்டு ரசிப்பது எனக்கு பிடித்த விஷயம்.

    எழுதிய கதைகளை பல பத்திரிகைகள் ஊக்குவித்து வெளியிட எனது ஆர்வம் கூடியது. அப்பத்திரிகைகளுக்கு என் நன்றி.

    சிறுகதைகள் தொகுப்பாக வெளிவந்தால்தான் அதன் அழகு கூடும் என்று எழுத்துலக பெரியோர்கள்கூற, அதற்கு ஆதரவளித்த அனைத்து பதிப்பத்தாருக்கும் என் நன்றி.

    காந்தலக்ஷ்மி சந்திரமௌலி.

    1. தீபாவளி மலர்

    தீபாவளி ஆரம்பிக்கும் பொழுதே பலருக்கு தலைவலி ஆரம்பமாகிவிடும். தீபாவளி முடிந்து விட்டால் எல்லோருக்கும் நிம்மதியாக இருக்கும்.

    ஆனால் எனக்கோ 'தலைவலிபோய் திருகுவலி' அப்பொழுதுதான் ஆரம்பமாகும்.

    தீபாவளி ஒரு வாரத்தில் வருகிறது என்றால், என் அம்மாவிற்கு கேட்காமல் என் மனைவி மிரட்டுவாள். வாங்கிட்டேளா? எல்லாத்தையும் வாங்கிடுங்கோ

    வாங்கறேண்டி இன்னும் கடைக்கு எதுவும் வரலை என்று நான் பரிதாபமாகக் கூறுவதை அவள் நம்பமாட்டாள்.

    இதே சாக்குபோக்கு சொல்லாதீங்கோ. நான் போன் பண்ணி கேட்டாச்சு. அவா வந்தாச்சுங்கறா. நீங்க வாங்கிட்டு ஆபீஸ்ல படிச்சுட்டு இரண்டு நாள் கழிச்சு கொண்டு வரேளே. என் கதை வந்திருக்கான்னு பார்க்க எனக்கு ஆசையாக இருக்காதா?

    வரலியே ஒரு மலர் விடாம பார்த்துட்டேன். ஒரு மலர்லேயும் உன் பெயரைக் காணோம். இந்த தீபாவளிலேயும் உன் கதையைப் போடலை

    வரலை அப்படீங்கறதோட நிறுத்திக்கோங்கோ. இந்த 'தீபாவளிலேயும்' அப்படீன்னு நக்கலா சொல்லா தீங்கோ!

    சே, சே! அப்படி சொல்வேனா? உனக்கு பெயர் கிடைச்சா எனக்கு பெருமைதானே எப்படியும் என் மனைவி பங்கஜத்தின் கதை வராது எனும் தைரியத்தில் லேசாக நமட்டு சிரிப்பு சிரித்தேன்.

    இதற்கெல்லாம் மனம் தளர்ந்து போகிறவளா என்ன? அப்படி இருந்தால் கடந்த 30 ஆண்டுகளாக 'ஆரம்ப எழுத்தாளர்' நிலையைத் தாண்டாமல் இருக்கும் ஒரே எழுத்தாளினி இவள்தானே! அந்த பட்டத்தை வைத்துக் கொண்டே. அனைத்து தீபாவளி மலர்களுக்கும் எழுத அசாத்திய தைரியம் வேண்டும்.

    இதோ பாருங்கோ, ஆரம்ப எழுத்தாளர்களை யெல்லாம் ஊக்குவிப்பது எந்த பத்திரிகைன்னு ஒரு 'சர்வே' எடுங்கோ. நம்ப சிவசங்கரி. இந்துமதி, சுஜாதா, பாலகுமாரன் எல்லாம் ஆரம்ப எழுத்தாளர்கள்தானே!

    என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்கோ. என் எழுத்தை குறை சொல்லாதீங்கோ. அப்புறம் நா மனுஷியாக இருக்க மாட்டேன் என்று புத்தகத்திற்குத் தயாரான பங்கஜம் பேச்சுவார்த்தைக்குத் தயாரானாள்.

    ஒருவேளை இந்த வருஷம் புன்னகைதான் பெண்களுக்கு நகை'ங்கற பத்திரிக்கையில் என் கதை வந்திருக்குமே! இப்பவே 'புக்' பண்ணிடுங்கோ... அப்புறம் கிடைக்காது.

    எப்பவோ பண்ணிட்டேனே என்றேன் பெருமை பொங்க.

    நீங்களா 'புக்' பண்ணீங்க. நம்பவே முடியலையே? கஞ்சப் பிரபு ஆன நீங்களா என் திறமையை இப்படி ஊக்கம் கொடுத்து வளர்க்குறீங்க! என் மனைவியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

    யார் வீட்டுக்கு வந்தாலும் சரி, யார் வீட்டுக்கு நாங்கள் போனாலும் சரி... முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு முறைக்கும் அம்மாகூட சிறிதளவு புன்னகையோடு தீபாவளி மலர்களுக்காக காத்திருந்தாள்.

    வந்தாச்சா? வந்தாச்சா? தினம் விசாரிப்புகள்.

    ஒரு நாள் வந்தே விட்டது.

    என் கையிலிருந்து பத்திரிகையை பிடுங்கி, பக்கம் பக்கமாக புரட்டி, ம்ஹும்... வரலை எனும் ஏக்கப் பெருமூச்சு!

    உன் பெயரைக் காணவில்லை.நான் அப்பவே பார்த்துட்டேன். எழுதியிருக்காடா, எவ்வளவு நன்னா யிருக்கு. தமிழ்நாட்ல எழுத்தாளர்களுக்கா பஞ்சம்.ஒவ்வொருத்தரும் எவ்வளவு நல்லா எழுதறா என்றாள்.

    தான் தீபாவளிக்காக செய்த 'உருளைக்கிழங்கு, பெங்களூர் கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய்' ஹல்வாவை தானே சாப்பிட்டுவிட்ட மாதிரி, என் மனைவியின் முகம் அஷ்ட கோணலாக மாறியது.

    என் கதை வரலைன்னு தவிக்கிறேன். இரண்டு பேருக்கும் அக்கறையில்லை. உங்களையெல்லாம் நான் ஃபேமஸ் ஆனபிறகு பார்த்துக் கொள்கிறேன் என்றாள் பங்கஜம்.

    அடுப்புல பால் வெச்சிருக்கேன். கொஞ்சம் பார்த்து கேஸ் அடுப்பை அணைச்சிடுங்கோ.

    அப்படீன்னா நேக்கு கண்ணே தெரியறதுல்லே. நீயே அணைச்சிடு என்று கூறும் அம்மா தீபாவளி மலரை ஒரு பக்கம் விடாமல் படித்தாள் என்றால், ஒரு சராசரி மருமகளுக்கு வயிறெரியாதா?

    அப்ப, தீபாவளி மலர் அது இதுன்னு 'டோன்ட் வேஸ்ட்' யுவர் மணி அண்ட் டைம். ஒரு 'செட் பாக்ஸ்' டி.வி.யில் 'செட் பண்ணிடுங்கோ என்றாள் என் மகள் சரண்யா.

    கமான் சரண்! படிக்கறதுக்கு அறிவு வேணும். இன்ஃபாக்ட் நான் இனிமே தமிழ்க் கவிதைகளை எழுத ஆரம்பிக்கப் போறேன் என்றாள்.

    ஐய்யோ! என் ரத்தம், என் பிள்ளை! இன்னும் 10 வருஷத்திலே நீதாண்டா 'தமிழ் பத்திரிக்கையில் தலைசிறந்த எழுத்தாளன்' என் மனைவிக்கு பெருமை பிடிபடவில்லை. நான் எத்தனை கவிதைகள் எழுதியிருக்கேன் தெரியுமா? என்றாள் கர்வமாக.

    'சுட்டுவிடும் சட்டி

    விட்டு விடும் கை

    கெட்டு விடும் புத்தி

    தொட்டு விடும் நெஞ்சம்'

    இது உங்கம்மா கண்ணதாசன் வழியில் எழுதிய கவிதை.

    'மழை பொழிகிறது அந்தியில்

    தெரிகிறது உன் முகம். அதில்

    இந்தரி நீ ஒரு முந்திரி

    மன்மத நாட்டுக்கு நான் ஒரு மந்திரி'

    இது வைரமுத்துவின் வழியில் உங்கம்மா எழுதிய கவிதை.

    'வாழ்வு ஒரு போர்க்களம்

    இதை ஒவ்வொரு பூவும் கூறும்,

    விடியல் தினமும் வரும்.

    இரவு வந்தால் பகல் கூடவே வரும்

    அது உனக்கு கூறும்'

    இது பா.விஜய் 'ஸ்டைலில்' எழுதியுள்ள கவிதை. இப்படி என் மருமகள் கவிதை நயத்தில் என்ன எதுகை மோனை. என்ன அறிவுத்திறன். பாவம் பத்திரிக்கைக் காராளுக்குதான் ஒண்ணுமே புரியலை என்றாள் அம்மா.

    'நக்கல் நாயகி' பட்டம் இவளுக்கு தாராளமாகத் தரலாம்.

    யார் என்னை எப்படி சித்ரவதை செய்தாலும் சரி, எனக்கு கவலையில்லை. எனக்கு எழுதத் தெரியாதுன்னு நினைக்காதீங்கோ. பேனா நான் சரியாக எடுக்கலை. எடுத்தேன்னா எங்கேயோ போயிடுவேன் என் மனைவி சூளுரைத்துவிட்டு, அழ ஆரம்பித்தாள்.

    அடுத்த நொடி அனைவரும் மாயமாக மறைய, நான் என் மனைவியை சமாதானப்படுத்தத் துவங்கினேன்.

    ஏம்மா, அவஸ்தைப்படறே? எழுதி பிரபல மாகாமலேயே நீ அழகாத் தானே இருக்கே

    ஆமாம், இப்போ வழியுங்கோ. உங்க அம்மா எல்லோர் எதிர்லேயும் நான் காப்பியடிக்கிறேன் அப்படிங்கறச்சே. வாய் மூடி 'மௌனி' ஆட்டம் போட்டேள். என் எழுத்தாள(!) மனசு என்ன பாடு பட்டிருக்கும் சொல்லுங்கோ? விம்மினாள்.

    அதனால் என்னடா செல்லம்? அடுத்த தீபாவளி மலருக்கு இப்பவே எழுதி வெச்சுடு. இல்லை வெள்ளி விழாவுக்கு எழுது.

    வெள்ளிவிழாவா? யாருக்கு நடக்கப் போறது?

    அசடு அசடு. ஒவ்வொரு பத்திரிகையும் 24 மணிநேர விழா, வார விழா, மாத விழா, வருட விழா, 5 வருட விழா, 10 வருட விழா, 15 வருட விழா, 20 வருட விழா அப்புறமா மெதுவா வெள்ளி விழா நடத்துவா. அப்போ அவாளுக்கு பக்கம் பக்கமாகதைகள் வேணும்

    ஆமா, இப்பவே எனக்கு 55 வயசு. வெள்ளிவிழாவுக்கு நான் எழுதி, அது பிரசுரமாகி, என் ஃபிரண்ட்சுக்கு அதை காண்பிச்சு... ம்ஹும்... இந்த ஜென்மத்திலே நடக்காது.

    ஏம்மா, இப்படி அபசகுனமாகப் பேசறே. எங்கம்மா இருக்கலியா? அது மாதிரி நீயும் நன்னா இருப்பே என்றேன்.

    அவா கொடுத்து வெச்ச ஜன்மம். என்னைப் போலவா?

    ஏம்மா, நம்ப தலை தீபாவளி பத்தி எழுதேன் அவசர அவசரமாக வேறு விஷயத்திற்குத் தாவினேன்.

    இதோ பாருங்கோ, எங்க அப்பா போட்ட மோதிர டிசைன் நன்னாயில்லைன்னு உங்க அம்மா ஆடின 'ருத்ர தாண்டவத்'தைப்பற்றி எழுதிட்டேன்னா, அப்புறம் உங்களால ஆபீஸ்ல தலைகாட்ட முடியாது என்று 'ட்ராக் மாறாத' பி.டி.உஷாவைப்போல பாய்ந்தாள் பங்கஜம்.

    எந்தப் பக்கம் திரும்பினாலும் ஃபீல்டர்ஸ் தன்னை முறைப்பதை உணரும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நிலையில் நான் இருந்தேன்.

    ஏன்னா என் கதைகள் பத்திரிகையில் வரலைங்கற ஆதங்கத்தையே ஒரு கதையாக எழுதிட்டா?

    இல்லம்மா. நான் ஒருத்தன் உன் அழுகைப் புலம்பலைக் கேட்கிறது எப்படி? உலகமே உன் அவஸ்தையை தெரிஞ்சுக்கிறது எப்படி? யோசனை பண்ணிப்பாரு?

    அதற்கு பிறகு என் மனைவி எழுத ஆரம்பித்து விட்டாள்.

    அவள் எழுதும் பொழுது யார் பேசினாலும் காதில் விழாது. அப்படி எழுத்தோடு ஒன்றிப்போய் விடுவாள்.

    இனி நான் நிம்மதியாகத் தூங்கலாம்.

    2. சலுகை

    பயணிகள் கவனத்திற்கு, சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் பிளாட்ஃபார்ம் நான்கிலிருந்து இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட உள்ளது

    ஒலிபெருக்கியில் வந்த குரல், இரும்பு சக்கர டிராலிகள், பொருட்களை இழுக்கும் சத்தம், பலதரப்பட்ட பொருட்களை விற்கும் கூச்சல், மக்களின் உரத்த குரல் பேச்சு, இத்தனையையும் மீறி நடேசபிள்ளையின் காதில் விழுந்தது.

    வேகமாக நடந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டாலும், ஒல்லியான தேகமாதலால் சற்று சுலபமாகவே நடந்தார்.

    ஒரு சிறிய பெட்டி, ஒரு லெதர்பை, ஒரு ஜோல்னா பை இதோடு ஏறுவது அவ்வளவு கடினமாகத் தெரியவில்லை.

    பெயர்ப் பட்டியல் ஒட்டப்படாவிட்டாலும் எஸ் கோச், சீட் நம்பர் ஒன்று, என்று மனப் பாடமாதலால் ஏறிவிட்டார்.

    ஸ்... அப்பாடா காதி சட்டை வேட்டியிலும் வியர்த்தது. இருக்கைக்கு அடியில் பெட்டி, கைப்பையைத் தள்ளினார்.

    ஜோல்னா பையிலிருந்து ஒரு பொட்டலமும், ஒரு பாட்டில் தண்ணீரும் எடுத்து வைத்தார்.

    அடுத்த நொடி கூட்டமாக இளைஞர்கள் நுழைந்தனர். தடிமனான ஜீன்ஸ் பேன்ட், வெளிநாட்டுத் துணியில் நெய்த கலர்கலரான டீ.சர்ட்டுகள், விதவிதமான தலைமுடியுடன் வியர்வையில் குளித்திருந்த இளைஞர்கள்! அவர்களைக் கண்டு புன்னகை செய்தார். அவரை நேராக பார்த்தாலும், யாரும் புன்னகை செய்யவில்லை. ஏன், அவரைப் பார்த்ததாகவே தெரியவில்லை. சுற்றி இருக்கும் இருக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டன.

    அதில் ஒருவன் இவருக்கு நேர் எதிரில் எக்ஸ்க்யூஸ்மி என்றபடி ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான்.

    நடேசபிள்ளை திடுக்கிட்டுப் பார்த்தார்.தம்பி, ரயில் வண்டியில் சிகரெட்டு பிடிக்கக் கூடாதுப்பா என்றார்.

    சாரி, இன்னும் ட்ரெயின் கிளம்பலை என்றபடி புகையை இழுத்து ஜன்னல் வழியாக வெளியில் விட்டான்.

    ஓகேயா தாத்தா? அவன் கேட்டவுடன் மற்ற இளைஞர்களிடம் ஒரு அவுட்டுச் சிரிப்பு!

    பெருமூச்சு விட்டபடி பொட்டலம் எடுத்து இட்லியை ருசித்தார். தண்ணீர் பாட்டிலின் மூடியை ஒரு கையால் சிரமப்பட்டுத் திறந்தார். புழுக்கம் இன்னும் அதிகமாக இருந்தது.

    நடேசபிள்ளை கைகழுவிவிட்டு வரும்பொழுது வண்டி கிளம்பிவிட்டது. ஜன்னல்கள் வழியே காற்று வீச, பிள்ளை.

    மூச்சை ஆழமாக இழுத்துவிட்டார்.

    டேய் ரகு, அந்த மானலா கேஸ் என்னாச்சுடா? குச்சி, குச்சியான தலைமுடியுடன் இருந்த பையன் கேட்டான்.

    அது பஞ்சாபி பொண்ணுடா. அவ அண்ணன் தம்பிகளெல்லாம் வகிர்ந்து எடுத்துடுவாங்க. அதான் ஒதுங்கிட்டேன்.

    எல்லோரும் 'கெக்... கெக்' என்று சிரித்தது சற்று நாராசமாக இருந்தது.

    மற்றவர்கள் எல்லாம் கால்களை எதிர்சீட்டில் நீட்டி அமர பிள்ளை எதிரில் இருந்த பையன் சற்றே சங்கடப்பட்டான்.

    பரவாயில்லை தம்பி, காலை நீட்டிக்குங்க என்றார் பிள்ளை. இட்ஸ் ஓ.கே என்றான் அந்தப் பையன். அதற்கும் ஓர் அவுட்டுச் சிரிப்பு கோஷ்டி கானமாகக் கிளம்பியது.

    என்ன தம்பிகளா, மதுரை வரையிலுமா?

    இல்லை கொடைக்கானல் போகிறோம். கொடை ரோடுல இறங்கிடுவோம். நீளமான தலைமுடியைக் கோதியபடி ஒருவன் கூறினான்.

    தாம்பரம் தாண்டியவுடன் டிக்கெட் பரிசோதகர்வந்தார். நடேசபிள்ளையைப் பார்த்த உடனே ஐயா வணக்கம். மறுபடியும் மதுரையா? என்றார்.

    ஆமாம். மதுரை காந்தி நினைவாலயத்துல காந்தி தினவிழா கூட்டம்.

    ஐயா, கவர்ன்மெண்ட் உங்களுக்கு ஏ.சியில் போக சலுகை கொடுத்திருக்கிறது. நீங்க இப்படி இந்தப் புழுக்கத்தில் அவதிப்படறீங்க

    இதெல்லாம் எதிர்பார்த்து சுதந்திரத்திற்குப் பாடு படலீங்க. அவங்க ஏதோ கொடுக்கறாங்கன்னு நாம பிடுங்கிக்கலாமா? நல்லா பென்ஷன் வருது. அதுபோதும்என்றார் நடேசபிள்ளை.

    பசங்களா, அதிக சத்தம் போடாதீங்க. பெரியவர் உங்களோட வந்திட்டு இருக்காரு. ஞாபகம் இருக்கட்டும் பரிசோதகர் சென்றுவிட்டார்.

    என்னடா இப்படி மிரட்டுறாரு? மூடு போயிடுச்சுடா. 'சீட்' மாத்திர்லாமா? புகைவிட்டபடி பையன் கேட்டான்.

    போடா ராம், வேற வேலையில்லை. தாத்தா நாங்க பேசினா பரவாயில்லையா? ரகு கேட்டான்.

    நீங்க தாராளமா பேசுங்க தம்பி. நானும் கேட்கிறேன் என்றார் நடேசபிள்ளை.

    போச்சுடா கறுப்பு நிற சட்டை போட்ட பையன் சிரித்தான். நீங்க கேட்குற மாதிரி எங்க பேச்சுல எதுவும் இருக்காது என்றான் ரகு.

    தம்பிகளா, சாப்பிடலையா? மாத்திரைகளை எண்ணியபடி கேட்டார் நடேசபிள்ளை. எந்த பதிலும் வராததால், தலைநிமிர்ந்த பொழுது, எதிரில் இருந்த பையன் 'யாரும் பேசவேண்டாம்' என்று சைகை செய்ததைக் கவனித்தார்.

    ஒரு கணம் மனம் சங்கடப்பட்டது. இப்பொழுதெல்லாம் இளைய தலை முறையினருக்கு, பெரியவர்களுடன் பேச ஏன் பிடிப்பதில்லை?

    நமக்கு அவர்களுடன் பேசத் தெரியாமல், தொண தொணக்கிறோமா?

    மாத்திரைகளை விழுங்கிவிட்டு, கண்களை மூடிக்கொண்டார். அன்று வீட்டில் நடந்த உரையாடல் மனதில் ஓடியது.

    அப்பா, இந்த வயசுல இப்படி ஊர் ஊரா போகலைன்னா நாட்டுக்கு என்ன நஷ்டம்? ஏதோ போட்டதை தின்னுட்டு, ஒரு மூலையில் கிடக்க வேண்டியதுதானே மகன் கோவிந்தன் 'சிடுசிடு' என்று பேசினான்.

    வயசாயிடுச்சுன்னு புரிஞ்சிடுச்சு, முடியல, தெரியுது. ஆனால் மனசும் புத்தியும் நல்லா இருக்குதப்பா. இப்போ, பொழுது போகலைன்னு மதுரைக்கு போகலை, காந்தி ஜெயந்திக்கு அழைப்பு கொடுத்திருக்காங்க. நான் மதுரைக்குப் போயாகணும் நிதானமாகக் கூறினார்.

    ஏன் இங்கே இருக்கிற நினைவாலயத்திற்குப் போனால் என்ன? குழந்தைங்க லீவு நாள்ல, இருந்து எனக்குக் கூடமாட உதவி செய்யாம இரண்டு ஆம்பிளைகளும் ஓடிப்போயிடறீங்க மருமகள் தமிழ்ச்செல்வி கூறினாள்.

    என்னால் முடிந்தது செய்யறேன், இன்னும் என்ன செய்யணும்னு சொல்லும்மா, செஞ்சு வெச்சுட்டு போறேன். நீங்களும் எங்கோவது போகணும்னா போய்வாங்க, நான் தடுக்கலையே

    ஆமா இருக்கிற பணமெல்லாம் நாடு சுதந்திரம்னு வாரி தானம் பண்ணிட்டீங்க. ஊருக்கு ஒதுக்குப்புறமா, ஒரு பொட்டல் காடுல வீடு கட்டியிருக்கீங்க. இங்கே என்ன இருக்குது? கதவை பூட்டிட்டுப் போனா இருக்கிற கொஞ்ச நஞ்சத்தையும் சுருட்டிடுவானுங்க நக்கலாகப் பேசினாள் தமிழ்ச்செல்வி.

    ஏய், ஏதோ விட்டா பேசிட்டே போறே? உங்க அப்பன் வீட்டுல இருந்து லட்ச லட்சமா கொணாந்து பெரிய பங்களா கட்டறதுதானே கோவிந்தன் ஆரம்பித்தான்.

    இந்தச் சண்டை இன்று ஓயாது என்று பிள்ளைக்குத் தெரியும்.

    தாத்தா இங்கேயே காந்தி மண்டபம் இருக்குது. என் ஸ்கூல்ல கூட்டிட்டுப் போனாங்க, நான் உன்னை அழைச்சிட்டுப் போறேன். நீ என்னை விட்டுட்டு மதுரை போகாதே பேரன் கெஞ்சினான்.

    இல்லேடா ராஜா, மதுரை நினைவாலயத்தில் காந்தி தாத்தா உபயோகித்த சால்வை, மூக்குக் கண்ணாடின்னு பல பொருட்கள் இருக்குது, அவர் உயிர் விடும்பொழுது அவர் கடைசியா கட்டியிருந்த வேட்டி ரத்தக் கறையோட அங்கே வெச்சிருக்காங்க, அங்கே போனா எனக்கு அவரோட பேசின ஒரு உணர்வு ஏற்படுது

    ஆமா, அவரே போயி வருஷக் கணக்குல ஆவுது, இவருக்கு உணர்வு ஏற்படுதாம், சே... நம்ப வீட்டை பார்த்துக்க துப்பில்லை, கிளம்பிட்டாரு மதுரைக்கு செல்வி பாய்ந்தாள்.

    வாயைமூடுடி, அவர் பணம் என்னவோ செய்யட்டும் கோவிந்தன் கூறினான்.

    மாத்திரை போட்டதில் தூக்கம் கண்ணைச் சுழற்றியது.தம்பி! எனக்குப் படுக்கணும்! மெதுவாக எழுந்தார் நடேசபிள்ளை.

    படுங்க தாத்தா! அதுக்கு நான் என்ன செய்யணும்? ஒரு பையன் தெனாவட்டாகக் கேட்டான்.

    இல்லைப்பா, நீங்க நகர்ந்தா தானே நான் படுக்க முடியும்

    நாங்க எங்கே நகர்ந்து போகணும்ங்கறீங்க?

    என்ன தம்பி இது? எனக்குக் கீழ்ப்படுக்கை. நீங்க எதிர் சீட்டுல உட்காருங்க

    சாரி, தாத்தா, ரகுவுக்கு காலில் அடிபட்டிருக்குது, அவனால் ஏற முடியாது. விஜய்க்கு ஆஸ்துமா, மேலே ஃபேன் காற்றில் மூச்சுத்திணறல் வந்திடும், ராம் இப்பொழுதுதான் ஹெர்னியா ஆபரேஷன் பண்ணிக் கிட்டான்! ஸோ, நீங்கதான் மேலே ஏறிப்படுக்கணும்.

    மார்பு படபடவென்று அடிக்க, மென்று விழுங்கினார் நடேசபிள்ளை. 'ஐயோ, இந்தச் சிறுவயதிலேயே இத்தனை வியாதிகளா! ஆனால் நான் எப்படி மேலே ஏறுவது?'

    தாத்தா நாங்க ஹெல்ப் பண்றோம் வாங்க, இங்கே கால்வெச்சு இப்படி எம்பினா மேலே ஏறிடலாம்.

    இளைஞர்களின் அவுட்டுச் சிரிப்பும், பேச்சும் வெகுநேரம் கேட்டது.

    மேலே ஏறியவுடன் மார்பு கூடுதலாக அடித்துக் கொண்டது. வியர்த்து, விறுவிறுத்து, தூக்கம் அவரை ஆக்கிரமித்தது.

    மறுநாள் கொடைக்கானலை சுற்றிப் பார்த்துக் களைத்து ரூமூக்குத் திரும்பிய இளைஞர்கள் தொலைக்காட்சியைப் போட்டனர். தலா ஒரு கிளாஸ் 'ரம்' ஆர்டர் பண்ணுடா விஜய் கூறினான்.

    அடுத்த நொடி ரகு அலறினான் டேய்... டேய்... தாத்தாடா!

    நம்ம ட்ரெயின் தாத்தாடா!

    மற்றவர்கள் திகைத்து தொலைக்காட்சியைப் பார்த்தார்கள். சுதந்திரப் போராட்ட வீரர் நடேசபிள்ளை நேற்று பாண்டியன் எக்ஸ்பிரஸில் இறந்து கிடந்தார். நடு இரவில் மாரடைப்பு வந்து இறந்ததாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    நம் நாட்டு சுதந்திரத்திற்காக காந்தியடிகளுடன் எத்தனையோ போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறார். ஆங்கிலேயர்களால் சிறையிலடைக்கப்பட்டு, பல கொடுமைகளைச் சந்தித்துள்ளார் செய்திகள் வாசிப்பவரின் உணர்ச்சியற்ற குரல்!

    அடுத்ததாக கோவிந்தன் திரையில் தோன்றினான்.

    அவருக்கு இப்போ 82 வயசாவுதுங்க.ஜெயில்ல வெள்ளைக்காரங்க அடிச்சதுல முதுகு தண்டுல பலமாக அடிபட்டிருக்குது. சின்ன வயசிலிருந்தே மாடி ஏற கஷ்டப்படுவாரு. அப்புறம் மாரடைப்பு வந்து இப்பத்தான் உடல்நிலை தேறியிருந்தாரு!

    நிருபர் கேட்டார்.

    "பிறகு, அவர் ஏன் மேலே ஏறினாரு? சீனியர் சிட்டிஸன் என்று அவருக்கு கீழ் படுக்கையும், சுதந்திர வீரர் என்ற நிலையில் முதல் வகுப்பு

    Enjoying the preview?
    Page 1 of 1